Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கிழக்கு மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்

spacer.png

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயற்பட்டுள்ள இவர் கந்தளாய் அக்ரபோதி வித்தியாலய பழைய மாணவருமாவார்.

பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர நவம்பர் மாதம் 1962 ஆம் ஆண்டு பிறந்தார்.

மனைவியின் பெயர் மல்லிகா ரத்ணசேகர. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றார்.

இவர் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை பணியாற்றியுள்ளார்.

தனது ஆரம்பக் கல்வி கந்தளாயில் உள்ள அக்ரபோதி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கொழும்பு நாலந்தா கல்லூரியிலும் (1972-1980) கற்றார்.

அத்துடன் ரஷ்யாவின் மக்கள் நட்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

1988 இல் வேதியியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். 1993 இல் அவர் வேதியியலில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

1996 ஆகஸ்ட் மாதம்  இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக சேர்ந்து 2018 இல் வேதியியலில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். மற்றும் 1999 முதல் 2005 வரை பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் உபவேந்தராகவும் பணியாற்றினார்

2017 ஜனவரியில் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். 2021 இல் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவின் (CVCD) தலைவராக பணியாற்றியுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், சுற்றுச்சூழல் வேதியியல், கோட்பாட்டு வேதியியல், உயர் கல்வியில் தர உத்தரவாதம் மற்றும் அறிவியல் கல்வி ஆகியவற்றில் அவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் உள்ளன. ரத்னசேகர பல பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகளில் ஒரு பயிற்சியாளராகவும் வளவாளராகவும் இருந்துள்ளார்.

அவர் ஒரு ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என நன்கு அறியப்பட்டவர்.

குறித்த நிகழ்வில், மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி எஸ் ரத்நாயக்க , ஆளுநர் செயலக செயலாளர்  எல்.பி மதநாயக்க ,மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்கள தலைவர்கள் , தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர மற்றும்  ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

 

https://thinakkural.lk/article/309965

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, கிருபன் said:

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சிங்களத் தேசியவாதத்தின் முகம் எப்போதும் ஒன்றுதான். கட்சிகள், காட்சிகள், புதிய சொல்லாடல்கள் மட்டுமே தமிழினத்துகானது.  இனவாதமற்ற புதிய சிந்தனையுடைய தலைமையெனப் புளங்காகிதமடைந்து நிற்கும் தமிழருக்காகவாவது கிழக்கிற்கு ஏன் ஒரு தமிழரை ஆளுணராகத் தெரிவு செய்யமுடியவில்லை. சிங்களத்தின்  இதுதான்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருக்கோணேஸ்வரம் ஆலய வழிபாட்டில் பங்கேற்றார் கிழக்கு ஆளுநர் 

27 SEP, 2024 | 05:11 PM
image
 

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள  திருக்கோணேஸ்வரம் ஆலய வழிபாட்டில் நேற்று வியாழக்கிழமை (26) ஈடுபட்டார்.

20240927_104520.jpg

20240927_100457.jpg

20240927_100510.jpg

20240927_100531.jpg

https://www.virakesari.lk/article/194934

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, nochchi said:

சிங்களத் தேசியவாதத்தின் முகம் எப்போதும் ஒன்றுதான். கட்சிகள், காட்சிகள், புதிய சொல்லாடல்கள் மட்டுமே தமிழினத்துகானது.  இனவாதமற்ற புதிய சிந்தனையுடைய தலைமையெனப் புளங்காகிதமடைந்து நிற்கும் தமிழருக்காகவாவது கிழக்கிற்கு ஏன் ஒரு தமிழரை ஆளுணராகத் தெரிவு செய்யமுடியவில்லை. சிங்களத்தின்  இதுதான்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

இந்தியாவுக்கு விழுந்த பலத்த அடி....


சிறிலங்கன் எண்டு பாருங்கோ தமிழ் சிங்களவன் ,முஸ்லிம் என பிரித்து பார்க்க வேண்டாம்😅 ......முக்கியமாக தமிழர்கள் ......பிரிவினையை வளர்காதையுங்கோ.......சிங்களவர்களும் முஸ்லீம்களும் அதை செய்ய் சகல உரிமையும் உண்டு  தமிழர்கள் நீங்கள் சிறிலங்கனாக வாழுங்கோ😅

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்.... சில சமயம் நம் சரிவர சிந்திக்க மறந்து விடுகிறோம். தமிழராக ஒரு ஆளுநர் வைந்தாலும் சிங்கள ஆளுநர்  செய்வதையே அல்லது அதற்கு மேலேயும் செய்வார், ஆட்டுவிப்பது சிங்கள எஜமானர், அதற்கு அவருக்கு பதவி, சம்பளம். வடக்கில் இருந்த தமிழ் ஆளுநர்கள் எப்படி செயற்பட்டார்கள், செந்தில் தொண்டமான் பதவி வகித்த லட்ஷணம் தெரியுது. இவர் நல்லது செய்வார் என எதிர்பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய செய்திகள்
தமிழ் சிங்களம் பேசுகின்ற படித்த கிழக்கு மாகாண ஆளுநர்
அனுரா அரசாங்க ஆட்சியில் யாழ்ப்பாணம் சிங்கபூர் மாதிரி மாறுமா
வியக்க வைக்கும் புதிய மாற்றங்களுடன் யாழ் நகரம்



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இனக்கொலைக்கான பொறுப்புக்கூறல் முள்ளிவாய்க்கால் இனக்கொலையின்போது சிறிலங்கா இராணுவம் 167,676 தமிழர்களைப் படுகொலை செய்திருக்கிறது என்று கணிப்பிடப்பட்டிருக்கிறது. உணவும், மருந்துப்பொருட்களும் தடைசெய்யப்பட்டிருந்ததுடன், காயப்பட்டவர்களைப் பராமரித்து வந்த வைத்தியசாலைகளும் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வந்தன. தமிழ்ப்பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் சிங்கள இராணுவத்தினரால் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன், சரணடைந்தவர்களில் ஆயிரக்கணக்காணோர் படுகொலை செய்யப்பட்டனர். இன்னும் ஆயிரக்கணக்காணோர் காணாமலாக்கப்பட்டதோடு இன்றுவரை அவர்களைத் தேடி அவர்களின் உறவுகள் வடக்குக் கிழக்கில் நீதிகோரிப் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளும், போராட்டங்களும் இன்றுவரை உதாசீனம் செய்யப்பட்டே வருகின்றன.   இறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பாக பல ஐ.நா அறிக்கைகள் வெளிவந்திருப்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைச் சபையில் பல தீர்மானங்களும் காலத்திற்குக் காலம் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. தமிழ் மக்கள் ஒரு இனமாகவும், ஐ. நா மனிதவுரிமைச் சபையினூடாகவும் இறுதி யுத்தத்தில் தம்மீது நடத்தப்பட்ட பாரிய போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் ஊடாக நீதியின் முன் நிறுத்தி தண்டனை வழங்கவேண்டும் என்று இடையறாது கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   ஆனால், சர்வதேச மயப்படுத்தப்பட்ட யுத்தக் குற்ற விசாரணைகளுக்கெதிராக அநுர குமார திசாநாயக்கவும் அவரது கட்சியான மக்கள் விடுதலை முன்னணியும் கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டினையே எடுத்திருக்கின்றனர். இவ்வருட ஆரம்பத்தில் பேசிய அநுர குமார திசாநாயக்க, "இறுதி யுத்தத்தில் நடத்தப்பட்டதாக நம்பப்படும் போர்க்குற்றங்களையோ, மனிதவுரிமை மீறல்களையோ செய்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுவோரை தமது அரசு ஒருபோதும் தண்டிக்கப்போவதில்லை" என்று உறுதிபடக் கூறியிருந்தார்.  "போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே தமக்கான நீதியினைக் கோரவோ, யுத்தக் குற்றங்களை விசாரிக்கும்படியோ என்னிடம் கோரவில்லையே" என்றுகூட அவர் வெளிப்படையாகப் பேசியிருந்தார். ஆனால்,  தம்மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணை ஒன்றினூடாக விசாரித்து நீதி வழங்குங்கள், குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துங்கள் என்கிற ஒட்டுமொத்தக் கோரிக்கையினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற பின்புலத்தில் அநுரவினால் இவ்வாறான கூற்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதேவேளை இறுதி யுத்த காலத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று நன்கு அறியப்பட்ட பல முன்னாள்த் தளபதிகளை அநுரவின் கட்சி அரவணைத்து வருகிறது. ஹெயிட்டியில் சமாதானப் பணிகளில் ஈடுபட்டு பல சிறுமிகளை பாலியல் தொழிலுக்காகக் கடத்தியவர்கள் என்று கண்டறியப்பட்ட இலங்கையின் மூன்றாவது பட்டாலியன் படைப்பிரிவின் தளபதியான ஜெனரல் அனுர ஜயசேகரவை அநுர தனது அரசின் பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமித்திருக்கிறார். மேலும் இலங்கை விமானப்படை தாக்குதல்ப் பிரிவின் தளபதியாக இருந்து இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் படுகொலைகளில் நேரடியாகப் பங்காற்றிய ஒருவனை ப‌டைகளின் பிரதானியாக அநுர நியமித்து கெளரவித்திருக்கிறார். அநுர ஜனாதிபதியாகப் பதிவியேற்று சில தினங்களுக்குள் மேற்கொண்ட முக்கியமான இராஜதந்திர நகர்வாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்தை தனது அரசு முற்றாக நிராகரிக்கிறது என்று உத்தியோகபூர்வமாக அறிவித்ததைக் காணலாம். சர்வதேச விசாரணைப் பொறிமுறைகளைப் பாவித்து இறுதி யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேடும் காலத்தை நீடிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அதனை நிராகரித்தே அநுர குமார இந்த அறிவிப்பை மேற்கொண்டிருந்தார். சென்றமாதம் பேசிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், சர்வதேச விசாரணைகள் தொடர்பான தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை மீள உறுதிப்படித்தியதோடு, தமிழ் மக்களால் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நிராகரிக்கப்பட்ட உள்ளூர் விசாரணைப் பொறிமுறை ஒன்றினூடாக குற்றச்சாட்டுக்களை தமது அரசு விசாரிக்க முன்வரும் என்று உறுதிபடக் கூறியிருந்தார். 
    • அது கோஷனின் விருப்பமென்றால், அதை சிரந்தாழ்த்தி ஏற்கத்தயாராக இருக்கிறேன் என்பதை சபையோர் முன்னிலையில் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பதவிப்பிரமாணம் எப்போது வைப்பதென  உத்தேசித்துள்ளீர்கள்? கபிதனையும்  கட்டாயம் கூட்டி வாருங்கள்.
    • என்ன பொலம்பல் ஜாஸ்தியா இருக்கு. ரிலாஸ் லா!!  என்சாய் தி எலக்சன் அவுட்டு கம்மு. 
    • உங்களிடம் முறையிட வர மாடடோம் அதுமட்டும் நிட்சயம். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.