Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் பெயர் பட்டியல்!

srilanka-election.jpg

2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர்
மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.

ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல்
ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக
தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

01. திலித் சுசந்த ஜயவீர
02. சரத் மனமேந்திர
03. அபூபக்கர் முகம்மது இன்பாஸ்
04. ஏ. எஸ். பி. லியனகே
05. பானி விஜேசிறிவர்தன
06. பிரியந்த புஸ்பகுமார விக்கிரமசிங்க
07. அஜந்தா டி சொய்சா
08. பத்தரமுல்லை சிரலதன தேரர்
09. சரத் பொன்சேகா
10. நுவன் சஞ்சீவ போபகே
11. ஹிதிஹாமிலாவின் டொன் ஒஷால லக்மால் அனில் ஹேரத்
12. ஜனக பிரியந்த குமார ரத்நாயக்க
13. கே.கே. பியதாச
14. மையில்வாகனம் திலகராஜா
15. சிறிபால அமரசிங்க
16. பாக்கியசெல்வம் அரியநேத்திரன்
17. சரத் கீர்த்திரத்ன
18. கே. ஆனந்த குலரத்ன
19. நாமல் ராஜபக்ஷ
20. அக்மீமன தயாரதன தேரர்
21. கே.ஆர். கிஷன்
22. பொல்கம்பொல ரலாலாகே சமிந்த அனுருத்த
23. விஜயதாச ராஜபக்ச
24. அனுர சிட்னி ஜயரத்ன
25. சிறிதுங்க ஜயசூரிய
26. மஹிந்த தேவகே
27. முகமது இல்லயாஸ்
28. லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஷ
29. ஆண்டனி விக்டர் பெரேரா
30. கீர்த்தி விக்கிரமரத்ன
31. சஜித் பிரேமதாச
32. ரணில் விக்கிரமசிங்க
33. மரக்கலமான பிரேமசிறி
34. லலித் டி சில ;வா
35. பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்கா
36. டி.எம். பண்டாரநாயக்கா
37. அனுரகுமார திஸாநாயக்க
38. அகம்பொடி பிரசங்க சுரங்ச அனோஜ் டி சில்வா
39. அனுருத்த ரணசிங்க ஆராச்சிகே ரொஷான

 

https://akkinikkunchu.com/?p=288069

  • Replies 185
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் தகுதி

2024 வாக்காளர் பட்டியலின் பிரகாரம், முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் இம்முறை தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/307951

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேட்பாளர்கள் சிலரின் தேர்தல் பிரச்சார பேரணி இன்று ஆரம்பம்

805338630.jpg
 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலர் இன்று (17) தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறாக சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட பேரணி இன்று அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இன்று தென் மாகாணத்தில் தனது ஆரம்பக் கூட்டங்களை ஆரம்பித்துள்ளார்.

சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேர்தல் பிரச்சார பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரம் இன்று கம்பஹாவில் ஆரம்பமானது.


 

https://newuthayan.com/article/வேட்பாளர்கள்_சிலரின்_தேர்தல்_பிரச்சார_பேரணி_இன்று_ஆரம்பம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படும் ; சஜித் உறுதி

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஜனநாயக முறைமை ஏற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (18) இடம்பெற்ற  ஐக்கிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச,

ஜனாதிபதி முறைமையை மாற்றியமைப்பதாக எவ்வளவோ பேர் தம்பட்டம் அடித்தாலும் எவரும் செய்யவில்லை. எனக்கு பதவிகள் வேண்டாம். நான் ஒன்று உறுதியளிக்கிறேன். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நிச்சயமாக ஒழிக்கப்படும். 

ராஜபக்ஸவிடம் முறையிட்டு நாட்டை திவாலாக்கிய குழுவின் பிரதான பாதுகாவலர் தான் ஜனாதிபதி. ராஜபக்ஸவை பாதுகாக்கும் பொலிஸ்மா அதிபர் ரணில் விக்ரமசிங்க என்றும் குறிப்பிட்டார். R

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/நிறைவேற்று-அதிகார-ஜனாதிபதி-முறை-நீக்கப்படும்-சஜித்-உறுதி/175-342398

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சஜித்தின் விஞ்ஞாபனம் 22 ஆம் திகதி

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தமது ஆட்சியின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், பொருளாதார மீட்சித் திட்டங்கள், வெளிவிவகாரக் கொள்கை என்பன உள்ளிட்ட விடயங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பட்டியிலிடப்படவுள்ளன. அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் பற்றிய உறுதிமொழியும் வழங்கப்படவுள்ளது.

மலையகத் தமிழ் மக்களுக்கான அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டங்களும் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்படவுள்ளன.

https://thinakkural.lk/article/308098

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி வேட்பாளர்களை விவாதத்துக்கு அழைத்துள்ள பஃப்ரல்

ஜனாதிபதி வேட்பாளர்கள் 6 பேரும் தமது கொள்கைகளை முன்வைப்பதற்கான விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ச, திலித் ஜயவீர மற்றும் வடக்கு கிழக்கை பிரநிதித்துவப்படுத்தி போட்டியிடும் அரியநேந்திரன் ஆகியோருக்கு அந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர்களுள் இருவர் தற்போது விவதாதத்திற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/308132

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எந்த வேட்பாளருக்கும் ஆதரவு இல்லை என கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எந்த வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.

நாட்டின் புதிய ஜனாதிபதியை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் தாம் நாட்டிலுள்ள கத்தோலிக்க மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவே ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பு பேராயரின் ஊடகப் பேச்சாளர் சிறில்காமினி பெர்ணாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் சந்தித்துள்ள போதிலும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவை வெளியிடப்போவதில்லை எனத் தெரித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச, ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார, பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச உட்பட மேலும் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

http://www.samakalam.com/எந்த-வேட்பாளருக்கும்-ஆதர/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி வேட்பாளர் மரணம் 

 

 

Freelancer   / 2024 ஓகஸ்ட் 23 , மு.ப. 12:39 - 0     

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட அய்ட்ரூஸ் முகமது இலியாஸ் (வயது 78)  காலமானார். 
 
சுகவீனமுற்றிருந்த அவர் 2 நாட்களாக புத்தளம் ஆதார  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (22) காலமானார். 
 
அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. (a)

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதி-வேட்பாளர்-மரணம்/175-342660

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போலியான செலவின தகவல்களை சமர்ப்பிக்கும் வேட்பாளர்களின் குடியுரிமை இரத்தாகும் - தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: DIGITAL DESK 7   23 AUG, 2024 | 04:52 PM

image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு முடிவடைந்து 21 நாட்களுக்குள் தேர்தல் செலவினங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்காத மற்றும் போலியான தகவல்களை முன்வைக்கும் வேட்பாளர்களின் குடியுரிமை மூன்று ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்படும். தேர்தல் செலவினங்கள் ஒழுங்குப்படுத்தல் சட்டத்துக்கமைய அனைத்து வேட்பாளர்களும் செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேர்தல் பிரச்சார செலவினங்கள் தொடர்பான சட்டம் 1946 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.தேர்தல் சட்டத்துக்கு அமைய செயற்படாதவர்களின் பதவி நிலைகளும் நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஊடாக இரத்துச் செய்யப்பட்ட வரலாற்று பதிவுகளும் காணப்படுகின்றன.

தேர்தல் கட்டமைப்பில் விருப்பு வாக்கு முறைமையை அறிமுகப்படுத்தப்பட்டவுடன் நிதியை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் செயற்பாடுகளை தீர்மானிக்கும் செயற்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. வாக்காளர்களும் தமக்கு என்ன கிடைக்கும் என்பதை கருத்திற் கொண்டு தேர்தலை  தீர்மானக்கும் நிலை தோற்றம் பெற்றது.

தேர்தல் காலத்தில் நிதி பரிமாற்றம் தீவிரமடைந்ததன் பின்னர் அரசியல்வாதிகளுக்கும் வாக்காளர்களுக்கும் இடையிலான சமூக ஒப்பந்தம் பலவீனமடைந்து. வியாபார நிலைமை தோற்றம் பெற்றுள்ளது. வேட்பாளருக்கும் வாக்காளருக்கும் இடையிலான உறவு வியாபாரிக்கும், நுகர்வோருக்கும் இடையிலான உறவாக மாற்றமடைந்துள்ளமை கவலைக்குரியது.

இவ்வாறான பின்னணியில் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்துக்காக செலவு செய்ய வேண்டிய நிதி தொடர்பில் ஒரு வரையறையை கொண்டு வர வேண்டும் என்பதற்காக 2010 ஆம் ஆண்டு தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தல் சட்டம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டு பாரிய போராட்டத்துக்கு மத்தியில் 2023 ஆம் ஆண்டு தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தல் சட்டம் இயற்றப்பட்டது.

2023 ஆம் ஆண்டு நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேர்தல் செலவினங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தை செயற்படுத்த எதிர்பார்த்திருந்தோம். இருப்பினும் நிதி நெருக்கடி காரணமாக தேர்தலை நடத்த முடியவில்லை. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவது குறித்து கலந்துரையாடியுள்ளோம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளன. தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் சட்டத்துக்கு அமைய வாக்காளர் ஒருவருக்கு வேட்பாளர் ஒருவர் பிரச்சார செலவுக்காக 109 ரூபாவை செலவழிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே அனைத்து வேட்பாளர்களும் இந்த தொகைக்கு உட்பட்ட வகையில் செயற்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்து 21 நாட்களுக்குள் 38 வேட்பாளர்களும் தமது தேர்தல் பிரச்சார செலவினங்கள் தொடர்பிலான உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களை சமர்ப்பிக்காத மற்றும் போலியான ஆவணங்களை சமர்ப்பிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மூன்று ஆண்டுகள் தேர்தலில் வாக்களிப்பதற்கும்,வாக்கு கோருவதற்கும் தடை விதிக்கப்படும் அதனுடன் குடியுரிமையை இழக்க நேரிடும்.ஆகவே சகல  வேட்பாளர்களும் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் தரப்பினரும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்துக்கு அமைய செயற்பட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/191790

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி தேர்தல் விதி மீறல் தொடர்பில் இதுவரை 901 முறைப்பாடுகள் பதிவு

24 AUG, 2024 | 01:00 PM
image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை) 901 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 427 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 450 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 23 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

 

WhatsApp_Image_2024-08-23_at_23.19.32.jp

https://www.virakesari.lk/article/191855

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தபால் மூல வாக்குச் சீட்டுகள் ஏற்றுக்கொள்ளும் பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்காளர் அட்டைகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வாக்காளர் அட்டை விநியோகம் செப்டம்பர் 3 ஆம் திகதி தொடங்கும் என்றும், செப்டம்பர் 8 ஆம் திகதி அதற்கான சிறப்பு நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்துச் செய்யப்படுவதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

எவரேனும் அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/308378

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Presidential-Election-DailyCeylon.jpg?re

19 வேட்பாளர்கள் எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை-தேர்தல்கள் ஆணைக்குழு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 19 வேட்பாளர்கள் இதுவரை எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஒரு கூட்டத்தைக்கூட  நடத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் ஒருவருக்கு வாக்குச் சீட்டு அச்சடித்தல் உள்ளிட்ட தேவைகளுக்கான தேர்தல்கள் ஆணைக்குழு சுமார் ஒரு கோடி அல்லது ஒன்றரை கோடி ரூபாவை செலவிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்யாமை சிக்கலான நிலை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இதுவரை பிரசாரத்தில் ஈடுபடாத வேட்பாளர்களில் சுமார் 10 வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் சுவரொட்டிகள் மற்றும் பாரிய கட்அவுட்கள் பயன்படுத்துவது குறைந்துள்ளமை மிகவும் நல்ல விடயம் எனவும் மேலும், தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்

https://athavannews.com/2024/1397147

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேர்தலின் போது நிவாரணங்கள், சம்பள உயர்வுகள் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்புக்கள் தேர்தல் சட்டங்களை மீறுவதாகும் ; ட்ரான்ஸ்பரன்சி!

27 AUG, 2024 | 11:12 AM
image

2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பொது வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்காணித்து வரும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது, தேர்தலுக்கு முந்தைய நிவாரணங்கள் மற்றும் சம்பள உயர்வுகள் வழங்குதல் தொடர்பான அரசாங்கத்தின் அண்மைக்கால தீர்மானங்கள் தேர்தல் சட்டங்களை தெளிவாக மற்றும் வேண்டுமென்றே மீறுவதாக அமைகின்றன எனச் சுட்டிக் காட்டியுள்ளது. 

இது தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2025 ஜனவரி முதல் ரூ. 25,000 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் சேர்த்து, 24 முதல் 35 சதவீத சம்பள உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது. 

இலங்கையில் சுமார் 1.5 மில்லியன் பொது சேவைப் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் வாக்காளர்கள். இது தவிர, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.12,000 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்குவதாகவும் அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது. 

மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும், தேயிலை பயிர்ச்செய்கையாளர்களுக்கு உர மானியமும் ஆகஸ்ட் 22 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

தோட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் அண்மையில் ரூ. 1,700 ஆக உயர்த்தப்பட்டது. புதிதாக வாக்குறுதியளிக்கப்பட்ட மானியங்கள் மற்றும் சம்பள உயர்வுகளுக்கான நிதியை எந்த வழியில் திரட்டப் போகிறது என்பதை அரசாங்கம் எங்கும் விளக்கவில்லை.  

எவ்வாறாயினும், பொதுமக்கள் அல்லது பொது அதிகாரிகளுக்கான மானியங்கள், சம்பள உயர்வுகள் அல்லது நன்மைகளை வழங்குவதை எதிர்க்கவில்லை, மாறாக அவை செயல்படுத்தப்படும் நேரத்தை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா வலியுறுத்துகிறது.

தேர்தல் காலத்தில் ஒரு வேட்பாளரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, ஊக்குவிக்கவோ அல்லது தடுக்கவோ பொது வளங்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று சட்டம் தெளிவுபடுத்துகிறது. 

இந்த முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கணிசமான எண்ணிக்கையிலான முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளது. 

ஆகஸ்ட் 23, வெள்ளிக்கிழமை வரை, பொது வளங்களைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 80 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா சமர்ப்பித்துள்ளது. 

ஆணைக்குழுவின் தலையீட்டினால் இவ்வாறான பல மீறல் செயற்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆணைக்குழு துரித நடவடிக்கைகளை எடுத்தமைக்காக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா பாராட்டுகிறது. 

நாட்டின் ஒரு முக்கிய தருணமான ஜனாதிபதித் தேர்தலை அணுகும் போது, பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குறிப்பிட்ட வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக அதிகரித்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது. 

இவ்வாறான செயற்பாடுகள் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் 2394/56 சுற்றறிக்கைகள் / வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டல்களை தெளிவாக மீறுவதாகும். 

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலின் நேர்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நடைமுறைகளைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா கடுமையாக வலியுறுத்துகிறது. 

ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் தற்போதைய ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கத்தினால் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்வது, தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக நிறைவேற்று அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதாகும். ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனமானது, வேட்பாளர்களுக்கான சம வாய்ப்பை இழக்கும் அனைத்து செயல்களையும் கண்டிக்கிறது. 

தேர்தல்களின் முக்கியமான காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறும் எந்தவொரு நடவடிக்கையும் பிரஜைகளுக்கு சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் வாக்களிக்கும் உரிமையை வழுவிப் போகச் செய்வதோடு அதன் மூலம் ஜனநாயக செயன்முறையை சிதைக்கின்றது. 

நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களை உறுதி செய்வதற்கும் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் உடனடியான நடவடிக்கைகளை எடுக்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா கோரிக்கை விடுக்கிறது.

https://www.virakesari.lk/article/192090

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜே.ஆர்., ரணசிங்க பிரேமதாசவை மதிப்பவர்கள் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவமளிக்க மாட்டார்கள் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Published By: VISHNU   28 AUG, 2024 | 03:12 AM

image

(எம்.மனோசித்ரா)

நாடு நெருக்கடியில் இருக்கும் போது கட்சியை மறந்து நாட்டுக்காக சிந்தியுங்கள் எனக் கற்றுக் கொடுத்த ஜே.ஆர்.ஜெயவர்தனவின் கொள்கையையே இன்றும் நான் பின்பற்றுகின்றேன். அவரையும் ரணசிங்க பிரேமதாசவையும் உண்மையாக மதிக்கும் எவரும் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (27) மாவனல்லையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு நெருக்கடியில் இருக்கும் போது கட்சியை மறந்து நாட்டுக்காக சிந்தியுங்கள் என்று எனது தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கற்றுக் கொடுத்திருக்கின்றார். 1971 ஜே.வி.பி. கலவரம் இடம்பெற்றபோது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நாம் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அன்றைய எதிர்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

அந்த சந்தர்ப்பத்தில் எமது கட்சியின் இளைஞர் அணியின் செயலாளரும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மகனும் சிறையிலடைக்கப்பட்டிருந்தனர். எனினும் அந்த பிரச்சனைகளை பின்னர் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் தற்போது நாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்போம் என்றும் அவர் கூறினார். அதேபோன்று தான் 1983இல் ஜே.வி.பி. கலவரம் ஏற்பட்டபோதும் அப்போதைய எதிர்க்கட்சி ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு ஒத்துழைப்பு வழங்கியது.

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொலை செய்யப்பட்ட போது, உங்களது கட்சியில் ஜனாதிபதி ஒருவரை நிறுத்துங்கள் என்று பண்டாரநாயக்க தெரிவித்தார். இவ்வாறு தான் முன்னர் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்பட்டன. அதேபோன்றுதான் நாடு நெருக்கடியான சூழலில் இருந்தபோது அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நாம் அனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்பினோம். எனவே ஜே.ஆர்.ஜெயவர்த்தனவையும் ரணசிங்க பிரேமதாசவையும் மதிக்கும் ஐக்கிய தேசிய கட்சியினரான நாம் நாட்டுக்காக இணைந்து செயல்படுவோம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் கட்சியை பற்றி சிந்தித்திருந்தால் நாடு இன்று இந்த நிலைமையில் இருந்திருக்காது. எதிர்க்கட்சித் தலைவரை மாற்று பிரதமர். ஐக்கிய தேசியக் கட்சியை பாரம்பரியமாகக் கொண்ட அவர் அன்று பிரதமர் பதவியை பொறுப்பேற்றிருக்க வேண்டும். யாரும் இல்லாத சந்தர்ப்பத்திலேயே நான் இந்த இடத்துக்கு வந்தேன்.

பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் முழுமையாக அந்த இடத்துக்கு செல்லவில்லை. மக்களின் வாழ்க்கை சுமையை மேலும் குறைப்பதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்கும் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் எதிர்பார்க்கின்றோம்.

இன்னும் தொங்கு பாலம் உள்ள பாதையிலேயே பயணிக்க வேண்டியிருக்கின்றது. சிலர் வரியை முற்றாக நீக்குவதாக கூறுகின்றனர். வரி இல்லை என்றால் என்ன செய்வார்கள்? எமது வருமானம் முற்றாக இழக்கப்படும். அவர்கள் தொங்கு பாலத்தை அறுத்து எறிந்து விட்டு செல்லுங்கள் என்று கூறுகின்றார்கள். அவ்வாறு செய்தால் நாம் ஆற்றில் விழ வேண்டியதுதான். தொங்கு பாலத்தில் அவதானமாக பயணிப்பதா அல்லது அதனை அறுத்தெறிந்து ஆற்றில் விழுவதா?

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய அரசாங்கத்தின் வருமானம் சுமார் 200 பில்லியன் வரை இழக்கப்படும். வருமானத்தை குறைத்து எவ்வாறு செலவை அதிகரிக்க முடியும்? இந்த கணிதமும் பொருளாதாரம் தெரியாத அவர்கள் தொங்கு பாலத்தின் இரு பகுதிகளையும் அறுத்துவிடவே எண்ணுகின்றனர். தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தை நானும் வாசித்தேன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி அதன் பிரதிபலனை உங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எனது இலக்காகும்.

வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் வரை சுமையை குறைத்து பொருட்களின் விலைகளையும் குறைக்க முடியும். பொருளாதாரத்தை மேம்படுத்தினால் மாத்திரமே வாழ்க்கை சுமையை மேலும் குறைக்க முடியும். ஐக்கிய மக்கள் சக்திக்கு அவர்களது கொள்கை என்னவென்றே தெரியவில்லை. வியாழனன்று எமது முழுமையான வேலைத்திட்டத்தை கொள்கை பிரகடனத்தில் உங்களுக்கு வெளிப்படுத்துவோம். எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டர் அருகில் புள்ளடியிடுங்கள் என்றார். 

https://www.virakesari.lk/article/192178

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாணக்கியன் சுமந்திரனது செல்லப்பிள்ளை.சம்பந்தன் ஐயாவின் செயல்வடிவம் சுமந்திரன் : கஜேந்திரன் MP !

kugenAugust 28, 2024
 
DSC_0030.JPG

 

(பாறுக் ஷிஹான்)

மக்களை ஏமாற்றுவதற்காகவே அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இவ்வாறானவர்களது பசப்பு வார்த்தைகளை கண்டு ஏமாற கூடாது. தேர்தலை பகிஸ்கரிப்பதற்கு மக்கள் தயாராக வேண்டும் . சாணக்கியன் சுமந்திரனது செல்லப்பிள்ளை. சம்பந்தன் ஐயாவின் செயல்வடிவம் சுமந்திரன் அவர்கள். கூட்டமைப்பினுள் பிளவு என்பது அவர்கள் பதவிக்காக சண்டை பிடிப்பதாக இருக்கலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அண்மையில் அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது
ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை சாணக்கியன் எம்.பி அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் தீர்மானிக்கும் என்பதை அடிக்கடி கூறி வருகின்றார். இவர்கள் இந்தியாவின் முகவர்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். இந்திய மேற்கு தரப்பு எந்த முகவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்கின்றதோ அந்த முகவருக்கு வெளிப்படையான அறிவித்தலை செய்வார்கள். தமிழ் மக்கள் அந்த மனநிலையில் இல்லை என்று சொன்னால் ஏதோ ஒரு வகையில் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் இறுதி நேரத்தில் எடுத்து முடிவுகளை மாற்றக்கூடியவர்கள்.

தங்களுக்கென்று ஒரு நிலைப்பாடு கிடையாது. சாணக்கியன் அவர்கள் மும்மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர். இவ்வாறு பேசுகின்ற அவர் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசுகின்றாரா அல்லது எதிராக பேசுகின்றாரா என்பது குறித்து மக்களால் பிரித்துணர முடியாதுள்ளது. எப்பொழுதும் அரசாங்கத்திற்கு எதிராக பேசுவாரே தவிர ஒரு போதும் அரசுக்கெதிராக அவர் பேசுவது கிடையாது. அரசாங்கத்தை விமர்சிப்பதன் ஊடாக அவர் மக்களுக்கு தன்னை தமிழ் தேசிய வாதியாக காட்ட முற்படுகின்றார். மக்களை ஏமாற்றுவதற்காகவே அரசாங்கத்தை விமர்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் இவ்வாறானவர்களது பசப்பு வார்த்தைகளை கண்டு ஏமாற கூடாது. தேர்தலை பகிஸ்கரிப்பதற்கு மக்கள் தயாராக வேண்டும் என்பதை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

சாணக்கியன் சுமந்திரனது செல்லப்பிள்ளை. சம்பந்தன் ஐயாவின் செயல்வடிவம் சுமந்திரன் அவர்கள். கூட்டமைப்பினுள் பிளவு என்பது அவர்கள் பதவிக்காக சண்டை பிடிப்பதாக இருக்கலாம். எனினும் எமது தேர்தல் பகிஸ்கரிப்பு விடயத்தை இவ்வாறானவர்கள் பிரிந்து நின்றாலும் பகிஸ்கரிக்க விடமாட்டார்கள். நிச்சயமாக யாரோ ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவார்கள். தமிழ் மக்கள் தேர்தலை பகிஸ்கரிக்க கூடாது என்ற நிலைப்பாட்டை எடுக்க முடியாதவாறு வாக்களிப்பு முறைகளை எவ்வழியிலும் நடாத்தி செல்வார்கள். எனவே மக்கள் இவ்வாறானவர்களை நிராகரிக்க முன்வர வேண்டும் என்றார்.

 

https://www.battinews.com/2024/08/mp_83.html

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

“இலங்கைக்கான எனது ஐந்தாண்டு பணி” தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது; முழு விபரம் உள்ளே

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் “இலங்கைக்கான எனது ஐந்தாண்டு பணி” – தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் வெளியிட்டு வைக்கப்பட்டது.

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வு சற்று முன்னர் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஆரம்பமான நிலையில், அவரது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழில் வாசிக்க…

http://www.ranil2024.lk/ta/manifesto

https://thinakkural.lk/article/308586

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்குறுதி வழங்குவார் ஆனால் எதனையும் செய்ய மாட்டார்; ரணிலை சாடிய விக்கி

ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டும் வாக்குறுதியை வழங்குவார். ஆனால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நான் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் பொது வேட்பாளரின் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக பேசப்பட்டது.

நான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னர் ஆதரவு வழங்கி பேசியது உண்மை. அவர் எனது பள்ளி நண்பரும் கூட.

13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கலாநிதி விக்னேஸ்வரன் தலைமையில் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுடன் பல பேச்சுக்களை நடத்தினோம்.

13 வது திருத்தம் தமிழ் மக்களின் நிரந்தர தீர்வாக நாம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் குறைந்தபட்சம் அதிலுள்ள அதிகாரங்களையாவது நடைமுறைப்படுத்த ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்

பேச்சுவார்த்தையில் 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கான நிபுணர் குழு பரிந்துரைகளை வழங்குவதற்காக நிர்மலா சந்திரகாசன் தலைமையில் நிபுணர் குழுவுக்கான பெயர்களை வழங்கினோம். ஆனால் ரணில் விக்ரமசிங்க குறித்த குழுவை அங்கீகரிக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் சாதகமான நிலப்பாட்டை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையில் அவர் மீது நம்பிக்கை வைத்தோம்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டும் செயல்படுத்தும் நபராக காணப்பட்டாரே தவிர நடைமுறையில் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை.

அதன் காரணமாக தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியத்தை முதலில் முன்வைத்து முன்மொழிந்தவர்களில் நானும் ஒருவன்.

நான் கொழும்பில் இரண்டு தடவைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பொது வேட்பாளரின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு செல்ல முடியவில்லை. இருந்தாலும் எனது கட்சி சார்பில் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

நான் கலந்து கொள்ளாததை அறிந்தவர்கள் நான் ரணில் விக்கிரமசிங்காவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக புரளிகளை கிளப்பி விட்டார்கள்.

ஆகவே, தமிழ் பொது வேட்பாளர் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிடும் நிலையில் தமிழ் மக்கள் அவருக்கான அமோக ஆதரவை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/308584

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு கடமைகளை ஆரம்பித்தது

ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வியாழக்கிழமை முதல் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பார்வையாளரான நாச்சோ சான்செஸ் அமோவுடன் 10 முக்கிய பார்வையாளர்கள் இந்த பணியை ஆரம்பித்துள்ளனர்.

நாடு முழுவதும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் 26 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

https://thinakkural.lk/article/308592

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க உறுதிபூண்டுள்ளோம்; சஜித்தின் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு

தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் உள்ளது. ஆகவே இந்த செயல்முறையில் தற்போதைய அரசியல் முறையை ஒரே நாட்டுக்குள் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதே எமது கொள்கை என சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் வரை, 13வது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ளோம்.  அரசியலமைப்பு மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதியினால் ஒருதலைப்பட்சமாக மீண்டும் பொறுப்பெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பதுடன். மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை வலுப்படுத்தி, மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் (கொள்கை பிரகடனம்) இன்று கண்டியில் வெளியிடப்பட்டது.

இதிலேயே இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் மேலும் அதிகபட்ச நிதி திறன் மற்றும் செயல்திறனுடன் மாகாண சபைகள் செயல்படுவதை உறுதிசெய்ய விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டு, அவற்றின் நோக்கங்களை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற வசதிகளை வழங்குவோம். பாதுகாப்புத் தேவைகளுக்கு தேவையற்ற அனைத்து நிலங்களும் தாமதமின்றி அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

https://thinakkural.lk/article/308624

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் வெளியான அறிக்கை

30 AUG, 2024 | 03:38 PM
image

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,

வாக்காளர் வாக்குச்சீட்டில் தான் வாக்களிக்கவுள்ள வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு எதிரில் அதற்கென குறித்தொதுக்கப்பட்டுள்ள பகுதியில் 1 என்ற இலக்கத்தை குறித்து வாக்கைப் பிரயோகித்தல் வேண்டும்.

அதன் பின்னர், 2 மற்றும் 3 என்ற இலக்கங்களை குறிப்பதன் மூலம் இரண்டு வேட்பாளர்களுக்கு தனது விருப்புத் தெரிவை குறிப்பட முடியும்.

வாக்காளர் தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்புத் தெரிவுகளை அடையாளமிடவில்லை எனினும் அதில் முறையானவாறு ஒரு வேட்பாளருக்கு அடையாளமிடப்பட்ட வாக்கொன்று காணப்பட்டால் அது செல்லுபடியான வாக்கொன்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.

வாக்காளரின் உளக்கருத்து வாக்குச்சீட்டில் ஏதேனும் தெளிவான அடையாளம் ஒன்று (உதாரணமாக; x என்ற அடையாளம் ) காணப்பட்டால் அது வாக்காளருக்கு அளிக்கப்பட்ட வாக்கொன்றாக கருதப்படும்.

இதேவேளை,  கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் காணப்படும் வாக்குச்சீட்டுகள் நிராகரிக்கப்படும்.

1. எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கு அடையாளமிடப்படாமல் இருத்தல்

2. ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்கு அடையாளமிடப்பட்டு இருத்தல்

3. ஒரு வேட்பாளருக்கு 1 என்ற இலக்கமும் மற்றைய வேட்பாளருக்கு x என்ற அடையாளமும் காணப்படல்

4. இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்புத் தெரிவுகள் மாத்திரம் அடையாளமிடப்பட்டு இருத்தல்

5. வாக்காளரை அடையாளம் காணக்கூடியவாறு ஏதேனும் எழுதப்பட்டிருத்தல்

6. 1 தவிர்த்த வேறு அடையாளமொன்றுடன் 2,3 விருப்புத் தெரிவுகள் அடையாளமிடப்பட்டு இருத்தல்

7. 1,2,3 ஐ விட அதிகமான வாக்கு மற்றும் விருப்புத் தெரிவுகள் அடையாளமிடப்பட்டு இருத்தல்

456820379_1087358226156006_5520481816423

https://www.virakesari.lk/article/192394

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிறைய செல்லுபடியற்ற வாக்குகள் விழும்போல!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் வரிச்சுமை குறைக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

01 SEP, 2024 | 02:12 PM
image
 
  • ஏற்றுமதித்துறை பாதிக்காமல் டொலரை 275 ரூபா வரை கொண்டுவர முடியும்.
  • வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நிவாரணம் வழங்கப்படும்.
  • உங்களதும், உங்களின் பிள்ளைகளினதும் எதிர்காலத்தை சிந்தித்து வாக்களியுங்கள்.
  •  சிறுபிள்ளைத்தனமானவர்கள் நாட்டை நிர்வகிக்கத் தகுதியற்றவர்கள்

சிறுபிள்ளைத் தனமானவர்களிடம் நாட்டை ஒப்படைத்து, மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொள்ளக் கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனும், கடன் வழங்கிய 18 நாடுகளுடனும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் பாதுகாத்து எதிர்வரும் இரண்டு வருடங்களில் வரிகளைக் குறைக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், ஏற்றுமதித்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் டொலரின் பெறுமதியை 275 ரூபா வரை கொண்டுவர முடியும் என்றும், ஏற்றுமதித் துறையினருடன் பேச்சு நடத்தி, கிரமமாக இந்தப் பணி மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எனவே, சஜித்தும் அநுரவும் இன்று மக்களுக்கு அரசியல் வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும், பிள்ளைகளினதும், தங்களதும்எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

ஜா-எல நகரில் இன்று (30) பிற்பகல் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,

''நெருக்கடியான நேரத்தில் சஜித் பிரேமதாசவிற்கும், அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் நாட்டைப் பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் வரவில்லை. நாடும், பொருளாதாரமும் வீழ்ந்துவிட்டது. நாட்டை மீட்க முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் நாம் அதனை மீட்டோம். கடினமான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது. வட் வரியை அதிகரிக்கும் போது இது மிகவும் கடினமான தீர்மானம் என்பதை மக்களுக்கு கூறினோம். எம்மைத் திட்டினார்கள். ஆனால் மக்கள் பொறுத்துக் கொண்டனர். அது எனக்குப்போதும். இந்த கடினமான தீர்மானங்களை எடுத்தால் பொருளாதாரத்தை மீட்க முடியும் என்பதை அறிந்திருந்தோம். பொருளாதாரம் வலுப்படும் போது ரூபா வலுப்பெறும். ரூபா வலுப்பெறும் போது உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்தக் காலத்தில் எடுத்த கடினமான தீர்மானங்களை எடுத்ததால் நாம் மீண்டு வந்தோம். இதனால் மக்களுக்கு அஸ்வெசும மூலம் நிவாரணம் வழங்க முடிந்தது. இந்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிந்தது. இன்னும் எங்களிடம் பணம் இருப்பதால் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 25,000 ரூபாவாக வழங்கவும் தீர்மானித்துள்ளோம். அத்துடன் அடிப்படைச் சம்பளத்தை 55,000 ரூபாவாக நிர்ணயிக்கவும் தீர்மானித்துள்ளோம். பொருளாதாரம் வலுப்பெற்றுவருவதால்  இவற்றை செய்ய முடிகின்றது. இதனை முன்னெடுத்துச் செல்ல ரூபாவை மேலும் வலுப்படுத்த வேண்டும். ரூபா வலுபெறும்போது எங்களுக்கு அதிகமாக பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும். டொலரின் பெறுமதியை 275 ரூபா வரை கொண்டுவர முடியும். இதனைவிட குறைத்தால் ஏற்றுமதி துறையினருடன் நாம் பேச்சு நடத்த வேண்டும். இதனைக் கிரமாக குறைக்குமாறு சிலர் கூறுகின்றனர். தங்களுக்கு பிரச்சினை இல்லை என்று ஏனையோர் கூறுகின்றனர். ஏற்றுமதித்துறை பாதிக்காத வகையில் இதனை செய்ய வேண்டும். இவற்றையும் பாதுகாத்துக் கொண்டு நாம் முன்நோக்கிச் செல்ல வேண்டும். 

விவசாயத்தையும், மீன்பிடித்துறையும் மேம்படுத்த நிவாரணம் வழங்குவோம். நாட்டில் பிரச்சினை இருந்தால் நாம் பொருட்களின் விலையைக் குறைப்போம் என்று சிலர் கூறுகின்றனர். நிவாரணம் வழங்குவதாக கூறுகின்றனர். நான் அவ்வாறு கூறவில்லை. நாம் நிவாரணம் வழங்குவோம். அந்த நிவாரணங்கள் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். உற்பத்தியை அதிகரிக்கவே நிவாரணம் வழங்குவோம். இவ்வாறு நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்ல வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். சாதித்துக் காட்டியவர்கள் என்னுடன் இருக்கின்றனர். முடியாது என்றவர்கள் எதிரணியில் இருக்கின்றனர். அவர்கள் எங்களைத் திட்டுகின்றனர். வருமானத்தை அதிகரிப்பதைப் போலவே தொழில் வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். எமது திட்டத்தின்படி ஒரு லட்சம் சுய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவோம். பணத்தைப் பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்கும் வழியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவோம். எங்களுக்கு சிறந்த திட்டமொன்று இருக்கிறது.

ஏனையோரின் வேலைத் திட்டத்தையும் ஆராய்ந்து பாருங்கள். 21ஆம் திகதி தேர்தல் முடிவுகளின்படி, 22ஆம் திகதி முதல் இந்த வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கத் தயாராக இருக்கிறேன். அதன்பின்னர் நிறுத்த முடியாது. நான் பணியாற்ற ஆரம்பித்த பின்னர் எனது அமைச்சர்கள் இரவு பகல் பாராது பணியாற்ற வேண்டும். வரி வலையில் சிக்காத பலர் இருக்கின்றனர். அவர்கள் உள்வாங்கப்படுவார்கள். அதன்பின்னர், வரிகளைக் குறைக்க முடியும். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்த பின்னர், வரிகளைக் குறைக்க முடியும். அடுத்த இரண்டு வருடங்களில் வரிச் சுமை குறைக்க முடியும். இந்த நாட்டின் கல்வித்துறையை மேம்படுத்த வேண்டும். டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும். ஆனால் இவற்றை செய்ய 5 - 10 வருடங்கள் செல்லும். நான் பொய்களைக் கூற தயார் இல்லை. தொலைக்காட்சியில் சஜித் பிரேமதாச கதைப்பதைப் பார்த்தேன். 10 ஆயிரம் பாடசாலைகளுக்கு அவர் ஸ்மார்ட் வகுப்பறைகளைக் கொண்டுவருவதாக கூறுகிறார். உலகில் உள்ள 10 ஆயிரம் கோடிஸ்வரர்களை சந்தித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடசாலையை பொறுப்புக் கொடுப்பேன் என்கிறார். ருமேனியாவில் உள்ள கோடீஸ்வரர் ராகமயில் உள்ள பாடசாலையைப் பொறுப்பேற்பாரா என்று கேட்க விரும்புகிறேன். வீழ்ந்துகிடக்கும் ஆர்ஜன்டீனவில் உள்ள கோடிஸ்வரர் ஒருவர் இங்குள்ள பாடசாலையொன்றை பொறுப்பேற்பாரா? இவற்றை செய்ய முடியுமா? 10 ஆயிரம் பாடசாலைகளில் எத்தனை வகுப்பறைகள் இருக்கின்றன. ஒரு  இலட்சம் வகுப்பறைகள் என்று வைத்துக் கொண்டால் கணக்கிட்டுப் பாருங்கள். ஒரு ஸ்மார்ட் வகுப்பறைக்கு சுமார் 20 லட்சம் ரூபாசெலவாகும். இதனை ஒருஈலட்சத்தால் பெருக்கி பாருங்கள். சஜித் பிரேமதாச சொன்னவுடன் உலகில் உள்ள பணக்காரர்கள் இங்கு படையெடுப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறான சிறுபிள்ளைத் தனமானவர்களுக்கு வாக்களிக்க முடியுமா? தூதரங்கள் ஊடாக இவற்றைக் கொண்டுவருவதாகக் கூறுகிறார். இல்லையெனில் தூதுவர்களை பதவி விலக்குவதாக கூறுகிறார். எங்களுக்கு 50 தூதரகங்கள்கூட இல்லை. இவ்வாறான நபர்களிடம் எப்படி நாட்டை நிர்வகிக்க முடியும். 2022ஆம் ஆண்டு ஏன் நாட்டைப் பொறுப்பேற்காது தப்பியோடியது ஏன் என்று தற்போது தெரிகிறது. அதனால் யார் உண்மையைப் பேசுகிறார்கள். யார் செயல்கள் மூலம் நிருபித்துள்ளார்கள் என்பதைப் பாருங்கள்.

 இது எனது எதிர்காலம் அல்ல. இது உங்களின் எதிர்காலம். காலையில், எழுந்து வரிகளுக்குச் செல்வதா, நடக்கச் செல்வதா என்பதை தீர்மானியுங்கள். உரிய நேரத்தில் மருந்துகளை எடுப்பதா, மருந்துகள் இன்றி மரணிப்பதா என்பதை தீர்மானியுங்கள். மீண்டும் அந்த யுகத்திற்குச் செல்வதா என்பதை மட்டுமே கேட்கிறேன். எனவே, உங்களின் எதிர்காலம் குறித்தும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் சிந்தியுங்கள். என்னிடம் நாட்டை ஒப்படையுங்கள். நான் சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு வழங்குவேன். எனவே, செம்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.''என்றார்.

முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன;

அன்று நாட்டைப் பொறுப்பேற்ற கோரிய போது சஜித் பிரேமதாச மறுத்துவிட்டார். இந்த நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்க முடியாது என்றும், ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே நாட்டைக் காப்பற்ற முடியும் என்றும் சஜித் பிரேமதாச அணியில் இருக்கும் பொருளாதார நிபுணர் என்று கூறும் ஹர்ஷ டி சில்வா கூறியிருந்தார். ஆனால் அந்த அதிசயத்தை ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திக் காட்டினார். சிவில் யுத்தத்தை விட பொருளாதார யுத்தம் கொடுரமானது. இரண்டு, மூன்று வாரங்களில் மக்கள் துன்பப்பட்டனர். ஒரு மாத காலத்திற்குள் நாடு மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டது. ஆனால் மிகக் குறுகிய காலத்திற்குள் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை மீட்டெடுத்துள்ளார். நாம் தொடர்ந்து இந்தப் பாதையில் பயணிக்க வேண்டும். நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்கவை எந்த வகையிலும் புறக்கணிக்க முடியாது. அதனால் தான் பொது வேட்பாளராக அவரை ஆதரிக்கத் தீர்மானித்தோம்.

வெனிசுவேலாவில் எண்ணெய் வளம் இருந்தும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திண்டாடுகிறது. லெபனானில் கடந்த பல வருடங்களாக பொருளாதார நெருக்கடி இருக்கிறது. நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கிறது. கிரேக்கம் கடந்த 10 வருடங்களில் 21 அரசாங்கங்கள் மாறியுள்ளன. புதிய அரசாங்கம் வந்து தோல்வியடையும் போது மக்கள் விரட்டியடிக்கின்றனர். அவர்களுக்கு பொருளாதாரத்தை கையாள்வதில் பாரிய பிரச்சினை இருக்கிறது. எத்தியோப்பியா, சிம்பாப்வே போன்ற நாடுகளிலும் இந்த நிலையே இருக்கிறது. இவ்வாறு நெருக்கடியில் சிக்கிய எந்தவொரு நாடும் மீண்டு வரவில்லை. இலங்கை மட்டுமே இந்த நெருக்கடியில் இருந்து மிகக் குறுகிய காலத்தில் மீண்டுவந்துள்ளது.. அதற்கு ரணில் விக்ரமசிங்கவே காரணமாகும். இதற்கு மனசாட்சியுள்ள மக்களாக அவருக்கு நன்றி கடனாக வேறொரு தீர்மானத்தை எடுக்க முடியாது. வரும் 21ஆம் திகதி அவரது சின்னமான கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து அடுத்த ஐந்து வருடங்கள் அவரிடம் நாட்டை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.

அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த:

'அன்று ஆட்சியைப் பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. அன்று ரணில் விக்ரமசிங்கவின் வீடும் தீயிட்டு எரிக்கப்பட்டது. ஆனால் அவர் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முன்வந்தார். அவருக்கு பதவியேற்றக் கூட ஒரு இடம் இருக்கவில்லை. இன்று இரண்டு வருடங்களில் பொருளாதாரத்தை மீட்டுள்ளார். அன்று கட்டுக்கடங்காமல் உயர்ந்து சென்ற பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தினார். அன்றிருந்த விலைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இன்று விலைகள் குறைந்துள்ளன. வெளிநாட்டு அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரித்துள்ளார். ஆனால் இன்று ஆட்சிக்கு வர முயற்சிக்கும் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இந்த முயற்சிகளை தோற்கடிக்க முயற்சித்தன. பல்கலைக்கழக மாணவர்களை வீதிக்கு அழைத்து வந்தனர். ஆசிரியர்களை சுகயீன லீவு போராட்டம் நடத்த அழுத்தம் கொடுத்தனர். சம்பள முரண்பாடுகளை முன்வைத்து வீதிகளுக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். இன்று அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிடவில்லை. ரணில் விக்ரமசிங்க இதற்கான தீர்வை வழங்கியுள்ளார். அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். அதனால் சம்பள முரண்பாட்டைத் தீர்த்து, சம்பளம் அதிகரிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் செப்டம்பர் 21ஆம் திகதி சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களித்து சம்பள அதிகரிப்பை உறுதிசெய்துகொள்வதுடன் வரி குறைப்பையும் உறுதி செய்து மக்கள் தங்களின் வாழ்க்கை மேலும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.'' என்றார்.

முன்னாள் ஹரீன் பெர்னாண்டோ:

''இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இம்முறை, நாட்டை காப்பாற்றிய தலைவருக்கும், தன் தலையைக் காத்துக் கொண்ட தலைவர்களுக்கும் இடையேதான் இம்முறை போட்டியிருக்கிறது. அன்று மக்கள் அனைத்திற்கும் அல்லாடிக் கொண்டிருந்தனர். நல்ல வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தவர்கள் கூட இவ்வாறு அல்லாடிக் கொண்டிருந்தனர். அதனால் எதிர்வரும் 21ஆம் திகதி நடக்கும் தேர்தல் நாட்டைக் காப்பற்றிய தலைவருக்கும், தங்களைக் காப்பாற்றிக் கொண்ட தலைவர்களுக்கும் இடையிலான போட்டி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த இடத்தில் இருந்தாலும் இம்முறை ரணில் விக்ரமசிங்கவிற்கே வாக்களிக்க வேண்டும். ஜே.வி.பி வெற்றிக் கனவில் இருக்கின்றனர். ஆனால் அநுர குமார அமைச்சரவையில் யார் இருப்பார்கள்? நிதியமைச்சர் யார்? கல்வி அமைச்சர் யார்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். அன்று இருந்த வரிசை யுகத்திற்கு தீர்வு கண்டு மூன்று மாதங்களில் மக்களின் இயல்வு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவந்தார். அன்று ஒரு சுற்றுலாப் பயணி வரவில்லை. விமான நிலையம் வொறிச்சோடியிருந்தது. இன்று விமான நிலையத்தைப் பாருங்கள். சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிகின்றனர். இத்தனையும்  நடந்தும் ஏன் மீண்டும் பரீட்சித்துப் பார்க்க வேண்டும். ஒரு முறை பரீட்சித்துப் பார்த்து, இரவு விழுந்த குழியில் பகலில் விழக்கூடாது. உங்களின் பிள்ளைகளுக்காக சிந்தித்து செயல்படுமாறு கூப்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன். இன்று அனுபவம் உள்ள தலைவர் ஒருவர் தேவைப்படுகிறார். நீங்கள் சரியான தீர்மானத்தை எடுக்காவிட்டால் நீங்கள் மிகவும் துன்பப்படவேண்டியிருக்கும். ஆறு மாதங்களில் மீண்டும் வரிசைகளுக்குச் செல்ல நேரிடும்.'' என்றார்.

அமைச்சர் நளின் பெர்னாண்டோ:

''பொருளாதாரத்தில் வீழ்ந்த நாட்டை இரண்டு வருடங்களில் ரணில் விக்ரமசிங்க கட்டியெழுப்பினார். இதனை சஜித் பிரேமதாசவிற்கும், ஜே.வி.பி.க்கும் ஞாபகப்படுத்துகிறோம். நாம் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எமது மக்கள் புத்திசாதுர்யமானவர்கள். பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களை ஏமாற்ற முடியாது. நாம் நன்றி மறவாத மக்கள். அதனால் ரணில் விக்ரமசிங்கவின் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இதற்கமைய செப்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும்.'' என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர்  நிமல் லான்சா:

வீழ்ந்த நாட்டை இரண்டாண்டுகளில் மீட்டவர் யார்? அதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. நாடு வீழ்ந்தபோது அநுரவுக்கும்  சஜிதிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் வந்தார்களா.ரணில் விக்ரமசிங்க தான் முன்வந்தார். அதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நினைவில் வைத்து நன்றியுடன் இருங்கள்.   எரிபொருள், எரிவாயு, உரம், மருந்து என எதுவுமே இல்லாமல் இருந்த போது நமக்காக யார் முன்வந்தார்கள் என்பதை நினைவுகொள்ளுங்கள்.

நாடு மீண்டும் வீழ்ந்தால் மீண்டும் பழைய நிலைக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. சஜித்தும் அநுரவும் நாட்டைக் காப்பாற்ற முன்வரவில்லை.  இன்று சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எரிபொருள், எரிவாயு, மருந்து நிறையவே உள்ளன. இன்று பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. 

நாட்டை மீட்க அனுபவமும் திறமையும்  இருக்க வேண்டும்.  அனுரகுமாரவிற்கு மற்றவர்களை   விமர்சிக்க மட்டுமே முடியும்.  

https://www.virakesari.lk/article/192541

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுரகுமார வெற்றிபெற்றால் வேறு கட்சியில் இருந்தே பிரதமர் நியமிக்க வேண்டி வரும்; ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ

Published By: VISHNU   02 SEP, 2024 | 02:43 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அனுரகுமார வெற்றிபெற்றால் பாராளுமன்றத்தை கலைத்து காபந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆசனங்கள் இல்லை. அதனால் ஜே.வி.பி. அரசாங்கம் அமைப்பது சாத்தியமில்லை. அதேநேரம் அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்று கொண்டுவந்தால், அது தொடர்பான விசாரணை முடிவடையும் வரைக்கும் பராாளுமன்றத்தை கலைக்கவும் முடியாது என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றால் அவர் எவ்வாறு தற்காலிக அரசாங்கம் அமைப்பது என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யாராவது ஒரு வேட்பாளர் எதி்ர்வரும் 21ஆம் திகதி வெற்றிபெற்றால், அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு கிடைக்கிறது. அவ்வாறு அவர் பாராளுமன்றத்தை கலைத்தால் தற்காலிக அமைச்சரவை ஒன்றை அவர் அமைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடுத்த வருடம் செப்டம்பர் முதலாம் திகதிவரை பாராளுமன்றத்துக்கான காலம் இருப்பதால், அதுவரைக்கும் பாராளுமன்றத்தை அவ்வாறே கொண்டுசெல்லவும் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு முடியும்.

அதேநேரம் பாராளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களில் அதிகமானவர்களின் விருப்பத்துக்குரியவர் என ஜனாதிபதி நினைக்கும் ஒருவரை பிரதமராக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது. ஏனெனில் அடுத்த பாராளுமன்றம் வரைக்கும் நாட்டில் அமைச்சரை ஒன்று இருக்கவேண்டும்.

குறைந்தது 20 அமைச்சர்களாவது இருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை கொண்டு செல்ல முடியும். அனுரகுமார வெற்றிபெற்றால், அவர்களுக்கு பாராளுமன்றத்தில் போதுமான உறுப்பினர்கள் இல்லை. அதனால் வேறு கட்சிகளில் இருந்தாவது பிரதமர் ஒருவரை ஜனாதிபதிக்கு நியமிக்க வேண்டி ஏற்படுகிறது.

மேலும் இந்த தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றுள்ள நிலையில். ஏதாவது ஒரு காரணத்துக்காக அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து, அவரை பதவி நீக்கவும் முடியும். பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு சபாநாயகருக்கு குற்றப்பிரேணை கையளிக்கப்பட்டு, அதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், அதன் பின்னர் குற்றப்பிரேரணை தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு கிடைக்கும் வரை பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என்றார்.

https://www.virakesari.lk/article/192600

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"ஊழல், மோசடி ஒழிப்பு" கோசத்தை 3 ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டு வருவோம் - தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின் நாமல் தெரிவிப்பு

Published By: DIGITAL DESK 3   02 SEP, 2024 | 03:54 PM

image
 

தேர்தல் மேடைகளில் பிரதான பிரச்சாரமாக பயன்படுத்தப்படும் "ஊழல், மோசடி ஒழிப்பு" கோசத்தை 3 ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வருவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சர்வமத வழிபாடுகளுடன்  "நாமல் இலக்கு - உங்களுக்காக முன்னேற்றகரமான நாடு" என்ற தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று திங்கட்கிழமை (2) காலை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு நாமல் ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில், 

தேர்தல் மேடைகளில் பிரதான பிரச்சாரமாக பயன்படுத்தப்படும் "ஊழல், மோசடி ஒழிப்பு" கோசத்தை 3 ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வருவோம். நாட்டின் ஒற்றையாட்சி அரசியலமைப்பும் பெளத்த சாசனமும் பாதுகாக்கப்படும்.

பொருளாதார மேம்பாட்டுக்கான பொறுப்பை நாங்கள் ஏற்போம்.  ஆட்சியமைத்து 6 மாதங்களுக்குள் முழு அரசசேவை கட்டமைப்பையும் டிஜிட்டல் மயப்படுத்துவோம்.

வரிக் கொள்கையில் நேரில் வரி முறைமையை செயற்படுத்துவோம். 10 ஆண்டுக்குள் நேர் மற்றும் நேரில் முறைமை ஊடாக 20 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை தோற்றுவிப்போம்.

எதிர்வரும் 10 ஆண்டுகள் வலுச் சக்தியை ஏற்றுமதி செய்யும் நாடாக இலங்கையின் சக்தி வலுத்துறையை மேம்படுத்துவோம். இளம் தலைமுறையினரை உள்ளடக்கிய வகையில் ஆசியாவில் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மேம்படுத்துவேன் என்று நாமல் ராஜபக்‌ஷ மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/192623

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஏராளன் said:

"ஊழல், மோசடி ஒழிப்பு" கோசத்தை 3 ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டு வருவோம் - தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின் நாமல் தெரிவிப்பு

Published By: DIGITAL DESK 3   02 SEP, 2024 | 03:54 PM

image
 

தேர்தல் மேடைகளில் பிரதான பிரச்சாரமாக பயன்படுத்தப்படும் "ஊழல், மோசடி ஒழிப்பு" கோசத்தை 3 ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வருவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சர்வமத வழிபாடுகளுடன்  "நாமல் இலக்கு - உங்களுக்காக முன்னேற்றகரமான நாடு" என்ற தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று திங்கட்கிழமை (2) காலை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு நாமல் ராஜபக்ஷ மேலும் உரையாற்றுகையில், 

தேர்தல் மேடைகளில் பிரதான பிரச்சாரமாக பயன்படுத்தப்படும் "ஊழல், மோசடி ஒழிப்பு" கோசத்தை 3 ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வருவோம். நாட்டின் ஒற்றையாட்சி அரசியலமைப்பும் பெளத்த சாசனமும் பாதுகாக்கப்படும்.

பொருளாதார மேம்பாட்டுக்கான பொறுப்பை நாங்கள் ஏற்போம்.  ஆட்சியமைத்து 6 மாதங்களுக்குள் முழு அரசசேவை கட்டமைப்பையும் டிஜிட்டல் மயப்படுத்துவோம்.

வரிக் கொள்கையில் நேரில் வரி முறைமையை செயற்படுத்துவோம். 10 ஆண்டுக்குள் நேர் மற்றும் நேரில் முறைமை ஊடாக 20 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை தோற்றுவிப்போம்.

எதிர்வரும் 10 ஆண்டுகள் வலுச் சக்தியை ஏற்றுமதி செய்யும் நாடாக இலங்கையின் சக்தி வலுத்துறையை மேம்படுத்துவோம். இளம் தலைமுறையினரை உள்ளடக்கிய வகையில் ஆசியாவில் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மேம்படுத்துவேன் என்று நாமல் ராஜபக்‌ஷ மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/192623

தம்பி காமடி கீமடி பண்ணேலை தானே ? ஊழலில் பெரும்பான்மையானதுநீங்களும் உங்கள் சார்ந்தவர்களும் செய்தது தானே.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.