Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நீங்கள் கனவு காணும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்று யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். 

வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை (24)  இடம்பெற்ற திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அநுரகுமாரவும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய ஒருவராக இருக்கின்றார். அவர்கள் சோசலிசவாதிகளாக தங்களைக் காட்டிக்கொண்டிருந்தாலும் துரதிஸ்டவசமாக அவர்களது அமைப்பு தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பிற்கு கடந்தகாலங்களில் முழுமையாக துணைநின்றது.  

ஒன்றரை இலட்சம்  அப்பாவி தமிழ்மக்கள் இறுதிப்போரில் மடிவதற்கு இந்த அமைப்பு உதவி புரிந்தது. தற்போது நாட்டின் ஆட்சி அதிகாரத்தினை அவர்கள் பிடித்துள்ளனர். 

நாங்கள் அனைவரையும் அரவணைத்துச்செல்வோம் என்று அவர்கள் சொல்வது கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம். 

நாம் அவரிடம் கேட்பது என்னவென்றால் ஒரு மாற்றத்திற்காக சிங்கள மக்கள் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள்.  

நீங்கள் கனவுகாண்கின்ற நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும்.  

அது எவ்வாறு தீர்க்கப்படவேண்டும் என்று நீங்கள் முடிவெடுக்கமுடியாது உங்களுக்கு அந்த அருகதை கிடையாது.  

தமிழர்களின் விருப்பங்களை ஏற்றுக்கொண்டு அந்த விருப்பங்களை அங்கிகரிக்கும் மூலமாக தமிழர்களை இந்தநாட்டின் ஆட்சியிலே பங்காளிகள் ஆக்குவதற்கு துணியவேண்டும்.    

அந்த துணிச்சல் உங்களுக்கு இருக்கவேண்டும் என்று புத்தபிரானையும் எமது கடவுளர்களையும் நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.  

வடகிழக்கு தமிழர்தாயகத்தை அங்கீகரித்து எமது தேசம் இறைமை என்ற வகையில் எமது சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்து அதனடிப்படையில் ஒரு சமஸ்டி அரசியலமைப்பினை கொண்டுவருவதனூடாக இந்த நாட்டினுடைய எதிர்காலத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு தமிழர்களின் பங்களிப்பை பெறுவதற்கான அத்திவாரத்தை நீங்கள் இடவேண்டும். 

அதற்குரிய அணுகுமுறைகளையும் நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு நீங்கள் உடனடியாக இறங்கவேண்டும்என்ற கோரிக்கையினை நாங்கள் அவரை நோக்கி முன்வைக்கின்றோம் என்றார்.

கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும் - அநுரவிடம் கஜேந்திரன் கோரிக்கை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, பிழம்பு said:

நாம் அவரிடம் கேட்பது என்னவென்றால் ஒரு மாற்றத்திற்காக சிங்கள மக்கள் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள்.  

நீங்கள் கனவுகாண்கின்ற நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும்.  

அது எவ்வாறு தீர்க்கப்படவேண்டும் என்று நீங்கள் முடிவெடுக்கமுடியாது உங்களுக்கு அந்த அருகதை கிடையாது.  

டப்பென்று 'அநுரவிற்கு அருகதை கிடையாது...............' என்று சொல்லி விட்டீங்கள், அப்ப யாருக்குத்தான் இந்த அருகதை இருக்கின்றது.........🙃.

தமிழ்மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று சொன்னவர்கள் தானே நீங்கள்.......... அப்புறம் அந்த தேர்தலில் வென்றவருக்கே கோரிக்கையும், வெருட்டலுமா..........🤣.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரசோதரன் said:

டப்பென்று 'அநுரவிற்கு அருகதை கிடையாது...............' என்று சொல்லி விட்டீங்கள், அப்ப யாருக்குத்தான் இந்த அருகதை இருக்கின்றது.........🙃.

தமிழ்மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று சொன்னவர்கள் தானே நீங்கள்.......... அப்புறம் அந்த தேர்தலில் வென்றவருக்கே கோரிக்கையும், வெருட்டலுமா..........🤣.

ரொம்ப… கோவக்காரர் போலுள்ளது.  🤣 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, தமிழ் சிறி said:

ரொம்ப… கோவக்காரர் போலுள்ளது.  🤣 🤣

🤣..........

இவரும் முன்னர் மாணவர் சங்கத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் தானே......... அப்ப இப்படித்தான் எடுத்ததுக்கு எல்லாம் கோபப்படுவினம், அண்ணை......

ஆனால், இவர்களுக்கு வெறும் வாய் தான். அந்தப் பக்க மாணவர் சங்கங்கள் இருக்குதே, அது தான் நாட்டில் இப்ப ஆட்சிக்கு வந்து இருக்குதே, அவர்கள் தீவிர ஆக்‌ஷனிலும் இறங்குவார்கள்............🤣.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, ரசோதரன் said:

40000 சிங்கள இராணுவத்தினரின் சவப்பெட்டிகளை கொழும்புக்கு அனுப்புவோம் என்று சமாதான காலத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய இனவெறியர் தானே இந்த கஜேந்திரன். அவர் அவ்வாறு தான் கூறுவார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ரசோதரன் said:

டப்பென்று 'அநுரவிற்கு அருகதை கிடையாது...............' என்று சொல்லி விட்டீங்கள், அப்ப யாருக்குத்தான் இந்த அருகதை இருக்கின்றது.........🙃.

தமிழ்மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று சொன்னவர்கள் தானே நீங்கள்.......... அப்புறம் அந்த தேர்தலில் வென்றவருக்கே கோரிக்கையும், வெருட்டலுமா..........🤣.

இது, இவருடைய ராஜதந்திரம்! முன்னொரு காலத்தில், ஒரு அணி வடக்கில்  திரண்ட போது, நாங்கள் அதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் போகவும் மாட்டோம் என்றவர், பின்னாளில் அணி என்றால்; முன்னுக்கு போய் நிற்பார். இப்போ பொது வேடட்பாளர்என்றவுடன் கரிச்சுகொட்டுறார். பாருங்கள் பின்னாளில் எப்படி மாறுவாரென்று. காலம் அப்படி! ரணிலுக்கு, மற்றையவருக்கு வாக்கு போட்டவர்களை சாடவில்லை, இவருக்கு சாட்டையடி விழுகுது, தனக்கு எதிரானதாக சித்திரிக்கிறார். அரியத்தாரோ யாரையும் சாடவில்லை, தான் செய்ய வேண்டியதை செய்தேன் என்பது போலுள்ளார். மெல்லென பாயும் தண்ணீர் கல்லையும் ஊடறுத்து பாயுமாம், வெழுத்தோடும் நீர் அனைத்தையும் அழித்தோடுமாம். 

Posted
10 hours ago, island said:

40000 சிங்கள இராணுவத்தினரின் சவப்பெட்டிகளை கொழும்புக்கு அனுப்புவோம் என்று சமாதான காலத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய இனவெறியர் தானே இந்த கஜேந்திரன். அவர் அவ்வாறு தான் கூறுவார். 

நீங்கள் இவரின் கருத்துக்கு 100 வீதம் கருத்து எழுதுவீர்கள் என்பதும் என்ன கருத்து எழுதுவீர்கள் என்பதும் நீங்கள் கருத்து எழுத முன்பே எனக்கு தெரியும்.🤣

  • Thanks 1
Posted

ஜனாதிபதி அனுர குமார உரை தமிழில்

Posted

 Nov 14   ல் பொது தேர்தல் என அறிய முடிகிறது.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.