Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

image_d1faccea90.jpg

 எஸ்.ஆர்.லெம்பேட் 

  பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வன்னி மாவட்ட களத்தில் வேட்பாளராக  மன்னார் தொகுதியில் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன்  மாத்திரமே உறுதி செய்யப் பட்டுள்ளார்.
மேலும் இரு வேட்பாளர்கள் தெரிவில் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன், தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்குவதாக ஆரம்பத்தில் அறிவித்திருந்தார். எனினும்,  ஆதரவாளர்களின் வற்புறுத்தல்களால் பொதுத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தார். எனினும், அதிலிருந்து     வெளியேறுவதாக, செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் மன்னாரில் இருந்து மேலும் இரு வேட்பாளர்களை தெரிவு செய்ய மன்னார் தமிழரசுக்கட்சி கிளை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் பலர் தமிழரசுக் கட்யினால் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ள போதும்,இதுவரை அவர்கள் தமது விருப்பத்தை தெரிவிக்கவில்லை என தெரிய வருகிறது.

 இந்நிலையில் வன்னித் தேர்தல் தொகுதியில்,  தமிழரசுக் கட்சியின் முடிவு, வியாழக்கிழமை(10)  இறுதிபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Tamilmirror Online || மீண்டும் வெளியேறினார் சாள்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, பிழம்பு said:

எனினும், அதிலிருந்து     வெளியேறுவதாக, செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் மன்னாரில் இருந்து மேலும் இரு வேட்பாளர்களை தெரிவு செய்ய மன்னார் தமிழரசுக்கட்சி கிளை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் பலர் தமிழரசுக் கட்யினால் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ள போதும்,இதுவரை அவர்கள் தமது விருப்பத்தை தெரிவிக்கவில்லை என தெரிய வருகிறது.

yamato-sinking-ship.gif

தமிழரசு கட்சியின் சின்னத்துடன்... தேர்தலில் நிற்க எல்லோரும் பயப்படுகின்றார்கள் போலுள்ளது. 🤣
தாழுகின்ற கப்பலில் யாராவது ஏறுவார்களா. 😂

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, தமிழ் சிறி said:

yamato-sinking-ship.gif

தமிழரசு கட்சியின் சின்னத்துடன்... தேர்தலில் நிற்க எல்லோரும் பயப்படுகின்றார்கள் போலுள்ளது. 🤣
தாழுகின்ற கப்பலில் யாராவது ஏறுவார்களா. 😂

அதற்கு காரணம்  தமிழரசு கட்சிகள்  பல  இருப்பது தான்  

எது உண்மையான தமிழரசு கட்சி என்று கண்டு பிடிக்கவில்லை  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெளியெற முதல் சுமத்திரனுக்கு கடிதம் அனுப்புங்கோ ....ஐயோ அவர் கடிதம் எனக்கு போடவில்லை சுமத்திரன் மற்றும் சத்தியலிங்கம் மீண்டும் அறிக்கை விட அதையும நாங்கள் வாசிக்க ...தாங்கமுடியல்ல

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தமிழ் சிறி said:

yamato-sinking-ship.gif

தமிழரசு கட்சியின் சின்னத்துடன்... தேர்தலில் நிற்க எல்லோரும் பயப்படுகின்றார்கள் போலுள்ளது. 🤣
தாழுகின்ற கப்பலில் யாராவது ஏறுவார்களா. 😂

தமிழரசுக்கட்சியில் போட்டியிடுவதால், தாம் வெற்றியடையப்போவதில்லை என்பதுடன் தமது எதிர்கால அரசியல் பாதிக்கப்படும் என பயப்படுகிறார்கள் இளையவர்கள். முக்கிய காரணம் சுமந்திரன் என்பதை சுட்டிக்காட்டாமல் ஒருசிலரின் செயற்பாடு என்கிறார்கள். சாள்ஸ் நிர்மலநாதன் தான் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்தாலும், சுமந்திரன் தானும் அத்தகைய முடிவை எடுக்க வேண்டும், அதை தவிர்ப்பதற்காக அவரை கைக்குள் போட்டுக்கொண்டார். என்னை கட்சி வற்புறுத்தியது, மக்கள் கேட்டுக்கொண்டார்கள் என்று புலுடா விட முடியாதென்பதால், சூட்ச்சுமகாக இவர்களை அணைத்துக்கொண்டார் சுமந்திரன். இப்போ, அவர்களுக்கே அவமானமாக இருப்பதால், மீண்டும் நழுவிவிட்டார் சாள்ஸ். மக்கள் கேட்டுக்கொண்டார்கள் என்பதெல்லாம் பொய். சுமந்திரன் என்று சொல்ல வாய் வரவில்லை. சிறீதரனும் விலகா விட்டால் வருத்தப்படுவார். சுமந்திரனை தனியே விடவும், அப்போதான் அவரின் திறமை, மக்கள் அவர்மேல் வைத்திருக்கும் நம்பிக்கை வெளிப்படும். கும்பலில கோவிந்தா என்று கூவி விட்டு, நான் தான் பொருத்தமானவர் என்று சொந்தம் கொண்டாடுவார். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.