Jump to content

25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவழி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2024-09-27t204218z-2092140364-rc279aa5ni

 

gettyimages-2173926448.jpg?c=original&q=ap24271647200852-copy.jpg?c=original&q=w

 

25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவளி.

புளோரிடா ஜோர்ஜியா தெற்கு வடக்கு கரோலினா என்று 4 மாநிலங்களை பிரட்டி எறிந்துள்ளது.

இன்று மகன் வசிக்கும் இடமான எபிக்ஸ் வட கரோலினாவில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

ஒவ்வொரு வருடமும் வருகின்ற சூறாவளி, இம்முறை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது போல் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய ஹெலன் சூறாவளி - 43 பேர் பலி

Published By: DIGITAL DESK 3   28 SEP, 2024 | 10:02 AM

image
 

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை வெள்ளிக்கிழமை  ஹெலீன் சூறாவளி தாக்கியதில் குறைந்தது 43 பேர் உயழிரிழந்துள்ளதோடு, இலட்சக்கணக்கானவர்களுக்கு  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

புளோரிடா வளை குடாவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி இதுவாகும். சூறாவளியால் வியாழக்கிழமை இரவு பெய்த  மழையினை அடுத்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அதனை அடுத்து ஜோர்ஜியா மற்றும் கரோலினாஸுக்கு வடக்கே சூறாவளி கரையை கடந்துள்ளது.

இந்நிலையில், ஹெலன் சூறாவளி வலுவிழந்திருந்தாலும் அதிக காற்று, வெள்ளம் மற்றும் சூறாவளி அச்சுறுத்தல் தொடரும் என்று முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்னும் சில இடங்களில் 50 சென்றி மீட்டர் வரை அதி பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தாக்கிய சூறாவளிகளில் 14 ஆவது சக்தி வாய்ந்த சூறாவளியாக இது பதிவாகியுள்ளது.

இந்த சூறாவளியால் மணிக்கு 675 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஐடா மற்றும் 1996 ஆம் ஆண்டு ஓபல் ஆகிய சூறாவளிகள்  460 மைல்கள்  காற்று வீசியுள்ளது.

புளோரிடா, ஜோர்ஜியா, டென்னசி மற்றும் கரோலினாஸ் முழுவதும் பலத்த காற்று மற்றும் பலத்த மழையின் தாக்கம் பரவலாக உள்ளது.

புளோரிடாவில் பினெல்லாஸ் கவுண்டியில் ஐந்து பேர் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/194964

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஒவ்வொரு வருடமும் வருகின்ற சூறாவளி, இம்முறை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது போல் தெரிகின்றது.

அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்? 🤷‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, நியாயம் said:

அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்? 🤷‍♂️

இப்படி பார்த்தால் எல்லாமே சரி என்று ஆகிவிடும். நாய் என்னை கடிப்பது உட்பட. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

இப்படி பார்த்தால் எல்லாமே சரி என்று ஆகிவிடும். நாய் என்னை கடிப்பது உட்பட. 

 

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த தர்க்கம் பொருந்தலாம்.

இது தமிழ் பழமொழி. முன்னோர் ஏதோ காரணத்தினால் இப்படியோர் முதுமொழியை உருவாக்கி உள்ளார்கள். 

இதை மூட நம்பிக்கை வகையினுள் இடுவது அவரவர் இஸ்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நியாயம் said:

 

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த தர்க்கம் பொருந்தலாம்.

இது தமிழ் பழமொழி. முன்னோர் ஏதோ காரணத்தினால் இப்படியோர் முதுமொழியை உருவாக்கி உள்ளார்கள். 

இதை மூட நம்பிக்கை வகையினுள் இடுவது அவரவர் இஸ்டம்.

அப்படியானால் தமிழர்கள் இந்த பழமொழிக்கேற்ப தமக்கு நடந்த அநியாயங்களுக்கு கோயில்களில் தவம் கிடந்தால் சரி? அப்படித்தானே உங்கள் நியாயம்????

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.