Jump to content

சென்னை கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் கைதாகி பின்னர் விடுவிப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை கடலூரில் தங்கர்பச்சான் வெற்றி என்று கூறிய கிளி ஜோதிடர் கைதாகி பின்னர் விடுவிப்பு

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கடலூரில் பாமக சார்பில் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார்.. இவர் பிரசாரத்தின்போது கிளி ஜோதிடம் பார்த்தார். அப்போது கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று ஜோதிடர் கூறினார். இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தங்கர்பச்சான், பின்னர் ஓட்டு கேட்க சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இந்நிலையில் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த செல்வராஜ் என்பவரையும், அதே பகுதியில் கிளி ஜோதிடம் பார்த்த சீனுவாசன் என்பவரையும் வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கிளிகளை வளர்ப்பது குற்றமாகும். அந்த அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் விளக்கம் அளித்தனர்.

இதனிடையே வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: "கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது. பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். 

கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் சோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார். அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார்.  இந்நிலையில் கடலூரில் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த ஜோதிடர் செல்வராஜ் மற்றும் சீனுவாசன் என்ற ஜோதிடரை வனத்துறையினர் எச்சரித்து விடுவித்தனர். அவர்களிடம் இருந்த 4 கிளிகளையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் கிளிகளை வளர்ப்பது குற்றம் என எச்சரித்து அவர்களை விடுவித்தனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/kili-sodhidar-arrested-for-claiming-thangarbachan-victory-in-cuddalore-constituency-anbumani-ramado-597117.html

🤣🤣...........

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

image-2024-04-10-085526423.png

கிளிய சுதந்திரமா பறக்க விட்டினமாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செத்த கிளிக்கு ஜோசியம் எதற்கு😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றுக் கணக்கான யானைகளை தந்தத்திற்காகக் கொன்ற வீரப்பன் "வனக்காவலன்" ஆக முடியுமென்றால், ஸ்ராலின் "கிளி காத்த செம்மலாக" முயல்வதில் என்ன தவறு யுவர் ஆனர்😎?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

செத்த கிளிக்கு ஜோசியம் எதற்கு😁

17 minutes ago, Justin said:

நூற்றுக் கணக்கான யானைகளை தந்தத்திற்காகக் கொன்ற வீரப்பன் "வனக்காவலன்" ஆக முடியுமென்றால், ஸ்ராலின் "கிளி காத்த செம்மலாக" முயல்வதில் என்ன தவறு யுவர் ஆனர்😎?

🤣..........

19ம் திகதி மட்டும் எல்லா கிளிகளும் சிங்காரித்துக் கொண்டு தான் இருப்பினம் போல....அதற்குப் பிறகும் exit poll எல்லாம் சுத்தப் பொய், தாங்களே வெல்லப் போகின்றோம் என்பினம்........கடைசியில் வாக்குகள் விலை போய் விட்டன என்று முடிக்கப் போகின்றார்கள்.

இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் கட்சி கூட அவர்களின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை நிற்பாட்டி விடுவோம், மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கொடுக்க மாட்டோம் என்று சொல்லுவது இயக்குனர் ஷங்கர் கூட இதுவரை செய்யாத ஒரு புதுமை.....😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

விருதுநகரில் விஜய பிராபாகரன் வெற்றிமுகமாமே?

ராதிகா கிட்டதட்ட விலகியது போலத்தானாம்.

மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் - இராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கம். 

விபி வென்றால் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

விருதுநகரில் விஜய பிராபாகரன் வெற்றிமுகமாமே?

ராதிகா கிட்டதட்ட விலகியது போலத்தானாம்.

மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் - இராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கம். 

விபி வென்றால் சந்தோசம்.

விருதுநகர் விஜய்காந்தின் பிறந்த ஊர் என்பதால் அவரின் மகனுக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகின்றது என்றே எல்லோரும் சொல்கின்றனர்.

எனக்கு தனிப்பட்ட வகையில் விஜய்காந்த் மீது இருந்த அபிமானம் இன்னும் அவர் குடும்பத்தில் எவர் மேலும் வரவில்லை. மாறாக, குறிப்பாக விஜய்காந்தின் மனைவியும், அவர் மைத்துனரும் வெறும் பேரம் பேசும் வியாபாரிகள் போன்றே தெரிகின்றனர். அங்கு எல்லோருமே பேரம் தான் பேசுகின்றனர், ஆனாலும் இவர்கள், சரத்குமார் போன்றோர் இன்னும் சில படிகள் கீழே இறங்கினது போல உள்ளது.....😌   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

நிச்சயமாக பிரேம லதா, சுதீஷ் இருவரும் விஜயகாந்தை பிடித்த ஏழரைகள்தான்.

ஆனால் களத்தில் இருக்கும் வேட்பாளரில் விபி பரவாயில்லாமல் தெரிகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

நிச்சயமாக பிரேம லதா, சுதீஷ் இருவரும் விஜயகாந்தை பிடித்த ஏழரைகள்தான்.

ஆனால் களத்தில் இருக்கும் வேட்பாளரில் விபி பரவாயில்லாமல் தெரிகிறார்.

ஏழரை பிடிக்கும்போதுதான் கலியாணம் நடக்கும் என்று ஜோதிடம் சொல்லும் .....நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது இது டபிள் ஏழரைபோல் தெரிகின்றது.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

ஏழரை பிடிக்கும்போதுதான் கலியாணம் நடக்கும் என்று ஜோதிடம் சொல்லும் .....நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது இது டபிள் ஏழரைபோல் தெரிகின்றது.......!  😂

ஏழரையிலும்.  டபிள்.   திரில்,... ....என்று வகைகள் உண்டா?? ஆண்களுக்கு. ஏழரை நடக்கும் போது  திருமணம் நடக்கும் என்றால் அது உண்மையான ஜோதிடம் தான்   😀

  • Haha 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.