Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி ரவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

ஜெயம் ரவிக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் விவாகரத்து ஏற்பட உள்ளதாக சில மாதங்களுக்கு முன்னரே தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், தன் மனைவியை பிரிவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

jeyam.jpg

https://thinakkural.lk/article/309150

  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ திரைத்துறையினரின் குடும்ப வாழ்க்கை நிலைப்பதில்லை.
குடும்பத்துக்காக நேரம் செலவிடாதது காரணமோ ?  

  • கருத்துக்கள உறவுகள்

மாமியாருடன் பிரச்சினைப்பட்டுக்கொண்டு மனைவியைப் பிரிகின்றார் நல்லதொரு முடிவு!👏

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியின் வீட்டார்கள் அவரை மதிக்கவில்லை, அதனாலேயே இந்தப் பிரிவு என்று சொல்கின்றனர். முன்னரேயே இந்த விடயம் ஒரு வதந்தியாக உலாவிக் கொண்டிருந்தது.

'..........என் நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதே என் நோக்கம்........'  என்று ரவி சொல்லியிருப்பது அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாத ஒரு கூற்று. மக்கள் படங்களைப் பார்த்து விட்டு, அவர்களின் மனைவிகள், குழந்தைகள் என்று வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தனிமையும், வெறுமையும் ரவிக்கு மட்டுமே.

'சொல்ல மறந்த கதை' என்று ஒரு படம் வந்தது. தங்கர்பச்சனின் படத்தில் சேரன் நடித்திருந்தார். படம் நல்லாயிருந்தது என்று சொன்னார்கள், ஆனால் அந்த திரைக்கதை திரையை விட்டு, தியேட்டர்களை விட்டு வெளியே வரவேயில்லை போல.........😌  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

மனைவியின் வீட்டார்கள் அவரை மதிக்கவில்லை, அதனாலேயே இந்தப் பிரிவு என்று சொல்கின்றனர். முன்னரேயே இந்த விடயம் ஒரு வதந்தியாக உலாவிக் கொண்டிருந்தது.

'..........என் நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதே என் நோக்கம்........'  என்று ரவி சொல்லியிருப்பது அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாத ஒரு கூற்று. மக்கள் படங்களைப் பார்த்து விட்டு, அவர்களின் மனைவிகள், குழந்தைகள் என்று வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தனிமையும், வெறுமையும் ரவிக்கு மட்டுமே.

'சொல்ல மறந்த கதை' என்று ஒரு படம் வந்தது. தங்கர்பச்சனின் படத்தில் சேரன் நடித்திருந்தார். படம் நல்லாயிருந்தது என்று சொன்னார்கள், ஆனால் அந்த திரைக்கதை திரையை விட்டு, தியேட்டர்களை விட்டு வெளியே வரவேயில்லை போல.........😌  

அது சரி அண்ணை எங்க போயிருந்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

அது சரி அண்ணை எங்க போயிருந்தீர்கள்?

ஒரு ஒன்றுகூடல் மற்றும் வாலிபால் விளையாட்டு போட்டிகளுக்குகாக இங்கிருக்கும் வேறு ஒரு நகரத்துக்குப் போய், பின்னர் திரும்பி வர சில நாட்கள் ஆகிவிட்டது, ஏராளன். இங்கு ஒரே வெயில் வேற, போட்டிகள் முடிந்து வந்தும், அந்த வலியும், அலுப்பும் தீர சில நாட்கள் எடுத்து விட்டது.........👍.

  • கருத்துக்கள உறவுகள்

அது  ஏன் தனுஷின் பெயர் அடிவாங்குது???

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

அது  ஏன் தனுஷின் பெயர் அடிவாங்குது???

இரண்டும் ஒரே சொல்ல மறந்த கதைகள் போல, விசுகு ஐயா.

தனுஷின் திருமணம் முடிந்த பின், கஸ்தூரிராஜா குடும்பத்துடன் ஒரு தூரம் இருந்ததாகவே தெரிந்தது. எத்தனை செய்திகள் வந்தன. உண்மை பொய் தெரியப் போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் மனைவி இருவருக்கு இடையில் மூன்றாவதாக ஒரு நபர் புகுந்தால் (அது பெண்ணின் பெற்றோர்கள் அல்லது ஆணின் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் யாராக இருப்பினும்)  அந்த அழகிய குடும்பம் சிதறுண்டு போகும் . ......... இதுதான் யதார்த்தம் . ........!  😴

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நற்பேறு

AVvXsEhDufAI5NbqPJ5SU30IYKGf_1nlNzbeZo-7jnjbqxt7CzsulXoM9hYSFI3Q2qZvAdFWIYrX-7AUl-AH9qHmuw2QoeTUu1ZiWj7T-xJhLjE618rdHMdQ1cekQXyp7ymqD3Zw1TCd7leMkO-bj1ahvmIl08WDn0MeQiEQ_9_sE7l2w4MbqiNNmNM1rXDhL_Q9
AVvXsEg-tWlrS8VOH7nULDAHhGwXFtSz2Q5Epq2WKD3YKfQ7G5PXjhz2xPpjc5NaVA5cyWNcIPcdbJNed_LWOQhXHZJr5hIQOTBJy92SZUx5K6G1Ysr8phFNBIKpxNcjoVcv9ag096PDO2bIZOtWCmBdrNbt2shDj_tyMmdd5PUH1KuIf2_g_XXMoRkgNxdmqx87
 
ஜெயம் ரவி சொல்வது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இது மிகப் பரிதாபமானது. அதுவும் அவர் தன்னிடம் மிச்சமாக இருப்பது வெறும் கார் தான் எனும்போது வருத்தமாக இருக்கிறது. இதுவே ஒரு நடிகைக்கு நடந்திருந்தால்? நயந்தாராவோ திரிஷவோ தான் நடித்து சம்பாதித்த பணத்தையெல்லாம் ஒரு தயாரிப்பாளர் சுருட்டி தன்னைத் தெருவில் விட்டுவிட்டார் என்று சொன்னால் அவரை ஊரே சேர்ந்து பந்தாடியிருக்கும். ஆணுக்கு நடந்தால் கண்டும்காணாமல் விட்டுவிடுவார்கள். ஆண்களால் அழுதுகாட்டவும் முடியாது.
 
ஜெயம் ரவிக்கும் விவாகரத்தாகும் வேறு மத்திய, மேல்மத்திய வர்க்க ஆண்களுக்குமான வித்தியாசம் பின்னவர்களின் பணத்தையும் சொத்தையும் மொத்தமாக செட்டில்மெண்டின் போது பிடுங்கியிருப்பார்கள். ஜெயம் ரவிக்கு அது விவாகரத்தாகு முன்பே நடந்திருக்கிறது. என்ன கொடுமையென்றால் நம் சமூகமே இதுதான் சரியெனும் நம்பிக்கை கொண்டிருப்பது தான் - ஆண்களின் உழைப்பு, பணம், சொத்தெல்லாம் அவர்களுடையது அல்ல, அதை யாராவது பயன்படுத்தவேண்டும், பிடுங்கவேண்டும், அதுவே கடமையாற்றுவது, கண்ணியமாக பாசமாக இருப்பது என சமூகம் நம்புகிறது. அக்கா, தங்கை, அம்மாவுக்காக கொடுப்பது, மனைவி, பிள்ளைக்கு கொடுப்பது என இளமை முதல் வயோதிகம் வரை ஆண்கள் தம் உழைப்பை பணமாகவும் சொத்தாகவும் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
 
நாம் எப்போதுமே இதைச் சுரண்டலாகப் பார்ப்பதில்லை - வரதட்சிணையை எடுத்துக்கொள்ளுங்கள். கொடுக்க முடியாததால் துன்பப்பட்ட பெண்ணுக்காக இரக்கப்பட்ட அளவுக்கு நாம் அதைக்கொடுக்க தன் ஒட்டுமொத்த சேமிப்பையும் செலவழித்து போண்டியாகும் அப்பாவுக்காக வருந்துவதில்லை. சொத்து, பணம், பண்பாடு, சட்டம், நடைமுறையென்று வந்துவிட்டால் உண்மையில் இது ஒருவிதத்தில் பெண்ணாதிக்க சமூகம்தான். ஆண்களுக்குப் பேசத் தெரியாது, அவர்கள் அடிப்படையில் முட்டாள்கள் என்பதால் இதை உணரவோ, பிறருக்கு உணர்த்தி நியாயம் கேட்கவோ அவர்களுக்குத் தெரியாது. ஓரமாகப் போய் உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பார்கள். நான் கடந்த சில ஆண்டுகளில் நான் இத்தகைய ஆண்களை ஏகத்துக்குப் பார்த்திருக்கிறேன் - என் நண்பர் ஒருவருக்கு விவாகரத்தானபோது அவரது ஊடகவியலாளர் மனைவி அவர் தான் இருபதாண்டுகளாக நிகழ்ச்சித் தயாரிப்பிலும் திரைக்கதை எழுத்திலும் சம்பாதித்த பணத்தைக் கொடுத்தால் மட்டுமே குழந்தையைத் தருவதாக பேரம் பேசிப் பெற்றுக்கொண்டார். இதையே அவர் அப்பெண்ணுக்கு செய்திருந்தால் சிறையில் தள்ளியிருப்பார்கள். நம்மூர் சட்டம் சொல்வதென்னவென்றால் குழந்தை பெறுவது, கூட வாழ்வது போன்ற பெண்கள் ஆற்றும் சேவைகளுக்காக ஆண்கள் தம் ஒட்டுமொத்த சொத்தை பணத்தை மொத்தமாகவோ பாதியோ கொடுத்து சரணடைய வேண்டும் என்று. இதுவரையிலும் இது மறைமுகமாக பேரமாக நடக்கிறது. இனிமேல் விரைவில் இது சட்டமாகப் போகிறது என்று சட்டமறிந்த என் நண்பர் ஒருவர் சொன்னார். அப்போது உண்மையிலே ஜாலியாக இருக்கும் - இப்போது பெண்ணிய கொடி தூக்கும் பல ஆண்களுக்கு ஆசனத்தில் நெருப்பு வைத்து ஓடவிடுவார்கள். பல மோசடித் திருமணங்கள் இதற்காகவே நிகழும்.
 
சரி ஜெயம் ரவி விவகாரத்துக்கு திரும்ப வருவோம் - ஒருவிதத்தில் அவருக்கு அதிர்ஷ்டம் உண்டு. அவரது மனைவி நினைத்தால் மாதத்திற்கு சில லட்சங்கள் கேட்டு குடும்பநல நீதிமன்றத்திற்குப் போகலாம். நீதிபதியும் நிச்சயமாக அத்தொகையை அனுமதித்து ஆணையிடுவார். ஆனால் ஜெயம் ரவி தரப்பு தன்னை படத்தயாரிப்பின் பேரில் ஏமாற்றிச் சுரண்டியதாக மனைவி, மாமியார் மீது வழக்குப் போடுவார். இந்த வழக்கு வருடக்கணக்கில் நடக்கும். கடைசியில் சமரசம் பண்ணிக்கொள்வார்கள். ஜெயம் ரவி மீதமிருக்கும் காரையும், குடும்ப சொத்தையும் விற்றுக்கொடுக்க வேண்டியிருக்கும். அது நடக்கவில்லை என்பது அவரது நற்பேறு.
  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2024 at 03:10, suvy said:

கணவன் மனைவி இருவருக்கு இடையில் மூன்றாவதாக ஒரு நபர் புகுந்தால் (அது பெண்ணின் பெற்றோர்கள் அல்லது ஆணின் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் யாராக இருப்பினும்)  அந்த அழகிய குடும்பம் சிதறுண்டு போகும் . ......... இதுதான் யதார்த்தம் . ........!  😴

100%

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.