Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் அமைந்திருக்கும் ஈரானிய விசேட படைகளின் கட்டடம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் ‍- ஈரானின் மூத்த தளபதி பலி

சிரியாவின் ராணுவத்திற்கு உதவவென்றும், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான தாக்குதல்களை செயற்படுத்தவென்றும் சிரியாவின் தலைநகரில் இயங்கிவந்த ஈரானின் கட்ஸ் படைகளின் கட்டடம் ஒன்று இஸ்ரேலின் விமானத் தாக்குதலுக்கு அகப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் தூதரகம் என்று அறியப்பட்ட இக்கட்டடத் தொகுதி பல கட்டடங்களைக் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பாகும்.

இத்தாக்குதலில் ஈரானிய புரட்சிகரகர காவற்படையின் மிக முக்கிய தளபதியும், இன்னொரு படைப்பிரிவின் தளபதியும் உட்பட 7 ஈரானிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இத்தளபதியின் நடமாட்டத்தினைத் தொடர்ச்சியாக அவதானித்து வந்த இஸ்ரேல், சிரியாவில் அவர் நடமாடியவேளை கொன்றிருக்கிறது. 2020 இல் ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் கொல்லப்பட்ட ஈரானிய மூத்த தளபதியான அல் சுலைமானியின் இழப்பிற்குப் பின்னர் கொல்லப்பட்டிருக்கும் ஈரானின் மிக முக்கிய தளபதி இவரென்பது குறிப்பிடத் தக்கது. 

இவரது படுகொலைக்குப் பழிவாங்கியே தீருவோம் என்று சூளுரைத்திருக்கும் ஈரான், இத்தாக்குதலுக்கான முழுப்பொறுப்பையும் அமெரிக்காவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறது. இஸ்ரேலுடனோ அல்லது அமெரிக்காவுடனோ நேரடியான மோதலொன்றைத் தவிர்க்க விரும்பும் ஈரான், தனது முகவர்களான லெபனானின் ஹிஸ்புள்ளாக்கள், யெமெனின் ஹூத்திகள், ஈராக் ‍- சிரியாவில் இயங்கும் அமெரிக்க எதிர்ப்புக் கிளர்ச்சிப் படைகளைக் கொண்டு இஸ்ரேல் மீதோ அல்லது வளைகுடாவில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் மீதோ தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

https://edition.cnn.com/2024/04/02/middleeast/iran-response-israel-damascus-consulate-attack-intl-hnk/index.html

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிய விசேட படைகளின் கட்டடமல்ல. அது ஈரானிய தூதரகக் கட்டடம். 👇

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus: What we know

Iran has promised a response after an alleged Israeli attack on its consulate killed seven including two top commanders.

Rescue workers at the scene of the Iran consulate attack in Damascus. The building has been reduced to rubble. There is an Iranian flag to the right.
Emergency services work at the consulate building [Omar Sanadiki/AP]

Iran has promised a response after its consulate in the Syrian capital Damascus was destroyed in a suspected Israeli missile attack, killing seven people including a top commander and his deputy.

Brigadier General Mohammad Reza Zahedi, a senior commander in the Quds Force of the Islamic Revolutionary Guards Corps (IRGC) and his deputy General Mohammad Hadi Hajriahimi were killed in Monday’s attack, the IRGC said in a statement.

Israel has long targeted Iran’s military installations in Syria and those of its proxies but Monday’s attack was the first time it had targeted the embassy compound itself.

Here’s what we know:

What happened?

The consulate, which is next to the main embassy building in Damascus’s Mezzeh district, was struck at about 5pm (14:00 GMT) on Monday.

Photos from the scene showed piles of rubble and twisted steel with an Iranian flag still hanging from a pole nearby.

Who was there?

Several IRGC military advisers were in the building at the time of the attack and seven were killed, according to the IRGC statement.

The statement said Zahedi and Hajriahimi were among the dead.

https://www.aljazeera.com/news/2024/4/2/attack-on-iran-consulate-in-damascus-what-do-we-know

  • கருத்துக்கள உறவுகள்

@இணையவன்

எதற்காக ❤️ போட்டிருக்கிறீர்கள்? 

செய்தியை இணைத்ததற்காகவா அல்லது இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசியதற்காகவா அல்லது ஈரானியத் தூதரகம் தாக்கப்பட்டதற்காகவா அல்லது ஈரானியத் தளபதிகள் கொல்லப்பட்டதற்காகவா,.......

சும்மா ஒரு புரிந்துணர்வுக்காகத்தான் கேட்கிறேன்,..😁

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் ஈரானின் துணைதூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் - ஈரான் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலி

Published By: RAJEEBAN   02 APR, 2024 | 06:42 AM

image

சிரியாவில் உள்ள ஈரானிய துணை தூதரகம் ஒன்றின் மீது  இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் இராணுவத்தின் உயர் அதிகாரிகள்  உட்பட ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரிய தலைநகர் டமஸ்கசிற்கு மேற்கே உள்ள பகுதியொன்றில் கட்டிடமொன்று முற்றாக தரைமட்டமான நிலையில் காணப்படுவதை காண்பிக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

ஈரான் இராணுவம் தனது தளபதிகள் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

பிரிகேடியர் ஜெனரல் முகமட் ரேசா ஜகேடி இஸ்ரேலின் தாக்குதலிற்கு பலியாகியுள்ளார் என  ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலே துணை தூதரகத்தை இலக்குவைத்ததாக சிரியா தெரிவித்துள்ளது.

eac6058f-f912-4511-8615-d7d993ea9db9.jpg

200ee410-7e08-4726-9a09-e5731686aea3.jpg

61831b06-08e3-4ed5-b0d3-7a0061097495.jpg

https://www.virakesari.lk/article/180199

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா -  தூதரகத்தில் இராணுவத்தளபதிக்கு  என்ன வேலை???

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

அமெரிக்கா -  தூதரகத்தில் இராணுவத்தளபதிக்கு  என்ன வேலை???

Military attaché

A military attaché or defence attaché is a military expert who is attached to a diplomatic mission, often an embassy. This type of attachépost is normally filled by a high-ranking military officer, who retains a commission while serving with a diplomatic mission. Opportunities sometimes arise for service in the field with military forces of another sovereign state. The attache has the privileges of a foreign diplomat.

250px-US_Navy_100326-N-7058E-249_Lt._Cmdr._Matt_Weber%2C_executive_officer_of_the_littoral_combat_ship_USS_Freedom_%28LCS_1%29%2C_describes_the_ship%27s_Mk_110_57mm_gun.jpg The Chilean defense attaché in Panama, at left, receiving a briefing on the armament of the USS Freedom from the ship's executive officer in 2010

https://en.m.wikipedia.org/wiki/Military_attaché#:~:text=A military attaché or defence,serving with a diplomatic mission.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

ஈரானிய விசேட படைகளின் கட்டடமல்ல. அது ஈரானிய தூதரகக் கட்டடம். 👇

Israel hasn’t claimed responsibility for the attack but has argued that the target was a “military building of Quds forces” — a unit of the IRGC responsible for foreign operations. “This is no consulate, and this is no embassy,” Israel Defense Forces (IDF) spokesperson Rear Adm. Daniel Hagari told CNN.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

இஸ்ரேல்தானே கூறுகிறது  😏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இஸ்ரேல்தானே கூறுகிறது  😏

உண்மை, இஸ்ரேல் தான் கூறுகிறது. உண்மையாக இருக்கவேண்டும் என்று இல்லை.

ஆனால், ஈராக்கிலும், சிரியாவிலும் பெருமளவு ஈரானிய சிறப்புப் படையினர் களம் அமைத்திருப்பதும் உண்மைதானே? ஆகவே, ஈரானிய தூதரகம் என்று சொல்லப்படும் கட்டடத் தொகுதி ஒன்றிற்குள் அவர்களின் சிறப்புப் படைகளின் பிரிவொன்று இருக்கவும் வாய்ப்பிருக்கின்றதல்லவா? இல்லையென்று சத்தியம் செய்ய முடியுமா எவராலும்? 

சுலைமானி 2020 இல் கொல்லப்பட்டபோது, அவர் கூட ஈராக்கில் இயங்கும் தனது இராணுவத்தினரைச் சந்திக்கச் சென்றதாகவே கூறப்பட்டது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Iran has a significant military presence in Syria. At the height of its intervention between 2015 and 2018, approximately 10,000 IRGC forces and 5,000 Iranian Army members were deployed to Syria. Additionally, around 2,000 officers from the Quds Forces command an estimated 131 military garrisons, along with tens of thousands of Iran-backed Shia jihadists across regions controlled by the Syrian regime1. This presence reflects Iran’s active involvement in the Syrian civil war.

Furthermore, recent events indicate ongoing tensions. For instance, in April 2024, Israeli airstrikes targeted the Iranian embassy compound in Damascus, resulting in the death of General Mohammad Reza Zahedi and other casualties2. Additionally, the United States has conducted strikes against Iran-backed groups in Syria, responding to attacks on US troops. These actions highlight the complex dynamics involving Iran, Syria, and other regional actors3.

In summary, Iran maintains a substantial military footprint in Syria, with both regular forces and proxy militias actively engaged in the conflict. The situation remains fluid, and developments continue to unfold in the region.

சிரியாவில் ஈரான் கணிசமானளவு இராணுவத்தினரை நிலைவைத்திருக்கிறது. குறிப்பாக கட்ஸ் மற்றும் புரட்சிகர படையணிகள் இங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இவர்களுக்கான முகாம்கள் சிரியாவின் தலைநகர் முதல் நாட்டின் பலவிடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, ஈரானிய தூதரகம் என்று சொல்லப்படும் ஒரு கட்டடத் தொகுதியில் அவர்கள் தங்கவைக்கப்படவில்லை என்று நிச்சயமாகக் கூறமுடியுமா? 
அடுத்தது, தாக்கப்பட்டது ஈரானின் தூதரகம் இல்லை, ஆனால் அக்கட்டத் தொகுதியின் இன்னொரு பகுதி. குறிவைக்கப்பட்டது ஈரானியத் தூதுவர் அல்ல, இராணுவத் தளபதி. இத்தளபதி ஈரானின் விசேட படைகளின் ஈரானுக்கு வெளியிலான செயற்பாடுகளுக்குப் பொறுப்பானவர். ஆகவே, இவர் சிரியாவில் நிற்பது சுற்றுலாக் கண்காட்சியில் கலந்துகொள்ள அல்ல. மாறாக தனது படைகளை நெறிப்படுத்தவே.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரஞ்சித் said:

சிரியாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் அத்துமீறல்களைச் சரி எனச் சொல்ல  வருகிறீர்களா? 

எந்தவித அனுமதியுமின்றி சிரியாவில் சட்டவிரோதமாக நிற்கும் அமெரிக்கப் படைகளைப் போலல்லாது சிரிய அரசின் அனுமதியுடன் ஈரான் அங்கே நிற்கிறது. 

இதில் என்ன பிரச்சனை இஸ்ரேலிற்கு?  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

சிரியாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் அத்துமீறல்களைச் சரி எனச் சொல்ல  வருகிறீர்களா? 

இல்லை, இறையாண்மையுள்ள நாடு ஒன்றின் மீது அத்துமீறி உள்நுழைந்து தாக்குவது தவறுதான். ஆனால், இதற்குப் பின்னாலுள்ள அரசியலை நீங்கள் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. இஸ்ரேலுக்குள் தனது முகவர்களான ஹமாஸையும், ஹிஸ்புள்ளாவையும் ஏவித் தாக்குதல் நடத்திவிட்டு, தாம் உதவியதாக ஈரான் கூறும்போது, இஸ்ரேல் நேரடியாக ஈரான் மீதோ அல்லது அதன் படைகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் சிரியா மீதோ தாக்குதல் நடத்துகிறது. 

20 minutes ago, Kapithan said:

எந்தவித அனுமதியுமின்றி சிரியாவில் சட்டவிரோதமாக நிற்கும் அமெரிக்கப் படைகளைப் போலல்லாது சிரிய அரசின் அனுமதியுடன் ஈரான் அங்கே நிற்கிறது. 

உண்மை. ஆனால், சிரியாவினுள் ஈரான் நிற்பது சிரியாவைத் தளமாகக் கொண்டு இஸ்ரேல் மீது தாக்கத்தான் என்று இஸ்ரேல் சொல்கிறது. அதுமட்டுமல்லாமல், உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேலை முற்றாக துடைத்தழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று கூறும் ஒரு நாடு தனக்கருகில் களம் அமைக்கும்போது, இஸ்ரேல் பேசாமல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு தூரத்திற்குச் சரியானதாக இருக்கும்?

23 minutes ago, Kapithan said:

இதில் என்ன பிரச்சனை இஸ்ரேலிற்கு?  

இதற்கான பதிலை உங்களின் இரண்டாவது கூற்றிற்கான பதிலில் தெளிவுபடுத்தியிருக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இல்லை, இறையாண்மையுள்ள நாடு ஒன்றின் மீது அத்துமீறி உள்நுழைந்து தாக்குவது தவறுதான். ஆனால், இதற்குப் பின்னாலுள்ள அரசியலை நீங்கள் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. இஸ்ரேலுக்குள் தனது முகவர்களான ஹமாஸையும், ஹிஸ்புள்ளாவையும் ஏவித் தாக்குதல் நடத்திவிட்டு, தாம் உதவியதாக ஈரான் கூறும்போது, இஸ்ரேல் நேரடியாக ஈரான் மீதோ அல்லது அதன் படைகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் சிரியா மீதோ தாக்குதல் நடத்துகிறது. 

உண்மை. ஆனால், சிரியாவினுள் ஈரான் நிற்பது சிரியாவைத் தளமாகக் கொண்டு இஸ்ரேல் மீது தாக்கத்தான் என்று இஸ்ரேல் சொல்கிறது. அதுமட்டுமல்லாமல், உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேலை முற்றாக துடைத்தழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று கூறும் ஒரு நாடு தனக்கருகில் களம் அமைக்கும்போது, இஸ்ரேல் பேசாமல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு தூரத்திற்குச் சரியானதாக இருக்கும்?

இதற்கான பதிலை உங்களின் இரண்டாவது கூற்றிற்கான பதிலில் தெளிவுபடுத்தியிருக்கிறேன். 

1) இந்தத் தியறி சரி என்றால், இதே தியறி உக்ரேன் -ரஸ்ய யுத்தத்திற்கும், இலங்கையில் எமது போராட்டத்திற்கும் - இந்திய பிராந்திய அரசியலுக்கும்  பொருந்துமல்லவா? 

2) இதற்குப் பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது மூன்றாம் தரப்பினூடாகத்  தாக்குதல் நடத்தினால் விளைவு? 

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" ! 

@ரஞ்சித்

பலர் கிண்டிவிடுவதெற்கென்றே ❤️ போடுகிறார்கள் போலத் தென்படுகிறது. 

😀

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

1) இந்தத் தியறி சரி என்றால், இதே தியறி உக்ரேன் -ரஸ்ய யுத்தத்திற்கும், இலங்கையில் எமது போராட்டத்திற்கும் - இந்திய பிராந்திய அரசியலுக்கும்  பொருந்துமல்லவா? 

உக்ரேன் ரஸ்ஸியப் போரில் இது உண்மைதான். அதாவது இறையாண்மையுள்ள நாடான உக்ரேனிற்குள் தனது படைகளை அனுப்பி ஆக்கிரமிப்பில் ரஸ்ஸியா ஈடுபடுவது.

அடுத்தது, இந்தியா தனது படைகளை இலங்கைக்குள் அனுப்பியது. ஆனால், அதுகூட இலங்கையின் சம்மதத்துடன், வெளிப்படையான ஒப்பந்தம் ஒன்றிற்கூடாகத்தான் நடைபெற்றது. தமிழ்ப் போராளிகளை இந்தியாவின் முகவர்கள் என்று நீங்கள் கூறூவீர்களென்றால் உங்களின் புரிதலில் தவறு இருக்கிறதென்று அர்த்தம்.

26 minutes ago, Kapithan said:

2) இதற்குப் பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது மூன்றாம் தரப்பினூடாகத்  தாக்குதல் நடத்தினால் விளைவு? 

இப்போது நடப்பது அதுதானே? ஹமாசும், ஹிஸ்பொள்ளாவும் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவர்களுக்கும் ஈரானுக்கும் இடையிலான தொடர்பு என்ன? 

28 minutes ago, Kapithan said:

பலர் கிண்டிவிடுவதெற்கென்றே ❤️ போடுகிறார்கள் போலத் தென்படுகிறது. 

நான் அப்படி நினைக்கவில்லை. அடிப்படைவாத முஸ்லீம்களுக்கெதிரான நிலைப்பாடு பலருக்கும் இருக்கிறது. அதுகூடக் காரணமாக இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் இரான் ராணுவ அதிகாரிகளை குறிவைத்து தாக்கியதா இஸ்ரேல்? இரான் என்ன செய்யப் போகிறது?

சிரியாவில் இரானிய தளபதிகளைக் கொன்றதாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

பட மூலாதாரம்,REUTERS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெரெமி போவன் மற்றும் டேவிட் க்ரிட்டென்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 2 ஏப்ரல் 2024

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரக கட்டடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் ஏழு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இரானின் உயரடுக்கு குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேடி, மற்றும் அவரது துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹாடி ஹாஜி ரஹிமி ஆகியோரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரான் மற்றும் சிரியாவின் அரசாங்கங்கள் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

இத்தாக்குதல் சிரியாவிலுள்ள இரானிய தூதரகத்திற்கு அருகிலுள்ள கட்டடத்தை முழுவதும் அழித்தது.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் ‘வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை’ என தெரிவித்துள்ளது.

என்ன நடந்தது?

திங்களன்று (நேற்று, ஏப்ரல் 1) இந்திய நேரப்படி மாலை சுமார் 07:30 மணியளவில் (14:00 GMT) டமாஸ்கஸின் மேற்கிலிருக்கும் மெசே மாவட்டத்தின் நெடுஞ்சாலையில் இருந்த இரானிய தூதரகக் கட்டடத்தை இஸ்ரேலிய விமானம் குறிவைத்ததாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியாவின் வான் பாதுகாப்புப் படையினர் சில ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தினர். ஆனால் மற்ற ஏவுகணைகள் இலக்கைத் தாக்கி ‘முழு கட்டடத்தையும் அழித்து, உள்ளே இருந்த அனைவரையும் காயப்படுத்தி விட்டதாக’ சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியது.

இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உடல்களையும் காயமடைந்தவர்களையும் மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. ஆனால் எத்தனை பேர் உயிரிழந்தனர், அவர்களின் பெயர் ஆகிய தகவல்களை குறிப்பிடவில்லை.

சிரியாவில் இரானிய தளபதிகளைக் கொன்றதாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

பட மூலாதாரம்,REUTERS

கொல்லப்பட்ட இரானின் மிக உயரிய அதிகாரி

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இடிந்து விழுந்த ஒரு பல மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளிலிருந்து புகை மற்றும் தூசி எழுவதைக் காட்டியது. அடுத்துள்ள இரானிய தூதரகத்திற்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

இரானிய தூதர் ஹொசைன் அக்பரி கூறுகையில், இஸ்ரேலிய F-35 போர் விமானங்கள் ‘தான் வசிக்கும் இடத்தையும், தூதரகத்தின் தூதரகப் பகுதியையும் குறிவைத்தன’ என்றார். சில தூதர்கள் உட்பட ஐந்து முதல் ஏழு பேர் வரை கொல்லப்பட்டதாக அவர் இரானிய அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

பின்னர், இரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், அதன் அதிகாரிகள் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் ‘தளபதிகள் மற்றும் மூத்த இராணுவ ஆலோசகர்களான’ பிரிகேடியர் ஜெனரல் முகமது ரேசா ஜாஹேதி மற்றும் பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹாடி ஹாஜி-ரஹிமி ஆகியோரும் அடங்குவர், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

63 வயதான ஜாஹேதி, இரான் ராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவான குட்ஸ் படையில மூத்த அதிகாரியாகவும், 2008 மற்றும் 2016-க்கு இடையில் லெபனான் மற்றும் சிரியாவில் தளபதியாகவும் பணியாற்றியதாகவும் இரானிய ஊடகங்கள் தெரிவித்தன.

ஜாஹேதி, இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக மிக முக்கியமான இரானிய அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

இரான் என்ன செய்யப் போகிறது?

இந்தத் தாக்குதலில் குட்ஸ் படையின் உயர்மட்டத் தலைவர், இரானிய ஆலோசகர்கள் இருவர், மற்றும் இரான் ராணுவத்தின் ஐந்து உறுப்பினர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாக இங்கிலாந்தில் இயங்கும் மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இவ்வமைப்பு சிரியாவில் களத்திலிருந்து தகவல் சேகரித்துத் தருபவர்களைக் கொண்டு பணியாற்றுகிறது.

சிரியாவின் வெளியுறவு அமைச்சர் பைசல் மெக்தாத், இந்தத் தாக்குதலை ‘கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்’ என்று விமர்சித்தார். மேலும் இது ‘பல அப்பாவி மக்களை’ கொன்றதாகவும் கூறினார்.

அவருடனான தொலைபேசி உரையாடலில், இரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் இந்த தாக்குதலை ‘அனைத்து சர்வதேச கடமைகள் மற்றும் மரபுகளை மீறய செயல் என்று குறிப்பிட்டார். மேலும் ‘இந்தத் தாக்குதலில் விளைவுகள் இஸ்ரேலின் வலதுசாரி சியோனிச ஆட்சியினால் ஏற்பட்டது என்று குற்றம் சாட்டினார்’ என இரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ‘சர்வதேச சமூகம் சரியான பதிலடி கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்’, என்று இரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் இரானிய தளபதிகளைக் கொன்றதாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

இஸ்ரேலின் முந்தைய தாக்குதல்கள்

சமீபத்திய ஆண்டுகளில் சிரியாவில் உள்ள இலக்குகள் மீது நூற்றுக்கணக்கான தாக்குதல்கள் நடத்தியதாக இஸ்ரேல் முன்னர் ஒப்புக்கொடுள்ளது. இவை இரான் ராணுவம் பயிற்சியளிப்பதாகக் கூறப்படும் ஆயுதக் குழுக்களை அழிக்கும் நோக்குடன் நடத்தப்படவை என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காஸாவில் போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலிய தாக்குதல்கள் முடுக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. வடக்கு இஸ்ரேல் மீது ஹெஸ்புலா நடத்திய தாக்குதலுக்கும், லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள இரான் ஆதரவுக் குழுக்கள் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலுக்கும் இது பதிலடி எனக் கூறப்படுகிறது.

ஆனால் திங்கட்கிழமை (ஏப்ரல் 1) இஸ்ரேல் சிரியா மீது நடத்திய தாக்குதல் நிலைமையை மிகவும் மோசமாக்கும் என்று கருதப்படுகிறது.

இரான் மற்றும் அதன் கூட்டாளிகளின் உறுதியை இஸ்ரேல் சோதிப்பது போல் தெரிகிறது. தங்கள் எதிரிகள் மீது அழுத்தத்தை அதிகரிப்பதில் இஸ்ரேல் தீவிரம் காட்டுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஒரு பதிலடி இருக்கும். ஆனால் அது பொதுவாக எதிர்பார்க்கப்படும்படி ஏவுகணைத் தாக்குதலாக இருக்காது, ஒருவித சைபர் தாக்குதலாக இருக்கலாம்.

தொடர் தாக்குதல்கள்

இந்தத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிந்திருந்ததாக அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, தெற்கு இஸ்ரேலிய நகரமான ஈலாட்டில் உள்ள கடற்படைத் தளத்தின் மீது நடந்த ட்ரோன் தாக்குதல் ‘மிகவும் தீவிரமான சம்பவம்’ என்றார். அந்த ட்ரோன் ‘இரானால் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டது’ என்று அவர் கூறினார்.

கடந்த வெள்ளியன்று டமாஸ்கஸ் மற்றும் வடக்கு சிரியாவின் நகரமான அலெப்போ மீது இஸ்ரேலால் நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈலாட்டில் தாக்குதல் நடந்தது. அதில் 38 சிரிய வீரர்கள் மற்றும் இரான் ஆதரவு பெற்ற லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்புலாவின் ஏழு உறுப்பினர்கள் உட்பட 53 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு கூறியது.

கடந்த ஜனவரி மாதம், இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் மெஸ்ஸேவில் நடந்த மற்றொரு தாக்குதல் ஐந்து மூத்த இரானிய அதிகாரிகளையும் பல சிரிய பாதுகாப்பு அதிகாரிகளையும் கொன்றது.

இரானின் இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து சிரியாவில் தாக்குதல்களை நடத்தியதை இஸ்ரேல் முன்பு ஒப்புக்கொண்டது.

சிரியாவின் உள்நாட்டுப் போரில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் படைகளுக்கு ‘ஆலோசனை வழங்க’ தனது ராணுவத்தினரை அனுப்பியதாக இரான் கூறியது. மேலும், அவர்கள் போரில் ஈடுபடவில்லை என்று இரான் கூறியது.

https://www.bbc.com/tamil/articles/ced0q3zvw3zo

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிய தூதரகத்துக்கு  மிக அருகில் தான் கனடா தூதரகம் உள்ளதாம். ஈரானிய தூதரகம் தாக்குவதற்கு 30 நிமிடத்துக்கு முன் கனடிய தூதரகத்தில் உல்ளவர்கள் வெளியேறி உள்ளார்களாம். ஆகவே இத்தாக்குதல் பற்றி கனடாவுக்கு தெரியும் என தெரிவிக்கப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

ஈரானிய தூதரகத்துக்கு  மிக அருகில் தான் கனடா தூதரகம் உள்ளதாம். ஈரானிய தூதரகம் தாக்குவதற்கு 30 நிமிடத்துக்கு முன் கனடிய தூதரகத்தில் உல்ளவர்கள் வெளியேறி உள்ளார்களாம். ஆகவே இத்தாக்குதல் பற்றி கனடாவுக்கு தெரியும் என தெரிவிக்கப்படுகிறது.

இருக்கலாம். சிரியாவுடன் மேற்குலகு இராஜதந்திர உறவுகளை இப்போதும் பேணுகின்றனவா? 

On 2/4/2024 at 17:45, Kapithan said:

சும்மா ஒரு புரிந்துணர்வுக்காகத்தான் கேட்கிறேன்,..😁

நீளமான ஆங்கிலச் செய்திகளை வாசிக்காமலே திரிகளில் கொண்டு வந்து ஒட்டிவிட்டுப் போவதைவிட ரஞ்சித் செய்திக் குறிப்பைத் தமிழில் எழுதி அதனுடன் தொடர்புடைய ஆங்கிலச் செய்தியின் இணைப்பையும் கொடுத்துள்ளார். இதனை ஊக்குவிப்பதற்கான விருப்புப் புள்ளி முக்கிமான காரணம்.

திரிகளில் கேள்விகளை மட்டுமே கேட்டுவிட்டு விவாதத்துக்கு மத்தியில் இரண்டு வரியில் நக்கலாக எழுதும் கருத்துகளுக்கு விருப்புப் புள்ளி போடுவதை விட ஊக்குவிப்பும் பாராட்டும் சிறந்தது. புரிகிறதா ?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, இணையவன் said:

சாரி பிறதர்,

என்ன காரணத்துக்காக ❤️ போட்டீர்கள் என்று கேட்டால் வான்மீகி எழுதிய கம்பராமாயணம்  போன்று ஏதேதோ கிறுக்குகிறீர்கள் 😁

Like❤️ விருப்புக்குறி போடுவது செய்தியை அதன் சாரத்தை விரும்புவதற்காக.

ஊக்குவிப்பும் பாராட்டும் கொடுப்பது செய்தியை இணைத்ததற்காக நன்றி கூறுவதனூடாக. 

அதையும் தாண்டிப் புனிதமானது ❤️❤️❤️❤️❤️ எனத் தாங்கள் கருதுவீர்களானால் அந்த Like button ஐ தனி மடலில்தான் அனுப்ப வேண்டும். 

(பிறறின் மரணத்தில். துன்பத்தில். வன்முறையில் மகிழ்ச்சி அடையும் தாங்கள் இஸ்ரேலின் இந்தத் தாக்குதலின் மூலம் எதிர்காலத்தில்  எழக்கூடிய பாரிய அழிவுகளையிட்டு/அனர்த்தங்களையிட்டு  கிஞ்சித்தேனும் சிந்தித்ததுண்டா? 😏)

21 minutes ago, இணையவன் said:

நீளமான ஆங்கிலச் செய்திகளை வாசிக்காமலே திரிகளில் கொண்டு வந்து ஒட்டிவிட்டுப்,....

செய்திகளின் மூலங்களையும், ஒரு செய்தியின்  மறுபக்கத்தையும் இணைப்பது ஏன் என்று தங்களுக்குப் புரியவில்லை என்பது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. 

3 minutes ago, Kapithan said:

(பிறறின் மரணத்தில். துன்பத்தில். வன்முறையில் மகிழ்ச்சி அடையும் தாங்கள் இஸ்ரேலின் இந்தத் தாக்குதலின் மூலம் எதிர்காலத்தில்  எழக்கூடிய பாரிய அழிவுகளையிட்டு/அனர்த்தங்களையிட்டு  கிஞ்சித்தேனும் சிந்தித்ததுண்டா? 😏)

உக்ரெயின் அழிவுகளை ஆதரித்தது போலவா ? 
பலஸ்தீன் அழிவுகளை எங்காவது ஆதரித்து எழுதியுள்ளேனா ? மேலுள்ள செய்தியில் இறந்தவர்கள் அனைவரும் இராணுவத்தினரும் போராளிகளும் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, இணையவன் said:

1) உக்ரெயின் அழிவுகளை ஆதரித்தது போலவா ? 

2)பலஸ்தீன் அழிவுகளை எங்காவது ஆதரித்து எழுதியுள்ளேனா ? மேலுள்ள செய்தியில் இறந்தவர்கள் அனைவரும் இராணுவத்தினரும் போராளிகளும் மட்டுமே.

1) உக்ரேனிய யுத்தத்தை நான்  ஆதரித்து எழுதிய ஒரு வரியைத்தானும் உங்களால் இங்கே இணைக்க முடியுமா? 

ரஸ்ய - உக்ரேனிய யுத்தத்திற்கான காரணங்களின் ஒரு பக்கக் கதை மட்டுமே இங்கே இணைக்கப்படுவதால் அதன் மறுபக்கத்தைக் காட்டுவதற்காக தேவை என்று நான் கருதுவதை  இங்கே இணைத்து வந்துள்ளேன். 

2) இறந்தவர் அனைவரும் இராணுவத்தினரும் போராளிகளும் என்று தாங்கள் கூறுவதனூடாக அந்தக் கொலைகளை தாங்கள் ஆதரிக்கிறீர்கள் என்று கொள்ளலாமா? 

ஆதரிக்கிறீர்கள் ! 

😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.