Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thirukoneshwarar-kovil.jpeg?resize=600,3

பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா?

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலயத்தில் பல கோடி ரூபா பெறுமதியான தாலி கொள்ளையிடப்பட்டுள்ளது.

சோழர் காலம் முதல் திருகோணேஸ்வர ஆலயத்தில் இருந்து வந்த குறித்த தாலி, போர்த்துக்கேயர் காலத்தில் ஆலயம்  உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வந்த தாலி, கடந்த வாரம் பகலில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் குரலெழுப்ப தொடங்கினர். அதேவேளை திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர்.

பல நூறு கோடி பெறுமதியான இரத்தினங்கள், வைடூரியங்கள் பொதிக்கப்பட்ட 5 சவரன் தாலி பல பூஜைகள் செய்யப்பட்டு சக்தி வாய்ந்ததாக இருந்தது எனவும் இதை எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு போய், சிவனின் சக்தியை செயலிழக்க செய்யப்பட்ட சதியா ? இல்லையெனின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தாலி விற்பனை செய்வதற்காகவா?” என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து பொறுப்பு கூறவேண்டிய தரப்பினரின் இதுவரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என கூறப்படுகிறது.

அதேபோல் சோழர் காலத்தில் செய்யப்பட்ட பல நூறு கோடி மதிப்புடைய 16 பவும் வைரம், வைடூரியம் பொதிக்கப்பட்ட தங்க நகைகளும் கடந்த காலத்தில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதேவேளை, பொலிஸாருக்கும் பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடயம் குறித்து பொதுமக்கள் ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட தாலியை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர்   பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1395306

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கோடி ரூபாய் மதிப்புள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தாலி திருட்டு

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பல நூறு வருட காலமாக சோழர் கால தாலி திருட்டுபோயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர்த்துக்கேயர் காலத்தில் கோயில் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்த குறித்த தாலி நிலையில் கடந்த வாரம் தாலி திருட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பொது மக்கள் குரலெழுப்ப தொடங்கியுள்ளனர்.

கோயில் நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.

பல நூறு கோடி பெறுமதி

பல நூறு கோடி பெறுமதியான ரத்தினங்கள், வைடூரியங்கள் பொதிக்கப்பட்ட 5 பவுண் தாலி பல பூஜைகள் செய்யப்பட்டு சக்திவாய்ந்ததாக இருந்தது எனவும் இதை எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் பொது மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கோடி ரூபாய் மதிப்புள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தாலி திருட்டு | Thali Theft Of Thirukoneswara Temple

இவ்வாறு அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு போய் சிவனின் சக்தியை செயலிழக்க செய்யப்பட்ட சதியா ? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து பொறுப்பு கூறவேண்டிய தரப்பினரின் இதுவரை பொலிஸ் முறைப்பாடு கூட செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

அதேபோல் சோழர் காலத்தில் செய்யப்பட்ட பல நூறு கோடி மதிப்புடைய 16 பவுன் வைரம், வைடூரியம் பொதிக்கப்பட்ட தங்க நகைகளும் கடந்த காலத்தில் திருட்டு போயுள்ளது.

பொலிஸில் முறைப்பாடு

இந்நிலையில் இவ்விடயம் குறித்து மாவட்ட செயலாளர், அரசங்க அதிபர் என சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ள்ளது.

பொலிஸாருக்கும் பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கோடி ரூபாய் மதிப்புள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தாலி திருட்டு | Thali Theft Of Thirukoneswara Temple

மேலும் இவ்விடயம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஆளுநர் இந்த தாலியை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், தாலி திருட்டு போயவுள்ள சம்பவம் குறித்து ஆன்மீக வாதிகளார் அச்சம் தெரிவித்தனர்.

இந்நிலையில், போர்த்துக்கேயரிடம் இருந்து பாதுகாக்கப்பட்ட தாலி தமிழர்களால் திருடப்படுவதற்கா ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

https://tamilwin.com/article/thali-theft-of-thirukoneswara-temple-1723276490

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் அய்யரோ ..அல்லது நிருவாகியோ கனடா விசிட்டர்  விசாவில் வர ரெடியாகிட்டினம்..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

கோயில் அய்யரோ ..அல்லது நிருவாகியோ கனடா விசிட்டர்  விசாவில் வர ரெடியாகிட்டினம்..

இப்ப போயிருப்பினமே!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

கோயில் அய்யரோ ..அல்லது நிருவாகியோ கனடா விசிட்டர்  விசாவில் வர ரெடியாகிட்டினம்..

கனடா கள்வர் கூடாரமாகிவிட்டது என்கிறீர்கள்,.....? 

யோசிக்க வேண்டிய விடயம்தான்,....🥺

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

கனடா கள்வர் கூடாரமாகிவிட்டது என்கிறீர்கள்,.....? 

யோசிக்க வேண்டிய விடயம்தான்,....🥺

அட...இந்தப் பெரிய கள்ளனும் நம்ம நாட்டொலைதான் இருக்காரே...அப்ப ஒத்துக்கின்றேன்..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

அட...இந்தப் பெரிய கள்ளனும் நம்ம நாட்டொலைதான் இருக்காரே...அப்ப ஒத்துக்கின்றேன்..

நீங்கள் எந்த நாட்டைச் சொல்கிறீர்கள்? 

🤨

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kapithan said:

நீங்கள் எந்த நாட்டைச் சொல்கிறீர்கள்? 

🤨

அதானே...நீங்கள்  கீபொட்டைதட்டி குந்தியிருந்து இலகுவா உழைக்கிறநாடுதான்...பெரியவரே..

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணேஸ்வரர் ஆலய தாலி காணாமல் போன விவகாரம்; ஆலய நிர்வாகம் மறுப்பு

திருகோணேஸ்வரர் ஆலயத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தாலி ஒன்று கொள்ளையிடப்பட்டிருப்பதாக வெளியான தகவலை, ஆலய நிர்வாகம் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தாலி காணாமல் போனதாக கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 2010ஆம் ஆண்டு ஆலயத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 3 1/4 பவுன் எடைகொண்ட தாலியும் கொடியுமே காணாமல் போயிருப்பதாக திருகோணேஸ்வரர் ஆலய பரிபாலண சபையின் செயலாளர் ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் காணாமல் போன குறித்த 3 1/4 பவுன் எடைகொண்ட தாலி மற்றும் கொடியை மீளப் பெற்றுத் தருவதாக குறித்த ஆலயத்தின் குருமார்களால் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/307642

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, alvayan said:

கோயில் அய்யரோ ..அல்லது நிருவாகியோ கனடா விசிட்டர்  விசாவில் வர ரெடியாகிட்டினம்..

 

4 minutes ago, ஏராளன் said:

காணாமல் போன குறித்த 3 1/4 பவுன் எடைகொண்ட தாலி மற்றும் கொடியை மீளப் பெற்றுத் தருவதாக குறித்த ஆலயத்தின் குருமார்களால் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்ப... ஐயர் தான் தாலியை, ஆட்டையை போட்டிருக்கின்றார் போலுள்ளது. 😂
அல்வாயன்  எப்படி,இதை எல்லாம்... முன்பே கண்டு பிடிக்கின்றீர்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அல்வாயன்  எப்படி,இதை எல்லாம்... முன்பே கண்டு பிடிக்கின்றீர்கள். 🤣

அவர் முன்னர் நுண்ணறிவுப் பிரிவு கா.துறையில் வேலை செய்திருப்பாரோ?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

அவர் முன்னர் நுண்ணறிவுப் பிரிவு கா.துறையில் வேலை செய்திருப்பாரோ?!

அல்வாயன்   அண்மையில்… மட்டக்களப்பில் மௌலவி ஒருவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப் பட்ட போது… அவன் விடுதலைப் புலிகளிடம் இருந்து கிடைத்த ஆயுதம் என்று சொல்வான் என்று அல்வாயன் முன்பே சொன்ன மாதிரியே நடந்தது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அல்வாயன்   அண்மையில்… மட்டக்களப்பில் மௌலவி ஒருவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப் பட்ட போது… அவன் விடுதலைப் புலிகளிடம் இருந்து கிடைத்த ஆயுதம் என்று சொல்வான் என்று அல்வாயன் முன்பே சொன்ன மாதிரியே நடந்தது. 🙂

அவரது பெயரில் அல்வா இருப்பதால் அதை எல்லோருக்கும் புகட்டுகிறார். 

🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

அவரது பெயரில் அல்வா இருப்பதால் அதை எல்லோருக்கும் புகட்டுகிறார். 

🤣

வந்து உங்களை புரட்டி எடுக்கப் போகிறார். ரெடியாய் இருங்கோ…. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

அவரது பெயரில் அல்வா இருப்பதால் அதை எல்லோருக்கும் புகட்டுகிறார். 

🤣

பெரியவருக்கு..மூச்சு முட்டுது...எல்லாக்கடைசிக்கு..பிளேட்டை மாத்துறார்...அவையோடை சகவாசம்தானே...அதாலை அந்த பிரட்டல் குணம் இந்த பெரியவருக்கு..இருக்கு..முன்பும் ஒருமுறை இந்த வதந்தியை விட்டவர்......என்ன செய்வது எப்படியும் பணம் பிரட்டணுமே..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

பெரியவருக்கு..மூச்சு முட்டுது...எல்லாக்கடைசிக்கு..பிளேட்டை மாத்துறார்...அவையோடை சகவாசம்தானே...அதாலை அந்த பிரட்டல் குணம் இந்த பெரியவருக்கு..இருக்கு..முன்பும் ஒருமுறை இந்த வதந்தியை விட்டவர்......என்ன செய்வது எப்படியும் பணம் பிரட்டணுமே..

என்னை எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் எனது வயதை மட்டும் கூட்டிச் சொல்லாதீர்கள்,..    பிளீஸ்,...🙏

🤣

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணேஸ்வரத்தில் திருட்டு போன தாலி : ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

திருக்கோணேஸ்வரம் ஆலயம் சம்பந்தமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) ஏற்பாடு செய்த உத்தியோக பூர்வமற்ற கூட்டத்தில் ஆளுநருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (11) செந்தில் தொண்டமானால் யாப்புக்கு முரணான திருக்கோணேஸ்வரம் ஆலய அபிவிருத்தி சம்பந்தமான பொது சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று அவசர அவசரமாக நடத்தப்பட்டது.

அங்கு கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் ராஜ கோபுரம் கட்டுவதற்கான ஏற்பாடு தன்னால் செய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெறுமதியான தாலி

இதையடுத்து, சோழர் காலத்து பல நூறு கோடி ரூபாய் பெறுமதியான தாலி ஒன்று களவு போய் உள்ளது என தெருவித்ததோடு தொடர்ந்து கூட்டத்தை முடித்து பொது மக்களுக்கு கேள்வி கேக்க வாய்ப்பு வழங்காமல் செல்ல முயன்றுள்ளார்.

திருக்கோணேஸ்வரத்தில் திருட்டு போன தாலி : ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் | Thirukoneswara Temple Theft Of Gold Thali

இந்தநிலையில், கூட்டத்துக்கு வருகை தந்த திருகோணமலை (Trincomalee) சேர்ந்த ஆயுள் கால உறுபினர்கள் தமது கேள்விக்கு நீங்கள் பதில் கூறியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த காரணத்தால் பின்வரும் கேள்விகள் மற்றும் விளக்கங்கள் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

சோழர் காலத்து நகை

தொடர்ந்து மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, “2009 ஆம் ஆண்டு நீதிமன்றதால் நிர்வாக சபையிடம் கோவிலை ஒப்படைக்கும் போது இப்படியான சோழர் காலத்து நகை என்ற ஒன்று இருக்கவில்லை, கடந்த சிவராத்திரி நிகழ்வில் ஆலயத்துக்கு சொந்தமான அனைத்து அசையும் அசையா சொத்து விபரங்களும் பெரிய திரையில் மக்கள் பார்வைக்கு காண்பிக்கபட்டது அதில் எங்குமே சோழர் காலத்து நகை என்ற ஒன்று எங்குமே இருக்கவில்லை அவ்வாறு இருக்க இப்படி சோழர் காலத்து நகை திருட்டு என்று செய்தி வெளியிட பின்னணி என்ன ?

திருக்கோணேஸ்வரத்தில் திருட்டு போன தாலி : ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் | Thirukoneswara Temple Theft Of Gold Thali

திருகோணமலையில் தீர்க்கபட வேண்டிய கன்னியா மற்றும் கோணேசர் ஆலய சட்டவிரோத கடைகள் என்று எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது அதை பார்க்காமல் இந்த மூன்று பவுண் தாலி விடயத்தை தூக்கி பிடித்த யாப்புக்கு முரணான கூட்டத்தின் நோக்கம் என்ன ?

குடியியல் நீதிமன்றில் ஆலயம் தொடர்பான ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது எழுத்து மூலம் எந்த அறிவித்தலும் இல்லாமல் இப்படி ஒரு சட்டத்துக்கு முரணான அவசர கூட்டம் கூட்ட வேண்டிய தேவை என்ன ?” என  மக்கள் கேள்வியெழுப்ப பதில் கூற முடியாத செந்தில் தொண்டமான் வெளியே சென்றமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/thirukoneswara-temple-theft-of-gold-thali-1723451360

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.