Jump to content

வாழ்நாளில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாடு எது..? இலங்கைக்கு 5 ஆவது இடம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்நாளில் பயணம் செய்ய வேண்டிய உலக நாடுகளின் வரிசையில் இலங்கை ஐந்தாவது இடத்தில் பெயரிடப்பட்டுள்

நியூயோர்க்கை தளமாகக் கொண்ட CEOWORLD சஞ்சிகை வௌியிட்டுள்ள, 2024 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச பயணிகளை வசீகரிக்கும் இலங்கையின் பல்வேறு சலுகைகள் மற்றும் தனித்துவமான அனுபவங்களை இந்த தரப்படுத்தல் வௌிக்காட்டுவதாக குறித்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் மிகச்சிறந்த சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை தொடர்ந்து பதிவாகி வருகின்றது.

2,95,000-இற்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை வௌியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மலைநாடு, ஆயுர்வேத சிகிச்சை, ரயில் பயணங்கள், தேயிலைத் தோட்டங்கள் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் பயணிகளுக்கு பரந்த அளவிலான அனுபவங்களை வழங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கலாசாரம் மற்றும் பண்பாட்டு மரபுகள் நிறைந்த நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆரோக்கியமான காலை உணவு என்பனவும் இலங்கையின் தனித்துவமான சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.jaffnamuslim.com/2024/04/5_28.html

ளது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் வித்துவான்கள் ஒருத்தரும் இதை வாசிக்க இல்லை போல. 

செய்தி மூலம் ஜவ்னா முஸ்லீம் என்று வேற உள்ளது. 

யார் என்ன சொன்னாலும்..

பிறந்து வளர்ந்த நாட்டுக்கு செல்வதற்கு நான் முதலிடம் கொடுக்கின்றேன். 

அன்று போல் இன்று இல்லை. இன்று போல் நாளையும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின் ஆதி மூலம்👇

https://ceoworld.biz/2024/04/15/worlds-best-countries-to-visit-in-your-lifetime-2024/

அது சரி அவா, அவா score ஐ சொல்லுங்கோ…யார் உலகம் சுற்றும் வாலிபன்/வயோதிபன் என்று பார்க்கலாம்😎.

எனக்கு

1. முதல் ஐந்தில் -5/5

2. முதல் பத்தில் - 8/10

3. முதல் பதினைந்தில் - 11/15

—————-

Rank    Country Score
1 Thailand 72.15
2 Greece 67.22
3 Indonesia 65.15
4 Portugal 64.32
5 Sri Lanka 60.53
6 South Africa 59.76
7 Peru 59.76
8 Italy 57.77
9 India 57.65
10 United Arab Emirates 57.38
11 France 56.31
12 United Kingdom 56.29
13 Bora Bora 56.2
14 United States 55.98
15 Spain 55.89
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2024 at 23:47, goshan_che said:

அது சரி அவா, அவா score ஐ சொல்லுங்கோ…யார் உலகம் சுற்றும் வாலிபன்/வயோதிபன் என்று பார்க்கலாம்😎.

 ஒரு ஓட்டை வடை 800 ரூவாய்க்கு வித்துமா சிலோன் ஐஞ்சாம் இடத்திலை நிக்குது? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

 ஒரு ஓட்டை வடை 800 ரூவாய்க்கு வித்துமா சிலோன் ஐஞ்சாம் இடத்திலை நிக்குது? 😎

பிக் ப்ரோ, வடையை விடுங்கோ…ஸ்கோரை சொல்லுங்கோ….

நீங்களும் ஒரு ஊர் சுற்றும் ஆர்வம் உள்ளவர் என நினைக்கிறேன். 

———-

@nilmini அக்கா, 1982 ரோயல் தமிழ் பெடியள் (!!!) எல்லாரும் இலங்கையில் ரியூனியன் வைத்த வீடியோ வாட்சப்பில் பார்த்தேன். வரகுணன், சுமந்திரன், சஞ்சய் இராஜரட்ணம் இன்னும் உங்களுக்கு தெரிந்த பலர் கலந்து கொண்டுள்ளனர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tunisia-map-boundaries-cities-locator.jp

shu-Tunisia-SidiBouSaid-760300645-1440x8

coast-Gulf-of-Tunis-Tunisia-Al-Marsa.jpg

எனக்குப் பிடித்த நாடு தூனிசியா.
முஸ்லீம் நாடு என்றாலும்... கூடுதலான ஐரோப்பிய கலாச்சாரம் கலந்த பழகுவதற்கு இனிமையான மரியாதையான  மக்கள். அழகிய மணல் பாங்கான கடற்கரைகள். எத்தனை முறை  போனாலும் மீண்டும் போகத் தூண்டும் நாடு என்றால் அதுதான்.

இலங்கையும் பிடித்த இடம்தான் என்றாலும்... 
வடையை 800 ரூபாய்க்கு விற்பதை நினைக்க போக விருப்பம் இல்லாமல் இருக்குது.
@goshan_che 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2024 at 23:47, goshan_che said:

செய்தியின் ஆதி மூலம்👇

https://ceoworld.biz/2024/04/15/worlds-best-countries-to-visit-in-your-lifetime-2024/

அது சரி அவா, அவா score ஐ சொல்லுங்கோ…யார் உலகம் சுற்றும் வாலிபன்/வயோதிபன் என்று பார்க்கலாம்😎.

எனக்கு

1. முதல் ஐந்தில் -5/5

2. முதல் பத்தில் - 8/10

3. முதல் பதினைந்தில் - 11/15

—————-

Rank    Country Score
1 Thailand 72.15
2 Greece 67.22
3 Indonesia 65.15
4 Portugal 64.32
5 Sri Lanka 60.53
6 South Africa 59.76
7 Peru 59.76
8 Italy 57.77
9 India 57.65
10 United Arab Emirates 57.38
11 France 56.31
12 United Kingdom 56.29
13 Bora Bora 56.2
14 United States 55.98
15 Spain 55.89

எனக்கு இந்த 15இலும் என் ஊர் தான்  முதலாவது. ஆனால் அதற்கு சுற்றுலா போவது காரணம் இல்லை சகோ. அது வேற ஏதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

Tunisia-map-boundaries-cities-locator.jp

shu-Tunisia-SidiBouSaid-760300645-1440x8

coast-Gulf-of-Tunis-Tunisia-Al-Marsa.jpg

எனக்குப் பிடித்த நாடு தூனிசியா.
முஸ்லீம் நாடு என்றாலும்... கூடுதலான ஐரோப்பிய கலாச்சாரம் கலந்த பழகுவதற்கு இனிமையான மரியாதையான  மக்கள். அழகிய மணல் பாங்கான கடற்கரைகள். எத்தனை முறை  போனாலும் மீண்டும் போகத் தூண்டும் நாடு என்றால் அதுதான்.

இலங்கையும் பிடித்த இடம்தான் என்றாலும்... 
வடையை 800 ரூபாய்க்கு விற்பதை நினைக்க போக விருப்பம் இல்லாமல் இருக்குது.
@goshan_che 😂

நான் இன்னுமும் துனிசியா போகவில்லை. ஆனால் போய் வந்தோர் பலர் ஆகா..ஓகோ எண்டுதான் புகழ்கிறார்கள்.

உங்கள் படங்களை பார்க்க போகும் ஆசை வருகிறது.

வடையை பற்றி கவலை வேண்டாம் அண்ணை, உங்கள் வீட்டில் இருந்து அருகில்தானே அம்மாச்சி - மலிவு என்றால் மலிவு, தரம் என்றால் தரம். 

5 hours ago, விசுகு said:

எனக்கு இந்த 15இலும் என் ஊர் தான்  முதலாவது. ஆனால் அதற்கு சுற்றுலா போவது காரணம் இல்லை சகோ. அது வேற ஏதோ?

அதையும் தாண்டி புனிதமானது.

——-

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே -

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னியராகி நிலவினிலாடிக்
களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்
போந்ததும் இந்நாடே 

மங்கையராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித்
தழுவியதிந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடல் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனையோருக்கு எப்படியோ தெரியவில்லை ஆனால் - கொப்பேகடுவ சந்தி/மன்னம்பிட்டியை தாண்டும் போது என் பீலிங் “சின்ராசுவை இனி கையில் பிடிக்க முடியாது” என்பதே😎.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

ஏனையோருக்கு எப்படியோ தெரியவில்லை ஆனால் - கொப்பேகடுவ சந்தி/மன்னம்பிட்டியை தாண்டும் போது என் பீலிங் “சின்ராசுவை இனி கையில் பிடிக்க முடியாது” என்பதே😎.

எதுக்கும் அடுத்த தேர்தல்வரை பொறுத்திருப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

எதுக்கும் அடுத்த தேர்தல்வரை பொறுத்திருப்போம்.

போறவை இப்ப ஒரு எட்டு போட்டு வாறது நல்லம்.

தேர்தலுக்கு பிறகு நிலைமை மோசமாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையும் பிடித்த இடம்தான் என்றாலும்... 
வடையை 800 ரூபாய்க்கு விற்பதை நினைக்க போக விருப்பம் இல்லாமல் இருக்குது.

எண்ணுறோ இரண்டாயிரமோ நமக்கு அது பிரச்னையில்லை இனவாத சிங்களத்துக்குமுன்னால் கூனி குறுகி நம்மால் நிக்க முடியாது தமிழரை மட்டம் தட்டும் இனவாதம் இல்லாமல் போனால் சிலவேளை நான் அங்கு போகக்கூடும் .

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

எண்ணுறோ இரண்டாயிரமோ நமக்கு அது பிரச்னையில்லை இனவாத சிங்களத்துக்குமுன்னால் கூனி குறுகி நம்மால் நிக்க முடியாது தமிழரை மட்டம் தட்டும் இனவாதம் இல்லாமல் போனால் சிலவேளை நான் அங்கு போகக்கூடும் .

அப்ப நாட்டுக்கு போக சான்சே இல்லை.

  • Haha 2
Link to comment
Share on other sites

43 minutes ago, பெருமாள் said:

எண்ணுறோ இரண்டாயிரமோ நமக்கு அது பிரச்னையில்லை இனவாத சிங்களத்துக்குமுன்னால் கூனி குறுகி நம்மால் நிக்க முடியாது தமிழரை மட்டம் தட்டும் இனவாதம் இல்லாமல் போனால் சிலவேளை நான் அங்கு போகக்கூடும் .

அதாவது நீங்கள் பார்க்க வேண்டிய நெருக்கமான அனைத்து உறவுகளும்,நண்பர்களும் வெளி நாட்டுக்கு வந்து விட்டார்கள் போல...?

ஆனால் எம் / என் நிலை அப்படி இல்லையே. என் சகோதரி தொட்டு, எல்லா நெருக்கமான உறவுகளும் பல நல்ல நண்பர்களும் அங்குதான் உள்ளனர். எனவே அங்கு போவது தவிர்க்க முடியாதது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

நமக்கு இருக்கினம் அவர்களுக்கு இந்த குளிர் நாட்டில் இருக்க பிடிக்கவில்லை  ஒரு விண்டர்  தாக்கு பிடிக்க முடியலை அதே கதைதான் கனடாவுக்குள்ளும் இரண்டை பிடித்து விசாவில் அனுப்பி வைத்தேன் ஊருக்கு போகணும் என்று ஒரே பக்கப்பாட்டு . என்ன செய்வது இதுகளை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அத்துடன் World’s Best Countries To Visit In Your Lifetime என்று கூகிளில்  தேடினால் நிறைய இணையங்கள் தரவரிசை படி லங்கா அநேகமாய் 10க்கு மேலதான் இருப்பது உண்டு இந்த சைட்ட்டில்  மாத்திரம் ஐந்தாவதாக வந்துள்ளது அதுதான் இணையத்தின் சுத்து  மாத்து .

பணம் கொடுத்தால் உங்களின் சமூகவலைத்தளத்தை பல ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்வது போல் தோற்றம் காட்டும் வித்தை  எல்லாம் காட்டும் .

https://www.usnews.com/news/best-countries/rankings/good-for-tourism இதில் 49 தர வரிசை அறிமுகத்தை பாருங்கள் 

https://www.usnews.com/news/best-countries/sri-lanka

The conflict continued through 2009, with scattered attacks from the Liberation Tigers, or Tamil separatists. More than 70,000 people died, with many more displaced.

Human rights grievances over war crimes remain unsettled, 

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப நாட்டுக்கு போக சான்சே இல்லை.

நீங்கள் சொன்னது மூன்று வகையில் சரி.

1. இலங்கையில் சிங்கள இனவாதம் தீராது. இது மிக சரி. அதே போல்

2. இனவாதம் தீரும் மட்டும் (அதாவது ஒரு போதும் இல்லை) எல்லாராலும் காத்திருக்க முடியாது.

3. அதே போல் மிக மோசமான இனவாதம், இன ஒதுக்கல் இருக்கிறது ஆனால்….. @பாலபத்ர ஓணாண்டி @சுவைப்பிரியன் போன்றோர் கூனி குறுகி அடிமை வாழ்வு வாழ்வதாக நான் நினைக்கவில்லை.

அப்படி என்றால் அவர்கள் எப்போதோ டிக்கெட்டை எடுத்து சுவிஸ், யூகே திரும்பி இருப்பார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்த பட்டியலில் உள்ள நாடுகளில் நான் போனது இலங்கையைத் தவிர்த்து இந்தியாவும் இங்கிலாந்தும் தான் ஆனால் இரண்டுமே பிடிக்கவில்லை. 

யாழ்ப்பாணம்/திருகோணமலை/வன்னிக்குப் போவது என்னை recharge செய்து மீள இயங்குவதாக உணர்வதால் அங்கே போகிறேன் அவ்வளவுதான்
 
ஆனால் வாழ்நாளில் ஒரு தரமாவது Greeceற்கும் Egyptற்கு போகவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. 

Edited by P.S.பிரபா
எழுத்துப்பிழை
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

8 hours ago, தமிழ் சிறி said:

எனக்குப் பிடித்த நாடு தூனிசியா. முஸ்லீம் நாடு என்றாலும்... கூடுதலான ஐரோப்பிய கலாச்சாரம் கலந்த பழகுவதற்கு இனிமையான மரியாதையான  மக்கள். அழகிய மணல் பாங்கான கடற்கரைகள். எத்தனை முறை  போனாலும் மீண்டும் போகத் தூண்டும் நாடு என்றால் அதுதான்.

துனிசியாவில் இஸ்லாமிய அடிப்படை வாதம் அதிகரித்து வருகிறது. 2015 இல் இதேபோன்ற கடற்கரை விடுதியில் நுளைந்த ஒருவர் சரமாரியாகச் சுட்டு 39 உல்லாசப் பயணிகளைக் கொன்றிருந்தார். உல்லாசப் பயணிகள் அதிகமுள்ள இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேறு நாடுகளைப் போல் எல்லா இடங்களுக்கும் பயமின்றிச் செல்ல முடியுமா என்பது சந்தேகம்.

துனிசியாவுக்கு அருகில் இருக்கும் நாடு மொறோக்கோ வித்தியாசமானது. இங்கு புர்க்கா போட்ட பெண்களைக் காண்பது அரிது. தாவணியால் முட்டாக்குப் போடாத பெண்கள் வீதியில் உலாவுவதைச் சதாரணமாகப் பார்க்கலாம். கடற்கரை, பாலைவனச் சோலை, மலை போன்ற அனைத்தையும் பார்க்கலாம்.

இரண்டுமே முன்னர் பிரான்சின் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகள்.

Link to comment
Share on other sites

1 hour ago, P.S.பிரபா said:

இந்த பட்டியலில் உள்ள நாடுகளில் நான் போனது இலங்கையைத் தவிர்த்து இந்தியாவும் இங்கிலாந்தும் தான் ஆனால் இரண்டுமே பிடிக்கவில்லை. 

உலகில் அதிகமான உல்லாசப் பயணிகள் செல்லும் பிரான்சுக்கு ஒரு தடவை வாருங்கள். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, goshan_che said:

.

வடையை பற்றி கவலை வேண்டாம் அண்ணை, உங்கள் வீட்டில் இருந்து அருகில்தானே அம்மாச்சி - மலிவு என்றால் மலிவு, தரம் என்றால் தரம். 

அதையும் தாண்டி புனிதமானது.

——-

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே -

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னியராகி நிலவினிலாடிக்
களித்ததும் இந்நாடே - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்
போந்ததும் இந்நாடே 

மங்கையராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித்
தழுவியதிந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடல் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - 

அதே…

வாயள்ளி தின்றதும் தமிழே

என் வாசலில் வந்ததும் தமிழே

நோயள்ளும் போதிலும் தமிழே

நான் நீறாகி எரிகின்ற போதிலும் தமிழே தமிழே தமிழே…

இது என் மண்.. இதை யாருக்கும் எதற்காகவும் விட்டு போகமுடியாது… பிள்ளைகள் முடிவு அவர்களது.. ஆனால் எனது முடிவு தெளிவானது.. குழப்பமற்றது.. ஆழ சிந்தித்து எடுத்தது.. அது மாறாது..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

பிக் ப்ரோ, வடையை விடுங்கோ…ஸ்கோரை சொல்லுங்கோ….

நீங்களும் ஒரு ஊர் சுற்றும் ஆர்வம் உள்ளவர் என நினைக்கிறேன். 

———-

@nilmini அக்கா, 1982 ரோயல் தமிழ் பெடியள் (!!!) எல்லாரும் இலங்கையில் ரியூனியன் வைத்த வீடியோ வாட்சப்பில் பார்த்தேன். வரகுணன், சுமந்திரன், சஞ்சய் இராஜரட்ணம் இன்னும் உங்களுக்கு தெரிந்த பலர் கலந்து கொண்டுள்ளனர்.

நன்றி Goshan . வரகுணனும் நானும் ஒரே நாளில் பிறந்தவர்கள். குடும்ப நண்பர்கள். சுமந்திரனுடன் தாயார் இறந்தபோது கதைத்தேன்.

  • Like 2
Link to comment
Share on other sites

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது என் மண்.. இதை யாருக்கும் எதற்காகவும் விட்டு போகமுடியாது… பிள்ளைகள் முடிவு அவர்களது.. ஆனால் எனது முடிவு தெளிவானது.. குழப்பமற்றது.. ஆழ சிந்தித்து எடுத்தது.. அது மாறாது..

இதுதான் எனது முடிவும். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

 @பாலபத்ர ஓணாண்டி @சுவைப்பிரியன் போன்றோர் கூனி குறுகி அடிமை வாழ்வு வாழ்வதாக நான் நினைக்கவில்லை.

அப்படி என்றால் அவர்கள் எப்போதோ டிக்கெட்டை எடுத்து சுவிஸ், யூகே திரும்பி இருப்பார்கள்.

அங்கே இருப்போரும் ஒன்றும் அடிமை வாழ்வு வாழவில்லை, சிங்கலவர்களுக்கு கூனி குறுகவும் இல்லை சிங்கலவர்களுக்கே உத்தரவு போடும் அதிகாரிகளாகவும் உள்ளனர் தமிழர்கள்.  சிலர் புது வருட கொண்டாட்டம் கொழும்பில் இன்னும் நன்றாக இருக்கும் என்பதற்காக  சென்று பார்த்துவிட்டு திரும்ப யாழ்பாணம் சென்றும் உள்ளனர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

பிக் ப்ரோ, வடையை விடுங்கோ…ஸ்கோரை சொல்லுங்கோ….

நீங்களும் ஒரு ஊர் சுற்றும் ஆர்வம் உள்ளவர் என நினைக்கிறேன்

திரியின் உள்ளடக்கற்கமைய இந்த கருத்தை எழுதுகின்றேன்.

இலங்கை சுற்றுலா பயணம் செய்வதற்கு மிக உகந்த நாடு என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. நீங்கள் குறிப்பட்ட 15 நாடுகளில் இலங்கை உட்பட 8 நாடுகளில் எவ்வித அச்சமின்றி சுற்றுலா போகக்கூடிய நாடுகள் தான். விடுதலைப்புலிகள் ஆட்சிக்காலத்திலும் எவ்வித அச்சமில்லாமல் சென்று வரக்கூடிய நாடாகத்தான் இலங்கை இருந்தது.பல நாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு படையினர் மிக மிக முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

மற்றும் படி திரிக்கு சம்பந்தமில்லாத கருத்துக்கள் என்று பார்த்தால்....😂

 புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இலங்கை வாழக்கூடிய நாடு தான். அதிலும் மாற்று கருத்து இல்லை. ஆனால் அது அவரவர் மனம்,சூழ்நிலை,பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. புலத்திலிருந்து மீண்டும் தாய்மண் நோக்கி சென்று அங்கு வாழ்பவர்கள் என்ற வகையில்  @பாலபத்ர ஓணாண்டி, @சுவைப்பிரியன்இருவரையும் பாராட்டலாம்.கையுடன் ஒரு கும்புடு🙏🏼

அதற்காக புலத்தில் இருந்து கொண்டு இலங்கை வாழக்கூடிய நாடு. நான் அங்கே போய் வாழ்வேன். வீடு கட்டுவேன்.அது செய்வேன் இது செய்வேன் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து.
வாழும் போதே அங்கு போய் அனுபவித்து வாழவேண்டும். நான் சொல்ல வருவது இன்றே அங்கு சென்று வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.அதுதான் கொள்கைக்கு அழகு. இலங்கையில் வாழவேண்டும் என முழத்திற்கு முழம் சூளுரைத்துக்கொண்டு தள்ளாடி கட்டையில் போகும் வயதில் சென்று யாருக்கு என்ன பயன்?

காசி இராமேஸ்வரமா போகின்றோம்?

இப்படிக்கு
அறிஞன் குமாரசாமி 😎

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.