Jump to content

உலகில் அதிக நேரம் உறங்கும் மக்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் அதிக நேரம் மக்கள் உறங்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை 3ஆவது இடம் பிடித்துள்ளது.

உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரியாக உறங்கும் அளவினை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்கமைய இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை வாழ் மக்கள் 8.1 மணிநேரம் உறங்குவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வின்படி 12 மணி நேரத்துடன் பல்கேரியா 1ஆவது இடத்திலும் 10.2 மணிநேரத்துடன் அகோலா 2ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

இதேவேளை எமது அண்டை நாடான இந்தியா 42ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sleepiest Nations | Hillarys

https://thinakkural.lk/article/301159

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தெரிந்தது தான் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் 8 மணி என்பது உடல், உள நலனுக்கு தேவையான அளவு நித்திரை என படித்த நியாபகம்.

இலங்கையர் சரியாக அலராம் வைத்து 8 மணத்தியாலம் நித்திரை கொள்கிறார்கள் போலும்.

அண்மையில் மகிழ்சியாக மக்கள் வாழும் நாடுகள் பட்டியலிலும் இலங்கை 2வதாக வந்தது.

என்ன பிரச்சினை என்றாலும் தூக்கி போட்டு விட்டு படுப்பதும் ஒரு வகையில் நல்லதுதான்.

https://www.deccanherald.com/amp/story/world/in-pics-5-happiest-countries-in-the-world-2024-2929684

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

தினம.

அண்மையில் மகிழ்சியாக மக்கள் வாழும் நாடுகள் பட்டியலிலும் இலங்கை 2வதாக வந்தது.

என்ன பிரச்சினை என்றாலும் தூக்கி போட்டு விட்டு படுப்பதும் ஒரு வகையில் நல்லதுதான்.

https://www.deccanherald.com/amp/story/world/in-pics-5-happiest-countries-in-the-world-2024-2929684

 

நீங்களும் இதை நம்புகிறீர்களா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

நீங்களும் இதை நம்புகிறீர்களா?

இல்லை.

நான் நம்பாமைக்கான காரணம் - என்னை பொறுத்தவரை, இந்த கட்டுரையை பார்த்தால் புரியும் - இது மன அளுத்தம் பற்றிய தரவு அடிப்படையில்தான் எழுத பட்டுள்ளது.

இலங்கையில் பலரின் மன அளுத்தம் ரெக்கோர்ர்டில் வருவதில்லை. ஆனால் யூகேயில் சும்மா அப்செட்டா இருந்தாலே மைல்ட் டிப்ரெசன் என ரெக்கோர்ர்ட்டில் எழுதி விடுவார்கள்.

இதுதான் பெரிய காரணம் என நினைக்கிறேன்.

மற்றும்படி எது மகிழ்சி என்பது வரைவிலக்கண படுத்த முடியாத ஒன்றல்லவா? ஆகவே இந்த வகை கணிப்பில் எனக்கு நம்பிக்கை பெரிதாக இல்லை.

ஆனால் 5 மணி நேரம் உறங்கும் நாட்டை விட 8 மணி நேரம் உறங்கும் நாட்டில் மக்கள் relaxed ஆக இருப்பார்கள் என்பது சரிதான்.

நாம் இங்கே இருந்து போய் அந்தரப்படுவோம், அவர்கள் ஆமை வேகத்தில் இருப்பதை பார்க்க சினமும் வரும்.

ஆனால் இதையே அனுபவித்து வரும் வெள்ளையினத்தவர் உங்கள் நாட்டுக்காரார் very laidback என புழுகுவார்கள்.

கூடவே சூரிய ஒளியை விட மனதை, உடலை தெம்பூட்டும் அருமருத்து ஏதும் இல்லை என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி, தினக்குரல் எல்லாம் எங்க இருந்து இந்த கணக்கெடுப்பு எடுக்கீனம்..✍️.🤭

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்று புள்ளிகள் நிலவரம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்! 01)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.                                                   போட்டியாளர் பதில்                       CSK DC GT KKR LSG MI PBKS RR RCB SRH   வீரப் பையன்26 CSK   GT KKR       RR       முதல்வன் CSK     KKR       RR   SRH   சுவி CSK     KKR       RR   SRH   ஏராளன் CSK     KKR       RR   SRH   நிலாமதி CSK     KKR       RR   SRH   அஹஸ்தியன் CSK     KKR       RR   SRH   ஈழப்பிரியன் CSK     KKR LSG     RR       கல்யாணி CSK     KKR       RR   SRH   கந்தப்பு CSK     KKR       RR   SRH   கறுப்பி CSK   GT     MI   RR       எப்போதும் தமிழன் CSK     KKR       RR   SRH   வாதவூரான் CSK     KKR       RR   SRH   கிருபன் CSK     KKR       RR   SRH   நீர்வேலியான் CSK     KKR       RR   SRH   கோஷான் சே CSK     KKR LSG     RR       நுணாவிலான் CSK     KKR       RR   SRH   புலவர் CSK     KKR       RR   SRH
    • யுத்தத்தின்  ஆரம்பத்தில் நானும் வேறு சிலரும்  குறிப்பிட்டது போன்று இஸ்ரேல் யுத்தத்தில் தோற்றுவிட்டது என்பது மேலும் மேலும் நிரூபணமாகிறது.  ☹️
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (இடது) மற்றும் அமைச்சர் பென்னி காண்ட்ஸ் (வலது) கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டி கூனே பதவி, பிபிசி செய்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா பகுதியில் போருக்குப் பிந்தைய திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வகுக்காவிட்டால் பதவி விலகுவதாக இஸ்ரேலிய போர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பென்னி காண்ட்ஸ் மிரட்டல் விடுத்துள்ளார். ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஆறு இலக்குகளை முன்வைத்த பென்னி காண்ட்ஸ், அவற்றை அடைவதற்கான காலக்கெடுவை ஜூன் 8 வரை நிர்ணயித்தார். காஸாவில் ஹமாஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருதல், அங்கு ஒரு பன்னாட்டு சிவில் நிர்வாகத்தை நிறுவுதல், காஸாவில் ஹமாஸால் கைப்பற்றப்பட்ட அனைத்து இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பணயக் கைதிகளையும் மீட்பது மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் இடம்பெயர்ந்த பாலத்தீன குடிமக்கள் வடக்கு காஸாவுக்கு திரும்புவது உட்பட ஆறு "மூலோபாய இலக்குகள்" அதில் முன்வைக்கப்பட்டுள்ளன. "நீங்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை தள்ளி வைத்து தேசியத்தை முன் நிறுத்தினால், நாங்கள் உங்களுடன் தோள் கொடுத்து பக்கபலமாக நிற்போம். ஆனால் நீங்கள் வெறியர்களின் பாதையைத் தேர்ந்தெடுத்து ஒட்டுமொத்த தேசத்தையும் படுகுழிக்கு இட்டுச் சென்றால், நாங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்." என்று அறிவித்துள்ளார். காண்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையை நிராகரித்த நெதன்யாகு, அமைச்சரின் கருத்துகள் மோசமான, வலிமையற்ற வார்த்தைகள் என்றும் இது இஸ்ரேல் தோல்வியுற்றதாக பொருள்படும் என்றும் குறிப்பிட்டார். காஸாவில் உள்ள அகதிகள் முகாம்களில் ஒன்றான ரஃபா மற்றும் வடக்கு நகரமான ஜபாலியாவில் இஸ்ரேலியப் படைகள் செயல்பட்டு வருகிறது. ஹமாஸ் படையினர் இங்கு இல்லை என்று இஸ்ரேல் முன்பு குறிப்பிட்ட பகுதியில் அதன் ராணுவம் முகாம் அமைத்து மீண்டும் செயல்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பட மூலாதாரம்,REUTERS   இஸ்ரேலின் மற்றொரு போர் குழு உறுப்பினரான பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், `காஸாவை ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்க இஸ்ரேலுக்கு எந்தத் திட்டமும் இல்லை’ என்று பகிரங்கமாக அறிவிக்குமாறு நெதன்யாகுவை வலியுறுத்தினார். அவரின் அறிக்கைக்கு சில நாட்களுக்குப் பிறகு காண்ட்ஸ் பதவி விலகுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த பிரச்னை குறித்து பல மாதங்களாக கேள்வி எழுப்பியும் நெதன்யாகு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கேலண்ட் கூறியுள்ளார். `காஸாவில் ராணுவக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது இஸ்ரேலின் பாதுகாப்பு அபாயங்களை அதிகரிக்கும்’ என்பதே கேலண்ட் மற்றும் காண்ட்ஸின் ஒருமித்த கருத்து. அதே சமயம் இஸ்ரேல் அரசாங்கத்தில் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணியின் தீவிர வலதுசாரி உறுப்பினர்கள் உட்பட்டோர் ஹமாஸைத் தோற்கடிக்க தொடர்ச்சியான ராணுவ கட்டுப்பாடு அவசியம் என்று நம்புகிறார்கள். சனிக்கிழமை அன்று ஒரு தொலைக்காட்சி உரையில், காண்ட்ஸ் நெதன்யாகுவை குறிப்பிட்டு "இஸ்ரேல் மக்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களின் நிலைப்பாடு என்ன? சியோனிசமா (இஸ்ரேலின் தேசிய சித்தாந்தம்) இழிவான செயல்பாடா? ஒற்றுமையா பிரிவினையா? பொறுப்பா அக்கிரமமா? வெற்றியா பேரழிவா? நீங்கள் எதை தேர்வு செய்யப் போகிறீர்கள் ? " என்று அவர் கேள்வி எழுப்பினார். பட மூலாதாரம்,GETTY IMAGES "இரான் மற்றும் அதன் கூட்டாளி நாடுகளுக்கு எதிராக மேற்கு நாடுகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான விரிவான செயல்முறை வகுக்க வேண்டும். அதன் பகுதியாக, சவுதி அரேபியா உடனான உறவுகளை இயல்பாக்குவதற்கு இஸ்ரேல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்” என்று காண்ட்ஸ் குறிப்பிட்டார். போர்க்குழு அமைச்சர் காண்ட்ஸின் உரைக்கு பதிலளித்த நெதன்யாகு, "காண்ட்ஸின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அது போரின் முடிவு மற்றும் இஸ்ரேலின் தோல்விக்கு வழிவகுக்கும். பெரும்பாலான பணயக் கைதிகளை கைவிட நேரிடும். ஹமாஸை அப்படியே விட்டுவிட்டு பாலத்தீன அரசை நிறுவவும் வழிவகுக்கும்" என்று கூறினார். காஸாவிற்கு அருகில் உள்ள இஸ்ரேலிய பகுதி மீது கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேலின் போர் அமைச்சரவை நிறுவப்பட்டது. காஸாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் 35,386 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி, நெதன்யாகுவிடம் தனிப்பட்ட முறையில், போருக்கு பிந்தைய நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தியதாக ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய ராணுவம் ஜபாலியா போன்ற வடக்கு காஸாவின் சில பகுதிகளுக்கு மீண்டும் திரும்பியுள்ளது. அப்பகுதிகளில் ஹமாஸ் படை இல்லை என்று அறிவித்த பின்னர் தற்போது ராணுவம் சென்றுள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES "காஸாவில் எதிர்கால மாற்று அரசாங்கத்திற்கான அடித்தளம் அமைக்கப்படும் அதே வேளையில், அங்கு பொதுமக்களுக்கான விவகாரங்களை நிர்வகிக்க கூடிய அமெரிக்க, ஐரோப்பிய, அரபு மற்றும் பாலத்தீன நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் இஸ்ரேல் பாதுகாப்பு கட்டுப்பாட்டை ஓரளவுக்கு பராமரிக்க முடியும்” என்று காண்ட்ஸ் விவரித்துள்ளார். இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஜபாலியாவில் தாங்கள் பாலத்தீன ஆயுதக் குழுக்களுடன் சண்டையிட்டதாகக் கூறினர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன மருத்துவர்கள் தெரிவித்தனர். `ஜபாலியா மீது இஸ்ரேலின் மிருகத்தனமான தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர்’ என்று ஹமாஸ் தரப்பு கூறியது. கடந்த வாரம், இஸ்ரேல் ரஃபாவில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. ஹமாஸின் கடைசி புகலிடங்களை தகர்க்க ராணுவப் படை நகரத்திற்குள் நுழைய வேண்டும் என்று கூறியது. சனிக்கிழமை அன்று, அது நகரின் கிழக்கில் உள்ள இலக்குகள் மீது வான்வழி தாக்குதல்களை தொடங்கியது. சனிக்கிழமை மாலை, இஸ்ரேல் வடக்கு காஸாவின் சில பகுதிகளில் பொதுமக்கள் வெளியேறும்படி உத்தரவுகளை வெளியிட்டது, ஆயுதக் குழுக்கள் அதன் எல்லையை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியதாக கூறியது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி முகமையின் (UNRWA) தலைவர் பிலிப் லாஸரினி காஸாவின் சூழலை விவரிக்கையில், ``சுமார் 800,000 பாலத்தீனர்கள் இப்போது ரஃபாவை விட்டு வெளியேறி, சிதைந்து போயிருக்கும் கான் யூனிஸ் நகரத்திலோ அல்லது கடற்கரை ஓரத்திலோ தஞ்சம் புகுந்துள்ளனர். காஸாவில் போர் தொடங்கியதில் இருந்து, பாலத்தீனர்கள் பாதுகாப்பைத் தேடி பலமுறை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” "மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் போது, அவர்கள் செல்லும் பாதைகள் பாதுகாப்பானதாக இல்லை. அதே சமயம் ஒவ்வொரு முறையும் வெளியேற்றப்படும் போது, அவர்கள் தங்களிடம் உள்ள சில உடமைகளை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மெத்தைகள், கூடாரங்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் அடிப்படை பொருட்களை கொண்டு செல்லவோ அல்லது போக்குவரத்துக்கு பணம் செலுத்தவோ முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.” "காஸாவில் உள்ள மக்கள் 'பாதுகாப்பான' பகுதிகளுக்குச் செல்லலாமே என்று கேள்வி எழுப்புவது தவறானது. ஒவ்வொரு முறையும் அவர்கள் பயணிக்கும் போது, அவர்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை." என்று பிலிப் லாஸரினி விளக்கினார். அமெரிக்க அதிபர் பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலில் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். குடிமக்களைப் பாதுகாக்கும் திட்டம் இல்லாத நிலையில், ரஃபா மீதான எந்தவொரு முழு அளவிலான இஸ்ரேலிய தாக்குதலுக்கும் பைடன் நிர்வாகத்தின் எதிர்ப்பை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன், சல்லிவன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பது குறித்தும், பாலத்தீன அரசு அந்தஸ்தை அடைவது குறித்தும் அவர்கள் விவாதித்ததாக சவுதி அரசு ஊடகம் தெரிவித்தது. https://www.bbc.com/tamil/articles/cv22513ljgzo
    • ஊரில் பல வீடுகளில் விலாட்டு மரங்கள் காய்த்திருப்பதைப் பார்த்தேன். எங்கள் வீட்டிலும், மனைவியின் பிறந்து வளர்ந்த வீடு, ஒரு மரம் காய்த்திருக்கின்றது. கறுத்த கொழும்பானை பார்க்கவேயில்லை என்று இப்பொழுது தான் நினைவுக்கு வருகின்றது. நான் பிறந்து வளர்ந்த வீட்டில் இரண்டு கறுத்த கொழும்பான் மரங்கள் முந்தி நின்றது. இப்ப இல்லை. முந்தி அவையும் சில வருடங்கள் காய்த்துக் கொட்டின, சில வருடங்கள் பகிஷ்கரித்தும் இருக்கின்றன. என்ன டிசைனோ.....😀
    • ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டரை கண்டுபிடிக்க முடியாத நிலை - ஈரான் ஊடகங்கள் தகவல் Published By: RAJEEBAN   19 MAY, 2024 | 08:45 PM   ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிக்கொப்டரை கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுகின்றது ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் மோசமான காலநிலை நிலவுகின்றது- குறிப்பிட்ட பகுதியில் மழையும் கடும் பனியும் காணப்படுவதாக ஈரான் செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிக்காக அனுப்பப்பட்ட ஹெலிக்கொப்டர் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டரை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிவிட்டது என தகவல்கள் வெளியாகின்றன. ஈரான் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிக்கொப்டர் தொலைதூர பகுதியொன்றில் அவசரமாக தரையிறங்கியுள்ளது என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்திற்கு பயணம் செய்துகொண்டிருந்தார் ஈரானின் வெளிவிவகார அமைச்சரும் அவருடன் பயணம் செய்தார் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹெலிக்கொப்டர் அவசரமாக தரையிறங்கிய பகுதிக்கு செல்வது கடினமாக உள்ளது என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/183984
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.