Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சென்னை: இந்திய விமானப்படை சாகச நிகழ்வில் என்ன நடந்தது? புகைப்படத் தொகுப்பு

சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி
6 அக்டோபர் 2024, 14:24 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 6) நடைபெற்றது.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த பல்வேறு வகையான விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. பணயக் கைதிகளை மீட்பது போன்ற சாகசங்களையும் விமானப்படை வீரர்கள் செய்து காட்டினர்.

சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சாகசங்களை செய்து காட்டிய இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள்
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியின் ஒரு காட்சி.
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரையில் திரண்டிருந்த மக்கள்

இந்த நிகழ்ச்சியை நேரில் காண பெரும் திரளான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டிருந்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் விமான சாகசங்களை நேரில் பார்க்க கூடியிருந்தனர். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வருகையால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,X/MKSTALIN

படக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரை மற்றும் காமராஜர் சாலையில் குவிந்த மக்கள்
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வானில் சாகங்களை செய்து காட்டிய இந்திய விமானப்படை போர் விமானம்
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உலகத்திலேயே அதிக மக்கள் கண்டுகளித்த சாகச நிகழ்ச்சி என்ற சாதனையை இந்த நிகழ்வு படைத்திருக்கிறது
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, லிம்கா புத்தகத்தில் இந்த சாகச நிகழ்வு இடம்பெற இருப்பதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்தது.
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய விமானப்படை நிகழ்ச்சியில் சாகசங்களை செய்து காட்டிய போர் விமானங்கள்
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

உலகத்திலேயே அதிக மக்கள் நேரில் பார்த்த சாகச நிகழ்ச்சி என்ற சாதனையை இந்த நிகழ்வு படைத்திருப்பதாகவும், இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பெற இருப்பதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படையின் மெய் சிலிர்க்க வைக்கும் சாகசங்களை காட்டும் சில புகைப்படங்களை பார்க்கலாம்.

சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்டனர்.
சென்னை மெரினா, விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியில் ஒரு காட்சி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், ஒரு சாகச நிகழ்ச்சி வைத்தால்…. அதிக மக்கள் பார்ப்பது சகஜம் தானே.

ஆசிய மக்கள் வானத்தில் சும்மா ஒரு பயணிகள் விமானம் பறந்தாலே, செய்த வேலையை விட்டிட்டு ஓடி வந்து வானத்தை அண்ணாந்து பார்க்கும் நாட்டில் சாகச நிகழ்ச்சிக்கு அதிக மக்கள் கூடுவது சர்வ சாதாரணம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, தமிழ் சிறி said:

அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், ஒரு சாகச நிகழ்ச்சி வைத்தால்…. அதிக மக்கள் பார்ப்பது சகஜம் தானே.

ஆசிய மக்கள் வானத்தில் சும்மா ஒரு பயணிகள் விமானம் பறந்தாலே, செய்த வேலையை விட்டிட்டு ஓடி வந்து வானத்தை அண்ணாந்து பார்க்கும் நாட்டில் சாகச நிகழ்ச்சிக்கு அதிக மக்கள் கூடுவது சர்வ சாதாரணம்.

வானத்தை அண்ணாந்து பார்ப்பதெல்லாம் சாதனையாப் பதிவு செய்ய இந்தியாவால் மட்டுமே முடியும். 😁😁🤣

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kapithan said:

வானத்தை அண்ணாந்து பார்ப்பதெல்லாம் சாதனையாப் பதிவு செய்ய இந்தியாவால் மட்டுமே முடியும். 😁😁🤣

கொரோனாவையே… மணி அடித்து விரட்டிய நாடு அல்லவா அது. 😂

ஒரு முட்டாள் மணியடிக்கச் சொல்ல… முழு நாடும் தெருவில் இறங்கி ஒலி எழுப்பியதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, தமிழ் சிறி said:

கொரோனாவையே… மணி அடித்து விரட்டிய நாடு அல்லவா அது. 😂

ஒரு முட்டாள் மணியடிக்கச் சொல்ல… முழு நாடும் தெருவில் இறங்கி ஒலி எழுப்பியதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. 🤣

அது வரலாறு,...தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியது

,.🤣

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னை விமான சாகசத்தை காணச் சென்ற 5 பேர் உயிரிழப்பா? தமிழ்நாடு அரசு பதில்

சென்னை, இந்திய விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,X/MKSTALIN

படக்குறிப்பு, சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியைப் பார்வையிட லட்சக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் திரண்டனர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 6 அக்டோபர் 2024
    புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர்

சென்னையில் ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்றவர்களில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு இதனை மறுத்துள்ளது.

கடும் போக்குவரத்து நெரிசல்

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6ம் தேதி நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட லட்சக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டனர்.

இந்த நிகழ்ச்சி பிற்பகல் ஒரு மணிக்கு முடிவுக்கு வந்தபோது, கடற்கரையில் குவிந்திருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றனர். இதனால், அந்த பகுதியில் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெரினாவை ஒட்டியுள்ள காமராஜர் சாலைக்கு இணையாகச் செல்லும் அண்ணா சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை, இந்திய விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மெரினாவை நோக்கிச் செல்லும் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

5 பேர் உயிரிழப்பா?

இந்த நெரிசலில் சிக்கியும் வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் ஏற்பட்ட நீரிழப்பினாலும் சுமார் 200 பேர் வரை மயக்கமடைந்ததாகவும், 90க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

திருவொற்றியூரை சேர்ந்த 34 வயதான கார்த்திகேயன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பும் போது INS அடையாறு அருகே நெஞ்சை பிடித்துக்கொண்டு, வாந்தி எடுத்து மயக்கமடைந்தார், ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார், ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என்று ஊடக செய்திகள் கூறுகின்றன.

இதேபோல, சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஜான் பாபு, பெருங்களத்தூரை சேர்ந்த 48 வயதான சீனிவாசன், தினேஷ் ஆகியோரும் மயக்கமடைந்து பிறகு உயிரிழந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன. ஆந்திராவைச் சேர்ந்த இதுவரை அடையாளம் காணப்படாத ஒருவரும் உயிரிழந்துவிட்டதாக அந்த செய்திகள் கூறுகின்றன.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், விமான சாகச நிகழ்ச்சிக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததே உயிரிழப்புகளுக்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

தமிழ்நாடு அரசு மறுப்பு

தமிழ்நாடு அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒரு முறையும் பின்னர் துறை அளவில் பல முறையும் நடத்தப்பட்டன.

இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப் படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்களும் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

இது மட்டுமின்றி இந்திய இராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக நாற்பது ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

கூட்டத்தில் யாரும் உயிரிழக்கவில்லை - தமிழ்நாடு அரசு

இது தொடர்பாக அரசு அனுப்பிய சிறு தகவல் குறிப்பில், விமானக் காட்சியைப் பார்க்க வந்தவர்கள் யாரும் ராயப்பேட்டை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வரவில்லையென்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் இரண்டு பேர் வேறு சில உடல்நலப் பிரச்சனைகளால் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது உடல்நலம் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் யாரும் மரணமடையவில்லையென்றும் எந்த ஒரு மரணமும் நெரிசலாலோ, மோசமான ஏற்பாடுகளாலோ நடக்கவில்லையென்றும் அந்தத் தகவல் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சென்னை, இந்திய விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் போதுமானதாக இல்லையென நிகழ்ச்சிக்குச் சென்றவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கவனம் ஈர்த்த கனிமொழி பதிவு

தமிழ்நாடு அரசு இவ்வாறாக பதிலளித்திருந்த நிலையில், மாநிலத்தில் ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தகவல் கவனம் ஈர்ப்பதாக அமைந்துள்ளது. "விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது." என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்ததே அதற்குக் காரணம்.

சென்னை, இந்திய விமானப்படை சாகசம்

பட மூலாதாரம்,X/KANIMOZHI

ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை எனக் குற்றச்சாட்டு

மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் போதுமானதாக இல்லையென நிகழ்ச்சிக்குச் சென்றவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். காலை 11 மணிக்குத் துவங்கவிருந்த நிகழ்ச்சிக்காக, காலை எட்டரை மணியில் இருந்தே பொதுமக்கள் கடற்கரையில் கூட ஆரம்பித்தனர்.

காலை எட்டு மணியிலிருந்தே செங்கல்பட்டு - கடற்கரை, திருவள்ளூர்- சென்ட்ரல், வேளச்சேரி - சிந்தாதிரிபேட்டை ஆகிய வழித்தடங்களில் உள்ள உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்கவே மிகப் பெரிய வரிசை நின்றது. இதனால், பலர் இந்த நிகழ்ச்சிக்குச் செல்லும் திட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்பினர்.

சென்னை மெட்ரோ ரயிலின் இரு வழித்தடங்களிலும் கடுமையான கூட்டம் இருந்தது. டிக்கெட் கவுன்டர்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால், கியூஆர் கோடைப் பயன்படுத்தி டிக்கெட் எடுக்க பலரும் ஒரே நேரத்தில் முயன்றதால், சிறிது நேரம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. மெட்ரோ ரயிலைப் பொறுத்தவரை வண்ணாரப்பேட்டை - ஏஜிடிஎம்எஸ் வழித்தடத்தில் மூன்றரை நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. இருந்தபோதும் கூட்டம் குறையவில்லை.

காலை பத்து மணியளவில் பல லட்சம் பேர் கடற்கரையில் குவிந்தனர். இருந்தபோதும் இவர்களுக்கென போதுமான குடிநீர், கழிப்பட வசதிகள் செய்துதரப்படவில்லையென நிகழ்ச்சியைக் காணவந்த பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

பிற்பகல் ஒரு மணியளவில் சாகசம் நிறைவடைந்த போது கடற்கரையில் கூடியிருந்த அனைவரும் ஒரே நேரத்தில் அங்கிருந்து வெளியேற முயற்சித்தனர். இதனால், காமராஜர் சாலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.

கடற்கரையை ஒட்டிய பறக்கும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், திருமயிலை, வேளச்சேரி ரயில் நிலையங்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் குவிந்தனர். பறக்கும் ரயிலைப் பொருத்தவரை, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி வழித்தடத்தில் விடுமுறை நாள்களுக்கான நேர அட்டவணைப்படியே அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் என்ற எண்ணிக்கையிலேயே ரயில்கள் இயக்கப்பட்டதால் ரயில் நிலையங்களில் கூடியிருந்தவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

New-Project-11-1.jpg?resize=750,375&ssl=

இந்திய விமான சாகச நிகழ்வு சோகம்: ஸ்டாலின் அரசுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்!

சென்னையில் நேற்று (06) நடைபெற்ற இந்திய விமானப்படையின் (IAF) விமான கண்காட்சியின் போது 5 பார்வையாளர்கள் இறந்ததுடன் 200 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து தமிழக அரசு எதிர்க்கட்சிகளின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்திய விமானப் படையின் 92 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலட்சக்கணக்கான மக்கள் நெரிசல், அடிப்படை வசதிகள் மற்றும் கடுமையான வெப்பத்தில் போராடியமையினால் இந்த நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிகழ்வினை காண்பதற்கு சுமார் 16 இலட்சம் பேர் வருகை தந்திருந்தாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தற்சமயம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது கடுமையான கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி

விமானப் படை சாகச நிகழ்வில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசின் நிா்வாகச் சீா்கேடே காரணம் என்று எதிா்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக்கூட முறையாக ஒருங்கிணைக்கத் திமுக அரசு தவறியுள்ளது. இதற்கு நிா்வாகச் சீா்கேடே காரணம் என்று அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத்தின் மீது அவர் நேரடியாக பழியை சுமத்தி கண்டனம் வெளியிட்டிருந்தார்.

அண்ணாமலை
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் சம்பவத்தில் அரசு அலட்சியமாக செயற்பட்டதாக குற்றம் சாட்டியதுடன், சரியான வசதிகள் இருந்திருந்தால், இறப்புகள் மற்றும் காயங்களை தடுத்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், முதல்வர் ஸ்டாலினை குறிவைத்து பேசிய அண்ணாமலை, இந்த சம்பவம் தி.மு.க. நிர்வாகத்தின் முழுமையான தோல்வி என்றும் குற்றம் சாட்டினார்.

ஷெசாத் பூனவல்லா

சென்னை விமான கண்காட்சியில் 5 பேர் உயிரிழந்தது மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது சோகம் அல்ல, இது ஒரு அரசு நடத்திய கொலை மற்றும் பேரழிவுக்கு திமுக அரசும், முதல்வரும் (மு.க.ஸ்டாலினும்) நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.

மேலும் அரசின் வம்சம் மற்றும் ஊழலை உயர்த்துவதே இந்த சம்பவத்திற்கு காரணம்.

எனவே, இதற்கு திமுக அரசு பொறுப்பு கூற வேண்டும் என்பதுடன், முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

கனிமொழி

சென்னையில் நடைபெற்ற விமானப்படை விமான கண்காட்சியில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக 5 பேர் உயிரிழந்தது வருத்தமும் வேதனையும் அளிப்பதாக திமுக எம்.பி கனிமொழி திங்கள்கிழமை கூறியதுடன், கட்டுப்பாடற்ற கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் தான். ஆனால் அதை யாரும் அரசியல் செய்ய நினைக்க கூடாது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய நினைத்தால் தோல்வி தான் அடைவார்கள்.

மா.சுப்பிரமணியன்

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். விமானப்படை கேட்ட அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தது. சாகச நிகழ்ச்சியின் நேரத்தை முடிவு செய்தது விமானப்படை தான். கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1402863

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய விமானப்படை இந்தியர்களையும் காவு வாங்க ஆரம்பித்து விட்டது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னை விமான சாகச நிகழ்வில் 240 பேர் மயக்கம்; சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழப்பு

07 OCT, 2024 | 12:11 PM
image

இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெயில், நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

மெரினாவில் இருந்த தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 93 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் திருவொற்றியூர் கார்த்திகேயன் (34), ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட தினேஷ்குமார் (37), கொருக்குப்பேட்டை ஜான் பாபு (56), பெருங்களத்தூர் சீனிவாசன் (52) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மெரினா காமராஜர் சாலை அருகே மயங்கி கிடந்த 55 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

chennai_airforce.jpg

பொதுமக்கள் பலர் கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக மயங்கி விழுந்தனர்.

முறையான முன்னேற்பாடுகள் இல்லாததால் அவதி என புகார்: பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்க போக்குவரத்து போலீஸார் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்திருந்தனர். குறிப்பாக மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக வேறு சாலைகளை பயன்படுத்த போலீஸார் அறிவுறுத்தியிருந்தனர். ஆனாலும், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விமான சாகச நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே போக்குவரத்து நெரிசல் படிப்படியாக உயர்ந்தது. 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 1 மணிக்கு முடிந்தது. அதன்பின், ஒரே நேரத்தில் பொதுமக்கள் கிளம்பியதால் மெரினா காமராஜர் சாலை, சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையார் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே, ஐஸ்அவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம்.தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் நெரிசலால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினர். உட்புற சாலைகளை பயன்படுத்தலாம் என சென்ற வாகனங்கள் நெரிசலில் சிக்கின. தொடர் வாகன நெரிசலால் அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், வேப்பேரி, சென்ட்ரல், பாரிமுனை வரையிலும் நெரிசல் உணரப்பட்டது. மொத்தத்தில் சென்னையே வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது.

அண்ணா சாலையில் ஏற்பட்ட வாகன நெரிசல்.

நிகழ்வு முடிந்து நடந்து சென்றவர்கள், வாகனத்தில் சென்றவர்கள் என ஒரே இடத்தில் சந்தித்து நெரிசலில் நகர்ந்து செல்ல முடியாமல் தடுமாறினர். பெற்றோர் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல முடியாமல் திணறினர். அதிகளவில் வெயில் வாட்டியதால் குழந்தைகள், சிறுவர்கள், முதியோர் சோர்வடைந்தனர். பலர் மயங்கினர். சிந்தாதிரிப்பேட்டை யில் பைக் ஒன்று அதிக வெயில் மற்றும் இன்ஜின் வெப்பத்தால் தீப்பற்றி எரிந்தது. விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கின. காவல், போக்குவரத்து, ரயில்வே துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததே மக்களின் அவதிக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரயில்கள், பேருந்துகளில் கூட்ட நெரிசலில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த மக்களின் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் ‘மோசமான ஏற்பாடு’ என்று தலைப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை ‘டேக்’ செய்து பலர் பதிவிட்டு வருகின்றனர். அந்த போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சியை காண நேற்று லட்சக்கணக்கானோர்

குவிந்ததால் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதில் ஆம்புலன்ஸ்களும் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் திணறின.

லட்சக்கணக்கானோர் ஏமாற்றம்: விமான வான் சாகச நிகழ்ச்சியை கண்டுகளிக்க சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மின்சார ரயில், மெட்ரோ ரயில், பேருந்துகள் மூலமாக ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதலே சென்னை மெரினா கடற்கரை நோக்கி மக்கள் வரத் தொடங்கினர். நேரமாக நேரமாக மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்தது. காலை 8 மணிக்கு பிறகு, செங்கல்பட்டு - கடற்கரை, திருவள்ளூர்- சென்ட்ரல், வேளச்சேரி - சிந்தாதிரிபேட்டை ஆகிய மார்க்கங்களில்உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்தது.

வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் குவிந்திருந்த கூட்டம்.

குறிப்பாக செங்கல்பட்டு- சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் ஏற முடியாமல் தவித்தனர்.

இதனால், பெரும்பாலானோர் சாகச நிகழ்ச்சியை பார்க்கும் எண்ணத்தை கைவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயிலில் ஏற முடியாமல் போன நூற்றுக்கணக்கானோர் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தை நோக்கி தண்டவாளத் திலேயே நடந்து சென்றனர். மின்சார ரயிலைப்போல், மெட்ரோ ரயில்களிலும் காலை முதலே கூட்டம் நிரம்பி வழிந்தது. விமான நிலையம், ஆலந்தூர், கிண்டி, அரசினர் தோட்டம், சென்ட்ரல் உட்பட முக்கிய மெட்ரோரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

chennai_airforce_2.jpg

ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ‘க்யூஆர்’ கோடு மூலமாக டிக்கெட் எடுக்க முயன்றதால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. மக்களின் வசதிக்காக, வண்ணாரப்பேட்டை - ஏஜி டிஎம்எஸ் மார்க்கத்தில் மூன்றரை நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. இருப்பினும், கூட்ட நெரிசல் தொடர்ந்தது. சில இடங்களில் எஸ்கலேட்டர்கள், ஸ்கேனர்கள் இயங்காததால் மெட்ரோ ரயில் ஊழியர்களும் ஸ்தம்பித்து நின்றனர்.

விமான சாகச நிகழ்ச்சி நடைபெறும்போது, கண்டுகளிக்க லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என அறிந்தும் அரசும், ரயில்வே துறையும் போதிய மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர்.

https://www.virakesari.lk/article/195669

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

இத்தனை சாகசங்கள் காட்டிய இந்திய விமானப்படையால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக ஹெலிஹொப்டரில் எயார் லிப்ட் செய்து அவர்கள் உயிரை காப்பாற்ற முடியவில்லை? ஆக மொத்தத்தில் வேடிக்கை காட்டவே இவர்கள் லாயக்கு? ஒரு அனர்த்தனம் வந்தால் அதிலிருந்து மக்களை காப்பாற்றுவார்களா என்பது சந்தேகமே.

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.