Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

அதற்காக புலத்தில் இருந்து கொண்டு இலங்கை வாழக்கூடிய நாடு. நான் அங்கே போய் வாழ்வேன். வீடு கட்டுவேன்.அது செய்வேன் இது செய்வேன் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து.
வாழும் போதே அங்கு போய் அனுபவித்து வாழவேண்டும். நான் சொல்ல வருவது இன்றே அங்கு சென்று வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.அதுதான் கொள்கைக்கு அழகு. இலங்கையில் வாழவேண்டும் என முழத்திற்கு முழம் சூளுரைத்துக்கொண்டு தள்ளாடி கட்டையில் போகும் வயதில் சென்று யாருக்கு என்ன பயன்?

நோ…நோ பிக் ப்ரோ நீங்கள் என்னை தப்பாக புரிந்து கொண்டு விட்டீர்கள்.

இதுவரை எனது வாழ்க்கையை எடுத்தால் நான் அதில் அண்ணளவாக 59% ஐ யூகேயில் தான் கழித்துள்ளேன். 41%தான் இலங்கையில்.

ஆகவே நான் ஒரு பாதி இங்கிலீஸ்காரன்யா🤣.  யாழ்கள வழக்கப்படி மரியாதையாக சொன்னால் மேற்கின் அடிமை.

ஆகவே எனக்கு அதுவும் இதுவும் இரெண்டு கண்கள் போல. ஒன்றை விட்டு விட்டு இன்னொன்றோடு வாழவே முடியாது.

எனக்கு இலண்டனில் இருந்து உதயன் வாசிக்கவும் பிடிக்கும், யாழ்பாணத்தில் இருந்து கார்டியன் வாசிக்கவும் வேண்டும். 

ஆறுமாதம் இங்கே நின்றால் நெய் பரோட்டா கேட்கும்.

ஆறு மாதம் அங்கே நின்றால் ஒரு ஷீஷ் கெபாப் விடாய்க்கும்.

ஆகவே அங்கே, இங்கே என வாழ்வதுதான் என் குறிக்கோள்.

ஆனால் - பெறக்கூடாது, பெற்றால் எம்மால் முடிந்தளவு வாய்ப்புக்களை கொடுக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அந்த வாய்புக்கள் ஒரு 3ம் உலக நாட்டை விட, உலகின் 4/5 வது பெரிய பொருளாதாரத்தில் அதிகம் என நான் நம்புகிறேன். ஆகவே என் இன்பத்துக்காக இப்போதைக்கு அங்கே, இங்கே என  போகப்போவதில்லை. தந்தை இல்லாத ஆண் பிள்ளைகளின் சீரழிவை நேரிலேயே கண்டுள்ளேன். ஆகவே அந்த புரொஜெக்ட் முடியும் மட்டும் அரக்க முடியாது.

அடுத்தது - அங்கே, இங்கே வாழ்வது என்றால் - காசு வேணும். ஆகவே சில ஏற்பாடுகளை இப்பவே செய்ய தொடங்கினால் காலம் கனியும் போது செய்யலாம். கற்ற கல்வி கடைசி வடக்கும் சோறு போடுமாமே? முயற்சித்து பார்க்கலாம்.

ஆனால் நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைத்து இது நிறைவேறாமலே போகலாம். 

போகட்டுமே….போகும் போது நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கும். முடிந்தளவு அவற்றை இன்பமானதாக சேர்க்க முனைந்தோம் என்ற நிம்மதியில் கண் மூடலாம்.

#ஆண்டி ***யை தட்டினால் பறப்பது புழுதி🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

தந்தை இல்லாத ஆண் பிள்ளைகளின் சீரழிவை நேரிலேயே கண்டுள்ளேன். ஆகவே அந்த புரொஜெக்ட் முடியும் மட்டும் அரக்க முடியாது.

நானும் இதே மாதிரி திட்டத்தில் இருந்தேன்.

ஆனாலும் பிள்ளைகள் படித்து வேலை பின்னர் திருமணம் பேரப்பிள்ளைகள் என்று தொடருது.

நியூயோர்க்கில் உள்ள வீட்டில் ஓரிரு மாதத்துக்கொரு தடவை போய் பார்ப்பது டாக்ரர் விசிற்.

பிறந்து வளர்ந்த வீடும் இதே மாதிரி சீரழியுது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் இதே மாதிரி திட்டத்தில் இருந்தேன்.

ஆனாலும் பிள்ளைகள் படித்து வேலை பின்னர் திருமணம் பேரப்பிள்ளைகள் என்று தொடருது.

நியூயோர்க்கில் உள்ள வீட்டில் ஓரிரு மாதத்துக்கொரு தடவை போய் பார்ப்பது டாக்ரர் விசிற்.

பிறந்து வளர்ந்த வீடும் இதே மாதிரி சீரழியுது.

Man proposes, god disposes.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.

ஒரு 25, 20 வருடம் முதல் இதே பிளானை என்னிடம் சொல்லிய ஆட்களில் எண்ணி இருவர் மட்டுமே நிஜமாகவே ஊரோடு போய் உள்ளார்கள்.

எதுவும் சொல்லிகொண்டு இல்லை.

நடந்தால் சந்தோசம், இல்லை என்றாலும் no regrets. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, goshan_che said:

Man proposes, god disposes.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.

ஒரு 25, 20 வருடம் முதல் இதே பிளானை என்னிடம் சொல்லிய ஆட்களில் எண்ணி இருவர் மட்டுமே நிஜமாகவே ஊரோடு போய் உள்ளார்கள்.

எதுவும் சொல்லிகொண்டு இல்லை.

நடந்தால் சந்தோசம், இல்லை என்றாலும் no regrets. 

அப்படியல்ல....
நாம் அன்று நினைத்தது போல் மண்/மண்களில் ஒரு கோடு கீறப்பட்டிருந்தால் எமது மன நிலையும் நிலைப்பாடும் தலைகீழாக வேறு விதமாக இருந்திருக்கும்.
புலம்பெயர் தமிழர்கள் கூட தமது வாழ்க்கை நிலையை வேறு விதமாக திட்டமிட்டிருப்பார்கள்.

உதாரணத்திற்கு ஜேர்மனியில் வாழும் துருக்கியர் போல்....

40 minutes ago, goshan_che said:

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.

😂

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

அப்படியல்ல....
நாம் அன்று நினைத்தது போல் மண்/மண்களில் ஒரு கோடு கீறப்பட்டிருந்தால் எமது மன நிலையும் நிலைப்பாடும் தலைகீழாக வேறு விதமாக இருந்திருக்கும்.
புலம்பெயர் தமிழர்கள் கூட தமது வாழ்க்கை நிலையை வேறு விதமாக திட்டமிட்டிருப்பார்கள்.

உதாரணத்திற்கு ஜேர்மனியில் வாழும் துருக்கியர் போல்....

😂

துருக்கியர் மட்டும் அல்ல, புலம்பெயர் இந்தியரும் இப்படித்தான். ஆனால் புலம்பெயர் பங்களாதேசிகள், சிங்களவர் பெரிதாக அப்படி இல்லை.

அப்போ அப்படி நடந்திருந்தால் இனி எப்படி நடந்திருக்கும் என்பது  கொஞ்சம் அல்ல ரொம்பவே மூக்கு சாத்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

Man proposes, god disposes.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.

ஒரு 25, 20 வருடம் முதல் இதே பிளானை என்னிடம் சொல்லிய ஆட்களில் எண்ணி இருவர் மட்டுமே நிஜமாகவே ஊரோடு போய் உள்ளார்கள்.

எதுவும் சொல்லிகொண்டு இல்லை.

நடந்தால் சந்தோசம், இல்லை என்றாலும் no regrets. 

அந்நேரம் வந்தவர்கள் எல்லோருமே இதே மனநிலையில் இருந்தார்கள்.

நான் நினைக்கிறேன் புலிகள் போன போக்கிற்கு கட்டாயம் தமிழீழம் கிடைக்கும் என்று நான் உட்பட எல்லோரும் எண்ணத்தில் இருந்திருப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

அந்நேரம் வந்தவர்கள் எல்லோருமே இதே மனநிலையில் இருந்தார்கள்.

நான் நினைக்கிறேன் புலிகள் போன போக்கிற்கு கட்டாயம் தமிழீழம் கிடைக்கும் என்று நான் உட்பட எல்லோரும் எண்ணத்தில் இருந்திருப்போம்.

உண்மைதான்...
நம்பியிருந்தோம்
ஆனால் 
எம்மை விட
புலிகள் காலத்தில் அவர்களை சலித்து கொட்டியவர்கள் தான் இன்று புலிகள் இருந்தால் நல்லது என முணுமுணுக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.

கையோட குருபெயர்ச்சி,சனிபெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சி தான் காரணம் எண்டு சோல்லிட்டு போறது....🤣

  • கருத்துக்கள உறவுகள்

முன்பும் எழுதி இருந்தேன் என நினைக்கிறேன். நிச்சயமாக என் பின் பதின்ம வயதுகளில், நான் இலங்கையில் இருக்கும் போதே, தனி நாடு கிடைக்கும் என நான் நம்பவில்லை.

புலிகளை ஒரு போதும் சலித்ததில்லை. ஆனால் தலைவர் இருக்கும் போது இது முடிந்து விடவேண்டும் என அங்கலாய்தேன். அவர் இருக்கும் போது ஒரு பாதி தீர்வு கிடைத்து அதை அவர் 20 வருடம் அமல் படுத்துவது, அவர் இல்லாத போது தனி நாடே கிடைப்பதை விட மேலானது என நம்பினேன்.

எல்லோரை போலவும் தலைவரின் இயங்கு-காலமும் மட்டுப்பட்டது, இயற்கை இனவாதிகளுக்கு சார்பாக இருக்கிறது. அவர்களும் இதை உணர்ந்து playing for time. என்பதை உணர்ந்திருந்தேன்.

தனி நாடு கிடைத்திருந்தாலும் நான் 100% திரும்பி போய் இருக்க மாட்டன் என்றே நினைக்கிறேன்.

ஏனையோரை பற்றி தெரியவில்லை, என்னதான் வெளிநாடு என சொன்னாலும், எனக்கு இங்கேயும் வேர் கொஞ்சம் ஆழமாகவே ஓடி விட்டது.

அடுத்தது சுதந்திரம் ஒரு பொல்லாத சாமன் - அதற்கு பழக்கப்பட்டு விட்டால் கஸ்டம்.

அதை இங்கே போல், கொழும்பிலோ அல்லது புலிகளின் ஆளுகையின் கீழோ என்னால் அனுபவித்திருக்க முடியும் என நான் நம்பவில்லை.

10 minutes ago, குமாரசாமி said:

கையோட குருபெயர்ச்சி,சனிபெயர்ச்சி,ராகு கேது பெயர்ச்சி தான் காரணம் எண்டு சோல்லிட்டு போறது....🤣

குரு அள்ளி கொட்டுதாம்…

கொட்டினதை அப்படியே சனி வழிச்சு எடுக்குதாம்…

இதுதான் நம்ம லைப் ஸ்டோரி ஆச்சே🤣

35 minutes ago, ஈழப்பிரியன் said:

அந்நேரம் வந்தவர்கள் எல்லோருமே இதே மனநிலையில் இருந்தார்கள்.

நான் நினைக்கிறேன் புலிகள் போன போக்கிற்கு கட்டாயம் தமிழீழம் கிடைக்கும் என்று நான் உட்பட எல்லோரும் எண்ணத்தில் இருந்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

அந்நேரம் வந்தவர்கள் எல்லோருமே இதே மனநிலையில் இருந்தார்கள்.

நான் நினைக்கிறேன் புலிகள் போன போக்கிற்கு கட்டாயம் தமிழீழம் கிடைக்கும் என்று நான் உட்பட எல்லோரும் எண்ணத்தில் இருந்திருப்போம்.

2009 வரை எதுவாக இருந்தாலும் ஈழம் நோக்கியே. உலகத்தில் எங்கும் எந்த சொத்தும் வாங்கியதில்லை. அவ்வளவு பிடிவாதம். இருந்த, பழகிய இடமும் அப்படி.

அதன் பின்னர் எல்லாமே இழந்து நிர்க்கதியாக நின்ற போது .......

மீண்டும் 83இல் கொழும்பில் நின்ற நிலை. 

பிரான்ஸ் வந்ததிலிருந்து வீட்டுக்காக 10 வருடங்கள், நாட்டுக்காக 15 வருடங்கள், ஊருக்காக 20 வருடங்கள்.....

சரி இனியாவது மனைவி பிள்ளைகளுக்காக வாழலாம் உழைக்கலாம் என்று எடுத்த முடிவுப்படிதான் இனி என் வாழ்க்கை. அதன் கடைசிப் பணியாக கடைசி மகளின் படிப்பு (வைத்தியத்துறை) 2025இல் முடிகிறது. 

எனது இரண்டாவது மகன் பரிசில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் அப்பா அம்மா பிற்காலத்தில் வாழ என்று தோட்டக்காணி உட்பட அனைத்து வசதிகளுடன் வீடு ஒன்றை தானே திட்டமிட்டு புதிதாக கட்டி திறப்பை தந்து இருக்கிறான்.  அந்த இடத்தில் எங்கள் பென்சன் வாழ்வை வாழலாம் என்று இருக்கிறேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, இணையவன் said:

உலகில் அதிகமான உல்லாசப் பயணிகள் செல்லும் பிரான்சுக்கு ஒரு தடவை வாருங்கள். 🙂

உண்மைதான் கேள்விப்பட்டிருக்கிறேன். வந்து பார்க்கவும் விருப்பம்தான். ஆனால் எனது சொந்த உறவும் வேறு நிறைய நெருங்கிய உறவுகளும் ஜரேப்பாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இருக்கிறார்கள்(பிரான்ஸ் உட்பட). இவர்களை எல்லாம் பார்ப்பது என்றால் ஒரு 4 கிழமைகளாவது வேண்டும், பிறகு எப்படி நான் விரும்பும் இடங்களைப் பார்ப்பது???.. இவர்களுக்குத் தெரியாமலும் வரமுடியாது என்பதால் இன்று வரை ஜரேப்பா பயணம் தள்ளியே போகிறது. பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது என் மண்.. இதை யாருக்கும் எதற்காகவும் விட்டு போகமுடியாது… பிள்ளைகள் முடிவு அவர்களது.. ஆனால் எனது முடிவு தெளிவானது.. குழப்பமற்றது.. ஆழ சிந்தித்து எடுத்தது.. அது மாறாது..

19 hours ago, இணையவன் said:

இதுதான் எனது முடிவும்

உங்களது பிள்ளைகள் ஒரு வயதுக்கு வந்தபின்புதானே இந்த முடிவை எடுத்திருக்கிறீர்கள். ஆனால் அவர்களது சிறு வயதில் அவர்களுடன் ஊரில் போய் இருக்க நினைத்திருப்பீர்களா? 

ஏன் கேட்கிறேன் என்றால் எனக்கு தெரிந்த ஒருவர் தனது இரு சிறுவயது பிள்ளைகளுடன் ஊரில் போய் ஒரு வருடம் இருந்த பின் இங்கே திரும்பிவிட்டார் காரணம் பிள்ளைகளை அங்கே பாடசாலையில் bully செய்வதாலும் மொழிப் பிரச்சனையாலும். அவர் இப்பொழுது கூறுவது பிள்ளைகள் வளர்ந்த பின்பு போக நினைத்திருப்பதாக. 

புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்த பிள்ளைகள் ஊரில் போய் படிக்கும் பொழுது ஏற்படும் பிரச்சனைகள் அவர்களைப் பாதிக்காதா? 

எனக்கும் ஊரில் போய் வாழ விருப்பம் ஆனால் முடியாது. நான் பார்த்த அளவில் அங்கே சமூகம் விதிக்கும் அல்லது எதிர்பார்க்கும் வரையறைக்குள் இருக்கவேண்டும் அது எனக்கு சாத்தியமாகத் தெரியவில்லை. அவுஸ் வராமல் அங்கேயே தொடர்ந்து வாழ்ந்திருந்தால் அதனை ஒட்டி வாழ்ந்திருக்கலாம் ஆனால் இப்பொழுது முடியாது என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து. 

ஆனாலும் பிறந்த இடம், சொந்த மண் என்பதால்தான் இன்று வரை அங்கே தேடித்தேடிப் போகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

மீண்டும் 83இல் கொழும்பில் நின்ற நிலை. 

பிரான்ஸ் வந்ததிலிருந்து வீட்டுக்காக 10 வருடங்கள், நாட்டுக்காக 15 வருடங்கள், ஊருக்காக 20 வருடங்கள்.....

சரி இனியாவது மனைவி பிள்ளைகளுக்காக வாழலாம் உழைக்கலாம் என்று எடுத்த முடிவுப்படிதான் இனி என் வாழ்க்கை. அதன் கடைசிப் பணியாக கடைசி மகளின் படிப்பு (வைத்தியத்துறை) 2025இல் முடிகிறது. 

எனது இரண்டாவது மகன் பரிசில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் அப்பா அம்மா பிற்காலத்தில் வாழ என்று தோட்டக்காணி உட்பட அனைத்து வசதிகளுடன் வீடு ஒன்றை தானே திட்டமிட்டு புதிதாக கட்டி திறப்பை தந்து இருக்கிறான்.  அந்த இடத்தில் எங்கள் பென்சன் வாழ்வை வாழலாம் என்று இருக்கிறேன். நன்றி.

வாழ்த்துக்கள்.

 குடும்பத்துடன் சந்தோசமாக வாழுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

தனி நாடு கிடைத்திருந்தாலும் நான் 100% திரும்பி போய் இருக்க மாட்டன் என்றே நினைக்கிறேன்.

ஏனையோரை பற்றி தெரியவில்லை, என்னதான் வெளிநாடு என சொன்னாலும், எனக்கு இங்கேயும் வேர் கொஞ்சம் ஆழமாகவே ஓடி விட்டது.

அடுத்தது சுதந்திரம் ஒரு பொல்லாத சாமன் - அதற்கு பழக்கப்பட்டு விட்டால் கஸ்டம்.அதை இங்கே போல், கொழும்பிலோ அல்லது புலிகளின் ஆளுகையின் கீழோ என்னால் அனுபவித்திருக்க முடியும் என நான் நம்பவில்லை.

நீங்கள் உண்மைகளை வெளிப்படையாக பேசியுள்ளீர்கள் 👍
நீங்கள் மட்டும் அல்ல அப்போது தமிழீழம் அமைந்திருந்தால் தற்போது இலங்கையில் குடியேறிய பாலபத்ரஓணாண்டி, சுவைப்பிரியன் அய்யா , குடியேறபோகின்ற இணையவன் அண்ணாவுடன் விசுகு அய்யாவும், ரஞ்சித் அண்ணாவும் சேர்து குடியேற கூடும்.மற்றையோர் யாவருமே தமிழீழம் அமைந்திருந்தாலும் தற்போதைய அதே நிலைபாடு தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.