Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ரசோதரன் said:

🤣........🙏.........

பொடியன் தான், அதில் என்ன பல கேள்விக் குறிகள்........😀.

 

நல்லா பொடி வச்சு எழுதினபடியால்...பொடியன்தான்  என்பதை ஒரு 5 தடவை எனக்குள்   கேட்டுக்கொண்டேன்...நம்புங்கோ...

 

10 hours ago, ஏராளன் said:

அவருக்கு உங்களைத் தெரிந்துவிட்டதோ?!

நான் ஆராச்சியாளன் இல்லை அய்யா...என்னை விட்டுவிடுங்கோ..

  • Haha 1
  • Replies 107
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்பது - யானைக்கு தீனி
------------------------------------------------------------------------------------------------
கடைசியாக 90ம் ஆண்டுகளின் நடுப்பகுதிகளில் சில தடவைகள் தலதா மாளிகைக்கு போயிருக்கின்றேன். பின்னர் ஒரு இருபத்தி சொச்ச வருடங்களின் பின் ஒரு தடவை கண்டி போயிருந்தாலும் மாளிகைக்குள் போகவில்லை. இந்த தடவை குடும்பமே உடன் வந்ததால், உள்ளே போக வேண்டும் என்று முன்னரேயே தீர்மானித்திருந்தோம். 'இலங்கையில் பௌத்தம்' என்ற தலைப்பில் ஒரு சின்ன அறிமுக உரையையும் பிள்ளைகளுக்கு ஆற்றியிருந்தேன். இனிமேல் எதிர்காலத்தில் அவர்கள் இருவரும் எங்களுடன் சேர்ந்து எங்கேயும் வரா விட்டால், அதற்கான ஒரு பிரதான காரணம் இந்த பயணத்தில் நான் ஆற்றிய சின்ன சின்ன உரைகளாகவும் இருக்கக்கூடும்.
 
தலதா மாளிகையின் ஒரு பக்கம் இருந்தது உள்ளே போகும் வழி. முன்னர் நடுவில் இருக்கும் பாதையே உட் செல்லும் வழியாக இருந்தது. நடுவில் இருக்கும் பாதை போய் வருவதற்கென்றே ஒரு தலைவாசலுடன் கட்டப்பட்டும் இருந்தது. பாதுகாப்பு கருதி அதை தடை செய்து வைத்துள்ளார்கள் போல. நாங்கள் உள்ளே போக, அங்கு சோதனையில் நின்ற போலீஸ்காரர்கள் படபடவென்று சிங்களத்தில் சொன்னார்கள். அவர்கள் என்ன சொல்கின்றனர் என்று எனக்கு விளங்கியது. நல்ல நெற்றிப் பொட்டுடன் மனைவி முழித்துக் கொண்டு நின்றார். எது இடம் என்ற அவர்களின் ஒரு கேள்விக்கு மட்டும் நான் யாழ்ப்பாணம் என்று நல்ல தமிழில் பதில் சொன்னேன். மனைவி என்னவாம் என்று கேட்டார். நீங்களும், மகளும் உள்ளே போக முடியாதாம், நீங்கள் இருவரும் கை இல்லாத சட்டைகள் போட்டிருக்கின்றீர்களாம் என்றேன்.
 
கை உள்ள சட்டையைத் தேடி ஓடினோம். கண்டி நன்றாகத் தெரிந்த நகரம். எங்கே எந்தக் கடைகள் இருக்கின்றன என்று இன்னும் ஞாபகம் இருக்கின்றது. கடைக்காரர் இதற்கென்றே தயாராக இருந்தார், தலதாவின் உள்ளே போகும் முன் பலர் இந்தக் கடைக்குள்ளே முதல் ஓடிப் போவார்கள் ஆக்கும். எடுத்துப் பரப்பினார் கை உள்ள மேல் சட்டைகளை. இரண்டு வாங்கினோம். எட்டி என்னையும், மகனையும் கீழே பார்த்தார். அன்று அரைக் காற்சட்டை போடாமல், நாங்கள் இருவரும் நீட்டுக் காற்சட்டை போட்டிருந்ததால், கடைக்காரருக்கு அன்றைய வியாபாரம் கொஞ்சம் மந்தம் தான்.
 
அன்று மாளிகையின் உள்ளே சரியான கூட்டம். இப்பொழுது தினமும் இப்படித்தானா என்று தெரியவில்லை. பல வெளிநாட்டுப் பயணிகள் மேலேயும், கீழேயும் கலர் கலர் துணிகளை, துண்டுகளைச் சுற்றிக் கொண்டு வரிசைகளில் நின்றனர். உள்ளே ஒரு வரிசை இல்லை, பல வரிசைகள், ஆனால் எந்த வரிசையிலும் நில்லாமல், வெட்டி வெட்டி இலாவகமாக போய்க் கொண்டிருந்தனர் உள்ளூர் வாசிகள். அப்படி படம் எடுக்கக் கூடாது, இப்படி எடுக்கக் கூடாது, பின்பக்கத்தை காட்டக் கூடாது என்ற கட்டுப்பாடுகளால் யூடியூப்பர்கள் அங்கு இல்லை. வரிசையில் நின்று போனதால் அதிக நேரம் எடுத்தது. எல்லாம் பார்த்து முடித்த பின், என்ன பார்த்தோம் என்று பிள்ளைகள் கேட்டனர். ஓரளவு நியாயமான கேள்வியே. 
 
பேராதனை பல்கலைக் கழகம் ஒரு அழகிய இடம். பல்கலையின் ஊடே மகாவலி ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது. ஆற்றின் ஒரு பக்கம் பிரதான பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. மறு கரையில் பொறியியல் பீடம் மட்டும் அமைந்துள்ளது. பொறியியல் பீடத்தில் படிக்கும் மாணவர்கள் மிகவும் 'வறண்டவர்கள்/காய்ந்தவர்கள்' என்பதால், அவர்களை ஒதுக்கி ஒரு கரையில் தனியே விட்டு விட்டதாக மற்றைய பீட மாணவர்கள் பகிடி செய்வார்கள். இப்பொழுது பல்கலைக் கழகத்தின் உள்ளே பல இடங்களில் வெளியார்கள் அனுமதி இன்றி உள்ளே போக முடியாத வண்ணம் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் இருக்கின்றனர். அங்கு வேலை செய்யும் நண்பன் முன்னரேயே பொறியியல் பீட வாசலில் இருக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் நாங்கள் வருவதாகச் சொல்லியிருந்தபடியால், அவர் எங்களையும், வாகனத்தையும் உள்ளே விட்டார்.
 
ஜனரஞ்சகமான துறைகள் அல்லாமல்  வேறு துறைகளில் பெரும் மதிப்புடன் இருந்த, இருக்கும் ஒருவரை அந்த துறை சார்ந்தோர் அன்றி மற்றவர்கள் அவ்வளவாக அறிந்திருப்பதில்லை. ஆனால் பேராசிரியர் துரைராஜா அவர்கள் இதற்கு ஒரு விதிவிலக்கு. அவர் வாழ்ந்த காலத்திலும், இன்றும் பலரும் அவரையும், அவரது சேவைகளையும் அறிந்திருக்கின்றனர். நான் அவரிடம் நேரடியாக படிக்கவில்லை. அவர் அப்போது யாழ் பல்கலைக் கழகத்திற்கு போய் விட்டார். ஆனாலும் அவர் போட்டிருந்த பாதையிலேயே என் பயணமும், என் போன்ற பல மாணவர்களின் பயணமும் அமைந்தது.
 
அவரின் நினைவாக அவரின் பெயரில் ஒரு செமினார்/மீட்டிங் இடம் ஒன்றை இப்பொழுது பேராதனையில் உருவாக்கியிருக்கின்றனர். அவரின் பெயரில் ஏற்கனவே பல்கலையில் ஒரு சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில், பேராசிரியர் துரைராஜா அவர்கள் இலங்கையின் 'Father of Geotechnical Engineering' என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் அவரின் பல படங்களும், விபரங்களும் அங்கே இருந்தன. மிகையில்லாத கூற்றுகள் இவை.
 
பல்கலையின் பல பரிசோதனை, செய்முறை கூடங்களுக்கு நண்பன் கூட்டிச் சென்றான். அப்படியே இருந்தன. எந்த மாற்றமும் இல்லை என்றே சொல்ல வேண்டும். எல்லாம் முடிந்த பின், எப்படியிருக்குது என்று பிள்ளைகளிடம் கேட்டேன். எல்லாமே மிகப் பெரிதாக இருக்கின்றன, ஆனால் மிகப் பழையவை என்றனர். வெளியில் பல்கலை முழுவதும் நிலத்துடன் உரசும் மரங்கள், தொங்கி விழும் கொடி போன்ற கிளைகள் உள்ள மரங்கள், மஞ்சள் பூக்களை கொட்டும் மரங்கள், பச்சை, மஞ்சள் மூங்கில்கள், வரிசையாக நிற்கும் கற்றாழைகள் என்று இன்றும் அதே அழகுடன் இருந்தது அந்த இடம்.
 
அங்கிருந்து அடுத்ததாக பின்னவல யானைகள் சரணாலயம் நோக்கிப் புறப்பட்டோம். இங்கு தான் ஆயுர்வேத தோட்டங்களும் இருக்கின்றன. பிரதான வீதியிலிருந்து பின்னவல சரணாலயத்திற்கு போகும் பாதையெங்கும் யானையில் ஏறுங்கள், யானையில் உலாவுங்கள், யானைக்கு உண்ணக் கொடுங்கள் என்ற அறிவிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. சாரதியும் எங்களிடம் இதைப் பற்றி முன்னரேயே கேட்டு, நாங்களும் அதற்கு சம்மதித்திருந்தோம். அவர் இப்படியான ஒரு இடத்தில் நிற்பாட்டினார். இறங்கி ஓடினார். பின்னர் வந்தவர், இங்கு யானைகளில் ஏறலாம் என்றார். அவரை நாங்கள் ஓட விட்டிருக்கக் கூடாது. நானே இறங்கிப் போய் கதைத்திருக்க வேண்டும். ஒருவருக்கு ஐயாயிரம் ரூபாய்கள் என்றனர். 
 
நான்கு யானைகள் அங்கிருந்த சிறிய கட்டிடத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஓடையில் படுத்திருந்தன. நான்கிற்கும் நாலு பெயர்கள் சொன்னார்கள். குமாரி என்ற ஒரு பெயர் மட்டும் தான் நினைவில் இருக்கின்றது. பிள்ளைகளும், அவர்களும் சேர்ந்து ஒரு யானையை ஒரு மாதிரியாக நித்திரையிலிருந்து எழுப்பினார்கள். 'இது என்ன தொல்லை......' என்பது போல அது அசைந்தது. யானை எப்படி ஆட்களை அடிக்கும், யானை தூக்கி எறிந்தால் எப்படி எங்கள் எலும்புகள் முறியும் என்று முல்லைத்தீவில் பெரிய தோட்டங்கள் செய்யும் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் எனக்கு விளங்கப்படுத்தியிருந்தார். யானை துரத்தினால் ஓடித் தப்ப முடியுமா என்று அவரிடம் கேட்டும் இருந்தேன். கஷ்டம் என்று ஒரு சொல்லில் பதில் சொல்லியிருந்தார்.
 
யானை முதுகில் ஏற்றி வைத்து, அந்த ஓடையில் ஓடிக் கொண்டிருந்த சுத்த அழுக்கு நீரை தன் தும்பிக்கையால் அள்ளி, சோவென்று வாரி எங்கள் மீது இறைத்தது. யானைப் பாகன் போதும், போதும் என்று சொன்ன பின்பும், யானைகள் நிற்பாட்டவில்லை. 'இனிமேல் எங்கள் மேல ஏறுவீர்களா..........' என்று அவை கேட்டன போல. பின்னர் அந்த ஓடையில் யானைகள் நடந்தன. பின்னர் யானைக்கு நாங்கள் சாப்பாடு கொடுத்தோம். இரண்டு யானைப் பாகர்களும் தங்களுக்கும் ஏதாவது தரும்படி கேட்டார்கள். அதையும் கொடுத்தோம். 
 
முழுவதும் நனைந்து, களைத்தும் விட்டோம். அங்கேயே உடுப்புகளை மாற்றிக் கொண்டோம். சாரதி அடுத்தது ஆயுர்வேத தோட்டம் என்றார். தோட்டமும் வேண்டாம், மருந்தும் வேண்டாம், நேரே கொழும்புக்கு போங்கள் என்றோம். தோட்டத்திற்கு போவது இலவசம் என்றார். நீங்களே எங்களுக்கு காசு கொடுத்தாலும், எங்களால் இதுக்கு மேல் முடியாது என்றோம். 'அப்ப பின்னவல சரணாலயம்.......' என்று இழுத்தார் சாரதி. பின்னல் திரும்பிப் பார்த்தேன். யாராவது தங்களைக் காப்பாற்ற மாட்டார்களோ என்பது போல இரு பிள்ளைகளும் பின்னால் ஒரு இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒன்றும் வேண்டாம், கொழும்பிற்கே போவம் என்று அங்கிருந்து கிளம்பினோம்.
 
(தொடரும்...........)
Edited by ரசோதரன்
  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

'இனிமேல் எங்கள் மேல ஏறுவீர்களா..........' என்று அவை கேட்டன போல.

உங்கள் சந்ததியே ஏறாமாட்டார்கள் என்று நினைக்கிறேன்😛

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kavi arunasalam said:

உங்கள் சந்ததியே ஏறாமாட்டார்கள் என்று நினைக்கிறேன்😛

🤣.....

அங்கு எடுத்த வீடியோக்களை பார்க்க 'funny' ஆக இருக்கிறது என்று இப்பொழுது சொல்கின்றனர். அடங்கமாட்டார்கள் போல....போகும் ஒவ்வொரு தடவையும் தலைக்கு ஐயாயிரம் இதுக்கு எடுத்து வைக்க வேணுமோ தெரியல .........😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

🤣.....

அங்கு எடுத்த வீடியோக்களை பார்க்க 'funny' ஆக இருக்கிறது என்று இப்பொழுது சொல்கின்றனர். அடங்கமாட்டார்கள் போல....போகும் ஒவ்வொரு தடவையும் தலைக்கு ஐயாயிரம் இதுக்கு எடுத்து வைக்க வேணுமோ தெரியல .........😀

வெளிநாட்டவர்களுக்கு கட்டணம் இதைவிட அதிகம் என்றே நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, MEERA said:

வெளிநாட்டவர்களுக்கு கட்டணம் இதைவிட அதிகம் என்றே நினைக்கின்றேன்.

அப்படியா.... நாங்கள் வெளிநாட்டவர் என்றபடியால் தான் தலைக்கு ஐயாயிரம் ரூபாய்கள் கட்டணம் வசூலிக்கின்றனர் என்று நினைத்திருந்தேன். யானைகள் பெரிதாகத்தான் இருக்கின்றன, அதற்காக கட்டணமும் இவ்வளவு பெரிதாக இருக்க வேண்டுமா.......... 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரசோதரன் said:

எல்லாம் பார்த்து முடித்த பின், என்ன பார்த்தோம் என்று பிள்ளைகள் கேட்டனர். ஓரளவு நியாயமான கேள்வியே

2017 இல நானும் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு போய் ரொம்பவும் அசிங்கப்பட்டு விட்டேன்.

3 hours ago, ரசோதரன் said:

யானை முதுகில் ஏற்றி வைத்து, அந்த ஓடையில் ஓடிக் கொண்டிருந்த சுத்த அழுக்கு நீரை தன் தும்பிக்கையால் அள்ளி, சோவென்று வாரி எங்கள் மீது இறைத்தது. யானைப் பாகன் போதும், போதும் என்று சொன்ன பின்பும், யானைகள் நிற்பாட்டவில்லை. 'இனிமேல் எங்கள் மேல ஏறுவீர்களா..........' என்று அவை கேட்டன போல. பின்னர் அந்த ஓடையில் யானைகள் நடந்தன. பின்னர் யானைக்கு நாங்கள் சாப்பாடு கொடுத்தோம். இரண்டு யானைப் பாகர்களும் தங்களுக்கும் ஏதாவது தரும்படி கேட்டார்கள். அதையும் கொடுத்தோம். 

யானையில் இருந்து குளித்தால்

யானைப்பலம் வரும் என்பார்கள்.

கொடுத்து வைத்த குடும்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ஈழப்பிரியன் said:

2017 இல நானும் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு போய் ரொம்பவும் அசிங்கப்பட்டு விட்டேன்.

யானையில் இருந்து குளித்தால்

யானைப்பலம் வரும் என்பார்கள்.

கொடுத்து வைத்த குடும்பம்.

🤣.........

பலம் எங்களுக்கு வரவில்லை........நாங்கள் தான் யானைக்கு பழம் கொடுத்தோம், அது சாப்பிட்டு விட்டு பலமாகவே நின்றது.

  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.