Jump to content

சஜித்தின் வாக்குகளை சிதறடிக்கவே சுமந்திரனின் ஆதரவு நாடகம் – கஜேந்திரகுமார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

kaja.jpg?resize=750,375

சஜித்தின் வாக்குகளை சிதறடிக்கவே சுமந்திரனின் ஆதரவு நாடகம் – கஜேந்திரகுமார்!

இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கும் விடயமானது ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகளை சேர்ப்பதற்கான சதி நடவடிக்கை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”தமிழ்த் தேசியக் கட்சிகள் சஜித் பிரேமதாசவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நிலை சிங்கள மக்கள் மத்தியில் சஜித்திற்கான ஆதரவினை குறைக்கும் நடவடிக்கையாகும்.

சஜித் பிரேமதாச சிங்கள தேசிய வாதத்திற்கு நோ்மையாக நடந்து கொள்வாா் என்னும் நிலைப்பாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்தி அவரது தென்னிலங்கை வாக்குகளை ரணிலின் பக்கம் திரும்பும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சஜித் பிரேமதாசவினை ஆதாிக்கும் வடக்கு கிழக்கினைப் பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கிடையாது. எனினும் இந்த நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தினையும் எற்படுத்தப்போவதில்லை.

ஆனால் தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு குழப்பத்தினை ஏற்படுத்தும்.

ஆகவே நாம் இவை அனைத்தையும் தொகுத்துப் பாா்த்தால் இன்று தமிழ்த் தேசியத்திற்கு நோ்மையாக கொடுக்கக்கூடிய ஒரு நோ்மையான வழி தோ்தலைப் பகிஸ்காிப்பது மட்டுமே.

எனவே  2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதே எமது கட்சியின் நிலைப்பாடு” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் சுட்டிக் காட்டினாா்.

https://athavannews.com/2024/1399691

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதே எமது கட்சியின் நிலைப்பாடு” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் சுட்டிக் காட்டினாா்.

இவரின் தந்தை குமார் பொன்னம்பலமாகட்டும் தாத்தா ஜி.ஜி. பொன்னம்பலமாகட்டும் மேடைக்கு மேடை உங்கள் ‘பொன்னான வாக்குகளை’ எங்களுக்கு அளியுங்கள் என்றுதான் கேட்டுக் கொண்டார்கள். வாக்குகளை பொன்னுக்கு நிகராக அன்று மதித்தார்கள். இன்று குப்பைகளாக்குகிறார்கள். மக்களின் வாக்குகள் குப்பைகளா? இல்லை அரசியல்வாதிகள் குப்பைகளா? என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் தேர்தலை பகிஷ்கரிப்பது என்றாகிவிட்டது, பின் யார் யாருக்கு வாக்களித்தால் இவருக்கென்ன?ஏன் சஜித்தின் வாக்கு குறைகிறது என அழுகிறார்? அவர் ஒற்றையாட்சி பிரதிநிதி இல்லையா? ஒவ்வொருவரின் கபட நாடகமும் வெளிவருகிறது. அளிக்கப்பட்ட வாக்குகளையே மாற்றி முடிவை வெளியிடுகிறார்கள், இவர் பகிஷ்கரித்தால்; இவரின் வாக்கு பத்திரமாக வெற்றிடமாக அறிவிக்கப்படுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

தாங்கள் தேர்தலை பகிஷ்கரிப்பது என்றாகிவிட்டது, பின் யார் யாருக்கு வாக்களித்தால் இவருக்கென்ன?ஏன் சஜித்தின் வாக்கு குறைகிறது என அழுகிறார்? அவர் ஒற்றையாட்சி பிரதிநிதி இல்லையா? ஒவ்வொருவரின் கபட நாடகமும் வெளிவருகிறது. அளிக்கப்பட்ட வாக்குகளையே மாற்றி முடிவை வெளியிடுகிறார்கள், இவர் பகிஷ்கரித்தால்; இவரின் வாக்கு பத்திரமாக வெற்றிடமாக அறிவிக்கப்படுமா? 

அதுதானே.... சாத்தான். தேர்தலை பகிஸ்கரிக்கச் சொன்னவர்,

மற்றவர்களின் வாக்களிக்கும் உரிமையில் ஏன் தலையிடுகின்றார்

எல்லாரும் தன்னுடையதை மோந்து பார்க்கிறதே விட்டிட்டு, மற்றவர்களை மோந்து பார்த்துக் கொண்டு திரிகிறார்கள்😂 🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம், ஜனநாயகம் என்று தொண்டை கிழிய கத்துவார்கள். ஆனால் மக்களின்  ஜனநாயக உரிமைகளை பறிப்பார்கள். கேட்டால்; நாங்கள் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பர். இவர்களாலேயே பல கட்சிகள் உருவாகி மக்களை அங்குமிங்கும் அலைக்கழிக்கிறார்கள். தேர்தல் என்றவுடன், தலைவர்கள், மக்கள் நலன் என்று ஓடோடி வருவார்கள், வாக்குகளை கொள்ளையடித்த கையோடு மக்களை மறந்து, மறைந்து விடுவார்கள். இதுதான் இவர்களின் தலைமைப்பண்பு. மக்களுக்கு என்ன தேவையிருக்கிறது,அவர்களோடு உடனிருக்க வேண்டுமென்பதெல்லாம் அவசியம் என்பதை விட, சிங்களத்துக்கு உடனிருந்து, தோள் கொடுத்து தூக்கி விடுவதே முக்கியம் அவர்களுக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சரியாக பொருந்தும் " வைக்கல் பட்டறை நாய்கள் " ...

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.