Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் நடந்த கூட்டத்தில் இலங்கையும் இந்தியாவும் இணைந்தே தமிழின படுகொலையை செய்தன என்பதை வெளிப்படுத்தியவர் விக்கிரமபாகு கருணாரட்ன - சீமான்

26 JUL, 2024 | 04:45 PM
image

கலாநிதி விக்கிரமபாகு கருணரட்ணவின் மறைவுகுறித்து  நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் துயரம் வெளியிட்டுள்ளார்

தனது அனுதாபசெய்தியில் சீமான் தெரிவித்துள்ளதாவது

ஈழத்தில் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குக் குரல்கொடுத்த சிங்களப் பெருமகன், இலங்கையின் ஆதிகுடிமக்கள் தமிழர்கள்தான் என்பதை அரசியல் அரங்கில் அழுத்தமாகப் பதிவு செய்த மனிதநேய மாண்பாளர், புதிய சமசமாஜ கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

உண்மையான இடதுசாரி தலைவராகத் திகழ்ந்த ஐயா விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் இலங்கை மக்களிடம் பொதுவுடமை தத்துவத்தை விதைத்த பெருமைக்குரியவர்.

சிங்கள இனவெறியர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி வாழ்நாள் முழுதும் தமிழரின் உரிமைப்போராட்டத்திற்கு ஆதரவளித்து துணைநின்றவர். 2009ஆம் ஆண்டு தமிழினப்படுகொலைக்குப் பிறகு ஈழத்தமிழர்கள் ஆதரவு நாடகத்தை அரங்கேற்ற சென்னையில் திமுக நடத்திய டெசோ கூட்டத்தில் அழைப்பின் பேரில் கலந்துகொண்ட ஐயா விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள், அந்த கூட்டத்திலேயே இலங்கையும் இந்தியாவும் இணைந்தே தமிழினப் படுகொலைப்போரைச் செய்தது என்ற உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி, அதன் காரணமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்களால் இடைமறித்து பேசவிடாமல் தடுக்கப்பட்டார்.

அத்தகைய தீரமிக்க அரசியல் போராளியின் மறைவு சிங்கள மக்களுக்கு மட்டுமல்லாது; தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

https://www.virakesari.lk/article/189454

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளை

26 JUL, 2024 | 05:12 PM
image

மறைந்த சிரேஷ்ட இடதுசாரி அரசியல் தலைவரும் புதிய சம சமாஜ கட்சியின் முன்னாள் தலைவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளை (27) பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.

உடல் நலக்குறைவால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (25) அதிகாலை தனது 81ஆவது வயதில் விக்ரமபாகு கருணாரத்ன காலமானார். 

அதை தொடர்ந்து, இன்று (26) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையும், நாளை (27) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் அன்னாரின் பூதவுடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கொழும்பு பொரளையில் அமைந்துள்ள ஏ.எப்.ரேமண்ட் மலர்ச்சாலையில் (A.F.Raymond Parlor) வைக்கப்பட்டுள்ளதாக புதிய சம சமாஜ கட்சி அறிவித்துள்ளது.

பொரளை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

1943ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08ஆம் திகதி பதுளையில் பிறந்த விக்ரமபாகு கருணாரத்ன, தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து எப்போதும் ஒரே கொள்கையுடன் செயற்பட்டதோடு, அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்தார்.

சிலோன் பல்கலைக்கழகத்தின் (University of Ceylon) பொறியியல் பட்டதாரியான விக்ரமபாகு கருணாரத்ன, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்றார்.

சுமார் 18 வருடங்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் அவர் கடமையாற்றினார்.

(படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்)

DSC04813.jpg

DSC04803.jpg

https://www.virakesari.lk/article/189463

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச்சடங்கு இன்று

1-1-1-300x200.jpg

மறைந்த நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது.

இறுதி கிரியை பொரளை பொது மயானத்தில் இன்று மாலை ஐந்து மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றில் இன்றும், காலை முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன கடந்த 24ஆம் திகதி காலமானார்.

https://thinakkural.lk/article/306865

  • கருத்துக்கள உறவுகள்

453041775_502932902406001_57839977108965

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தப் போகாதவர்கள்...
கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவிற்கு அஞ்சலி செலுத்தி இருக்கின்றார்கள்.

இதிலிருந்து கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தமிழ் மக்களின் 
மனதில் இடம் பிடித்திருக்கின்றார் என அறியலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தப் போகாதவர்கள்...
கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவிற்கு அஞ்சலி செலுத்தி இருக்கின்றார்கள்.

இதிலிருந்து கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தமிழ் மக்களின் 
மனதில் இடம் பிடித்திருக்கின்றார் என அறியலாம்.

பொது ஊடகங்களிலும் விக்கிரமபாகுவிற்கு  அதிகமானோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.