Jump to content

மன்னாரில் நடைபெற்ற நுங்கு விழா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

10 MAY, 2024 | 04:46 PM
image
 
வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடன் மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் நுங்கு விழா இன்று வெள்ளிக்கிழமை (10) காலை 10.30 மணியளவில்  மன்னாரில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் முன்பாக சிறப்பாக இடம்பெற்ற நுங்கு திருவிழாவில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மன்னார் மாவட்ட மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை விசேட அம்சமாகும்.

நுங்கு திருவிழாவானது பனை மரத்தின் தேவை குறித்தும் பனை மரத்தினால் பெறப்பட கூடிய பயன்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  இந்த நுங்கு திருவிழா அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

WhatsApp_Image_2024-05-10_at_3.18.47_PM.

WhatsApp_Image_2024-05-10_at_3.18.45_PM.

WhatsApp_Image_2024-05-10_at_1.01.44_PM.

WhatsApp_Image_2024-05-10_at_12.11.03_PM

WhatsApp_Image_2024-05-10_at_12.11.05_PM

https://www.virakesari.lk/article/183172

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

👍.....................

நுங்கு எங்கும் தாராளமாகக் கிடைக்கின்றது. யாழில் பல இடங்களிலும் ஒன்று 200 ரூபா என்று விற்கின்றனர். ஆனால் இளநீருக்கு பெரும் தட்டுப்பாடு.

நுங்கை வெட்டி சீவிக் கொடுப்பவர் நுங்கை நெஞ்சருகே வைத்து கத்தியால் சீவுவது ஒரு பயத்தை உண்டாக்கியது. முந்தி நாங்களும் இப்படித் தான் வெட்டியும், சீவியும் இருக்கின்றோம். ஆனால் இப்பொழுது ஒரு இடைவெளி விழுந்து விட்டது....  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுங்குத் திருவிழா ........ பனையின் பயன்பாட்டுகளுக்காக கொண்டாடித் தீர்க்க வேண்டிய திருவிழா ......!  🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதானி பனங்காணியையும் வாங்கி பக்டரி போட்டுடப் போகிறன்...மிச்சம் பனகாணிதான் கிடக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் நுங்கு திருவிழா!

12 MAY, 2024 | 06:15 PM
image
 
வவுனியா மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா இன்று (12) நடைபெற்றது.

இதன்போது பனை மரத்தின் பயன்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்திப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

மேலும் கலை நிலா கலையகத்தினால் 'குளக்கரையை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் நாடக ஆற்றுகையும் நடைபெற்றிருந்தது.

சுயாதீன இளைஞர்களினால் தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இந்த நுங்கு திருவிழாவில் பெருமளவான இளைஞர்கள், யுவதிகள் பலரும் கலந்துகொண்டு நுங்குகளை பருகி மகிழ்ந்ததை இம்முறையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

IMG_20240512_114455.jpg

IMG_20240512_114426.jpg

IMG_20240512_114316.jpg

IMG_20240512_112522.jpg

https://www.virakesari.lk/article/183349

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2024 at 16:53, ரசோதரன் said:

👍.....................

நுங்கு எங்கும் தாராளமாகக் கிடைக்கின்றது. யாழில் பல இடங்களிலும் ஒன்று 200 ரூபா என்று விற்கின்றனர். ஆனால் இளநீருக்கு பெரும் தட்டுப்பாடு.

நுங்கை வெட்டி சீவிக் கொடுப்பவர் நுங்கை நெஞ்சருகே வைத்து கத்தியால் சீவுவது ஒரு பயத்தை உண்டாக்கியது. முந்தி நாங்களும் இப்படித் தான் வெட்டியும், சீவியும் இருக்கின்றோம். ஆனால் இப்பொழுது ஒரு இடைவெளி விழுந்து விட்டது....  

சே…சீசனை மிஸ் பண்ணீட்டனே☹️.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.