Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

(இனியபாரதி) 
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர்

யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.

தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர்.

அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப)

யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதய சத்திர சிகிச்சையின் போது இரு குடும்ப உறுப்பினர்கள் கூட இருக்க அனுமதிக்கப் பட்டார்களா? எங்கும் கேள்விப் படாத நடைமுறையாக இருக்கிறதே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Justin said:

இதய சத்திர சிகிச்சையின் போது இரு குடும்ப உறுப்பினர்கள் கூட இருக்க அனுமதிக்கப் பட்டார்களா? எங்கும் கேள்விப் படாத நடைமுறையாக இருக்கிறதே?

அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Justin said:

இதய சத்திர சிகிச்சையின் போது இரு குடும்ப உறுப்பினர்கள் கூட இருக்க அனுமதிக்கப் பட்டார்களா? எங்கும் கேள்விப் படாத நடைமுறையாக இருக்கிறதே?

அது தான் எனக்கும் புரியல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வைத்தியசாலையில் உள்ளே விடாவிட்டாலும் நியூஉதயன் உள்ளே விடலாம் தானே. 

சத்திர சிகிச்சையின்போது தவறுகள் நடைபெறுகின்றன. ஏதோ வகையில் உறவினர்கள் அதுபற்றி அறிந்து இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எந்த நாட்டில் தான் வைத்திய தவறுகளால் உயிரிழப்பு இல்லை...??! இப்போ வைத்தியரிடம் நல்ல கவனிப்பை பெறனும் என்றால்.. கையில காசிருக்கனுன்ன நிலை ஊரில். வைத்தியத்துறை சேவை என்ற நிலை மாறி வருவாய்க்கான வியாபாரம் ஆகிவிட்டது.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.