Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

எமது தாய்நாடாம் தமிழீழத்தின் விடுதலைப் போரின் தொடக்க கால கட்டத்தில் புலிவீரர்களின் பயிற்சிப் பாசறைகளில் ஒலித்த தமிழ்நாட்டுத் திரைப்படப் பாடல்ளை திரட்டி வருகிறேன் . அவ்வாறு சேகரித்த பாடல்களை கீழே பட்டியலிட்டுள்ளேன்.

  1. போராடடா, ஒரு வாளேந்தடா
  2. வாழும் வரை போராடு
  3. சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
  4. தோல்வி நிலையென நினைத்தால்
  5. அதோ அந்த பறவை போல (ஜனனி அன்ரி விரும்பி பாடுவா)

இதனை தவிர வேறு ஏதேனும் கள உறவுகள் அறிந்திருந்தால் தெரிவித்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

- நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
  • Like 4
  • Thanks 1
  • நன்னிச் சோழன் changed the title to உதவி தேவை: விடுதலைக்கு வலுச்சேர்த்த தமிழ்நாட்டுத் திரைப்படப் பாடல்கள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் பொருள் தேடி
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் பொருள் தேடி
அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ
இந்நாட்டில் மலரும் சமநீதி
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்
ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க
இயற்கை தந்த பரிசாகும்
இதில் நாட்டினைக்கெடுத்து நன்மையை அழிக்க
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்
அல்லதை நினைப்பது அழிவாற்றல்
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
 
  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு?
நீ கொண்டு வந்தது என்னடா?, மீசை முறுக்கு

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
 இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

 உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து.

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா . 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"வண்ணத்  தேரில் அமர்ந்து வருகின்றான் பார்த்தசாரதி" என்ற பாடல் என நினைக்கின்றேன்.
 முழுமையான பாடல் தெரியவில்லை. 
அப்போது இது மிகப் பிரபல்யமான பக்திப் பாடல். இந்திராகாந்தி காலத்தில்  இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை செயலாளர்  பார்த்தசாரதி (தமிழ் பிராமணர், எமக்கு ஆதரவான கருத்தை கொண்டிருந்தவர்) இலங்கைக்கு பேச்சுவார்த்தைக்கு வருகின்ற காலம் அது.
அதன் பின் இந்தப் பாடலை... இலங்கை வானொலியில் ஒலி பரப்பாமல் தடை செய்திருந்தார்கள்.

பிற் குறிப்பு: மேற் குறிப்பிட்ட தகவல் எனது நினைவில் இருந்து எழுதியவை. 
தவறுகள் இருக்கலாம். அறிந்தவர்கள் திருத்துவது வரவேற்கப் படுகின்றது. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பொதுவாகவே எம்ஜிஆர் படங்களில் புரட்சி, எழுச்சிப் பாடல்கள் இருக்கும். இல்லாவிட்டால் ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டம் அவருக்குப் பொருந்தாது. அவரது படங்களில் இடம் பெறும் புரட்சிக் கருத்துக்கள், சில பாடல்களில் முழுமையாக இருக்கும்  பலவற்றில் ஆங்காங்கே பட்டும் படாமலும் தெளித்தும், தெரியாமலும் விடப்பட்டிருக்கும்.

‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு…’ என்ற பாடலின் இறுதி வரிகள் இசைத்தட்டில், ‘இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து

அதில் நீதிவரவில்லை என்றால் வாளை உயர்த்து’ என்றிருந்தது. ஆனால் தணிக்கை குழுவினரது கெடுபிடியால், நீதி உன்னைத் தேடிவரும் மாலை தொடுத்து’ என்று படத்தில் இடம் பெற்றிருக்கும்.

77 இல் என்று நினைக்கிறேன். சரியாக நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. கொழும்பில் கலவரங்கள் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டிருந்ததன. எம்ஜிஆர் படத்தில் இடம் பெற்ற பாடல்களை கே.எஸ்.ராஜா வானொலியில் சுழல விட்டுக் கொண்டிருந்தார். எல்லாப் பாடல்களிலும் நேரடியாகத் தெரியாத தெளித்து விடப்பட்ட புரட்சி வரிகள் மட்டும் இருந்தன.

‘உலகத்தில் குருடர்கள் சரிபாதி

ஊமைகள் குருடர்கள் அதில் பாதி

கலகத்தில் பிறப்பதுதான் நீதி

மனம் கலங்காதே மதி மயங்காதே’ என்ற ஒன்றை இங்கே உதாரணத்துக்குத் தருகிறேன்.

இந்த ஒலிபரப்புக்குப் பின்னால் கே.எஸ்.ராஜாவை சில காலம் வானொலியில் காணவில்லை. “கே.எஸ்.ராஜாவை நாலாவது மாடியில் வைத்து விசாரிக்கிறார்கள்” “அப்துல் ஹமீதுவின்  உட்குத்து” என்றெல்லாம் வதந்திகள் வந்து கொண்டிருந்தன. எது எப்படியோ கே.எஸ்.ராஜா பல மாதங்கள் இலங்கை தமிழ் வர்த்தக ஒலிபரப்பில் இல்லை என்பது தெளிந்த உண்மை.

அரச கட்டளை படத்தில், ரி.எம்.எஸ் பாடிய “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை…” பாடல் முழுப் புரட்சிப் பாடலாக படத்தில் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடலை எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலில் பிரச்சாரப் பாடலாக்கினார்கள். பாடலின் இறுதி வரியில் இருந்த,

“உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ -அதன் 

உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ…” வரிகளை இளைஞர்கள் எடுத்துக் கொண்டார்கள். 

அரசகட்டளையில், பி.சுசீலா பாடும் ஒரு பாடல் மக்களை ஒன்று திரட்டி போராட அழைப்பது போல்  இருக்கும்.

“பண்பாடும் பறவையே என்ன தூக்கம்?-உன்

பழங்காலக் கதை இங்கு யாரைக் காக்கும்?

தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா? -நீ

தாயற்ற கன்று போல் ஆகலாமா?…”

ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு

அன்னை தந்தை மக்கள் சுற்றம் வாழ்ந்த நாடு

தோன்றாமல் தோன்றும் வீரர் சொந்த நாடு

தூங்கித் தூங்கி சோர்ந்து விட்டது இந்த நாடு

கலங்கரை விளக்கம் திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய,

சங்கே முழங்கு, சங்கே முழங்கு

பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால்

சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் ரி.எம்.எஸ் பாடிய,

‘தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்

உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்’

அதே படத்தில் இன்னுமொரு பாடல்,

‘வீரமகன் போராட வெற்றி மகள் தாலாட்ட….’

மன்னாதி மன்னன் படத்தில் ரி.எம்.எஸ் பாடிய,

‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு

தாயகம் காப்பது கடமையடா

கருவினில் மலரும் மழலையின் உடலில்

தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை

களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்

காத்திட எழுவான் அவள் பிள்ளை

தனது மகனின் வீர மரணத்துக்கான ஒரு பாடல் மகாதேவி படத்தில் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட, ரி.எஸ்.பகவதி பாடியிருப்பார். முன்னர் இந்தப் பாடலை வைத்து ஒரு பத்தி எழுதியிருந்தேன்.

‘மானம் ஒன்றே பெரிதென எண்ணி

வாழ்வது நமது சமுதாயம்

மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும்

மாறிவிடாது ஒருநாளும்…’

இப்படி நிறைய எம்ஜியார் பாடல்களில் தேடி எடுக்கலாம்.

Edited by Kavi arunasalam
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
12 hours ago, தமிழ் சிறி said:
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் பொருள் தேடி
வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் பொருள் தேடி
அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ
இந்நாட்டில் மலரும் சமநீதி
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்
ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க
இயற்கை தந்த பரிசாகும்
இதில் நாட்டினைக்கெடுத்து நன்மையை அழிக்க
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்
அல்லதை நினைப்பது அழிவாற்றல்
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
 
உதவியமைக்கு மிக்க நன்றி

7 hours ago, குமாரசாமி said:

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு?
நீ கொண்டு வந்தது என்னடா?, மீசை முறுக்கு

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
 இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

 உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து.

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா . 

உதவியமைக்கு மிக்க நன்றி

13 hours ago, ஈழப்பிரியன் said:

விடைகொடு எந்தன் நாடே

உதவியமைக்கு மிக்க நன்றி

இந்தப் பாடலானது 2000ம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் என்ற தமிழ்நாட்டுப் படத்தில் வெளியான பாடல். இது 80களில் வெளியான பாடல் இல்லை.

1 hour ago, தமிழ் சிறி said:

"வண்ணத்  தேரில் அமர்ந்து வருகின்றான் பார்த்தசாரதி" என்ற பாடல் என நினைக்கின்றேன்.
 முழுமையான பாடல் தெரியவில்லை. 
அப்போது இது மிகப் பிரபல்யமான பக்திப் பாடல். இந்திராகாந்தி காலத்தில்  இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை செயலாளர்  பார்த்தசாரதி (தமிழ் பிராமணர், எமக்கு ஆதரவான கருத்தை கொண்டிருந்தவர்) இலங்கைக்கு பேச்சுவார்த்தைக்கு வருகின்ற காலம் அது.
அதன் பின் இந்தப் பாடலை... இலங்கை வானொலியில் ஒலி பரப்பாமல் தடை செய்திருந்தார்கள்.

பிற் குறிப்பு: மேற் குறிப்பிட்ட தகவல் எனது நினைவில் இருந்து எழுதியவை. 
தவறுகள் இருக்கலாம். அறிந்தவர்கள் திருத்துவது வரவேற்கப் படுகின்றது. 

தகவலுக்கு மிக்க நன்றி. நன்றாக தெரிந்த உறவுகள் உதவுவார்கள் என்று எண்ணுகிறேன்.

Edited by நன்னிச் சோழன்
கூடுதல் பற்றியம் சேர்ப்பு
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
32 minutes ago, Kavi arunasalam said:

பொதுவாகவே எம்ஜிஆர் படங்களில் புரட்சி, எழுச்சிப் பாடல்கள் இருக்கும். இல்லாவிட்டால் ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டம் அவருக்குப் பொருந்தாது. அவரது படங்களில் இடம் பெறும் புரட்சிக் கருத்துக்கள், சில பாடல்களில் முழுமையாக இருக்கும்  பலவற்றில் ஆங்காங்கே பட்டும் படாமலும் தெளித்தும், தெரியாமலும் விடப்பட்டிருக்கும்.

‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு…’ என்ற பாடலின் இறுதி வரிகள் இசைத்தட்டில், ‘இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து

அதில் நீதிவரவில்லை என்றால் வாளை உயர்த்து’ என்றிருந்தது. ஆனால் தணிக்கை குழுவினரது கெடுபிடியால், நீதி உன்னைத் தேடிவரும் மாலை தொடுத்து’ என்று படத்தில் இடம் பெற்றிருக்கும்.

77 இல் என்று நினைக்கிறேன். சரியாக நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை. கொழும்பில் கலவரங்கள் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டிருந்ததன. எம்ஜிஆர் படத்தில் இடம் பெற்ற பாடல்களை கே.எஸ்.ராஜா வானொலியில் சுழல விட்டுக் கொண்டிருந்தார். எல்லாப் பாடல்களிலும் நேரடியாகத் தெரியாத தெளித்து விடப்பட்ட புரட்சி வரிகள் மட்டும் இருந்தன.

‘உலகத்தில் குருடர்கள் சரிபாதி

ஊமைகள் குருடர்கள் அதில் பாதி

கலகத்தில் பிறப்பதுதான் நீதி

மனம் கலங்காதே மதி மயங்காதே’ என்ற ஒன்றை இங்கே உதாரணத்துக்குத் தருகிறேன்.

இந்த ஒலிபரப்புக்குப் பின்னால் கே.எஸ்.ராஜாவை சில காலம் வானொலியில் காணவில்லை. “கே.எஸ்.ராஜாவை நாலாவது மாடியில் வைத்து விசாரிக்கிறார்கள்” “அப்துல் ஹமீதுவின்  உட்குத்து” என்றெல்லாம் வதந்திகள் வந்து கொண்டிருந்தன. எது எப்படியோ கே.எஸ்.ராஜா பல மாதங்கள் இலங்கை தமிழ் வர்த்தக ஒலிபரப்பில் இல்லை என்பது தெளிந்த உண்மை.

அரச கட்டளை படத்தில், ரி.எம்.எஸ் பாடிய “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை…” பாடல் முழுப் புரட்சிப் பாடலாக படத்தில் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடலை எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலில் பிரச்சாரப் பாடலாக்கினார்கள். பாடலின் இறுதி வரியில் இருந்த,

“உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ -அதன் 

உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ…” வரிகளை இளைஞர்கள் எடுத்துக் கொண்டார்கள். 

அரசகட்டளையில், பி.சுசீலா பாடும் ஒரு பாடல் மக்களை ஒன்று திரட்டி போராட அழைப்பது போல்  இருக்கும்.

“பண்பாடும் பறவையே என்ன தூக்கம்?-உன்

பழங்காலக் கதை இங்கு யாரைக் காக்கும்?

தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா? -நீ

தாயற்ற கன்று போல் ஆகலாமா?…”

ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு

அன்னை தந்தை மக்கள் சுற்றம் வாழ்ந்த நாடு

தோன்றாமல் தோன்றும் வீரர் சொந்த நாடு

தூங்கித் தூங்கி சோர்ந்து விட்டது இந்த நாடு

கலங்கரை விளக்கம் திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய,

சங்கே முழங்கு, சங்கே முழங்கு

பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால்

சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் ரி.எம்.எஸ் பாடிய,

‘தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்

உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்’

அதே படத்தில் இன்னுமொரு பாடல்,

‘வீரமகன் போராட வெற்றி மகள் தாலாட்ட….’

மன்னாதி மன்னன் படத்தில் ரி.எம்.எஸ் பாடிய,

‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு

தாயகம் காப்பது கடமையடா

கருவினில் மலரும் மழலையின் உடலில்

தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை

களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்

காத்திட எழுவான் அவள் பிள்ளை

தனது மகனின் வீர மரணத்துக்கான ஒரு பாடல் மகாதேவி படத்தில் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட, ரி.எஸ்.பகவதி பாடியிருப்பார். முன்னர் இந்தப் பாடலை வைத்து ஒரு பத்தி எழுதியிருந்தேன்.

‘மானம் ஒன்றே பெரிதென எண்ணி

வாழ்வது நமது சமுதாயம்

மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும்

மாறிவிடாது ஒருநாளும்…’

இப்படி நிறைய எம்ஜியார் பாடல்களில் தேடி எடுக்கலாம்.

உதவியமைக்கு மிக்க நன்றி.

நன்றாக தேடி... இல்லை, இல்லை, தோண்டி எடுத்து அலசி ஆராய்ந்துள்ளீர்கள். 

இந்தப் பாடல்களில் எத்தனை புலிகளின் ஆரம்ப காலத்தில் பாவிக்கப்பட்டன என்று தங்களுக்குத் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நன்னிச் சோழன் said:

இந்தப் பாடல்களில் எத்தனை புலிகளின் ஆரம்ப காலத்தில் பாவிக்கப்பட்டன என்று தங்களுக்குத் தெரியுமா?

ஆரம்பத்தில் புலிகள் பயன் படுத்திய பாடல்கள் இவைகள்.

‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்….’ (உலகம் சுற்றும் வாலிபன்)

‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்….’ (அரச கட்டளை)

‘அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்….’ (ஆயிரத்தில் ஒருவன்)

‘அச்சம் என்பது மடமையடா….’ (மன்னாதி மன்னன்)

‘தோல்வி நிலையென நினைத்தால்…’ (ஊமை விழிகள்)

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்…’ (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்)

‘சங்கே முழங்கு பொங்கு தமிழுக்கு…’ (கலங்கரை விளக்கம்)

‘ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலம் என்போம்’ (ஆனந்தஜோதி)

சிலகாலங்களின் பின்னர் இந்தப் பாடல்களும் சேர்ந்து கொண்டன

‘இரவும் ஒருநாள் விடியும் அதனால்

எழுந்திடுவாய் தோழா

புயலும் புலியும் அழுவது இல்லை

புறப்படுவாய் தோழா’

‘சிறுத்தைகளே ஒன்று சேருங்கள் - இந்த

ஜெகத்தை ஜெயிக்க வாருங்கள்

கொட்டம் அடித்த குள்ள நரிகளின்

ரத்தம் குடிக்க வாருங்கள்’

‘ஒரு காலம் வரும்

நல்ல நேரம் வரும்

எங்கள் கண்ணீரிலே

தீயும் தோன்றலாம்’

‘இது எந்தன் ராஜ்சியம்தான்’

https://myspb.wordpress.com/2012/01/13/1260-இது-எந்தன்-ராஜ்ஜியம்-தான/

‘தேவனின் கோவிலில் ஏற்றிய தீபம்

தெருவினில் கிடக்குது  இது என்ன ஞாயம்?’

(இந்தப்பாடல் இணையத்தில் கிடைக்கவில்லை)

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
3 minutes ago, Kavi arunasalam said:

அருமை அருமை... மிக்க நன்றி ஐயனே...

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

13 hours ago, ஈழப்பிரியன் said:
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்

இப்படைக்குப் பதிலாக புலிப்படை என்று பாடப்பட்டது.

83-84ம் ஆண்டு வில்லுப்பாட்டு கோஸ்டி ஒன்று தொடங்கி ஊர் ஊராக பாடினார்கள்.

வில்லப்பாட்டு தொடங்கும் போது இந்த பாடலுடனே தொடங்கும்.

ஆரவாரம் வானைப் பிழக்கும்.

தம் தகவலுக்கு நன்றி, @ஈழப்பிரியன்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.