Jump to content

மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி?

1264633.jpg  
 
சலூன் கடை ஒன்றில் வேலை பார்க்கும் மகாராஜாவின் (விஜய் சேதுபதி) மனைவி விபத்தில் இறந்துவிடுகிறார். மகள் ஜோதி (சச்சனா) ஸ்போர்ட்ஸ் கேம்புக்காக வெளியூர் சென்றுவிட, தனிமையில் இருக்கிறார் மகாராஜா. வேலை முடித்து வீட்டுக்கு வந்த தன்னை தாக்கிவிட்டு, வீட்டிலிருந்து லக்‌ஷ்மியை சிலர் திருடிச் சென்றுவிட்டதாகவும், அதனை மீட்டு கொடுக்குமாறும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.

தொடக்கத்தில் இந்தப் புகாரை உதாசினப்படுத்தும் காவல் துறை, ரூ.7 லட்சம் வரை காசு கொடுப்பதாக மகாராஜா சொன்னதும், லக்‌ஷ்மியை தேடிக் கண்டுபிடிக்கும் விசாரணையை தீவிரப்படுத்துகின்றனர். உண்மையில் யார் இந்த லக்‌ஷ்மி? மகராஜாவின் நோக்கம் என்ன? அவருக்கான பின்புல கதை என்ன? - இதுதான் படத்தின் திரைக்கதை.

‘குரங்கு பொம்மை’ படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியிருக்கும் இப்படம் ஒரு முடிச்சை தனக்கத்தே வைத்துக்கொண்டு நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இடைவேளைக்கு முன்பு வரை அந்த முடிச்சு என்ன என்ற கேள்வியும், ஆர்வத்தையும் பார்வையாளர்களிடையே தக்க வைத்து நகரும் திரைக்கதை எங்கேஜிங்காகவே கடக்கிறது. கிட்டத்தட்ட ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட வசனம் போல ‘ரீபீட்’ வசனத்தை கொண்டு மெல்லிய நகைச்சுவை உதவியுடன் பெரிய அளவில் எங்கும் அயற்சி கொடுக்காமல் நகர்த்தியிருப்பது பலம்.

‘நான் லீனியர்’ பாணியில் காட்சிகளை முன்னுக்குப் பின்னாக களைத்துப் போட்டு விளையாடியிருக்கிறார் இயக்குநர். அந்த விளையாட்டு தொடர்ந்து கவனிக்க வைக்கிறது. அதுவும் இடைவேளைக்குப் பிறகு படம் முடிச்சை அவிழ்க்கும் இடத்தை நோக்கி நகர்வதும், இறுதி 20 நிமிடமும் சுவாரஸ்யம். கவித்துமான ஃப்ரேம் ஒன்றும் ரசிகர்களின் கைதட்டலை பெறுகிறது.

அடுத்து என்ன என்ற பார்வையாளர்களின் ஆர்வத்தை இறுதிவரை எடுத்து வந்து சென்சிட்டிவான களத்துக்குள் நுழைந்திருப்பதும், எங்கேஜிங்கான நகர்த்தலும் ஓகே. ஆனால், சென்சிட்டிவான கன்டென்ட்டிலும், அறத்திலும் படம் தடுமாறுகிறது.

காவல் துறையினரின் தாக்குதலை காமெடியாக சித்திரித்திருப்பது, முக்கியமான பிரச்சினையை வெறும் பழிவாங்கும் கதையாக சுருக்கியிருப்பது, பாதிக்கப்பட்டவரை கொடூரமாக காட்சிப்படுத்தியிருப்பது, பெண்களுக்கெதிரான குற்றத்தை பேசும் படத்தில் அழுத்தமான பெண் கதாபாத்திரமில்லை என்பது முரண். அத்துடன் படம் முன்வைக்கும் தீர்வும் கூட முழுமை பெறவில்லை. முதல் குற்றவாளியை விஜய் சேதுபதி எப்படி கண்டறிந்தார்? ஏன் அனுராக் காஷ்யப் கொல்லாமல் விட்டார்? - இப்படி லாஜிக்காக கேள்விகளும் எழாமலில்லை.

மிகையுணர்ச்சிகளை களைந்து, சோகத்தை சுமந்த முகத்துடன் சாமானிய சலூன் கடைக்காரரின் உணர்வுகளை அழுத்தமாக பதிய வைக்கிறார் விஜய் சேதுபதி. ஆக்‌ஷன் காட்சிகளிலும், ஆக்ரோஷத்தில் கத்தும் இடங்களிலும் கவனிக்க வைக்கிறார். 50 படங்களைக் கடந்த நடிப்பின் முதிர்ச்சி திரையில் தெரிகிறது.

அனுராக் காஷ்யப் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும், கதாபாத்திரத்துடன் அவரை கனெக்ட் செய்ய முடியவில்லை. கூடுதலாக லிப் சிங்கிங் அப்பட்டமாக காட்டிக் கொடுக்கிறது. நட்டி நட்ராஜ் காவல் துறை அதிகாரியாக அதகளம் செய்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் கோரும் நடிப்புக்கு சிங்கம் புலி நியாயம் சேர்க்கிறார்.

அபிராமி, வினோத் சாகர், பாய்ஸ் மணிகண்டன், முனீஷ்காந்த் தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர். ஜோதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சச்சனா கவனம் பெறுகிறார். மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா கதாபாத்திரங்கள் ஏன் என புரியவில்லை.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு கவனம் ஈர்க்கிறது. காட்சிகள் கோரும் உணர்வுக்கு அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசை பாதி தீனியிடுகிறது. படத்தின் முக்கியமான பலம் ஃபிலோமின் ராஜ். படத்தை நீட்டி இழுக்காமல் கச்சிதமாகவும், நான் லீனியர் முறையில் காட்சிகளை குழப்பாமல் அடுக்கியும் முறைபடுத்தியதற்கு பாராட்டுகள்.

மொத்தமாக, ஓர் ஆர்வத்தை தூண்டி இறுதி வரை இழுத்துச் செல்லும் திரைக்கதைதான் ‘மகாராஜா’. ஆனால், பொறுப்புடனும், ஆர்வத்தை தவிர்த்த ஆழத்துடனும் எடுத்துக்கொண்ட பிரச்சினையை பேசியிருக்கிறதா என்றால், அது கேள்வியே!

மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி? | Vijay Sethupathi starrer maharaja movie review - hindutamil.in

  • Like 2
Link to comment
Share on other sites

  • 1 month later...

நேற்று இப்படத்தை Netflix இல் பார்த்தேன்.

படம் அருமை!

இன்னும் படம் ஏற்படுத்திய தாக்கம் குறையவில்லை.

விஜய் சேதுபதி மீண்டும் மனசில் ஒட்டி விட்டார்.

நல்ல படம் பார்க்க விரும்புகின்றவர்களுக்குரிய படம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படம்......சிரிப்பாகவும் சீரியஸாகவும் நகரும் திரைக்கதை.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/7/2024 at 21:04, நிழலி said:

நேற்று இப்படத்தை Netflix இல் பார்த்தேன்.

படம் அருமை!

இன்னும் படம் ஏற்படுத்திய தாக்கம் குறையவில்லை.

நானும் பார்த்திருந்தேன். உங்களை  கவர்ந்த மாதிரி என்னை படம் பெரியளவில் கவரவில்லை.

ஒன்று, விஜய் சேதுபதியின் முன்னைய படங்களை நினைவூட்டும் நடிப்பு, வசன உச்சரிப்புகள் அலுப்பைத் தருகின்றன. இரண்டு, படங்களில் இருந்த ஓட்டைகள். முதலாவது எதிரியை எப்படிக் கண்டு பிடித்தார் என்பதைப் பற்றி இயக்குனருக்கு கவலை இருக்கவில்லை. இதுதான் முடிவாக இருக்கப் போகிறது என்பதை ஊகிக்கக் கூடியவரையிலான திரைக்கதை அமைப்பு….

பாரதிராஜாவால் நிற்கக்கூட முடியவில்லை. உட்காரவைத்து கிடைத்த ஒருநாள்  ‘கால்சீட்’டில் காட்சிப் படுத்தியிருக்கிறார் போலும்.

படத்தில் நான் ரசித்தது சிங்கம் புலி, அபிராமியின் நடிப்புகளை. படம் நேர்கோட்டில் செல்லாமல் சுற்றிச் சுற்றி வருவதால் படம் தப்பித்துக் கொண்டது.

Link to comment
Share on other sites

3 hours ago, Kavi arunasalam said:

முதலாவது எதிரியை எப்படிக் கண்டு பிடித்தார் என்பதைப் பற்றி இயக்குனருக்கு கவலை இருக்கவில்லை. இதுதான் முடிவாக இருக்கப் போகிறது என்பதை ஊகிக்கக் கூடியவரையிலான திரைக்கதை அமைப்பு….

பாரதிராஜாவால் நிற்கக்கூட முடியவில்லை. உட்காரவைத்து கிடைத்த ஒருநாள்  ‘கால்சீட்’டில் காட்சிப் படுத்தியிருக்கிறார் போலும்.

படத்தில் நான் ரசித்தது சிங்கம் புலி, அபிராமியின் நடிப்புகளை. படம் நேர்கோட்டில் செல்லாமல் சுற்றிச் சுற்றி வருவதால் படம் தப்பித்துக் கொண்டது.

முதலாவது எதிரியை எப்படிக் கண்டு பிடித்தார் படத்தில் காட்டியுள்ளார்களே...

விஜய் சேதுபதி வீட்டில் மயங்கி எழும்பும் போது, அந்த மூவரும் வந்த காரிற்கு பெற்றோல் அடித்த பற்றுச்சீட்டு அருகில் கிடக்கும். அந்த பற்றுச்சீட்டில், காரின் இலக்கம் இருக்கும். அதை வைத்து காரை தேடிப் போகும் போது, அது உள்ளூர் அரசியல்வாதியின் கார் எனக் கண்டுபிடித்து, அவரை சந்திக்க போகும் போதுதான் அந்தக் காரை ஓட்டியது அவரல்ல, கராஜ்ஜில் வேலை செய்தவர் என அறிந்து கொள்கின்றார். அதே நேரம், அந்த காராஜில் வேலை செய்தவரும் அங்கு அந்த அரசியல்வாதியை அடிக்க வரும்போதே, அந்த முதலாம் குற்றாவாளியை இன்னார் தான் எனக் கண்டு கொள்கின்றார்.

இந்த படத்தில் வேஸ்ட் பண்ணப்பட்டவர் என்றால் அது பாரதிராஜா தான். நான் நினைக்கின்றேன், படம் எடுக்க ஆரம்பித்த பின் தான், பாரதிராஜா சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என. அல்லது, இவ் இயக்குநரின் முதல் படமான குரங்கு பொம்மையில் முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடித்து இருப்பதால் நன்றியுணர்வில் இதில் ஒரு சிறு பாத்திரம் கொடுத்து இருப்பார் என. ஆனாலும், அந்த மிகப்பெரிய கலைஞனை வீணடித்து விட்டார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, நிழலி said:

விஜய் சேதுபதி வீட்டில் மயங்கி எழும்பும் போது, அந்த மூவரும் வந்த காரிற்கு பெற்றோல் அடித்த பற்றுச்சீட்டு அருகில் கிடக்கும். அந்த பற்றுச்சீட்டில், காரின் இலக்கம் இருக்கும். அதை வைத்து காரை தேடிப் போகும் போது, அது உள்ளூர் அரசியல்வாதியின் கார் எனக் கண்டுபிடித்து, அவரை சந்திக்க போகும் போதுதான் அந்தக் காரை ஓட்டியது அவரல்ல, கராஜ்ஜில் வேலை செய்தவர் என அறிந்து கொள்கின்றார். அதே நேரம், அந்த காராஜில் வேலை செய்தவரும் அங்கு அந்த அரசியல்வாதியை அடிக்க வரும்போதே, அந்த முதலாம் குற்றாவாளியை இன்னார் தான் எனக் கண்டு கொள்கின்றார்.

படத்தை தொடர் படமாக எடுத்து இருந்தால் மிகப்பெரிய தோல்வி படமாக இருந்து இருக்கும் .துண்டு துண்டாய் படத்தை காட்டியிருப்பதன் மூலம் வெற்றியை தக்க வைத்து இருக்கிறார்கள் அனுராக் காஷ்யப்பின் மகளைத்தான் சேதுபதி வளர்க்கிறார் என்ற முடிவு தெரியும்போது  இரண்டு மூன்று நாளைக்கு அதன் தாக்கம் இருந்ததை மறுக்க முடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

விஜய் சேதுபதி வீட்டில் மயங்கி எழும்பும் போது, அந்த மூவரும் வந்த காரிற்கு பெற்றோல் அடித்த பற்றுச்சீட்டு அருகில் கிடக்கும். அந்த பற்றுச்சீட்டில், காரின் இலக்கம் இருக்கும்.

அகன்ற திரையில் பார்க்காமல் வீட்டில் ரிவியில் பார்த்ததால் பற்றுச்சீட்டைப் பற்றி கணக்கில் எடுக்கவில்லை. இந்தியாவில் உள்ளது போல் யேர்மனியில் பற்றுச் சீட்டில் கார் இலக்கங்கள் இருப்பதில்லை என்பதும் ஒரு காரணம்.

ஒருநாளில் எல்லாவற்றையும் சமாளித்து ஒப்பேற்றிவிட்டு அதன் பிறகு காரைக்  கண்டுபிடிச்சு, ஹொட்டல்வரை ஒருவர் போகிறார் எனபதெல்லாம் நடைமுறைச் சாதியமில்லை. அதை எல்லாம் எங்கள் கவனத்தில் வராத வகையில் கதையை நகர்த்திய இயக்குனர் திறமைசாலிதான். இந்த வருடம் வந்த படங்களில் மஹாராஜாதான் எல்லா ஊடகங்களிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்

மீபத்தில் இணையத்தில்ரயில்திரைப்படம் பார்த்தேன்.

80களில் இடம் பெயர்ந்து யேர்மனிக்கு வந்து வாழ்ந்த என் நினைவை ரயில் திரைப்படம், மீட்டிச் சென்றிருக்கிறது.

நாங்கள் அன்று வேலைத் தளத்துக்குள் எங்கள் திறமைகளைக் காட்ட, அதனால் முதலாளிகளின் நம்பிக்கைகளை பெற்றுக் கொள்ள, அங்கே வேலை செய்து கொண்டிருந்த யேர்மனியர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அப்படி அவர்கள் வெளியேறும் போது, “இவங்களோடை வேலை செய்ய ஏலாது. எங்கை இருந்து வந்தாங்களோ?” என்று திட்டித் தீர்த்திருப்பார்கள். ஆனால் எங்கள் பின் புலத்திலும் ஒரு சோகம் நிறைந்த கதை இருந்தது அவர்களுக்குத் தெரிந்திருக்காது.

இந்தியாவின் வடக்குப் பகுதியில் இருந்து வேலைக்காக தமிழ்நாட்டுக்கு இடம் பெயர்ந்து வந்த ஒருவனுக்கும், ‘வடக்கன்கள் வந்து எங்கள் பிழைப்புக்கே உலை வைக்கிறாங்கள்எனப் பொருமும் தமிழ்நாட்டில் ஒருவனுக்குமான கதையாக ரயில் படக் கதை அமைந்திருக்கிறது. அறிமுகம் இல்லாத நடிகர்கள். ஆனாலும் நடிப்பில் அசத்துகிறார்கள். “வடக்கன் வந்து எங்களின்ரை. வேலையைக் குழப்புறான்என்று எரிச்சல்பட்டு, நாயகன் கிடைத்த நேரம் எல்லாம் குடிக்கிறார். படம் முழுக்க போதையுடனே வருகிறார். அவரும் சரி, அவரது நண்பரும் சரி குடிகாரன்கள் என்னென்ன ஆட்டம் போடுவார்களோ அதை எல்லாம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.  நாயகி தனது நடிப்புத் திறமையை படம் முழுதும் நன்றாகக் காட்டியிருக்கிறார். வேலைக்குப் போகாமல் தினமும் குடித்து விட்டு வரும் கணவனுடன் போடும் சண்டைகளிலும், ‘வெளங்காமல் போஎன்று மண்ணை அள்ளி எறிந்து கணவனுக்கு சாபம் இடும் காட்சிகளிலும் சரி அவரது நடிப்பு மிகவும் ரசிக்க வைக்கிறது. இந்த நடிகையை திரையில் இப்பொழுதுதான் நான் முதன்முதலாகப் பார்க்கிறேன்.

வழக்கமான சினிமாப் பாணியில் இருந்து விலகி யதார்த்தமான படைப்பாக ரயில் திரைப்படம் இருக்கிறது. கதையில் குழப்பங்கள் ஏதுமின்றி ஒரு சீராகச் சென்று படம் முடிகிறது.  ரயில் திரைபபடம்,ஒரு படமாக மட்டும் இல்லாமல் ஒரு பாடமாகவும் இருக்கிறது.  படத்தில் மசாலாக்கள் இல்லாததால் சிலருக்கு அலுப்புத் தட்டலாம். ஆனாலும் பார்க்க வேண்டிய படம் மட்டுமல்ல பாராட்டப் பட வேண்டிய படமும் கூட.

நல்ல திரைபடத்தைத் தயாரித்தார் என்ற திருப்பதியைத் தவிர இந்தத் திரைப்படத்தால் தயாரிப்பாளர் பணம் ஏதும் சம்பாதிக்க வாய்ப்பில்லைத்தான்.

பங்கேற்ற அனைவரையும் பாராட்டலாம். நேரம் கிடைத்தால் பாருங்கள்

Link to comment
Share on other sites

24 minutes ago, Kavi arunasalam said:

நானும் அகன்ற திரையில் பார்க்கவில்லை. Netflix இல் வந்தமையால் ரீவியில் தான் பார்த்தேன்.

மஹாராஜா படத்தின் வெற்றி அது எடுக்கப்பட்ட விதத்திலும் இறுதி twist இலுமே இருக்கின்றது. Dark humor வகைப் படம். 

@பெருமாள்குறிப்பிட்டுள்ள போன்று படத்தை துண்டு துண்டாக, non linear ஆக எடுத்தமையால் நன்றாக உள்ளது ( இந்த முறையை தமிழுக்கு கொண்டு வந்தவர் மணிரத்னம் - அலைபாயுதே படத்தில்).

ரயில் படம் இன்னும பார்க்கவில்லை. ஆனால் தமிழ் நாட்டு ஆண்கள் குடிகாரர்களாக, சோம்பேறிகளாக இருப்பதால் தான் வட இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன  என காட்டியுள்ளனர் என விசனப்பட்டு எழுதப்பட்ட விமர்சனங்களை பார்த்தேன். இது கள யதார்த்துக்கு முரணானது என்கின்றனர்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

அகன்ற திரையில் பார்க்காமல் வீட்டில் ரிவியில் பார்த்ததால் பற்றுச்சீட்டைப் பற்றி கணக்கில் எடுக்கவில்லை. இந்தியாவில் உள்ளது போல் யேர்மனியில் பற்றுச் சீட்டில் கார் இலக்கங்கள் இருப்பதில்லை என்பதும் ஒரு காரணம்.

ஒருநாளில் எல்லாவற்றையும் சமாளித்து ஒப்பேற்றிவிட்டு அதன் பிறகு காரைக்  கண்டுபிடிச்சு, ஹொட்டல்வரை ஒருவர் போகிறார் எனபதெல்லாம் நடைமுறைச் சாதியமில்லை. அதை எல்லாம் எங்கள் கவனத்தில் வராத வகையில் கதையை நகர்த்திய இயக்குனர் திறமைசாலிதான். இந்த வருடம் வந்த படங்களில் மஹாராஜாதான் எல்லா ஊடகங்களிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார்

உண்மையில் இந்திய படங்களுக்கு மூன்று மணி நேர படம் என்றால் அரை மணி நேரத்தில் பார்த்து விடுவேன் காரணம் கட்டாயம் கதாநாயகன் நாயகியிடம் வழிவது அல்லது நாயகி நாயகனிடம் வளிவது எப்படியும் முக்கால் மணி நேரம் அதன் பின் மரத்தை சுத்தி ஆடுவது இயந்திரமனிதன் போல் ஆடும் கொடுமைகள் முக்கால் மணி நேரம் இதெல்லாம் சேர்த்தால் ஒன்றரை மணி நேரம்  இந்த காட்சிகள் வராத இந்திய படங்கள் ஒரு ஐந்து வீதமே இருக்கும் அதன் பின் கதை களத்தை உருவாக்கும் காட்சிகள் அனேகமாக நாங்கள் எதிர்பார்த்த ஒன்றாக இருக்கும் அதுக்கு முக்கால் மணி நேரம் அதன் பின் முக்கிய காட்சிகளில் ஒரு சில காட்சிகள் பார்க்க கூடியதாக இருக்கும் இப்படியொரு இரண்டு மூன்று இழவுக்கு ஏன் தியேட்டர்.

நம்மை பொறுத்தவரை இணையத்தில் இலவசமாக பார்ப்பதே உண்டு .ஆனால் மகாராஜா காட்சிகளை மாற்றி அமைத்து முக்கியமாய் அந்த பெற்றோல் துண்டால் தான் குற்றவாளிகளை கண்டறிகிறார் எனும் காட்சி   Netflix வந்த பின்னே அறிய கூடியதாக இருந்தது.அதனால் கொஞ்சம் கடைசி நேர  twist இனால் படம் தப்பி பிழைக்கும் .

முத்தையா முரளிதரன் போல் தன்னை நடிக்க விடவில்லை என்ற விஜெய் சேதுபதியின் முறுக்கல் எனக்கு பிடிக்காத ஒன்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

கதாநாயகன் நாயகியிடம் வழிவது அல்லது நாயகி நாயகனிடம் வளிவது

இந்த உலகத்தில் வாழும் அனைவருமே அவரவர் கதாநாயகிகளுடன் வழிவது இயற்கை தானே!  நீங்களும் நானும் கூட  இதற்கு விதிவிலக்கல்லவே! 

கதாநாயகியுடன் வழியாதவன் எல்லாம் ஒரு மனிசனா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

இந்த உலகத்தில் வாழும் அனைவருமே அவரவர் கதாநாயகிகளுடன் வழிவது இயற்கை தானே!  நீங்களும் நானும் கூட  இதற்கு விதிவிலக்கல்லவே! 

கதாநாயகியுடன் வழியாதவன் எல்லாம் ஒரு மனிசனா? 

எல்லாம் ஒரு அளவுடன் இருக்கணும் எல்லை மீற கூடாது அவை கூடினால் அந்த சமூகம் சீரழியும் .

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.