Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
05 JUN, 2024 | 04:31 PM
image

பொன் சிவகுமாரனின் 50ஆவது நினைவேந்தல் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்ட பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலை அமைவிடத்தில் தமிழ்த் தேசியவாதிகளால் இன்று (05) காலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன், சங்கத்தின் செயலாளர் தனுபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, அகவணக்கம் செலுத்தியதுடன்  திருவுருவச்சிலைக்கு தீபமேற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

'உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு' என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த தியாகி பொன் சிவகுமாரனின் உருவச்சிலை 1975 ஜூன் 05ஆம் திகதி சிறை மீண்ட இளைஞன் முத்துக்குமாரசுவாமியால் திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிலையில், இராணுவத்தினராலும் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய தரப்புக்களாலும் அச்சிலை பல தடவைகள் உடைத்து நொறுக்கப்பட்டு, உரும்பிராய் சந்தை வளாகத்தில் வீசப்பட்டு, புதையுண்டு கிடந்த நிலையில், அச்சிலை மீள எடுத்து, முன்பிருந்த பகுதி வளாகத்திலேயே அமைக்கப்பட்டது. 

இந்த சிலையை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் திறந்துவைத்தார். 

447414189_10220615604019264_457025547509

447778047_10220615609979413_538689168761

447507213_10220615609619404_214626053990

447613185_10220615610539427_640433345078

https://www.virakesari.lk/article/185386

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

447539128_471723945528112_48899325118348

ஆழ்ந்த நினைவஞ்சலிகள். 🙏

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அரசியல் அபிலாசைக்கான வழிகாட்டி பொன் சிவகுமாரன் - தியாகராஜா நிரோஷ்

05 JUN, 2024 | 05:27 PM
image
 

போராட்ட பயணப்பாதையில் இனத்துக்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் எழுச்சியையும் தியாகத்தினையும் என்றும் நினைவில் கொள்கின்றோம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

"தியாகி பொன் சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவுநாளான இன்று நாம் தமிழ்த் தேசியவாதிகளால் நிர்மாணிக்கப்பட்டு இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கியவர்களினாலும் தகர்க்கப்பட்ட நிலையில் என்னால் மீள பிரதிஸ்டை செய்யப்பட்ட திருவுருவச்சிலையில் அஞ்சலித்து உறுதிபூணுகின்றோம்.

"உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு" என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிர்த் தியாகம் செய்த தியாகி பொன் சிவகுமாரனின் உருவச்சிலை 05 ஜூன் 1975ஆம் ஆண்டு சிறை மீண்ட இளைஞன் முத்துக்குமாரசுவாமியால் திறந்து வைக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினராலும் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய தரப்புக்களாலும் இச்சிலை பல தடவைகள் உடைத்து நொறுக்கப்பட்டு உரும்பிராய் சந்தை வளாகத்தில் வீசப்பட்டு, புதையுண்டு கிடந்த நிலையில் அதனை தமிழ் மீள எடுத்து சிவகுமாரனின் சிலை அமைத்த வளாகத்தின் நான் தவிசாளராக பதவி வகித்தபோது பிரதிஸ்டை செய்தேன். எமது இன விடுதலைக்கான வரலாறுகளை வழிகாட்டியாக நாம் கைக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்கு முறை இன்றும் நீட்சியாக காணப்படுகிறது. எமது உரிமைகளுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த சிவகுமாரனின் அர்ப்பணிப்பினை ஒட்டுமொத்த தமிழ் இனமும் நினைவுகூருகிறது.  

அரச அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் அகிம்சை வழியிலான அணுகுமுறைகள் பயனற்றுப்போன சூழ்நிலையில், அரச அடக்குமுறையை எதிர்கொண்டாக வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தத்தில் மக்களின் மனநிலை நின்ற விடுதலைப் போராட்ட வீரனாகவே பொன்.சிவகுமாரன் செயற்பட்டார்.

பொன் சிவகுமாரன் இனத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஓர் இளையவனாக மாணவர் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக கட்சி அரசியல் விடயங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசிய விடுதலையை இலக்காகக் கொண்டு போராட்ட அமைப்புக்கள் நிறுவனமயப்படுத்தப்படாத காலகட்டத்தில் தனது தியாகத்தினை நிலைநாட்டியுள்ளார். எதிரியிடம் விடுதலைப் போராளிகள் உயிருடன் அகப்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் தன் இன்னுயிரை சயனைட் அருந்தி மாய்த்துள்ளார்.

விடுதலைப் போராட்டம் ஒடுக்குமுறைகளுக்கு எதிரானது என்ற நியாயபூர்வமான யதார்த்தத்தினை பொன். சிவகுமாரன் அவர்களது தியாகம் என்றும் பறைசாற்றுகிறது. தமிழ் மாணவர்களுக்கு எதிராக திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட கல்வி ரீதியிலான தரப்படுத்தல்கள், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் என நீண்டு செல்லும் இனத்துக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக பொன். சிவகுமாரன் போராடியுள்ளார். 

எமது போராட்டங்களின் முன்னோடியாக தியாகி சிவகுமாரனை என்றும் நினைவில் கொள்கின்றோம்" என்றார்.

https://www.virakesari.lk/article/185389

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலையில் பொன்.சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவேந்தல்

Published By: VISHNU   06 JUN, 2024 | 09:34 AM

image

தமிழ் தேசத்தின் வரலாற்றில் மாணவப் போராளியாகப் போராடி தன்னுயிர் நீத்த முதல் தற்கொடையாளன் தியாகி பொன்.சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவேந்தல் 05ஆம் திகதி  புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுநினைவுத் தூபியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

12.jpg

13.jpg

11.jpg

10.jpg

09.jpg

08.jpg

07.jpg

06.jpg

04.jpg

05.jpg

03.jpg

02.jpg

https://www.virakesari.lk/article/185409

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்ட வரலாற்றில் வீரச்சாவை தழுவிய முதல் போராளி பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவு தினத்தின் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.

தமிழ் மக்களின் கெளரவமான அரசியல் வாழ்விற்காக உழைத்து உயிர் தியாகம் செய்த தியாகி பொன். சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழரசுக் கட்சி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மறுவன்புலவு சச்சிதானந்தம் உட்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர வணக்கம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.