Jump to content

சுமந்திரன் உள்ளிட்டவா்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பாா்கள் – சுரேஸ்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

suresh.jpg?resize=750,375

சுமந்திரன் உள்ளிட்டவா்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பாா்கள் – சுரேஸ்!

சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலா் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பொது வேட்பாளரை எதிர்ப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவர் மேலும் தெரிக்கையில்,

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழரசுக்கட்சியில் மிகப் பெரும்பாலானவர்கள் ஆதரவாக இருக்கின்றாரகள்.

சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற ஒரு சிலரைத் தவிர கட்சியின் ஏனைய மேல் மட்டங்களும் சரி, ஏனைய கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களும் சரி பொது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறிதரனும் பொது வேட்பாளரை வாழ்த்தியிருக்கிறார். ஏற்கனவே அதற்கான கூட்டங்களும்  கிளிநொச்சியில் கூடப்பட்டிருக்கிறது.

அதேபோல தலைவராக இருக்கின்ற சேனாதிராஜாவும் இதனை வரவேற்றிருக்கின்றார். ஆகவே தமிழரசுக் கட்சியினுடைய பெரும்பான்மையானோர் இதனை ஆதரித்து வரவேற்றிருக்கிறார்கள்.

ஒரு சிலர் தங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக இவ்வாறு எதிர்க்கின்றனர்.

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக  முடிவு எடுப்பார்களாக இருந்தால் அது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான முடிவாகத்தான் இருக்கும்.

தமிழ்ப் பொது வேட்பாளளை ஆதரிக்கும் வகையில் தமிழ் தேசியக் கட்சிகளும்இ சிவில் அமைப்புக்களுமாக ஒன்றாக இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள்.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்காமல் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை  விளக்கும் வகையிலும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களிப்பதன் ஊடாகவுமே தென்னிலங்கையின் வேட்பாளா்களுக்குத் தெளிவுபடுத்த முடியும்.

எங்களுக்கு இருக்கக் கூடிய ஜனநாயக தளம் என்பது இந்த ஜனாதிபதி தேர்தேலேயாகும். அந்த களத்தை பாவித்து ஒட்டுமொத்த வட கிழக்கு தமிழா்களும் இணைந்து இந்த செய்தியை சொல்ல விரும்புகின்றோம்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும்  தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1396876

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலரே பொது வேட்பாளரை எதிர்க்கின்றனர் - சுரேஸ் பிரேமச்சந்திரன்

Published By: DIGITAL DESK 7   23 AUG, 2024 | 04:46 PM

image
 

சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலரே பொது வேட்பாளரை எதிர்க்கின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிக்கையில்,

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழரசுக்கட்சியில் மிகப் பெரும்பாலானவர்கள் ஆதரவாக இருக்கின்றார்கள். 

சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற ஒரு சிலரைத் தவிர கட்சியின் ஏனைய மேல் மட்டங்களும் சரி, ஏனைய கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களும் சரி பொது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

அது மாத்திரமல்ல, அவர்கள் களத்தில் இறங்கி பணிபுரிவதற்கும் தயாராக இருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சியினுடைய இளைஞர் அணியைச் சேர்ந்த பலரை சந்தித்து நான் பேசியிருக்கின்றேன்.

இதனை முன்னெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். கிளிநொச்சியைச் சேர்ந்த சிறிதரனும் பொது வேட்பாளரை வாழ்த்தியிருக்கிறார். ஏற்கனவே அதற்கான கூட்டங்களும் - கிளிநொச்சியில் கூடப்பட்டிருக்கிறது.

அதேபோல தலைவராக இருக்கின்ற சேனாதிராஜாவும் இதனை வரவேற்றிருக்கின்றார். ஆகவே தமிழரசுக் கட்சியினுடைய பெரும்பான்மையானோர் இதனை ஆதரித்து வரவேற்றிருக்கிறார்கள்.

ஒரு சிலர் தங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக இவ்வாறு எதிர்க்கின்றனர். குறிப்பாக சொல்லப் போனால், இலங்கை அரசாங்கம் அங்கு அபிவிருத்திக்காக தனக்கு கொடுத்ததாக சாணக்கியன் கூறியிருக்கின்றார்.

ஆகவே, வாங்கிய பணத்துக்கு பேச வேண்டும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்ப காண வேண்டும் என அவர்கள் யோசித்தால், அதற்காக அவர்கள் சில நல்ல முடிவுகளை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

கடைசி நேரத்தில் அவர்கள் என்ற முடிவு எடுப்பார்களோ என்று எனக்கு தெரியாது. நிச்சயமாக தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக இவர்கள் ஆதரவு முடிவு எடுப்பார்களாக இருந்தால் அது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான முடிவாகத்தான் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

தமிழ்ப் பொது வேட்பாளளை ஆதரிக்கும் வகையில் தமிழ் தேசியக் கட்சிகளும், சிவில் அமைப்புக்களுமாக ஒன்றாக இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள்.

ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட எவரும் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக எந்தவிதமான தீர்வுகளும் இல்லாத காலகட்டத்தில், ஏற்கனவே பல கட்சிகளுக்கு வாக்களித்தும் ஏமாற்றப்பட்டிருக்கும் சூழ்நிலையில், தொடர்ந்தும் அவர்களுக்கு வாக்களிப்பதன் ஊடாக எதையும் சாதிக்க முடியாது என்ற அடிப்படையில் தமிழ் மக்களினுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் முகமாகவும், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்காமல் நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை அவர்களுக்கு விளக்கும் வகையிலும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களிப்பதன் ஊடாக அவர்களுக்கு தெளிவுபடுத்த முடியும்.

எங்களுக்கு இருக்கக் கூடிய ஜனநாயக தளம் என்பது இந்த ஜனாதிபதி தேர்தேலேயாகும். அந்த களத்தை பாவித்து ஒட்டுமொத்த வட கிழக்கு தமிழ்களும் இணைந்து இந்த செய்தியை சொல்ல விரும்புகின்றோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/191796

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

 

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்காமல் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை  விளக்கும் வகையிலும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களிப்பதன் ஊடாகவுமே தென்னிலங்கையின் வேட்பாளா்களுக்குத் தெளிவுபடுத்த முடியும்.

 

https://athavannews.com/2024/1396876

தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினை எப்படி தீராது என தெளிவாகச் சொல்லியிருக்கலாம். 

இந்தியா மற்றும் ஐ.எம்.எப், உட்பட இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் எவையும் பொருளாதார மற்றும் கடனுதவிகள் வழங்குவதற்கு தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு முன்வைக்கப்படல் வேண்டும் என்ற முன் நிபந்தனை எதனையும் முன் வைக்கவில்லை. அப்படி, வைக்க கூடிய அழுத்தங்களைத் தானும் தமிழ் தரப்பால் முன் வைக்க கூடியளவுக்கு அரசியல் மற்றும் பொருளாதார பலமும் இல்லை.

சமகால நிகழ்வுகளின் / நிலமைகளின் அடிப்படையில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு போதும் முடிவுகள் எடுப்பதில்லை. உண்மையான கோமாளிகளின் கூடாரம் இது.

Quote

எங்களுக்கு இருக்கக் கூடிய ஜனநாயக தளம் என்பது இந்த ஜனாதிபதி தேர்தேலேயாகும். அந்த களத்தை பாவித்து ஒட்டுமொத்த வட கிழக்கு தமிழா்களும் இணைந்து இந்த செய்தியை சொல்ல விரும்புகின்றோம்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும்  தெரிவித்தார்.

சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையக தமிழர்களின் வாக்குகளின் மூலம், தென்னிலங்கை வேட்பாளர் ஒருவர் சனாதிபதியாகி செப் 21 இன் பின் பதவியேற்பார்.  அப்படி ஏற்ற பின், இவர்கள் சொல்லும் இந்த 'செய்தி' யை ஏறெடுத்து பார்க்கும் தேவை கூட அவர்களுக்கு ஏற்படாது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் உங்கள் எல்லாருக்கும் சேர்த்து சங்கூத ரெடியா இருக்கிறார்கள் பிரேமச்சந்திரன் சார்!  ஈழத்தமிழர் வரலாற்றில் நீங்கள் செய்வது மிகவும் உன்னதமான காட்டிக்கொடுப்பாக இது இருக்கும்!

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இலங்கை அரசாங்கம் அங்கு அபிவிருத்திக்காக தனக்கு கொடுத்ததாக சாணக்கியன் கூறியிருக்கின்றார்.

ஆகவே, வாங்கிய பணத்துக்கு பேச வேண்டும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

12.10.2013இல் வந்த கருத்துப்படம்

large.IMG_6941.jpeg.3b0be177204e4145481f

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் யாருக்கு கழுவுவது என்கிற போட்டியில் மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரன் வழமைபோன்று இந்தியாவுக்குக் கழுவுகிறார். 

அம்புட்டுதே. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.