Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Eppothum Thamizhan said:

கோஷான் ஷே கலக்குகிறார். வாழ்த்துக்கள்!

அவர் இங்கு மட்டுமா கலக்குகிறார்....... பக்கத்தில் தேர்தல் திரியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்......!  😂

reggie-jackson-world-series.gif

  • Replies 1.8k
  • Views 91.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்:   நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

  • கிருபன்
    கிருபன்

    பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

  • கருத்துக்கள உறவுகள்

447971422_934421832028894_19506921610533

448146395_1552995558589464_1879532988308

447878812_483647180784363_31898725960716

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

கோஷான் ஷே கலக்குகிறார். வாழ்த்துக்கள்!

லேட்டா வந்தாலும் லேட்டஸ்சா வந்திருக்கிறார்.

நாம பலர் தப்புகணக்கு போட்டுட்டோம்.

3 hours ago, suvy said:

அவர் இங்கு மட்டுமா கலக்குகிறார்....... பக்கத்தில் தேர்தல் திரியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்......! 

ஆளே ஒரு பல்கலைக்கழகம் போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

கடந்த போட்டியில் முக்கிமுனகி தான் தென்னாபிரிகா வென்றது.

ஆனபடியால் இந்த போட்டியில் சகலருக்கும் முட்டை கிடைக்கலாம்.

இரண்டு போட்டிகளில் வென்றுவிட்டோம் என்ற அசட்டை.

ஒன்றுமே வெல்லவில்லை என்று ஓர்மத்துடன் விளையாடும் பங்காளதேஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

பத்தொன்பதாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்திலும் வேகமாக ஓட்டங்களைப் பெற்றாலும், பின்னர் பாகிஸ்தான் அணியின் இறுக்கமான பந்துவீச்சால் தடுமாறி விக்கெட்டுகள் சரிய 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள்வரை நன்றாக விளையாடியிருந்தும், இந்திய அணியின் இறுக்கமான பந்துவீச்சால் ஓட்டங்களை எடுக்கமுடியாமல் திணறி இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை!

-----------------

இருபதாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள், குறிப்பாக பிராண்டன் மக்முல்லன் 31 பந்துகளில் 61 ஓட்டங்கள், அதிரடி வேகத்தில் அடித்தாடி வெற்றி இலக்கை 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 13.1 ஓவர்களிலேயே 153 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.  

முடிவு: ஸ்கொட்லாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

அனைவரும் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 

முதல் சுற்ற்றுப் போட்டிகளில் பாதி நிலையான இருபது போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கோஷான் சே 34
2 பிரபா USA 32
3 ரசோதரன் 32
4 ஈழப்பிரியன் 30
5 சுவி 30
6 நந்தன் 30
7 வாதவூரான் 28
8 ஏராளன் 28
9 குமாரசாமி 26
10 தமிழ் சிறி 26
11 கிருபன் 26
12 கந்தப்பு 26
13 வாத்தியார் 26
14 எப்போதும் தமிழன் 26
15 நீர்வேலியான் 26
16 வீரப் பையன்26 24
17 நிலாமதி 24
18 தியா 24
19 புலவர் 24
20 P.S.பிரபா 24
21 நுணாவிலான் 24
22 அஹஸ்தியன் 24
23 கல்யாணி 24

எல்லாப் புள்ளிகளும் இந்த திரியில் சிரிச்சு சிரிச்சே😆😆 முடிந்துவிட்டது. ஆனாலும் சிரமம் பாராது உடனுக்குடன் update செய்யும் உங்களுக்கு நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்

447996244_2869950299809370_6775727037891

பாகிஸ்தான் வீரர்களை விட அவர்களது ரசிகர்களுக்கு எப்போதுமே வாய்க்கொழுப்பு அதிகம்.

அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் பாகிஸ்தான் ரசிகர்கள் உருவாக்கிய நக்கலான போஸ்டர் டிசைன்..

ஆனால் போட்டியில் பாகிஸ்தான் மண்டையிலே அமெரிக்கா நங்கென்று உலகிற்கே கேட்கும் அளவுக்கு கொட்டிவிட்டது.

Rajesh Krishnamoorthy

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அவர் இங்கு மட்டுமா கலக்குகிறார்....... பக்கத்தில் தேர்தல் திரியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்......!  😂

reggie-jackson-world-series.gif

தேர்த‌ல் திரியில் பெரிய‌ப்ப‌ர் தான் க‌ல‌க்கிறார்

இனி நான் பெரிய‌ப்ப‌ருக்கு

விஸ்கி 

விரான்டி

சுமினொவ் என்று வேண்டி அனுப்ப‌னும்

பெரிய‌ப்ப‌ர் முத‌லாவ‌தாய் வ‌ந்தால் இதை செய்வேன் என்று 

சொல்லிப் போட்டேன்😁....................................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஒன்றுமே வெல்லவில்லை என்று ஓர்மத்துடன் விளையாடும் பங்காளதேஸ்.

பங்களாதேஷ் இலங்கையை வென்றதை யார் மறந்தாலும், மறைத்தாலும் நாங்கள் நாலு பேர்கள் மறக்க மாட்டோம்..........🤣

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து இருக்கின‌ம்..........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

447996244_2869950299809370_6775727037891

பாகிஸ்தான் வீரர்களை விட அவர்களது ரசிகர்களுக்கு எப்போதுமே வாய்க்கொழுப்பு அதிகம்.

அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் பாகிஸ்தான் ரசிகர்கள் உருவாக்கிய நக்கலான போஸ்டர் டிசைன்..

ஆனால் போட்டியில் பாகிஸ்தான் மண்டையிலே அமெரிக்கா நங்கென்று உலகிற்கே கேட்கும் அளவுக்கு கொட்டிவிட்டது.

Rajesh Krishnamoorthy

கோலியாத் எதிர் டேவிட்.

இங்கு உள்ளூர்க்காரர்கள் இங்கு தான் கிரிக்கட் உலக கோப்பை நடக்குது என்று தெரிந்து ஆச்சரியப்படுகின்றார்கள். அமெரிக்காவிற்கு ஒரு அணி இருப்பதும், விளையாடுவதும், வெல்வதும் அவர்களுக்கு சிரிப்பாகவே இருக்கின்றது. தோற்றாலும் சிரித்து விட்டு மறந்து விடுவார்கள். கொடுத்து வைத்த அமெரிக்க வீரர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, வீரப் பையன்26 said:

தென் ஆபிரிக்கா நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து இருக்கின‌ம்..........................

தோற்கிறதென்றே முடிவு பண்ணீட்டாங்களா பாவிகள்.

49 minutes ago, ரசோதரன் said:

பங்களாதேஷ் இலங்கையை வென்றதை யார் மறந்தாலும், மறைத்தாலும் நாங்கள் நாலு பேர்கள் மறக்க மாட்டோம்..........🤣

இன்றைக்கு பாருங்க விளையாட்டை.

அப்புறமா சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்றைக்கு பாருங்க விளையாட்டை.

அப்புறமா சொல்லுங்க.

கில்லர் மில்லரின் (killer Miller) பிறந்த நாள் இன்றாம். இன்றைக்கும் தென் ஆபிரிக்காவை அவர் தான் ரட்சிக்க வேண்டும் போல..........

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாப்பிரிக்கா 23-4

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரசோதரன் said:

கில்லர் மில்லரின் (killer Miller) பிறந்த நாள் இன்றாம். இன்றைக்கும் தென் ஆபிரிக்காவை அவர் தான் ரட்சிக்க வேண்டும் போல..........

பிற‌ந்த‌ நாள் அன்றுமாய் மில்ல‌ர் தோல்விய‌ விரும்ப‌ மாட்டார்

ஆனால் இந்தியா அடிச்ச‌ இஸ்கோர் தான் இவையால் அடிக்க‌ முடியும்...................................

தென் ஆபிரிக்கா விக்கேட் கீப்ப‌ர் கிவின்ட‌ன்டி கொக் இந்த‌ உல‌க‌ கோப்பை பூரா சுத‌ப்ப‌ல் விளையாட்டு தொட‌ங்கி  இர‌ண்டு சின்ஸ்ச‌ தூக்கி குத்தினார் அதோட‌ ஆள் வெளிய‌ ஹா ஹா...................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரசோதரன் said:

கில்லர் மில்லரின் (killer Miller) பிறந்த நாள் இன்றாம்.

ஓ அதுதான் அவசர அவசரமாக விளையாடிப் போட்டு கொண்டாட அவதிப்படுகிறார்களோ?

நாம இது தெரியாம முதலைப் போட்டுட்டு முழுசிக் கொண்டிருக்கிறம்.

போட்டிகள் முடிவதற்கிடையில் பிபி எகிறியிடும் போல இருக்கே.

அப்படி ஏதாவது நடந்தால் @கிருபன் த்தான் லாயரை வைத்து சூ பண்ண போறன்.

போட்டியை வைத்து நல்லாயிருந்த என்னை இப்படியாக்கிட்டாரே என்று.

நீங்க யாராவது என்னோடு சேருவதென்றால் இப்பவே சொல்லுங்க.

அப்புறம் சூ பண்ணி பணம் எடுத்தா பிறகு குத்தி முறிய வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

பிற‌ந்த‌ நாள் அன்றுமாய் மில்ல‌ர் தோல்விய‌ விரும்ப‌ மாட்டார்

ஆனால் இந்தியா அடிச்ச‌ இஸ்கோர் தான் இவையால் அடிக்க‌ முடியும்...................................

தென் ஆபிரிக்கா விக்கேட் கீப்ப‌ர் கிவின்ட‌ன்டி கொக் இந்த‌ உல‌க‌ கோப்பை பூரா சுத‌ப்ப‌ல் விளையாட்டு இர‌ண்டு சின்ஸ்ச‌ தூக்கி குத்தினார் அதோட‌ ஆள் வெளிய‌ ஹா ஹா...................................

தென் ஆபிரிக்கா அணியை பார்க்கிறதே ஒரு த்ரிலிங்கான அனுபவம்.......ஆட்கள் அவுட்டாக்கும் என்ற நினைக்க அடிக்கின்றார்கள்.....அடடே, அடிக்கின்றார்களே என்று நினைக்க அவுட் ஆகின்றனர். இவர்கள் தோற்கத்தான் போகின்றார்கள் என்று பலரும் நினைக்க, வென்றும் விடுவார்கள் இன்றும்........😜

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரசோதரன் said:

தென் ஆபிரிக்கா அணியை பார்க்கிறதே ஒரு த்ரிலிங்கான அனுபவம்.......ஆட்கள் அவுட்டாக்கும் என்ற நினைக்க அடிக்கின்றார்கள்.....அடடே, அடிக்கின்றார்களே என்று நினைக்க அவுட் ஆகின்றனர். இவர்கள் தோற்கத்தான் போகின்றார்கள் என்று பலரும் நினைக்க, வென்றும் விடுவார்கள் இன்றும்........😜

தென் ஆபிரிக்கா ஆர‌ம்ப‌த்தில் விக்கேட்டை இழ‌ப்பின‌ம்

4வ‌து பாட்ன‌ சிப் ம‌லை போல் நின்று விளையாடுவுன‌ம் அன்று நெத‌ர்லாந் கூட‌வும் இதே போல் தான் விளையாடினார்க‌ள்......................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

தென் ஆபிரிக்கா ஆர‌ம்ப‌த்தில் விக்கேட்டை இழ‌ப்பின‌ம்

4வ‌து பாட்ன‌ சிப் ம‌லை போல் நின்று விளையாடுவுன‌ம் அன்று நெத‌ர்லாந் கூட‌வும் இதே போல் தான் விளையாடினார்க‌ள்......................

பிறந்த நாள் பிள்ளையும் அவுட்......நீங்கள் சொன்னது போலவே இந்தியா அளவு ஓட்டங்களை தான் இவர்கள் எடுக்கப் போகின்றார்கள். பங்களாதேஷ் பாகிஸ்தான் அளவு ஓட்டங்களை எடுக்க.....கணக்கு சரிதானே.......

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரசோதரன் said:

தென் ஆபிரிக்கா அணியை பார்க்கிறதே ஒரு த்ரிலிங்கான அனுபவம்.......ஆட்கள் அவுட்டாக்கும் என்ற நினைக்க அடிக்கின்றார்கள்.....அடடே, அடிக்கின்றார்களே என்று நினைக்க அவுட் ஆகின்றனர். இவர்கள் தோற்கத்தான் போகின்றார்கள் என்று பலரும் நினைக்க, வென்றும் விடுவார்கள் இன்றும்........😜

ஆசை,தோசை,அப்பளம்,வடை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆசை,தோசை,அப்பளம்,வடை.

🤣.......

இப்ப நொறுக்கிறம் பங்களாதேஷை அப்பளமாக......சுடுகிறம் வடையாக.....

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

பங்களாதேஷ் பாகிஸ்தான் அளவு ஓட்டங்களை எடுக்க.....கணக்கு சரிதானே.......

பாகிஸ்தானின் ஓட்டத்தை தென்னாபிரிகா தான் எடுத்திருக்கு.

1 minute ago, ரசோதரன் said:

🤣.......

இப்ப நொறுக்கிறம் பங்களாதேஷை அப்பளமாக......சுடுகிறம் வடையாக.....

அப்ப விக்கட் எல்லாம் பகோடாவா பறக்க போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

பிறந்த நாள் பிள்ளையும் அவுட்......நீங்கள் சொன்னது போலவே இந்தியா அளவு ஓட்டங்களை தான் இவர்கள் எடுக்கப் போகின்றார்கள். பங்களாதேஷ் பாகிஸ்தான் அளவு ஓட்டங்களை எடுக்க.....கணக்கு சரிதானே.......

6 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆசை,தோசை,அப்பளம்,வடை.

ப‌ய‌ப்பிட‌ வேண்டாம் தென் ஆபிரிக்கா இந்த‌ ம‌ச்சை வெல்லும்

உந்த‌ பிச்சில் தென் ஆபிரிக்காவின் வேக‌ ப‌ந்துக்கு அடிப்ப‌து சிர‌ம‌ம்

ஒரு க‌ட்ட‌த்தில் 130 தான்டும் நிலை இருந்த‌து வ‌ங்கிளாதேஸ் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் 113க்கை ம‌ட‌க்கி போட்டின‌ம்.........................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

பாகிஸ்தானின் ஓட்டத்தை தென்னாபிரிகா தான் எடுத்திருக்கு.

அப்ப விக்கட் எல்லாம் பகோடாவா பறக்க போகுது.

🤣.....

காலங்காத்தால வெறும் வயிறு........பகோடா, வடை என்று ஆசை காட்டி விட்டீர்கள்.......ஒரு பிளேன் டீயை போட்டுக் கொண்டு, ஒன்றைத் தூக்க வேண்டியது தான்.........

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரசோதரன் said:

🤣.....

காலங்காத்தால வெறும் வயிறு........பகோடா, வடை என்று ஆசை காட்டி விட்டீர்கள்.......ஒரு பிளேன் டீயை போட்டுக் கொண்டு, ஒன்றைத் தூக்க வேண்டியது தான்.........

வ‌ங்கிளாதேஸ் தொட‌க்க‌ வீர‌ர் அவுட்.................................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

வ‌ங்கிளாதேஸ் தொட‌க்க‌ வீர‌ர் அவுட்.................................

ஒரு பிளேன் டீ போடப் போக, ஒரு விக்கட் விழுந்திட்டுது........10 பிளேன் டீ போட, பங்களாதேஷே காலியாகும் போல..........😜.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.