Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2024 at 22:37, வாலி said:

பயங்கரவாதி ஹணியாவுக்கும் நரியன் நாவலனுக்கும் என்ன தொடர்பு? 🤔

இருவருக்கும் என்ன தொடர்பு ஒற்றுமை என்று விளக்கம் தந்துவிட்டார்களே 😂
நாவலர் சைவம் தழைத்தோங்க பாடுபட்ட ஒரு பெரியார்.  
ஹணியா இஸ்லாம் தழைத்தோங்க பாடுபட்ட ஒரு பெரியார்.

மக்காவில் பெட்டகத்துக்குள் இருக்கும் சிவலிங்க வடிவத்தை தான் இஸ்லாமியர்கள் வணங்குகின்றார்கள் என்கின்ற தகவல் வந்த உடனேயே விளங்கிவிட்டது இந்து மதத்தின் இரு பிரிவுகள் தான் இஸ்லாமும் யாழ்பாணத்து சைவ மதமும்.

 

  • Replies 111
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும். குரான் வாசகங்களை சொல்ல தெரியாதவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றிருக்கும், ஏற்கனவே நைஜீரியாவில் அ

  • யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள்  வெளியேற்றப்பட்டது  90ம் ஆண்டு. அதற்குமுதல் எந்த முஸ்லிம்நாடுகள் எமக்கு ஆதரவும் ஆயுதமும் தந்தன? எந்த முஸ்லீம்நாடுகள் எமக்கு ஆயுதங்கள் தரும் வாய்ப்பு இருந்தன? இன்ற

  • nunavilan
    nunavilan

    பலஸ்தீனியர்களையும் ஒரே கூடைக்குள் போட்டீர்கள்  பாருங்கள் அங்கை தான் நீங்கள் நிற்கிறீர்கள். அது சரி பெரும்பாலான போர்களுக்கு ஏன் அமெரிக்கா காரணகர்த்தாவாக நிற்கிறது என எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? ப

  • கருத்துக்கள உறவுகள்+

 ஈரானிய படு பயங்கரவாதி அலி கெமனி மீது "சூ" பெய்யுறா

 

இதுவே ஒரு ஒட்டகம் பெய்திருந்தா கூப்பிட்டிருப்பானா இந்த முல்லா என்று ஒரே கடிக்கிறாங்கள், சமூக வலைத்தளங்களில்....

கேக்கிறதிலையும் ஞாயமிருக்குதுதானே!🤣🤣

 

main-qimg-fbfddec507c0c751a644bbe17cb0b640

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

Israel-ஐ நோக்கி சீறிய Rockets; Hezbollah தாக்குதலால் பதற்றம் - Citizens-ஐ Warn செய்த US, UK, Canada

ஹெஸ்பொலா அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மறுபுறம், லெபனானை விட்டு உடனே வெளியேறுமாறு தனது குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலைமை "விரைவாக மோசமடையக் கூடும்" என்று கூறியுள்ள பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மியும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஹமாஸின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான இஸ்மாயில் ஹனிய, ஹெஸ்பொலா தளபதி ஃபுவாட் ஷுக்கர் ஆகியோர் இந்த வாரத்தின் தொடக்கத்தில் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இந்த படுகொலைக்காக இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்போம் என இரான் அரசு மற்றும் ஹெஸ்பொலா அமைப்பு கூறியிருந்தன. இந்நிலையில்தான், இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா தாக்குதலை நடத்தியிருக்கிறது. 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் தலைவரை கொன்றது இஸ்ரேலின் மொசாட் உளவாளிகளா? இரான் புதிய குற்றச்சாட்டு

இஸ்ரேல் vs இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாட் மர்பி மற்றும் ஜென்னி ஹில்
  • பதவி, பிபிசி செய்திக்காக, லண்டன், டெல்அவிவ் நகரங்களில் இருந்து
  • 4 ஆகஸ்ட் 2024, 08:00 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே இரான் தலைநகர் டெஹ்ரானில் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு வெளியில் இருந்து "குறுகிய தூர எறிகணை" மூலம் கொல்லப்பட்டதாக இரானின் புரட்சிகர காவலர் படை (IRGC) தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை ஏவப்பட்ட அந்த எறிகணை சுமார் 7 கிலோ (16lbs) எடையுடன் "பலமான வெடிப்பை" ஏற்படுத்தியதாகவும், இதனால் ஹனியே மற்றும் அவரது மெய்ப் பாதுகாவலர் கொல்லப்பட்டதாகவும் இரான் துணை ராணுவ அமைப்பு கூறியது.

இரானில் புதிய அதிபராக மசூத் பெசெஷ்கியான் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க டெஹ்ரானுக்கு இஸ்மாயில் ஹனியே சென்றிருந்திருந்தார்.

இந்த நடவடிக்கையை அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் செயல்படுத்தியுள்ளதாக இரானின் புரட்சிகர காவலர் படை (ஐஆர்ஜிசி குற்றம் சாட்டியது.

ஆனால் ஹனியேவின் மரணம் குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஐஆர்ஜிசி அமைப்பின் கூற்று மேற்கத்திய ஊடகங்களில் வெளியான செய்திகளுடன் முரண்படுகிறது. விருந்தினர் மாளிகையில் இஸ்ரேலிய ரகசிய ஏஜென்டுகளால் வெடிபொருட்கள் வைக்கப்பட்டதாக மேற்கத்திய ஊடக செய்திகள் கூறுகின்றன.

சீற்றத்தில் இரான்

ஹனியேவின் மரணத்தைச் சுற்றியுள்ள தோல்விகள், குறிப்பாக தீவிர பாதுகாப்பு போடப்பட்டிருந்த ஒரு நாளில் இது நிகழ்ந்திருப்பது இரான் மற்றும் அதன் பாதுகாப்பு அமைப்பான ஐஆர்ஜிசி-க்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹனியே இறந்த சில நாட்களில் பல ஐஆர்ஜிசி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஹனியே தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் இருந்த பணியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களது தொலைபேசிகள் மற்றும் பிற மின் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது எப்படி? - சங்கடத்தில் இரான்  பாதுகாப்பு அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே

ஹமாஸ் தலைவரை கொன்றது மொசாட் உளவாளிகளா?

இதற்கிடையில், இரானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு விவரங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி வியாழக் கிழமை ஹனியேவுக்காக பிரார்த்தனைகளை நடத்தினார். அவரது பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் விழா முடிந்தவுடன் அவர் உடனடியாக வெளியேறினார்.

இரானிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, இஸ்ரேலின் மொசாட் ஏஜெண்டுகளால் (Mossad intelligence agency) இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த அறையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார் என்று பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் ஊடகம் கூறியுள்ளது.

இரண்டு மொசாட் உளவாளிகள் விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்து மூன்று அறைகளில் வெடிமருந்துகளை வைத்ததாக பிரிட்டனி டெய்லி டெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்ட பிறகு இரானின் புரட்சிகர காவலர் படை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 

அந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வதற்கு முன்பாக இருவரும் பின்னர் இரானை விட்டு வெளியேறிவிட்டனர் என்று சிசிடிவி காட்சிகளை பார்த்த இரானிய அதிகாரிகள் கூறியதாக அந்த நாளிதழ் செய்தி கூறுகிறது.

நியூயார்க் டைம்ஸ், ஹனியேவின் அறையில் வெடிகுண்டுகள் வைத்து, அதனை வெடிக்கச் செய்து அவர் கொல்லப்பட்டதாகவும், அவை இரண்டு மாதங்களுக்கு முன்பே வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறியது.

பிபிசியால் இந்தக் கூற்றுகளை சரிபார்க்க முடியவில்லை.ஆனால் ஹனியே இதற்கு முன்பு அதே விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்ததாக இந்த வார தொடக்கத்தில் பிபிசியிடம் பேசிய ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இஸ்ரேலுக்கு பதிலடி தர இரான், ஹமாஸ் உறுதி

2017ல் அரசியல் பணியகத்தின் தலைவராக பதவியேற்றதில் இருந்து இஸ்மாயில் ஹனியே 15 முறை இரானுக்கு பயணம் செய்துள்ளார்.

இந்த அறிக்கைகள் உண்மையாக இருந்தால் - இரானின் புரட்சிகர காவலர் படைக்கு இன்னும் பெரிய தோல்வியை இந்த சூழல் பிரதிபலிக்கும். காரணம் இந்த அமைப்பு நீண்ட காலமாக நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.

இரானில் எந்த அளவிற்கு மொசாட் எளிதாக நுழைந்து செயல்பட முடியும் என்பதை இந்த சூழல் எடுத்துக் காட்டுகிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஹனியேவின் மரணம் எப்படி நிகழ்ந்திருந்தாலும், இரானும் ஹமாஸும் பதிலடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளன.

இரானின் புரட்சிகர காவலர் படை சனிக்கிழமை அன்று இஸ்ரேலுக்கு "தகுந்த நேரம், இடம் மற்றும் முறையில் கடுமையான தண்டனை கிடைக்கும்" என்று கூறியது.

இரானிய ஆதரவு ஆயுதக்குழுக்கள் மற்றும் லெபனானில் இருந்து செயல்படும் ஹெஸ்பொலாவும் இஸ்ரேலை பழிவாங்க சூளுரைத்துள்ளன. ஹெஸ்பொலா உயர்மட்ட தளபதிகளில் ஒருவரான ஃபுவாட் ஷுக்ர் கடந்த செவ்வாய்கிழமை பெய்ரூட் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் டமாஸ்கஸில் இரானின் புரட்சிகர காவலர் படையின் பிரிகேடியர் தளபதி முகமது ரெசா ஜாஹேடி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இரான் 170 ட்ரோன்கள், 30 கப்பல் ஏவுகணைகள் மற்றும் 110 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Who’s the terrorist? 

 

  • கருத்துக்கள உறவுகள்+

இஸ்ரேலிய பொதுமக்களை முஸ்லிம்களின் கமாஸ் அரக்க கூட்டம் படுகொலை செய்யும் காட்சி.

இளகிய மனம் படைத்தவர்கள் காண வேண்டாம்.

https://x.com/TheMossadIL/status/1820111535689322799

 

தென் தமிழீழத்தில் எவ்வாறு முஸ்லிம்கள் தமிழர்களை படுகொலை செய்தனரோ அதே போன்ற ஒரு காட்டுருவப் படுகொலையினை பாலஸ்தீனப் பயங்கரவாதம் ஒக். 7இல் இஸ்ரேலில் நிகழ்த்தியது.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுமட்டும் உண்மை, இஸரேலின் நெத்தனியாகு டிரம்பின் ஆதரவாளர். போரை கடுமைப்படுத்தி, பைடனின் ஆட்சிக்கு ஒரு கழங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யினம். டிரம்ப் வருவார் என்று நினைத்து, வலதுசாரிகள் வேற உலகமெங்கும் குடியேற்ற வாசிகளுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வெளிக்கிடுறார்கள் ( uk riots ). இந்த டிரம்பால் ஒரு நன்மையும் விளைய போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் தலைவர் கொலை செய்யப்பட்ட விவகாரம்; ஈரான் அதிகாரிகள் மீது சந்தேகம்!

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) அதிகாரிகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அப்போது முதல் இஸ்ரேல் உளவுப் படையான மொசாட், ஹமாஸ் முக்கியபுள்ளிகளை குறிவைத்து தாக்கி வருகிறது. இந்த வரிசையில் ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஜூலை 31-ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ஈரான் ராணுவத்தின் உயர் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (ஐஆர்ஜிசி) கட்டுப்பாட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஹனியா தங்கினார். அவர் தங்கியிருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் ஹனியா உயிரிழந்தார். இதன் பின்னணியில் இஸ்ரேல் உளவுப் படையான மொசாத் இருக்கிறது. மொசாத்தின் ஏஜெண்டுகளாக செயல்பட்ட ஈரானின் ஐஆர்ஜிசி படையின் அதிகாரிகள், வீரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் டெலிகிராப் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், “இஸ்மாயில் ஹனியா அடிக்கடி தங்கும் டெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையின் 3 அறைகளில் முன்கூட்டியே வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டன. இந்த வெடிகுண்டுகளை ஈரானின் ஐஆர்ஜிசி படையை சேர்ந்த 2 அதிகாரிகள் மறைத்து வைத்தனர். இவர்கள் மொசாட்டின் ஏஜெண்டுகள் ஆவர். குறிப்பிட்ட அறையில் ஹனியா தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டதும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன” என தெரிவித்துள்ளது.

இஸ்மாயில் ஹனியா கொலையில் ஐஆர்ஜிசி படையினருக்கு தொடர்பு இருப்பது குறித்து ஈரான் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் ஐஆர்ஜிசி படையை சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஈரான் ராணுவம் உட்பட அனைத்து துறைகளிலும் இஸ்ரேலின் மொசாத் ஏஜெண்டுகள் ஊடுருவி இருப்பதாகக் கூறப்படுகிறது.

https://thinakkural.lk/article/307333

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ragaa said:

ஒன்றுமட்டும் உண்மை, இஸரேலின் நெத்தனியாகு டிரம்பின் ஆதரவாளர். போரை கடுமைப்படுத்தி, பைடனின் ஆட்சிக்கு ஒரு கழங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யினம். டிரம்ப் வருவார் என்று நினைத்து, வலதுசாரிகள் வேற உலகமெங்கும் குடியேற்ற வாசிகளுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வெளிக்கிடுறார்கள் ( uk riots ). இந்த டிரம்பால் ஒரு நன்மையும் விளைய போவதில்லை.

ரம்ப் அவர்களால் அமெரிக்காவிற்கு நன்மையோ இல்லையோ.....
அவர் வெற்றியீட்டினால் அடுத்த நான்கு வருடங்களுக்கு வெடி குண்டு வெடிக்காத உலகமாய் இருக்கும்.உலக மக்களும் நிம்மதி பெருமூச்சுடன் வாழ்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ரம்ப் அவர்களால் அமெரிக்காவிற்கு நன்மையோ இல்லையோ.....
அவர் வெற்றியீட்டினால் அடுத்த நான்கு வருடங்களுக்கு வெடி குண்டு வெடிக்காத உலகமாய் இருக்கும்.உலக மக்களும் நிம்மதி பெருமூச்சுடன் வாழ்வார்கள்.

உங்களை வலதுசாரிகள் கேவலமாகப்பார்த்தாலும் நீங்கள் மீசையில் மண்படீது மாதிரி டிரம்ப்பை ஆதரிப்பீர்களாக்கும். அதெப்படி சிங்களவன் ( பார்த்தா எங்களமாதிரித்தான் இருப்பான்) இனவெறி கதைச்சா ஆ ஊ என்று கத்திற நீங்கள் வெள்ளைத்தோல் இனவெறி கைதைச்ச it is ok என்ற மாதிரி இருக்கிறது. அது சரி டிரம்ப் தமிழ் ஈழத்தை எடுத்து தருவாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ragaa said:

உங்களை வலதுசாரிகள் கேவலமாகப்பார்த்தாலும் நீங்கள் மீசையில் மண்படீது மாதிரி டிரம்ப்பை ஆதரிப்பீர்களாக்கும். அதெப்படி சிங்களவன் ( பார்த்தா எங்களமாதிரித்தான் இருப்பான்) இனவெறி கதைச்சா ஆ ஊ என்று கத்திற நீங்கள் வெள்ளைத்தோல் இனவெறி கைதைச்ச it is ok என்ற மாதிரி இருக்கிறது. அது சரி டிரம்ப் தமிழ் ஈழத்தை எடுத்து தருவாரா?

இன்றைய காலகட்டத்தில் வலதுசாரி,இடதுசாரி கொள்கைகளைவிட போர் இல்லாத சூழலையே உலகமக்கள் விரும்புகின்றார்கள்.எனக்கு டொனால்ட் ரம்பின் போக்கை பார்த்தால் இனவெறி பிடித்தவராக தெரியவில்லை.
 எல்லா வெள்ளைகளும் இனவெறி பிடித்தவர்களாக இருந்தால் நானோ நீங்களோ மேற்குலகில் வாழவே முடியாதல்லவா?

நிற்க....

தனி ஈழம் வேண்டும் என்பதற்காக நான் இங்கே அரசியல் பேசவில்லை. அதை விட தனி ஈழம்  சாத்தியப்படாத விடயம் என்பது பல சந்தர்ப்பங்களில் பல அரசியல் நிலைகள் உணர்த்தி விட்டு சென்றுவிட்டன என நான் நினைக்கின்றேன்.
அது சரி... உலகில் யார் அல்லது அமெரிக்காவில் யார் ஆட்சிசெய்தால் தமிழீழம் கிடைக்கும் என நினைக்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை இலக்குவைத்து ரொக்கட் தாக்குதல் - பலர் காயம்

Published By: RAJEEBAN   06 AUG, 2024 | 01:34 PM

image

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவதளம் மீது மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்க இராணுவ அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.

ஹமாஸ் தலைவர், ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதி ஆகியோர் கொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் விதத்தில் ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அல் அசாத் விமானப்படைத் தளத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து மதிப்பிட்டு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலர் காயமடைந்துள்ளனர் போல தோன்றுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈராக்கிய அதிகாரிகள் தாக்குதல் இடம்பெற்றதை உறுதி செய்துள்ளனர்.

இதுவரை எந்த குழுவும் இந்த தாக்குதலிற்கு உரிமை கோரவில்லை.

https://www.virakesari.lk/article/190400

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.