Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜாவின் இனிய கானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈஸ். கதாநாயகி யார் என்று தெரியவில்லை.

ராதா, விஜயகாந்த்

அம்மன் கோயில் கிழக்காலே

இளையராஜா

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

(உன் பார்வையில்)

அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்

இசைந்து இசைத்தது புது சுரம்தான்

சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்

கழுத்தில் இருப்பது வலம்புரிதான்

இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் (2)

மனதை மயிலிடம் இழந்தேனே

மயங்கி தினம் தினம் விழுந்தேனே

மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ

(உன் பார்வையில்)

அணைத்து நனைந்தது தலையணைதான்

அடுத்த அடியென்ன எடுப்பது நான்

படுக்கை விரித்தது உனக்கெனத்தான்

இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்

நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் (2)

மறைத்த முகத்திரை திறப்பாயோ

திறந்து அகத்திடை இருப்பாயோ

இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

(உன் பார்வையில்)

Edited by nunavilan

  • Replies 1.1k
  • Views 247.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மேகம் கொட்டட்டும்

படம்: எனக்குள் ஒருவன்

பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்

இந்தப் பாடலைப் பல நாட்களாக இணைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். முக்கியமாக சில இசை சித்து விளையாட்டுக்களுக்காக. இளையராஜா ஒவ்வொரு பாடலிலும் ஏதாவது புதுமை செய்ய நினைப்பவர் என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக 80 களில் வந்த பாடல்களில் இது தெளிவாகத் தெரியும். அப்படிப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. மேம்போக்காகப் பார்க்கும்போது சாதாரணமாகத் தோன்றும் இப்பாடலில் ராஜா ஒரு புதுமையைப் புகுத்தியிருக்கிறார்.

கிட்டார் வாசிப்பில் குறிப்பாக பேஸ் கிட்டார் வாசிப்பு என்பது அவர் அவர் கற்பனையைப் பொறுத்தது. பாடலின் சுரவரிசையில் இருந்து பிறழாது அதே சமயத்தில் பல விதங்களாக வாசிக்கலாம். பெரும்பாலான இசையமைப்பாளர்கள் கிட்டார் வாசிப்பவர்களிடம் அவர்கள் கற்பனைக்கு பேஸ் வாசிக்க விட்டுவிடுவார்கள். இளையராஜா பாடலின் எல்லா அம்சங்களையும் தானே உருவாக்க வேண்டும் என்று விரும்புவார். தாள வாத்திய தீர்மானங்கள், பாடல் சங்கதிகள் மற்றும் பேஸ் கிட்டார் எல்லாம் அவர் கற்பனைப்படி தான் இருக்கும். எல்லா வகை வாத்தியங்களிலும் அவருக்குள்ள ஆளுமை காரணமாக இது அவருக்கு சாத்தியமாகிறது.

இந்தப்பாடலில், என்ன புதுமை செய்திருக்கிறார் என்று கவனிப்போம். பாடலின் முதல் இரண்டு வரிகள்...

மேகம் கொட்டட்டும்.. ஆட்டம் உண்டு..

மின்னல் வெட்டட்டும்... பாட்டும் உண்டு..

இந்த இரண்டு வரிகளுக்கும் ஒரே மெட்டுத்தான். அதாவது ஒரே சுர வரிசைகள். ஆனால் லீட் (lead) மற்றும் பேஸ் (bass) கிட்டார் எப்படி வாசிக்கப் பட்டுள்ளது என்று கவனியுங்கள். முதல் வரிக்கு ஒரு சுர வரிசை கொடுக்கிறார். அடுத்த வரிக்கும் அதையே நீங்கள் எதிர்பார்த்தால் அது வராது. முதல் வரியைப் போன்ற அதே மெட்டுக்கு இரண்டாவது வரியில் வேறு சுரக்கோர்வைகளை கிட்டாரில் வாசிக்க வைக்கிறார். அந்த ஒரு ஆனந்த அதிர்ச்சி சுவை மிகுந்தது. பாடல் முழுவதுமே கிட்டார் பிரமாதமாக உபயோகிக்கப் பட்டுள்ளது. பாடலில் கவனியுங்கள்.

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இரு பறவைகள்

படம்: நிறம் மாறாத பூக்கள்

பாடியவர்கள்: ஜென்சி மற்றும் குழுவினர்

நிறம் மாறாத பூக்களில் எல்லாப் பாடல்களுமே இனிமை. "ஆயிரம் மலர்களே" அவற்றுள் எல்லாம் மிகப் பிரபலம் ஆனது. இரு பறவைகளும் அதற்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல.

இசைச் சேர்ப்பில் உள்ள ஒரு சில விடயங்களை அலச இப்பாடல் உதவும். பாடலுக்கு ஜீவன் சேர்ப்பது அதிலுள்ள பின்புல இசை. சில பாடல்கள் மெட்டமைப்பில் சிறந்ததாக இருக்கும். ஆனாலும் அதில் ஏதோ ஒன்று குறைவது போலிருக்கும். அதற்குப் பெரும்பாலும் பின்புல சுதி மீட்டல் சரி இல்லாததே காரணமாக இருக்கும். கர்நாடக இசையில் தம்புரா வாத்தியம், சுதிப்பெட்டி போன்றவை பின்புலமாக விளங்குகின்றன. திரை இசையில் பேஸ் கிட்டார் அல்லது கீபோட்டில் பேஸ் இசை பயன்படுகிறது. குரலுடன் சேர்ந்து அதன் சுதியில் பேஸ் இசைக்கப்படும் அதன் சுவையே அலாதி.

இப்பாடல் ஒரு ஆரம்ப இசையுடன் தொடங்குகிறது. அதில் வெறும் ரிதம் கிட்டார் கோரஸ் இசையுடன் ஒலிக்கிறது. இசையின் வெளிப்பாடு சாதாரணமாக உள்ளது. பேஸ் கிட்டார் இசைக்கப்படவில்லை. இப்போது 00:19 விநாடியில் வயலின் இசை தொடங்கும்போது பேஸ் கிட்டாரை உபயோகிக்கத் தொடங்குகிறார் ராஜா. அப்போது இசையில் ஏற்படும் மாற்றத்தைக் கவனியுங்கள். இன்னொரு பரிணாமத்துக்கு அது ரசிகர்களை செல்கிறது. சேர்த்துக் கேட்கும்போது அட பாடல் நல்லா இருக்கும் போல இருக்கே என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

அதேபோல இரண்டாம் இடையீட்டு இசை. 02:57 வினாடிக்கணக்கில் இரூந்து பேஸ் இசை இல்லை. திடீரென்று 03:06 வினாடியிலிருந்து அதை உபயோகிக்கிறார். இசையின் இனிமை கூடுகிறது. அதைத் தொடர்ந்து வரும் சந்தூர் மற்றும் வயலின் இசைகளின் குழைவு தெவிட்டாத விருந்தல்லவா..!

இப்போது பாடலைக் கேளுங்கள்.

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஊதக் காத்து

படம்: கிராமத்து அத்தியாயம்

பாடியவர்கள்: ஜெயச்சந்திரன் மற்றும், எஸ். ஜானகி அவர்கள்

ஒரு மாறுதலுக்கு கிராமத்து இசை மறுபடியும். உச்சஸ்தாயியில் ஜெயச்சந்திரன் பாடும்போது அழகோ அழகு. இதை உணர்ந்து தானோ என்னவோ ராஜா அவரை அப்படிப்பட்ட பல பாடல்களில் பாட வைத்திருக்கிறார். காணொளியைப் பாராது பாடலை மட்டும் கேட்டால் உங்கள் உடல் நலத்துக்கு தீங்கு வராது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஓ வசந்த ராஜா

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி

வரிகள்: வைரமுத்து

இசை:இசைஞானி இளையராஜா

ஓ வசந்த ராஜ தேன் சுமந்த ரோஜா

என் தேகம் உன் தேசம் என்னாளும் சந்தோஷம் - என்

தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

(ஓ வசந்த)

வெண் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்

மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு

விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ கண்ணே (2)

சூடிய பூச்சரம் வானவில்தானோ?

(ஓ வசந்த)

ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்

அலைபாயுதே தாகம் அனலாகுதே மோகம்

என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு (2)

மன்மதக் கோயிலில் பாலபிஷேகம்

(ஓ வசந்த)

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ராஜ ராஜ சோழன் நான்

படம்: இரட்டை வால் குருவி

இசை: இசைஞானி இளையராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தென்றல் வரும்

படம்: பாரு பாரு பட்டணம் பாரு

பாடியவர்கள்: திரு. S.P. பாலசுப்ரமணியம் மற்றும் S. ஜானகி அவர்கள்

இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இரண்டு பாடல்களில் ஒன்று இது. மற்றையது, யார் தூரிகை என்ற பாடல்.

தென்றல் வரும் என்ற இந்தப்பாடலில் அதன் தாளக்கட்டு எனக்குப் பிடித்தது. பாடல் முழுவதும் கூடவே வரும் அந்த மேளச்சத்தம் மிக அருமை. பாடல் மேற்கத்தைய இசையான பியானோவுடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்வது நமது வீணை இசை. பாடல் முழுவதுமே பியானோ மற்றும் வீணையின் இனிய ஆரோக்கியமான போட்டி. இரண்டு வேவ்வேறு கலாச்சாரங்களின் கூறுகளை எந்தச் சிக்கலும் இல்லாமல் கலந்தது தந்தது நமது இசைஞானியின் கைதேர்ந்த கலைவண்ணமன்றி வேறென்ன! இனி நம் பாடலிக் காண்போம்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

என் தாயென்னும் கோயிலில் என்ற பாட்டை youtube ல் தரமுடியுமா டங்குவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி,

இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்தால் செய்கிறேன்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டங்குவார்!என்னைப்போல் நீங்களும் இளையராஜாவின் இரசிகன் என்றமுறையில் கேட்கின்றேன்.

"மீன்குடி தேரில் மன்மதராஜன் ஊர்வம் போகின்றான்"(ள் )என்ற பாடலை ஒலி வடிவில் தர முடியுமா?

இப்பாடலை ஜான்சியும் ஜேசுதாசும் தனித்தனியாக பாடியுள்ளனர்.

திரைப்படத்தை ஞாபகத்திற்கு கொண்டு வர முடிய வில்லை :rolleyes:

கரும்புவில்?????????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார்!என்னைப்போல் நீங்களும் இளையராஜாவின் இரசிகன் என்றமுறையில் கேட்கின்றேன்.

"மீன்குடி தேரில் மன்மதராஜன் ஊர்வம் போகின்றான்"(ள் )என்ற பாடலை ஒலி வடிவில் தர முடியுமா?

இப்பாடலை ஜான்சியும் ஜேசுதாசும் தனித்தனியாக பாடியுள்ளனர்.

திரைப்படத்தை ஞாபகத்திற்கு கொண்டு வர முடிய வில்லை :rolleyes:

கரும்புவில்?????????????

கு.சா. உங்கள் பாடலை நடாவின் பக்கத்தில் தருகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெத்தப்பெரிய உபகாரம் டங்குவார் :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மௌனமான நேரம்

படம்: சலங்கை ஒலி

பாடியவர்கள்: S.P. பாலாசுப்ரமணியம், S.ஜானகி

கதாநாயகனுக்கும், நாயகிக்கும் இடையே இழைந்தோடும் அந்தக் காதலை மெல்லிசை மூலம் வெளிப்படுத்துகிறார் ராஜா. பாடலில் உள்ள ஒவ்வொரு சங்கதிகளும் சொல்லும் ஒவ்வொரு சங்கதியும் அலாதியானது. உதாரணமாக இரண்டாவது சரணத்தில் வரும்,

பாதை தேடியே பாதம் போகுமோ..

என்ற வரியைக் கவனியுங்கள். நாயகியின் விரகத்தைப் பாடும்போது தேடியே மற்றும் போகுமோ ஆகிய சொற்களில் ராஜா உள்நுளைக்கும் சங்கதிகள் மிக நுட்பமானவை அல்லவா? திரு. பாலா அவர்களின் குரலில் சங்கதிகளின் மூலம் அந்த ஏக்கத்தை வெளிப்படுத்தும் அந்த மெட்டமைப்பு நிகரற்றதுதானே. இனி, பாடலைக் கேட்போம்.

நல்ல பாடல்கள் டங்குவார்.

மெளனமான நேரம் - என்ன அருமையான பாடல். காதலை அழகாகப் படம் பிடிக்கிறது. காட்சி ஞாபகமா? கமலின் நண்பன் சரத்பாபுவின் முதலிரவுக்கு ஒழுங்குகள் செய்துவிட்டு பெண்ணையும் மாப்பிள்ளையும் சேர்த்துவிட்டு கமலும் ஜெயப்ரதாவும் வரும் போது இந்தப்பாடல் வரும். கமலும் ஜெயப்ரதாவும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாத ஆனால் புரிந்து கொண்டுள்ள காதல்.

Edited by Eas

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்கள் டங்குவார்.

மெளனமான நேரம் - என்ன அருமையான பாடல். காதலை அழகாகப் படம் பிடிக்கிறது. காட்சி ஞாபகமா? கமலின் நண்பன் சரத்பாபுவின் முதலிரவுக்கு ஒழுங்குகள் செய்துவிட்டு பெண்ணையும் மாப்பிள்ளையும் சேர்த்துவிட்டு கமலும் ஜெயப்ரதாவும் வரும் போது இந்தப்பாடல் வரும். கமலும் ஜெயப்ரதாவும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாத ஆனால் புரிந்து கொண்டுள்ள காதல்.

ஈஸ்,

காட்சி சரியாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் இருவரிடையே சொல்லிக் கொள்ளாத ஆனால் புரிந்து கொள்ளப்பட்ட காதல் என்பது நினைவில் உள்ளது. பாடலுக்கேற்ற காட்சி அமைப்பு செய்த இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும். அப்போது வந்த படங்களில் எனக்குப் பிடித்த படம் இந்தச் சலங்கை ஒலி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தீர்த்தக் கரைதனிலே

படம்: தைப்பொங்கல் (1980)

பாடியவர்கள்: K.J. யேசுதாஸ், ஜென்சி

மெதுவான சோகம் இழையோடும் இந்தப் பாடல் கேட்கக் கேட்க இனிமை. படத்தை நான் பார்க்கவில்லை ஆதலால் என்ன மாதிரியான கட்டத்தில் இந்தப் பாடல் வருகிறது என்று தெரியவில்லை. சில படங்களைப் பாராதிருத்தல் பாடலை இரசிக்க மேலும் உதவும். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இசை : இளையராஜா

பாடியவர்கள் : எஸ்.பி.பி & ஜானகி

படம்: காக்கி சட்டை

கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

கன்னங்கள் புது ரோசாப்பூ

உன் கண்கள் இரு ஊதாப்பூ

இது பூவில் பூத்த பூவையோ

ஆ: அந்தப்புறம் இந்தப்புறம் விழி மையிட்ட

அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு

பெ: ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே

அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே

ஆ: தோளிலும் என் மார்பிலும்

கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது

பெ: உன்னைக் கொடு என்னைத் தருவேன்

ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்

சொல்லித் தருவேன் விழி மூடாமல்

ஆ: கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்

கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்

பெ: வானகம் இவ்வையகம் யாவுமே என் கைவசம் நீதான் தந்தாய்....

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஏ.. தென்றலே

படம்: நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980)

பாடியவர்: P. சுசீலா

நெஞ்சத்தைக் கிள்ளாதேயில் இடம் பெற்ற இந்தப் பாடல் சுசீலா அவர்களின் தனிக்குரலில் இடம்பெற்றது. பாடலுக்கு பல்லவியும் சரணமும் இனிதே அமைந்திருக்கிறது. சரணத்தின் முடிவில் உச்சஸ்தாயியை சுசீலா அவர்கள் தொடும் அழகே அழகு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: என் இனிய பொன் நிலாவே

படம்: மூடுபனி

பாடியவர்: K.J. ஜேசுதாஸ்

கிட்டார் பிரியர்களுக்கு வேலை வைக்கும் பாட்டு. கிட்டத்தட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு chord அமைக்கப்பட்டிருக்கிறது பல்லவியில். இரண்டாவது இடையீட்டு இசையில் அமர்க்களமான கிட்டார் இசை 2:40 நேரக்கணக்கில் ஒலிக்க ஆரம்பிக்கிறது. இனி பாடலைக் கேளுங்கள்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காதே கண்ணே

நீ இல்லையே இனி நான் இல்லையே

உயிர் நீயே..

படம்: கேளடிகண்மணி

பாடியவர்கள்: கே.ஜே ,உமா ரமணன்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

தென்மதுரை வைகைநதி

தினம் பாடும் தமிழ் பாட்டு

தேய்கின்றதே பொன்மாலை நிலா

தேயாதது நம் ஆசை நிலா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

இசை : இளையராஜா பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பி & சுசீலா...

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பூங்காற்று

படம்: மூன்றாம்பிறை

பாடியவர்: K.J. யேசுதாஸ்

இனிமையான பேஸ் அமைப்புடன் வெளிவந்த வித்தியாசமான பாடல். மூன்றாம்பிறையின் இந்தி வடிவத்துக்கு பெரும்பாலும் இதே இசை அமைப்புடன் வேறு ஒரு மெட்டு உபயோகிக்கப்பட்டது. பிறகு அந்த மெட்டு தமிழில் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் "என் வாழ்விலே" என்ற பாடலுக்கு உபயோகிக்கப்பட்டது.

நன்றி.

இந்தி மூன்றாம்பிறை (சத்மா) பாடல் Ae zindagi gale laga le..

முதலாவது இடையீட்டு இசையின் தொடக்கம் தமிழிலும் இந்தியிலும் ஒரே மாதிரி இருப்பதைக் கவனியுங்கள். அத்துடன் வயலினுடன் சேர்ந்த சரணம் இனிமையானதல்லவா..!

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: என் வாழ்விலே

படம்: தம்பிக்கு எந்த ஊரு

பாடியவர்: S.P. பாலசுப்ரமணியம்

மேலே குறிப்பிட்ட இந்தி மெட்டை மறுபடியும் இளையராஜா இங்கே உபயோகிக்கிறார்..!

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கொஞ்சி கொஞ்சி அலைகளாட

இசை: இளையராஜா

படம்: வீரா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது

அள்ளி வந்த வண்ணங்களை எந்தன்நெஞ்சில் நீ தூவு!

படம்: ரமணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.