Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழரும் பெரியாரும் இராமனும் கம்பன் கோட்டமும்-2

Featured Replies

நான் துவக்கிய தலைப்பு தலைப்பிற்குச் சம்பந்தம் அற்ற விடயங்களால் திசை திருப்பட்டு, இப்போது பூட்டப்படுள்ளது. நிர்வாகத்திற்க்கு ஒரு வேண்டு கோள் இவ்வாறு வேண்டுமென்றே திசை திருப்பித் தலைப்பைப் பூட்ட வைப்பது யாழ்க் களத்தில் எந்தவிதமானா ஆரோக்கியமான விவாத்தையும் நடத்தமுடியாமால் செய்துகொண்டு இருக்கிறது.இதனைக் குறிப்பிட்ட சில பேர் வேண்டுமென்றே செய்துகொண்டிருகிறார்கள். நிர்வாகாம் விதிமுறைகளுக்கு அமைவாக மட்டுறுத்தல்களைச் செய்யாது விடின் இங்கே மினக்கெட்டு கட்டுரைகளையோ விவாதங்களையோ நடாத்துவதில் ஒரு பிரயோசனமும் இல்லை.இவர்கள் எல்லாவற்றையுமே நிர்வாகத்திற்கு நகர்த்தும் வண்ணமே செயற்படுவார்கள்.முன்னரும் இப்படி ஒரு வழக்கம் சிலரால் இங்கே கைக் கொள்ளப்பட்டு வந்திருந்தது.இப்போது மீண்டும் துவங்கி இருக்கிறது.

இணைக்கப்பட்ட கட்டுரைகளுக்கு சம்பந்தம் அற்று விடுதலைப் புலிகள் பற்றி கருத்து திசை திருப்பப் பட்டுள்ளது.

புலிகளின் பேச்சாளர்களாக இங்கே எவரும் இல்லை. தேசியத் தலைவர் என்ன சொன்னார் இளங்குமரன் என்ன சொன்னார் என்பவை தமிழில் தான் இருக்கின்றன,எல்லோருக்கும் அவர்கள் என்ன சொன்னார்கள் என்று விளங்கும்.அதற்கு வேறு எவரும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நிற்க நெடுக்காலபோவான் இணைத்த இணைப்பில் இப்படிச் சொல்லப்படுள்ளது,

//கம்பராமாயணம் பற்றி... Dr. C.R. Krishnamurti,

Professor Emeritus, University of British Columbia, Vancouver, B.C. Canada பார்வைகள்//

//introduced appropriate changes in accordance with the tradition and culture of the Thamizh people and presented his own ideologies //

னெடுக்காலபோவான் மிகவும் சிலாகித்துக் கூறிய மேற் கொண்ட வரிகளைத் தான் பேராசிரியர் சிவத்தம்பியும் அவர் தோழரான கைலாசபதியும் நான்முன்னர் இணைத்த கட்டுரைகளில் சொல்கிறார்கள்.

மேற் காட்டிய ஆங்கிலப்பந்தியில் கம்பன் தனது காலாச்சார மரபுகளுக்கு அமைவாக சொந்த மாற்றங்களை உட்புகித்தினார் என்று கூறப்படுகிறது.இந்த உட் புகுத்துகையின் அரசியலைப் பற்றித் தான் இந்தத் தலைப்பில் கூறப்பட்டது.ஏன் எதற்காக இப்படியான ஒரு கதை எழுதப்பட்டது எபதை சமூகவியற் கன்ணோட்டத்தில் சொல்லப்படுகிறது.இங்கே இலக்கியத்தை வைத்து அக் காலத்தில் நிலவிய இனக்குழுக்களின் உறவு நிலையும் அரசியலும் முரண்பாடுகளும் சொல்லப்படுகிறது.இதனைத் தான் நான் இணைத்த கட்டுரையில் சிவத்தம்பி வரலாற்று இலக்கியவியல் என்று சொல்கிறார்.

மேற் கொண்ட ஒரு கருத்துத் தான் இந்தத் தலைப்போடு இயைந்த ஒரு மாற்றுக்கருத்தாக இருப்பதால் இதற்கு மட்டுமே பதில் அழித்திருக்கிறேன்.

தலைப்புடன் சம்பந்தப் பட்டு ஆரோக்கியபூர்வமான மாற்றுக் கருத்துக்களை எவராவது எழுதினால் அவற்றிற்கு மட்டுமே பதில் அழிக்கப்படும்.மற்றைய திசை திருப்பல்களை நிர்வாகத்தினர் கவனித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

ஈழத்தமிழரும் பெரியாரும் இராமனும் கம்பன் கோட்டமும்

  • கருத்துக்கள உறவுகள்

.நிர்வாகம் அதை அனுமதிப்பதில் எவ்வித பிரச்சனையுமில்லை. ஆனால் தேசியத் தலைவரையும், புலிகளையும் இழுத்துக் கதைப்பதோ, அல்லது தலைவருக்கும், யாருக்கும் முடிச்சுப் போட்டு, மற்றவர் கொள்கையைத் தான் தலைவர் பின்பற்றுகின்றார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் கருத்துக்களைத் தடை செய்ய வேண்டும்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் துவக்கிய தலைப்பு தலைப்பிற்குச் சம்பந்தம் அற்ற விடயங்களால் திசை திருப்பட்டு, இப்போது பூட்டப்படுள்ளது. நிர்வாகத்திற்க்கு ஒரு வேண்டு கோள் இவ்வாறு வேண்டுமென்றே திசை திருப்பித் தலைப்பைப் பூட்ட வைப்பது யாழ்க் களத்தில் எந்தவிதமானா ஆரோக்கியமான விவாத்தையும் நடத்தமுடியாமால் செய்துகொண்டு இருக்கிறது.இதனைக் குறிப்பிட்ட சில பேர் வேண்டுமென்றே செய்துகொண்டிருகிறார்கள். நிர்வாகாம் விதிமுறைகளுக்கு அமைவாக மட்டுறுத்தல்களைச் செய்யாது விடின் இங்கே மினக்கெட்டு கட்டுரைகளையோ விவாதங்களையோ நடாத்துவதில் ஒரு பிரயோசனமும் இல்லை.இவர்கள் எல்லாவற்றையுமே நிர்வாகத்திற்கு நகர்த்தும் வண்ணமே செயற்படுவார்கள்.முன்னரும் இப்படி ஒரு வழக்கம் சிலரால் இங்கே கைக் கொள்ளப்பட்டு வந்திருந்தது.இப்போது மீண்டும் துவங்கி இருக்கிறது.

இணைக்கப்பட்ட கட்டுரைகளுக்கு சம்பந்தம் அற்று விடுதலைப் புலிகள் பற்றி கருத்து திசை திருப்பப் பட்டுள்ளது.

புலிகளின் பேச்சாளர்களாக இங்கே எவரும் இல்லை. தேசியத் தலைவர் என்ன சொன்னார் இளங்குமரன் என்ன சொன்னார் என்பவை தமிழில் தான் இருக்கின்றன,எல்லோருக்கும் அவர்கள் என்ன சொன்னார்கள் என்று விளங்கும்.அதற்கு வேறு எவரும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நிற்க நெடுக்காலபோவான் இணைத்த இணைப்பில் இப்படிச் சொல்லப்படுள்ளது,

//கம்பராமாயணம் பற்றி... Dr. C.R. Krishnamurti,

Professor Emeritus, University of British Columbia, Vancouver, B.C. Canada பார்வைகள்//

//introduced appropriate changes in accordance with the tradition and culture of the Thamizh people and presented his own ideologies //

னெடுக்காலபோவான் மிகவும் சிலாகித்துக் கூறிய மேற் கொண்ட வரிகளைத் தான் பேராசிரியர் சிவத்தம்பியும் அவர் தோழரான கைலாசபதியும் நான்முன்னர் இணைத்த கட்டுரைகளில் சொல்கிறார்கள்.

மேற் காட்டிய ஆங்கிலப்பந்தியில் கம்பன் தனது காலாச்சார மரபுகளுக்கு அமைவாக சொந்த மாற்றங்களை உட்புகித்தினார் என்று கூறப்படுகிறது.இந்த உட் புகுத்துகையின் அரசியலைப் பற்றித் தான் இந்தத் தலைப்பில் கூறப்பட்டது.ஏன் எதற்காக இப்படியான ஒரு கதை எழுதப்பட்டது எபதை சமூகவியற் கன்ணோட்டத்தில் சொல்லப்படுகிறது.இங்கே இலக்கியத்தை வைத்து அக் காலத்தில் நிலவிய இனக்குழுக்களின் உறவு நிலையும் அரசியலும் முரண்பாடுகளும் சொல்லப்படுகிறது.இதனைத் தான் நான் இணைத்த கட்டுரையில் சிவத்தம்பி வரலாற்று இலக்கியவியல் என்று சொல்கிறார்.

மேற் கொண்ட ஒரு கருத்துத் தான் இந்தத் தலைப்போடு இயைந்த ஒரு மாற்றுக்கருத்தாக இருப்பதால் இதற்கு மட்டுமே பதில் அழித்திருக்கிறேன்.

தலைப்புடன் சம்பந்தப் பட்டு ஆரோக்கியபூர்வமான மாற்றுக் கருத்துக்களை எவராவது எழுதினால் அவற்றிற்கு மட்டுமே பதில் அழிக்கப்படும்.மற்றைய திசை திருப்பல்களை நிர்வாகத்தினர் கவனித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

ஈழத்தமிழரும் பெரியாரும் இராமனும் கம்பன் கோட்டமும்

introduced appropriate changes in accordance with the tradition and culture of the Thamizh people and presented his own ideologies

கம்பனையும் இராமாயணத்தையும் ஆரிய - திராவிட.. சாதிய.. அரசியல் சாராத ஒரு நிலையில் வைத்து நோக்கின்.. அவனின் own ideologies என்பது சமூகம் சார்ந்ததாக இலக்கியப் போக்கோடு அமைந்திருக்கும் என்ற ஆதங்கம் கைலாசபதி ஐயா தொடங்கி.. நான் இணைந்த கட்டுரையாளர்கள் வரை இருக்கிறது.

கம்பனே நேரில் வந்து பேட்டி அளித்தது போல் அவனின் "own ideologies" என்பது ஆரிய - திராவிடம்.. சாதியம்.. தென்னிந்திய - வட இந்திய எதிர்ப்பு அரசியல் சார்ந்து எழுந்தது.. இந்துத்தவ வாதம் சார்ந்து எழுந்தது, கம்பராமாயாணமே.. ஒரு அரசியல் வரலாற்றின் பிரதிபலிப்பு என்பதெல்லாம்.. கம்பனின் "own ideologies" என்று.. வேறு சிலர் தங்கள் "own ideologies" யை புகுத்தி திரித்துக் கொண்டது. கம்பனின் இராமாயணம் பற்றிய ஒப்பிலக்கியத் திறனாய்வு என்பதே சாரா நிலை நின்று...முற்றுப் பெறவில்லை என்ற ஆதங்கம் பேரறிஞர்கள் மத்தியில் கூட இருக்கிறது. அது ஆரிய - திராவிட.. மொழியியல்.. இலக்கிய மேலாதிக்க நோக்கியல்.. சாதியியல்.. மற்றும் மத சாயங்களால்..திசை மாறிப் போயுள்ளது என்பதை நான் மேலே கைலாசபதி ஐயா அவர்களின் கருத்தை உதாரணமாகக் காட்டி உறுதிபட வழங்கியுள்ளேன்.

இன்னோர் தலைப்பில்.. இராமாயண இலக்கியம்.. இந்தோனிசியவில் மதம் சாராத..ஒரு சமூக கலை கலாசார வடிவமாக பரிணமித்துள்ளதை ஆதாரங்களோடு காட்டியுள்ணேன்.

கம்பனின் "own ideologies" இதுதான் என்று கம்பன் வந்து தன் கருத்தை முன் வைக்கட்டும் ஏற்றுக் கொள்ளலாம். அது சாத்தியமில்லாத தன்மையில்.. அதனைப் பயன்படுத்திக் கொண்டு... கம்பனின் "own ideologies" என்று விமர்சகர்கள் தங்கள் தங்கள் "own ideologies" ஐ கம்பனது என்று காட்டுவது.. இராமாயண இலக்கியத்தின் இலக்கியத்தன்மையை சீரழித்து.. அதை பிராந்திய உள்ளூர் அரசியல்.. மற்றும் மதத் தேவைகளுக்காக சிலர் திட்டமிட்டுப் பாவிப்பது தெளிவுறுத்தப்பட வேண்டும் மக்கள் மத்தியில். இதன் பாதிப்பின் பின்னணியிலேயே.. பல போட்டி விமர்சனங்கள் எழுந்தன.. இராவணை திராவிடனாகக் காட்டி.. இராவண காவியம் என்பது கூட எழுந்தது என்று கைலாசபதி ஐயா தெளிவுற விளக்கிச் சென்றுள்ளார். இலக்கிய கர்த்தாவின் "own ideologies" எங்கையோ இலக்கியம் நோக்கி.. சமூகம் நோக்கி நிலை கொண்டிருக்க.. அவரின் "own ideologies" இனங்காட்டுறோம் என்போரின் "own ideologies" அதற்கு மாறாக உள்ளது என்பதுதான் இங்கு எம்மால் இனங்காட்டப்படுகிறது. பேரறிஞர்களின் ஆதாரங்களுடன். இதில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். குழப்பகார சக்திகளின்.. மறைமுக உக்திகளோடு மக்களை அணுகுபவர்களின் உள்நோக்கங்களை அறிந்து செயற்பட வேண்டும். :unsure:

Edited by nedukkalapoovan

*******

Edited by harikalan

இங்கே தலைப்பைப் பாருங்கள்!

"ஈழத் தமிழரும் பெரியாரும் இராமனும் கம்பன் கோட்டமும்" என்று இருக்கிறது

இந்தத் தலைப்பின் கீழ் விவாதிக்கின்ற போது, ஈழத் தமிழருக்குள் பெரியாரின் தாக்கம் இருக்கின்றதா என்பது பற்றியும் விவாதிக்கப்படும்.

அதே போன்று விடுதலைப் புலிகளிடம் பெரியாரிடம் இருந்த சிந்தனைகள் சில இருப்பதும் சுட்டிக்காட்டப்படும்.

இங்கே நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரிடம் இருந்த சிந்தனைகள் ஏற்கனவே வேறு பலரிடம் இருந்தது. பலர் இந்தச் சிந்தனைகளை பல கால கட்டங்களில் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

ஆகவே விடுதலைப் புலிகளிடம் இருந்து வருகின்ற மனுதர்மம், புராணங்கள், பார்ப்பனியம் மீதான கண்டனங்கள் பெரியாரிடம் இருந்த பெற்றவையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மனுதர்மம், புராணங்கள், பார்ப்பனியம் போன்றவைகளை கண்டிப்பதற்கு சொந்தப் புத்தி இருந்தாலே போதும். அதை வேறு யாரும் எமக்கு சொல்லித் தரவும் தேவை இல்லை.

***

நான் சொல்லி வந்தவைகளை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

தேசியத் தலைவருக்கு பெரியார் மீதும் உயர்ந்த மதிப்பு உள்ளது. சுபாஸ் சந்திரபோஸ் மீது உயர்ந்த மதிப்பு உள்ளது. அதற்காக இவர்களுடைய கொள்கைகளை அவர் அப்படியே பின்பற்றுகிறார் என்று அர்த்தம் இல்லை. அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக அவர்கள் நடத்திய போராட்டத்தின் அடிப்படையில் இந்த மதிப்பு அவர்கள் மீது உள்ளது. அவ்வளவுதான்.

தமிழீழத்திற்கு ஏற்ற வகையிலேயே விடுதலைப் புலிகளின் கொள்கை இருக்கும். வேறொரு தளத்தில் செயற்படுத்தப்பட்ட கொள்கையை தமிழீழத் தளத்தில் அவர்கள் செயற்படுத்த மாட்டார்கள்.

நான் உலகின் தலைவர்களை ஒப்பிடுவதை யாரும் தடுக்க முடியாது. நான் ஒவ்வொரு தலைவரின் செயற்பாடுகள், குணநலன்கள் போன்றவைகளை வைத்து, வரலாற்றில் இதற்கு முன் இருந்த தலைவர்களோடு ஒப்பிட்டுக் கருத்துச் சொல்வேன். அது என்னுடைய உரிமை.

நீங்கள் தேசியத் தலைவரின் தலைமையின் கீழ் ஆயுதம் ஏந்திப் போரடிய திலீபனை, தன்னுடைய ஆயுதங்களில் ஒன்றாக உண்ணாவிரதத்தையும் உபயோகித்த ஒரே காரணத்திற்காக, இந்தியாவின் தேச பிதா என்று சொல்லப்படும் மகாத்மா காந்தியோடு ஒப்பிடுகிறீhகள் (இதில் மகாத்மா காந்தி பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது என்று செய்திதான் வெளிப்படுகிறது)

இதை காந்தி மீது பேரன்பு வைத்திருக்கும் யாராவது படிக்கும் போது, அவருடைய மனமும் புண்படத்தான் செய்யும். ஆனால் இப்படி ஒப்பிடுவதற்கு உங்களுக்குள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது.

அதே போல் எனக்கு உள்ள உரிமையையும் யாரும் தடுக்க முடியாது. உங்களுக்கு என்னுடைய ஒப்பீடுகளில் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். தாராளமாக விளங்கப்படுத்துகிறேன்

*** புராணங்கள் பற்றிய கடுமையான விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தேசியத் தலைவரின் தலைமையின் கீழ் ஆயுதம் ஏந்திப் போரடிய திலீபனை, தன்னுடைய ஆயுதங்களில் ஒன்றாக உண்ணாவிரதத்தையும் உபயோகித்த ஒரே காரணத்திற்காக, இந்தியாவின் தேச பிதா என்று சொல்லப்படும் மகாத்மா காந்தியோடு ஒப்பிடுகிறீhகள் (இதில் மகாத்மா காந்தி பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது என்று செய்திதான் வெளிப்படுகிறது)

இதை காந்தி மீது பேரன்பு வைத்திருக்கும் யாராவது படிக்கும் போது, அவருடைய மனமும் புண்படத்தான் செய்யும். ஆனால் இப்படி ஒப்பிடுவதற்கு உங்களுக்குள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது.

இதில் காந்தியைத் திலீபனோடு ஒப்பிட்டால் காந்தியை விரும்புவர்களுக்கு மனம் புண்படும் என்று எழுதியிருக்கின்றீர்கள்? காந்தியை விடத் திலீபனின் தியாயம் குறைந்தது என்று தானே நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?

ஆனால் யாரும் திலீபனை எந்தச் சந்தர்ப்பத்திலும் காந்தி கூட ஒப்பிட்டது கிடையாது. காந்தி நீரில் உப்புக் கலந்து குடித்தபடி தான் உண்ணாவிரதம் இருந்தார். திலீபன் ஒரு சொட்டு நீர் அருந்தாமல் தான் வீரச்சாவடைந்தார். அங்கே யாரும் காந்தியையும் திலீபனையும் ஒப்பிட்டது கிடையாது.

பொதுவாக பிரித்தானியா காந்திக்குக் கொடுத்த மரியாதையை, இந்திய அரசு திலீபனுக்குக் கொடுக்கவில்லையே என்று இந்திய அரசைத் தான் எம்மவர்கள் சாடுவார்களே தவிர, காந்தியையும் திலீபனையும் நிகராக வைத்து ஒப்பிடுவதில்லை. இரண்டு பேருக்கும் பாரிய இடைவெளி கூட உண்டு. காந்தி வாழவேண்டும் என்று நினைத்து உண்ணவிரதம் இருந்தார். திலீபன் சாவை நினைத்துக் கவலைப்படவில்லை.

எம்மவர்களின் கட்டுரைகளை வடிவாகப் பகுத்தறிந்து(அதையாவது..) பாருங்கள். இந்தியாவைச் சாடத் தான் காந்தியை இழுத்திருப்பார்களே தவிர, தியாகதீபத்தை ஒப்பிடுவதில்லை. இந்திய அரசால் தான் தியாகதீபம் மறைந்தார் என்பதால் தான் இந்திய அரசைக் குற்றம் சாட்ட வேண்டி ஏற்படுகின்றது.

உடனே நான் ஒப்பீடு செய்வதாக உங்களின் கருத்து யுக்தியைப் பாவிக்காதீர்கள். உங்களுக்காகத் தான் இதைச் சொன்னேன்.

தேசியத் தலைவருக்கு பெரியார் மீதும் உயர்ந்த மதிப்பு உள்ளது. சுபாஸ் சந்திரபோஸ் மீது உயர்ந்த மதிப்பு உள்ளது. அதற்காக இவர்களுடைய கொள்கைகளை அவர் அப்படியே பின்பற்றுகிறார் என்று அர்த்தம் இல்லை. அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காக அவர்கள் நடத்திய போராட்டத்தின் அடிப்படையில் இந்த மதிப்பு அவர்கள் மீது உள்ளது. அவ்வளவுதான்.

தேசியத்தலைவருக்கு ராமசாமி பற்றி எங்கும் சொன்னதாக நான் அறியேன். அதனால் மரியாதை பற்றி சொல்லமுடியாது. ஆனால் வழமையாக தாங்களின் செய்கின்ற எல்லா விவாதங்களிலும் தேசியத் தலைவர் இதைச் செய்கின்றார், ராமசாமியும் இதைச் செய்தார் என்று ஏதோ ஒன்றைக் கொண்டு வந்து முடிச்சுப் போடுகின்ற வேலையைச் செய்வது வழக்கம். இதன் மூலம் தலைவர் ஏதோ ராமசாமியின் கொள்கையைப் பின்பற்றுவது போன்ற கருத்தியல் பிரமையை உருவாக்ககி் கொள்ளுவீர்கள்.

***

நிர்வாகத்திற்கு ஒரு கடப்பாடு உண்டு அல்லவா! அதனால் தான் அவர்களுக்குச் சொன்னேன்.

*** பெரியார் பற்றிய விமர்சனங்கள் நீக்கப்பட்டு திருத்தமும் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

நான் தியாகி திலீபனையும் மகாத்மா காந்தியையும் ஒப்பிடவில்லை. ஆனால் நிறையப் பேர் அப்படியான ஒப்பீட்டைச் செய்கிறார்கள்.

யாழ் களத்திலும் "நவீன காந்தி திலீபன்" என்பது போன்ற ஒரு தலைப்பு இருக்கிறது. கவிதைகளிலம் காந்தியோடு திலீபனை ஒப்பிட்டு எழுதப்பட்டு உள்ளது.

உங்களைப் போன்று எனக்கும் இந்த ஒப்பீட்டில் உடன்பாடு இல்லை. நான் இந்த ஒப்பீட்டோடு உடன்பாடாது இருப்பதற்கான காரணங்கள் வேறு.

அதே வேளை எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், மற்றவர்கள் செய்கின்ற ஒப்பீடு எனக்கு முட்டாள்தனமாகப் பட்டாலும், மற்றவர்கள் அப்படி ஒரு கருத்தைக் கொண்டிருப்பதற்கும், அதை அவர்கள் ஒரு கருத்துக்களத்தில் சொல்வதற்கும் உரிமை உள்ளவர்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஒப்பீடுகள் பொருத்தமானவைகளாக இல்லை என்றால் அதற்கான காரணங்களை சொல்லலாம். அதை விட்டு, ஒப்பீடு செய்யக் கூடாது என்று சொல்வது அராஜகம்.

உண்மையில் நான் இங்கே எந்த இடத்திலும் தேசியத் தலைவரை "நவீன பெரியார்" என்று சொன்னதில்லை. அப்படி என்றைக்கும் சொல்லவும் மாட்டேன்.

இரண்டு தலைவர்களுக்கும் இடையில் ஒற்றுமைகளும் உண்டு. வேற்றுமைகளும் உண்டு.

நான் சில ஒற்றுமைகளை சுட்டிக்காட்டினேன். இதில் என்ன தவறு இருக்க முடியும்?

எந்த இடத்திலும் நான் தவறான தகவலை தரவில்லை. தவறான தகவலை தந்திருந்தால், அதைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் அப்படிச் செய்வதற்கு யாரும் தயாராக இல்லை.

ஆகவே அப்படி ஒப்பிடாதே, இப்படி ஒப்பிடாதே என்று *** கதைப்பதை விட்டு விட்டு, ஆரோக்கியமாக கருத்துக்களை வைக்கும்படி கள உறவுகளை அன்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

**********

Edited by harikalan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்திலும் "நவீன காந்தி திலீபன்" என்பது போன்ற ஒரு தலைப்பு இருக்கிறது. கவிதைகளிலும் காந்தியோடு திலீபனை ஒப்பிட்டு எழுதப்பட்டு உள்ளது.

திலீபன் அண்ணா நவீன உலகின் மகாத்மா காந்தி என்ற தகுதி நிலையை வழங்கியது யாழ் இந்துவின் மைந்தனாக நான்.

திலீபன் அண்ணாவின் கொள்கைகள் செயற்பாடுகள்.. உறுதி என்பவற்றை நேரடியாக அனுபவித்தவர்களின் வாயிலாக அதை உணர்ந்தவன். அந்தத் தீவிரம் மகாத்மா காந்தியிடம் கூட இருக்கவில்லை என்பதை காந்தியின் வரலாற்று நூல்களைப் படித்த போதும் அறிந்து கொண்டேன். பல தடவைகள் காந்தி சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தடம் மாறிப் போயிருக்கிறார். ஆனால் திலீபன் அண்ணா அப்படிப்பட்டவர் அல்ல. அவர் ஆயுதம் தரித்த போராளியாக இருந்திருப்பினும் அகிம்சை என்று இறங்கியதும் அதன் வழியிலேயே தான் இறுதிவரை பற்றி நின்றார்.

காந்தியோடு ஒப்பிடும் போது திலீபன் அண்ணா பல விடயங்களில் உயர்ந்தவர்.

காந்தியின் போராட்ட வடிவம் வென்றது காந்தியின் தியாகத்தால் அல்ல. பிரிட்டிஷ்காரர்களின் மனிதாபிமானப் பார்வையால். காந்தியை ஒரேயடியா போட்டுத் தள்ளி இருந்தா இல்ல சிறையில் போட்டு ரகசியமாகக் கொன்றிருந்தால்.. காந்தி இப்ப முகவரி இல்லாமல் இருந்திருப்பார். ஆனால் திலீபன் அண்ணா போன்றவர்கள் தங்கள் தியாகத்தின் மூலம் தாயகம் விடுதலை பெறும் என்ற நம்பிக்கையில் களமிறங்கியவர்கள். அவர்கள் எதிரியிடம் மனிதாபிமானம்.. சலுகைகளை எதிர்பார்த்து இறங்கவில்லை. எதிரியின் கோர முகத்தைக் காட்டுவதுதான் அவர்களின் முக்கிய நோக்கமாகவும் இருந்தது. இப்படி ஒரு எதிரியை அன்று காந்தி சந்தித்திருந்தால்.. அவர் போராட வெளிக்கிட்ட சில வாரங்களிலேயே சமாதியடைந்திருப்பார்...! நல்ல காலம்.. ஒரு நாயைச் சுடுவதானாலும் சட்டத்தை அணுகும் பிரிட்டிஷ்காரனின் பலவீனமறிந்து காந்தி நடத்திய "தியாகம் மிகுந்த" போராட்டமானது திலீபன் அண்ணாவுடையதோடு ஒப்பிடும் போது பல படிநிலை குறைவானது..

இருப்பினும்..நவீன உலகின் மகாத்மா காந்தி என்ற தகுதியை திலீபன் அண்ணாவுக்கு வழங்கினேன். அது கூட அவருக்கு பொருந்தாது. அவர் அதை விடப் பல நிலை உயர்ந்த நிலையில் இருக்கிறார். இருந்தாலும்.. உலகம் காந்தியை அளந்து வைத்திருக்கும் பரிமானத்தோடு.. ஒப்பிட்டு உலகம் திலீபன் அண்ணாவை நோக்கும் நிலை வர வேண்டும் என்ற எண்ணத்தோடு அந்தத் தகுதி நிலையை வழங்கினேன். அதில் தவறில்லை என்பது எனது திடமான நிலைப்பாடு.

திலீபன் அண்ணா தனது தாயகத்துக்காக.. மொத்த வாழ்வையும் அர்ப்பணித்தவர்.

மருத்துவப் படிப்பு

திருமண வாழ்வு

இள வயசு துள்ளல் என்று.. காந்தி அனுபவித்தவற்றைக் கூட திலீபன் அண்ணா திறந்தவர் அந்தனை மன உறுதி மிக்க காந்தியை நான் உலகில் காணவில்லை..!

----------------

திலீபன் அண்ணாவை நவீன உலகின் காந்தி என்று அழைத்ததை.. குறையாகக் காட்டுகின்றார்கள். இதே கருத்தை வலைப்பதிவு ஒன்றிலும் போட்டிருந்தார்கள். ஆனால் எந்த இந்திய நண்பர்களும் அதை குறையாகக் காணவில்லை. ஆனால்..... இந்திய பார்பர்னியர்களுக்கு... எதிராக வாதம் செய்பவர்கள்.. அவர்களின் பாசையில்..பார்ப்பர்னிய வழிதோற்றலாக இனங்காட்டப்படக் கூடிய காந்திக்கு மட்டும்...?????! ஈ வெ ராமசாமியும் காந்தியும் இரு துருவங்களாக இருந்தவர்கள் கொள்கைகளால்... ஆனால் வாரிசுகள்...????! :wub::)

Edited by nedukkalapoovan

நான் தியாகி திலீபனையும் மகாத்மா காந்தியையும் ஒப்பிடவில்லை. ஆனால் நிறையப் பேர் அப்படியான ஒப்பீட்டைச் செய்கிறார்கள்.

முதலில் வேறு இடத்தில் சொன்னதை இங்கையும் உங்களுக்கு சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்...!

பகுத்தறிவு வாதியான நீங்கள் ஆத்மாவை நம்புகிறீர்களா...??? அப்படி நம்புபவராக இருந்தால் உண்மையான பகுத்தறிவாளர் கிடையாது... விடயம் அப்படி இருக்க

நீங்கள் எப்படி பாக்கிஸ்தானை பிரித்து கொடுத்ததால் அங்கிருந்து இடம்பெயர்ந்து இன்னல்பட்டவர்களின் அனுதாபியால் கொல்லப்பட்ட ( வஞ்சகமாக எதிரிகளால் அல்ல) காந்தியை மகா ஆத்மா என்கிறீர்கள்...?? ஆத்மாக்களுக்குளேயே பெரிய ஆத்மா என்பதாகும் அதன் அர்த்தம்... இங்கே பெரியார் ஆத்மாவே பொய் எண்று சொல்லி இருக்கிறார், அப்படி இருக்க மகாத்மா எப்படீங்க..??

ஆத்மா என்பது கூட இல்லாமல் தியாகி எனும் அடைமொழியோடு திலீபன் அண்ணாவின் பெயர்... திலீபன் அண்ணா ஒரு போராளி தனது கொள்கைகளில் விட்டு கொடுப்பு இல்லாத ஒரு பேரொளி... பலருக்கு இந்தியாவில் கொடுமுகத்தை வெளிச்சம் போட்டு காட்டிய "தியாக தீபம்" திலீபன் அண்ணா...!

தயவு செய்து மாவீரர்களை குறிக்கும் போது அவர்களின் அவர்களுக்கான அடை மொழிகளை சரியாக குறிப்பிடுங்கள்.. காந்தியில் அடை மொழியை மட்டும் சொன்னால் போதாது

காந்தி பெரியவரா திலீபன் பெரியவரா என்ற விவாதத்திற்குள் நான் சொல்ல விரும்பவில்லை.

ஆனால் தியாகி திலீபனை "நவீன மகாத்மா காந்தி" என்று அழைப்பதானது என்னுடைய பார்வையில் இருவரையுமே சிறுமைப்படுத்துவதாகும்.

திலீபனின் உண்ணாநிலைப் போராட்டத்தை வைத்து மட்டும்தான் அவர் காந்தியோடு ஒப்பிடப்படுகிறார்.

இது காந்தியின் நீண்ட போராட்டத்தை உண்ணாநிலைப் போராட்டத்திற்குள் மட்டும் குறுக்கிவிடுகிறது.

மறுபுறம் நீங்கள் சொல்வது போல் காந்தியின் உண்ணாநிலைப் போராட்டங்களோடு, திலீபனின் தியாகத்தை ஒப்பிட முடியாது. திலீபனின் உண்ணாநிலைப் போராட்டம் மிக உயர்ந்தது.

ஆகவே உண்ணாநிலைப் போராட்டத்தை வைத்துக் கொண்டு, தீலிபனை காந்தி என்றோ, காந்தியை திலீபன் என்றோ அழைப்பது, இருவரையும் சிறுமைப்படுத்திவிடும்

காந்தியின் கொள்ளை அகிம்சை. திலீபனின் கொள்கை அகிம்சை அல்ல. அவர் ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு போராளி. உண்ணாநிலைப் போராட்டம் என்பது அவர் உபயோகித்த போராட்ட வடிவங்களில் ஒன்று.

காந்தி குறித்து எனக்கு மிகக் காட்டமான விமர்சனங்கள் உண்டு. காந்தியோடு நான் மிகவும் மதிக்கும் திலீபனை ஒப்பிட்டால் என்னுடைய மனம் புண்படும்.

அதே போன்று மறுபுறம் விடுதலைப் புலிகளை விரும்பாத, ஆனால் காந்தியை கடவுளுக்கு சமனாக மதிப்பவர்களுக்கும் மனமும் புண்படும்.

என்னுடைய பார்வையில் திலீபனை நவீன காந்தி என்று சொல்வது பெரும் தவறு.

ஆயினும் ஒப்பீடு செய்வதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் மதிக்கின்ற திலீபனை நீங்கள் எனக்குப் பிடிக்காத காந்தியுடன் ஒப்பிடக் கூடாது என்று நான் அடம்பிடிக்க மாட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் அண்ணாவின் அகிம்சை என்பதுதான் கருத்தில் எடுக்கப்பட்டது. காந்தி எப்போதும் ஒரு ஆயுதப் போராளியாக இருக்கவில்லை. ஆனால் தனது அகிம்சைக்காக அவர் பலியிட்ட மக்களின் எண்ணிக்கை பல்லாயிரம். ஆனால்.. ஒரு ஆயுதப் போராளி அகிமிசையை தேர்வு செய்வதென்பது மிக மாறுபட்ட பரிமானத்தைக் கொண்டது. ஒரு அகிம்சாவாதியான காந்தி மக்களை பலியிட்டது மட்டுமன்றி.. ஒரு நாட்டின் இருப்புக்கு அவசியமான இராணுவம் என்ற கட்டமைப்பை சுபாஸ் உருவாக்கிய போதும் ஆதரிக்க மறுத்தவர். காந்தியால் மட்டுமே உலகில் இராணுவம் இல்லாத நாட்டை உருவாக்க முடியும் என்று சிந்திக்க முடியும். காந்தியின் சிந்தனை என்பது அவருடைய செயற்பாட்டுத்தளத்தில் நிறைவாக இருந்திருக்கலாம். ஆனால்.. திலீபன் அண்ணாவின் அகிம்சைத் தேர்வு என்பது.. பல ஆண்டுகளாக இந்தியா போட்டிருந்த வேசத்தைக் கிழித்து தூள் தூளாக்கியது. ஆனால் காந்தியின் அகிம்சை என்பது.. பிரிட்டிஷ்சாரின் சலுகைக்கு காத்துக் கிடந்தது...!

எனது பார்வையில்.. திலீபனின் அகிம்சை மேலானது. காந்தியின் அகிம்சை அவரின் செயற்பாட்டுத்தளத்துக்கு பொருத்தமானதாக மட்டும் இருந்திருக்கலாம். அதை அவர்கள் பெருமையாகக் கருதட்டும். ஆனால் நாம் கருத வேண்டும் என்பது இல்லை. ஒரு அகிம்சைப் போராளியாக காந்தியை மதிக்கும் அதேவேளை.. அகிம்சை என்று பேசும் போது... திலீபன் அண்ணா பல வகையில்.. காந்தியின் வெளிப்பாட்டில் இருந்து வேறுபட்டு.. உயர்ந்து நிற்கிறார்.

ஆயினும் ஒப்பீடு செய்வதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் மதிக்கின்ற திலீபனை நீங்கள் எனக்குப் பிடிக்காத காந்தியுடன் ஒப்பிடக் கூடாது என்று நான் அடம்பிடிக்க மாட்டேன்

அப்படி ஒப்பிடுவது உங்களின் சுதந்திரம் எண்டால்... , ஒப்பிட முடியாது அப்படி ஒப்பிடுதல் தவறு எண்று வாதிடுவது எனது சுதந்திரம்....! காந்தி, திலீபன் அண்ணா இருவரும் ஒண்று அல்ல என்பது உங்களின் கருத்தாக கூட இருக்கலாம்...

ஆனால் அப்படி ஒப்பிடுவதை நீங்கள் அனுமதிப்பீர்கள்.. எதிர்க்க வில்லை என்பதை நீங்கள் எப்படி எடுத்து கொள்கிறீர்களோ தெரியாது..

ஆனால் நான் அப்படி இருப்பதை எனக்கு முதுகு எலும்பு இல்லாம இருக்கும் புழுவாக உணர்ந்து கொள்கிறேன்... தவறானது எண்று தெரிதும் அனுமதிக்க நான் ஒண்டும் காந்தி இல்லை...!

தகுதியானவற்றை தகுதியானவைகளோடு ஒப்பிடுங்கள்... ஆட்டுக்கும் நான்குகால் மாட்டுக்கும் நான்குகால் இரண்டுமே புல்தின்னும் ஆகவே இருண்டும் ஒண்றுதான் என்பதையும் நீங்கள் அனுமதிக்க வேண்டி வரும்... (இது உதாரணம் மட்டும்தான்)

Edited by தயா

************

Edited by harikalan

  • தொடங்கியவர்

கம்பனே நேரில் வந்து பேட்டி அளித்தது போல் அவனின் "own ideologies" என்பது ஆரிய - திராவிடம்.. சாதியம்.. தென்னிந்திய - வட இந்திய எதிர்ப்பு அரசியல் சார்ந்து எழுந்தது.. இந்துத்தவ வாதம் சார்ந்து எழுந்தது, கம்பராமாயாணமே.. ஒரு அரசியல் வரலாற்றின் பிரதிபலிப்பு என்பதெல்லாம்.. கம்பனின் "own ideologies" என்று.. வேறு சிலர் தங்கள் "own ideologies" யை புகுத்தி திரித்துக் கொண்டது.

கம்பன் கம்பராமாயணத்தில் என்ன சொன்னான் என்பதை வைத்துத் தான் பலரும் அதன் பின்னணி பற்றி கூறி உள்ளனர்.கம்பன் சொல்லாததை வைத்து அல்ல.இலக்கியத் திறனாய்வு என்பது அந்த இலக்கியத்தில் என்ன சொல்லப்படுகிறது என்பத்தைக் கொண்டு அது சொல்லப்பட்ட களம் அதன் கதை மாத்தரின் பின் புலம் பாத்திரப்படைப்பு என்பவற்றைக் கொண்டு அக் கால சமூகத்தில் இருந்த கருத்து நிலைகள் உறவு முறைகள் என்பவற்றைக் கூறுவது.இலக்கிய விமர்சக விக்கிரகங்கள் என்று கூறப்படும் கைலாசபதி முதல் சிவத்தம்பி வரை இதைத் தான் செய்து உள்ளனர்.இலக்கியம் என்பது அதன் காலத்தைப் பிரதிபலிக்கிறது.அதை எழுதியவரின் சுய கருத்து நிலையைப் பிரதிபலிக்கிறது.கருத்து நிலை உருவாக்கத்தையும் செய்கிறது.இலக்கியத் திறனாய்வு பற்றிய கட்டுரைகளைக் கொன்சம் ஆளமாகப் படித்தால் இது தெளிவாக விளங்கும்.

கம்பனின் இராமாயணம் பற்றிய ஒப்பிலக்கியத் திறனாய்வு என்பதே சாரா நிலை நின்று..

சாரா நிலை என்று ஒரு நிலை எங்கும் இல்லை.கைலாசபதி தனது விமர்சனக்களை வரலாற்று இயங்கியல் அடிப்படை சார்ந்தே முன் வைத்திருகிறார்.அதாவது வர்க்கங்களால் ஆன உலகில் வர்க்க நிலையின் பாற்பட்ட உறவு நிலைகளையும் அவற்றின் முரண்களையுமே இலக்கியங்களின் துணை கொண்டு விமர்சித்திருகிறார், ஆய்வு செய்திருக்கிறார். இதை கைலாசபதியின் தளம் என்னும் கட்டுரையில் விரிவாகப்படிக்கலாம்.

.முற்றுப் பெறவில்லை என்ற ஆதங்கம் பேரறிஞர்கள் மத்தியில் கூட இருக்கிறது. அது ஆரிய - திராவிட.. மொழியியல்.. இலக்கிய மேலாதிக்க நோக்கியல்.. சாதியியல்.. மற்றும் மத சாயங்களால்..திசை மாறிப் போயுள்ளது என்பதை நான் மேலே கைலாசபதி ஐயா அவர்களின் கருத்தை உதாரணமாகக் காட்டி உறுதிபட வழங்கியுள்ளேன்.

கைலாசபதி என்ன சொன்னார் என்பதை மீண்டும் ஒரு தடவை வாசிப்பது நலம்.கைலாசபதி வாழ்ந்த காலத்தில் சிவத்தம்பி கைலாசபதி முதலானோர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டதை ஆதரிக்க வில்லை, எனெனில் அவர்கள் மார்க்சியக் கண் கொண்டு பார்த்தன் விழைவாக வர்கப் போராட்டத்தை முன் நிலைப்படுதினர்.திராவிட இயக்கம் பற்றிய கைலாசபதியின் பார்வையும் அவ்வாறே அக் காலத்தில் இருந்தது.ஆனால் அவர் இன்றிருந்தால் சிவத்தம்பி அவர்கள் தனது பார்வையை மாற்றியது போல் நிச்சயமக மாற்றி இருப்பார்.உலகின் போராட்டங்கள் எல்லாம் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு போராட்டத்திற்கும் பிரதானமான பகை முரணையே அடி ஒற்றி எழும் இயக்கமே அந்தப் போராட்டத்தின் தலமையைப் பெறும் என்பதே வரலாறு.அதனால் தான் மார்க்ஸிய அடிப்படையில் போராட வெளிக்கிட்ட எந்த இயக்கமும் தமிழத் தேசிய விடுதலைப் போராட்டாத்துக்குத் தலமை தாங்க முடியவில்லை.காரணம் தேசிய இனம் சார்ந்த போராட்டதுக்குள் வர்க்கமுரண் என்பது அமிழ்ந்து போய் விடுகிறது.அதே போல் தமிழ் நாட்டிலும் மார்க்சிய இயக்கங்களால் செய்ய முடியாது போனதை திராவிட இயக்கங்கள் செய்து காட்டின.அங்கே சாதியமே பிரதான முரண்பாடாக இருந்தது.வர்க்க அடுக்கும் சாதிய அடுக்கும் ஒன்றாக இருந்தது.ஆகவே ஒவ்வொரு வரும் தமது அரசியல் நிலை சார்ந்தே தமது விமர்சனங்களையும், இலக்கியத்தையும் முன் வைக்கிறனர்.இங்கே நீங்கள் வைக்கும் வாதங்களும் இந்து மதனிலை சார்ந்தவை என்பது வெளிப்படையானதோ அதே போல் கம்பனின் ஆரியம் சார்ந்த புனைவோ வால்மிகியின் புனைவோ ஆரியரை உயர்துவதிலும் இராமணை ஒரு அவதார புருசனாகவும் திராவிடரை வலுவற்றவர்களாகவும் சித்தரிக்கவே புனையப்பட்டன.அந்தப் பண்டைய முரண்பாட்டின் பல்வேறு வடிவங்களே இன்றைய சாதிய முரணின் அடிப்படையாக தமிழ் நாட்டில் இருந்த தாலையே திராவிட இயக்கங்கள் அரசியல் ரீதியாக எழுச்சி பெற்றன.

ஈழத்தில் சிங்களப் பேரினவாதத்தினால் தேசிய விடுதலையே பிரதான முரணாக வெளிக் கிளம்பியது.அவ்வறான ஒரு நிலை இருக்கவில்லை என்றால், நிச்சயமாக அறுபது எழுபதுகளில் வெளிக்கிளம்பிய சாதிய எதிர்ப்பு இயக்கங்கள் நிச்சயமாக ஒரு ஆயுதப்போராட்டமாகப் பரிணமித்து , சாதிய அடக்கு முறைக்கு எதிரான இயக்கங்கள் வெளிக்கிளம்பி இருக்கும்.அவை நிச்சயமாகா யாழ் மைய சைவ வேளாள அடக்குமுறையைக்கு எதிராகவே வெளிக்கிளம்பி இருக்கும்.

ன்னோர் தலைப்பில்.. இராமாயண இலக்கியம்.. இந்தோனிசியவில் மதம் சாராத..ஒரு சமூக கலை கலாசார வடிவமாக பரிணமித்துள்ளதை ஆதாரங்களோடு காட்டியுள்ணேன்.

கம்பனின் "own ideologies" இதுதான் என்று கம்பன் வந்து தன் கருத்தை முன் வைக்கட்டும் ஏற்றுக் கொள்ளலாம். அது சாத்தியமில்லாத தன்மையில்.. அதனைப் பயன்படுத்திக் கொண்டு... கம்பனின் "own ideologies" என்று விமர்சகர்கள் தங்கள் தங்கள் "own ideologies" ஐ கம்பனது என்று காட்டுவது.. இராமாயண இலக்கியத்தின் இலக்கியத்தன்மையை சீரழித்து..

கம்பன் சொன்னவற்றைக் கொண்டு தான் அவரின் சுய பார்வை என்ன என்பது முன் வைக்கப்படுகிறது.இங்கே எப்படி எதைச் சீரழிக்கமுடியும்? தெளிவாகச் சிந்தியுங்கள் அதன் பின் கருத்தைத் தெளிவாக எழுதுங்கள்.

அதை பிராந்திய உள்ளூர் அரசியல்.. மற்றும் மதத் தேவைகளுக்காக சிலர் திட்டமிட்டுப் பாவிப்பது தெளிவுறுத்தப்பட வேண்டும் மக்கள் மத்தியில். இதன் பாதிப்பின் பின்னணியிலேயே.. பல போட்டி விமர்சனங்கள் எழுந்தன.. இராவணை திராவிடனாகக் காட்டி.. இராவண காவியம் என்பது கூட எழுந்தது என்று கைலாசபதி ஐயா தெளிவுற விளக்கிச் சென்றுள்ளார்.

இலங்கை வேந்தன் இராவணன் பற்றிய கதை எழுதப்பட்டு புலிகளின் குரலினூடாக வெளிவந்து புலிகளாலையே வெளியிடப்பட்டது.இராமாயணம் ஒரு கருதியலைப் பிரதிபலிக்கும் போது அதற்கு எதிர் நிலையான கருத்தாக்கத்தை இவை போன்ற புனைவுகள் பிரதிபலிக்கின்றன.கம்பனும் ஆரியரும் எவ்வாறு திடம்மிட்டுச் செயற்பட்டார்களோ அவ்வாறே மற்றவர்களும் செயற்படுகிறார்கள்.

இலக்கிய கர்த்தாவின் "own ideologies" எங்கையோ இலக்கியம் நோக்கி.. சமூகம் நோக்கி நிலை கொண்டிருக்க.. அவரின் "own ideologies" இனங்காட்டுறோம் என்போரின் "own ideologies" அதற்கு மாறாக உள்ளது என்பதுதான் இங்கு எம்மால் இனங்காட்டப்படுகிறது. பேரறிஞர்களின் ஆதாரங்களுடன். இதில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். குழப்பகார சக்திகளின்.. மறைமுக உக்திகளோடு மக்களை அணுகுபவர்களின் உள்நோக்கங்களை அறிந்து செயற்பட வேண்டும். :)

கம்பனின் "own ideologies" என்ன என்பதை நீங்கள் எங்கே விளக்கி இருக்கிறீர்கள்.கம்பன் என்ன சொல்கிறான் என்பதை பலரும் கம்ப இராமாயணத்தில் இருந்து எடு கோள்களுடன் பல்வேறு காலங்களின் இயற்றப்பட்ட இராமாயணங்கள் மூலம் விளக்கி இருக்கிறார்கள்.இவை எவற்றுக்கும் நீங்கள் எங்கும் ஆதாரங்களுடன் மறுப்புக்களை எழுதவில்லை.அப்படி இருக்க எதன் அடிப்படையில் கம்பன் அப்படிச் சொல்லவில்லை என்று சொல்கிறீர்கள்.வெறுமனே உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்வதென்பது ஒரு வாதம் அல்ல.அது உங்கள் அரசியல் நிலை சார்ந்த மதம் சார்ந்த அபிப்பிராயம் அல்லது விருப்பு மட்டுமே.

Edited by narathar

தயா!

நீங்கள் என்னுடைய கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

நானும் உங்களைப் போன்று திலீபனை காந்தியுடன் ஒப்பிடுவது தவறு என்றுதான் வாதிடுகிறேன்:

ஆனால் திலீபனை பலர் காந்தியோடு ஒப்பிடுகிறார்கள். கவிதை எழுதுகிறார்கள்.

நண்பர் நெடுக்காலபோவான் ஒருபடி மேலே போய் திலீபனுக்கு "நவீன மகாத்மாக காந்தி" என்று பட்டம் கொடுத்து விட்டார்.

ஆனால் நீங்கள் சொல்வது சரி

ஆட்டுக்கும் நான்கு கால், மாட்டுக்கும் நான்கு கால். இரண்டும் புல்லைத்தான் தின்கின்றன. இதனால் மாடு "நவீன ஆடு" ஆகிவிட முடியாது. ஆடு ஆடுதான். மாடு மாடுதான்.

ஆனால் ஆடு போன்று மாடு புல்லைத் தின்னும் என்று சொல்ல முடியும். ஆட்டுக்கு இருப்பது போன்று மாட்டுக்கும் நான்கு கால்கள் என்று சொல்ல முடியும். இப்படி ஒற்றுமைகளை சுட்டிக்காட்ட முடியும். இதற்கு மாட்டை ஆடாக நிறுவுவதாக அர்த்தம் இல்லை.

இதைத்தான் நான் இங்கு செய்தேன்.

இந்தத் தலைப்பு பெரியாரும் ஈழமும் என்று தொடர்கிறது.

இந்த இடத்திலே பெரியாரிடம் இருந்த சில சிந்தனைகள் எங்கள் தலைமையிடமும் இருப்பதை சுட்டிக்காட்டி கருத்துச் சொன்னேன். ஆனால் சிலர் இதை புரியாமல் நான் மாட்டை ஆடு என்று சொல்வதாக கதறுகின்றனர். நான் அப்படிச் சொல்லவில்லை.

தேசியத் தலைவர் போராடுகின்ற தளம் வேறு. அந்தத் தளத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக எந்தத் தலைவரும் உருவானது இல்லை.

பெரியார் போராடிய தளம் வேறு. அந்தத் தளத்தில் தமிழர் மண்ணில் என்றுமே அப்படி ஒரு தலைவர் உருவானது இல்லை.

என்னுடைய பார்வையில் பெரியாரோ அல்லது எங்கள் தேசியத் தலைவரோ யாருடனும் ஒப்பிடப்பட முடியாதவர்கள்.

ஆகவே நான் இருவரையும் ஒப்பிடுவதாக தவறாக புரிந்து விவாதத்தை எங்கோ கொண்டு செல்ல வேண்டாம்.

இப்பொழுது மீண்டும் தலைப்புக்கு வருவோம்.

"பெரியாரும் ஈழமும்" என்று சொல்கின்ற போது, பெரியாருக்கு ஈழத்தில் ஆதரவு இருக்கிறதா என்று புரிந்து கொள்வது தவறு.

பெரியாருக்கு ஈழத்தில் சிலைகள் இருக்கிறதா? பெரியாரை எத்தனை பேருக்கு தெரியும்? என்ற கேள்விகள் உண்மையில் அபத்தமானவை.

பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன ஒருவரை ஈழத்தில் இப்பொழுது பரப்புவதில் அர்த்தம் இல்லை. பெரியார் ஒரு தேவதூதரோ, கடவுளோ அல்ல. யேசுவையும், அல்லாவையும் பரப்புவது போல் பெரியாரைப் பரப்புவது இல்லை.

"பெரியார்" என்ற சொல் இங்கே குறிப்பது, அவர் வெளியிட்ட சிந்தனைகளை. இவைகளை பெரியார் என்பவரைப் பற்றி அறியாமலேயே கொண்டிருக்கலாம். நானும் ஒரு காலத்தில் பெரியார் பற்றி அறியாமலேயே பெரியார் சிந்தனைகளை கொண்டிருந்தவன்தான்.

ஆகவே ஈழத்தில் பெரியாரின் தாக்கம் பற்றி பேசுகின்ற போது, பெரியார் என்ற தனிமனிதரை அது குறிப்பது இல்லை என்பதை உணர்ந்து கருத்துக்களை வைக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தயா!

நண்பர் நெடுக்காலபோவான் ஒருபடி மேலே போய் திலீபனுக்கு "நவீன மகாத்மாக காந்தி" என்று பட்டம் கொடுத்து விட்டார்.

நவீன உலகின் மகாத்மா என்பது திலீபன் அண்ணா நவீன உலகில் செய்த தியாகத்துக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மைக்காகவும்.. அகிம்சையை கடைப்பிடித்ததால் காந்தி என்றும் வழங்கப்பட்டார்.

உலகில் மகாத்மா காந்திக்கு என்ன தகுதியை கொடுத்திருக்கோ அதைவிட மேலாக திலீபன் அண்ணாவுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் உலகம் அவரை அந்த அளவுக்கு இன்னும் கருத்தில் கொள்ளவில்லை.

நாம் எல்லோரும் தியாக தீபம் என்று சொல்லிக் கொள்கின்றோம். அதற்கு மேலதிகமாகவே... உலகின் பார்வையை திலீபன் அண்ணாவின் அகிம்சை வழி திருப்ப வேண்டின்.. அவருக்கு இந்த "நவீன உலகின் மகாத்மா காந்தி" என்ற தகுதி நிலை வழங்கப்படுவது தவறன்று. அதற்காக தியாக தீபம் என்று தமிழீழ மக்களாலும் போராளிகளாலும் வழங்கப்பட்ட அடைமொழி வழக்கொழிந்து விடாது.

திலீபன் அண்ணா யாழ் இந்துவின் மைந்தன் என்ற வகையில் தான் இந்துவின் மைந்தனாக அந்தக் கெளரவமளிப்பு வழங்கப்பட்டது என்பதை குறித்த தலைப்பைப் படித்தால் புரிந்திருக்கும். "தியாக தீபம்" என்பதை அழித்து.. இது வழங்கப்படவில்லை என்பதை உணர்ந்தீர்கள் என்றாலே போதுமானது.

என்னுடைய முன்னைய பதிவில் மகாத்மா என்றதை தவிர்த்திருந்தேன். காரணம் கரும்புலிகள் உன்னதமானவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு பொது நலன் கருதி தம்முயிர்களை கொடையாக்குதல் மூலம் தடைகளை விலக்குவோர் நிச்சயம் மகாத்மாக்களாகவே அமைவர். அதைக்கருதி அதை தவிர்த்திருந்தேன். திலீபன் அண்ணாவும் ஒரு வகையில் செய்தது.. அகிம்சை வழியில் சென்று..உயிரை அர்ப்பணித்து நடத்திய தடை விலக்கல் தான். அதனால் அவருக்கும் அப்பதம் பொருந்தும் தானே. அதனால் அவருக்கு அது பொருந்தும்.

"மகாத்மா" என்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஏன் வழங்கினார்களோ தெரியவில்லை. அவர்களின் அதற்கு கொடுத்துள்ள விளக்கம் எமதில் இருந்து மாறுபட்டிருக்கலாம். எனவே இரண்டும் சமன் என்று கருதுதல் தவறு.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

.நிர்வாகம் அதை அனுமதிப்பதில் எவ்வித பிரச்சனையுமில்லை. ஆனால் தேசியத் தலைவரையும், புலிகளையும் இழுத்துக் கதைப்பதோ, அல்லது தலைவருக்கும், யாருக்கும் முடிச்சுப் போட்டு, மற்றவர் கொள்கையைத் தான் தலைவர் பின்பற்றுகின்றார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் கருத்துக்களைத் தடை செய்ய வேண்டும்.

தேசியத் தலைவர் சொன்ன கருத்தைக் கூறி அதே போல் இன்னொருவரும் சொன்ன கருத்தையும் கூறி இரண்டையும் ஒப்பீடு செய்வதை ஏன் தடை செய்ய வேண்டும்?

இங்கே எவரும் தேசியத் தலைவர் சொல்லாததைச் சொன்னதாக எழுதவில்லையே?

இங்கே எவரும் தேசியத் தலைவர் இன்னாரின் கொள்கையைத் தான் பின் பற்றிகிறார் என்று சொல்லவில்லையே? இருவரது கருத்துக்களும் ஒன்றாக இருக்கின்றன என்று சொல்வதை மேற் கோள்களுடன் காட்டப்படும் போது ஏன் அவற்றைத் தடை செய்ய வேண்டும்?

இராமாயணம் சம்பந்தமாக தேசியத்தலைவர் என்ன சொன்னார் என்பதை மற்றவர்கள் அறியக்கூடாது தடை செய்ய வேண்டும் என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

கம்பனின் "own ideologies" என்ன என்பதை நீங்கள் எங்கே விளக்கி இருக்கிறீர்கள்.கம்பன் என்ன சொல்கிறான் என்பதை பலரும் கம்ப இராமாயணத்தில் இருந்து எடு கோள்களுடன் பல்வேறு காலங்களின் இயற்றப்பட்ட இராமாயணங்கள் மூலம் விளக்கி இருக்கிறார்கள்.இவை எவற்றுக்கும் நீங்கள் எங்கும் ஆதாரங்களுடன் மறுப்புக்களை எழுதவில்லை.அப்படி இருக்க எதன் அடிப்படையில் கம்பன் அப்படிச் சொல்லவில்லை என்று சொல்கிறீர்கள்.வெறுமனே உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்வதென்பது ஒரு வாதம் அல்ல.அது உங்கள் அரசியல் நிலை சார்ந்த மதம் சார்ந்த அபிப்பிராயம் அல்லது விருப்பு மட்டுமே.

கைலாசபதி ஐயாவின் கருத்தில் அவர் ஒரு விடயத்தை தெளிவாகக் கூறிச் சென்றுள்ளார். எப்படி கம்பனின் இராமாயணம்.. விமர்சன கர்த்தாக்களால் திசை மாறிச் சென்றது. இவ்விலக்கியம் தொடர்பில் திறமை மிக்க ஒப்பிலக்கிய திறனாய்வு என்பது எவ்வாறு தவற விடப்பட்டது.. அதன் வழி கம்பனின் இலக்கிய நயம் எவ்வாறு திசை மாறிப் போனது என்பதுதான்.

கம்பன் அரசியல் பேசவில்லை.. ஆரியம் திராவிடம் என்று பேசவில்லை.. அவன் மனித சமூகத்துக்கான விழுமிய எண்ணங்களாக தான் இனங்கண்டவற்றை.. பாத்திரப்படைப்புக்கள் மூலம் இலக்கியமாக வடித்துள்ளானே தவிர... அவன்.. அரசியலோ.. பிராந்திய நலன் தேடலோ.. ஆரிய திராவிட கொள்கை வகுப்போ செய்யவில்லை. அப்படிச் செய்திருந்தால் அதை எடுத்துக்காட்டுங்கள்.. கம்பன் கையாண்ட பாடல்களின் பொருளில் கம்பன் இதைத்தான் சொன்னான் என்று உறுதிப்படுத்தி...!

கம்பனின் பாடல்களுக்கு விளக்கமளித்தவர்கள் செருகியது போக... இலக்கிய விமர்சகர்கள் செருகியது போக.. இவற்றைக் கருத்தில் கொண்டு போட்டி இலக்கியம் படைத்தவர்கள் போக... பக்கச் சார்ப்பற்ற ஒரு நிலை நின்று கம்பனின் கம்பராமாயாணத்தை ஆராய்ந்து கம்பன் சொன்னது இதுதான் என்று நிறுவ முடிந்தால்.. அதைச் செய்து காட்டுங்கள்.

கம்பனின் கம்பராமாயணத்தை இலக்கிய நோக்கோடு நோக்கும் போது.. அதில்.. இந்தச் செருகல்கள் இன்றிய ஒரு பார்வையைத் தர முடியும் என்பதைத்தான் கைலாசபதி அவர்கள்.. ஐயரின் கம்பராமாயாண ஆய்வுரை என்ற இலக்கியத் திறனாய்வில் இருந்து எடுத்துத் தந்துள்ளார்.

இந்த இடத்தில் கைலாசபதி ஒரு இலக்கியவாதிகாக செயற்பட்டுள்ளாரே தவிர மாக்சியவாதியாக அன்று. அப்படிக் காட்டுவது தவறு.

அப்புறம் கைலாசபதியின் வாழ்க்கைக்காலம்.. ஈழப்போராட்ட காலத்துள் தான் அமைந்திருக்கிறது 1933 பிறந்து 82 இல் இறந்துள்ளார். எனவே இவர்கள் தமிழகளின் உரிமைப் போராட்டம் தொடர்பில் அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. ஈழப்போராட்டத்தில் எல்லா இயக்கங்களும் மாக்ஸியம்.. பொதுவுடமை என்று தான் தங்கள் செயற்பாட்டை ஆரம்பித்தன என்பது நினைவு கூறத்தக்கது. :unsure::)

  • தொடங்கியவர்

பன்முகப் பட்ட சமூகத்தில் ஒரே கருத்து நிலவ முடியாது.

எம்.ஏ. நுஃமான்

ஈழத்துத் தமிழ்ச்சூழலில் 1960 களிலிருந்து கவிஞர், இதழ் ஆசிரியர், விமரிசகர், பேராசிரியர், ஆய்வாளர் எனப் பல்வேறு தளங்களிலும் செயற்பாடு கொண்டு இயங்கி வருபவர்.

தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறைப் பேராசிரியராக உள்ளார். இவரது 'பாரதியின் மொழிச் சிந்தனைகள்' என்னும் நூல் பாரதியினுடைய மொழிச் சிந்தனைகளை விமர்சனம் செய்கிறது. தமிழில் இது முதல் முயற்சி. பாரதியியலுக்கு இது ஒரு புதிய பங்களிப்பு. பிரயோக மொழியியல் - சமூக மொழியியல் கோட்பாடுகளைக் கொண்டு பாரதியின் மொழிச் சிந்தனைகளை ஆய்வுக்கு உள்ளாக்குகின்றார்.

தமிழில் மார்க்சிய விமர்சன வளர்ச்சியில் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி இவர்களின் வரிசையில் எம்.ஏ.நுஃமான் தனக்கான தனித்துவத்துடன் தொழிற்பட்டு வருபவர். மார்க்சிய விமர்சனத்தின் சுய விமர்சனக் காலகட்டத் தோற்றுவிப்பாளருள் ஒருவராக உள்ளார்.

இதுவரை, பல்வேறு கவிதைத் தொகுதிகள், பல்வேறு ஆய்வு நூல்கள், பல நூல்களின் பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என தனது பங்களிப்பைத் தமிழிலக்கியத்துக்கு வழங்கியுள்ளார். 'தமிழ் இனி 2000' மாநாட்டுக்காக சென்னை வந்திருந்த அவருடன் ஒரு நேர்காணல்

ஈழத்து மார்க்சிய இலக்கியவாதிகள் வளர்ந்ததற்குக் காரணமாகச் செயல்பட்ட அரசியல் பின்புலங்கள் என்னென்ன?

ஈழத்திலே வளர்ந்த மார்க்சிய இலக்கியங்கள் வளர்ந்த அரசியல் பின்புலம் என்று சொன்னால், மார்க்சிய இயக்கங்களின் வளர்ச்சியோடுதான் இலக்கிய வளர்ச்சியும் கைகோர்க்கிறது. இலங்கை, இந்தியா, தமிழ்நாடு போன்ற இடங்களில் 20-30-களில் மார்க்சிய இயக்கம் வளரத் தொடங்கிவிட்டது. இலங்கையிலும் 1920-30-களில் மார்க்சிய இயக்கம் படிப்படியாக வளரத் தொடங்கி விட்டது. ஆனால் 1946-ல் தான் இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று ஒன்று உருவாகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் மார்க்சியச் சிந்தனைகள் வேரூன்றத் தொடங்கியது. ஆனால் 1956-க்குப் பிறகுதான் மார்க்சியக் கட்சிகளும், அது சார்ந்த இலக்கியங்களும் மிகத் தீவிரமாக இயங்கத் தொடங்கியது. அதனுடைய அரசியலின் வெளிப்பாடுதான் மார்க்சிய இலக்கியங்களும். 1950-களிலிருந்துதான் எங்களுடைய மார்க்சிய இலக்கியங்களின் வளர்ச்சியைக் கணக்கிலெடுக்க முடியும்.

தமிழகச் சூழலில் மார்க்சிய இயக்கப் போக்கை எப்படி அவதானிக்கிறீர்கள்?

தமிழகச் சூழலில் இலங்கையில் மார்க்சிய இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பு மார்க்சியம் அறிமுகமாகி விட்டது. ரகுநாதனின் 'பஞ்சும் பசியும்' நாவலை ஒரு முன்னோடி முயற்சியாகச் சொல்லலாம். தமிழ்நாட்டோடு ஈழத்தைப் பொருத்திப் பார்த்தால் ஈழத்தில் ஆரம்ப காலங்களில் வந்த அளவுக்கு தமிழ்நாட்டிலிருந்தது வந்தது என்று சொல்ல முடியாது. அதனால் 70-களுக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் மார்க்சியப் படைப்புகள் அதிகமான அளவில் வெளிவருகிறது. அதற்கு ஈழத்தினுடைய செல்வாக்கும் காரணமாகயிருந்தது என்று நான் சொல்லுவேன். அப்படி நான் சொல்வது சரியோ என்று தெரியவில்லை. ஆனால், அந்த மாதிரி நான் யோசித்துப் பார்க்கிறேன்.

பெரியாரியத்தை எப்படி மார்க்சியத்தோடு பொருத்திப் பார்த்துப் புரிந்து கொள்கிறீர்கள்?

பெரியாருக்கு ஆரம்ப காலங்களில் மார்க்சியச் சார்பிருந்தது. ஆனால் அவருடைய பிரதானமான அரசியல் குறிக்கோள் அல்லது அரசியல் இயக்கம் அவர் கட்டியிருந்த பார்ப்பனியத்துக்கு எதிரானது. அப்படி வரும்பொழுது அவர் மார்க்சியத்திலிருந்து வேறுபட்டுப் போகிறார். ஆனால் அவருடைய பகுத்தறிவுச் சிந்தனை, மொழி சம்பந்தமாக அவர் முன் வைக்கிற அறிவுப்பூர்வமான கருத்துக்கள் இவையெல்லாம் முற்போக்கானவைதான். அதை மார்க்சியத்துக்கு முற்றிலும் எதிரானதென்று கருத வேண்டியதில்லை. ஆனால், மார்க்சியத்தினுடைய சில அடிப்படையான சிந்தனைகளிலிருந்து பெரியார் வேறுபடுகிறார். மார்க்சியம் வர்க்க ரீதியான முரண்பாடுகளைத்தான் மையமாகக் கொள்கிறது. ஆனால், பெரியாருடைய இயக்கம் சாதி ரீதியிலான இயக்கம். பார்ப்பனர் / பார்ப்பனர் அல்லாதார் அந்த அடிப்படையில் வருகிறது. இதில் வர்க்கம் சார்ந்த அடிப்படையான பார்வைகளில்லை. அந்த மாதிரித்தான் பெரியார் மார்க்சியத்திலிருந்து வேறுபடுகிறார்.

தற்பொழுது வரை வெளிவந்த மார்க்சிய இலக்கியப் படைப்புகளில் மார்க்சிய அழகியலை மட்டும் தனித்து அடையாளங் காண முடியுமா?

மார்க்சிய அழகியல் என்று எதைச் சொல்லலாம்? பொதுவாக இலக்கியம், இலக்கிய அழகியல் என்றுதான் சொல்ல வேண்டுமென்று நான் நினைக்கிறேன். ஆனால், மார்க்சியத்திற்கென்று தனியாக அழகியல் சிந்தனைகளை மார்க்சிஸ்டுகள் இலக்கியம் மூலமாக வளர்த்தெடுக்கவில்லையென்று நான் சொல்லுவேன். ஆனால் மார்க்ஸ், எங்கெல்ஸ், மாவோ போன்ற மார்க்சியவாதிகள் இலக்கியத்தைப் பற்றி, கதையைப் பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள். அது பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஆனால், அதனடியாக ஒரு இலக்கியக் கோட்பாட்டை வளர்த்தெடுக்கவில்லை என்பது பொதுவான கருத்து.

ஆனால் அவர்களுடைய கருத்துக்களின், எழுத்துக்களின் அடிப்படையில் மார்க்சிய இலக்கியம் எவ்வாறிருக்க வேண்டுமென்கிற சிந்தனை நமக்குக் கிடைக்கவில்லை. பிற்காலத்தில் வந்த மார்க்சிய அறிஞர்கள், விமர்சகர்கள் அது பற்றி வளர்த்தெடுத்திருக்கிறார்கள

சபேசன்

நான் உங்களின் வளத்துக்கே வருகிறேன். பெரியாருக்கும் தேசிய தலைவருக்கும் கருத்து ஒற்றுமை இருக்கிறதா...?? இல்லை எண்று நான் அடித்து சொல்கிறேன்...!

தலைவர் அவர்களின் கோட்பாடே தமிழர்களுக்கு சுயநிர்ணயம் உண்டு, தேசியம் உண்டு என்பதன் அடிப்படையில் கட்ட பட்டது... தமிழர்களுக்கான வரலாற்ரையும் தலைவர் ஏற்று கொண்டுதான், அதன் வளியில் புலிக்கொடியை தமிழர் தேசிய கொடியாக பிரகடனம் செய்தார்...

ஆனால் பெரியார் தேசியம் என்பதனை கடுமையாக எதிர்கிறார்...

எப்படி சொல்கிறார் எண்டால்

  • தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள் அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையான மக்கள் பாமரராயும், தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்க்கும் வாழ்விற்க்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களாலும் அதிகாரப்பிரியர்களாலும் சோம்பேறி வாழக்கைச் சுபாவிகளாலும் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது

நண்றி தமிழ்சசி

அதையும் விட பெரியார் சொன்னவைகளில் பலதும், கூட இருந்த அறிஞர் அண்ணாவால் கூட ஏற்று கொள்ள படவில்லை...

தமிழருக்கு வரலாறு இல்லை என்கிறார் பெரியார்... அதுக்கு பேராசிரியர் கா. சிவதம்பியின் பதில் இப்படி இருக்கிறது...

  • தமிழர்களுக்கு வரலாறு இல்லை என்பது பற்றி...?? (கேள்வி)

    உண்மையில் தமிழர் வரலாறு இந்திய வரலாற்றின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று. குறிப்பாக 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 12ஆம் நூற்றாண்டு வரை இந்தியப் பண்பாட்டின் மேலோங்கிய அம்சமாக விளங்கிய பல்லவ சோழர் காலங்கள் இந்தியப் பண்பாட்டின் உயர் கட்டங்களாக விளங்கியவை. அது மட்டுமல்ல வட இந்தியாவில் கங்கைக் கரையில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையில் இருந்து வேறுபட்ட இன்னொரு நிலைப் பட்ட வாழ்க்கை முறையினை தெற்கிலே உள்ள தமிழகத்து வரலாறு மூலம் நாங்கள் காண்கிறோம். அது அந்தப் பண்பாட்டிற்கு, அந்த வாழ்க்கை முறைக்கு அந்த வரலாற்று ஓட்டத்திற்கு எதிர்நிலைப்பட்ட இன்னொரு தளநிலைப்பட்டது

    இந்தப் பிரதேசத்தின் வரலாறு அந்த வரலாறோடு எப்ப சேர்வது. அதற்கு முந்தைய அதன் நிலவரம் என்ன என்று பார்க்கலாமே தவிர தமிழர்களுக்கு வரலாறு இருக்கா என்பது ரொம்ப கொச்சைப்படுத்தின, புலமையாளருடைய வாயில் வராத ஒரு வாதம் என்பது எனது மிகத் தாழ்மையான கருத்து. தமிழ்நாட்டு வரலாறு இந்திய பொதுவான பண்பாட்டுக்களித்த பெருங்கொடைகள் ஏராளமாக உண்டு. துரதிஷ்டவசமாக, கடந்த 25 வருடங்களாக மத எதிர்ப்பு, திராவிட கருத்து நிலை காரணமாக நாங்கள் பக்தி இயக்கங்களை முன்னிறுத்தவில்லை. ஆனால் உலக இலக்கிய நிலையில் தமிழின் மிகப் பெரிய சிறப்புகளில் ஒன்று அதிலே உள்ள பக்தி இலக்கியங்கள். காரைக்கால் அம்மையார், ஆண்டாள், திருநாவுக்கரசர், நம்மாழ்வார், மாணிக்கவாசகர் இவர்கள் எல்லாம் பக்தி இலக்கியங்களை இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கே அளித்த பெரிய மனிதர்கள். இதை நான் சொல்வதாலேயே சிவத்தம்பி மார்க்சிஸ்ட் அல்ல என்று சொல்வார்கள். அது ஒரு பாடமாக நான் பார்க்கிறேன்.

    உங்களுக்குத் தெரியுமா பெரியார் கடைசி வரையில தனக்கிருந்த கோயில் உரிமையை யாருக்கும் எழுதித் தரவில்லை. கோயில் என்பது வெறுமனே தெய்வ நம்பிக்கை இல்லை. ஒரு சமூக அதிகாரம். அந்தக் கிராமத்தில் உள்ள கோயில்ல எனக்கு எட்டாந்திருவிழா நான் அதை நடத்துறேன் என்று சொன்னால் அது அந்த அந்த கிராமத்துல உள்ள சமூகத்துல உள்ள ஒரு அந்தஸ்த்து பற்றிப் பேசுவது. ஆண்டான் அடிமை முறையை வலுப்படுத்துவதாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் ஆண்டான் அடிமை முறை காரணமாக எல்லாம் கெட்டுப் போச்சுன்னு சொல்ல முடியாது.

நண்றி கீற்றும் அதன் பேட்டியாளருக்கும்...

இப்படி தேசிய தலைவரின் கொள்கையில் இருந்து பெரியார் அடிப்படையிலேயே விலகி நிக்கிறார்....

Edited by தயா

தயா!

பெரியார் காலத்தில் தேசியம் என்றால் எதுவென்று உங்களுக்கு தெரியாதா? இன்றைக்கும் இந்திய உபகண்டத்தில் தேசியம் என்றால், அது இந்தியத் தேசியம்தான். நீங்கள் தமிழ்நாட்டு ஊடகங்களை படிக்கின்ற போது கவனித்திருப்பீர்கள், மாநிலக் கட்சிகள், தேசியக் கட்சிகள் என்று எழுதுவார்கள். தேசியம் என்று அவர்கள் சொல்வது இந்திய தேசியத்தைத்தான்.

இந்திய தேசியத்தை ஏற்றுக்கொள்ளாத பெரியார், "தேசியம்" என்ற பெயரில் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்தே அப்படிப் பேசினார்.

இதற்கும் தமிழீழ தேசிய எழுச்சிக்கும் நீங்கள் முடிச்சுப் போடக்கூடாது. இந்தியத் தேசியம், இலங்கைத் தேசியம் என்பன "தேசியம்" என்ற பெயரில் மக்களை அடக்கத்தான் பயன்படுகின்றன.

இந்தத் "தேசியத்தில்" இருந்து வெளிவர வேண்டும் என்பதுதான் பெரியார் சொன்னது.

ஆகவே பெரியார் இந்திய தேசியத்தை எதிர்த்து எழுப்பிய குரலும், தமிழீழ மக்கள் இலங்கைத் தேசியத்தை எதிர்த்து எழுப்புகின்ற குரலும் ஒன்றுதான்.

அடுத்தது "தமிழர்களுக்கு வரலாறு இல்லை" என்பது.

பெரியார் கூறியதற்கும் பேராசிரியர் சிவத்தம்பி கூறியதற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்று நினைக்கிறேன்.

"தமிழர்கள் தீடிரென்று வரலாறு இல்லாமல் மண்ணில் இருந்து முளைத்தவர்கள் அல்ல" என்பது பெரியாருக்கும் தெரியும். அனைத்து இனங்களுக்கும் வரலாறு உண்டு. ஆனால் தமிழர்களின் வரலாறு அழிக்கப்பட்டிருக்கிறது.

ஆரியர்களாலும், கடற்கோள்களாலும், அனல்வாதம் புனல்வாதம் என்ற பெயரில் நாயன்மார்களாலும் தமிழர்களின் வரலாற்றுச் சான்றுகள் நிறைய அழிக்கப்பட்டுவிட்டன.

இதைத்தான் மேடைப் பேச்சுக்களில் "தமிழர்களுக்கு வரலாறு இல்லை" என்று குறிப்பிடுவார்கள்.

இதை தமிழீழத்திலும் பல மேடைகளில் கேட்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டில், ஈழத்திலும் தமிழர்களின் வரலாறு எதிரிகளால் அழிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தில் தமிழர்களின் வரலாறு எதுவென்ற கேள்விக்கு இன்று வரை ஒருமித்த பதிலை வைக்க முடியாது திணறுகிறோம். தமிழ்நாட்டிலும் அப்படித்தான்.

இப்படி தமிழர்கள் வரலாறு இல்லாமல் இருக்கிறார்கள். தமிழர்களின் வரலாற்றை தோண்டி எடுக்க வேண்டும்.

பெரியார் "தமிழர்களுக்கு வரலாறு இல்லை" என்று சொன்னதன் அர்த்தம் இதுதான். இதுவும் ஈழத்திற்கு பொருந்துகிறது.

Edited by சபேசன்

சபேசன்.!!

தேசிய தலைவரையும் பெரியார் சிந்தனைகளையும் போட்டு குழப்ப வேண்டாம் எண்றதுக்கு அதுதான் காரணம்.. இல்லை எண்று கட்டாய படுத்தியது நீங்கள்தான்... இப்போ அவைகளுக்கு விளக்கம் எல்லாம் தேவை அற்றது... அடிப்படையில் எங்களுக்கும் பெரியாருக்கும் சம்பந்தமே இல்லை... இது எனது கருத்து அல்ல... முடிவு...!

பெரியார் காலத்தில் தந்தை செல்வநாயகம் வலிந்துபோய் பெரியாரை சந்தித்ததும் தெரியும் அதுக்கு பொரியார் பட்டும் படாமல் பேசியதும் தெரியும்... ரஸ்யாவில் மாக்ஸிசமும் , இலங்கையில் பௌத்தமும் கற்று அவர்களோடு ஒண்றி உறவாடிய பெரியாரால் ஈழதமிழர்களுக்கு ஆதரவளிக்க முடியாது என்பதும் தெரியும்...

பெரியாரை நான் மதிப்பதில்லை எண்று முடிவு எடுத்தது முக்கிய காரணமே அதுதான்...

பெரியார் வரலாறு இல்லை எண்று சொன்னதுக்கு காரணம் தமிழர்களின் வரலாறு என்பது (கண்ணுக்கு எட்டிய தூரம் வரை) சைவத்தோடு சேர்ந்தே இருப்பதினால்தான் இதை நீங்கள் திரிக்க வேண்டாம்... தமிமிழர் வரலாற்றை பெரியார் எற்றுக்கொண்டால் சைவதை ஏற்று கொள்ள வேண்டி வரும் என்பதினால்...

தேசியம் என்பது பற்றி பெரியார் ஒட்டு மொத்த இந்தியனும் ஒண்றாக இருக்க வேண்டும் மானில சுயாட்ச்சி மட்டும் போதுமானது எனும் கொள்கையில் இருந்ததால் வந்தவை... அது சம்பந்தமான இணைப்புக்கள் வேண்டுமானால் தருகிறேன்...

Edited by தயா

ஈழத் தமிழ் போராட்டக் குழுவினர் பெரியாரை சந்தித்த போது, ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தார். ஈழப் போராட்டத்தை ஆதரித்து விடுதலையில் கட்டுரையும் வெளியிட்டார்.

இதுதான் வரலாறு. இதற்கு ஆதாரம் இருக்கிறது.

ஆனால் எப்படி காலம் காலமாக தமிழர்களின் வரலாற்றை எதிரிகள் திரித்தார்களோ, அதே போன்று தமிழர்களின் பெரும் எழுச்சி வடிவமாகிய பெரியாரின் வரலாற்றையும் யாரோ திரித்து உங்களுக்கு சொல்லி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ஈழத் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்ததையும், அதற்கான சான்றுகள் இருந்ததையும் நீங்கள் அறியவில்லை என்று நினைக்கிறேன்.

ஈழத் தமிழர்களின் வரலாற்றில் பௌத்தத்திற்கும் சைவத்திற்கும் பெரும் பங்கு உண்டு. இதில் எதையும் மறைத்து விட்டு ஈழத் தமிழர்களின் வரலாற்றை எழுத முடியாது.

ஆனால் பெரியார் இவைகளை எல்லாம் கருத்தில் கொண்டு, ஈழப் பிரச்சனையில் பட்டும்படாமலும் இருந்தார் என்று நீங்கள் சொல்வது மிகவும் ஆச்சரியம் தருகிறது.

பெரியாரின் போராட்டம் என்பது தான் வாழும் நாட்டின் மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்பதுதான்.

உண்மையில் பார்ப்பனியம் அங்குள்ள மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறை, ஈழத்தில் தமிழர்கள் மீது சிங்களம் செய்த வன்முறையை விட மிகப் கொடியது. பார்ப்பனிய வன்முறையை எதிர்த்து போராடிய பெரியாருக்கு ஈழப் பிரச்சனை இரண்டாம் பட்சமாகத்தான் இருந்திருக்கும்.

எமக்கு இன்றைக்கு காவிரிநீர் பிரச்சனை எத்தனையாம் பட்சம்? அவரவர்களுக்கு அவரவர் நடத்துகின்ற போராட்டம்தான் முக்கியமாக இருக்கும். நாம் மலையகத் தமிழர்கள் பற்றியே அதிகம் பேசுவது இல்லை.

இதற்குள் பெரியார் ஈழப் போரட்டத்தில் தீவிரமாக, அதுவும் அன்றைய காலகட்டத்தில் இருந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரி அல்ல. அன்றைக்கு ஈழப் போராட்டமும் தீவிரமாக இல்லை. பெரியாரும் ஈழப் பிரச்சனையில் தீவிரம் காட்டவில்லை.

இன்றைக்கு ஈழப் போராட்டம் தீவிரமாக இருக்கிறது. பெரியார் இல்iயென்றாலும் அவருடைய தொண்டர்கள் எம்மை தீவிரமாக ஆதரிக்கிறார்கள்.

தயா! ஈழத்தை சம்பந்தப்படுத்தி நீங்கள் பெரியார் மீது வைக்கும் குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல. இன்றைக்கு பெரியார் தொண்டர்கள் எமக்காக செய்கின்ற போராட்டங்களுக்கு முடிந்தால் பெரியாருக்கு நன்றி சொல்லுங்கள்

உங்களுக்கு பெரியார் பற்றி யாரோ தவறான தகவலை தந்திருக்கிறார்கள். பெரியார் பற்றி சரியாக அறியும் போது, உங்களுடைய நிலைப்பாடு நிச்சயம் மாற்றம் அடையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு

சபேசன்

தமிழ் சசி அவர்களின் பதிவு இது... பெரியாரை மதிப்பர்வகளில் சசியை விலக்க முடியாது... ஆகவே இவர் ஈழ தேசியதையும், இந்திய தமிழ் தேசியதையும் (கொஞ்சம் உங்களின் சாயலில்தான்) பிரித்து பார்க்கிறார்... அந்தகாலத்தில் பெரியார் தேசியம் என்பதை ஆதரிக்க வில்லை... நீங்கள் இதை உங்களுக்கு சாதகமாக பரிசீலிக்காதீர்கள்... ஈழ தமிழர் தேசியம் வேறு, இந்திய தமிழர் தேசியம் என்பது வேறு என்பதை பெரியாரின் வளியில் பிரித்து பார்த்து இருக்கிறார்...!

இதை படியுங்கள் எனது கருத்தை பிறகு சொல்கிறேன்...!

http://blog.tamilsasi.com/2007/07/tamil-na...tamil-nadu.html

இதன் பின்னூட்டங்களியும் மறக்காமல் படியுங்கள்...

பெரியார் தந்தை சொல்வாவை தானாக அழைத்து பேச இல்லை ... வலிய போய் அவரிடம் பேசியவருக்கு அவர் சில நல்ல வார்த்தைகளோடு அனுப்பியும் வைத்தார்... அதுக்கு பிறகு இப்போதைய அரசியல் தலைவர்களில் பலர் செய்வதை சொல்லி கொடுத்தவர் பெரியார் என்னும் அளவுக்குதான் அவரின் செயற்பாடு இருந்தது...! அதுக்கு கட்டுரை மட்டும் வரைந்தார் என்பது நகைப்புக்கு இடமானது... கேட்டு பெருவது இல்லை ஆதரவு. தார்மீகமாக கொடுப்பது...! தந்தை செல்வா என்ன பிச்சையா கேட்டார்...!!

அவருக்கு இந்தியாவில் பெரிய வேலைகள் இருக்கலாம்... அதனால் குரல் கொடுக்க வில்லை என்ற்று நீங்கள் பதிலும் சொல்லாம்... ஆனால் பெரியார் தமிழகளின் சேகுவரா கிடையாது...!! இதுதான் உண்மை...!!

பெரியார் தொண்டர்கள் செய்யும் உதவிகளை நினைத்துதான் இதை இங்கு எழுத வேண்டாம் எண்று முதலிலேயே சொல்ல ஆரம்பித்தேன்...!! அப்படி ஒப்பிடுவது பிழையானது என்பதை நான் இங்கு சொல்லவில்லை , ஏற்படும் விளவுகள் பிரச்சினையை கிழப்பும் என்பதை சொல்லவில்லை என்கிறீர்களா..??

அதனால் ஒரு பக்கதை நிர்வாகமும் மூடி வைத்து இருக்கிறது...! அதை எல்லாம் இல்லை எண்டும் அவர்களுக்குள்ளே இருக்கும் ஒற்றுமையை சொல்வதில் தவறு இல்லை எண்று சொன்னவர் தாங்கள்தான்...! அப்போ ஒற்றுமை கிடையாது என்பதை சொல்வதிலும் தவறு கிடையாது இல்லையா...??

குறிப்பு:- இதை யாரையும் புண் படுத்த நான் எழுத விளையவில்லை...! தேவை ஏற்பட்டால் நிர்வாகம் எனது ஆராய்வுகளையும் பதிவையும் நீக்கிவிடுமாறு வேண்டுகிற்றென்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.