Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் குடியேற முடியாது: கனேடிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு

candapriminster.jpg

கனடாவுக்குக் குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

கனடாவில் குறைந்த வருமானம் கொண்ட வேலைகளுக்காக தற்காலிகமாக குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால், கனேடியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எனவே கனேடிய நாட்டவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்றைய தினம் அறிவித்தார்.

தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்பவும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்கள் வேலைக்கு வருவார்கள் என்பதாலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தின் கீழ் அதிகமானோர் அங்கு தற்காலிகமாக குடியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் இதன்மூலம் கடந்த ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்து, வீட்டு வசதி மற்றும் எனைய சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்ற நோக்கத்தில் அந்த திட்டத்தில் திருத்தம் செய்து குடிபெயர்வோரை தடுக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது.

இதைத்தவிர்த்து நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையையும் குறிக்க கனேடிய அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

https://akkinikkunchu.com/?p=289463

கண்கெட்ட பின்னே சூரியனை வணங்குவது என்பது இது தான். ஜஸ்ரின் தன் நாட்டு மக்களையும் ஏமாற்றி, இவர்களை நம்பி கனடாவுக்கு படிக்க வந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்களையும் ஏமாற்றி, அடுத்த தேர்தலில் ஏற்படப் போகும் தோல்வியை தவிர்க்க இந்த முடிவை எடுத்து உள்ளார்.

அண்மைய மாற்றங்கள் மற்றும், தற்காலிக தொழில் அனுமதி பெறுவதற்கான கட்டுப்பாடுகள், நிரந்தர வதிவிட உரிமை பெறுவதில் ஏற்படுத்தி உள்ள புதிய கடுமையான வழிமுறைகளால் கிட்டத்தட்ட 70,000 சர்வதேச மாணவர்கள் மீண்டும் தம் நாட்டுக்கே திரும்பிப் போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இதற்கு எதிராக PEI,  பிரம்டன் போன்ற பகுதிகளில் சர்வதேச மாணவர்களால், முக்கியமாக இந்திய மாணவர்களால், அதிலும் குறிப்பாக சீக்கிய மாணவர்களால் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அதாவது தாம் படிக்க வந்த பின், மீண்டும் தாயகம் போக விருப்பம் இல்லாமல், இங்கேயே தங்கி விட அவர்களில் பெரும்பாலானோர் விரும்புவதால் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. தாம் பல்லாயிரக்கணக்கான டொலர்கள் செலவழித்து இங்கு வந்தமை, வெறுமனே படிக்கமட்டும் அல்ல, இங்கேயே தங்கி தம் எதிர்காலத்தை கனடிய மண்ணில் நிலை நிறுத்தவே என்று இவர்கள் சொல்கின்றனர். இந்த கனவு இனி மெய்ப்படக் கூடிய சாத்தியங்களை இந்த புதிய கட்டுப்பாடுகள் மட்டுப்படுத்த போகின்றன என அஞ்சுகின்றனர்.

தனிப்பட்ட ரீதியில் நான் இந்த கடுமையான கட்டுப்பாடுகளை வரவேற்கின்றேன். சடுதியாக பல்லாயிரக்கணக்கானோரை உள்வாங்கி, அவர்களுக்கான அடிப்படை வசதிகளை, குடியிருப்பு வசதிகளை, சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கக் கூடிய கட்டுமானம் (infrastructure) இல்லாமல், இவ்வாறு அனுமதிப்பது, பல பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளது. முக்கியமாக, வீட்டு வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளில் கடும் பற்றாக்குறையை தோற்றுவித்தது மட்டுமல்லாமல், கும்பலாய் வந்து இறங்கியவர்களில் பலர் கிரிமினல் குற்றங்களிலும் ஈடுபடுவதால் இவர்களுக்கு எதிரான மனநிலை குடியேற்றவாசிகளுக்கு எதிரான மனநிலையாக மாறி வருகின்றது. 

இந்த கடுமையான கட்டுப்பாடுகளை வரவேற்கின்ற அதே நேரம், உண்மையான தகமைகளுடன் , பல்லாயிரக்கணகான டொலர்களை செலவழித்து வந்த நேர்மையான, எதிர்காலத்தில் கனடாவுக்கு ஆக்கபூர்வமாக பங்களிப்பு செய்யக் கூடியவர்களும் பாதிப்படையப் போவது வருத்தத்தையும் அளிக்கின்றது.

மேலும் தகவல்களை அறிய:

https://toronto.citynews.ca/2024/08/26/canada-international-students-deportation-protests/

https://www.cbc.ca/news/politics/trudeau-crackdown-temporary-foreign-workers-1.7304819

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு பணியாளர்களை குறைக்க திட்டம் – இந்தியர்களை எப்படி பாதிக்கும்?

கனடா, இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
13 நிமிடங்களுக்கு முன்னர்

கனடாவிற்குள் அனுமதிக்கப்படும் குறைவான ஊதியம் பெறும், தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள், மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடா, வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகையைச் சமாளிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதால், வீட்டு வசதி, சுகாதார போன்ற பொதுச் சேவைகளில் அந்நாடு சவால்களைச் சந்திப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு கனடாவின் மக்கள்தொகை வளர்ச்சியில் சுமார் 97% குடியேற்றம் பங்கு வகித்ததாக கனேடிய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கனடாவில் பயின்று அங்கு ஐ.டி., துறையில் வேலை பார்த்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்குமார் பிபிசி தமிழிடம் பேசியபோது, “இங்கு இப்போது தொழிலாளர் சந்தை மிக மோசமான நிலையில் இருக்கிறது. சராசரியான சம்பளத்தில் ஒரு சாதாரண வேலை வேண்டுமென்றாலே அதற்கு அதிகமான சிபாரிசுகள் தேவைப்படுகின்றன,” என்கிறார்.

மேலும் ,"வெளிநாட்டினர் மட்டுமின்றி கனேடியர்களும் வேலை கிடைப்பதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வேலையின்மை விகிதம் இங்கு அதிகமாக உள்ளது. இதற்கு இங்குள்ள கனேடியர்கள் குடியேற்றங்களைக் காரணமாகக் கூறுகின்றனர்.

"என்னதான் குடியேற்றப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கனேடிய மக்களின் ஆதரவு அரசுக்கு முக்கியம். ஆகையால் இந்த நிலைமையைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயம் ட்ரூடோ அரசுக்கு ஏற்பட்டுள்ளது,” என்று கூறினார்.

கனடா, இந்தியா

பட மூலாதாரம்,X

கனடாவில் அதிகரிக்கும் வேலையின்மை

ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது அரசாங்கமும் சேவைகள் அல்லது வீட்டு வசதியை மேம்படுத்தாமல் குடியேற்றத்தை அதிகரிப்பதாக விமர்சிக்கப்பட்டனர்.

அதேநேரத்தில், கனடாவின் வேலையின்மை விகிதம் கடந்த இரண்டு மாதங்களில் 6.4% அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 14 லட்சம் மக்கள் வேலையில்லாமல் உள்ளனர்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கனடா பிரதமர் ட்ரூடோ, தொழிலாளர் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகத் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் திட்டத்தை மாற்றியமைப்பதாகக் கூறினார்.

“ஒரு நல்ல வேலையைக் கண்டுபிடிக்கப் போராடும் கனேடியர்களுக்கு இது நியாயம் செய்யவில்லை. தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் இது நியாயம் செய்யவில்லை. அவர்களில் சிலர் தவறாக நடத்தப்பட்டு, சுரண்டப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

கனடா, இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோவிட் காலகட்டத்தில் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டத்தின்கீழ் அதிகளவிலான பணியாளர்களை கனடா அனுமதித்தது

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டம்

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டம் என்பது கனடாவில் இருக்கும் முதலாளிகள் தங்களுக்குத் தேவையான ஊழியர்களை வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு அமர்த்துவதற்கான ஒரு திட்டம்.

இதுகுறித்து விளக்கிய கனடிய குடியேற்றம் தொடர்பான CANext நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் குடியேற்றங்கள் தொடர்பான வழக்கறிஞருமான நடராஜன் ஸ்ரீராம், “ஓர் உணவகத்தின் முதலாளிக்கு சமையல் வல்லுநர்கள் ஐந்து பேர் தேவையெனில், அதற்கான ஒப்புதல்களைப் பெற்று அவர் வெளிநாடுகளில் இருந்து அவர்களைப் பணிக்கு அமர்த்த முடியும். அதற்கு இந்தத் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டம் உதவுகிறது,” என்கிறார்.

இந்தத் திட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் வெளிநாட்டு மாணவர்களை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று கூறும் நடராஜன், “கனடாவில் தற்போது நிகழும் வேலையின்மை பிரச்னை, சுகாதாரம் மற்றும் வீட்டு வசதியில் நிலவும் போதாமை காரணமாக இந்த முடிவு அவசியமாகிறது,” என்று கூறுகிறார்.

கோவிட் காலகட்டத்தில் இந்தத் திட்டத்தின்கீழ் அதிகளவிலான பணியாளர்களை கனடா அனுமதித்தது. ஆனால், அதன் விளைவாக ஏற்பட்ட சமூகச் சமநிலையின்மையின் விளைவுகளை அந்நாடு தற்போது எதிர்கொண்டு வருவதால் இந்த மாற்றம் அவசியமாவதாகவும் அவர் விவரித்தார்.

கனடா, இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சுகாதாரம், கட்டுமானம், உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கனடா செல்லும் இந்தியர்களை இது எப்படி பாதிக்கும்?

இந்தியாவில் இருந்து கனடாவுக்கு செல்பவர்கள் பல்வேறு திட்டங்களின்கீழ் செல்கிறார்கள். கல்வி பயில்வதற்காக, நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக, ஒரு குறிப்பிட்ட வேலைக்காக என்று பல்வேறு திட்டங்கள் அதற்காக அங்கு உள்ளதாகக் கூறுகிறார் நடராஜன் ஸ்ரீராம்.

அவற்றில், இந்தத் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டத்தின் கீழ் வருபவர்கள், “எந்த வேலைக்காக வருகிறார்களோ அந்த வேலை இல்லை என்ற நிலை ஏற்பட்டால், அடுத்த ஓரிரு மாதங்களில் தங்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்,” என்கிறார்.

ஆகையால், அதைச் சாதகமாக எடுத்துக்கொள்ளும் முதலாளிகளால், இந்தத் திட்டத்தின் கீழ் வருவோர் பெரியளவிலான சுரண்டலை எதிர்கொள்வதாகவும் பல்வேறு கொடுமைகளை அனுபவிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த மாற்றம் அத்தகைய கொடுமைகளையும் சுரண்டல்களையும் தடுக்க வழி செய்யும் என்றும் நடராஜன் கருதுகிறார்.

இந்தத் திட்டத்தின்கீழ் கனடாவுக்கு வர முயலும் இந்தியர்களில் பெரும்பாலானோர் அதற்காகப் பணம் கொடுத்து ஏமாறுவது அதிகம் நடப்பதாகக் கூறும் அவர், அத்தகைய நடவடிக்கைகள் இனி குறையும் என்றும் நம்புகிறார்.

இதைத் தாண்டி, கல்விக்காகக் கனடா செல்லும் இந்தியர்களை இது எவ்விதத்திலும் பாதிக்காது என்கிறார் அவர். அதேவேளையில், நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்காக வருவோரின் எண்ணிக்கையையும் கனடா குறைத்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், அதற்காக கனடா வர முயல்வோரிலும் குறைந்த ஊதியம் பெறும், திறன் குறைந்த பணியாளர்களையே இது பாதிக்கும் என்றும் கூறினார்.

“இந்த மாற்றம் திறனற்ற, குறைந்த ஊதியம் பெறும் வேலைகளுக்காக வருவோரின் எண்ணிக்கையைத்தான் குறைத்துள்ளது,” என்கிறார்.

அதேவேளையில், சுகாதாரம், கட்டுமானம், உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்தத் துறைகளில் வேலை செய்ய கனடா வரும் இந்தியர்களை இது பாதிக்காது என்றும் கூறினார் குடியேற்றங்கள் தொடர்பான வழக்கறிஞர் நடராஜன் ஸ்ரீராம்.

 
கனடா, இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா செல்ல முயல்பவர்கள் என்ன செய்யவேண்டும்?

உணவுப் பாதுகாப்பு, விவசாய வேலைகள், கட்டுமானம், சுகாதாரம் ஆகியவை தவிர்த்து, வேலையின்மை விகிதம் 6% அல்லது அதைவிட அதிகமாக இருக்கும் பகுதிகளில் இந்த மாற்றங்கள் பொருந்தும்.

கனடாவில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, “அங்கு வேலையின்மை பிரச்னை இருக்கும் மாகாணங்கள் தவிர்த்து இதற்கான தேவை இருக்கும் வேறு மாகாணங்களைக் கண்டறிந்து அங்கு முயற்சி செய்யலாம்” என்று கூறினர்.

அதை ஆமோதிக்கும் வகையில் பேசிய நடராஜன் ஸ்ரீராம் “கனடாவில் எந்தெந்த பகுதிகளில் 6% அல்லது அதற்கும் அதிகமாக வேலையின்மை பிரச்னை நிலவுகிறதோ, அங்கு மட்டுமே இந்த மாற்றங்கள் பொருந்தும்,” என்று விளக்கினார்.

ஒட்டுமொத்தமாக, இந்தத் திட்டம் குறைந்த ஊதியம் பெறும் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். ஆனால், ஏற்கெனவே கனடாவில் வேலை செய்து கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பணியாளர்களை இது பாதிக்காது.

அதேவேளையில், அவர்களுக்கான கால அவகாசம் முடியும்போது, அது நீட்டிக்கப்படுவதில் இந்தப் புதிய மாற்றம் கருத்தில் கொள்ளப்படும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த மாற்றங்கள் செப்டம்பர் 26 முதல் அமலுக்கு வரும்.

மேலும், கனடாவில் இனி வரும் நாட்களில் இத்தகைய மாற்றங்களை அதிகமாக எதிர்பார்க்கலாம் என்று கூறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்குமார், “கனடா வர முயல்பவர்களுக்கு முன்பு போல் எளிதாக இருக்காது,” என்றார்.

அதேவேளையில், அத்தகைய மாற்றங்கள் கல்விக்காக கனடா வருபவர்களை எந்த வகையிலும் பாதிக்காது என்றும், நிரந்தர குடியுரிமை பெற முயல்வோருக்குத்தான் சவால்கள் இருக்கும் என்றும் தான் கருதுவதாக ராம்குமார் தெரிவித்தார்.

 
கனடா, இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சமீப ஆண்டுகளில் விவசாயம் முதல் கட்டுமானம் வரையிலான தொழில்களில் முதலாளிகளால் இந்தத் திட்டத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது

'நவீன அடிமைத்தனம்' என்று விமர்சித்த ஐ.நா. அறிக்கை

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டம் கனடாவில் உள்ள முதலாளிகள் தகுதியான கனேடியர்கள் கிடைக்காதபோது, தற்காலிகப் பணியிடங்களை நிரப்ப வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கிறது.

இந்தத் திட்டம் தொழிலாளர் நல வழக்கறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது. அதோடு சமீபத்தில் ஐ.நா., இந்த மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இது 'தற்கால அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதாக' கூறியது.

பிரிட்டனில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் சட்டப் பேராசிரியரான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா, “துஷ்பிரயோகம், தொழிலாளர்கள் குறைவான ஊதியம் பெறுவது போன்ற புகார்கள்,” தனக்கு வந்ததாகக் கூறினார்.

சமீப ஆண்டுகளில் விவசாயம் முதல் கட்டுமானம் வரையிலான தொழில்களில் முதலாளிகளால் இந்தத் திட்டத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு தொழிலாளர் பற்றாக்குறை உள்ள தொழில்களுக்கு உதவும் திட்டத்தின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது இந்த நிலை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான கனேடிய அமைப்பின்படி, 2023-இல், 183,820 தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் அனுமதிகள் வழங்கப்பட்டன. இது கடந்த 2019-இல் வழங்கப்பட்டதைவிட 88% அதிகம்.

கடந்த திங்கள் கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், 'கனடாவில் திறமையான தொழிலாளர்களைப் பணியமர்த்துவதைத் தவிர்த்து, சுரண்டுவதற்காக' இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தியதாக வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான கனேடிய அமைப்பு முதலாளிகளை விமர்சித்தது.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கனடா சில புதிய குடிவரவு சட்டங்களை இன்று அறிவிக்க உள்ளது.

https://immigrationnewscanada.ca/marc-miller-announcement-september-18/

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு- பிரதமர் அதிரடி நடவடிக்கை

கனடாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு- பிரதமர் அதிரடி நடவடிக்கை

ஒட்டாவா:

வடஅமெரிக்க நாடான கனடா சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்களை நம்பி தான் இந்நாட்டின் பொருளதார வளர்ச்சி உள்ளது. ஆனால் சமீப காலமாக இந்திய வம்சாவளியினர் என்ற போர்வையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அங்கிருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதில் இருந்து இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக எம்.பி.க்களும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என கெடுவும் விதித்துள்ளனர். இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கனடாவில் குடியேறும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க போவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு கனடாவில் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க போகிறோம். இது தற்காலிகமானது தான் என தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த ஆண்டு 4 லட்சத்து 85 ஆயிரமாக இருக்கும் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டு 3 லட்சத்து 95 ஆயிரமாகவும், 2026-ம் ஆண்டு 3 லட்சத்து 80 ஆயிரமாகவும் குறைக்கப்படும். 2027-ம் ஆண்டு இது 3 லட்சத்து 65 ஆயிரமாக குறையும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

தொழிலாளர்கள் தேவையை நிவர்த்தி செய்யவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கும் முதல் நடவடிக்கை இதுவாகும். இதனை சிலர் விமர்சனம் செய்துள்ளனர். கனடா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட நாட்டில் உற்பத்தி நிலையானதாக இருக்கிறது. இதனை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் ஆட்களின் எண்ணிக்கை அவசியம். ஆனால் ட்ரூடோ அரசின் இந்த அறிவிப்பு கனடா பொருளாதாரத்தை பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

https://www.maalaimalar.com/news/world/nasa-astronaut-remains-at-hospital-after-returning-from-an-extended-stay-in-space-744177

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளங்கோ டிசேயின் முகநூல் பதிவு..

 

கனடா - இந்தியா உறவுகள் இப்போது மிக மோசமான நிலைமையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து குடிபுகும் மாணவர்கள் மீதொரு ஒவ்வாமை கனடிய பொதுச்சமூகத்தில் ஊடகங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு இரு நாட்டு உறவுகள் மேலும் மேலும் சிக்கலாகி  வந்தபடி இருக்கின்றன. 

கடந்த வாரம் கனடிய அரசு, இங்கிருக்கும் இந்திய தூதரலாயத்தில் இருந்து ஆறுக்கு மேற்பட்டவர்களை வெளியேற்றியிருந்தது.
இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இந்தியாவின் உளவுநிறுவனம் பின்னால் நின்று காலிஸ்தான் ஆதரவுள்ள இந்திய வம்சாவளி கனடியர் ஒருவரைப் பொதுவெளியில் சுட்டுக் கொன்றமையே காரணம். இவ்வாறான காலிஸ்தான் ஆதரவுள்ள இன்னொருவரை அமெரிக்காவில் கொல்ல முயன்றபோது இந்திய உளவுத்துறை வசமாக மாட்டுப்பட்டும் இருந்தது.

அமெரிக்காவோ, கனடாவோ தனது குடிமக்கள் மீது வேறு நாட்டில் எவரும்  கைவைத்தால் கூடஅவர்களைக் காப்பாற்ற - அது ஒருவகையில் அவர்களின் தன்மானத்துக்கான சவால் என்பதால்- கடைசி எல்லைவரை செல்லக்கூடியது. அப்படி இருப்பவர்களின் நாட்டில் இன்னொரு அரசு வாடகைக் கொலைகாரர்களை வைத்துச் செய்யும் நடவடிக்கைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்பது ஓர் எளிய பாடம்.

இந்தக் கொலைகள்/கொலை முயற்சிகளுக்கு முன்னரும் ஒரு கொலை நடந்திருந்தது. எயர் இந்தியா விமானக் குண்டு வெடிப்பில் (காலிஸ்தான்/பொற்கோயில் பிரச்சினையில் 80களில் நடந்த சம்பவம்) குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு பஞ்சாபியர் பட்டப்பகலில் வைத்து வன்கூவரில் கொலைசெய்யப்பட்டார். இந்தளவு வயதானவரை (80களை அண்டியவர்) கொல்லப்பட்டபோதே இது சும்மா செய்யப்பட்ட கொலையல்ல, கடந்தகால நிகழ்வுகளின் பழிவாங்கலாக இருக்குமென நண்பரொருவரிடம் சொல்லியிருந்தேன். இப்போது அந்தக் கொலைவழக்கும் கனடிய அரசால் தூசி தட்டப்பட்டு, இரு வாடகைக் கொலையாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எனவே அந்தக் கொலையின் பின்னணியார் யார் இருந்தார்கள் என்கின்ற விபரங்களும் விரைவில் வெளியிடப்படலாம்.

கனடிய அரசு, ஒரு வணக்கஸ்தலத்தின் முன் நடந்த இந்தக் கொலையை பற்றி இந்திய அரசிடம் விளக்கம் கோரியது. இந்திய அரசோ விளக்கம் கொடுப்பதை விடுத்து கடந்த வருடம் இந்திய தூதுராலயத்தில் இருந்த கனடிய அதிகாரிகள் பலரை வெளியேற்றியது. அதுமட்டுமில்லாது அப்போது கனடியர்களுக்கு  விஸா கொடுப்பதையும் இந்திய அரசு தடுத்து நிறுத்தியது. 

அப்போதும் கனடிய அரசு நிதானமாகவே இந்த விடயத்தைக் கையாண்டது. பதில் நடவடிக்கையாக எந்த எதிர்விடயங்களையும் செய்யவில்லை. இதற்கிடையில் இந்திய உளவுத்துறையின் இரத்தக்கறை இருப்பதற்கான ஆதாரங்களைப் பார்க்க கனடிய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைத்தது. 

அந்தவகையில் கனடாவில் மூன்றாவது பலமான தரப்பாக இருக்கும் (ஒரளவு இடதுசார்புள்ள  நான் ஆதரிக்கும் புதிய ஜனநாயக் கட்சி) தலைவரான ஜஸ்மீட் சிங்கும் இந்தியாவின் நுழையீடு கனடாவில் இருப்பதை, ஆதாரங்களைப் பார்த்தவர் என்றவகையில் பொதுவெளியில் அறிவித்தார்.

கனடிய அரசு நிறைய அவகாசம் கொடுத்தபின்னும், இந்திய அரசு இந்தக் கொலைக்கான விளக்கத்தைக் கொடுக்காதபோது இப்போது கனடிய அரசு இங்கிருக்கும் இந்திய தூதரலாயத்தில் இருந்து 6இற்கு மேற்பட்டவர்களை வெளியேற்றியிருக்கின்றது.

இந்த விடயம் ஒருபுறம் போய்க் கொண்டிருக்க, குடிவரவாளர்களாக வரும் இந்தியர் (மாணவர்கள்) மீது ஒவ்வாமையும், இனத்துவேஷமும் கனடாவில் இப்போது அதிகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. கனடா, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்பவை 'வெள்ளையினப் பெருமை' உள்ள நாடுகள் என்பதை நாம் நன்கு அறிவோம். இனவாதம் வெளிப்படையாகத் தெரியாது இந்தநாடுகள் தம்மை மறைத்துக் கொண்டிருந்தாலும், இனத்துவேஷம் உள்ளோடியிருப்பதை அகதிகளாக/ குடிவரவாளர்களாக வந்த நாம் அனைவரும் அனுபவித்திருப்போம். வருகின்ற சில இந்திய மாணவர்களும் தம்மை ஏற்கனவே இருக்கின்ற சமூகத்தோடு கட்டமைக்காமல் 'இந்தியப் பெருமை'களில்  சிக்கிச் சீரழிந்து 'நுணலும் கெடும் தன் வாயால்' என்கின்றமாதிரி இங்கே ஆகிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் ஒரளவு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

நமது ஈழத்தவர்கள் இலங்கையிலிருந்த சாதி உள்ளிட்ட விடயங்களை அப்படியே அள்ளிக்கொண்டு வந்தமாதிரி இந்தியர்களும் எண்ணற்ற விடயங்களை அப்படியே கொண்டு வந்திருக்கின்றனர். ஒருவர் தனது நம்பிக்கைகள்/விருப்புக்களை தனிப்பட்டு வைத்திருப்பதற்கும், அதைப் பொதுவெளியில் பகட்டாக காட்டுவதற்கும் வித்தியாசங்களுண்டு. இப்போது நாமிருக்கும் மாகாணத்தில் இந்தியர்கள் செறிவாக வாழும் சில நகரங்களில் இந்தியர்கள் செய்யும் 'அழிச்சாட்டியங்களை' படம்பிடித்து பொதுவெளியில் பலர் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். உண்மையில் இவை எல்லாச் சமூகங்களும் கனடிய நீரோட்டத்தில் கலக்க முன்னர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு போகும்போது செல்கின்ற பாதைதான். 

ஆனால் இப்போது இந்திய மாணவர்கள் மீது எல்லோரும் கவனம் குவித்திருப்பதால் அது பெரும் விடயங்களாக ஊடகங்களினால் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன. இதனால் இப்போது இனவாதம் சம்பந்தமான நிகழ்வுகள் பொலிஸ் நிலையங்களில் நிறைய பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த மாணவர்களை பொதுப்புத்தியோடு வெறுக்கின்ற நம்மவர்க்கும், இது எல்லாமே இறுதியில் எமது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரமான வாழ்வையும் கேள்விக்குட்படுத்தும் என்பதை அறிந்தார்களில்லை. நாமும் அதே 'மண்ணிறமானவர்கள்', நாமும் இப்படி ஒருகாலத்தில் அகதிகளாக வந்தவர்கள் என்பதை மறந்துவிடுகின்றோம். இந்திய மாணவர்களும், தம்மைப் போல அதிக அளவில் சர்வதேச மாணவர்களாக வரும் சீன மாணவர்களைப் போன்று, அவர்கள் எவ்வாறு 'அலட்டிக்கொள்ளாது/படங்காட்டாது' பொதுச்சமூகத்தில் எவ்வாறு எளிதில் இணைந்துகொள்கின்றார்கள் என்கின்ற பாடங்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் தேவையற்ற பல பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

இவையெல்லாவற்றின் நீட்சியாக கனடிய அரசு இப்போது குடிவரவாளர்கள்/சர்வதேச மாணவர்கள் கனடாவில் குடியுரிமை/நிரந்தர வதிவிடம் பெறும் சட்டங்களை மிக இறுக்கமாகக் கொண்டுவரத் தொடங்கியுள்ளது. 

கனடா/அமெரிக்கா/இங்கிலாந்து/ஆஸ்திரேலியா ஒரே நேர்கோட்டில் தமது முடிவுகளை எடுக்கக் கூடியவை. இவ்வாறு சர்வதேச மாணவர்களாக வந்தவர்களை இங்கிலாந்தில் தங்கவிடாது சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து தனது சட்டங்களை இறுக்கியதை நாம் ஏலவே அறிவோம். இப்போது கனடாவும் அதைப் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றது. 

அதுமட்டுமின்றி இப்போது கனடிய லிபரல் அரசு கனடாவில் ஒவ்வொரு வருடமும் ஏற்றுக்கொள்ளும் குடிவரவாளர்களின் எண்ணிக்கையையும் குறைப்பதாக அறிவித்திருக்கின்றது.

குடிவரவாளர்களின்  பெரும்பான்மை ஆதரவால் அரசமைத்த லிபரல் அரசே இவ்வாறு குடிவரவாளர்க்கான அனுமதி/சட்டங்களை இறுக்கின்றபோது, அடுத்த வருடம் நடைபெற்றவுள்ள தேர்தலில் வெல்லச் சாத்தியமுள்ள வலதுசாரியான பழமைவாதக் கட்சி பெரும் மாற்றங்களை குடிவரவாளர்கள்/சர்வதேச மாணவர்களில் நிச்சயம் கொண்டுவரும். டிரம்ப் அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்தபோது, பல இந்தியர்கள் அங்கே வதிவிட அனுமதி மறுக்கப்பட்டு, கனடாவுக்கு எல்லை தாண்டியபோது கனடா அவர்களை ஏற்றுக்கொண்டது. இனி அமெரிக்காவிலும், கனடாவிலும் வலதுசாரி அரசுக்கள் வெல்லும் சாத்தியங்கள் இருக்கும்போது நம்மைப் போன்ற அகதிகள்/குடிவரவாளர்களே பெரும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கப் போகின்றது என்பதுதான் துயரமானது.

***********

  • கருத்துக்கள உறவுகள்

"வருகின்ற சில இந்திய மாணவர்களும் தம்மை ஏற்கனவே இருக்கின்ற சமூகத்தோடு கட்டமைக்காமல் 'இந்தியப் பெருமை'களில்  சிக்கிச் சீரழிந்து 'நுணலும் கெடும் தன் வாயால்' என்கின்றமாதிரி இங்கே ஆகிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் ஒரளவு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். "

ஏன் முழுமையாக ஒப்புக்கொண்டால் இனத்துவேசம் என்ற வலையை பாவித்து வேலைத்தளங்களில் இருந்து பொது இடங்களில் வரை இவர்களின் நடத்தைக்கு  உங்களால் காரணம் கட்பிக்க முடியாது என்பதாலா? அல்லது சக இந்தியர்களே இவர்களை வெறுக்கிறார்கள் என்ற உண்மையை முழுக்க புதைக்க இந்த கதையா?

இவர்கள் வெள்ளையர்கள் பெருமான்மையான நாடுகளில் மாத்திரமா இப்படி செய்கிறார்கள்? சிங்கப்பூரில் இந்திய உல்லாசப்பயணிகளின் நடத்தை எவ்வாறுள்ளது? பாலி (Bali), இந்தோனேசியாவில் என்ன செய்தார்கள்? அந்த நாட்டு  மக்களோடு கதையுங்கள். அவர்கள் இந்தியர்கள் தங்கள் ஹோட்டல்களில் வந்து தங்குவதை வெறுக்கிறார்கள். வெறுப்பவர்கள் மேலை நாட்டவர்கள் அல்லர். நான் இலங்கையர் என்று அறிந்ததும் உற்ற நண்பன் போல பழகுவார்கள். அவர்கள் இஸ்லாமிய சகோதரர்களாகள், நான் இந்து என்பதட்காக என்னை வேறுபடத்தவில்லை. மாறாக தங்களது வாகனத்தில் ஏத்தி பல இடங்களுக்கும் கொண்டு போவார்கள். வாகனத்துக்கு பணமும் வேண்டமாட்டார்கள். நாங்கள் உணவு, பொருட்கள் என்று அவர்களுக்கு வேண்டி உபசரிப்போம். அவர்களிடம் இருந்து பலவற்றை அறிந்துளோம். வெட்கப்படுகிறோம் (personally embarrased).

"இப்போது நாமிருக்கும் மாகாணத்தில் இந்தியர்கள் செறிவாக வாழும் சில நகரங்களில் இந்தியர்கள் செய்யும் 'அழிச்சாட்டியங்களை' படம்பிடித்து பொதுவெளியில் பலர் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். உண்மையில் இவை எல்லாச் சமூகங்களும் கனடிய நீரோட்டத்தில் கலக்க முன்னர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு போகும்போது செல்கின்ற பாதைதான். "

தவறு. முதலில் உலகில் ஓரி பில்லியனுக்கு மேல் சனத்தொகை உள்ள நாடுகள் 2. இந்த நாடுகளில் இருந்து வந்து குவிப்பவர்களின் எண்ணிக்கையும் அதனால் அதிகம். அதேசமயம் அதிக எண்ணிக்கை என்பதனால் அவர்கள் தங்கள் புலம்பெயர் நாடுகளில் மிக கூடுதலான அளவு காலத்தை அந்த சமூக பின்னலுக்குள் தான் செலவழிக்கிறார்கள். அந்த வலையை விட்டு பெரும்பான்மை  சமூகத்துடன் அவர்கள் தொடபு கொள்வது கூடுதலாக தொழில் மற்றும் பல்கலைக்கழகம் என்று அமைகிறது. பாடசாலைகள் கூட இவர்கள் நிறைந்து வாழும் பகுதி என்றால் அந்த கலாச்சார மாணவர்களையே கூடுதலாக கொண்டுள்ளது அவர்களது சமூக கலாச்சார இணைப்புகளும்  அப்படியே. தொழில் இடங்களிலும் அவர்கள் தங்கள் சமூகத்தில் இருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இதைவிட தொடர் புலம்பெயர்தல் (chain migration) இந்த சமூகங்களில் எண்ணிக்கை அடிப்படியில் மிக அதிகம். இதன் விளைவு தாய்நாடு கலாச்சாரம், பண்புகள், நடத்தைகள் மேலும் மேலும் வேரூன்றுகின்ற நிலைமை. எனவே இவர்கள் புலம்பெயர் நாட்டின் நீரோட்டத்தில் கலக்க முன்னர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு போகும் பாதை மிக நீண்டது. 

இந்தியர்கள் தங்கள் நாட்டை ஒரு வல்லரசு என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு ஏன் இடம்பெயருகிறார்கள்? ஒரு வல்லரசு என்று சொல்லிக்கொண்டு எதட்காக பிரஜாவுரிமைக்க 10-20 வருடம் வரிசையில் நிக்கிறார்கள்? எல்லாவற்றிக்கும் காலனித்துவ ஆடசியா காரணம்? காலனித்துவ ஆட்சியில் இருந்து இரண்டாம் உலகமாகயுத்தையும் கண்ட சிங்கப்பூர் எப்படி உயர்ந்தது? அதே ஆட்சியில் இருந்து விடுபட்ட ஸ்ரீலங்கா எப்படி சின்னாபின்னமானது? நாங்கள் எப்பவும் எங்களை பாதிக்கட்டவர்கள் என்ற மனநிலையில் (victim mentality) வைத்துக்கொண்டு எங்களை பின்னோக்கி கொண்டு செல்கிற பழக்க வழக்கங்களையும், அரசியல் சமூக கலாச்சார வழிமுறைகளையும் விடமாட்டோம் என்றால் எங்கள் எதிர்காலம் எப்படி மாறும்? நாங்கள் விட்டு வந்த நாடுகள் எப்படி மாறும்? நாங்கள் வந்து குடியிருக்கிற நாடுகள் எப்படி பயனடையும்? நாங்கள் புலம்பெயர்ந்த நாடும் நாங்கள் விட்டு வந்த நாடுகள் போலாகிவிடுமல்லவா ?  அதனால் எங்களது அடுத்த தலைமுறைக்கு நாங்கள் என்ன செய்துவிட்டு போகிறோம் 

 

 

  • கருத்துக்கள உறவுகள்+
22 minutes ago, saravanar said:

"வருகின்ற சில இந்திய மாணவர்களும் தம்மை ஏற்கனவே இருக்கின்ற சமூகத்தோடு கட்டமைக்காமல் 'இந்தியப் பெருமை'களில்  சிக்கிச் சீரழிந்து 'நுணலும் கெடும் தன் வாயால்' என்கின்றமாதிரி இங்கே ஆகிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் ஒரளவு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். "

ஏன் முழுமையாக ஒப்புக்கொண்டால் இனத்துவேசம் என்ற வலையை பாவித்து வேலைத்தளங்களில் இருந்து பொது இடங்களில் வரை இவர்களின் நடத்தைக்கு  உங்களால் காரணம் கட்பிக்க முடியாது என்பதாலா? அல்லது சக இந்தியர்களே இவர்களை வெறுக்கிறார்கள் என்ற உண்மையை முழுக்க புதைக்க இந்த கதையா?

இவர்கள் வெள்ளையர்கள் பெருமான்மையான நாடுகளில் மாத்திரமா இப்படி செய்கிறார்கள்? சிங்கப்பூரில் இந்திய உல்லாசப்பயணிகளின் நடத்தை எவ்வாறுள்ளது? பாலி (Bali), இந்தோனேசியாவில் என்ன செய்தார்கள்? அந்த நாட்டு  மக்களோடு கதையுங்கள். அவர்கள் இந்தியர்கள் தங்கள் ஹோட்டல்களில் வந்து தங்குவதை வெறுக்கிறார்கள். வெறுப்பவர்கள் மேலை நாட்டவர்கள் அல்லர். நான் இலங்கையர் என்று அறிந்ததும் உற்ற நண்பன் போல பழகுவார்கள். அவர்கள் இஸ்லாமிய சகோதரர்களாகள், நான் இந்து என்பதட்காக என்னை வேறுபடத்தவில்லை. மாறாக தங்களது வாகனத்தில் ஏத்தி பல இடங்களுக்கும் கொண்டு போவார்கள். வாகனத்துக்கு பணமும் வேண்டமாட்டார்கள். நாங்கள் உணவு, பொருட்கள் என்று அவர்களுக்கு வேண்டி உபசரிப்போம். அவர்களிடம் இருந்து பலவற்றை அறிந்துளோம். வெட்கப்படுகிறோம் (personally embarrased).

"இப்போது நாமிருக்கும் மாகாணத்தில் இந்தியர்கள் செறிவாக வாழும் சில நகரங்களில் இந்தியர்கள் செய்யும் 'அழிச்சாட்டியங்களை' படம்பிடித்து பொதுவெளியில் பலர் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். உண்மையில் இவை எல்லாச் சமூகங்களும் கனடிய நீரோட்டத்தில் கலக்க முன்னர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு போகும்போது செல்கின்ற பாதைதான். "

தவறு. முதலில் உலகில் ஓரி பில்லியனுக்கு மேல் சனத்தொகை உள்ள நாடுகள் 2. இந்த நாடுகளில் இருந்து வந்து குவிப்பவர்களின் எண்ணிக்கையும் அதனால் அதிகம். அதேசமயம் அதிக எண்ணிக்கை என்பதனால் அவர்கள் தங்கள் புலம்பெயர் நாடுகளில் மிக கூடுதலான அளவு காலத்தை அந்த சமூக பின்னலுக்குள் தான் செலவழிக்கிறார்கள். அந்த வலையை விட்டு பெரும்பான்மை  சமூகத்துடன் அவர்கள் தொடபு கொள்வது கூடுதலாக தொழில் மற்றும் பல்கலைக்கழகம் என்று அமைகிறது. பாடசாலைகள் கூட இவர்கள் நிறைந்து வாழும் பகுதி என்றால் அந்த கலாச்சார மாணவர்களையே கூடுதலாக கொண்டுள்ளது அவர்களது சமூக கலாச்சார இணைப்புகளும்  அப்படியே. தொழில் இடங்களிலும் அவர்கள் தங்கள் சமூகத்தில் இருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இதைவிட தொடர் புலம்பெயர்தல் (chain migration) இந்த சமூகங்களில் எண்ணிக்கை அடிப்படியில் மிக அதிகம். இதன் விளைவு தாய்நாடு கலாச்சாரம், பண்புகள், நடத்தைகள் மேலும் மேலும் வேரூன்றுகின்ற நிலைமை. எனவே இவர்கள் புலம்பெயர் நாட்டின் நீரோட்டத்தில் கலக்க முன்னர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு போகும் பாதை மிக நீண்டது. 

இந்தியர்கள் தங்கள் நாட்டை ஒரு வல்லரசு என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு ஏன் இடம்பெயருகிறார்கள்? ஒரு வல்லரசு என்று சொல்லிக்கொண்டு எதட்காக பிரஜாவுரிமைக்க 10-20 வருடம் வரிசையில் நிக்கிறார்கள்? எல்லாவற்றிக்கும் காலனித்துவ ஆடசியா காரணம்? காலனித்துவ ஆட்சியில் இருந்து இரண்டாம் உலகமாகயுத்தையும் கண்ட சிங்கப்பூர் எப்படி உயர்ந்தது? அதே ஆட்சியில் இருந்து விடுபட்ட ஸ்ரீலங்கா எப்படி சின்னாபின்னமானது? நாங்கள் எப்பவும் எங்களை பாதிக்கட்டவர்கள் என்ற மனநிலையில் (victim mentality) வைத்துக்கொண்டு எங்களை பின்னோக்கி கொண்டு செல்கிற பழக்க வழக்கங்களையும், அரசியல் சமூக கலாச்சார வழிமுறைகளையும் விடமாட்டோம் என்றால் எங்கள் எதிர்காலம் எப்படி மாறும்? நாங்கள் விட்டு வந்த நாடுகள் எப்படி மாறும்? நாங்கள் வந்து குடியிருக்கிற நாடுகள் எப்படி பயனடையும்? நாங்கள் புலம்பெயர்ந்த நாடும் நாங்கள் விட்டு வந்த நாடுகள் போலாகிவிடுமல்லவா ?  அதனால் எங்களது அடுத்த தலைமுறைக்கு நாங்கள் என்ன செய்துவிட்டு போகிறோம் 

 

 

அந்த மாதிரி சொல்லிரிக்குறியள்!

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.