Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது குறித்து வடமாகாணத்தில் இயங்கும் 31 சமூக நல அமைப்புக்கள்  தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு தமிழ் மற்றும் சிங்கள அரசியட் கட்சிகளுடனும், சமூக அமைப்புக்களுடனும் இவை பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களின் முயற்சிக்கு ஆதரவு வழங்குவோர் மீது சிங்கள ஜனாதிபதியொருவருக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோருபவர்களால் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்களின் வாக்குகளை இந்த முயற்சி வீணாக்கிவிடும் என்றும், சிங்கள மக்களை கோபப்படுத்தி விடும் என்றும் நியாயம் கற்பிக்கப்படுகிறது. 

தமிழர்களுக்கென்று தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதை நான் ஆதரிக்கிறேன். அவர் ஜனாதிபதியாக வருவதற்கு சாத்தியமில்லாவிட்டலும் கூட, தமிழர்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்கவேண்டும், அதன்மூலம் சிங்களவர்களுக்குச் செய்தியொன்று சொல்லப்படவேண்டும் என்பதற்காகவே ஆதரிக்கிறேன்.  எம்மை அழித்த இரு சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்கும் வாக்களித்து வாக்களித்து அழிவுகளை மட்டுமே இதுவரையில் கண்டிருக்கிறோம் என்பதற்காகவே தமிழர் வேட்பாளர் அவசியம் என்று கருதுகிறேன். தமிழ் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு, மீண்டும் ஒரு சிங்கள பேரினவாதியே ஆட்சிக்கு வரப்போகிறான் என்று தெரிந்தும், அவன் எமது வாக்குகளால் வரக்கூடாது என்பதற்காகவே தமிழ் வேட்பாளரை ஆதரிக்கிறேன். 

இலங்கையில் முதன்முதலாக ஜனாதிபதித் தேர்தல்கள் 1982 இல் நடக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அத்தேர்தல்களில் வக்களித்த தமிழர்களின் எண்ணிக்கையினையும், அவர்கள் ஜனாதிபதியாக்கிப் பார்த்த இனக்கொலையாளிகளையும், அந்த இனக்கொலையாளிகளின் ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட முக்கிய படுகொலைகளையும் இங்கு சாராம்சமாகத் தருகிறேன். தமிழ் வேட்பாளர் ஒருவர் அவசியமா இல்லையா என்னும் கேள்வியை உங்களிடம் விட்டு விடுகிறேன். 

  • Like 3
  • Thanks 2
  • Replies 74
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, ரஞ்சித் said:

தமிழர்களுக்கென்று தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதை நான் ஆதரிக்கிறேன். அவர் ஜனாதிபதியாக வருவதற்கு சாத்தியமில்லாவிட்டலும் கூட, தமிழர்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்கவேண்டும், அதன்மூலம் சிங்களவர்களுக்குச் செய்தியொன்று சொல்லப்படவேண்டும் என்பதற்காகவே ஆதரிக்கிறேன்.  எம்மை அழித்த இரு சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்கும் வாக்களித்து வாக்களித்து அழிவுகளை மட்டுமே இதுவரையில் கண்டிருக்கிறோம் என்பதற்காகவே தமிழர் வேட்பாளர் அவசியம் என்று கருதுகிறேன். தமிழ் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு, மீண்டும் ஒரு சிங்கள பேரினவாதியே ஆட்சிக்கு வரப்போகிறான் என்று தெரிந்தும், அவன் எமது வாக்குகளால் வரக்கூடாது என்பதற்காகவே தமிழ் வேட்பாளரை ஆதரிக்கிறேன். 

நானும் ஆதரிக்கிறேன்.

ஆனாலும் முதலாவது எண்ணிக்கையில் யாருக்குமே 50 வீதம் கிடைக்கவில்லை என்றால் 

இரண்டாவது தடவை எண்ணப்படும்.

இங்கு தான் பிரச்சனையே.

இரண்டாவது விருப்பு வாக்காக சிங்கள் வேட்பாளருக்கே தமிழர்கள் தங்கள் வாக்கைப் போடுவார்கள்.

இங்கே தான் குழப்பமாக உள்ளது.

அன்று ஒரு காணொளியில் நிலாந்தன் கூறும்போது வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு வர்த்தகரின் பிரதிநிதி பொதுவேட்பாளரை நிறுத்தினாலே ரணில் வெல்ல முடியும் என்று பகிரங்கமாகவே கேட்டுக் கொண்டதாக சொன்னார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்கள ஜனாதிபதி : ஜே ஆர் ஜெயவர்த்தன‌
ஆட்சிக்காலம் : 1978 ‍- 1988
தமிழர்கள் அளித்த வாக்குகள் மாவட்ட ரீதியாக 
மட்டக்களப்பு : 40.05 %
யாழ்ப்பாணம் : 20.54%
திருகோணமலை : 48.64%
வன்னி : 46.42 %
சராசரி : 38.9125 %

ஜெயவர்த்தன நிகழ்த்திய முக்கியமான படுகொலைகளில் சில‌
1977 தமிழர் மீதான அரச வன்முறை அல்லது கலவரம் : 300+ தமிழர்கள்
1981 இல் நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தமிழர் மீதான படுகொலைகள்  : 25+ தமிழர்கள்
1983 தின்னைவேலிப் படுகொலை : 60+ தமிழர்கள்
1983 வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள் : 53 தமிழ் அரசியல்க் கைதிகள்
1983 கறுப்பு ஜூலை இனக்கொலை : 3000+ தமிழர்கள் கொல்லப்பட்டு 125,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டு, தமிழர்களின் வர்த்தகங்களும், வீடுகளும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன‌
1984 வவுனியா சாம்பல்த்தோட்டம் படுகொலைகள் : 70+ தமிழர்கள்
1984 சுன்னாகம் சந்தை மற்றும் பொலீஸ் நிலையப் படுகொலைகள் : 100+ தமிழர்கள்
1984 ஆவணி மன்னார் படுகொலைகள் : 140+ தமிழர்கள்
1984 யாழ்ப்பாணம் கோடைகாலப் படுகொலைகள் : 250+ தமிழர்கள்
1984 வடமராட்சி படுகொலைகள் : 35 + தமிழர்கள்
1984 கார்த்திகை உரும்பிராய்ப் படுகொலைகள் : 60+ தமிழர்கள்
1984 கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்து மற்றும் புகையிரதங்கள் மீதான படுகொலைகள் : 100+ தமிழர்கள்
1984 மணலாறு, தென்னைமரவாடி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்ப் படுகொலைகள் : 500 + தமிழர்கள்
1984 மார்கழிப் படுகொலைகள் , வடக்குக் கிழக்கில் : 1200+ தமிழர்கள்
1984 ஒதியாமலை, செட்டிகுளம், சேமமடு படுகொலைகள் : 340+ தமிழர்கள்
1984 வவுனியா இராணுவ முகாம் படுகொலைகள் : 100 + தமிழர்கள்
1984 அமரவயல், மணலாறு, தென்னைமரவாடி படுகொலைகள் : 180 + தமிழர்கள்
1984 மன்னார் மார்கழி படுகொலைகள் : 150 + தமிழர்கள்
1984 மார்கழி வவுனியா படுகொலைகள் : 100 + தமிழர்கள்
1984 மார்கழி மதவாச்சிப் படுகொலைகள் : 60+ தமிழர்கள் 
1984 மார்கழி முல்லைத்தீவு படுகொலைகள் : 210 + தமிழர்கள்

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1985 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் ஜெயாரினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை : 1690 +
https://en.wikipedia.org/wiki/List_of_massacres_in_Sri_Lanka

1986 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் ஜெயாரினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை : 720 +
https://en.wikipedia.org/wiki/List_of_massacres_in_Sri_Lanka

1987 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் ஜெயாரினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை : 270 +
https://en.wikipedia.org/wiki/List_of_massacres_in_Sri_Lanka
 

 

Edited by ரஞ்சித்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சிங்கள ஜனாதிபதி : ரணசிங்க பிரேமதாச‌
ஆட்சிக்காலம் : 1988 ‍‍- 1993
தமிழர்கள் அளித்த வாக்குகள் மாவட்ட ரீதியாக 
மட்டக்களப்பு : 51 %
யாழ்ப்பாணம் : 28.034%
திருகோணமலை : 45.64%
வன்னி : 55.82 %
சராசரி : 45.11 %

1988 இலிருந்து 1993 வரையான காலப்பகுதியில் ரணசிங்க பிரேமதாசவினால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 5100 +

https://en.wikipedia.org/wiki/List_of_massacres_in_Sri_Lanka

Edited by ரஞ்சித்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பிற்கும், ஒரு தமிழ் வேட்பாளருக்கு ஒருமித்து வாக்களிப்பதற்கும் இடையே நடைமுறை ரீதியாக ஒரு வேறுபாடும் இல்லையென நினைக்கிறேன்.

தமிழ் வேட்பாளருக்கு தமிழரின் வாக்குகள்: உலகிற்கு எம் நிலைப் பாட்டை அறிவித்தல். இது moot point, பயன் மிகுந்த ஒரு விளைவாக எனக்குத் தெரியவில்லை.

மறு பக்கம், எந்த சிங்கள வேட்பாளரின் வாக்குகளை தமிழ் வேட்பாளர் கவர்வார் என்பதைப் பொறுத்து முழு இலங்கையின் மீதான விளைவு இருக்கலாம். ரணிலின் வாக்குகள் கொஞ்சம் குறைய, சஜித் வென்றால் - நிலைமை தற்போது இருப்பது போலவே தொடரலாம். இவர்கள் இருவரும் வாக்குகளில் நலிந்து அனுர வென்றால், "முதற்பலியாக" சர்வதேச நாணய நிதியம் இருக்கும்😂. "பொருளாதாரத்தை சீர் செய்கிறோம்" என்று மீண்டும் சீனாவின் பக்கம் நாடு சாயும். வேற பெயரில் ராஜபக்சர்கள் கொள்கைகள் ஆட்சியாகும்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பிற்கும், ஒரு தமிழ் வேட்பாளருக்கு ஒருமித்து வாக்களிப்பதற்கும் இடையே நடைமுறை ரீதியாக ஒரு வேறுபாடும் இல்லையென நினைக்கிறேன்.

இல்லை ஜஸ்ரின் இரண்டாம் மூன்றாம் வாக்குகள் இரண்டாவது எண்ணிக்கையின் போது எண்ணப்படும்.

ஏற்கனவே இரண்டாவது வாக்காக ரணிலுக்கு போட ஆயத்தமாகுகிறார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/5/2024 at 13:37, ரஞ்சித் said:

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்

தமிழ் வேட்பாளர்களாக .......
கடந்த காலங்களில் குமார் பொன்னம்பலமும் ,சிவாஜிலிங்கமும்  நின்ற போது என்ன நடந்தன?
இது பற்றியும் ஆராய வேண்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, Justin said:

ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பிற்கும், ஒரு தமிழ் வேட்பாளருக்கு ஒருமித்து வாக்களிப்பதற்கும் இடையே நடைமுறை ரீதியாக ஒரு வேறுபாடும் இல்லையென நினைக்கிறேன்.

மிகச்சரி. இரண்டுமே ஒரு செய்தியைத்தான் சொல்கின்றன. அதாவது, சிங்கள ஜனாதிபதியொருவரில் தமிழர்களுக்கு நம்பிக்கையில்லை என்பது. ஆனால், இவை இரண்டுமே சிங்கள ஆளும்தரப்பிற்கும் சிங்கள் மக்களுக்கும் ஓரளவிற்கு அதிர்ச்சியையோ , எரிச்சலையோ கொடுக்கவல்லன. 

தேர்தல்ப் பகிஷ்கரிப்பு என்பது முன்னர், 2005 இல் பரீட்சிக்கப்பட்டதுதான். அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் குறித்து பேசவேண்டிய தேவையில்லை. ஆனால், ஒருங்கிணைந்த தமிழ் வேட்பாளர் என்பது புதியது. சிவாஜிலிங்கமோ, குமார் பொன்னம்பலமோ தமிழர்களுடன் இதுகுறித்துச் சரியான வகையில் கருத்துருவாக்கம் ஒன்றினைச் செய்தார்களா என்பது சந்தேகமே. தமிழர் வேட்பாளர் என்றபோதும் கூட, தம்மை முன்னிறுத்தி அவர்கள் வாக்குக் கேட்டது தமிழர்களின் கவனத்தை பெரிதாகப் பெறவில்லையென்றே எண்ணத் தோன்றுகிறது.

15 hours ago, Justin said:

தமிழ் வேட்பாளருக்கு தமிழரின் வாக்குகள்: உலகிற்கு எம் நிலைப் பாட்டை அறிவித்தல். இது moot point, பயன் மிகுந்த ஒரு விளைவாக எனக்குத் தெரியவில்லை.

இருக்கலாம். ஆனால், தமிழர்களுக்கு இன்னமும் பிரச்சினை இருக்கிறது, அவை இன்றுவரை தீர்க்கப்படவில்லை, ஆகவேதான் சிங்களத் தேசிய அரசியலில் இருந்து அவர்கள் விலகி நிற்கிறார்கள் என்கிற செய்தியை நாம் சொல்லமுடியும். ஏனென்றால், 2009 இற்குப் பின்னரான 15 வருடத்தில் எமது அவலங்கள் குறித்துச் சர்வதேசம் பேசுவதை முற்றாக நிறுத்தியிருப்பதாகவே தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, Justin said:

மறு பக்கம், எந்த சிங்கள வேட்பாளரின் வாக்குகளை தமிழ் வேட்பாளர் கவர்வார் என்பதைப் பொறுத்து முழு இலங்கையின் மீதான விளைவு இருக்கலாம். ரணிலின் வாக்குகள் கொஞ்சம் குறைய, சஜித் வென்றால் - நிலைமை தற்போது இருப்பது போலவே தொடரலாம். இவர்கள் இருவரும் வாக்குகளில் நலிந்து அனுர வென்றால், "முதற்பலியாக" சர்வதேச நாணய நிதியம் இருக்கும்😂. "பொருளாதாரத்தை சீர் செய்கிறோம்" என்று மீண்டும் சீனாவின் பக்கம் நாடு சாயும். வேற பெயரில் ராஜபக்சர்கள் கொள்கைகள் ஆட்சியாகும்.  

சிங்கள ஜனாதிபதியொருவரே மீளவும் வரப்போகிறார் எனும்போது, அவர்களில் எவரையும் தெரிவிசெய்வதில் தமிழர்கள் அடையப்போகும் நண்மையென்ன? ஒரு சிங்கள ஜனாதிபதியிடமிருந்து, இன்னொரு சிங்கள ஜனாதிபதி தமிழரைப் பொறுத்தவரையில் எந்தவகையில் வேறுபடப்போகிறார்? தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் "நல்ல" சிங்கள ஜனாதிபதியாக இதுவரை இருந்தவர்களும் இல்லை, இனிமேலும் இருக்கப்போவதில்லை. அவர்கள் ஆட்சிக்கு வருவதே சிங்கள பெளத்தத்தைப் பாதுகாக்கவும், அதற்குத் தொண்டாற்றவும்தான். 

10 hours ago, குமாரசாமி said:

தமிழ் வேட்பாளர்களாக .......
கடந்த காலங்களில் குமார் பொன்னம்பலமும் ,சிவாஜிலிங்கமும்  நின்ற போது என்ன நடந்தன?
இது பற்றியும் ஆராய வேண்டும்.

சிவாஜிலிங்கத்தை சிவாஜிலிங்கமாகவும், குமார் பொன்னம்பலத்தைக் குமார் பொன்னம்பலமாகவும் தமிழர்கள் பார்த்ததால்த்தான் அவர்களுக்கான ஆதரவு அன்று கிடைக்கவில்லை. தம்மை பொதுவான தமிழ் வேட்பாளராக  அடையாளப்படுத்தப் போதுமானவற்றை அவர்களும் செய்யவில்லை, தமிழ் மக்கள் முன்னால் இதற்கான தர்க்கரீதியிலான கருத்துருவாக்கத்தையோ அல்லது இன்று ஏற்பட்டிருப்பதுபோன்ற மக்களின் ஈடுபாட்டையோ அன்று அவர்களால் செய்ய முடியவில்லை. ஆகவே தான் சிவாஜிலிங்கத்தின் முயற்சி ஏளனமாகப் பார்க்கப்பட்டதுடன், குமார் பொன்னம்பலத்தின் முயற்சி கொழும்புத் தமிழர்களுடன் மட்டுமே சுருங்கிவிட்டது என்று நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1956 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரையான 53 ஆண்டுகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை 154,022 இலிருந்து 253,818 ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 

இவற்றுள், 1956 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையான 45 ஆண்டுகளில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 79,155 பேர் ஆகும். இவர்களுள் 54,044 தமிழர்களின் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதோடு, மீதி 25,266 பேர் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள்.

2002 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரையான ஆறுவருட காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 4,867 பேர். இவர்களுள் 3,545 பேரின் கொலைகள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன் மீதி 1,322 பேர் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டின் தை மாதம் முதல் வைகாசி வரையான ஐந்து மாத காலப்பகுதியில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 169,796 என்று நீதிக்கும், சமாதானத்திற்குமான சர்வதேச மையம் கூறுகிறது. 
இக்காலத்தில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 70,000 இலிருந்து 146,000 ஆக இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையினாலும் மற்றும் முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையினாலும் ம‌திப்பிட்டிருக்கிறது. 

1956 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு வரையான 48 வருட காலத்தில் காயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை குறைந்தது 61,132 ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதே காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தாலும், சிங்களப் பொதுமக்களாலும் பாலியல் வன்புணர்வுள்ளாக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை 12,437 பேர் என்று பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், 2005 இலிருந்து 2009 வரையான காலப்பகுதியிலேயே அதிகளவான உயிரிழப்புக்களும், காணாமற்போதல்களும், பாலியல் வன்புணர்வுகளும், இடப்பெயர்வுகளும் நடைபெற்றிருக்கின்றன. 

மேலும் 112,246 தமிழர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், 24 இலட்சம் தமிழர்கள் இடம்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். 

தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனக்கொலையில் இலங்கையை ஆட்சிசெய்த அனைத்து சிங்களத் தலைவர்களும் தமது பங்கினை நல்கியிருக்கிறார்கள். இவர்களுள் எவருமே விதிவிலக்கில்லை.
 டட்லி சேனநாயக்கா, பண்டாரநாயக்கா, சிறிமா, ஜெயார், பிரேமதாசா, டிங்கிரிபண்டா விஜேதுங்க, சந்திரிக்கா, மகிந்த, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய, ரணில் என்று அனைவருமே எம்மீதான இனக்கொலையினை நேரடியாக நடத்தியவர்கள். இவர்களைத் தவிரவும் சிங்கள் இட‌துசாரி இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி தொடர்ச்சியாகவே தமிழ் மக்கள் மீதான வன்மத்தைக் கக்கி வருவதுடன், தமிழ மக்களின் தாயக் கோட்பாட்டையும் நிர்முலமாக்க முயன்று வருகிறது. நாட்டில் இருப்பது பொருளாதாரப் பிரச்சினையே அன்றி, இனப்பிரச்சினை இல்லையென்றும், தமிழர்களுக்கென்று தனியான பிரச்சினைகள் என்று நாட்டில் எதுவுமே இல்லையென்றும் அது வாதிடுகிறது.

ஆகவே, இப்படியான, தமிழ் மக்களின் இனவழிப்பை தமது தாரக மந்திரமாக ஏற்று செயற்பட்டு வரும் எந்தச் சிங்களத் தலைவரையும் தமிழர்கள்  எதற்காக இன்னுமொருமுறை தெரிவுசெய்வதில் வாக்களிக்க வேண்டும் என்பதே எனது கேள்வி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1994 ஆம் ஆண்டு மற்றும் 1999 ஆம் ஆண்டு 
ஜனாதிபதி : சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க‌
யாழ்ப்பாணம் : 96.35% (1994) & 46.65 % (1999)
வன்னி : 85.30% (1994) & 25.8% (1999)
மட்டக்களப்பு : 87.3% (1994) & 34.7% (1999)
திருகோணமலை : 71.6% (1994) & 45% (1999)
சராசரி : 85.13% (1994) & 38% (1999)

சந்திரிக்காவினால் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளின் பட்டியலில் ஒரு சில,
1. முன்னேறிப்பாய்தல் படுகொலைகள்
2. நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயப் படுகொலை
3. யாழ்ப்பாண நகரைக் கைப்பற்றியபோது  அந்நிய நாடொன்றினைக் கைப்பற்றிய நிகழ்வினை ஒத்த விதத்தில் அனுருத்தை தனது மருமகளும் இராணியுமான சந்திரிக்காவிடம் யாழ்ப்பாணத்திற்கான திறவுகோலினைக் கையளித்தார்.
4. செம்மணிப் புதைகுழிகள்
5. கிளிநொச்சி மீதான ஆக்கிரமிப்புப் போர்
6. ஜயசிக்குரு ஆக்கிரமிப்புப் போர்
7. புதுக்குடியிருப்புப் பாடசாலைச் சிறுவர்கள் படுகொலை
8. படுகொலை செய்யப்பட்ட 20,000 தமிழர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2005 தேர்தல்
ஜனாதிபதி : மகிந்த ராஜபக்ஷ‌ (தமிழர்கள் வன்னியில் வாக்களிக்காது விட்டமையினால் தெரிவுசெய்யப்பட்டவர்)

யாழ்ப்பாணம் : 25%
வன்னி : 20%
மட்டக்களப்பு : 18.8%
அம்பாறை : 43%
திருகோணமலை : 37%

சராசரி : 28.76%

இதே தேதலில் தமிழர்களால் ஆதரவளிக்கப்பட்ட வேட்பாளர் ரணிக்குக் கிடைத்த வாக்குகள் 
யாழ்ப்பாணம் : 70%
வன்னி : 77%
மட்டக்களப்பு : 79.5%
அம்பாறை : 55%
திருகோணமலை : 61 %

சராசரி : 68.5%

ஒரு சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்காது, இன்னொருவர் ஆட்சிக்கு வர உதவியமையினால் தமிழர்கள் சரித்திரத்தில் கண்டிராத அழிவையும், அவலங்களையும், ஆக்கிரமிப்பையும் இவ்வாட்சிக் காலத்தில் கண்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2010 தேர்தல்
ஒரே இனவழிப்பில் தோளுக்குத் தோள் நின்று தமிழர்களைக் கொன்றொழித்த இரு இனக்கொலையாளிகளில் ஒருவனான மகிந்தவுக்கு எதிராகவும், அவனது இராணுவத் தளபதியான சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவாகவும் தமிழர்கள் வாக்களித்த விதம் கீழே,

மகிந்தவுக்கான தமிழரின் வாக்குகள்
யாழ்ப்பாணம் : 24.7%
வன்னி : 27.3%
மட்டக்களப்பு : 26.2%
திருகோணமலை : 43%
சராசரி : 30.3%

சரத் பொன்சேகாவுக்கான வாக்குகள்
யாழ்ப்பாணம் : 63.8%
வன்னி : 66.8%
மட்டக்களப்பு : 68.93%
திருகோணமலை : 54%
சராசரி : 63.4%

இத்தேர்தலில் இனக்கொலையாலியான சரத் பொன்சேக்காவிற்கு வக்களித்ததன் மூலம் தமிழர்கள் சொல்லிய செய்தி : சரத் பொன்சேக்காவின் கூற்றுப்படி
1. இனக்கொலையென்றும், போர்க்குற்றங்கள் என்றும் எதுவுமே நடைபெறவில்லை என்பதை எனக்கு வாக்களித்ததன் மூலம் தமிழர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
2. புலிகளை அழிக்க நான் தலைமையேற்று நடத்திய யுத்தத்தினை தமிழ் மக்கள் வரவேற்றிருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2015 தேர்தல்

இனக்கொலையாளியான மகிந்த ராஜபக்ஷவுக்கெதிராகவும், அதே இனக்கொலை யுத்தத்தில் அவனது பிரதமராகவும், இறுதிப்போரின் இறுதிநாட்களின்போது மகிந்த வெளிநாடு சென்றிருந்தவேளை நாட்டின் ஜனாதிபதிப் பொறுப்பினைக் கவனித்துக்கொண்ட‌வனுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகவும் தமிழ் மக்கள் வாக்களித்த விதம்

மகிந்த ராஜபக்ஷவுக்கான வாக்குகள்
யாழ்ப்பாணம் : 21.8%
மட்டக்களப்பு : 16.2%
திருகோணமலை : 26.6%
வன்னி : 19%
சராசரி :20.9%

மைத்திரிபால சிறிசேனவுக்கான வாக்குகள்
யாழ்ப்பாணம் : 74.4%
மட்டக்களப்பு : 81.6%
திருகோணமலை : 71.8%
வன்னி : 78.5%
சராசரி : 76.6%

2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் தமிழர்கள் தெரிவுசெய்த ஜனாதிபதியான மைத்திரியும், தமிழர்கள் தெரிவுசெய்த பிரதமரான ரணிலும் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2019 தேர்தல்

இத்தேர்தலில் பிரபல சிங்கள பெளத்த இனக்கொலையாளியான கோட்டாபய ராஜபக்ஷவுக்கெதிராகவும்,  இன்னொரு பெயர்பெற்ற‌ சிங்கள இனவாதியான பிரேமதாசவின் மகனும், பிரேமதாசவை ஒத்த இனவாதியுமான  சஜித் பிரேமதாசவுக்குத் தமிழர்கள் வாக்களித்த விதம்

கோட்டாபய ராஜபக்ஷ‌
மட்டக்களப்பு : 12.6%
யாழ்ப்பாணம் : 6.2%
வன்னி : 12.2%
திருகோணமலை : 23.3%
சராசரி : 13.5%

சஜித் பிரேமதாச‌
மட்டக்களப்பு : 78.7%
யாழ்ப்பாணம் : 83.36%
வன்னி : 82.1%
திருகோணமலை : 72%
சராசரி : 79.04%

அன்று தமிழர்கள் வாக்களித்த அதே சஜித் இன்று தமிழர்களுக்கு எதனையும் கொடுக்கமாட்டேன், பிரிவினையை அனுமதிக்கமாட்டேன், எவராவது மீளவும் ஆயுதப்போராட்டம் குறித்துப் பேசினால் அதனை முளையிலேயே கிள்ளி எறிவேன் என்று இனவாதம் பேசி வருகிறான். 

இவர்களுள் தமிழர்கள் ஆதவளிக்கக் கூடிய வகையில் இருப்பது யார்? எவர் சிறந்தவர்?

தெரியாத பேயை விடவும், தெரிந்த பிசாசு பரவாயில்லை என்று வாக்களிக்கப்போகிறோமா அல்லது, பேயும் வேண்டாம் பிசாசும் வேண்டாம், எமக்கென்று ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி வாக்களிக்கப்போகிறோமா என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும் ! 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:

தமிழர்களுக்கு இன்னமும் பிரச்சினை இருக்கிறது, அவை இன்றுவரை தீர்க்கப்படவில்லை, ஆகவேதான் சிங்களத் தேசிய அரசியலில் இருந்து அவர்கள் விலகி நிற்கிறார்கள் என்கிற செய்தியை நாம் சொல்லமுடியும். ஏனென்றால், 2009 இற்குப் பின்னரான 15 வருடத்தில் எமது அவலங்கள் குறித்துச் சர்வதேசம் பேசுவதை முற்றாக நிறுத்தியிருப்பதாகவே தெரிகிறது. 

உண்மையும் அதுதானே.
ஈழத்தீவின் வரலாற்றில் எதிர்க்கட்சித்தலைவராகத் தமிழர் ஒருவர் இருப்பதையே விரும்பாத சிங்களப் பேரினவாதம், தமிழர் ஒருவரை சனாதிபதியாக ஏற்குமா(?)என்ற வினாவைக் கேட்கவே தேவையில்லை. ஆனால், பேராசிரியர் புல்ஜென்ஸ் கூற்றுப்படி''எதையுமே நினைவில் கொள்ளாத , ஞாபகத்தில் வைத்திராத மறதி தேசமிது'' என்று சிறிலங்காவைச் சுட்டுவதுபோல்(எரிமலை யூலை2006)  தமிழினமும் ஆகிவிட்ட சூழலில், அனைத்துலகு தனது நலனுக்காகப் பலியிட்ட தமிழர்குறித்துப் பேசித் தானே குற்றவாளிக் கூண்டில் ஏறிநிற்குமா(?)என்றால் நடவாதுதானே. ஆனால், தமிழின அரசியல் இருப்பின் அவசியத்தை வலியுறுத்துவதற்கான வாய்ப்பை வழங்கக்கூடிய ஏதுநிலையை ஏற்படுத்தவல்லதாக சனாதிபதித் தேர்தலை மாற்றுவதற்கான சூழலைப் பயன்படுத்தலாம். ஒருவேளை ரணில் தோற்கடிக்கப்பட்டால,; மேற்குலகுக்கான செய்தியும் அதில் உள்ளடங்கும். தமிழினத்தினது ஆதரவின்றித் தமது இலக்குகளை அடையலாம் என்பதைக் கேள்விக்குட்படுத்துவதாகவும் அமையும்.

நன்றி 

3 hours ago, ரஞ்சித் said:

இத்தேர்தலில் இனக்கொலையாலியான சரத் பொன்சேக்காவிற்கு வக்களித்ததன் மூலம் தமிழர்கள் சொல்லிய செய்தி : சரத் பொன்சேக்காவின் கூற்றுப்படி
1. இனக்கொலையென்றும், போர்க்குற்றங்கள் என்றும் எதுவுமே நடைபெறவில்லை என்பதை எனக்கு வாக்களித்ததன் மூலம் தமிழர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
2. புலிகளை அழிக்க நான் தலைமையேற்று நடத்திய யுத்தத்தினை தமிழ் மக்கள் வரவேற்றிருக்கிறார்கள். 

ரஞ்சித் அவர்களே இதில் ஒரு திருத்தம், அதாவது தமிழ்மக்கள் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு(சம்,சும் கொம்பனி) சொல்லவைத்தது. எப்படி போற்குற்றத்தில் இருந்து வெளியே எடுத்ததோ, அதேபோன்று தமது நிலையைத் தமிழ் மக்கள் ஊடாக வெளிப்படுத்தியதாகவே கொள்ளலாம். நேரடியாகத் தமிழ் மக்களது முடிவாகக் கொள்ளமுடியாது. 
நன்றி

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, nochchi said:

ஒருவேளை ரணில் தோற்கடிக்கப்பட்டால,; மேற்குலகுக்கான செய்தியும் அதில் உள்ளடங்கும். தமிழினத்தினது ஆதரவின்றித் தமது இலக்குகளை அடையலாம் என்பதைக் கேள்விக்குட்படுத்துவதாகவும் அமையும்.

மேற்குலகின் நண்பனான ரணில் 2005 இல் புலிகளால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பதவிக்கு வந்த மகிந்தவுடன் சேர்ந்து அதே மேற்குலகு எம்மை அழிக்கவில்லையா? அதேபோல, ரணில் இம்முறை தோற்கடிக்கப்பட்டாலும் அநுரவுடனோ அல்லது சஜித்துடனோ சேர்ந்து மேற்குலகு வேலை செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ரஞ்சித் said:

சிங்கள ஜனாதிபதியொருவரே மீளவும் வரப்போகிறார் எனும்போது, அவர்களில் எவரையும் தெரிவிசெய்வதில் தமிழர்கள் அடையப்போகும் நண்மையென்ன? ஒரு சிங்கள ஜனாதிபதியிடமிருந்து, இன்னொரு சிங்கள ஜனாதிபதி தமிழரைப் பொறுத்தவரையில் எந்தவகையில் வேறுபடப்போகிறார்? தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் "நல்ல" சிங்கள ஜனாதிபதியாக இதுவரை இருந்தவர்களும் இல்லை, இனிமேலும் இருக்கப்போவதில்லை. அவர்கள் ஆட்சிக்கு வருவதே சிங்கள பெளத்தத்தைப் பாதுகாக்கவும், அதற்குத் தொண்டாற்றவும்தான். 

 

இதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், இலங்கையின் IMF வழியிலான பொருளாதார மீட்சியை அனுர திரும்பவும் பாதாள லெவலுக்கு இறக்கினால், தமிழர்களுக்கு ஒரு பாதிப்பும் வராதென்கிறீர்களா? கடந்து போன பொருளாதாரச் சரிவில் வடக்கு கிழக்கில் ஒரு பாதிப்பும் இருக்கவில்லையா?

எனவே, ஒன்றுக்கும் பயனில்லாத "சர்வதேசத்திற்கு செய்தி சொல்லல்" என்ற ஒரு விடயம் ஒரு பக்கம்.

அனுர போன்ற ஒருவர் வந்து எல்லோருக்கும் ஆப்பு வைக்கும் ஆபத்து மறு புறம்.

இது 2004 இல் தேர்தல் பகிஷ்கரிப்பினால் மகிந்த பதவிக்கு வந்து தமிழர்களின் தலைவிதியை மாற்ற வழி சமைத்த "இராசதந்திரம்" போலல்லவா தெரிகிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Justin said:

ஆனால், இலங்கையின் IMF வழியிலான பொருளாதார மீட்சியை அனுர திரும்பவும் பாதாள லெவலுக்கு இறக்கினால், தமிழர்களுக்கு ஒரு பாதிப்பும் வராதென்கிறீர்களா? கடந்து போன பொருளாதாரச் சரிவில் வடக்கு கிழக்கில் ஒரு பாதிப்பும் இருக்கவில்லையா?

நிச்சயமாக தமிழருக்கும் பாதிப்பு இருக்கும். ஆனால், அதைச் சரிசெய்ய புலம்பெயர் தமிழரின் உதவியிருக்கிறது, பெரும்பாலான தமிழர்களுக்கு, ஓரளவு காலத்திற்காவது.

 

3 minutes ago, Justin said:

இது 2004 இல் தேர்தல் பகிஷ்கரிப்பினால் மகிந்த பதவிக்கு வந்து தமிழர்களின் தலைவிதியை மாற்ற வழி சமைத்த "இராசதந்திரம்" போலல்லவா தெரிகிறது? 

2004 - 2005 இல் நடந்தது உண்மை, மறுப்பதற்கு எதுவுமில்லை.

ரணிலையோ அல்லது சஜித்தையோ ஆதரிக்காமல் விடுவதாலோ அல்லது தமிழ் வேட்பாளரை ஆதரித்து அநுர ஆட்சிக்கு வந்தாலோ, தமிழர் அடையப்போகும் அதியுச்ச பாதிப்பு என்ன? பொருளாதார நிலை சரியும் என்பதைத் தவிர, ஏனைய சிங்களத் தலைவர்களைக் காட்டிலும் அநுர புதிதாக தமிழருக்கு எவ்வகையான அழிவினை ஏற்படுத்திவிடப்போகிறார்? சிங்கள அரசியல்வாதிகளில் நல்லவர் கெட்டவர் என்று வேறுபாடு இருக்கின்றதா? என்னைப்பொறுத்தவரை ரணிலோ, சஜித்தோ, அநுரவோ, எல்லோருமே ஒரே வகையானவர்கள்தான். இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் எமது வாழ்வு மீளப்போவதில்லை. ஆனால், இவர்களில் எவரையுமே நாம் ஆதரிக்கவில்ல என்கிற செய்தியாவது மிச்சமிருக்கும். 

43 minutes ago, nochchi said:

எப்படி போற்குற்றத்தில் இருந்து வெளியே எடுத்ததோ, அதேபோன்று தமது நிலையைத் தமிழ் மக்கள் ஊடாக வெளிப்படுத்தியதாகவே கொள்ளலாம். நேரடியாகத் தமிழ் மக்களது முடிவாகக் கொள்ளமுடியாது. 

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ரஞ்சித் said:

நிச்சயமாக தமிழருக்கும் பாதிப்பு இருக்கும். ஆனால், அதைச் சரிசெய்ய புலம்பெயர் தமிழரின் உதவியிருக்கிறது, பெரும்பாலான தமிழர்களுக்கு, ஓரளவு காலத்திற்காவது.

 

2004 - 2005 இல் நடந்தது உண்மை, மறுப்பதற்கு எதுவுமில்லை.

ரணிலையோ அல்லது சஜித்தையோ ஆதரிக்காமல் விடுவதாலோ அல்லது தமிழ் வேட்பாளரை ஆதரித்து அநுர ஆட்சிக்கு வந்தாலோ, தமிழர் அடையப்போகும் அதியுச்ச பாதிப்பு என்ன? பொருளாதார நிலை சரியும் என்பதைத் தவிர, ஏனைய சிங்களத் தலைவர்களைக் காட்டிலும் அநுர புதிதாக தமிழருக்கு எவ்வகையான அழிவினை ஏற்படுத்திவிடப்போகிறார்? சிங்கள அரசியல்வாதிகளில் நல்லவர் கெட்டவர் என்று வேறுபாடு இருக்கின்றதா? என்னைப்பொறுத்தவரை ரணிலோ, சஜித்தோ, அநுரவோ, எல்லோருமே ஒரே வகையானவர்கள்தான். இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் எமது வாழ்வு மீளப்போவதில்லை. ஆனால், இவர்களில் எவரையுமே நாம் ஆதரிக்கவில்ல என்கிற செய்தியாவது மிச்சமிருக்கும். 

 

எவ்வளவு காலத்திற்கு புல உதவி தக்க வைக்கும் என்கிறீர்கள்? அல்லது, தாயகத்தில் இருக்கும் எத்தனை வீதமான தமிழர்களுக்கு புல உதவி கிடைக்குமென நினைக்கிறீர்கள்? வடக்கிற்கும், கிழக்கிற்கும் இடையே மட்டுமே புலத் தமிழர் உதவியில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறு பாடு இருக்கிறது. மலையகத் தமிழர் -இன்னும் அரசினதும் தேயிலைக் கம்பனிகளினதும் வருமானத்தில் தங்கியிருப்போர்- இவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்? "பட்டினியை,  வாழ்க்கைத் தர இழப்பைப் பொறுத்துக் கொள்ளுங்கள். சர்வதேசத்திற்கு நாம் ஒரு செய்தி சொல்ல வேண்டியிருக்கிறது!" என்பீர்களா? இது போன்ற ஆழ நோக்கற்ற, inclusiveness இல்லாத காரணத்தினால் தான் தாயக தமிழர்களுக்கு புலத்தமிழர்கள் அரசியல் விடயங்களில் வழங்கும் முன்மொழிவுகள் நகைப்புக்கிடமாகின்றன என நினைக்கிறேன்.

மூவரும் சிங்களவர்கள் என்பதும், தமிழர்களுக்கு வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்த  அநியாயங்களுக்கு ஒத்தாசை செய்தார்கள் என்பதும் மட்டுமே, தற்போது இருக்கும் நிலையை மோசமாக்க உங்களுக்குப் போதுமான நியாயங்களாகத் தெரிகின்றனவா? "elections have consequences" என்பார்கள். இது எந்த நாட்டிலும் உண்மை, சிறி லங்காவிலும் உண்மை. இந்த விளைவுகளைப் பற்றி யோசிக்கவே மாட்டீர்களா?  

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/5/2024 at 13:37, ரஞ்சித் said:

ஜனாதிபதியாக வருவதற்கு சாத்தியமில்லாவிட்டலும் கூட, தமிழர்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்கவேண்டும்

large.IMG_6467.jpeg.444940597daeaa205c97

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6467.jpeg.444940597daeaa205c97

ஐயா பெரியவரே!  யாருக்கு வாக்கு போட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும்.ஆனால் 70 வருடமாக நீங்கள் நினைத்த படி,கீறல் விழுந்த இசை தட்டு போல் ஒரே  சங்கீதங்களுக்கு வாக்கு செலுத்தி என்ன மாற்றத்தை கண்டீர்கள்?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Justin said:

எவ்வளவு காலத்திற்கு புல உதவி தக்க வைக்கும் என்கிறீர்கள்? அல்லது, தாயகத்தில் இருக்கும் எத்தனை வீதமான தமிழர்களுக்கு புல உதவி கிடைக்குமென நினைக்கிறீர்கள்? வடக்கிற்கும், கிழக்கிற்கும் இடையே மட்டுமே புலத் தமிழர் உதவியில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறு பாடு இருக்கிறது. மலையகத் தமிழர் -இன்னும் அரசினதும் தேயிலைக் கம்பனிகளினதும் வருமானத்தில் தங்கியிருப்போர்- இவர்களுக்கு என்ன பதில் சொல்வீர்கள்? "பட்டினியை,  வாழ்க்கைத் தர இழப்பைப் பொறுத்துக் கொள்ளுங்கள். சர்வதேசத்திற்கு நாம் ஒரு செய்தி சொல்ல வேண்டியிருக்கிறது!" என்பீர்களா? இது போன்ற ஆழ நோக்கற்ற, inclusiveness இல்லாத காரணத்தினால் தான் தாயக தமிழர்களுக்கு புலத்தமிழர்கள் அரசியல் விடயங்களில் வழங்கும் முன்மொழிவுகள் நகைப்புக்கிடமாகின்றன என நினைக்கிறேன்.

மூவரும் சிங்களவர்கள் என்பதும், தமிழர்களுக்கு வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்த  அநியாயங்களுக்கு ஒத்தாசை செய்தார்கள் என்பதும் மட்டுமே, தற்போது இருக்கும் நிலையை மோசமாக்க உங்களுக்குப் போதுமான நியாயங்களாகத் தெரிகின்றனவா? "elections have consequences" என்பார்கள். இது எந்த நாட்டிலும் உண்மை, சிறி லங்காவிலும் உண்மை. இந்த விளைவுகளைப் பற்றி யோசிக்கவே மாட்டீர்களா?  

நீங்கள் முதலில் சிங்கள அரசுகளின் தயவிலேயே தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று கருதுவதை நிறுத்த வேண்டும். ஏனென்றால், தமிழர்களைச் சிங்கள அரசுகள் கைவிட்டு கிட்டத்தட்ட 76 வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கள அரசுகளுக்கு தமிழர்களின் நலன்களைக் காப்பததைத்தவிர வேறு தலையாய கடமையே இல்லை எனும் ரேஞ்சில் எழுதுகிறீர்கள்.

தமிழர்களின் வாழ்வாதாரமும், வளமான தாயகமும், மேய்ச்சல் நிலங்களும் நீங்கள் கூறும் அதே சிங்கள அரசுகளாலேயே காவுகொள்ளப்பட்டன. ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே வடக்கும், வன்னியும், கிழக்கின் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழான பகுதிகளும் இலங்கை அரசினதும், இராணுவத்தினதும் பூரண பொருளாதாரத் தடைக்குள்ளேயே இருந்துவந்தன. அதற்காக, அங்கிருந்த தமிழர்கள் பட்டிணியால் இறந்துவிடவில்லை. தமது கைகளில் இருந்த வளங்களைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தைப் பார்த்துக்கொண்டார்கள். வன்னியில் ஓரளவிற்கு தன்னிறைவை அவர்கள் ஒருகட்டத்தில் அடைந்திருந்தார்கள். 2005 முதல் 2009 வரையான காலப்பகுதியில் வன்னிமீது மகிந்த இறுக்காத த‌டையினையா  இனிவரும் சிங்களத் தலைவர் இறுக்கப்போகிறார்?

சரி, அதை விடுங்கள், 2020 ‍- 2022 வரையான கொரோணாப் பகுதியில் மொத்த நாடுமே வீதிக்கு வந்தபோது வடக்கும் கிழக்கும் தம்மைத் தாமே பார்த்துக்கொண்டன. நிரந்தரமாகவே சிங்கள அரசுகளின் பொருளாதாரத் தடையினை முகம்கொடுத்துவரும் தமிழ்ச் சமூகம் தன்னை மீண்டும் சுய பொருளாதாரத்திற்கு மாற்றிக்கொள்ள அவர்களின் முன்னைய அனுபவம் கைகொடுத்தது.

80 களின் ஆரம்பத்திலிருந்தே புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவியே வருகின்றன. கிட்டத்தட்ட 40 வருடங்களாக இது தொடர்கிறது. எப்போது நிற்கும் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையே கிடைக்கும் புலம்பெயர் உதவிகளின் அள்வில் ஏற்றத்தாள்வு இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை.

மலையகத் தமிழர்கள் நிச்சயமாக தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை. அவர்களது தலைமை நிச்சயம் அவர்களை தான் முடிவெடுக்கும் சிங்கள வேட்பாளருக்கே வாக்களிக்கும்படி பணிக்கும். இலங்கைத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்குமான அரசியல் தொண்டைமானின் பிரிவிலிருந்தே வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டன. ஆகவே, புதிதாக வரும் சிங்கள ஜனாதிபதி அவர்களை இக்காரணத்திற்காக வஞ்சிப்பார் என்று நினைக்கவில்லை. 

3 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6467.jpeg.444940597daeaa205c97

உங்களுக்கு ஓவியம் வரையும் திறமை இருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அதற்காக மற்றையவர்களின் கருத்துக்களுக்கு ஓவியம் வரைந்து பதிலளிக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. முடிந்தால் எழுதுங்கள். 

  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM   அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர்.  யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர்.  அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது ,  அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும்.  அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள்  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால்  கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/201226
    • Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM   இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223
    • 14 DEC, 2024 | 09:28 AM (எம்.மனோசித்ரா) சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல மாத்திரமின்றி பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக, மின்சக்தி அமைச்சர் புண்ணியஸ்ரீ குமார ஜயக்கொடி, ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர உள்ளிட்டோரது கல்வி தகைமைகள் பட்டங்கள் உண்மையானவையாய என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாம் சி தொலவத்த தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், முந்தைய பாராளுமன்றத்தில் சாதாரண தரத்தில் கூட சித்தி பெறாதவர்கள் இருந்த போதிலும், அவர்கள் அதனை மறைக்கவில்லை. தமது கல்வி தகைமைகள் தொடர்பில் மக்களிடம் பொய் கூறவில்லை. பாராளுமன்றத்தின் இறையான்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சபாநாயகர் இல்லாத கலாநிதி பட்டத்தை இருப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றியிருக்கின்றார். சபாநாயகர் மாத்திரமின்றி இவ்வாறு மக்களை மேலும் பலர் ஏமாற்றியிருக்கின்றனர். பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி தன்னை விசேட வைத்திய நிபுணர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அவர் சாதாரண வைத்தியரொருவர் மாத்திரமே. அதேபோன்று நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலகவுக்கும் கலாநிதி பட்டம் இல்லை எனக் கூறப்படுகிறது. மின்சக்தி அமைச்சர் புண்ணியஸ்ரீ குமார ஜயக்கொடிக்கும் உயர் கல்வி தகைமை பட்டம் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பொய் கூறிய ஒவ்வொருவரதும் பட்டங்கள் பாராளுமன்ற இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர போன்றோரும் இந்த நிலைமையிலா இருக்கின்றனர் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இங்குள்ளது தனிப்பட்ட நபர்கள் குறித்த பிரச்சினையல்ல. ஆனால் இவர்கள் ஏன் மக்களுக்கு பொய் கூறினார்கள். அமைச்சரவை பேச்சாளரிடம் இது தொடர்பில் கூறிய போது நாம் இதனை பெரிதாக எண்ணவில்லை என்று கூறுகின்றார். மக்கள் நேரடியாக கேள்வியெழுப்பும் இவ்வாறான விடயங்களை அரசாங்கத்தால் உதாசீனப்படுத்த முடியாது. அரசியலில் கல்வி தகைமையை ஒரு பிரச்சினையாகக் காண்பித்த தேசிய மக்கள் சக்தி இதற்கு நிச்சயம் பதிலளித்தே ஆக வேண்டும் என்றார்.  https://www.virakesari.lk/article/201179
    • 13 DEC, 2024 | 09:11 PM பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இலங்கையில் முன்னெடுக்கும் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து அவதானம் செலுத்தியுள்ளது.  அதன்படி, போஷாக்குத் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கும் வேலைத்திட்டம், விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கால்நடை அபிவிருத்தி வேலைத்திட்டம் என்பவற்றை இலங்கைக்குள் முன்னெடுக்க நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.  தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவின் தலைமையில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றத்தின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதிய அரசாங்கத்தின் முதன்மைத் தேவைகளை அறிந்துகொண்டு அதற்கு தேவையான உதவிகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெற்றுக்கொடுக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் விருப்பம் தெரிவித்துள்ளது.  நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றத்தின் தென்கிழக்காசிய கொள்கைகள் மற்றும் அரசாங்க உறவுகளுக்கான வலயப் பிரதிநிதி கலாநிதி ஜமால் கான், (Dr Jamal Khan), டிஜிட்டல் பொதுமக்கள் உட்கட்டமைப்பு வசதிகள் பணிப்பாளர் சஞ்சய் ஜெயின் (Sanjay Jain) உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201222
    • இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து புகையிரத பொது முகாமையாளர் .S. S. முதலிகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். குறித்த அறிக்கை பின்வருமாறு... இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து. குறித்த விடயம் தொடர்பாக. இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய புகையிரத இன்ஜின்கள் குறித்து பல்வேறு ஊடகங்களில் பல்வேறு தவறான கருத்துகள் வெளியாகி வருவதாகவும், இதனை சரி செய்ய போக்குவரத்து அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கீழ்கண்ட செய்திக்குறிப்பை வெளியிடுகிறேன்.  எனவே, இது குறித்து ஊடகங்கள் சரியான செய்தியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 1. இந்திய அரசின் நன்கொடையாக 22 புகையிரத இன்ஜின்களை இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டதையடுத்து, அறிக்கை சமர்ப்பிபதற்காக இலங்கை புகையிரத திணைக்களத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஒன்று இந்தியா சென்று இது குறித்து ஆய்வு செய்துள்ளது, தற்போது அந்த இன்ஜின்கள் ஏற்கனவே 2012/13 இல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட M-10 வகை இன்ஜின்களை ஒத்த அல்லது அதற்கு பிந்தைய இன்ஜின்களாகும். அதிகளவான புகையிரத பெட்டிகளை கொண்டு நீண்ட தூரம் ஓட்டும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2. தற்போது, புகையிரத திணைக்களத்திடம் இதே வகையான புகையிரத என்ஜின்கள் ஒன்பது பயன்பாட்டில் உள்ளதுடன் இவற்றை இயக்க மற்றும் பராமரிக்க எமது ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். 3. அதிக பயணிகள் திறன் கொண்ட நீண்ட தூர ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களுக்கு இந்தப் புதிய புகையிரத என்ஜின்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த நன்கொடையானது புகையிரத திணைக்களத்திற்கு பத்து கனரக மற்றும் நீண்ட தூர என்ஜின்கள் பற்றாக்குறையாக உள்ள நேரத்தில் மிகவும் பயனுள்ளதாகும், மேலும் இந்த என்ஜின்கள் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்குத் தெரிவிக்கப்படுகிறது. 4. அதற்கிணங்க, ஊடகங்கள் இதைப் பற்றி பரவிவரும் தவறான கருத்துகளை சரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். S. S. முதலிகே புகையிரத பொது முகாமையாளர் https://tamil.adaderana.lk/news.php?nid=197260
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.