Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படி எல்லாம் நடக்குமென்று தெரிந்திருந்தால்...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

bloodflowerys0.jpg

படத்தைப் பெரிதாக்கி வாசிப்பதற்கு :

http://www.kathala.net/gallery/albums/user...lood-Flower.jpg

படம் சிறிதாக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

என்ன வடிவேல் திடீரென்று இந்தப்பக்கம்?

கவிஞருக்கு என்ன பிரச்சனையாம்? ஒன்றும் விளங்கவில்லை. முதலில் தன்னை வாழ விடு எண்டு சொல்லிறார், ஏசுறார், கண்ணீர் எண்டுறார், ஆயுள்தண்டணை எண்டுறார்...

எப்படி நடக்கும் எண்டு தெரிந்து இருந்தால் எண்டு சொல்லிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு இது உங்க கவிதையா?

கண்ணீர்தான் ஆயுள் தண்டனையா ?

யாரப்பா நம்ம வடிவேலுவிற்கு ஆயுட் தண்டனை கொடுத்த, தோளில் சாய்ந்து ஒப்பாரி வைத்த தேவ?வதை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வடிவேல் திடீரென்று இந்தப்பக்கம்?

கவிஞருக்கு என்ன பிரச்சனையாம்? ஒன்றும் விளங்கவில்லை. முதலில் தன்னை வாழ விடு எண்டு சொல்லிறார், ஏசுறார், கண்ணீர் எண்டுறார், ஆயுள்தண்டணை எண்டுறார்...

எப்படி நடக்கும் எண்டு தெரிந்து இருந்தால் எண்டு சொல்லிறார்?

ஆம் இது எனது கவிதை தான். ஒரு 6 வருடத்திற்கு முன்பு எழுதியது. உண்மையாக இப்படி நடந்தது. இதை கவிதை என்று சொல்லலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு சார்! ஆறுவருடத்துக்கு முந்தைய கவிதையாய் இருப்பதால் இப்போது ரணம் ஆறியிருக்கும். ஆனால் வடுதான் மீதமிருக்கிறது. எப்போதாவது அறியாமல் அந்த வடுவை விரல்கள் வருடும் போது ஞாபகவலி பீறிட்டு எழுகிறதா?

cool please. we are all travaling on the same board.

007 தங்கள் கவிதையா மிகவும் நன்றாக இருகிறது :lol: ..........வாழ்த்துகள் கவிதைக்கு உங்கள் கதையை தான் கவிதையாக சொல்லி இருந்தா வருந்துகிறேன் :lol: ......இதற்கு எல்லாம் 007 பீல் பண்ணமாட்டார் என்று நேக்கு நல்லா தெரியும் :lol: !!மூளையில் ஆயுள் தண்டனை வைக்கபட்டிருந்தாலும் பொது மன்னிப்பு வழங்கி விட்டிடுங்கோ அப்ப தான் நிம்மதியாக இருக்க ஏலும்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

சூரியன் உள்ளவரை

ஓளி இருக்கும்!!

பூ உள்ளவரை

வாசம் இருக்கும்!

உன் காதல் உள்ளவரை

என் உயிர் இருக்கும்!! :lol:

Edited by Jamuna

இல்லை வடிவேல், மன்னிக்கவும். எனக்கு உண்மையில் ஆரம்பத்தில் உங்கள் கவிதையை வாசித்தபோது விளங்கவில்லை. உங்கள் கவிதை, அதுவும் சொந்தக்கதை என்று அறிந்ததும் அதை மீண்டும் சில தடவைகள் படித்துப் பார்த்தேன்.

யதார்த்தத்தில் இவை உண்மையாக இருக்கக்கூடும். இதுபற்றி எனது பார்வையையும் சொல்கின்றேன் கேளுங்கோ..

உங்கள் கவிதையின் சாரம்சம் நீங்கள் மெய்யாக ஒருத்தியை நேசித்து உள்ளீர்கள், அவளும் நேசித்து உள்ளாள். கடைசியில் என்ன நடந்தது அல்லது எப்படி பிரிவு வந்தது என்று விளங்கவில்லை. நீங்கள் ஏன் அவளை மறக்க முயன்றீர்கள் என்று தெரியவில்லை. அல்லது அவள் உங்களைவிட்டு தானாக விலகினாளோ தெரியாது..

இங்கு,

'பொய்யான உன்னை எனக்குள் அழித்து

மெய்யான என்னை உயர விடு'

என்று நீங்கள் கேட்பதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன.

மற்றையது..

'ஒவ்வொரு முறையும் நீ தாமதமாக வந்து,

துள்ளிப்பாய்ந்து அலைமோதும் கடலாய் என்னை தழுவியது'

என எழுதுவதில் இருந்து நீங்கள் சற்று அவசரப்பட்டு இருக்கிறீங்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. காதலிற்கு பொறுமை தேவை. ஆண்களைப் போல் பெண்கள் தமது உணர்வுகளை உடனடியாக, உடனடியாக வெளிப்படுத்துவார்கள் என்று நினைப்பது தவறு.

காதலை அடித்துப் பறித்து பலாத்காரமாக பெறமுடியாது. அது காதலிக்கப்படுபவர்களின் இதயத்தில் இருந்து தானாக ஊற்றாக உருவெடுக்க வேண்டும். மேலும், காதலை அவசரப்படுத்தவும் முடியாது.

நான் உங்களுக்கு ரெண்டு கதை சொல்லிப் போட்டி மிச்சம் சொல்லிறன் கேளுங்கோ..

ஊரில் எனது பள்ளி நண்பன் ஒருவர் ஒரு பெண்ணை காதலித்தான். அவளைச் சுத்திச் சுத்தி வந்து பகிடிவிடுவது, சுற்றுவது இப்படி.. பெண்ணுக்கு அப்போது 17 வயது தான் ஆகி இருந்தது. அந்த நேரத்தில் மிகவும் கல்வி கற்ற ஒருவன் (பொறியியலாளன்) அவளது அழகில் மயங்கி, 'தான் அவளை கலியாணம் செய்யப்போகின்றேன், சீதனம் ஒன்றும் தேவை இல்லை, அவளை தனக்கு கட்டித்தர முடியுமா?' என்று அவளது அண்ணா, தாயாரிடம் கேட்டான். அவர்களும் குடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்ச்சுக்கொண்டு கொடுக்கிது என்ற சந்தோசத்தில் மகளின் விருப்பம் கேட்டார்கள்.

இவளுக்கு பேரதிர்ச்சி. கடுமையான எதிர்ப்பு தெரிவித்தாள். தான் எனது நண்பனை விரும்புவதை வீட்டில் கூறினாள். அதற்கு அவளது அண்ணாவோ, அப்படியென்றால் 'உனது காதலன் உன்னை விரைவில் கலியாணம் கட்ட தயாரா?' என்று கேட்டான். வீட்டில் பிரச்சனை. இவர்களது குடும்பத்தையும், எனது நண்பனின் குடும்பத்தையும் அறிந்த ஒரு ஆசிரியை பிரச்சனைகளை அறிந்து, நண்பனின் தாயாரிடம் இவளது புகைப்படத்தை காட்டி 'இவவை தெரியுமா?' என்று கேட்க தாயார் 'இல்லை, அப்படி காதல் ஒன்றும் இவளுடன் எனது பிள்ளைக்கு இல்லை!' என்று சொல்லி மறுத்துவிட்டார். இதன் பிறகு என்ன? மற்றவனுடன் கலியாணம் செய்வதற்கு இவள் வீட்டில் உடன்பட வேண்டி வந்துவிட்டது.

அவள் தான் பள்ளிக்கு வரும் கடைசி நாள் அன்று பாடசாலை முடிந்ததும் தனது தோழியுடன், எனது நண்பனின் வகுப்புக்கு போய் கடைசி வாங்கில் இருந்து அழத்தொடங்கி இருக்கிறாள். நண்பனுக்கு என்னவென்று விளங்கவில்லை. பிறகுதான் அவளது தோழி வீட்டில் நடந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் கூறி, நண்பனை கண்டபடி திட்டினாள். 'அவ உங்கள உயிருக்கு உயிரா காதலிச்சவ, நீங்கள் கடைசியில ஒரு முயற்சியும் எடுக்காம அவவ கைவிட்டு போட்டீங்கள்..! உங்களுக்கு எல்லாம் சும்மா விளையாட்டா போச்சிது!' இப்படி எல்லாம் சொல்லி பேசினாள். இவன் விளையாட்டுத் தனமாக காதலித்தது, அவளோ ஆழமாக உண்மையாக காதலித்தது. ஓரிரு நாட்களில் மற்றவனுடன் அவளுக்கு கலியாணமும் முடிந்துவிட்டது.

நண்பன் எனக்கு கூறிய விளக்கம், 'தான் எப்படி 18 வயதில் அவளை கலியாணம் கட்ட ஓம் என்று வாக்குறுதி கொடுக்க முடியும்? 18 வயதில் கலியாணம் கட்டினால் ஆட்கள் தன்னைப் பார்த்து சிரிக்க மாட்டார்களா?' என்று கேட்டான்.

மற்றைய கதை...

அதே நண்பன் மீண்டும் சில வருடங்களில் இன்னொரு பெண்ணை காதலிக்க தொடங்கினான். இப்போதும் அதே பிரச்சனை. இவளும் மிக அழகானவள். அந்த நேரம் சுவிசில் இருந்து ஒரு பெடியன் யாழ்ப்பாணம் வந்து இருந்தான். இவளை கண்டபின் இவளை திருமணம் செய்து தரும்படி இவள் வீட்டுக்காரரிடம் கேட்டுவிட்டான். அவர்களுக்கு நல்ல சந்தோசம். சுவிஸ் மாப்பிள்ளை அதுவும், சீதனம் ஒன்றும் இல்லாமல் சும்மா கிடைக்கும்போது சொல்லவா வேண்டும்? இந்த நிலையில் அவள் முதலில் இதற்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தாள். வீட்டுக்காரரோ 'நாங்கள் சொல்வதின்படி நீ கேட்காவிட்டால் எல்லோரும் தற்கொலை செய்து விடுவோம்!' என்றெல்லாம் அவளை வெருட்டி இருக்கின்றார்கள். அவளும் பயந்து இறுதியில் வீட்டுக்காரர் சொன்னதற்கு ஒத்துக்கொண்டு விட்டாள்.

ஆனால், இந்தமுறை எனது நண்பன் மிகவும் கோபம் அடைந்தான். காரியத்திலும் இறங்கினான். தான் இப்போது அவளை கலியாணம் கட்டப்போவதாய் சபதம் செய்து கொண்டு (தமிழ் சினிமாவில் வருவது மாதிரி) வேறு நண்பர்களுடன் மோட்டபைக்கில் அவள் வீட்டுக்கு போனான். 'சுவிசில் இருந்து வந்தவனை ஒரு கைபார்க்கப்போகின்றேன், ஓட ஓட சுவிசுக்கு திருப்பி கலைக்கப் போகின்றேன்!' என்றெல்லாம் திட்டங்களுடன் இருந்தான். அவள் வீட்டுக்கு சென்றதும், அவள் கூறியது, 'தயவு செய்து இனி என்னைப் பார்க்க வரவேண்டாம், நான் சுவிசில் இருந்து வந்தவரைதான் கலியாணம் செய்யப் போகின்றேன்!' என்று தான்.

இவனுக்கு பெரிய ஏமாற்றம். பேரதிர்ச்சி, சோகம். பின் மீண்டும் சில வருடங்களில் மீண்டும் காதல். மீண்டும் இன்னொருத்தியை காதலித்து இப்போது அவளையே திருமணமும் செய்து சந்தோசமாக இருக்கின்றான்.

'எனது நண்பனை ஒரு கெட்டவன் அல்லது பிழையானவன்' என்று கூறமுடியுமா?

'எத்தனை பேரிடமடி உன் இதயம் தொலைத்திருப்பாய்?'

என்று நீங்கள் உங்கள் கவிதையில் கேட்டு இருந்தீர்கள். எனது நண்பனின் கதையை வாசித்தபின்பும் இப்படி உங்களால் எழுதமுடியுமா?

நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நண்பர்களே

எனது இந்த கவிதை மாதிரியான படைப்பிற்கு இவ்வளவு வரவேற்பா என்டு நம்ப முடியேலை.

நீங்கள் கேட்டுக்கொண்டதற்கினங்க இதன் அர்த்தத்தை விளக்குகின்றேன்.

எனக்கு 18 வயது அந்த நேரம். அவளிற்கு 17 வயது. அவளின் அண்ணன் எனக்கு தெரிந்த ஒருவனின் சிநேகிதன். ஒரு நாள் நான் எனக்கு தெரிந்த அந்த நபருடன் பேசிக்கொண்டு நிற்கும் பொழுது சந்தித்தேன். அவள் அவளின் அண்ணனுடன் வந்திருந்தாள். அப்புறம் என்ன பாத்த உடனயே எனக்கு ஒரு கண். அவளும் சிரிச்சிட்டு நின்டாள் (எல்லாம் வயசு படுத்தின பாடு). எனக்கு தெரிந்த ஒரு பெண் மூலமாக அவளின் மின்னஞ்சலை பெற்றுக்கொண்டேன்.

சும்மா ஒரு மின்னஞ்சல் எழுதினேன். ஆரம்பத்தில் என்னைப்பற்றி சொல்லவில்லை. நான் யார் என்டு சொன்ன பிறகு பேசாமல் விடமாட்டாள் என்று சத்தியம் பண்ணச்சொல்லிவிட்டு என்னைப்பற்றி சொன்னேன். அப்புறம் என்ன கொஞ்ச நாள்ளயே எல்லாம் ஓகே ஆகிட்டுது. ஆனா எங்கள் இரண்டு பேரையும் பற்றி யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் என்டு அவள் கண்டிப்பா சொல்லீட்டாள். அது ஏன் என்டு அப்ப விளங்கேலை. எனக்கு வேற முதல் தடவை இப்படி நடக்கிறது. என்கிட்ட இருக்கிற கொஞ்ச காசில அவளின்ர ரெலிபோன் பில் கட்டியே அழிஞ்சு போய்ட்டன். ஒரு 6 மாதத்துக்கு பிறகு அவளின்ர சொந்தக்காரர் வேற நாட்டில இருந்து வந்திருக்கினம் அவளுக்கு அவையின்ர பொடியனோட மோதிரம் மாத்தக் போகினம் என்டு சொல்லி அழுதாள். நானும் எவ்வளவோ அழுது கெஞ்சி எல்லாம் பாத்திட்டன். அவள் ரெலிபோனை கட் பண்ணிட்டு நம்பறயே மாத்திட்டாள். அதுக்குப் பிறகு அவளை காணவும் இல்லை.

பிறகு ஒரு 1 வருசம் களிச்சு நான் முதல் முதலா அவளை சந்திக்கேக்க ஒரு தெரிந்தவரோட கதச்சுக்கொண்டு நின்டனான் என்டு சொன்னன் தானே அவரை மறுபடியும் சந்திச்சனான். அவரிட்ட நடந்ததை சொன்னன். அப்ப தான் ஒரு பெரிய உண்மையே தெரிய வந்தது. நான் அவளை லவ் பண்ணின நேரம் அவள் என்னையும் வச்சிருந்து எனக்கு தெரிந்த அந்த நபரையும் (19 வயது) வச்சிருந்திருக்கிறாள். என்னை விட்ட நேரம் தான் அவரையும் விட்டிருக்கிறாள்.

அப்புறம் என்ன அவளை மறக்க இன்னொருத்தி என்டு இப்படியே மாறி மாறி ஒரு 5 பேர் வந்து போய்ட்டினம். இது இப்ப தவறு என்டு தெரிஞ்சாலும் அந்த வயசில இதெல்லாம் தெரியாது. இப்ப கொஞ்ச நளைக்கு முன்னால ஒரு புதுப்படத்தில ஒரு வசனம் பாத்தன் "ஒருத்தி ஏமாத்திறதால உங்கள மாதிரி 1000 பொண்களோட வாழ்க்கை பாதிக்கப்படுது என்டு என்டி விளங்கிக்கொள்ளுறீங்க இல்லை". பாத்து மனசுக்குள்ள ஒரு எண்ணம். என்னமோ எனக்காகவே எழுதின மாதிரி.

போன வருசம் அவளை ஒரு விளையாட்டுப்போட்டியில சந்திச்சனான். நான் கதைக்கேலை. நல்ல குண்டா வந்திருந்தா. யாரோ ஒருத்தன லவ் பண்ணி விட்டைவிட்டு ஓடிப்போய் இப்ப அவன் விட்டுட்டு போய்ட்டானாம். இப்ப மறுபடியும் அவான்ர அப்பா அம்மா தங்களோட அவாவை சேர்த்துவச்சிருக்கினமாம். நான் முதல்ல உங்களுக்கு சொன்னன் தானே வேற நாட்டில இருந்து இவான்ர வீட்ட வந்திருக்கிற சொந்தக்காரனை இவாக்கு மோதிரம் மாத்திறதால தான் என்னையும் எனக்கு தெரிந்த அந்த நபரையும் விட்டவா என்டு. அதெல்லாம் எங்களுக்கு வச்சு தோப்பு (ஒரு தடவை வச்சா ஆப்பு, பல தடவை வச்ச தோப்பு). அந்த வெளிநாட்டுப் பையன் தான் அவான்ர புது பொடியன். எங்களை ஏமாத்திறதுக்காக அவன் தங்கட சொந்தக்கார பொடியன் என்டு பொய் சொல்லி இருக்கிறா.

ஆனா அவள் அப்படி விட்டுட்டு போனது நல்லது என்டு இப்ப தெரியுது. இப்ப நான் படிச்சு ஒரு நல்ல நிலமையில இருக்கிறன். அறியாத வயசில நடந்ததை நினச்சு இப்ப நான் கவலைப்படுறதே இல்லை.

தமிழ் கலாச்சாரத்தை கெடுத்திட்டன் என்டு என்னை பேச விரும்பிறவங்க எல்லாம் தாராளமா தொடங்கலாம்.... :lol:

ஓ அப்படியா நடந்தது? :lol: நன்றி உங்கள் மனம் திறந்த விளக்கத்திற்கு..

தமிழ் கலாச்சாரத்தை கெடுத்திட்டன் என்டு என்னை பேச விரும்பிறவங்க எல்லாம் தாராளமா தொடங்கலாம்... :lol: .

வடிவேல் அண்ணாவொன் வாழ்கையில் இப்படி ஒரு சோகமா சா நீங்கள் ஒன்றும் தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கவில்லை :lol: ........ஆனாலும் நீங்கள் தற்சமயம் படித்து நல்ல நிலையில் இருக்கின்றீங்கள் எனவும் பழசை நினைத்து கவலைபடுவதில்ல என்று கூறி இருந்தீர்கள் அதற்கு என்னுடைய பாராட்டுகள்,எத்தனையோ பெயர் காதல் தோல்வி என்று அதை நினைத்து கவைபட்டு கொண்டு இருப்பார்கள் ஆனா நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் ஒரு முன் மாதிரி......... :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"பூவுகுள் தேன் உள்ளவரை வண்டு பாக்கெட்டில் காசு உள்ளவரை காதல்" :lol:

தமிழ் கலாச்சாரத்தை கெடுத்திட்டன் என்டு என்னை பேச விரும்பிறவங்க எல்லாம் தாராளமா தொடங்கலாம்....

உங்கள் கதையில் இருந்து நோக்கையில் உங்கள் கவிதையில் அர்த்தம் இருக்கிறது வடிவேல் 007.

பெண்கள் எப்பவும் குத்து விளக்கல்ல..இப்படி செய்பவர்களும் இருக்கிறார்கள்.

அதே நேரம் ஆண்களும் இருக்கிறார்கள். அது பெண்ணோ ஆணோ அவர்களின் மனது எப்படி

என்பதை பொறுத்தே இருக்கு.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கதையில் இருந்து நோக்கையில் உங்கள் கவிதையில் அர்த்தம் இருக்கிறது வடிவேல் 007.

பெண்கள் எப்பவும் குத்து விளக்கல்ல..இப்படி செய்பவர்களும் இருக்கிறார்கள்.

அதே நேரம் ஆண்களும் இருக்கிறார்கள். அது பெண்ணோ ஆணோ அவர்களின் மனது எப்படி

என்பதை பொறுத்தே இருக்கு.

ஆம் சில குலக்குத்துவிளக்குகளும் உள்ளன....

சில கொலைக் குத்து விளக்குகளும் உள்ளன... <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.