Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

large.main-qimg-c75fb730bc4b76f0f6765b88cca924e0-lq.jpeg.23c25a626b3b4721e726b402d512e8fb.jpeg

நிலவே! நிலவே..!

*********************

உனைக் காட்டி அம்மா

எனக்கு சோறூட்டினாள்

உன்னுக்குள் -ஒளவை

இருப்பதாக உணர்வூட்டினாள்

உனைப் பிடித்து தருவதாக

அன்பூட்டினாள்-பின்பு

உனைத்தேடி போவென்றே!

அறிவூட்டினாள்-நீயோ

 

உலகத்தின் பெண்களுக்கு

உவமை ஆகினாய்-அதனால்

உன்னை வைத்தே

பலபேர்கள் கவிஞராகினார்.

 

இருள் கடலில் மிதந்து வந்து

இளமை காட்டுவாய்

இடையிடையே வளர்ந்து ,தேய்ந்து

எம்மை வாட்டுவாய்.

 

உன்னை வந்து பார்ப்பதற்கு

பணக் கோடியுமில்லை-நீ

எமை மறந்து போவதர்கு-மனித

சுயனலமில்லை-அதுதான்

 

சூரியனின் கோவமதைக்

குளிர்மையாக்கிறாய்-இரவு

சுதந்திரமாய் நாம் திரிய

ஒளியை பாச்சிறாய்-நிலவே

 

கோடியாண்டு உன்னோடு

வாழ்ந்தவர் பற்றி-கொஞ்சம்

கொட்டுவாயா நாம்

மாறி வாழ்வதற்க் காக.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியெல்லாம நாம் பார்த்த நிலவில்

முதன்முதல் காலடி வைத்த போது

வந்ததே எனக்கு கோபம்

எமது கடவுளின் தலையிலா

கால் வைத்தீர்களா பாவிகளா.

  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படியெல்லாம நாம் பார்த்த நிலவில்

முதன்முதல் காலடி வைத்த போது

வந்ததே எனக்கு கோபம்

எமது கடவுளின் தலையிலா

கால் வைத்தீர்களா பாவிகளா.

அதுக்காக ஆம்ஸ்ரோம் என்ன அப்பர் சுவாமிகளா கால் படாமல் தலையால் நடந்து போக......!  😂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு, செப்டம்பர்  23, 2018, நிலாவில் பாபாவின் முகம் தெரிவதாக சென்னை நகரம் இரண்டு மணித்தியாலத்துக்கு ஆர்வமும், அதிர்ச்சியும் அடைந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம் ?


பலர் கைகளில் டெலஸ்கோப் இருந்தது. நிலாவையே பார்த்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் பிரத்தியேக கண்ணாடி அணிந்தும் இருந்தனர். 


அப்போது அவர்களில் சிலர், "ஆமாம்.. பாபா முகம் தெரிகிறது" என கூறி பரவசப்பட்டனர். ஒரு சிலர் நிலாவை பார்த்து வணங்கவே ஆரம்பித்து விட்டனர். எனக்கு இவர்களை பார்க்க வேடிக்கையாக இருந்தது?


ஒரு பக்கம் காதல் பாட்டுடனும் மறுபக்கம் இப்படியும் தான் நிலா இன்று படாத பாடு படுகிறது?. 


நானும் ஒரு நிலாவை மறவாமல், அதன் நினைவில் மூழ்கிறேன்!


"கண்கள் இரண்டும் மகிழ்ந்து மயங்க
வண்ண உடையில் துள்ளி வந்தாய்
விண்ணில் உலாவும் மதியும் தோற்று
கண்ணீர் சிந்தித் தேய்ந்து மறைந்தது!"


"வெண்மை கொண்ட என் உள்ளத்தில்
பூண் போல் உன்னை அணிந்துள்ளேன்
ஆண்டுகள் போனாலும் உன்னை மறவேன்
எண்ணம் எல்லாம் நீயே பெண்ணிலாவே!"

May be an image of eclipse No photo description available.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பசுவூர்க்கோபி said:

 

 

large.main-qimg-c75fb730bc4b76f0f6765b88cca924e0-lq.jpeg.23c25a626b3b4721e726b402d512e8fb.jpeg

நிலவே! நிலவே..!

*********************

உனைக் காட்டி அம்மா

எனக்கு சோறூட்டினாள்

உன்னுக்குள் -ஒளவை

இருப்பதாக உணர்வூட்டினாள்

உனைப் பிடித்து தருவதாக

அன்பூட்டினாள்-பின்பு

உனைத்தேடி போவென்றே!

அறிவூட்டினாள்-நீயோ

 

உலகத்தின் பெண்களுக்கு

உவமை ஆகினாய்-அதனால்

உன்னை வைத்தே

பலபேர்கள் கவிஞராகினார்.

 

இருள் கடலில் மிதந்து வந்து

இளமை காட்டுவாய்

இடையிடையே வளர்ந்து ,தேய்ந்து

எம்மை வாட்டுவாய்.

 

உன்னை வந்து பார்ப்பதற்கு

பணக் கோடியுமில்லை-நீ

எமை மறந்து போவதர்கு-மனித

சுயனலமில்லை-அதுதான்

 

சூரியனின் கோவமதைக்

குளிர்மையாக்கிறாய்-இரவு

சுதந்திரமாய் நாம் திரிய

ஒளியை பாச்சிறாய்-நிலவே

 

கோடியாண்டு உன்னோடு

வாழ்ந்தவர் பற்றி-கொஞ்சம்

கொட்டுவாயா நாம்

மாறி வாழ்வதற்க் காக.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

கவிதை அருமை கோபியர்!

நிலாச்சோறும்,ஔவைபாட்டி நிலாவில் இருந்த கதையெல்லாம் கேட்ட காலம் வரைக்கும்  நாம் எல்லோரும் நிம்மதியாக நோய் நொடியில்லாமல் வாழ்ந்தோம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கவிதைக்கு கருத்துப் பரிமாறி ஊக்கம் தந்த அனைத்து கலைஇலக்கிய  நல் உள்ளங்களுக்கும்
நன்றிகள்.
அன்புடன் -பசுவூர்க்கோபி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • நியானி changed the title to நிலவே நிலவே கதை கேளு!

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.