Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

16 MAY, 2024 | 01:17 AM
image
 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல சந்திப்புகளில் ஈடுபட்டார்.

தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் அமெரிக்க தூதர் ஜீலி சங் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மானிப்பாயில் உள்ள அமெரிக்க மிஷனரியின் கிறீன் மெமோரியல் வைத்தியசாலைக்கு தூதுவர் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார்.

வடக்கு மாகாண கடற்படை தளபதியை காங்கேசன்துறை தலைமையகத்தில் அமெரிக்க தூதுவர் சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன் அண்மையில் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளையும் அமெரிக்க தூதுவர் பார்வையிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

IMG-20240515-WA0008.jpg

IMG-20240515-WA0007.jpg

IMG-20240515-WA0004.jpg

IMG-20240515-WA0002.jpg

IMG-20240515-WA0001.jpg

IMG-20240515-WA0000.jpg

https://www.virakesari.lk/article/183648

 

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் இல்லாமல் சும்மா வரமாட்டினமே ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

காரணம் இல்லாமல் சும்மா வரமாட்டினமே ?

வேற என்ன ரணிலுக்கு வாக்கு எந்தளவில் இருக்கு என்று நாடி பிடித்து பார்க்கத் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை வலியுறுத்தும் சிவில் அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளை நேற்று யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் பரவலடைந்து – வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நிகழ்ந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கான வழிகளை ஆராய்வதற்காக சிவில் சமூகம், இளைஞர்கள், உள்;ர் அரச அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் பலதரப்பட்ட கண்ணோட்டங்களை கேட்பதற்காக இந்தவாரம் நான் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளேன் என்று ஜூலி சங் கூறியிருப்பதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

Screenshot_20240516-062243.png

https://www.ilakku.org/தமிழ்-பொதுவேட்பாளரை-வலிய/?amp

Just now, ஈழப்பிரியன் said:

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை வலியுறுத்தும் சிவில் அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளை நேற்று யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்துப் பேசியுள்ளார்.

 

1 hour ago, பெருமாள் said:

காரணம் இல்லாமல் சும்மா வரமாட்டினமே ?

 

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த பொது தமிழ் ஜனாதிபதி வேற்பாளர் ?

இப்போதைக்கு எரிக் கும் வந்து போயிட்டுது ஜப்பானும் வந்து போயிட்டுது அமெரிக்கனும் வந்து போயிட்டுது கடைசியில் தமிழ் தேசியத்துக்கு எதிரான கருத்துரை பரப்புரை கொண்டவர்களும் போறார்கள் வருகிறார்கள் இன்னும் போய் கொண்டும் இருக்கிறார்கள் இந்த செய்தி வந்ததில் இருந்து பலருக்கு இரவு துக்கம் போயிட்டுது .

நமக்கு ஏதோ ஒரு தீர்வையாவது இப்படியாகினும் கிடைக்குகட்டும் அங்குள்ள தமிழ் மக்களுக்கு என்ற எண்ணம் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

வேற என்ன ரணிலுக்கு வாக்கு எந்தளவில் இருக்கு என்று நாடி பிடித்து பார்க்கத் தான்.

ஜூலி ஏற்கனவே விக்கி ஐயாவை டீலில் எடுத்து விட்டார்.

இப்போ வந்தது சிறிதரனிடம் டீல் போட.

அநேகமாக டீல் முடிந்தால்….

பொது வேட்பாளரை இறக்கிறம்…தீர்வை எடுக்கிறம் என விக்கி+சிறி டபுள் ஆக்ட் களத்தில் இறங்கி மறைமுகமாக ரணிலுக்கு சைக்கிள் ஓடக்கூடும்.

யாழிலும் சிறிதரன் அடிப்பொடிகள் அடிச்சு தூள் பறக்க வைப்பார்கள்.

சிறியிடம் சங் பேசிய டீல் என்ன? படியுமா?

சிறி இந்தியாவின் சைகைக்கு காத்திருக்கிறார்.

முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

ஆனால் டீல் என்றதும் ஏதோ தமிழருக்கு தீர்வு எண்டு அங்கலாய்க்கப்படாது.

 சிறிதரன், சம்பந்தர், சுமந்திரன் போன்றவர்கள் தலைவர்களாக இருக்கும் வரை அது சாத்தியமில்லை. 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் - அமெரிக்க தூதுவர்

Published By: DIGITAL DESK 3

17 MAY, 2024 | 04:50 PM
image
 

வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (17) சந்திப்பு நடைபெற்றது. 

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கால்நடை உற்பத்திகளை மேம்படுத்த வேண்டியுள்ளதாகவும், இயந்திர தொழில்நுட்ப பயன்பாட்டை மக்கள் மயப்படுத்த வேண்டும் எனவும் இதன்போது  ஆளுநர் தெரிவித்தார்.

காணி விடுவிப்பு, விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் மக்கள் பிரவேசிப்பதற்கான வசதிகள் தொடர்பிலும் அமெரிக்க தூதுவர், ஆளுநரிடம் கேட்டறிந்துக்கொண்டார். 

ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய, காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பிரவேசிப்பதற்கான வீதிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றி திறக்கப்படுவதாகவும் ஆளுநர் கூறினார். 

மேலும், வடக்கில் காணப்படும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்ககூடிய கண்காட்சி செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம்,  ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

வடக்கிற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், மாணவர்களுக்கு இலவச ஆங்கில மொழி வகுப்புக்களை ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்கான ஒத்துழைப்புகளை  ஆளுநரிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். 

27 வருடங்களின் பின்னர் அமெரிக்க அமைதி காக்கும் கழகத்தின் ஊடாக இலங்கையில் இலவச ஆங்கில மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் கூறினார்.

IMG-20240517-WA0028.jpg

IMG-20240517-WA0027.jpg

https://www.virakesari.lk/article/183799

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பனை அபிவிருத்திச் சபை அலுவலகத்தை பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்!

17 MAY, 2024 | 09:55 PM
image

பனை அபிவிருத்திச் சபை அலுவலகத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் இன்று வெள்ளிக்கிழமை (17) பார்வையிட்டார். 

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள  பனை அபிவிருத்திச் சபையின் தலைமை காரியாலயத்தை இன்று காலை 8.15 மணியளவில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பார்வையிட்டார் . 

இதன்போது  பனை அபிவிருத்திச் சபையினுடைய தலைவர் கிருஷ்ணராஜா பத்திராஜா,  உத்தியோகத்தர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் தனபால உட்பட பலர் கலந்து கொண்டனர் . 

இதன்போது பனை அபிவிருத்திச் சபையின் சபையினுடைய உற்பத்திகள் தொடர்பான கருத்தரங்கு ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது . 

IMG-20240517-WA0166.jpg

IMG-20240517-WA0172.jpg

IMG-20240517-WA0170.jpg

https://www.virakesari.lk/article/183802

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பல்வேறு தரப்பினரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

Published By: DIGITAL DESK 3

18 MAY, 2024 | 01:02 PM
image
 

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

அதனொரு அங்கமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் நயினாதீவு நாகவிகாரைக்கு 16 ஆம் திகதி சென்ற  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், நெடுந்தீவில் கடற்றொழில் அமைப்புக்களையும் சந்தித்து பேசினார்.

01__1_.jpg

01__2_.jpg

01__4_.jpg

01__3_.jpg

01__6_.jpg

01__5_.jpg

https://www.virakesari.lk/article/183860

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

தமிழர் பகுதிகளுக்கு விஜயம் செய்யும் ராஜதந்திரிகள்

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்தினால் நாங்கள் தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடியாமல் போய்விடும் என்று

மறைமுகமாக மிரட்டுகிறார்களாமே?

இதுவரை தமிழர்களின் உரிமைக்காக தீர்வுக்காக சர்வதேசம் செய்தது தான் என்ன?

இதைத் தட்டிக் கேட்க தமிழர் தரப்பில் யாருமே இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழர் பகுதிகளுக்கு விஜயம் செய்யும் ராஜதந்திரிகள்

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்தினால் நாங்கள் தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடியாமல் போய்விடும் என்று

மறைமுகமாக மிரட்டுகிறார்களாமே?

இதுவரை தமிழர்களின் உரிமைக்காக தீர்வுக்காக சர்வதேசம் செய்தது தான் என்ன?

இதைத் தட்டிக் கேட்க தமிழர் தரப்பில் யாருமே இல்லையா?

சிறிதரனை ஜூலி அண்மையில் சந்தித்தார்.

சிறிதரன் தட்டி கேட்ட கேளுவையில் மேசை உடைந்து விட்டதாம்🤣 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சிறிதரனை ஜூலி அண்மையில் சந்தித்தார்.

சிறிதரன் தட்டி கேட்ட கேளுவையில் மேசை உடைந்து விட்டதாம்🤣 

இருக்கும் இருக்கும்.வன்னி மண்ணல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

இருக்கும் இருக்கும்.வன்னி மண்ணல்லவா?

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகாது.

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.