Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

3-1.jpg?resize=750,375&ssl=1

இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை!

மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியப் படையினர் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே பரஸ்பர நட்புறவை மென்மேலும் விருத்தி செய்யும் முக்கிய படிமுறையாக, வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகின்ற இந்த மித்ரசக்தி போர்ப் பயிற்சியானது, எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை மாதுரு ஓயா பிரதேசத்தில் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய இராணுவ வீரர்களே நேற்று மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.

இந்திய இராணுவ படையினரை காலாட்படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, மித்ர சக்தி இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தினேஷ் உடுகம, இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இவர்களை வரவேற்றனர்.

போர்ப் பயிற்சியில் இந்திய இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கேணல் ரவீந்திர அலவட் தலைமையில் 18 அதிகாரிகளும் 102 சிப்பாய்களும் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கஜபா படையணியின் 18 அதிகாரிகளும் 102 சிப்பாய்களும் பங்கேற்கவுள்ளனர்.

10 ஆவது தடவையாக இம்முறை இடம்பெறும் இந்த இராணுவப் பயிற்சிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இலங்கையிலும் இந்தியாவிலும் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2.jpg?resize=600,357&ssl=1

11.jpg?resize=600,389&ssl=1

flight-90.jpg?resize=600,364&ssl=1

fe-900.jpg?resize=600,401&ssl=1

https://athavannews.com/2024/1395546

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆரம்பமானது இலங்கை - இந்திய இராணுவ கூட்டுப்பயிற்சி!

இந்திய - இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியான மித்ர சக்தி  (MITRA SHAKTI) இன் 10வது அத்தியாயம் இலங்கையில் (Sri Lanka) ஆரம்பமாகியுள்ளது.

மதுரு ஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சி பாடசாலையில் நேற்று (12) ஆரம்பமாகிய இந்த பயிற்சியானது, எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், இரு தரப்புகளின் இராணுவத் திறனை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமென கூறப்படுகின்றது.

ஆயுதப் படை

குறித்த கூட்டு இராணுவப் பயிற்சியானது கடந்த வருடம் இந்தியாவில் இடம்பெற்றது.

ஆரம்பமானது இலங்கை - இந்திய இராணுவ கூட்டுப்பயிற்சி! | India Sri Lanka Mitra Shakti Begins

அந்தவகையில், இவ்வருடம் இலங்கையில் நடைபெறும் பயிற்சியில், இந்தியாவை (India) பிரதிநிதித்துவப்படுத்தி ராஜ்புதானா ரைபிள்ஸ் (Rajputana Rifles ) மற்றும் பிற ஆயுதப் படைகளை சேர்ந்த 106 படையினரும்,  சிறிலங்கா இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் (Gajaba Regiment of Sri Lankan Army) வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

https://ibctamil.com/article/india-sri-lanka-mitra-shakti-begins-1723521409

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்களம் விரைவில் விடுதலைப்புலிகளைக் கொண்டாடும் நிலை வரும். 

  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 AUG, 2024 | 09:40 AM
image

இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் மும்பை மூன்று நாள்  விஜயமாக இன்று (26) நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

எரிபொருள் மீள் நிரப்பல் மற்றும் ஏனைய கப்பல் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான செயற்பாட்டு விஜயமாகவே இவ்விஜயம் அமைகின்றது. 

இக்கப்பல் மாலுமிகள் ஓய்வெடுப்பதற்கான சந்தர்ப்பமும் இவ்விஜயத்தின்போது கிடைக்கப்பெறுவதுடன், நகரில் உள்ள பல்வேறு முக்கிய இடங்களுக்கும் அதேபோல கொழும்பு மற்றும் காலியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களுக்கும் அவர்கள் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். 

ஐஎன்எஸ் மும்பை கப்பல் 29 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/191977

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா – இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறும் இருநாட்டு ராணுவங்களின் கூட்டுப் பயிற்சித் திட்டமான ‘மித்ர சக்தி’-யின் 10வது ஆண்டுப் பயிற்சி நிறைவடைந்தது.

இலங்கையில் மதுரு ஓயா பகுதியில் உள்ள ராணுவப் பயிற்சிப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 12-ம் திகதி முதல் இரு வாரங்களாக ‘மித்ர சக்தி’யின் 10வது கூட்டு ராணுவ பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்தியாவைச் சேர்ந்த 106 வீரர்கள் இந்த இராணுவப் பயிற்சியில் பங்கேற்றனர். இருநாட்டு ராணுவத்தின் இயங்குதன்மை, பரஸ்பர புரிதல்களை மேம்படுத்த இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், தொழில்முறையிலான மரியாதை, தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்தல், சிறந்த பயிற்சி முறைகளைக் கற்றல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான உறவினை ஆழமாக்குதல் போன்றவற்றிற்காக இந்தப் பயிற்சி நடத்தப்படுவதாக இந்திய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, நாடுகடந்த பயங்கரவாதத்தை எதிர்த்தல், கூட்டு நடவடிக்கைகள் மூலம் போர்த் திறன்களில் நிபுணத்துவத்தை வளர்த்தல் போன்றவற்றிற்கும் இந்தப் பயிற்சிகள் உதவுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மித்ர சக்தி பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்தது.

’மித்ர சக்தி’ பயிற்சித் திட்டத்தின் முந்தைய பயிற்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றதால், இந்த முறை பயிற்சித் திட்டங்கள் ஆயுதப் பயன்பாட்டு முறையிலிருந்து இருமுனை சேவை முறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பொதுவான அச்சுறுத்தல்களிலிருந்து இரு நாடுகளையும் பாதுகாக்க உதவுமென்றுக் கூறப்படுகிறது. ’அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ மற்றும் ’பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி’ (சாகர்) போன்ற கொள்கைகள் மற்றும் திட்டங்களின்படி இந்த ராணுவப் பயிற்சி நடத்தப்பட்டதாக இந்திய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.

III-1024x683.jpeg V-1024x848.jpeg IV-1024x478.jpeg

https://thinakkural.lk/article/308312

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தனித்திரியாக திறந்துள்ளேன்.

Edited by ஏராளன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/8/2024 at 21:47, தமிழ் சிறி said:

3-1.jpg?resize=750,375&ssl=1

இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை!

மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியப் படையினர் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே பரஸ்பர நட்புறவை மென்மேலும் விருத்தி செய்யும் முக்கிய படிமுறையாக, வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகின்ற இந்த மித்ரசக்தி போர்ப் பயிற்சியானது, எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை மாதுரு ஓயா பிரதேசத்தில் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய இராணுவ வீரர்களே நேற்று மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.

இந்திய இராணுவ படையினரை காலாட்படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, மித்ர சக்தி இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தினேஷ் உடுகம, இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இவர்களை வரவேற்றனர்.

போர்ப் பயிற்சியில் இந்திய இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கேணல் ரவீந்திர அலவட் தலைமையில் 18 அதிகாரிகளும் 102 சிப்பாய்களும் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கஜபா படையணியின் 18 அதிகாரிகளும் 102 சிப்பாய்களும் பங்கேற்கவுள்ளனர்.

10 ஆவது தடவையாக இம்முறை இடம்பெறும் இந்த இராணுவப் பயிற்சிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இலங்கையிலும் இந்தியாவிலும் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2.jpg?resize=600,357&ssl=1

11.jpg?resize=600,389&ssl=1

flight-90.jpg?resize=600,364&ssl=1

fe-900.jpg?resize=600,401&ssl=1

https://athavannews.com/2024/1395546

Sandmya விற்கு கைகுடுக்க இளிக்கிற சிங்களவனையும் அதை ஆவென்று பார்த்துக்கொண்டிருக்கிற சிங்களவனையும் பார்க்க சிரிப்பாக உள்ளது. அது சரி இவ மட்டும் ஏன் தனிபொம்பிளையா வந்தவ?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ragaa said:

Sandmya விற்கு கைகுடுக்க இளிக்கிற சிங்களவனையும் அதை ஆவென்று பார்த்துக்கொண்டிருக்கிற சிங்களவனையும் பார்க்க சிரிப்பாக உள்ளது. அது சரி இவ மட்டும் ஏன் தனிபொம்பிளையா வந்தவ?

இவ… இந்திய இராணுவத்தின் மகளிர் அணித் தலைவியாக இருக்குமோ… 😂 🤣

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.