Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஒக்டோபர் 5ஆம் திகதி இரவு சுமார் 10.45 மணியளவில், ஈரானில்(iran) ரிக்டர் அளவுகோலில் 4.6 என்ற அளவில் வலுவான நிலநடுக்கம்(earth quake) ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் மையம் ஈரானின் செம்னான் மாகாணத்தில் உள்ள அரடன் நகருக்கு அருகில் 10 கி.மீ தொலைவில் நிலத்தடியில் பதிவாகியுள்ளது.நிலநடுக்கத்தின் அளவு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உணரப்பட்டது.

இரகசியமாக பூமிக்கடியில் அணு ஆயுத சோதனை

ஈரானை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு ஈரான் புரட்சிப் படை இரகசியமாக பூமிக்கடியில் அணு ஆயுத சோதனை நடத்தியதே காரணம் என இஸ்ரேல் சந்தேகம் வெளியிட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

ஈரானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : பின்புலம் தெரியுமா..! | Iran Earthquakes Caused By Nuclear Tests

ஈரானின் அணுசக்தி திட்டத்தால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை தொடங்கியுள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலின் குற்றச்சாட்டு

இருப்பினும், ஈரான் அணு ஆயுதங்களை இரகசியமாக தயாரித்து வருவதாக இஸ்ரேல்(israel) குற்றம் சாட்டுகிறது.

ஈரானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : பின்புலம் தெரியுமா..! | Iran Earthquakes Caused By Nuclear Tests

இதற்கிடையில், ஈரான் சமீபத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியதற்கு பதிலடியாக ஈரானைத் தாக்கி, ஈரானிய ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://ibctamil.com/article/iran-earthquakes-caused-by-nuclear-tests-1728384521#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல்காரனுகள் ஈரானுக்கு செமையா போடப்போறானுகள்போலை கிடக்கு. செத்தகிளிதான் பாவம் வாய்மூடி மௌனியாக இருக்கு!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னொரு ஈராக்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குளவிக்கூட்டிற்கு கல்லால் எறிவது போல........ கல்லால் எறிந்து விட்டு, ஈரான் ஓடிப் போய் பதுங்கிவிடும். பக்கத்தில் இருக்கும் பாலஸ்தீனமும், லெபனானும் தான் குளவியிடம் கொட்டு வாங்கவேண்டும்.......

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

ஈரானில்(iran) ரிக்டர் அளவுகோலில் 4.6 என்ற அளவில் வலுவான நிலநடுக்கம்(earth quake) ஏற்பட்டது.

 

Just now, ரசோதரன் said:

குளவிக்கூட்டிற்கு கல்லால் எறிவது போல........ கல்லால் எறிந்து விட்டு, ஈரான் ஓடிப் போய் பதுங்கிவிடும். பக்கத்தில் இருக்கும் பாலஸ்தீனமும், லெபனானும் தான் குளவியிடம் கொட்டு வாங்கவேண்டும்.......

4.6 வலுவான நிலநடுக்கம் என்றால் @ரசோதரன்  னும் @நீர்வேலியான் னும் தினம்தினம் இதே அளவில் குலுங்குகின்றனரே?

அப்படி குலுங்கி போட்டும் எதுவுமே நடக்காத மாதிரி இருக்கிறார்களே? எப்படி?

அப்படி குலுங்கி போட்டும் எதுவுமே நடக்காத மாதிரி இருக்கிறார்களே? எப்படி?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

இன்னொரு ஈராக்???

1993ல் இருந்த சூழல் தற்போது இல்லை. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியும் அதனை இலகுவாக அடையக்கூடிய வசதிகளும் 1990 களில் இல்லை. அது தவிர தற்பொழுது ஈரானிடம் பத்திற்கும் மேற்பட்ட அணுக்குண்டுகள் இருப்பதாக நம்பபடுகிறது. மற்றயது, கோவிற்றுக்குப் பிந்திய உலக பொருளாதார நிலை. போர் ஏற்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய மசகு எண்ணை விலையேற்றம் போன்ற காரணங்களால் மத்திய கிழக்கில் முழுமையான ஒரு யுத்தத்தை எவரும் விருமப்போவதில்லை. 

ஆனாலும் உசார் மடையர்களால் உலகம் நிரம்பியிருப்பதால் எப்பவும் எதுவும் எங்கேயும்  நடக்கலாம். 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, Kapithan said:

ஆனாலும் உசார் மடையர்களால் உலகம் நிரம்பியிருப்பதால் எப்பவும் எதுவும் எங்கேயும்  நடக்கலாம். 

எல்லா போர்வாதிகளும் அமைதியை விரும்புபவர்களும் அமெரிக்க தேர்தல் முடிவை எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.
எனவே அமெரிக்கர்களுக்கும் டொனால்ட் ரம்ப் ஜனாதிபதியாக வரவேண்டும். உலக அமைதிக்கும் டொனால்ட் ரம்ப் வர வேண்டும்.

இஸ்ரேலுக்கு நல்ல பேதிமருந்து குடுக்க ரஷ்யாவால் மட்டுமே முடியும். 😎

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஈழப்பிரியன் said:

 

4.6 வலுவான நிலநடுக்கம் என்றால் @ரசோதரன்  னும் @நீர்வேலியான் னும் தினம்தினம் இதே அளவில் குலுங்குகின்றனரே?

அப்படி குலுங்கி போட்டும் எதுவுமே நடக்காத மாதிரி இருக்கிறார்களே? எப்படி?

என்னண்ணை நீங்க மருந்து போத்தலை குலுக்கிற மாதிரி சொல்கிறீங்க!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஏராளன் said:

என்னண்ணை நீங்க மருந்து போத்தலை குலுக்கிற மாதிரி சொல்கிறீங்க!

 

அதே தான்.கேட்டுப் பாருங்க.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

அதே தான்.கேட்டுப் பாருங்க.

அண்ணை அப்ப நாங்கள் வசிப்பது ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடத்தில் எல்லோ!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஏராளன் said:

என்னண்ணை நீங்க மருந்து போத்தலை குலுக்கிற மாதிரி சொல்கிறீங்க!

 

🤣..............

2 hours ago, ஈழப்பிரியன் said:

அதே தான்.கேட்டுப் பாருங்க.

'சும்மா அதிருதில்ல..............' என்பதை நீங்கள் தியேட்டரில் பார்த்திருப்பீர்கள், டீவியில் பார்ட்த்திருப்பீர்கள்........ஏன் ஃபோனில் கூட பார்த்திருப்பீர்கள்........... ஆனால் நாங்கள் காலுக்கு கீழ பார்த்துக் கொண்டிருக்கிறம்..........

பூமிஅதிர்வின் மையம், எபிசென்டர், என்னுடைய வீட்டுக்கு கீழே கூட ஒரு நாள் இருக்கப் போகின்றது.

பூமி எங்கே அதிகமாக வெடிக்கக் கூடும் என்று ஒரு வரைபடம், விஞ்ஞான ரீதியானது, இருக்கின்றது. கையில் இருக்கும் ரேகைகள் போல கன்னாபின்னாவென்று இந்த ஏரியா முழுக்க கோடுகள் கீறி வைத்திருக்கின்றார்கள். 

ஆனாலும்......... தென் கலிஃபோர்னியாவில் கூட்டத்திற்கும், விலைக்கும் குறைவே இல்லை. அதிர அதிர வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.......🤣.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேர்மையான அமைச்சர். மற்றவர்கள் கண்டுபிடித்து பிரச்சினை கிளப்ப முதல்  தானாகவே அறிவித்து மாற்றி விட்டார்.  
    • வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஆண் : ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை ஆண் : பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே ஆண் : கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க ஆண் : பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை ஆண் : கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன ஆண் : மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும் ஆண் : பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் ஆண் : தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் ஆண் : மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க.......!   --- ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க ---
    • சிலர் வியாபாரத்துக்காக... கலப்படம் செய்து விற்பதால், வாழ்வாதரத்திற்காக  கஸ்ரப்பட்டு சுத்தமான  தேனை சேகரித்து விற்பவர்களிடமும்  நம்பி வாங்க பயமாக உள்ளது.
    • 13 DEC, 2024 | 04:15 PM சீனிப்பாணியை தயாரித்து தேன் என விற்பனை செய்துவந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்பார்வை சுகாரதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில், நெளுக்களம் பொதுசுகாதார பரிசேதகர் சிவரஞ்சன் தலைமையில், ஒமந்தை பொதுசுகாதார பரிசேதகர் விதுசன், கந்தபுரம் பொதுசுகாதார பரிசேதகர் ஞானபிரஹாஸ், பூவரசங்குளம் பொதுசுகாதார பரிசேதகர் கிசோகாந் ஆகிய அணியினர் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து ஊர்மிலாக்கோட்டம் பகுதியிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்ட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இடங்களில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 200 போத்தல் சீனிப்பாணி சுகாதாரப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை சீனிப்பாணியை தயாரித்து அதற்குள் சிறிதளவு தேனை மாத்திரம் கலந்து எ9வீதியின் முறிகண்டிப்பகுதியிலும்,நெடுங்கேணி பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் இங்கிருந்து அனுராதபுரம் மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவை கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இது உடல் நலத்திற்கு தீங்குவிளைவிக்கின்றது. எனவே பொதுமக்கள் தேனை கொள்வனவு செய்யும் போது சரியானமுறையில் உறுதிப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்யுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/201159
    • நன்றி உடையார், அடுத்த முறை எவ்வளவு செலவு என்றாலும் பரவாயில்லை   "சான்ட்விச்"  மசாஜ் தான், செய்யிறது. 😂 🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.