Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1000229243.jpg

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கடந்த பத்து வருடங்களில் (2014-2024) நாற்பத்தி ஐந்தாயிரத்து எழுநூற்று தொண்ணூறு கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 
 
 
அதன்படி 2014-2015 ஆம் ஆண்டில் 16330 கோடி ரூபாய்க்கு மேல்,
 
2015-2016 இல் 13084 கோடி ரூபாய்க்கு மேல்,
 
 
2016-2017 ல் 2800 கோடி ரூபாய்க்கு மேல்,
 
 
2017-2018 இல் 417 கோடி ரூபாய்க்கு மேல், 
 
2018-2019 இல்  4413 கோடி ரூபாய்க்கு மேல், 
 
2020 - 2021 இல் 4970 கோடி ரூபாய்க்கு மேல், 
 
 
2021 2022ல் 16358 கோடி ரூபாய்,
 
 
 2022 - 2023 இல் 7130 கோடி
ரூபாய் மற்றும் 
 
2023 - 2024 இல் 1247 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
அத்தோடு 2021-2022ல் விமான நிறுவனம் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. 
 
 
அந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட இழப்பு 16358 கோடி ரூபாய் எனவும் அவர் தெரிவித்தார்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகில் எந்த ஒரு விமான நிறுவனமும் இலாபம் ஈட்டவில்லை என இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு.

 

1000229587.jpg
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கடந்த பத்து வருடங்களில் (2014-2024) நாற்பத்தி ஐந்தாயிரத்து எழுநூற்று தொண்ணூறு (45790) கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்து இருந்த நிலையில்,
 

உலகில் எந்த ஒரு விமான நிறுவனமும் இலாபம் ஈட்டவில்லை, இது அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இயல்பான ஒரு சூழ்நிலை என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்தார்.

 
ஏர் இந்தியா, பிஓஏசி மற்றும் சுவிஸ் ஏர்லைன்ஸ் போன்ற பணக்கார நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் லாபம் ஈட்டவில்லை என்றும் சில விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நஷ்டம் காரணமாக எயார் இந்தியா டாட்டா நிறுவனத்திற்கு விற்றுத் தீர்ந்துவிட்டது என்றும், எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 2 முதல் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அரசு வழங்கியதாகவும் கூறினார்.
 
இலங்கை போன்ற சிறிய நாடு அந்த வகையில் விமான சேவையை பராமரிக்கும் நிலையில் இல்லை என்றார்.
 
"விமானம் வாங்குவதற்கு எங்களிடம் நிதி இல்லை. பெரிய மூலதனத்தை முதலீடு செய்ய முடியாது. குத்தகைக்கு விமானங்களை எடுக்கிறோம். 6,000 ஊழியர்களின் வேலை பாதுகாப்பை உறுதிசெய்ய விமான சேவையை தொடர பெரிய மூலதனத்தை கொண்டு வரக்கூடிய குழுவுடன் நாங்கள் சேர வேண்டும்" என அவர் கூறினார்.
 
2023 ஆம் ஆண்டில் 791 பணியாளர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர், இது கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு ஆகும், அதே நேரத்தில் அது 2023 இறுதிக்குள் ரூ.609 பில்லியன் இழப்பை ஏற்படுத்தியது.
 
கடந்த வருடம் சுமார் 474 பணியாளர்கள் இராஜினாமா செய்திருந்தமையினால் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறினார்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிமல் பூனை கண்ணை மூடினா உலகம் இருட்டாக்கி விடும் என்பது போல் கதை அளக்கிறார் .

  • கருத்துக்கள உறவுகள்

FOR SALE...விற்பனைக்கு ரெடியாகிவிட்டாங்க...எவ்வளவு அமுக்க முடியுமோ ..அவ்வளவும் அமுக்கி இருப்பாங்க...தலை முதல் கால் வரை..ஆர் வாங்கினமோ அவை லாபமீட்டத்தொடங்கியவுடன்...பீகுமார் முதலில் ஆர்ப்பாட்டம் தொடங்கி கூத்தடிக கவுண்மேந்து பின்னர் அவயின் காலை வாரும்...இதுதான் இலங்கை ஸ்டைலு...

  • கருத்துக்கள உறவுகள்

மறுசீரமைப்பின் மூலமே ஸ்ரீலங்கன் விமான சேவையை முறையாக முன்னெடுக்க முடியும் - நிமல் சிறிபால டி சில்வா  

08 MAY, 2024 | 08:29 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கை மட்டுமன்றி உலகில் செல்வந்த நாடுகளிலும் விமான சேவைகள் நட்டத்திலேயே இயங்குகின்றன. மறுசீரமைப்பின் மூலம் சிறந்த முதலீட்டுக் குழுவொன்றுடன் இணைந்தே ஸ்ரீலங்கன் விமான சேவையை முறையாக முன்னெடுக்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அத்துடன் விமான சேவை ஊழியர்கள் 470 பேர் ஒரே தடவையில் தமது பதவியை இராஜினாமா செய்ததாலே 791 பேரை புதிதாக இணைத்துக் கொள்ள நேர்ந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) பிரதமருக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி. ஹேஷா விதானகே எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பிரதமரின் சார்பில் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கு கடந்த வருடத்திலேயே அதிகமான ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளதாக ஹேஷா விதானகே எம்பி தமது கேள்வியின் போது சுட்டிக்காட்டினார்.  இவ்வாறு 791 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எனினும் கடந்த வருடம் 470 ஊழியர்கள் தமது பதவியை ராஜினாமா செய்து சென்றுள்ள காரணத்தாலேயே இந்த ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில் இவ்வாறு பெரும் தொகையானோர் தமது பதவியை இராஜினாமா செய்யும்போது அந்த வெற்றிடத்திற்காக ஆட்சேர்ப்பு செய்வது தவறா என நான் அவரிடம் கேட்க விரும்புகின்றேன்.

உலகில் எம்மை விட செல்வந்த நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளிலும் விமான சேவைகள் நட்டத்திலேயே இயங்குகின்றன.இந்திய எயார்லைன்சுக்கு என்ன நடந்தது? அதுவும் நட்டத்திலேயே இயங்குகிறது. சுவிஸ் எயார் தற்போது சேவையில் உள்ளதா? அதுவும் கிடையாது.

எமிரேட்ஸ் போன்ற விமான சேவைக்கு அந்த நாடுகள் 2 அல்லது 3பில்லியன் அமெரிக்கன் டொலர்களை தொடர்ச்சியாக வழங்குகின்றன. இலங்கை போன்ற நாடுகளுக்கு அவ்வாறு செய்ய முடியாது. அதனால் எமது நாடு போன்ற சிறு அளவிலான விமான சேவைகளை நடத்தும் நிறுவனங்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கியே ஆக வேண்டும். 

எமக்கு விமானம் கொள்வனவு செய்வதற்கும் நிதி கிடையாது. அதற்காக முதலீடு செய்யும் நிலையிலும் இல்லை. குத்தகை அடிப்படையிலேயே நாம் விமானங்களை பெற்றுக் கொள்கின்றோம். ஒரு விமானம் கூட எமக்கு சொந்தமான விமானம் கிடையாது. அனைத்து விமானங்களும் லீசிங் முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள விமானங்களாகும். அவற்றுக்கு லீசிங் வழங்கிய பின்னர் எத்தகைய நிதியும் எமக்கு மிஞ்சாது.

அத்துடன் அண்மைக் காலங்களில் நாம் விமான சேவை தொடர்பில் பல தொழிற்சங்க நெருக்கடிகளையும் எதிர்நோக்க நேர்ந்தது. அதுவும் நட்டத்திற்கு காரணமாகிறது. அதனால் தான் எமக்கு மறுசீரமைப்பு அவசியமாக உள்ளது. 

இந்த விமான சேவை தொடர்பில் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடிய குழு வொன்றுடன் இணைந்தே உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும். அப்போதுதான் இந்த விமான சேவை துறையிலுள்ள சுமார் 6000 ஊழியர்களின் தொழில் உரிமையை பாதுகாக்க முடியும். அதற்கான பொறுப்பு அமைச்சுக்கு உள்ளது. 

அந்த வகையில் எந்த ஒரு விமான சேவையும் இலாபமீட்டுவதாக தற்போது இல்லை என்பதை  தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/183009

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் விமான நிறுவனத்தின் வரியின் பின்னான நிகர இலாபம் $1.74 பில்லியன் (2023).

பிரிட்டிஷ் எயர்வேய்ஸ் $3.8 பில்லியன்.

எயர் பிரான்ஸ் $1.1 பில்லியன்.

சிறி லங்கன் ????

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புங்கையூரன் said:

அவுஸ் விமான நிறுவனத்தின் வரியின் பின்னான நிகர இலாபம் $1.74 பில்லியன் (2023).

பிரிட்டிஷ் எயர்வேய்ஸ் $3.8 பில்லியன்.

எயர் பிரான்ஸ் $1.1 பில்லியன்.

சிறி லங்கன் ????

இவை அனைத்தையும் விட அதிக விலையானது சிறி லிங்கன் விமான பயண ரிக்கற். அப்படியானால் எப்படி???

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இவை அனைத்தையும் விட அதிக விலையானது சிறி லிங்கன் விமான பயண ரிக்கற். அப்படியானால் எப்படி???

சிறிலங்கனின் முக்கிய பிரச்சனை குத்தகைக்கு விமானங்களை எடுத்து ஓடுவது...!

மூல தனம் இல்லாதது தான் முக்கிய பிரச்சனை போல உள்ளது...!

பாலைக் கறக்கும் போது...கண்டுக்கும் கொஞ்சமாவது விட வேணும் தானே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

சிறிலங்கனின் முக்கிய பிரச்சனை குத்தகைக்கு விமானங்களை எடுத்து ஓடுவது...!

மூல தனம் இல்லாதது தான் முக்கிய பிரச்சனை போல உள்ளது...!

பாலைக் கறக்கும் போது...கண்டுக்கும் கொஞ்சமாவது விட வேணும் தானே!

குத்தகைக்கு எடுத்து சொந்த மக்களின் மீதே (மலக்) குண்டுகளை போட்டவனுக்கு பழக்க தோசம். இனி மீள்வது கடினம். 😪

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.