Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேட்புமனுத் தயாரிக்கும் போது புதிதாக ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்குமாறும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Thinakkural.lk

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் ஓயமாட்டான் போல

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பிழம்பு said:
 
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.

🤣...........

ரணில் ஒரு விதத்தில் மறைந்த லாஸ் ஏஞ்சலீஸ் கூடைப்பந்தாட்ட வீரர்  Kobe Bryant ஐ ஞாபகப்படுத்துகின்றார். ஒரு போட்டியில் தோற்று விட்டால்,  Kobe Bryant குளித்து விட்டு உடனேயே மீண்டும் அதே கூடைப்பந்தாட்ட மைதானத்திற்கு வந்து பந்துகளை கூடையில் எறிந்து கொண்டேயிருப்பாராம்...... அவரை ஒரு இயந்திரம் என்று சொன்னார்கள்.

ஒரு பெரிய வித்தியாசம்.......... Kobe Bryant  ஐந்து தடவைகள் சாம்பியன் ஆக வந்தார்.........

ரணில் மட்டும் தானா கதை சொல்லுவார்........... நாங்களும் அவருக்காக கதை சொல்லுவம்..........🤣

  • கருத்துக்கள உறவுகள்

UNP-யுடன் இணையும் SJB ; ரணிலின் இராஜதந்திரம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றதாக பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியை (SJB) இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி (JVP) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு (NPP) எதிராக ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மற்றும் தலதா அத்துகோரள ஆகியோரும் கலந்துகொண்டனர். R
 
https://www.tamilmirror.lk/செய்திகள்/UNP-யுடன்-இணையும்-SJB-ரணிலின்-இராஜதந்திரம்/175-344337

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர்…. ரணிலையும், சஜித்தையும் இணைக்கத்தானே இந்தியா பாடு பட்டது. அப்போ முடியாது என்று விட்டு… இப்போ இணையப் போகிறார்களாம்.
இருவரும் இணைந்தால்… அனுர கட்சியால், எதிர்பார்க்கும் பாராளுமன்ற கதிரைகளை பெற முடியாது போகலாம்.

இந்திய சார்பு பாராளுமன்றமும், சீன சார்பு ஜனாதிபதியும்…. நல்ல கூத்தாக இருக்கப் போகுது. 😁

Edited by தமிழ் சிறி

ரணில் நினைப்பது போல், சஜித் இவர்களுடன் இணைந்தால் பயனடையப் போவது ரணிலும் ஐ.தே.க வும் தான். எனவேநான் நினைக்கவில்லை, சஜித் இனி இவருடன் போய் இணைவார் என்று.

தமிழ் கட்சிகள் இந்த பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர் கொள்ளப் போகின்றன என தெரியவில்லை.

13 +,  மீள் குடியேற்றம், அபிவிருத்தி, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ பிரசன்னத்தை குறைத்தல், வடக்கு கிழக்கில் வேலை வாய்ப்பு போன்றவற்றினை முன் வைத்து ஜேவிபி / சஜித் ஆகியோரின் கட்சிகளுடன் பேரம் பேசலை மேற்கொள்ள முன் வர வேண்டும்.  தேசிய கட்சிகளின் சார்பாக பாராளுமன்றத்தில் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை இயன்றவரைக்கும் குறைக்க முயல வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர்…. ரணிலையும், சஜித்தையும் இணைக்கத்தானே இந்தியா பாடு பட்டது. அப்போ முடியாது என்று விட்டு… இப்போ இணையப் போகிறார்களாம்.
இருவரும் இணைந்தால்… அனுர கட்சியால், எதிர்பார்க்கும் பாராளுமன்ற கதிரைகளை பெற முடியாது போகலாம்.

சிங்களவர்கள் இந்தியாவை ஒரு போதும் மதிப்பது கிடையாது. சும்மா படம் காட்ட மட்டும்/ நாங்கள் உங்கட பக்கம்  எண்டு காட்ட  இந்திய கோவில்களுக்கு சென்று வருவார்கள். சிங்களம் ஈழத்தமிழர் கேட்கும் அடிப்படை உரிமைகளை கொடுத்து விட்டால்  இலங்கை விடயத்தில் கிந்தியாவின் கதை அவ்வளவுதான்....அது நடந்தால் சந்தோசம். ஒரு தரித்திரம் தொலைந்த சந்தோசம். ☘️

கிந்தியாவின் நாச வெளியுறவு அரசியலுக்காக ஈழத்தமிழர்கள் பலியாகக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியை (SJB) இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்பு போலவே இதுவும் நல்ல சிரிப்பாக இருக்குது............ யார் யாரை இணைத்துக் கொள்ள முடிவெடுக்கின்றது.........🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்பு போலவே இதுவும் நல்ல சிரிப்பாக இருக்குது............ யார் யாரை இணைத்துக் கொள்ள முடிவெடுக்கின்றது.........🤣

ஒரு உறையில்… இரண்டு கத்திகள். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு உறையில்… இரண்டு கத்திகள். 😂

கத்திகள் அல்ல. கருக்கு மட்டைகள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு உறையில்… இரண்டு கத்திகள். 😂

ஓபிஎஸ்ஸும், ரணிலும் சரியான மொட்டைக் கத்திகள், சிறி அண்ணா...........🤪.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

ஓபிஎஸ்ஸும், ரணிலும் சரியான மொட்டைக் கத்திகள், சிறி அண்ணா...........🤪.

சஜித்தையும்….  “அமுல் பேபி” என்றுதான்  சொல்கிறார்கள் ரசோதரன். 😂

7 minutes ago, குமாரசாமி said:

கத்திகள் அல்ல. கருக்கு மட்டைகள். 🤣

முடியல…. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

சஜித்தையும்….  “அமுல் பேபி” என்றுதான்  சொல்கிறார்கள் ரசோதரன். 😂

அமுல் பேபி மட்டும் இல்லை, கொஞ்சம் 'மந்தமான பேபி' என்றும் சொல்லுகின்றனர்......... லண்டனில் படிக்காமல் பஸ் ஓடினேன், அப்படி இப்படி என்று ஒரு தடவை எங்கேயோ பேசியிருந்தார்.......... ஆனால் நல்லா படிச்ச ரணிலை விட இந்த பேபி பரவாயில்லை என்று மக்கள் நினைக்கினம்............

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்; அறிவிப்பு வெளியானது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், தேசியப் பட்டியலின் ஊடாகவும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது நாடாளுமன்றத்திற்குள் நுழையவோ மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசகராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் வஜிர அபேவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/309869

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயற்பட அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் ; ஐ.தே.க. தவிசாளர் பகிரங்க அழைப்பு!

(எம்.ஆர்.எம்.வசீம்)  

இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். அதற்காக ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் தயாராகவே இருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று திங்கட்கிழமை (23)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

நாட்டுக்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும் என்றே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்றது முதல் தெரிவித்து வந்தார்.  

அந்த அழைப்பு தற்போதும் அவ்வாறே இருக்கிறது. அதனால் பல்வேறு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பவர்கள் ஒன்றுபட்டு, இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் தயாராக இருக்கிறது.  

அதனால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயற்பட வருமாறு ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில்  அனைத்து அரசியல் கட்சிகளும் அழைப்பு விடுக்கிறேன். 

நாடு வங்குராேத்து அடைந்திருந்தபோது, அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை கட்டியெழுப்ப அழைப்பு விடுத்தபோது, அதற்கு இனங்காத பிரிவினரை எப்படியாவது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒன்றிணைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.  

அதனால் தற்போது அது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கலந்துரையாடல்களின் இறுதியில் இது தொடர்பில் சாதகமான தீர்மானம் எடுக்க இருக்கிறோம். இணைந்து செயற்பட வேண்டும் என்றே அதிகமானவர்கள் தெரிவித்து வருகின்றனர். 

 ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். அதனால் எவ்வாறாவது இணைத்துக்கொள்ளவே நாங்களும் முயற்சிக்கிறோம். 

அடுத்து இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதில்லை என அவர் தெரிவித்திருக்கிறார்.  

அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்து அரசியலில் இருப்பதாகவும் இலங்கைக்கு இயலாத சந்தர்ப்பம் ஏற்படும்போது தேவையான தலையீடுகளை மேற்கொண்டு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.  

அதனால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அன்றாட அரசியல் மாற்றங்களுக்கு அமைய எமக்கு தேவையான ஆலாேசனைகளை வழங்கி, கட்சியை வழிநடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவார் என்றார்.

பாராளுமன்ற தேர்தலில் இணைந்து செயற்பட அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் ; ஐ.தே.க. தவிசாளர் பகிரங்க அழைப்பு! | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித்- 'ரணிலுடன இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பில்லை"

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின்பிரதமர் வேட்பாளராக சஜித்பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் கூட்டத்தில் இது குறித்து ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனக்கும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையில் எந்த ஒத்துழைப்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித்- 'ரணிலுடன இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பில்லை" | Virakesari.lk

Edited by பிழம்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.