Jump to content

ஆசனவாயில் காற்று நிரப்பி விளையாட்டு - குடல் வெடித்து உயிரிழந்த ஊழியர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆசனவாயில் காற்று நிரப்பி விளையாட்டு - குடல் வெடித்து உயிரிழந்த ஊழியர்

Vhg மார்ச் 30, 2024
1000217229.jpg

 

தென்னிலங்கை தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியதால், அவர் குடல் வெடித்து உயிரிழந்துள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தேஷான் மதுஷங்க என்ற 24 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

விளையாட்டு வினையானது

கடந்த திங்கட்கிழமை (25-03-2024) பிற்பகல், அதே நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள், உயிரிழந்த ஊழியரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரத்தின் குழாயை பிடித்துள்ளனர்.

இதன்போது, குழாய் செருகுப்பட்டு, உடனடியாக அகற்ற முடியாமல் போனது. அத்துடன், அதிக அழுத்தத்தில் காற்று உட்செலுத்தப்பட்டதால் குடல் வெடித்து ஊழியர் உயிரிழந்தார்.

1000217227.jpg

இந்நிலையில் உயிரிழந்த ஊழியரின் பிரேத பரிசோதனை நேற்று (29ம் திகதி) ராகம வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்புடைய இரு தொழிலாளர்களை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தொழிலாளர்கள் இருவரும் திஸ்ஸமஹாராமய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

https://www.battinatham.com/2024/03/blog-post_604.html

  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசன வாயே... தினமும் காற்றை வெளியேற்றிக் கொண்டு இருக்கின்றது.
அதுக்கே... இவர் காற்று அனுப்பினால், குடல் வெடிக்காமல் என்ன செய்யும். 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஆசன வாயே... தினமும் காற்றை வெளியேற்றிக் கொண்டு இருக்கின்றது.
அதுக்கே... இவர் காற்று அனுப்பினால், குடல் வெடிக்காமல் என்ன செய்யும். 😂 🤣

வாய் மூலம் வெளியில் வரும் என்று நம்பிக்கை தான்  

குறிப்பு,......நாளைக்கு ஏதாகினும் தொடர்கதை எழுதுங்கள்   வாசிக்கலாம்  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்திசாலிகள் அதை கடத்தலுக்கு பாவிக்கிறார்கள் ....... முட்டாள்கள்தான் இப்படி மட்டமான வேலைகள் பார்ப்பது.........ஆனால் இரு பாலாரும் சிறை என்னும் மையப்புள்ளியில் சந்திக்கிறார்கள்......!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

வாய் மூலம் வெளியில் வரும் என்று நம்பிக்கை தான்  

குறிப்பு,......நாளைக்கு ஏதாகினும் தொடர்கதை எழுதுங்கள்   வாசிக்கலாம்  😀

என்ன கந்தையா குழப்புறீங்க?

வாயில போட்டா தானே பின்னால போகும்.

6 hours ago, கிருபன் said:

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தொழிலாளர்கள் இருவரும் திஸ்ஸமஹாராமய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இருவருக்கும் இதே மாதிரி செய்ய வேணும் யுவர் ஆனர்.

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.