Jump to content

கருடன் Review: சூரியின் ஆக்‌ஷன் அவதாரமும், உணர்வுபூர்வ அனுபவமும்!


பிழம்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1257484.jpg  

நியாயத்துக்கும் விசுவாசத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவன் இறுதியில் எதைத் தேர்வு செய்கிறான் என்பது ‘கருடன்’ படத்தின் ஒன்லைன்.

தேனியில் உள்ள கோம்பை அம்மன் கோயில் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் தங்கபாண்டி (ஆர்.வி.உதயகுமார்). இதற்கான பட்டா கோயிலுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ளது. அதனை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்பதில் அமைச்சர் முனைப்புக் காட்ட, அதனை பராமரித்து வருகிறது செல்லாயி (வடிவுக்கரசி) குடும்பம்.
 

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆதி (சசிகுமார்), கர்ணா (உன்னி முகுந்தன்). இணை பிரியாத் தோழர்கள். இதில் சிறுவயதில் தனக்கு அன்னமிட்டு அடைக்கலம் கொடுத்த ஆதிக்கு தீவிர விசுவாசியாக இருக்கிறார் சொக்கன் (சூரி). இவர்களைத் தாண்டிதான் நிலத்தின் பட்டாவை எடுக்க வேண்டும். அதற்காக ஆதி - கர்ணா நட்பில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கும் அமைச்சர் அதில் வெற்றி கண்டாரா, இல்லையா? நியாயமா, விசுவாசமா என வரும்போது சொக்கன் எந்தப் பக்கம் நின்றார் என்பது படத்தின் திரைக்கதை.

வெற்றிமாறன் கதையை திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார் துரை செந்தில்குமார். மூன்று முக்கிய கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் இருக்கும் ஆழமான பிணைப்பு, சூரியின் விசுவாசத்துக்கான காரணம், நடுவே இழையோடும் காதல், கதைப்போக்கில் வந்துபோகும் காமெடி, துரோகம், திருப்பங்கள் என தெளிந்த நீரோடை போல எங்கும் நிற்காமல் ஓடுகிறது படம்.


விறுவிறுப்பை மூலதனமாக கொண்டு நகரும் திரைக்கதையில் அடுத்து என்ன என்பது சுவாரஸ்யம். எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் இடைவேளைக் காட்சி இந்த ஆண்டின் சிறந்த திரையரங்க அனுபவத்துக்கு உத்தரவாதம். சிங்கிள் ஷாட்டில் சூரி கேப் விடாமல் கொட்டித் தீர்க்கும் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. கத்திக் குத்து, கழுத்தறுப்பு, கையை வெட்டுவது என அதீத வன்முறையும், தெறிக்கும் ரத்தமும் ஓவர் டோஸ்.

“நம்ம ஆசைப்பட்ட ஒரு விஷயத்துக்காக தப்பான வழியில போனா, கடவுளோ, இயற்கையோ அத சரியான வழியில முடிச்சு வைக்கும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திட்டு இருக்கு”, “கடைசியில நாயா இருந்த என்னைய உன்ன மாதிரி மனுசனா மாத்திட்டியே” போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. அதேநேரம் ‘ஆம்பளன்னு நிரூபிக்க வைக்கில்ல” போன்ற வசனங்கள் அபத்தம்.

சண்டைக் காட்சி ஒன்றில் சசிகுமார் குழந்தையை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. கர்ணா கதாபாத்திரத்தின் மனமாற்றங்களில் அழுத்தமில்லாமல் கடக்கிறது. எல்லா பிரச்சினைகளுக்கும் ‘மண், பெண், பொன்’ தான் காரணம் என்கிறது வாய்ஸ் ஓவர். பெண்ணை குற்றப்படுத்தும் வசனத்துக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்?

கோயில் திருவிழாவில் வெறித்தனமான ஆட்டத்தை ஆடுவது, விசுவாசத்தில் உருகுவது, குற்றவுணர்வு, நியாயத்துக்கும் - உறவுக்கும் இடையில் சிக்கி தவிப்பது, சிங்கிள் ஷாட் வசனங்கள், கதறி அழும் காட்சி, ஆக்‌ஷன் பரிணாமம் என மொத்த திரையையும் ஆக்கிரமித்து நடிப்பில் அழுத்தம் கூட்டுகிறார் சூரி.

சசிகுமாருக்கு கிட்டதட்ட ‘சுந்தரபாண்டியன்’ ரக கதாபாத்திரம். அதை நேர்த்தியாக கையாள்கிறார். கட்டுமஸ்தான் உடம்புடன் க்ளைமாக்ஸில் கூடுதலாக ஸ்கோர் செய்கிறார் உன்னி முகுந்தன். நன்றாகவே எழுதப்பட்ட கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார் சசிகுமாரின் மனைவியாக வரும் ஷிவதா. அனுபவ நடிப்பில் மிளிர்கிறார் வடிவுக்கரசி. ரோஷினி ஹரிபிரியன், ரேவதி ஷர்மா, பிரகிடா தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர். சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார் தேர்ந்த நடிப்பு.

இடைவேளைக்காட்சியில் சிலிர்ப்பனுபவத்தை கொடுத்து சூரியுடன் சேர்ந்து தாண்டவமாடுகிறது யுவனின் பின்னணி இசை. உமா தேவி வரிகளில் ‘கண்ணில் கோடி’ பாடல் கவனிக்க வைக்கிறது. க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட விதம், ஆர்தர் ஏ.வில்சனின் நேர்த்தியான ஒளிப்பதிவுக்கு சான்று. கலர் டோன் தனித்து தெரிகிறது. பிரதீப் ராகவின் நெருடலில்லாத ‘கட்ஸ்’ சிறப்பு.

கணிக்க கூடிய கதைதான் என்றாலும், அதை அயற்சியில்லாத திரைக்கதையில் சுவாரஸ்யமாக சொல்ல முயன்றிருக்கிறது ‘கருடன்’. குறிப்பாக சூரியின் திரை வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கருடன் Review: சூரியின் ஆக்‌ஷன் அவதாரமும், உணர்வுபூர்வ அனுபவமும்! | Soori, sasikumar starrer Garudan movie review - hindutamil.in

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்த்தேன் சூரியின் நடிப்பு அபாரம்👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்த்திருந்தேன் .....மிகவும் நல்ல படம்......!  👍

Link to comment
Share on other sites

நேற்று முந்தினம் இப் படத்தை பார்த்தேன். இவ் வருடத்தில் வந்த உருப்படியான படம்.

வெற்றி மாறன் எழுதிய கதை மீது இருந்த எதிர்ப்பை படம் ஈடு செய்தது.

இப்படத்தில் தன்னை மிகவும் நப்பும் நண்பனை ஏமாற்றும் கதாபாத்திரத்தின் பெயர் - கருணா!.

 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லோரும் ஃபுட்பால் பார்க்கிறாங்களே என்று நானும் பார்ப்பமே என்று தேட............ இது தான் என் தேடலில் வந்தது.......🤣      
    • ம்ம்ம்ம்  உண்மையை எழுதினால்  உங்க‌ளிட‌த்தில் இருந்து ப‌தில் இதை தான் எதிர் பார்க்க‌ முடியும்🫤   ச‌ம்ப‌ந்த‌ர் கூட்ட‌த்தால் த‌மிழ‌ர்க‌ள் அடைந்த‌ ப‌ல‌ன் என்ன‌ அதை 4வ‌ரி எழுதிட்டு போங்கோ😁..................கூடுத‌லா த‌லைவ‌ர் மூல‌ம் த‌மிழ‌ர்க‌ள் அடைந்த‌ ப‌ல‌னை ஆதார‌த்தோடு எழுதுகிறேன்.........................
    • அறுவடை என்ன என்று கேட்டால், வயலுக்கு காவல் காத்தது, பன்றி கலத்தது பற்றிக் கதைக்கிறீர்கள் ☹️  
    • "தூக்கணமும் குரங்கும்" / விவேகசிந்தாமணி     எல்லோரும் படிக்கும் வண்ணம் எளிய தமிழில், நீதிக் கருத்துகளை பாடலாக எழுதப்பட்ட, ஒரு பழைமையான நூல் விவேக சிந்தாமணி ஆகும். இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியாது. எந்த காலத்தில் இயற்றப்பட்ட நூல் என்பதும் தெரியாது. நாயக்கர் காலத்தில் இந்த நூல் உருவாகியிருக்கலாம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். பொதுவாகவே நீதி நூல்கள் அதை செய், இதை செய்யாதே என்று நேரடியாக அறிவுறுத்தும். விவேக சிந்தாமணி அப்படி பட்ட நூல் அல்ல. இது கதை மூலம், நடைமுறையாக, எடுத்துக் கூறும் நூலாகும். இனி தூக்கணமும் குரங்கும் என்ற நாலு வரிப் பாடலைப் பார்ப்போம்.   "வானரம் மழைதனில் நனையத் தூக்கணம் தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும் ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும் ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே" [விவேகசிந்தாமணி பாடல்: 10]   ஒரு காட்டிலே அடர்ந்து வளர்ந்த மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் ஒரு கிளையிலே குருவி ஒன்று கூடு கட்டி குடும்பத்தோடு நீண்ட காலமாக வசித்து வந்தது. பெண்களின் காதிலே தொங்கும் தூக்கணம் போல அதன் கூடு இருந்தமையால் எல்லோரும் அதனை தூக்கணம் குருவி என்று அழைப்பார்கள். அதன் கூடும் உள்ளே மிகவும் அழகாக இருக்கும். அப்படிப்பட்ட அழகான தூக்கணம் வாழும் மரத்திலே இன்னொரு கிளையில் ஒரு குரங்கும் பல காலமாக இருந்து வந்தது.   ஒருநாள் இரவு மிகவும் பலத்த மழை பெய்தது. மரங்கள் புயல் காற்றிலே கடுமையாக ஆடின. மிருகங்கள் குகைகளில் பதுங்கிக் கொண்டன. பறவைகள் கூடுகளில் ஒளித்துக் கொண்டன. ஆனால் அந்தக் குரங்கு மட்டும் கைகளால் மரக்கிளையை இறுகக் கட்டிக் கொண்டு மழையில் நனைந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. கூட்டில் இருந்த ஆண் குருவி, குரங்கின் நிலையை கண்டு கவலை கொண்டு, "நண்பரே! இப்படிப் பெரு மழையில் வீணாக நனைந்துகொண்டு இருக்கிறீரே. உமக்கு மனிதரைப் போல இரண்டு கைகள் இருக்கின்றன. எனவே முன்னரே மனிதர்களைப்போல வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டிருந்தால் இப்போது மழையில் நனைய வேண்டி இருக்காது. கொஞ்சம் யோசித்துப் பாரும்" என்றது.     தூக்கணத்தின் அறிவூட்டலைக் கேட்ட குரங்கு கோபம் கொண்டது. அது தூக்கணம் இருந்த கிளைக்குத் தாவியது. தன் இரண்டு கைகளாலும் தூக்கணம் இருந்த கூட்டைப் பிய்த்து எறிந்தது. கெட்டவர்களுக்குப் புத்தி சொல்லப் போனால் சொல்பவர்களுக்கே அது ஆபத்தாக முடியும் என இப்பாடல் மூலம் விவேகசிந்தாமணி எடுத்துக் கூறுகிறது.   அதாவது, சிறுகுருவி பாடுபட்டுக் கட்டிய அழகிய கூட்டினைச் சிதைத்து இடர் விளைவித்த ஈனச் செயலை உதாரணங்காட்டி, "நல்லவற்றை அற்பர்களுக்குக் கூறினால் கூறியவர்களுக்கு அதனால் துன்பமே ஏற்படும்" என்று நமக்கு உணர்த்துகின்றது இந்த விவேக சிந்தாமணிப் பாடல்.   எனவே யாகாவராயினும் எப்போதும் நா காப்பதே நன்று!     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.