Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)
அதிகப்பிரசங்கி
------------------------
இன்றைய நிலையில் இப்படி ஒரு தலைப்பில் எவ்வளவு தான் மூடி மூடி எழுதினாலும் பூசணிக்காய் வெளியே தெரிவதை என்னால் தடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இங்கு, இந்தப் பூமியில், எதுவுமே புதிது இல்லை என்று சொல்வார்கள். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் எல்லாமே முன்னரும் பல தடவைகள் நடந்தவையே என்பார்கள். வரலாறு அடிக்கடி திரும்பி வரும் என்பது மிகப் பிரபலமான ஒரு கூற்று.  ஒரே மாதிரியான மனிதர்களும், வாழ்க்கைகளும், சம்பவங்களும் கூட திரும்ப திரும்ப வந்து கொண்டேயிருக்கின்றன.
 
கணினி மென்பொருட்கள் செய்யும் துறை மற்றைய பல துறைகளுடன் ஒப்பிடும் போது புதியது. அதனால் கொஞ்சம் நெகிழ்வான கட்டமைப்பும், தளம்பலான திட்டமிடலும் கொண்டது. ஒரு புதிய மென்பொருளை செய்வதற்கு எவ்வளவு செலவு எடுக்கும் என்ற கேள்விக்கு மிகத் தோராயமான ஒரு பதிலே கிடைக்கும், அது எப்படியான, எவ்வளவு சிக்கலான அல்லது சிக்கல் இல்லாத மென்பொருளாக இருந்தாலும். மொத்த செலவையும் சரியாக பிரித்து பிரித்து கூறுவதும் கடினம். மற்ற துறைகளில் இவை எல்லாம் ஏற்கனவே மிகக் கறாராக நடைமுறையிலிருக்கும்.
 
அப்பொழுது வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் புதிய ஒரு மென்பொருளை செய்வதற்கு பலரை இந்தியாவில் பணிக்கு அமர்த்தினார்கள். ஒரு இந்திய நிறுவனத்தில் இருந்து தற்காலிகமாக அவர்களை வேலைக்கு எடுத்திருந்தனர். அவர்களில் சிலர், ஒரு நாற்பது பேர்கள் வரையில், எங்கள் நிறுவனத்தின் இங்கு அமெரிக்காவில் இருக்கும் ஒரு அலுவலகத்தில் வேலை செய்ய வந்திருந்தனர். பொதுவாக ஆறு மாதங்கள் என்றே வருவார்கள். பின்னர் இவர்கள் திரும்பிப் போக, வேறு சிலர் வருவார்கள். ஆறு மாதங்கள் அமெரிக்கா வந்து போனாலே அவர்கள் கைகளில் நிறையவே மிஞ்சும். அதனால் இங்கே வருவதற்கும், வந்த பின் இங்கேயே தங்குவதற்கும் அவர்களிடையே ஒரு போட்டி இருக்கும். அது பல வேளைகளில் ஆரோக்கியமற்ற ஒன்றாகவே இருக்கும்.
 
புதிய மென்பொருள் மிக மெதுவாகவே முன்னேறிக் கொண்டிருந்தது. அங்கேயும், இங்கேயும் என்று ஏராளமானவர்களை வேலை செய்வதற்கு எடுத்துப் போட்டிருந்தனர். ஆனால் எல்லோருக்கும் கொடுப்பதற்கும் வேலையும் இல்லை, திட்டமிடலும் சரியாக இல்லை. வேலைக்கு எடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் திறமையானவர்கள் என்றும் இல்லை. சிலர் மிகவும் ஆரம்பகட்ட நிலையில் கூட இருந்தனர். பணம் செலவாகுது, ஆனால் பொருள் வருகுதில்லையே என்று எங்களின் நிர்வாகம் பொறுமை இழந்து கொண்டிருந்தது.
 
பத்து புதிய மென்பொருட்களை திட்டமிட்டால் அதில் இரண்டு சரியான நேரத்திற்கு, சரியான தரத்துடன் செய்ய முடிந்தால் அதுவே ஒரு வெற்றி. பத்தில் ஐந்து சுத்தமான தோல்வியாக முடியும். மிகுதி மூன்றும் இழுபட்டு இழுபட்டு, பல மாற்றங்களுடன் முடிக்கப்படக்கூடும். இதனால் வேலை போனால், போனால் என்ன போகும் தான், இன்னுமொரு நிறுவனத்தில் வேலைக்கு போய்ச் சேர வேண்டியது தான். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு போல, இதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வழக்கமே. 
 
மூன்று வருடங்கள் ஓடின ஒரு முடிவும் இல்லாமல். இங்கிருந்து அவர்களில் சிலர் இந்தியா போக, அங்கிருந்து சிலர் இங்கு புதிதாக வந்தனர். சிலர் இந்தியா போகாமல் ஏதேதோ செய்து இங்கேயே மூன்று வருடங்களாக இருந்து கொண்டும் இருந்தனர். புதிதாக வந்தவர்களில் ஒருவர் மெதுமெதுவாக இங்கிருக்கும் அவர்களின் ஆட்களை ஒருவர் ஒருவராக குற்றம் சொல்ல ஆரம்பித்தார். 
 
எந்த வேலையும் செய்வதில்லை, எந்த வேலையும் தெரியாது, பொறுப்பு இல்லை, நேரத்திற்கு வருவதில்லை, இப்படி ஒன்று மாறி இன்னொன்று என்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. புதிதாக வந்த அந்த மனிதர் திறமையானவர் தான், ஆனால் அவர்களின் ஆட்களை எடுத்தெறிந்து பேசிக் கொண்டிருந்தார். அவர்களின் பக்கத்தில் ஒரு நிர்வாக வரிசையும் இருந்தது. இறுதியில் அவர்களின் நிர்வாகத்தையும் இவர் குற்றம் சொல்ல ஆரம்பித்தார்.
 
இவர்கள் எல்லோரும் எங்கள் நிறுவன ஆட்களுடன் மிகவும் பணிவாக நடந்து கொள்வார்கள். ஏனென்றால் நாங்கள் அவர்களுக்கு 'முதலாளிகள்' போல. எங்களின் நிறுவனத்தில் இவர்கள் எல்லோரும் தற்காலிக வேலைக்கு வந்திருப்பதால் அப்படி நினைத்துக் கொள்கின்றனர். இந்தியாவிலிருந்து வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். பலருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இவரும் ஒரு தமிழர் தான்.
 
என்னிடம் வந்தார். அவர்களின் ஆட்கள் மேல் உள்ள எல்லா குற்றச்சாட்டுகளையும் எனக்கும் சொன்னார். இவர் ஏன் இப்படி அவசரப்படுகின்றார் என்று யோசனையாக இருந்தது. ஒருவேளை சில வருடங்களாக இவரின் நிறுவனம் இவரை அமெரிக்கா அனுப்பாதது கூட காரணமாக இருக்கலாமோ என்று தோன்றியது. அதை விட செத்தாலும் இவர்களை விட்டுப் போகாத பிறப்பால் வரும் சில அடையாளங்களையும், பிரிவுகளையும் இவர்கள் காவிக் கொண்டு திரிவதும் இன்னொரு காரணமாகக் கூட இருந்திருக்கும்.
 
அந்த வருடம் கிறிஸ்மஸ் வாரத்திற்கு முன் வாரம். அவர்களின் நிர்வாகத்தினருடன் எங்கள் நிர்வாகம் கதைத்தது. எங்களின் நிறுவனம் இரண்டே இரண்டு வாரக் கெடு கொடுத்தது. முடிந்தது, கிளம்புங்கள் என்று சொன்னது. புதுவருடம் பிறந்த பொழுது இவர்களில் எவரும் எங்கள் நிறுவனத்தில் வேலையில் இல்லை. நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனம் இந்தியாவில் இருக்கும் இன்னொரு நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றில் அந்த வருடம் கைச்சாத்திட்டனர்.
Edited by ரசோதரன்
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரசோதரன் said:

புதுவருடம் பிறந்த பொழுது இவர்களில் எவரும் எங்கள் நிறுவனத்தில் வேலையில் இல்லை. நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனம் இந்தியாவில் இருக்கும் இன்னொரு நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றில் அந்த வருடம் கைச்சாத்திட்டனர்.

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. கதை கேட்க வாய்ப்பும் கிடைத்தது.

மென்பொருள், வேலைக்கு வரும் இந்தியர்கள் என ‘நந்தவனத்தில் போட்டுடைத்தார்கள்’, என்று   நீங்கள் எழுதியதின் தொடர்ச்சியாக இதை எடுத்துக் கொள்கிறேன்.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ரசோதரன் said:

நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனம் இந்தியாவில் இருக்கும் இன்னொரு நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றில் அந்த வருடம் கைச்சாத்திட்டனர்.

என்னப்பா வேதாளத்தின் கதை போல இருக்கே?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kavi arunasalam said:

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது. கதை கேட்க வாய்ப்பும் கிடைத்தது.

மென்பொருள், வேலைக்கு வரும் இந்தியர்கள் என ‘நந்தவனத்தில் போட்டுடைத்தார்கள்’, என்று   நீங்கள் எழுதியதின் தொடர்ச்சியாக இதை எடுத்துக் கொள்கிறேன்.

 

8 hours ago, ஈழப்பிரியன் said:

என்னப்பா வேதாளத்தின் கதை போல இருக்கே?

🤣............

'இந்தியன் - 2' போல ஆகி விட்டது............... 'இந்தியன் - 3' வேண்டவே வேண்டாம், நாங்கள் வேணும் என்றால் சும்மாவே டிக்கட் காசை கொடுத்து விடுகின்றோம் என்று மீம்ஸ்ஸுகள் பறந்து கொண்டிருக்கின்றன........🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, ரசோதரன் said:

🤣............

'இந்தியன் - 2' போல ஆகி விட்டது............... 'இந்தியன் - 3' வேண்டவே வேண்டாம், நாங்கள் வேணும் என்றால் சும்மாவே டிக்கட் காசை கொடுத்து விடுகின்றோம் என்று மீம்ஸ்ஸுகள் பறந்து கொண்டிருக்கின்றன........🤣.

இந்தியன் 2 எடுத்த கமல் சங்கர் நிலையைவிட மோசமாகி போச்சுது.......நாங்கள் எடுத்த டிக்கட் அப்படியே இருக்கட்டும் ......... அடுத்தொரு பிரதியெடுக்காத புதிய கதையொன்று .........வெயிட்டிங் .......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, suvy said:

இந்தியன் 2 எடுத்த கமல் சங்கர் நிலையைவிட மோசமாகி போச்சுது.......நாங்கள் எடுத்த டிக்கட் அப்படியே இருக்கட்டும் ......... அடுத்தொரு பிரதியெடுக்காத புதிய கதையொன்று .........வெயிட்டிங் .......!  😂

🤣...........

வரும் சுவி ஐயா........

புத்தம் புது, இதுவரை வந்தே இருக்காத, நீங்கள் பார்த்தே இருக்காத.......... 

'விளம்பரத்தை விட்டு விட்டு கதையை ஒழுங்காக எழுதடா........' என்று  எனக்குள் இருந்து ஒரு குரல் சொல்லுது.............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கேயோ  இதன் சாயலில் வாசித்ததாக ஞாபகம். இருப்பினும் தொடருங்கள். 😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, நிலாமதி said:

எங்கேயோ  இதன் சாயலில் வாசித்ததாக ஞாபகம். இருப்பினும் தொடருங்கள். 😄

அக்கா சிறிய வயதுக்கு ஒருக்கா இறங்கி யோசியுங்கோ.

முருங்கைமரம் வேதாளம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, நிலாமதி said:

எங்கேயோ  இதன் சாயலில் வாசித்ததாக ஞாபகம். இருப்பினும் தொடருங்கள். 😄

👍....

இங்கு களத்திலேயே சுய ஆக்கத்தில் இதே சாயலில் ஒன்று எழுதியிருந்தேன், அக்கா. அதை மறந்தே விட்டேன்......

'நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்' என்ற தலைப்பில்.  



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுபோல இந்த தலைமயிர் வெட்டும் தமிழ் அண்ணையள், கழுத்தை முடக்கி நெட்டி முறிப்பதும் ஆபத்தான வேலை. அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன்…நெட்டி முறித்தவுடன் ஆள் அப்படியே…பரலைஸ்ட் ஆகி படுத்து விடுவார். இதன் பின் வழமையான தமிழ் அண்ணையிடம் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்.  வேண்டாம் என்றபின்னும் பழக்க தோசத்தில் திருப்பி விட்டால் என்ற பயம்தான்.
    • உண்மைதான். முண்நாண் எமக்கு உயிர் போன்றது. வலு சிக்கலான அமைப்பு. விபத்துக்களில் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டாலே… வாழ் நாள் முழுக்க பெரும் அவதியை சந்திக்க வேண்டி வந்து விடும். யாரோ… மசாஜ்சை பற்றி அடிப்படை அறிவு தெரியாதவர்கள்,  “சுளுக்கு” எடுக்கிறன் என்று அந்தப் பெண்ணின் உயிரை எடுத்து விட்டார்கள்.
    • 75 வது வயதை நோக்கி ரஜனிகாந்த் அந்த வயது ஒரு மனிதனின் 100% ஆயுட்காலம்,  99%மான மனிதர்கள் 100 வயதுவரை வாழ்வதில்லை, அதுக்கு பின்னரெல்லாம் பெரும்பாலானோருக்கு சும்மா பெயருக்கு நடமாடி திரியும் மனித உடம்பு. இந்த வயதில் உச்சத்திலிருந்தபடி நூறு கோடிகளில் சம்பளம் வாங்கும் முதலும் கடைசியுமான இந்திய ஹீரோ ரஜனியாகத்தானிருப்பார். இப்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை பார்த்தால் இன்னும் மூன்று வருடம் நடிக்க வாய்ப்பிருக்கு. கமலும் அதே தளத்திலிருந்தாலும், ரஜனியைவிட 4 வயசு இளையவர் இன்னும் 5 வருடத்தின் பின்னர் ரஜனிபடம் போல் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக இருப்பாரோ தெரியவில்லை ஏனென்றால் இப்போதே அந்த நிலையில் அவர் இல்லை. ஸ்டைல் நடிப்பில் ரஜனிதான் ஆரம்பம் என்றில்லை, பழைய படங்களில் ஸ்டைலில் சிவாஜிதான் அனைவருக்கும் முன்னோடி. எங்கள் தங்கராஜா, வசந்தமாளிகை, தங்கப்பதக்கம் போன்ற படங்களில் ஸ்டைலில் பின்னுவார் சிவாஜி. அதுவும் நல்லதொரு குடும்பம் பாடலில் ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு ஒரே பாடலில் அத்தனை ஸ்டைலும் முக பாவம் , நடனத்தில் சிவாஜியைபோல் இன்றுவரை யாரும் காட்டியதில்லையென்றும் சொல்லலாம். அதேபோல்தான் வசந்தமாளிகை ,  இன்னும் சொல்லபோனால்  யாரடி நீமோகினி பாடலில் இருந்தே  சிவாஜியின் நடை ஸ்டைலை ரஜனி கொப்பி அடித்தாரோ என்று எண்ண தோன்றும்.   சினிமா என்பது பொழுது போக்கு , அதை தனியே சீரியசுக்கு பாவிக்க கூடாது என்பதில் ரஜனி தெளிவாக இருந்தார் . தியேட்டருக்கு வந்தால் வயசு வித்தியாசம் இன்றி அனைவரும்  சிரிச்சு விசிலடிச்சு குஷியாகி வீட்டுக்கு போகணும் என்பதை தனது கொள்கையாக வைத்திருக்கிறார் . அதில் அவர்பெற்ற அசைக்க முடியாத வெற்றி இன்றுவரை தொடர்கிறது. ரஜனி ரசிகனை சூடாக்கி சில்லறை பார்க்க தெரிந்த மனிதன்.
    • மசாஜ் செய்ய எவ்வளவு நல்ல பாகங்கள் உடலில் இருக்க….. சும்மா கொண்டுபோய் கழுத்தை ஏன் கொடுப்பான்….🤣 அதுகுள்ளானதான் முண்நாண் எனப்படும் நரம்பு கோர்வையே போறது. ஏங்கோ எசகு பிசகாக அளுத்தி விட்டது போல.  
    • நிச்சயமாக….. அனுர போன்ற ஒரு இனவாதிக்கு கூட, அவர்களால் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் மத்தியில் கூட நேரடி, மறைமுக ஆதரவாளர்கள் இருப்பதை கண்டோமே? ஆனால் எவருக்காகவேனும் உண்மையாக போராடினால் - அவர்களை அந்த மக்களில் பெரும்பாலோனோர் காலத்துக்கும் நினைவில் வைத்திருப்பார்கள். ❤️❤️❤️
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.