Jump to content

இரானில் இருந்து தப்பிய தமிழக மீனவர்கள் 3,500 கி.மீ. கடல் பயணம் - வழிமறித்த கத்தார் கடற்படை என்ன செய்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்நாட்டு மீனவர்கள், இரான்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 24 மே 2024
    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
இரான் மீன்பிடி படகில் இந்திய மீனவர்கள் 6 பேர் தப்பி வர என்ன காரணம்?
படக்குறிப்பு, இரான் படகில் தப்பி வந்த நித்திய தயாளன் மற்றும் பிற தமிழக மீனவர்கள்

இரான் நாட்டில் இருந்து தப்பி கடல் வழியாக விசைப்படகு மூலம் இந்தியா வந்த தமிழக மீனவர்கள் 6 பேர், சமீபத்தில் தங்கள் குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். ஆனால் அவர்களது பயணம் அவ்வளவு எளிதானதாக இல்லை. பல ஆபத்துகளைத் தாண்டி அவர்கள் எப்படி நாடு திரும்பினர் என்பதை பிபிசியிடம் பகிர்ந்துகொண்டனர்.

கடந்த மே 6 ஆம் தேதி இந்திய கடலோர காவல் படை, எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டிருந்தது. இரானைச் சேர்ந்த படகுடன் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த நபர்கள் கேரள கடற்கரை எல்லையையொட்டி சுற்றி வளைக்கப்பட்டனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

விசாரணையின் போது, இரான் நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மீன்பிடி படகை இயக்கியது இந்தியர்கள் என்றும், மோசமான வேலை சூழல் காரணமாக உரிமையாளரின் படகை பயன்படுத்தி இந்தியாவுக்கு தப்பி வந்ததாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரான் நாட்டிலிருந்து தப்பி கடல் வழியாக விசைப்படகு மூலம் இந்தியா தப்பி வந்த தமிழக மீனவர்கள் 6 பேர் குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர்.

வேலை செய்த இடத்திலிருந்து சொந்த ஊருக்கு இந்த மீனவர்கள் தப்பி வர துணிந்தது ஏன்? சர்வதேச கடல் எல்லையில் எப்படி மீன்பிடி படகை வைத்து இந்தியாவுக்கு தப்பி வர முடிந்தது? கடலில் மீனவர்களை சூழ்ந்த அமெரிக்க கடல்படை செய்தது என்ன? தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அமெரிக்க கடற்படையிடம் மீனவர்கள் என்ன சொன்னார்கள்?

இரான் மீன்பிடி படகில் இந்திய மீனவர்கள் 6 பேர் தப்பி வர என்ன காரணம்?
படக்குறிப்பு,நித்திய தயாளன்

இரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்தது ஏன்?

இரானிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த மீனவர்கள் ஆறு பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியை சேர்ந்த நித்திய தயாளன், அருண் தயாளன், கலைதாஸ், வாலாந்தரவையை சேர்ந்த ராஜேந்திரன், பாசிப்பட்டினத்தை சேர்ந்த முனீஸ்வரன், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சேர்ந்த மரிய டெனில் ஆகிய 6 பேரும் மீன்பிடி தொழிலில் ஈடுபட இந்தியாவிலிருந்து ஒப்பந்த தொழிலாளர்களாக இரானுக்கு சென்று இருந்தனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ந்தேதி இரான் நாட்டைச் சேர்ந்த செய்யது சவூத் ஜாஃப்ரி என்பவரால் மீன்பிடி வேலைக்காக தாங்கள் பணி அமர்த்தப்பட்டதாக இவர்கள் கூறுகின்றனர்.

“கடந்த சில ஆண்டுகளாக எங்கள் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு மீன்பாடு இல்லை. மீன்களுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் எங்கள் பகுதியில் உள்ள பல மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அதனால் என் தம்பியும், நானும் மீன்பிடி தொழிலுக்காக இரானுக்கு சென்றோம்,” என்று பிபிசியிடம் கூறினார் மீனவரான நித்திய தயாளன்.

இரானில் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, ஒப்புக்கொண்ட மீன்பிடி பங்கு தொகையை கொடுக்கவில்லை என்பதால் 6 பேரும் இரான் நாட்டில் இருந்து தப்பி கடந்த ஏப்ரல் 22ஆம் ஜாஃப்ரியின் விசைப்படகு மூலம் கடல் வழியாக இந்தியாவுக்கு பயணத்தை தொடங்கியதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

மே 5ஆம் தேதி மீனவர்கள் இரான் நாட்டு படகுடன் டீசல் இல்லாமல் நடுக்கடலில் தத்தளித்து நின்று கொண்டிருப்பதை கண்ட இந்திய கடலோர காவல்படை மீனவர்களை படகுடன் மீட்டு கொச்சிக்கு அழைத்துவந்து விசாரித்திருக்கின்றனர்.

இதையடுத்து மீனவர்கள் ஆறு பேரும் பாதுகாப்பாக தங்களை சொந்த ஊர் அனுப்பி வைக்க அரசு அதிகாரிகள் வழியாக உதவி கோருமாறு மீனவர்களின் உறவினர்கள் கூறியதையடுத்து குமரியில் உள்ள தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் இடம் தகவல் கொடுத்தனர்.

அருட்பணியாளர் சர்ச்சில் கொச்சின் கடலோர காவல் படை அலுவலகம் சென்று மீனவர்களை அங்கிருந்து மீட்டு மீனவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

ஒப்படைக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 7ஆம் தேதி மாலை சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தனர்.

 

3500 கி.மீ. நீண்ட கடல் பயணம்

இரான் மீன்பிடி படகில் இந்திய மீனவர்கள் 6 பேர் தப்பி வர என்ன காரணம்?

இரான் நாட்டின் பந்தர் சிரோயா என்ற கடற்கரை கிராமத்தில் இருந்து சுமார் 3500 கிலோ மீட்டர் கடல் வழி பயணத்தில் சந்தித்த பிரச்னைகள் குறித்து பிபிசி தமிழிடம் விரிவாக பேசினார் திருப்பாலைக்குடியை சேர்ந்த படகு ஓட்டுநர் நித்திய தயாளன்.

"நான் எனது தம்பி அருண் தயாளன், கலைதாஸ், ராஜேந்திரன், முனீஸ்வரன் மற்றும் குளச்சலை சேர்ந்த மரிய டெனில் ஆகிய ஆறு பேரும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகவர் ஒருவரை அணுகி அவரிடம் தலா ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் மீன்பிடி தொழிலுக்காக இரான் நாட்டிற்கு சென்றோம். மீன்களை பிடித்து அதை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மீனவர்களுக்கு பங்குத் தொகை கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த வேலைக்கு சேர்ந்தோம்."

தொடக்கத்தில் பங்குத் தொகையை முறையாக கொடுத்துவந்த முதலாளி, கடந்த ஆறு மாதங்களாக பங்குத் தொகையை கொடுக்கவில்லை என்கிறார் நித்திய தயாளன்.

"அவரிடம் பணம் கேட்கும் போதெல்லாம் ‘மீனுக்கு விலை கிடைக்கவில்லை, நஷ்டம் ஏற்பட்டு விட்டது, அதனால் பணம் கொடுக்க முடியாது, அடுத்த முறை பார்த்து கொள்ளலாம்’ என கூறி உணவு சமைப்பதற்கான பொருட்களை மட்டுமே வழங்கி மீன்பிடி தொழிலுக்கு அனுப்பி வந்தார்."

இரான் நாட்டின் பண மதிப்பு குறித்தும், மீன் விற்பனை செய்யும் சந்தை குறித்து தங்களுக்கு போதிய தகவல் தெரியாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அந்த முதலாளி, பங்குத் தொகை கொடுக்காமல் ஏமாற்றியதாக தப்பி வந்த மீனவர்கள் கூறுகின்றனர்.

"எங்கள் பக்கத்து படகில் பணி செய்யும் மீனவர்களுக்கு அந்த படகின் முதலாளி நல்ல தொகையை பங்கு தொகையாக கொடுத்து வந்தது தெரிய வந்ததையடுத்து எங்க முதலாளியிடம் பணம் கேட்டோம். அதற்கு அவர் பங்கு தொகையை கொடுக்க முடியாது, நீங்க எல்லாரும் எனக்கு அடிமை. என்னை மீறி உங்களால் எதுவும் செய்ய முடியாது,” என்று தங்களை மிரட்டியதாக நித்திய தயாளன் பிபிசியிடம் கூறினார்.

இதையடுத்து மீனவர்கள் அனைவரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மாட்டோம் என கூறியதையடுத்து அவர்களுக்கு உணவு சமைக்க வழங்கப்பட்ட பொருட்களும் நிறுத்தப்பட்டதாக இரானில் நடைபெற்ற சம்பவங்களை மீனவர் நித்திய தயாளன் விவரித்தார்.

தமிழ்நாட்டு மீனவர்கள், இரான்

உணவின்றி தவித்த மீனவர்கள்

தமிழக மீனவர்களுக்கும், இரானில் அவர்களை வேலைக்கு அமர்த்திய நபருக்கு மோதல் போக்கு வலுக்கவே அனைவரையும் இந்தியாவுக்கு அனுப்புமாறு மீனவர்கள் கேட்டிருக்கின்றனர்.

"பல நாட்கள் உணவின்றி தவித்த நிலையில் வேறு வழியில்லாமல் பக்கத்து படகில் இருந்த நண்பர்களிடம் வாங்கி சாப்பிட்டு வந்தோம். ஒரு வாரம் ஆன பின்னரும் எங்கள் முதலாளி தொடர்பு கொள்ளாததால், அவருக்கு போன் செய்து கணக்கு பார்த்து எங்களை இந்தியாவுக்கு அனுப்புமாறு கேட்டேன். ஆனால் ‘உன்னுடைய பாஸ்போர்ட் என்னிடம் இருக்கிறது. உன்னால் ஊருக்கு போகமுடியாது’ என்று மிரட்டினார்."

இரானில் இருந்து தப்பிவரத் திட்டமிட்டது எப்படி?

வெளிநாட்டில் கஷ்டப்படுவது குறித்து குடும்பத்தினருக்கு தெரிந்தால் கவலை அடைவார்கள் என்று கருதி இதை வெளியே சொல்லாமல் நாட்களை கடத்திக் கொண்டு இருந்தாக தப்பி வந்த மீனவர்கள் கூறினர்.

"திடீரென ஒரு நாள் வீட்டுக்கு போன் செய்ய முடியாத வகையில் வைஃபை (WIFI) இணைப்பை முதலாளி துண்டித்தார். இது இருந்தால்தானே வேலை செய்யாமல் வீட்டுக்கு போன் பேசுவீங்க என்று கூறி அதை எடுத்துச் சென்றார். இதனால் நாங்கள் எங்கள் குடும்பதினருடன் பேச முடியாமல் மிகுந்த கஷ்டப்பட்டோம்," என்றார் நித்திய தயாளன்.

"எங்களுக்கு இருந்த ஒரே சந்தோஷம் வீட்டில் உள்ளவர்களிடம் போன் பேசுவது தான். அதுவும் இல்லாத நிலையில் உணவின்றி படகில் இருந்த ஆறு பேருக்கும் மன இறுக்கம் அதிகமாகியது. சாப்பாடு கொடுக்காமல் முதலாளி சித்ரவதை செய்வார் என பயந்து இந்தியாவுக்கு எப்படியாவது தப்பிச் செல்ல வேண்டும் என்று அனைவரும் முடிவெடுத்தோம்," என பிபிசியிடம் பேசிய போது நித்திய தயாளன் கூறினார்.

ஏற்கெனவே பங்குத் தொகை கொடுக்காமல் ஏமாற்றப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல தூதரகத்தை அணுக பயமாக இருந்ததால், யாருக்கும் தெரியாமல் படகுடன் இந்தியா வர அனைவரும் சேர்ந்து திட்டமிட்டதாக பிபிசியிடம் கூறினார் மீனவரான ராஜேந்திரன்.

திட்டமிட்டபடி, மீன் பிடிக்க கடலுக்கு செல்வதாக முதலாளியிடம் கூறி, டீசல், ஐஸ், உணவு பொருட்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டோம்.

இரான் அரசு மீன்பிடி படகுகளுக்கு, மாதம் பத்தாயிரம் லிட்டர் டீசலை மானியமாக கொடுக்கும். அந்த டீசலை கிஷ் தீவுக்கு சென்று பெற்று வந்த பிறகு மீன்பிடிக்க செல்வதாகக் கூறிவிட்டு, இந்தியா நோக்கி பயணத்தைத் தொடங்கியதாக நித்திய தயாளன் கூறினார்.

சுமார் 10 ஆயிரம் லிட்டர் டீசல் மற்றும் நான்கு நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களுடன் ஜிபிஎஸ், ரேடார் கருவி உதவியுடன் சர்வதேச கடல் வழியாக இரான் நாட்டில் இருந்து இந்தியா நோக்கி ஏப்ரல் மாதம் 22ஆம் படகில் புறப்பட்டதாக அந்த நாளை விவரித்தார் அவர்.

 
தமிழ்நாட்டு மீனவர்கள்
படக்குறிப்பு,இரான் படகில் தப்பி வந்த நித்திய தயாளன் மற்றும் பிற தமிழக மீனவர்கள்

மீன்பிடி படகின் அம்சங்கள்

மீன்பிடி படகை நம்பி எப்படி 3500 கி.மீ பயணத்தை மேற்கொள்ள துணிந்தீர்கள் என பிபிசி மீனவர்களிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த நித்திய தயாளன், அந்த மீன்பிடி படகின் வசதிகள் குறித்து நம்மிடம் விவரித்தார்.

“நாங்கள் பயணித்த மீன்பிடி படகு 33 மீட்டர் நீளம் கொண்ட பெரிய படகு. ஓட்டுநர் அறை, ஓய்வெடுக்கும் அறை என படகு முழுவதும் ஏசி வசதி உள்ளது. ஜெனரேட்டர், கழிப்பறை என அனைத்து வசதியும் கொண்டது.”

தொடர்ந்து பேசிய அவர், தங்களிடம் இருந்த படகு ஓராண்டுக்கு முன்பு வாங்கிய நவீன மீன்பிடி படகு. அந்த படகில் ஜிபிஎஸ் கருவி, ரேடார் வசதி, சேட்டிலைட் போன் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. அந்த கருவிகளின் உதவியுடன் இந்தியாவுக்கு வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் இரானிலிருந்து பயணத்தை தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.

நடுக்கடலில் மீனவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

இரானிலிருந்து இந்தியா நோக்கி கடலில் வந்து கொண்டிருந்த போது, நான்காவது நாள் அன்று கத்தார் கடற்படையினாரால் இந்த ஆறு மீனவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர். கத்தார் கடல் எல்லையில் அந்த படகு இருப்பதாக கூறி இரான் நோக்கி திரும்பிச் செல்லுமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

"கத்தார் கடற்படை நாங்கள் தப்பிச் செல்வது குறித்து முதலாளியிடம் சொல்லி விடுவார்கள் என அஞ்சி அரேபிய முதலாளியால் ஏமாற்றப்பட்டதை எடுத்துக் கூறி, இந்தியாவுக்கு படகில் தப்பி செல்கிறோம். வேண்டுமானால் கைது செய்து இந்திய தூதரகத்திடம் ஒப்படையுங்கள் என்று கெஞ்சினோம்," என்றனர் மீனவர்கள்.

கத்தார் கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்படும் நபர்கள் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதால், சர்வதேச கடல் எல்லை வழியாக இந்தியாவுக்கு செல்லுமாறு கத்தார் கடற்படை மீனவர்களிடம் தெரிவித்ததாக நித்திய தயாளன் கூறுகிறார்.

தமிழ்நாட்டு மீனவர்கள், இரான்

பட மூலாதாரம்,X/INDIACOASTGUARD

கடல் நீரை காய்ச்சி குடித்து உயிர் வாழ்ந்ததாகக் கூறும் மீனவர்கள்

சர்வதேச கடல் எல்லையில் தொடர்ந்து பயணித்த போது உணவு மற்றும் குடிநீர் இருப்பு காலியாகி கொண்டே வந்தது.

"ஒரு நாளைக்கு ஒருவேளை உணவை மட்டுமே அனைவரும் சாப்பிட்டு கடல் நீரை காய்ச்சி குடித்து கொண்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற உறுதியுடன் தொடர்ந்து பயணித்தோம்."

5 நாள்கள் கடந்த நிலையில், இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த மீனவர்களை, கடந்த 27ஆம் தேதி அமெரிக்க கடற்படை கப்பல் சுற்றி வளைத்திருக்கிறது.

"எங்களை தடுத்து நிறுத்திய அமெரிக்க கடற்படை, கைது செய்யப் போவதாக ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர். கப்பலில் இருந்த அமெரிக்க கடற்படையினருடன் எங்களுக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேசி இந்தியாவுக்கு தப்பித்து செல்லும் கதையை கண்ணீருடன் விவரித்தோம்," என்கிறார் நித்திய தயாளன்.

இரானிலிருந்து புறப்பட்டு துபாய், ஓமன் போன்ற நாடுகளின் கடல் எல்லையையொட்டி படகில் பயணித்து வந்தோம். அமெரிக்க கடற்படை எங்களை ஓமன் நாட்டை ஒட்டிய கடல் பரப்பின் அருகே தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதாக நித்திய தயாளன் நினைவு கூர்ந்தார்.

அப்போது அதில் இருந்த கடற்படை உயர் அதிகாரி ஒருவர் தங்கள் மீது இரக்கம் கொண்டு மருத்துவ உதவிகள் செய்ததுடன் உணவும் வழங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் பரிந்துரை கடிதம் ஒன்றையும் மீனவர்களிடம் அமெரிக்க கடற்படை வழங்கியதுடன் சுமார் 30 நாட்டிக்கல் மைல் தூரம் மீனவர்களின் படகுக்கு பாதுகாப்பாக வந்ததாக பிபிசியிடம் பேசிய போது மீனவர்கள் விவரித்தனர்.

தமிழ்நாட்டு மீனவர்கள், இரான்

பட மூலாதாரம்,X/INDIACOASTGUARD

படக்குறிப்பு,கடலோரக் காவற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகு

"நடுவழியில் வேறு ஏதாவது கடற்படை தடுத்து நிறுத்தினால் அமெரிக்க கடற்படை வழங்கிய கடிதத்தைக் காட்டி விட்டு செல்லுமாறு அவர்கள் கூறினர்," என நித்திய தயாளன் கூறினார்.

அமெரிக்க கடற்படை தடுத்து நிறுத்திய பிறகு இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்வியை மீனவர்களிடம் கேட்ட போது அதற்கு பதிலளித்த ராஜேந்திரன், ”போதைப் பொருள் ஏதும் நாங்கள் கடத்துகிறோமா என்று தான் அவர்கள் சோதனை செய்தனர். ஆனால் சோர்வாக அரை மயக்கத்தில் இருந்த எங்களை பார்த்த பிறகு அமெரிக்க கடற்படை சார்பாக வேறு யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. எங்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து உணவை மட்டும் அவர்கள் வழங்கினார்கள்,” என்றார்.

இரானில் இருந்து புறப்பட்ட போது இருந்த உணவு கையிருப்பு தீர்ந்து போன சமயத்தில் அமெரிக்க கடற்படை வழங்கிய உணவு மீனவர்களுக்கு உதவியாக இருந்துள்ளது.

“அவர்கள் எங்களுக்கு தண்ணீர், உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா, முந்திரி, சிகரெட், கூலிங் கிளாஸ், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பினை வழங்கினர். அமெரிக்க கடற்படை கொடுத்த உணவு எங்களுக்கு மூன்று, நான்கு நாட்களுக்கு போதுமானதாக இருந்தது.”

தொடர்ந்து பேசிய நித்திய தயாளன், “அவ்வப்போது கடலில் தூண்டில் போட்டு மீன் பிடித்து அதை சுட்டு சாப்பிட்டோம். படகில் இருந்த அனைவருக்கும் எப்படியாவது இந்தியாவுக்கு தப்பி சென்று விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மட்டுமே இருந்தது. அடுத்த என்ன நடக்கப்போகிறது எனத் தெரியாமல் அச்சத்துடன் பயணித்ததால் எங்களுக்கு பல நேரங்களில் பசிக்கவில்லை,” என்றார்.

படகில் இருந்த மீனவர்களில், நித்திய தயாளன் படகை இயக்கி வந்த நிலையில், மீதமிருந்த மீனவர்கள் படகுக்குள் கடல் நீர் உள்ளே வராமல் தடுப்பது, சமையல் உள்ளிட்ட வேலைகளை கவனித்து வந்தனர்.

“குடும்பத்தை நினைத்துக் கொண்டே சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பு மட்டும் தான் உடன் இருந்தது. அதனால் அனைவரும் ஒருவேளை உணவை மட்டுமே சாப்பிட்டு வந்தோம்,” என்கிறார் ராஜேந்திரன்.

பயணத்தை தொடர்ந்த மீனவர்கள், படகில் டீசல் கையிருப்பு குறைவாக இருந்ததால், மணிக்கு 5 கி.மீ வேகத்தில் படகை இயக்கியதாக தெரிவித்தனர்.

“அமெரிக்க கடற்படையை சந்தித்ததில் இருந்து ஒரு நாளைக்கு சராசரியாக 140 கடல் மைல் தூரம் பயணித்து 840 கடல் மைல் கடந்து ஆறு நாட்கள் கழித்து இந்தியா வந்து சேர்ந்தோம்,” என்றார் ஓட்டுநரான நித்திய தயாளன்.

பழுதான படகால் மீண்டும் ஏற்பட்ட சிக்கல்

"எப்படியாவது இந்திய எல்லைக்குள் சென்று விட வேண்டும் என தொடர்ந்து பயணித்தோம். ஆனால் கடலில் காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதுடன் கடல் சீற்றமாக இருந்ததால் படகில் என்ஜின் கோளாறு ஏற்பட்டு கடல் நீர் படகுக்குள் புகுந்தது. இதனால் பதறிப்போன நாங்கள் உடனடியாக படகில் இருந்த தண்ணீரை அவசர அவசரமாக நீண்ட நேரம் போராடி வெளியேற்றினோம். தண்ணீர் புகுந்ததால் என்ஜின் வேலை செய்யாமல் போனது. எங்கள் ஆறு பேருக்கும் இதில் இருந்து மீண்டு எப்படி இந்தியா போக போகிறோம் என தெரியாமல் நிலை குலைந்து போனோம்," என தப்பி வந்த தருணங்களை நிகழ்வை நித்திய தயாளன் விவரித்தார்.

பல மணி நேரம் போராடி, படகின் என்ஜின் பழுதை சொந்த முயற்சியில் சரி செய்து மீனவர்கள் மீண்டும் பயணத்தை தொடர்ந்து இருக்கின்றனர்.

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த போது படகில் டீசல் இன்றி படகு நின்றது. அருகில் சென்ற படகு ஒன்றில் டீசல் கேட்டோம். ஆனால் தர மறுத்தனர்.

 
தமிழ்நாட்டு மீனவர்கள், இரான்

கடலோரக் காவல்படையின் கட்டுப்பாட்டில் மீனவர்கள்

சில மணி நேரம் கழித்து, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, இந்திய கடலோர காவல் படையினர் வெளிநாட்டு மீன்பிடி படகு அனுமதியின்றி இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக எங்களை படகுடன் மீட்டு கொச்சி கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர், என்றார் படகு ஓட்டுநரான நித்திய தயாளன்.

இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படையினர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தனர்.

பின்னர் கன்னியாகுமரியைச் சேர்ந்த தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் மேற்பார்வையில் மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் சொந்த ஊருக்கு மீனவர்கள் வந்துள்ளனர்.

இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய அருட்பணியாளர் சர்ச்சில், கடலில் டீசலின்றி மீனவர்கள் தவித்த தகவலை அருகில் வந்த மற்ற படகிலிருந்த மீனவர்களின் உதவியுடன் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் என்னை தொடர்பு கொண்ட பிறகு, மும்பையில் உள்ள ‘MARINE RESCUE RESEARCH CENTER’ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தேன். அதன் பேரில் கடலோர காவல்படை மீன்பிடி படகை மீட்டு கொச்சி மரைன் போலிசிடம் ஒப்படைத்தனர் என்று தெரிவித்தார்.

மீனவர்களிடம் இந்தியர்கள் என்பதை உறுதி செய்யும் எந்த ஆவணமும் இல்லாத நிலையில், உளவுத்துறை மூலமாக அவர்களின் உறவினர்கள் உதவியுடன் மீனவர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களா என்பதும் விசாரணை செய்யப்பட்டு, எந்த முகாந்திரமும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது என்றார் அவர்.

இது மீனவர்களுக்கும், அவர்களை வேலைக்கு அமர்த்திய உரிமையாளருக்கு இடையிலான பிரச்னை என்பதால், இதில் இந்திய அரசும், இரான் அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. மாறாக அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்த நிகழ்வு தனி வழக்காக கருதப்படும். ஆனால் மீனவர்களின் பாஸ்போர்ட் இரானிய முதலாளியிடம் உள்ளதால், வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லையென கூறி, மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்று அருட்பணியாளர் சர்ச்சில் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து கத்தார், குவைத், இரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு மீன்பிடி தொழிலாளர்களாக பல மீனவர்கள் செல்லும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுபோல மூன்று சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதனால் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தில் தனி அலுவலர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

‘பாடம் கற்றுக் கொண்டோம்’

14 நாட்களாக 3500 கிலோ மீட்டர் தூரத்திற்கு சவாலானபயணத்தை கடந்து, உயிருடன் வீட்டுக்கு வந்து குடும்பத்தை சந்திக்க முடிந்தது, நெகிழ்சியாக இருப்பதாக மீனவர் நித்திய தயாளன் கூறினார்.

“சராசரியாக மீன்பிடிக்க கடலுக்கு சென்றால் 10 நாட்கள் வரை கடலில் தங்கி சுமார் 300 நாட்டிக்கல் தொலைவு வரை மட்டுமே மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பியுள்ளோம். ஆனால் அதே மீன்பிடி படகை பயன்படுத்தி 3,500 கடல் மைல் தூரம் பயணித்து வந்து சேர்ந்ததது எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது,” என்றார் இறுதியாக.

அறிமுகம் இல்லாத முதலாளியை நம்பி சென்று இதுபோன்ற சிக்கலில் மாட்டிக் கொண்டதை நினைக்கும் போது இனி மீன் பிடிக்க கடலில் இறங்க அச்சமாக இருப்பதாக கூறுகிறார் தப்பி வந்த மீனவர் ராஜேந்திரன்.

வெளிநாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் அங்கு வேலைக்கு அமர்த்தும் நபர் குறித்து, முழுமையாக தெரிந்து பின்னர் செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

வெளிநாட்டுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் அங்குள்ள நிலை குறித்து, முழுமையாக தெரிந்து பின்னர் செல்ல வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டதாக கூறுகிறார், தப்பி வந்த மீனவர் நித்திய தயாளனின் மனைவி கிருஷ்ண ப்ரேமி.

"என் கணவர் கடந்த 15 நாட்களாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளாமல் இருந்தது மிகுந்த மன வேதனை அளித்து வந்த நிலையில் திடீரென தான் படகுடன் அங்கிருந்து தப்பி வந்ததாக அவர் தொலைபேசியில் அழைத்து கூறியதால் அதிர்ச்சி அடைந்தேன். இனி என்னால் என் கணவரை, யாரையும் நம்பி வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாது."

தனது கணவர் உட்பட ஆறு மீனவர்களும் படகில் இந்தியாவுக்கு வந்தபோது, எந்த தகவலும் தெரியாமல் வருந்தியதாக கூறுகிறார் கிருஷ்ண ப்ரேமி.

”மீன்பிடி தொழிலுக்காக எனது கணவர் செல்லும் நாட்களில் இதுபோல தொடர்பு கொள்ளாமல் ஒரு வாரம் வரை இருந்துள்ளதால், அவரிடமிருந்து தொலைபேசி வரும் என்ற நம்பிக்கையுடன் 15 நாட்களாக காத்திருந்தேன்.”

தமிழ்நாட்டு மீனவர்கள், இரான்
படக்குறிப்பு,நித்திய தயாளன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ண ப்ரேமி

வேலைக்காக வெளிநாடு செல்வோருக்கு சிக்கல் ஏற்படுவது ஏன்?

குறைவாகப் பணம் வாங்குகிறார்கள் என்பதற்காக போலி முகவர்களை நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கூறுகிறார் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி.

இது தொடர்பாக அவர் பிபிசி தமிழிடம் பேசும்போது, “தமிழகத்தில் 171 அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் அரசால் பகுப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவர்கள் அவர்கள் மூலமாக வெளிநாட்டு வேலைக்கு செல்வது பாதுகாப்பானது” என்கிறார் அவர்.

“தமிழகத்தில் தற்போது ஏழு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் பார்வையின் கீழ் வெளிநாடு செல்பவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வெகு விரைவில் இதனை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் இந்த பயிற்சி வகுப்பு மூலம் வேலைக்கு செல்லும் நிறுவனம் குறித்து முழு தகவல் பெற்று அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செல்ல வேண்டும்.” என்று அவர் அறிவுறுத்துகிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டால், அவசர காலங்களில் nrtamils.tn.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். அல்லது 1800 309 3793, 8069009900, 8069009901 என்ற இலவச எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம்.

அதேபோல வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் இந்தியர்கள், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் டெல்லியிலுள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாடு அறை எண்ணான 011 - 23011954 / 23012292 / 23017160 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவி கோரலாம்.

https://www.bbc.com/tamil/articles/cw998pzq4ezo

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "மாயா"     செப்டம்பர் 22, 1995 , என்னால் மறக்க முடியாத ஒருநாளாக இன்னும் என் மனதை வருத்திக்கொண்டு இருக்கிறது. அன்று தான் என் அன்பு சிநேகிதி இறந்த தினம். அவர் சாதாரணமாக இறக்கவில்லை, அந்த கொடுமையை நினைத்தால் எவருமே கதிகலங்குவார்கள். அவளும் அவளின் மாணவிகளும் புத்தரின் தர்ம போதனைக்கும் உலக நீதிக்கும் எதிராக துண்டு துண்டாக உடல்கள் சிதறி நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் பிற்பகல் 12.50 மணியளவில் விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலில் 21 - 26 மாணவர்கள் உட்பட கொல்லப் பட்ட தினம் ஆகும். அது தான் நான் இன்று, இந்த கார்த்திகை தினத்தில் நேரத்துடன் துயிலில் இருந்து எழும்பி யன்னல் வழியாக ஆகாயத்தை வெறுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.   அரசியல், யுத்தம், சமதானம் என்பவற்றைப் பற்றிப் புத்தர் தெளிவான கருத்துடையவராயிருந்தார். அஹிம்சையும் சமாதானமுமே பௌத்தம் உலகுக்கு விடுக்கும் செய்தி. இது எல்லாராலும் நன்கு அறியப்பட்டதொரு விஷயம். எந்தவிதமான பலாத்காரத்தையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. கொல்லாமையே அதன் மூலாதாரமான கொள்கை. 'நீதியான யுத்தம்' என்று சொல்லக் கூடியது ஒன்றுமில்லை. இது ஒரு போலிப் பெயர். துவேஷம், கொடுமை, இம்சை, கொலை என்பவை நேர்மையானவையெனக் காட்டும் நோக்கமாக ஆக்கப்பட்டதொரு அர்த்தமற்ற வார்த்தை.   பௌத்த மதத்தின்படி 'நீதியான யுத்தம்' என்று ஒன்றுமில்லை. 'இது நீதி, இது அநீதி' என்று தீர்மானிப்பது யார்? நாங்கள் துவங்கும் யுத்தம் எப்பொழுதும் நீதியானது. மற்றவர்கள் துவங்கும் யுத்தம் அநீதியானது. பௌத்தம் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை.   ரோஹினி ஆற்று நீர்ப் பிரச்சினை சம்பந்தமாகச் சாக்கியரும், கோலியரும் பிணங்கிக் கொண்டு சண்டை செய்ய முற்பட்டபோது பகவான் யுத்தகளத்துக்குப் போய் பிணக்கைத் தீர்த்துச் சண்டையை நிறுத்தினார். அஹிம்சையை அவர் போதித்தது மாத்திரமன்றி, சமாதானத்தை நிலை நாட்டக் காரிய பூர்வமான நடவடிக்கையை எடுத்தார். பகவானுடைய அறிவுரையைக் கேட்டு அஜாதசத்து என்ற மன்னன் வஜ்ஜிராச்சியத்தோடு உண்டான சண்டையை நிறுத்தினான்.   நான் சைவ மதத்தவன் என்றாலும் புத்த பெருமானை நேசிக்கிறேன் அவரின் இந்த கொள்கைக்காக! ஆனால் இன்று அவரின் புதல்வர்கள் என்று கூறும் பலர், இதை பின்பற்றுவதாக எனக்குத் தெரியவில்லை. அது தான் அந்த குண்டுகள் பொழிந்த ஆகாயத்தை பார்த்தபடி என் சினேகிதியை இந்த கார்த்திகை நாளில் நினைவு கூறுகிறேன்!   என் சினேகிதியை தற்செயலாக தற்காலிக இடமாற்றத்தை அடுத்து வேலையை பாரம் எடுக்க பருத்தித்துறைக்கு சென்ற பொழுது, பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் சந்தித்தேன். அவர் ஒரு இளம் ஆரம்ப பள்ளி ஆசிரியை. அவர் தான் என் புது அலுவலகத்துக்கான பாதைக்கு வழி காட்டியதுடன், தன் வீடும் அதற்கு அருகில் என்று, கூடவே கதைத்து கொண்டும் வந்தார். ஒரு சில நிமிடங்களில் பரிமாறி கொண்ட கவர்ச்சிகரமான அப்பாவித்தனமான பார்வைகள் அவளின் குறும்புத்தனம் மிக்க இனிய குரல்கள், பெண்மையின் வளைவு நெளிவுகளை வெளிப்படுத்தும் அவளின் அழகிய கோலமும் குனிந்த நடையும் வாரம் நகர்ந்தும் என்னால் மறக்க முடியவில்லை. அவளின் பெயர் மாயாதேவி , நாகர்கோவில் மகாவித்தியால ஆசிரியை, இவ்வளவும் தான் எனக்குத் தெரியும். ஒரு சில நிமிடங்கள் தானே அவளுடன் பழக்கம். அவளை முழுமையாக அறிய அன்று ஆவல் இருந்தாலும், எடுத்தவுடன் அதுகளை கேட்டு குழப்பக்கூடாது என்று பேசாமல் இருந்துவிட்டேன்.   முதிர்ச்சியற்ற காதல் இப்படிச் சொல்லும்: `நான் உன்னைக் காதலிக்கிறேன். ஏனென்றால் நீ எனக்கு வேண்டும்.’ முதிர்ச்சியடைந்த காதல் இப்படிச் சொல்லும்: `எனக்கு நீ வேண்டும். ஏனென்றால், நான் உன்னைக் காதலிக்கிறேன்.’ ‘ - இதைச் சொன்னவர் அமெரிக்க சமூக உளவியலாளர் எரிக் ஃப்ரோம் (Erich Fromm). காதலுக்குத் தேவையான அடிப்படையான மனப்பக்குவம் இதுதான். அப்படித்தான் நானும் இருந்தேன்.   அவள் விண்ணில் இருந்து வந்த தேவதையின் உடல் எடுத்து வந்தது போல் இருந்தாள். அவளை சுற்றி ஒரு பிரகாச சூழ்நிலை நிலவிக்கொண்டு இருப்பதாய் அன்று அவதானித்தேன். அந்த அழகு எப்படி வர்ணிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அவளின் படைப்பில் வெறுக்கிற மாதிரி ஒரு அம்சம் கூட இல்லை. நான் சும்மா சொல்லவில்லை. அவள் மலர்ந்துகொண்டு இருக்கும் ஒரு பன்னீர் மலர்! 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய் அழகை பாடுங்களே!' என்று ஒரு பாடல் கேட்ட ஞாபகம். உண்மையில் 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே என் நண்பியின் மெய் அழகை பாடுங்களே!' என்று தான் என் உள்ளம் அசை போடுகிறது!. எப்படியும் அவளை சந்திக்கவேண்டும் என்று அன்று ஒரு நாள், அவள் பாடசாலை முடிய வரும் பேருந்துக்காக, நேரத்துடன் வேலையில் இருந்து புறப்பட்டு காத்திருந்தேன்.   'இளந்தளிரைப் போன்று மென்மையாகவும் தாமரைக்கொடியைப் போன்ற மெதுமெதுவென்று இருக்கும் கரங்கள் என்னைத் தழுவவேண்டும். அவளின் வசீகரமான புன்முறுவல் என் மார்பில் சாய்ந்து கொட்டிடவேண்டும். அப்பொழுது உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் இன்பத்தை பொழியவேண்டும்' இப்படி என் மனம் மகிழ்ந்து கொண்டு, நான் என்னையே மறந்து கனவில் மிதந்த அந்த தருவாயில், 'ஹாய்' என்ற அந்த அவளின் இனிய குரல் என்னை மீண்டும் பூமிக்கு வர வைத்தது. 'ம்ம்ம் என்ன இன்று நேரத்துடன் வேலை முடிந்ததா ?' அவள் தான் தொடர்ந்தாள், நான் என்னை சமாளித்துக்கொண்டு, இல்லை ஒரு தனிப்பட்ட விடயமாக கொஞ்சம் வெளியே வந்தேன், இனி திரும்பவும் வேலைக்கு போகப் போகிறேன் என என் கதையை மாற்றினேன். அப்ப தான் அவளுடன் ஒன்றாய் நடக்க முடியும்!   கொஞ்சம் எனக்கு பசி, வாங்க தேநீரும் வடையும் சாப்பிட்டுவிட்டு போவோம் என கூப்பிட, அவள் கொஞ்சம் தயங்கினாலும், பின் ஓகே என்று வந்தாள். அது தான் என் முதல் வெற்றி! கொஞ்சம் கொஞ்சமாக அவளை அறியத் தொடங்கியதுடன் என்னைப்பற்றியும் சொன்னேன். அவள் தொடக்கத்தில் கொஞ்சம் அச்சம் நாணம் கொண்டாலும், போகப் போக அன்னியோன்னியமாக பழகத் தொடங்கினாள். அது என் இரண்டாவது வெற்றி!   அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய என்ப."   என்றார் தொல்காப்பியர். இது களவியலுக்கு மட்டும் தான்! ஒரு காதல் சுவைக்கு மட்டும் தான் என்ற உண்மையை அவளிடம் கண்டேன்! இப்ப நான் மட்டும் அல்ல அவளும் எனக்காக காத்திருக்கிறாள். இப்ப நான் மோட்டார் சைக்கிளில் வர ஆரம்பித்ததால், நான் காலை நேரத்துடன் வந்து அவளை பாடசாலையில் இறக்கிவிட தொடங்கினேன். அவள் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு செல்லக் கதைகளும் பேச தொடங்கிவிட்டாள். அந்த சிலநிமிட பயணம், சொர்க்கம் என்று ஒன்று இருந்ததால் அங்கே போனமாதிரி இருந்தது!   ஒரு சில மாதம் கழிய, செப்டம்பர் 22, 1995 , அவளுக்கு என் காதலின் அடையாளமாக ஒரு அழகிய மோதிரம் எம் இருவரின் படத்துடன், அன்று அவளை, பாடசாலையில் இறக்கிவிடும் பொழுது, திடீரென ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அவளின் விரலில் நானே போட்டுவிட்டேன். அவள் அப்படியே திகைத்து நின்றாள், ஒன்றுமே பேசவில்லை, ஆனந்த கண்ணீர் சொட்டு சொட்டாக அவள் கன்னத்தை நனைத்தன. அது தான் நான் கொடுத்த முதல் முத்தம் கூட. திரும்பி, சுற்றி பார்த்தாள், நாம் ஒரு மரத்தின் அடியில் நின்றதால், எம்மைக் காணக்கூடியதாக ஒருவரும் தெரியவில்லை. திடீரென அவசரம் அவசரமாக என்னை இழுத்து, வாயுடன் வாய்சேர்த்து முத்தம் தந்துவிட்டு, சட்டென அந்த மோதிர விரலை பார்த்தபடியே பாடசாலைக்குள் ஓடி விட்டாள். வழமையாக சொல்லும் 'போயிட்டு வருகிறேன்' கூட சொல்லவில்லை ?   அவள் இன்று ஒன்றும் சொல்லாமல் பாடசாலைக்குள் போனது எனோ எனக்கு ஒரு மாதிரி இருக்க, என் மதிய இடைவெளியில், சாப்பிடுவதை தவிர்த்து, அவளை ஒருக்கா பார்க்க வேண்டும் என்ற அவா உந்த, மோட்டார் சைக்கிளில் அவளிடம் போனேன். போகும் பொழுது, பாடசாலைக்கு கொஞ்சம் அருகில் இருந்த கடை ஒன்றில் அவளுக்கு, அவள் மிகவும் விரும்பும் இருதய அமைப்பில் அமைந்த ஆல்கஹால் பிரீ டார்க் சாக்லேட் [alcohol free dark chocolate] பெட்டி ஒன்றை வாங்கி, மீண்டும் மோட்டார் சைக்கிளில் எற, பெரும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் பாடசாலை பக்கம் இருந்து கேட்டது. போர்விமானமும் கூவிக்கொண்டு பறந்தன, கடைக்கார முதலாளி கடையை உடனடியாக மூடிக்கொண்டு, தம்பி, ஒரு இடமும் போகவேண்டாம் என்று என்னையும் பதுங்கு குழிக்குள் இழுத்து சென்றார்.   நான் ரசித்த உடல் துண்டு துண்டாக அன்று மாலை என்னால் போய் பார்க்க முடிந்தது. அவளின் மற்றும் மாணவர்களின் பெற்றோரின் அழுகுரல் ஒரே சோகமயமாக அங்கு காட்சி அளித்தது. நான் அவளின் கையை, நான் போட்டுவிட்ட மோதிரம் மூலம் அடையாளம் கண்டேன்.     "அழகான என் செல்ல நண்பியே அன்பான ஒரே நம்பிக்கை நட்சத்திரமே அளப்பெரும் துயரில் என்னைத் தள்ளி அமைதியாய் சொல்லாமல் மறைந்தது ஏனோ ?"   "வாய் மூடி தலை குனிந்து வான் உயர துள்ளி குதித்து வாழ்க்கை காண கனவு கண்டவளே வாட்டம் தந்து மௌனமாகியது எனோ?"   "என் அழகான காதல் செல்லமே என்னை விட்டு போக வேண்டாம்? என் குறும்பு இளவரசி இல்லாமல் எனக்கு இனி மகிழ்ச்சி எனோ?"   "பள்ளி அறையில் புத்தகங்களுக்கு இடையில் பகுதி பகுதியாக உன்னை கண்டுஎடுத்தேன் பரவி இருந்த இரத்த சொட்டுக்குள் பச்சை சேலை சிவந்தது எனோ?"   "மச்சம் கொண்ட உன் இளம்கால் மல்லாந்து என்னைப் பார்ப்பதைக் கண்டேன் மயான அமைதியில் உற்று நோக்கினேன் மடிந்தவிரலில் மோதிரம் என்னை அழைப்பதுஎனோ?"     நேரம் இப்ப அதிகாலை இரண்டு மணி, இன்னும் நல்ல இருட்டு, பனி எங்கும் பொழிந்து கொண்டு இருந்தது. நான் இப்ப வெளிநாட்டில், மனைவி பிள்ளைகளுடன் வாழ்கிறேன். அது உலக வாழ்க்கை. ஆனால் என் மனம் இன்னும் அவளையே நினைக்கிறது. அவளுக்காக ஒரு தீபம் ஏற்ற இப்பவே இந்த கார்த்திகை தினத்தில் எழும்பிவிட்டேன். என் மனைவி இன்னும் சரியான தூக்கத்தில், பிள்ளைகள் தங்கள் தங்கள் அறையில். யன்னலுக்கு வெளியே, இது கிராமப்புறம் என்பதால் சிறு மரப்பத்தைகள் [woods]. வானம் அமைதியாக இருந்தது. நான் கொஞ்சம் என் பார்வையை கிழே இறக்கி மரப்பத்தையை பார்த்தேன்.   கழுத்தில் இருந்து கால்வரை வெள்ளை நிற முழு அங்கியுடன், தனது முகத்தை நீண்ட கரும் கூந்தலால் மறைத்துக்கொண்டு, என்னை நோக்கி என் மாயாவின் உடல் அமைப்பிலேயே ஒரு பெண் உருவம் வருவதைக் கண்டேன்!   அருகில் அருகில் வர, தன் முடியை, தன் வலது கையால் வாரி முதுகுப் பின்னல் போட்டாள். நான் போட்டுவிட்ட அந்த மோதிரம் இன்னும் அந்த விரலில் இருப்பதைக் கண்டேன். அது ஒளிர்ந்து கொண்டு இருந்தது. அதே புன்முறுவல், அதே நாணம், அதே நடை! என்னால் நம்பவே முடியவில்லை!. 'ம்ம் வாங்க, உங்க மாயா கூப்பிடுகிறாள், நான் தான் உங்க மனைவி, உதறித்த தள்ளுங்கள் அவளை, கட்டிலில் படுத்திருப்பவளை'   இரண்டு கைகளையும் நீட்டி என்னை அழைத்தபடி நெருங்கி வந்து கொண்டு இருந்தது. என்னை அறியாமலே நான் யன்னலூடாக குதித்து வெளியே போக, யன்னலை அகல துறந்து, அதில் எற, ஒரு காலை தூக்கி வைத்தும் விட்டேன். மற்ற காலை தூக்க முயலும் பொழுது தான் , யாரோ என் காலை பிடித்து இழுப்பது தெரிந்தது. நான் திரும்பி பார்க்கவே இல்லை, என் மாயாவையே, அந்த அழகு தேவதையே பார்த்துக் கொண்டு ' மாயா, என் செல்லமே, நான் வாரெனடா கண்ணு' என்று சத்தம் போட்டு அலறியே விட்டேன்.   பிள்ளைகளும் சத்தம் கேட்டு ஓடிவந்து அப்பா, அப்பா என , மனைவியுடன் சேர்ந்து என்னை யன்னலால் குதிக்க விடாமல் உள்ளுக்குள் இழுத்துவிடார்கள். மனைவி என்னை கட்டிப்பிடித்து, உங்கள் மாயா எனக்கும் சகோதரி தான், எனக்கும் நண்பி தான். காலை நாம் குடும்பமாக இந்த , இனிவரும் ஒவ்வொரு கார்த்திகை தினத்திலும் விளக்கேற்றுவோம். இப்ப வந்து படுங்க, என பிள்ளைகளும் சேர்ந்து என்னை மீண்டும் கட்டிலில் படுக்க வைத்தனர். நான் அவர்களுக்காக கண்மூடி விடியும் மட்டும் இருந்தாலும், அந்த உருவம், என் மாயா என் மனதில் இருந்து அகலவே இல்லை !   "இறந்த அவளின் சூக்கும உடல் இளமுறுவலுடன் என் முன் வந்தது இலக்குமி போல அழகாய் தோன்றி இதழ் குவித்து முத்தம் தந்து"   "பழைய மெல்லிசை முணுமுணுத்து பதுங்கி என் கண்கள் பார்த்து பதுமையாக என் முன் நின்று பணிந்து அழைத்து வா என்றது"   "என் அழகிய குட்டி கண்மணியே எதற்காக உன் உயிரை மாய்த்தாய்? எழுச்சி தந்து நம்பிக்கை விதைத்து என்னை விட்டு விலகியது எனோ?"   "இறந்ததாக நான் உன்னை நம்பவில்லை இன்றும் உனக்காக நான் காத்திருக்கிறேன் இளந் தென்றல் தொடும் அடிவானத்தில் இரவும்பகலும் உன்னைத் தேடி அலைகிறேன் ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • ஊடகத்துறை சார்ந்தவர்கள் அனேகமாக உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் பணிகளைச் செய்யும்போது, அந்த உண்மைகளின் சூட்டினால் அவர்களே தாக்கப்பட்டு அவதிப்படுவதைக் காண்கின்றோம். இதில் சாதாரண மக்களை விடவும் அதிகாரம் உள்ளவர்களால் தாக்கப்படும் போது உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடுவதையும் கண்டுள்ளோம். இங்கே துமிலன் அவர்களின் அறிக்கையால் உண்மைஅறிந்த காவல்துறை மன்னிப்புக் கேட்டாலும், இது தனக்கு நேர்ந்த ஒரு அவமானமாக, இழிவாக அந்தத்  துறையின் அதிகாரவர்க்கம் அதனை எண்ணவைத்து, துமிலன் தொடரப்போகும்  செய்திகளில் சிறு தவறு கண்டாலும் அதனை ஊதிப் பெருப்பித்து தனது சூட்டைத் தணிக்க முற்படலாம். ஆகவே துமிலன் தனது தொடரப்போகும் பணியை, மிகவும் அவதானமாகவும், கவனமாகவும் மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகிறேன்.🙌  
    • ரஸ்யாவின் மற்றும் யூகோசிலாவியாவின் உடைவு(உடைப்பு) என ஒரு தொடர் செயற்பாட்டு நிரலுள் நடைபெறும் பூகோள மற்றும் கனியவளச் சுரண்டலாதிக்கக் கொள்கைகளே போருக்கான முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றமை யாவரும் அறிந்த ஒன்று. மிகையில் கோபர்சேவின் நடவடிக்கையால் உதிர்ந்த சோவியத் ஒன்றியமும் இணைந்த யேர்மனியும் புதின் போன்ற கடும் போக்குத் தலைமைகளால் சாத்தியமாகியிருக்காது அல்லது பழைய போக்கிலேயே ஒரு பனிப்போர்காலம் போல் தொடர்ந்திருக்கும். ஆனால் உலகம் மாற்றங்களை ஏதோ ஒரு வகையில் சந்தித்தே வருகிறது. அது(போர் அல்லது இராசதந்திரப்போர்) வன்வலு மற்றும் மென்வலு என அழைக்கப்படும் இரு வழிகளூடாகவும் உலகு தொடர் மனித உயிரிழப்பைச் சந்தித்தே வருகிறதென்று கொள்ளலாம். இதற்கு அடிப்படையாக இருப்பது உலகத் தலைவர்களின் நேர்மையீனமே.அவர்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களையோ வாக்குறுதிகளையோ கடைப்பிடித்துச் செல்பவர்களாக இல்லை. அதன் விளைவாகவே போர்கள் தோற்றம் பெறுகின்றன. போர் நாகரீகமற்றது என்று  போதித்தவாறு காசாவின் படுகொலைகளை இந்த உலகு பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதாபிமான உதவிகள், போர் நிறுத்தக் கோரல்கள், பயங்கரவாதத்தைத் தடுக்கும் உரிமை என்ற சொல்லாடல்கள் வழியாகப் போரைத் தொடர்கிறது. இதனையே முழு உலகிலும் தமது தேவைக்கேற்ப செய்கிறார்கள். ஆனால், ஒரு வல்லரசான ரஸ்யா ஏன் நேட்டோவைக் கண்டு அஞ்சுகிறது. அது தனது எல்லைகளைப் பலப்படுத்திப் பாதுகாப்பை வலுப்படுத்தியிருக்கலாமே. இவளவு மனிதவள, பொருண்மிய இழப்புகள் தேவையா? தோல்வியை ஏற்காதுவிடின் வெற்றியைப் பெறும்வரை போரை நடாத்தி இன்னும் அழிவுகளை விதைத்து எதைக்காணப் போகிறார்கள்? அணுஆயுத வல்லரசு தோல்வியை ஏற்குமா என்பதை இனிவரும் நாட்களே முடிவுசெய்யும். எதற்காகப் புதின் திடீரென நிபந்தனைகளோடு போர்நிறுத்தத்தைக் கோருகிறார்?  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.