Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வெற்றிலைத் தட்டம் இல்லாத வீடுகளே அன்று இல்லை எனலாம். இளம் பச்சை நிற கொழும்பு வெற்றிலை, ஊர்ப் பாக்கு, கும்பகோணம் ரோஸ் கலர் சுண்ணாம்பு தட்டத்தில் சுற்றிவர இருக்கும். அப்படியே ஒரு பாக்குவெட்டியும் தட்டின் நடுவில் இருக்கும். சீவல் பாக்கு பலருக்கும் பிடிப்பதில்லை. தாங்களே சீவி எடுத்தால் தான் திருப்தி. 

பாக்கை சீவுவதை விட இந்தப் பாக்குவெட்டியால் வேறு ஏதாவது பயன் இருக்கின்றதா?

********************************* 

பாக்குவெட்டி

---------------------
எங்கள் வீட்டில் ஒரு பாக்குவெட்டி இருந்தது
நான் பிறக்கு முன்னேயே 
அது அங்கே இருந்தது
ஒரு தட்டத்தில் எப்போதும்
பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு சுற்றி வர
 
நல்ல ஒரு கண்டுபிடிப்பு
சரசரவென்று பாக்கைச் சீவும் இது
விரலை எப்போது சீவும்
என்று நினைப்பேன்
அப்பா ஆச்சி வந்தவர்கள்
எவர் விரலையும் அது சீவவே இல்லை
 
நான் ஒரு போதும் முயலவில்லை
 
இன்று ஒரு செய்தி
இலங்கையில்
படுத்திருந்த கணவனை 
பாக்குவெட்டியால் வெட்டினார் மனைவி என்று
 
நீங்கள் சரியாகவே வாசித்திருப்பீர்கள்
சந்தேகமே இல்லை
துண்டு இரண்டங்குலமாம்
 
விரலை மட்டும் தான்
இது வெட்டக் கூடும் என்று யோசித்திருந்தேன்
செய்தியை பார்க்கும் வரை
 
என்ன ஒரு கண்டுபிடிப்பு.
  • Like 1
  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரசோதரன் said:
நீங்கள் சரியாகவே வாசித்திருப்பீர்கள்
சந்தேகமே இல்லை
துண்டு இரண்டங்குலமாம்

large.IMG_6283.jpeg.4086d6f5b3fd4cacfd59

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரசோதரன் said:
இன்று ஒரு செய்தி
இலங்கையில்
படுத்திருந்த கணவனை 
பாக்குவெட்டியால் வெட்டினார் மனைவி என்று

படுக்கும் போது யாக்கிரதை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, ஈழப்பிரியன் said:

படுக்கும் போது யாக்கிரதை.

ஒரு பெட்டியில் வைத்து பூட்டி விட்டு படுப்பது பாதுகாப்பு 🤣😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரசோதரன் said:

பாக்கை சீவுவதை விட இந்தப் பாக்குவெட்டியால் வேறு ஏதாவது பயன் இருக்கின்றதா?

பாக்கு வெட்டியாலை பிலாக்கொட்டையும் வெட்டலாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த யாழில் முதன்முதல் பாக்குவெட்டியை அறிமுகப் படுத்தியவரை இன்னும் காணவில்லை ......அவர் எங்கிருந்தாலும் பாக்குவெட்டியுடன் மேடைக்கு வரவும்........!  😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

படுக்கும் போது யாக்கிரதை.

 🤣....

இங்கு வீட்டில் பாக்குவெட்டி இல்லை. என்றாலும் ஒரு கவனம் இருக்கத்தான் வேண்டும்......😀 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ரசோதரன் said:

 

 🤣....

இங்கு வீட்டில் பாக்குவெட்டி இல்லை. என்றாலும் ஒரு கவனம் இருக்கத்தான் வேண்டும்......😀 

மடியில் கனம் இல்லாவிட்டல் பயமேன்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, குமாரசாமி said:

மடியில் கனம் இல்லாவிட்டல் பயமேன்? 😎

🤣...

இங்கே எல்லோருமே பெரும் சிலேடைப் புலவர்களாக இருக்கின்றார்களே........👍

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.