Jump to content

மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது வெற்றியை சுவைத்தது நேபாளம்

Published By: VISHNU    19 JUL, 2024 | 08:45 PM

image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமான ஐந்தாவது மகளிர் ரி20 கிரிக்கெட் அத்தியாயத்தின் முதலாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொண்ட நேபாளம் 6 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

1907_samjana_khadha_nepal_vw_uae.png

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் தனது 3ஆவது அத்தியாயத்தில் விளையாடும் நேபாளம் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

1907_kavisha_egodage.jpg

2012, 2016 ஆகிய இரண்டு அத்தியாயங்களில் விளையாடிய நேபாளம் அவற்றில் தோல்விகளையே தழுவியிருந்தது.

1907_nepal_skipper__indu_barma.jpg

இன்றைய போட்டியில் அணித் தலைவி இந்து பர்மா பதிவுசெய்த 3 விக்கெட் குவியல், ஷம்ஜானா கத்கா குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன நேபாளத்தை இலகுவாக வெற்றிபெறவைத்தன.

1907_kavisha_egodage_gowling.jpg

ஐக்கிய அரபு இராச்சியம் சார்பாக  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட கவிஷா எகொடகே துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் பிரகாசித்ததுடன் குஷி ஷர்மா துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தினார். ஆனால், ஏனையவர்கள் பிரகாசிக்கத் தவறியமை ஐக்கிய அரபு இராச்சியத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் குஷி ஷர்மா (36), கவிஷா எகொடகே (22) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் அணித் தலைவி இந்து பர்மா 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 16.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்ளைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.

ஆரம்ப வீராங்கனை சம்ஜானா கத்கா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 45 பந்துகளில் 11 பவுண்டறிகள் அடங்கலாக 72 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார்.

14 உதிரிகளே நேபாளத்தின் மொத்த எண்ணிக்கையில் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.

ரூபினா சேத்ரி 10 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் கவிஷா எகொடகே ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகி: சம்ஜானா கத்

https://www.virakesari.lk/article/188895

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி 

ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி இன்று முதல்...
 

இதன்படி இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், போட்டியின் அனைத்து போட்டிகளையும் விளையாட்டு ரசிகர்கள் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

2004 ஆம் ஆண்டு தொடங்கிய ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு வரை ஒரு நாள் போட்டியாக நடத்தப்பட்டு, 2012 ஆம் ஆண்டு முதல் டி20 போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 8 அணிகள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டிகள் 2 குழுக்களாக நடைபெறவுள்ளது.

இதன்படி ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளும்,

பி பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

போட்டிகளின் முதல் நாளில், நேபாளம் – ஐக்கிய அரபு இராச்சியம் அணிகளும், இந்தியா – பாகிஸ்தான் அணிகளும்
பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இலங்கை மகளிர் அணி ஆரம்ப சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் முதலாவது போட்டி நாளை (20) பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.

https://thinakkural.lk/article/306406

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியக்கிண்ண தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணி

இலங்கையின் தம்புள்ளையில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளின், ஆரம்ப ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வெற்றி கொண்டுள்ளது.

இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) மற்றும் ஃபாலி வர்மா (Shafali Verma) ஆகியோரின் ஆரம்பத் துடுப்பாட்டம் இந்த வெற்றிக்கு உதவியுள்ளது.

இந்தப்போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 108 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. சிட்ரா அமீன் 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

நேபாளம் மகளிர் அணி

எனினும் இந்திய மகளிர் அணி, 14.1 ஓவர்களில் இந்த ஓட்ட இலக்கை 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

indian-women-s-team-defeated-pakistan-asia-cup

மற்றொரு ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நேபாளம் மகளிர் அணி, ஆசிய கிண்ண முதல் வெற்றியை பதிவு செய்தது.

116 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாளம், தொடக்க ஆட்டக்காரர் சம்ஜனா கட்காவின் 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களின உதவியுடன் இலக்கை அடைந்தது.

indian-women-s-team-defeated-pakistan-asia-cup

 

இந்தநிலையில், மலேசியா தாய்லாந்தையும்,  இலங்கை பங்காளதேஸ் அணியையும் இன்று எதிர்த்தாடுகின்றன.   

https://tamilwin.com/article/indian-women-s-team-defeated-pakistan-asia-cup-1721442576

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ம‌க‌ளிர் அணி அல்ல‌து இல‌ங்கை ம‌க‌ளிர் அணி இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று கோப்ப‌யை தூக்குவின‌ம்

 

இந்தியா ம‌க‌ளிர் அணி 100/100 உறுதி...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் ரி20 ஆசிய கிண்ணத்தில் விஷ்மி அபாரம்: பங்களாதேஷை 7 விக்கெட்களால் வென்றது இலங்கை

20 JUL, 2024 | 10:36 PM
image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (20) நடைபெற்ற இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான பி குழு மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது.

உதேஷிக்கா ப்ரபோதனி, இனோஷி ப்ரியதர்ஷனி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் விஷ்மி குணரட்ன குவித்த அரைச் சதமும் இலங்கையின் வெற்றியை இலகுவாக்கின.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய நிகார் சுல்தானா ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைவிட ஷொர்ணா அக்தர் 25 ஓட்டங்களையும் ரபீயா கான் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இனோஷி ப்ரியதர்ஷனி 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் உதேஷிக்கா ப்ரபோதனி ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மொத்த எண்ணிக்கை 32 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவி சமரி அத்தபத்து 12 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஆனால், நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்னவும் ஹர்ஷிதா  சமரவிக்ரமவும் 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு பலம் சேர்த்துக்கொடுத்தனர்.

விஷ்மி குணரட்ன 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 51 ஓட்டங்களையும் ஹர்ஷிதா சமரவிக்ரம 33 ஓட்டங்களையும்  பெற்றனர்.

கவிஷா டில்ஹாரி 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஆட்டநாயகி: விஷ்மி குணரட்ன

https://www.virakesari.lk/article/188969

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா

இல‌ங்கை

பாக்கிஸ்தான்

 

இந்த‌ மூன்று நாட்டை த‌விற‌ ம‌ற்ற‌ நாட்டு ம‌க‌ளிர் அணி அனுப‌வ‌ம் இல்லாத‌ அணிக‌ள் . வ‌ங்கிளாதேஸ் ப‌ர‌வாயில்லை

 

ம‌ற்ற‌ ம‌க‌ளிர் அணிக‌ள் ப‌ல‌மான‌ அணியா வ‌ர‌ நீண்ட‌ வ‌ருட‌ம் எடுக்கும்......................இப்ப‌டியே கிரிக்கேட்டும் சிறு வ‌ட்ட‌த்துக்கை நிக்காம‌ உல‌க‌ அள‌வில் வ‌ர‌வேற்ப்பு பெற்று வ‌ருது..........................ஜ‌ரோப்பாவில் கிட்ட‌ த‌ட்ட‌ எல்லா நாடுக‌ளும் கிரிக்கேட் விளையாடுகின‌ம்...................போர‌ போக்கை பார்த்தால் ஜ‌ரோப்பா கிரிக்கேட் போட்டிக‌ள் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ந‌ட‌த்த‌க் கூடும்.................................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளிருக்கான ஆசிய கிரிக்கெட் சுற்றுத்தொடர் - ஆதிக்கம் செலுத்தும் இந்திய, பாகிஸ்தான் அணிகள்

2024ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண 20க்கு 20 போட்டியின் ஏ பிரிவில் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிராக 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய (India) அணி, தொடர்ந்து இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்துள்ளது.

அதேவேளை, முதல் தடவையாக 20க்கு 20போட்டி ஒன்றில் இந்திய மகளிர் அணி, 200இற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தம்புள்ளையில், நேற்று (21.07.2024) இடம்பெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் சபாலி வர்மா 18 பந்துகளில் 37 ஓட்டங்களை எடுத்துள்ளார். மேலும், ஹர்மன்ப்ரீத் 41 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டியுள்ளார். 

பவர்பிளே ஓவர்கள் 

இந்தநிலையில், அந்த அணி மூன்று விக்கெட்டுகளை இழந்த போதிலும் பவர்பிளே ஓவர்களில் 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மகளிருக்கான ஆசிய கிரிக்கெட் சுற்றுத்தொடர் - ஆதிக்கம் செலுத்தும் இந்திய, பாகிஸ்தான் அணிகள் | Womens T 20 Asia Cup 2024 India Pakistan

இதன்போது, ரிச்சா கோஸ் 29 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி, இந்திய மகளிர் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

மேலும், பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணியால், 20 ஓவர்களில் 127 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

மகளிருக்கான ஆசிய கிரிக்கெட் சுற்றுத்தொடர் - ஆதிக்கம் செலுத்தும் இந்திய, பாகிஸ்தான் அணிகள் | Womens T 20 Asia Cup 2024 India Pakistan

 

இதேவேளை, பாகிஸ்தான் மற்றும் நேபாள அணிகளுக்கு இடையிலான போட்டியில், பாகிஸ்தானிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. 

வெற்றிக்கான 109 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள துடுப்பாடிய பாகிஸ்தானிய அணியின் குல், 35 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்றதுடன் முனீபா, 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் விளையாடியிருந்தார். 

https://tamilwin.com/article/womens-t-20-asia-cup-2024-india-pakistan-1721618756

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாமரி அத்தபத்து சதம்

 இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சாமரி அத்தபத்து, மகளிர் இருபதுக்கு 20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மலேசியாவுக்கு எதிரான மகளிர்  டி20 ஆசியக் கோப்பை போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

டி20 சர்வதேசப் போட்டிகளில் அவர் பெற்றுக்கொண்ட மூன்றாவது சதம் இதுவாகும்.

https://www.facebook.com/reel/1800883233736286

119 ஓட்டங்கள்

இந்த போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையாக களமிறங்கிய அதபத்து 69 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாமரி அத்தபத்து சதம் | Chamari Athapaththu T20 Record In Histry

இந்த போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 4 விக்கட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றிருந்தது.

மலேசியாவிற்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இலங்கையால் நிர்ணயிக்கப்பட்ட 184 ஓட்டங்களை நோக்கி மலேசிய அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறது.

https://tamilwin.com/article/chamari-athapaththu-t20-record-in-histry-1721648586

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இல‌ங்கை ம‌க‌ளிர் அணி க‌ப்ட‌ன் குறைந்த‌ ப‌ந்தில் செஞ்சேரி அடிச்சா.............144 ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெல்வ‌து பெரிய‌ வெற்றி....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்தை வீழ்த்தி தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது இலங்கை

Published By: VISHNU   24 JUL, 2024 | 10:23 PM

image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (24) நடைபெற்ற பி குழுவுக்கான கடைசி மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்ட இலங்கை 10 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியது.

nannapt_thailand.png

இந்த வெற்றியுடன் பி குழுவிலிருந்து தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற இலங்கை, வெள்ளிக்கிழமை (26) நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை  எதிர்த்தாடவுள்ளது.

இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் தாய்லாந்தை 93 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை, 11.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 94 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.

அணித் தலைவி சமரி அத்தப்பத்து 35 பந்துகளில் 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 49 ஓட்டங்களுடனும் விஷ்மி குணரட்ன 39 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தாய்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் நன்னாபட் கோன்ச்சாரோன்காய் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரை விட அணித் தலைவி திப்பட்ச்சா புத்தாவொங் 13 ஓட்டங்களையும் அப்பிசரா சுவன்ச்சோன்ரதி 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகி: சமரி அத்தபத்து.

https://www.virakesari.lk/article/189303

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவை 114 ஓட்டங்களால் வெற்றிகொண்ட பங்களாதேஷ் நடப்பு சம்பியன் இந்தியாவை அரை இறுதியில் சந்திக்கும்

Published By: VISHNU   24 JUL, 2024 | 10:27 PM

image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (24) பிற்பகல் நடைபெற்ற பி குழுவுக்கான மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் மலேசியாவை 114 ஓட்டங்களால் முன்னாள் சம்பியன் பங்களாதேஷ் வெற்றிகொண்டு அரை இறுதிக்கு முன்னேறியது.

முர்ஷிதா கான், அணித் தலைவி நிகார் சுல்தானா ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் பங்களாதேஷின் இலகுவான    வெற்றிக்கு அடிகோலின.

மலேசியாவுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைக் குவித்தது.

டிலாரா அக்தர் (33 ஓட்டங்கள்), முர்ஷிதா காத்துன் ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 46 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டில் நிகார் சுல்தானாவுடன் மேலும் 89 ஓட்டங்களை முர்ஷிதா சுல்தான் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டார்.

முர்ஷிதா கான் 80 ஓட்டங்களையும் அணித் தலைவி நிகார் சுல்தானா ஆட்டம் இழக்காமல் 62 ஓட்டங்களையும் டிலாரா அக்தர் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் எல்சா ஹன்டர் (20), மஹிரா இஸாட்டி இஸ்மாயில் (15), வென் ஜூலியா (11) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் நஹிதா அக்தர் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் வெற்றியீட்டிய பங்களாதேஷ், வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை எதிர்த்தாடவுள்ளது.

ஆட்டநாயகன் முர்ஷிதா காத்துன்

https://www.virakesari.lk/article/189304

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் ரி20 ஆசிய கிண்ண அரை இறுதிகள்: இலங்கை - பாகிஸ்தான்; இந்தியா - பங்களாதேஷ்

26 JUL, 2024 | 01:03 PM
image

(நெவில் அன்தனி)

ஐந்தாவது மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் அணிகளைத் தீர்மானிக்கும் இரண்டு அரை இறுதிப் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (26) இரவு 7.00 மணிக்கு மின்னொளியில் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கையும் பாகிஸ்தானும் விளையாடவுள்ளன. 

2008க்கு முன்னர் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் நான்கு தடவைகள் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாடிய இலங்கை, ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 2022இல் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தது.

இந் நிலையில் பாகிஸ்தானுடனான இன்றைய அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் குறிக்கோளுடன் இலங்கை களம் இறங்கவுள்ளது. 

பி குழுவில் இடம்பெற்ற இலங்கை, லீக் சுற்றில் பங்களாதேஷ், மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகளை இலகுவாக வெற்றிகொண்டு அரை இறுதிக்கு முன்னேறியது. 

ஆரம்ப வீராங்கனைகளான அணித் தலைவி சமரி அத்தபத்து, விஷ்மி குணரட்ன ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கையின் வெற்றிகளை இலகுபடுத்தியதால் ஏனைய வீராங்கனைகளுக்கு துடுப்பெடுத்தாட வேண்டிய அவசியம் அதிகமாகத் தேவைப்படவில்லை. 

இந்த வருடம் ரி20 போட்டிகளில் மிகத் திறமையாக விளையாடி வந்துள்ள இலங்கை மகளிர் அணி 15 போட்டிகளில் 12இல் வெற்றிபெற்றிருந்தது. 

இவ்வாறாக திறமையை வெளிப்படுத்திவந்துள்ள இலங்கை இம்முறை முதல் தடவை சம்பியன் பட்டத்தை சூட முயற்சிக்கவுள்ளது. 

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் இதுவரை விளையாடப்பட்டுள்ள 19 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் 10 - 8 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது. 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் சில்ஹெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் இலங்கை ஒரு ஓட்டத்தால் வெற்றிகொண்டிருந்தது.

இம்முறை இலங்கை தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் பாகிஸ்தானை வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா எதிர் பங்களாதேஷ் 

நடப்பு சம்பியன் இந்தியாவுக்கும் முன்னாள் சம்பியன் பங்களாதேஷுக்கும் இடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

இந்த இரண்டு அணிகளில் இந்தியா சகலதுறைகளிலும் பலம்வாய்ந்ததாக காணப்படுவதால் இன்றைய போட்டியில் இலகுவாக வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என நம்பப்படுகிறது. 

இந்த இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் சந்தித்துள்ள 22 ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா 19 - 3 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் முன்னிலையில் இருக்கிறது. 

எவ்வாறாயினும் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இரண்டு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளன. 

சில்ஹெட்டில் 2022இல் நடைபெற்ற போட்டியில் இந்தியா மிக இலகுவாக வெற்றிபெற்றிருந்தது.

6 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கடைசிப் பந்தில் இந்தியாவை பங்களாதேஷ் 3 விக்கெட்களால் வெற்றிபெற்று சம்பியனாகியிருந்தது. 

ஆனால், இன்றைய போட்டியில் பங்களாதேஷ் சாதிக்கும் என எதிர்பார்க்கமுடியாது.

4_india__1_.png

3_pakistan.png

2_sri_lanka_women__1_.png

5_bangladesh__1_.png

https://www.virakesari.lk/article/189431

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பந்து மீதமிருக்க பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாட இலங்கை தகுதிபெற்றது

Published By: VISHNU   26 JUL, 2024 | 11:00 PM

image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான மகளிர் ரி20 ஆசிய கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஒரு பந்து மீதமிருக்க 3 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது.

2607_chamari_atthapattu.png

இந்த வெற்றியை அடுத்து இந்தியாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (28) இதே விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை தகுதிபெற்றுக்கொண்டது.

2607_muneeba_ali_pak_vs_sl.png

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 141 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

2607_fatima_sana_pak_vs_sl.png

இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

விஷ்மி குணரட்ன (0), ஹர்ஷிதா சமரவிக்ரம (19) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க இலங்கை சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (19 - 2  விக்.)

2607_kavisha_dilhari.png

எனினும் அணித் தலைவி சமரி அத்தபத்துவும் கவிஷா டில்ஹாரியும் 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

டில்ஹாரி 17 ஓட்டங்களைப் பெற்றார்.

இதனிடையே அத்தபத்துவின்     பின்னங்கால் அந்தரத்தில் இருந்தபோது விக்கெட் காப்பாளர் முனீபா ஸ்டம்ப் செய்தார். என்னே விசித்திரம், முனீபா கேள்வி எழுப்பாததால் அத்தபத்து தப்பித்துக்கொண்டார். 

முனீபாவின் கவனக்குறைவான அந்த செயல் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலக்ஷிகா சில்வா வந்த வேகத்திலேயே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (78 - 4 விக்.)

எனினும் சமரி அத்தபத்துவும் அனுஷ்கா சஞ்சீவனியும் 5ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

அதுவரை திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சமரி அத்தபத்து அநாவசியமாக ரிவேர்ஸ் சுவீப் அடிக்க முயற்சித்து விக்கெட்டைத் தாரை வார்த்தார்.

அவர் 48 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 63 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து ஹசினி பெரேரா (3), சுகந்திகா குமாரி (10) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டது.

எனினும், நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய அனுபவசாலி அனுஷ்கா சஞ்சீவனி  ஆட்டம் இழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிபெறச் செய்தார்.

பந்துவீச்சில் சாடியா இக்பால் 4 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது.

குல் பெரோஸா, முனீபா அலி ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 55 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், அவர்கள் இருவரும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர்.

குல் பேரோஸா 25 ஓட்டங்களையும் முனீபா அலி 37 ஓட்டங்களையும் பெற்றனர். தொடர்ந்து சித்ரா ஆமின் (10), அணித் தலைவி நிதா தார் (23) ஆகிய இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (99 - 4 விக்.)

எனினும் ஆலியா ரியாஸ் (16 ஆ.இ.), பாத்திமா சானா (23 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 140 ஓட்டங்களாக உயர்த்தினர்.

பந்துவீச்சில் உதேஷிகா ப்ரபோதனி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கவிஷா டில்ஹாரி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: சமரி அத்தபத்து.

https://www.virakesari.lk/article/189484

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இல‌ங்கை ம‌க‌ளிர் அணி கோப்பையை  வென்று விட்டின‌ம்

 

இல‌ங்கை ம‌க‌ளிர் அணிக்கு வாழ்த்துக்க‌ள்..........................

Edited by வீரப் பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் அணி சோபை இழந்துள்ளது. பெண்கள் அணி களை கட்டி உள்ளது. வாழ்த்துக்கள்! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

453015772_910691951070858_77238881792658

 

453195109_910700247736695_13682319914982

 

453218421_910684161071637_64295604230197

 

453173342_10228302177038358_274600549530

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
43 minutes ago, நியாயம் said:

ஆண்கள் அணி சோபை இழந்துள்ளது. பெண்கள் அணி களை கட்டி உள்ளது. வாழ்த்துக்கள்! 

நான் இந்த‌ ஆசியா கோப்பை தொட‌ங்க‌ முத‌லே சொன்னேன்

.இந்தியா இல‌ங்கை தான் பின‌லுக்கு வ‌ரும்

 

அதில் இந்தியா கோப்பையை வெல்லும் என்று

 

ஆனால் இல‌ங்கை ம‌க‌ளிர் அணி 15 வ‌ருக்கு பிற‌க்கு அடிச்ச‌ அடிய‌ பார்த்து விய‌ந்து போனேன் 

அடிச்ச‌ ப‌ந்துக‌ள் கூட‌ சிக்ஸ்6 ம‌ற்றும் போர்4.........................

 

இள‌ம் பெண்க‌ளின் விளையாட்டு மிக‌ அருமை............................

 

இல‌ங்கை ம‌க‌ளிர் அணிக்கு கோப்பையை வென்ற‌துக்கு ஒரு ல‌ச்ச‌ம் அமெரிக்க‌ன் டொல‌ர் கொடுத்த‌வை...................இன்றைய‌ ஆட்ட‌ நாய‌கிக்கு 25ஆயிர‌ம்  அமெரிக்க‌ன் டொல‌ர்..............................

Edited by வீரப் பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் ஆசிய கிண்ணத்தை முதல் தடவையாக சுவீகரித்து வரலாறு படைத்தது இலங்கை

Published By: VISHNU   28 JUL, 2024 | 09:05 PM

image

(நெவில் அன்தனி)

ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற மகளிர் ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்ட இலங்கை முதல் தடவையாக மகளிர் ஆசிய சம்பியனாகி வரலாறு படைத்தது.

PHOTO-2024-07-28-17-18-50.jpg

இரண்டு வகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 5 தடவைகள் இந்தியாவிடம் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை இம்முறை இந்தியாவை மிக இலகவாக வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை சூடியது.

1.png

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 166 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி ஆசிய சம்பியனானது.

_AN_3035.jpg

இலங்கையின் இந்த வெற்றியில் சமரி அத்தபத்து, ஹஷினி சமரவிக்ரம, காவிஷா டில்ஹாரி ஆகியோரின் பொறுப்புணர்வுடனான துடுப்பாட்டங்கள் பெரும் பங்காற்றின.

PHOTO-2024-07-28-17-18-50__1_.jpg

இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. சமரி அத்தபத்துவின் கவனக் குறைவால் விஷ்மி குணரட்ன ஒரு ஓட்டத்துடன் ரன் அவுட் ஆனார்.

என்றாலும் அதற்கு பிராயச்சித்தமாக சமரி அத்தபத்து திறமையாகத் துடுப்பெடுத்தாடி ஹர்ஷிதா சமரவிக்ரமவுடன் 2ஆவது விக்கெட்டில் 62 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

சமரி அத்தபத்து 43 பந்துகளில் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களை பெற்றார்.

தொடர்ந்து ஹர்ஷிதா சமரவிக்ரம, காவிஷா டில்ஹாரி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 40 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை ஆசிய சம்பியனாவதை உறுதிசெய்தனர்.

ஹர்ஷிதா சமரவிக்ரம 51 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட  69 ஓட்டங்களுடனும் காவிஷா டில்ஹாரி 16 பந்துகளில் 30 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

ஷபாலி வர்மா, ஸ்ம்ரித்தி மந்தனா ஆகிய இருவரும் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து  நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஷபாலி வர்மா 16 ஓட்டங்களுடன் வெளியேறிய சொற்ப நேரத்தில் உமா சேத்ரி (9) ஆட்டம் இழந்தார்.

அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோர் 11 ஓட்டங்களை மாத்திரம் பெற்று நடையைக் கட்டினார். (87 - 3 விக்.)

இந நிலையில் மந்தனாவும் ஜெமிமா ரொட்றிகஸும் ஜோடி சேர்ந்து 4ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து  அணியை சிறந்த நிலையில் இட்டனர்.

எவ்வாறாயினும் ரொட்றிகஸ் (29), மந்தனா ஆகிய இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (133 - 5 விக்.)

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மந்தனா 10 பவுண்டறிகளுடன் 69 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் ரிச்சா கோஷ் 14 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகி: ஹர்ஷிதா சமரவிக்ரம, தொடர்நாயகி: சமரி அத்தபத்து.

https://www.virakesari.lk/article/189633

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை ம‌க‌ளிர் அணிக்கு கோப்பையை வென்ற‌துக்கு ஒரு ல‌ச்ச‌ம் அமெரிக்க‌ன் டொல‌ர் கொடுத்த‌வை...................இன்றைய‌ ஆட்ட‌ நாய‌கிக்கு 25ஆயிர‌ம்  அமெரிக்க‌ன் டொல‌ர்..............................

 

வெற்றி பெற்ற அணிக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்கள், ஆட்ட நாயகிக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் என்பது சரியான தகவலா? இவ்வளவு தொகை கொடுக்கின்றார்களா? கொடுத்தால் ஆச்சரியம் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

453436461_891553396342967_64570692115393

 

453045732_891399286358378_78148044395542

 

452040776_891551939676446_38048649301948

முத‌ல் மீம்ஸ் சிங்க‌ள‌த்தில் இருக்கு என‌க்கு புரிய‌ வில்லை த‌மிழ் சிறி அண்ணா...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நியாயம் said:

 

வெற்றி பெற்ற அணிக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்கள், ஆட்ட நாயகிக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் என்பது சரியான தகவலா? இவ்வளவு தொகை கொடுக்கின்றார்களா? கொடுத்தால் ஆச்சரியம் தான். 

ஓம் அண்ணா

நேற்று கொடுக்கும் போது நேர‌டியா பார்த்தேன்

நேற்றையான் ஆட்ட‌ நாய‌கிக்கு கொடுத்த‌ 25ஆயிர‌ம் அமெரிக்க‌ன் டொல‌ர் அவாக்கு தான்

 

கோப்பை வென்ற‌ அணிக்கு கொடுத்த‌ ஒரு ல‌ச்ச‌ம் அமெரிக்க‌ன் டொல‌ர் இல‌ங்கை கிரிக்கேட் வாரிய‌த்துக்கு தான் போகும்..................கிரிக்கேட் வாரிய‌ம் தானே மாத‌ம் மாத‌ம் இவ‌ர்க‌ளுக்கு ச‌ம்ப‌ள‌ம் கொடுக்கிற‌வை...................

 

விள‌ம்ப‌ர‌ நிறுவ‌ன‌ங்க‌ள் அவையும் காசுக‌ளை அள்ளி கொடுத்து இருப்பின‌ம் போட்டி முடிந்த‌தும் பின்னுக்கு இருக்கும் வ‌ன‌ரில் பாருங்கோ எவ‌ள‌வு விள‌ம்ப‌ர‌ங்க‌ள் இருக்கு என்று

ஒவ்வொரு போட்டி முடிந்த‌து அந்த‌ போட்டியில் சிற‌ப்பாய் விளையாடின‌வையை பேட்டி எடுப்பின‌ம் அப்பேக்க‌ கொக்க‌ கோலா போத்த‌ல் ம‌ற்றும் வேறு குளிர் பான‌ங்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு அருகில் இருக்கும் அதுக்காக‌வே அந்த‌ அந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் இல‌ங்கை கிரிக்கேட் வாரிய‌த்துக்கு பெரிய‌ அமோன்ட் கொடுப்பின‌ம்..........................

 

2014 இல‌ங்கை அணி 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை வென்ற‌துக்கு இதை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு காசு அண்ணா இல‌ங்கை அணிக்கு கிடைச்ச‌து.....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

முத‌ல் மீம்ஸ் சிங்க‌ள‌த்தில் இருக்கு என‌க்கு புரிய‌ வில்லை த‌மிழ் சிறி அண்ணா...........................

453436461_891553396342967_64570692115393

பையா... எனக்கும் சிங்களம் புரியவில்லைத்தான்.
ஆனால்...  கேலிசித்திரத்துக்கு மொழி புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
படத்தைப் பார்த்தே... ஓரளவு ஊகிக்கலாம். 🙂

எனக்கு விளங்கியபடி... பல நோய்களால் பீடிக்கப் பட்டு, நடக்கவே... முடியாத ஸ்ரீலங்காவுக்கு...  
மகளிர் அணியினர் ஆசிய கிண்ணத்தை எடுத்துக் கொடுத்ததன் மூலம், மகிழ்ச்சியில்  ஆனந்தக்   கண்ணீரை வரவழைத்துள்ளனர். 😂

உங்களுக்கு இன்னும் புரிய வேண்டும் என்றால்... 
@விசுகு, @புங்கையூரன், @ரஞ்சித்  ஆகியோர் உதவுவார்கள். 😂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

453436461_891553396342967_64570692115393

பையா... எனக்கும் சிங்களம் புரியவில்லைத்தான்.
ஆனால்...  கேலிசித்திரத்துக்கு மொழி புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
படத்தைப் பார்த்தே... ஓரளவு ஊகிக்கலாம். 🙂

எனக்கு விளங்கியபடி... பல நோய்களால் பீடிக்கப் பட்டு, நடக்கவே... முடியாத ஸ்ரீலங்காவுக்கு...  
மகளிர் அணியினர் ஆசிய கிண்ணத்தை எடுத்துக் கொடுத்ததன் மூலம், மகிழ்ச்சியில்  ஆனந்தக்   கண்ணீரை வரவழைத்துள்ளனர். 😂

உங்களுக்கு இன்னும் புரிய வேண்டும் என்றால்... 
@விசுகு, @புங்கையூரன், @ரஞ்சித்  ஆகியோர் உதவுவார்கள். 😂

 

 

என்ர‌ அண்ணா ந‌ல்லா சிங்க‌ள‌ம் க‌தைப்பார் த‌மிழ்சிறி அண்ணா

நான் அரைகுறை சிங்க‌ள‌த்தில் ஒன்னு இர‌ண்டு முக்கிய‌மான‌த‌ தெரிந்து வைத்து இருக்கிறேன்

 

என்ர‌ சித்த‌ப்பா அவ‌ர் சிங்க‌ள‌ம் ந‌ல்லா க‌தைப்பார் அவ‌ர் சிறு வ‌ய‌தில் இருந்து கொழும்பில் வ‌சிப்ப‌தால் அவ‌ர் க‌தைப்ப‌தை நேரில் பார்த்தேன் நல்லா க‌தைப்பார்

 

சித்த‌ப்பாக்கும் அண்ணாவுக்கும் போட்டி யார் சிங்க‌ள‌ம் ந‌ல்லா க‌தைக்கிற‌து என்று சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு முன்னாள்

ஆனால் சித்த‌ப்பா தான் ந‌ல்லா க‌தைச்சு வென்ற‌வ‌ர்🫤............................

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை.  அவர் ஒரு சாதாரண பொறுப்பில் இருந்தால்.  உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் பிரான்ஸில் உள்ள எனது ஊரின் ஒன்றியத்தின் தலைவராக இருந்த நேரத்தில் எனது ஊரில் இருந்து 3 தலைகள் வந்து என்னை சந்தித்தார்கள். அந்த மூன்று பேரும் எனது உறவினர்கள் மட்டும் அல்ல நான் மிகவும் மதிப்பவர்கள். ஆனால் ஒன்றியத்தின் தலைவராக ஒன்றியத்தின் யாப்புக்குள் நின்று தான் என்னால் பேச முடிந்தது. அவர்கள் வந்த நோக்கம் மற்றும் என்னை தனியே சந்தித்த நோக்கம் நிறைவேறவில்லை.  ஆனால் மாவை சிங்களவரை மோட்டுக் கூட்டம் என்று இன்னும் நினைத்தபடி சயித் வெல்ல அவரது கட்சி பிரச்சாரம் செய்ய இவர் ரணில் வெல்ல வேண்டும் என்று அறிக்கை விடுவதை நீங்களும்....??
    • வடக்கு பகுதியில் 3 இடங்களில், படிம எரிபொருள் வளம் இருப்பதாக கிந்தியா கண்டு அறிந்து உள்ளது. அதில் வடக்கின் கிழக்கு பகுதி கரையோரம் ஒரு பகுதி. மற்ற 2 இடங்களும் எதுவென்று அடையாளப்படுத்தப்படவில்லை. இவை எல்லாம் வாய்வழி தகவல் தான், சொல்லியவர்கள் ஹிந்தியா அரசுக்கு நெருக்கமானவர்கள் (குறிப்பாக வளஅகழ்வு, வணிகத் துறையுடன்).  ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்பது போல. இது மன்னார் வளைகுடா அல்ல என்பதே வெளியில் சொல்லப்படாத புரிதல். அதிலும் தெளிவற்ற தன்மையை வெளிவரும் வரை (கிந்தியா) பேணுவதற்கு.  ஏன் இப்போது காங்கேசன் துறையில் கிந்தியாவின் கவனம், முதல் தலையீட்டில் இருந்து இப்பொது திரும்பி உள்ளது என்பதையும் நோக்கவேண்டி உள்ளது.  (வடக்கில் சொத்துக்கள் இருப்பவர்கள் , கவனமாக இருக்கவும்.)
    • அதிலும் சுமந்திரனின் சின்ன வீடு என்று ஒத்துக் கொண்டவர்கள் மட்டுமே அங்கே செருப்பை கழட்ட முடியும் 
    • இந்த ப்தக்கம் தொடர்பான கனேடிய அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் செய்தி  👇 தற்போதுதான் தகுயான போட்டியாளர்களை விண்ணப்பிக்கும்படி கேட்டிருக்கிறார்கள்.  வீரகேசரியின் செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.  ☹️ https://www.canada.ca/en/department-national-defence/services/medals/medals-chart-index/king-charles-iiis-coronation-medal.html King Charles III’s Coronation Medal The official description, eligibility, criteria, and history of King Charles III’sCoronation Medal.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.