Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடுவோம்; சுமந்திரன் நம்பிக்கை

 

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் பெரும் ஆதரவுடன் நாங்கள் வெற்றியடைவோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்குக்  கருத்து வெளியிடும்போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

” இலங்கை தமிழரசுக் கட்சியால் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (நேற்று) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எமது கட்சியில் சிவஞானம் சிறீதரனை முதன்மை வேட்பாளராக உள்ளடக்கி இந்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வவுனியாவிலே வேட்புமனுவைத் தாக்கல் செய்கின்ற காரணத்தினாலே யாழ். மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர் இந்த வேட்புமனுவைக் கையளித்துள்ளார்.

நாளை(இன்று) வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் காலம் முடிவடைகின்றபோது அந்த வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்று அறிந்து எங்களுடைய மற்றைய கருத்துக்களை நாங்கள் சொல்வோம்.

ஆனாலும், இந்தத் தடவை எங்களுடைய வேட்புமனுவிலே இளையவர்களுக்கும் ஆற்றல் உள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பல தடவைகள் நாங்கள் சொல்லி வந்த போதும் அது இந்தத் தடவை பெருமளவுக்குச் சாத்தியமாகி இருக்கின்றதென்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கின்றோம்.

அதிலும் இம்முறை இரண்டு பெண் வேட்பாளர்களை நாங்கள் நிறுத்தியுள்ளோம். அதிலும் கடந்த தேர்தலை விடவும் ஒன்றிலிருந்து இரண்டாக உயர்ந்துள்ளமை நூறு சதவீத அதிகரிப்பாகும்.

எங்களுடைய வேட்பாளர்களின் சராசரி வயது 48 ஆகும் . இந்த ஒன்பது பேரினதும் சராசரி வயது ஐம்பதுக்கும் குறைவாகத்தான் இருக்கின்றது. இது முற்போக்கான நல்ல விடயம் என்பதையும் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.” என்றார்.

https://thinakkural.lk/article/310569

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கால  பிரதமர் சும்தான் என்று..ஏ.கே.டி ..ஆழ்மனதில் சொல்லியாச்சாமே...நம்ம அச்சுவேலி பய புள்ளை ஒருதர் அடீச்சு சோல்லுறார்...உண்மையா...

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, alvayan said:

எதிர்கால  பிரதமர் சும்தான் என்று..ஏ.கே.டி ..ஆழ்மனதில் சொல்லியாச்சாமே...நம்ம அச்சுவேலி பய புள்ளை ஒருதர் அடீச்சு சோல்லுறார்...உண்மையா...

சும்முக்கு... கட்டுக்காசு ஆவது வருமா என்று தெரியவில்லை. 
அதுக்குள்ளை.... வாயாலை, வடை  சுட்டுக் கொண்டு இருக்கிறார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5h 
 
2024 இல் தமிழ்த் தேசியம் தேவையா?
இந்த நாட்டுக்கு வயது எத்தனையோ, அத்தனை வயது தமிழரசுக் கட்சிக்கும் உண்டு.
அன்றிலிருந்து இன்று வரை தமிழர் தம் சுயாட்சிக்கான ஓயாத அரசியற் குரலாகத் தமிழரசுக் கட்சி ஒலித்து வந்திருக்கிறது.
இன்று எம் மக்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. போரின் பின்னான இந்தப் 15 ஆண்டுகளில் தனித்த தமிழ் அரசியலால் விளைந்த நன்மைகள் என்ன? தமிழ்த் தேசியம் இன்றும் அவசியமானதா? தென்னிலங்கையில் மக்கள் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் மாற்றத்தில் நாமும் இணைந்து கொண்டால் என்ன? போன்ற கேள்விகளை எமது மக்கள் பலர் கேட்கிறார்கள்.
இந்த நிலைக்கு மக்கள் வந்திருப்பதற்கு போரின் பின்னான தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் நாம் கண்ட மறுதலிக்க முடியாத கோளாறுகள் பலவும் காரணம் என்பது நிதர்சனம். இதற்கு இந்த அரசியல் வெளியில் பயணித்து தவறியவர்களுக்கும், அப்படிப்படவர்களைக் கிரமமாக அப்புறப்படுத்தத் தவறியவர்களுக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது.
நிற்க, தமிழ்த் தேசிய அரசியலுக்கு இன்றும் தேவைப்பாடு இருக்கிறதா என்ற கேள்வியை மாற்றம் வேண்டும் மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டிய கடைப்பாடு இருக்கிறது.
தேசிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணியோடு ஊழல் எதிர்ப்பு, அரசியல் கலாச்சார மாற்றம், சட்டத்தின் முன் சமவுரிமை என்ற விடயங்களில் தமிழரசுக் கட்சிக்கு உடன்பாடுண்டு. அந்த விடயங்களிலே நாம் அந்தக் கட்சியின் அரசாங்கத்தோடு ஒத்துழைப்போம்.
ஆனால் தேசிய மக்கள் சக்தியின் சிறுபான்மைகள் தொடர்பான நிலைப்பாடுகள் மாற வேண்டும். எண்ணிக்கையில் சிறிதான மக்கள் கூட்டங்களுக்குப் பெரும்பான்மை மக்களது அரசியல் அபிலாசைகளைத் தாண்டிய, பிரத்தியேகமான அரசியல் அபிலாசைகள் இருக்கின்றது என்பதை அந்தக் கட்சி வெளிப்படையாக ஏற்க, குறிப்பாக சிங்கள மக்களிடையே சொல்ல இன்றும் தயங்கி வருகிறது. ஊழலற்ற இலங்கை என்பது மட்டும் தமிழர் எம் அரசியற் பிரச்சினைக்குத் தீர்வாகிவிடாது.
தமிழர்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளைத் தாண்டி ஆளும் கட்சிக்குப் கணிசமான வாக்குகளைச் செலுத்துவதென்பது, தமிழர்களுக்குத் தேசியப் பிரச்சினை ஒன்றில்லை என்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுவான நிலைப்பாட்டை மெய்ப்பிப்பதாகவே அமையும். அனுர குமார திசானாயக 2015-2017 வரை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் வரையப்பட்ட புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதாகச் சொல்லியிருக்கிறார். தமிழ்த் தேசிய வெளியிலிருந்து தமிழ் வாக்குகள் அகல்வது, அந்த அரசியலமைப்பு நிறைவேற்றல் நடவடிக்கையில் தமிழரது அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைப்பாட்டை நீர்த்துப் போகப்பண்ணும்.
இந்தத் தேர்தலில் 2024 இல் தமிழ்த் தேசிய அரசியல் அவசியமா என்ற கேள்விக்குப் மக்கள் சொல்லும் பதில் கனதியானது. அந்தப் பதில் தீர்க்கமான “ஆம்” ஆக இருக்க வேண்டும்.
இல்லாது போனால் எமது பிரதேசங்களில் (எமது ஆட்புலத்தில்), எமது வாழ்வாதாரத்தை (எமது ஆதாரத்தை), நாமே ஆளுகை செய்யும் எமது நீண்ட கால அரசியல் போராட்டத்தின் அடிப்படைகளையே கேள்விக்குட்படுத்துவதாய் வந்து முடியும்.
இதனாற் தான் வேட்பு மனுத்தாக்கிய கையோடு இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவின் சிலைக்கு நாம் மாலை அணிவித்தோம். நாம் அன்றும் இன்றும் ‘தமிழ் அரசு’க் கட்சி.
May be an image of 1 person, monument, temple and text
 
 
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

சும்முக்கு... கட்டுக்காசு ஆவது வருமா என்று தெரியவில்லை. 
அதுக்குள்ளை.... வாயாலை, வடை  சுட்டுக் கொண்டு இருக்கிறார். 

நேற்று சிலோனுக்கு ரெலிபோன் எடுத்து ஒரு நண்பருடன் கதைத்தேன்.அரசியல்  பற்றி கதைக்கும் போது ...தமிழ் அரசியலில் சுமந்திரனை மாதிரி ஒரு பச்சைக்கள்ளன் ஒருத்தனும் இல்லை என சொன்னார்.பாராளுமன்ற கதிரைக்காக சுக போக வாழ்க்கைக்காக எதையும் செய்யக்கூடியவர் என சொல்லி திட்டித்தீர்த்தார்.

இன்னுமொரு விடயத்தையும்  சொன்னார். அதாவது இவங்கள் செய்யிற  பொய் பிரட்டுக்களால தமிழ்ச்சனம் அனுர பக்கத்துகுத்தான் வாக்களிக்கும் போல கிடக்கு என்றார்.


வெறுப்பு அரசியல் காலம். 😎
 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:
3 hours ago, தமிழ் சிறி said:

சும்முக்கு... கட்டுக்காசு ஆவது வருமா என்று தெரியவில்லை. 
அதுக்குள்ளை.... வாயாலை, வடை  சுட்டுக் கொண்டு இருக்கிறார். 

நேற்று சிலோனுக்கு ரெலிபோன் எடுத்து ஒரு நண்பருடன் கதைத்தேன்.அரசியல்  பற்றி கதைக்கும் போது ...தமிழ் அரசியலில் சுமந்திரனை மாதிரி ஒரு பச்சைக்கள்ளன் ஒருத்தனும் இல்லை என சொன்னார்.பாராளுமன்ற கதிரைக்காக சுக போக வாழ்க்கைக்காக எதையும் செய்யக்கூடியவர் என சொல்லி திட்டித்தீர்த்தார்.

இன்னுமொரு விடயத்தையும்  சொன்னார். அதாவது இவங்கள் செய்யிற  பொய் பிரட்டுக்களால தமிழ்ச்சனம் அனுர பக்கத்துகுத்தான் வாக்களிக்கும் போல கிடக்கு என்றார்.


வெறுப்பு அரசியல் காலம்

பெரிசுகள் வழமை போல வீட்டுக்குப் போடுவார்கள்.

போனஸ் க்கு அடிபாடு நடக்லாம்.

சுமந்திரன் தேர்தலில் வெல்லாவிட்டால் போனசில் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி / சுயேட்சைக்குழு ஒரு உறுப்பினரை பெறுவதற்கான ஆகக்குறைந்த எண்ணிக்கையிலான வாக்கை தீர்மானிப்பது எப்படி?? (* திருத்திய பதிப்பு)

// அரசியலமைப்பின் 99(6) (அ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய, ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1/20 க்கு (5%) குறைவான வாக்குகளைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு தகுதியற்றதாக்கப்படும். 
எஞ்சிய செல்லுபடியான வாக்குகள், விகிதாசாரக் கணிப்பீட்டு அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்குவதற்காக, கணக்கில் எடுக்கப்படுகின்றன. \\ 

தேர்தல் மாவட்டமொன்றினை உதாரணமாக வைத்து இதைக் காண்போம்...

• யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் (யாழ் -கிளி) கடந்த சனாதிபதித் தேர்தலின் போதிருந்த அதே வாக்காளர் தொகையே, பாராளுமன்ற தேர்தலின் போதும் மொத்த வாக்காளர் தொகையாகவிருக்கும் = 5,93,187 

• பனங்கொட்டையர்கள் - வழக்கமாக 70% வாக்களிப்பு வீதத்தை தாண்டுவதில்லையாதலால், இத்தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் = 4,15,230 என்று எடுத்துக்கொள்வோம். 

• சனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணிகளின் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் = 6.4%. 
பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் 7.5% ஆவது இருக்கும். அதனால 31,142 போய்டும்.
இப்ப மிச்சம் : 3,84,087 

• இப்ப செல்லுபடியான வாக்குகளில் மாவட்டத்திலேயே அதிக வாக்குகளை பெற்ற கட்சிக்கு, முதலாவது ஆசனம் வெளியெடுத்து வைக்கப்படும் - இதை ‘போனஸ் ஆசனம்’ என்ற பெயரில் புழங்கிக் கொள்கின்றோம்.

• தேர்தற்சட்டத்தில் சொல்லப்பட்ட அளிக்கப்பட்ட வாக்குகளில், 05%க்கு குறைவான வாக்குகளை பெற்ற கட்சிகளின் தகுதியின்மை எண்ணிக்கையின்படி, 20,761 வாக்குகளுக்கு கீழ் பெற்ற கட்சிகள் / குழுக்கள் நீக்கப்படும். 

• இவர்கள் போட்டியிலிருந்து போகும் போது,  தமது வாக்குகளையும் கொண்டே போவார்கள் என்பதால் சுமார் 85,000 வரையான வாக்குகள் கீயா மாயா! இப்ப மிச்சம் : 2,99,087 

• ஒதுக்கப்பட்ட ஆறு ஆசனங்களுக்கு இந்த வாக்குகளை பிரித்தால், (ஏற்கனவே போனஸ் கொடுக்கப்பட்ட படியால் இத்தொகை ஐந்தால் பிரியும்) யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் ஒரு ஆசனத்துக்கான (கட்சிக்கு) குறைந்தபட்ச வாக்குகளின் எண்ணிக்கை = 59,814

அதாவது கட்சியின் / குழுவின் சின்னத்துக்கு சுமார் 59,000ற்கு மேற்பட்ட வாக்குகளை பெறும் கட்சி / குழுவே ஒரு ஆசனத்தை பெறும். 
தோராயமாக 60,000 வாக்குகள் = “ஒரு எம்.பி” இந்த முறை? 

கட்சி AA = 80,000
கட்சி BB = 70,000
கட்சி CC = 50,000
கட்சி DD = 48,000
கட்சி EE =  44,000

முதல் சுற்றில்
கட்சி AA = 80,000 (போனஸ் ஆசனம் + 1 ஆசனம்) :: இரண்டாம் சுற்றுக்குரிய எஞ்சிய வாக்குகள் (80,000 - 60,000 = 20,000) 

கட்சி BB = 70,000 ( 1 ஆசனம்) :: இரண்டாம் சுற்றுக்குரிய எஞ்சிய வாக்குகள் (80,000 - 70,000 = 10,000) 

கட்சி CC = 50,000 ( முதல் சுற்றில் ஆசனம் இல்லை) :: இரண்டாம் சுற்றுக்குரிய எஞ்சிய வாக்குகள் (50,000)  

கட்சி DD = 48,000 ( முதல் சுற்றில் ஆசனம் இல்லை) :: இரண்டாம் சுற்றுக்குரிய எஞ்சிய வாக்குகள் (48,000)  

கட்சி EE =  44,000 (முதல் சுற்றில் ஆசனம் இல்லை) :: இரண்டாம் சுற்றுக்குரிய எஞ்சிய வாக்குகள் (44,000)  

• கட்டம் இரண்டு!  

இரண்டாம் சுற்று - முதற் சுற்றில் எஞ்சியிருக்கும் வாக்குகள் இறங்கு வரிசைப்படி கட்சிகள் அடுக்குப்படும். 

கட்சி CC (50,000) - 1 ஆசனம்
கட்சி DD (48,000) - 1 ஆசனம்
கட்சி EE (44,000) - 1 ஆசனம்
கட்சி AA (20,000) - 🤭
கட்சி BB (10,000) - 🤭

கட்சியில் யார் போறது - “யார் கள்ளா” விளையாட்டு - கட்டம் 03! 

• அதெப்பிடி என்றால்,
இரண்டு ஆசனங்களை ஒரு கட்சி பெற்றிருந்தால், அந்தக் கட்சிக்கு அளிக்கப்பட்ட விருப்பு வாக்குகளில் முதலிரு இடங்களை பெற்றவர்கள் - இரண்டு பேர்தான் எம்.பி!

‘எண்ணித் துணிக, கருமம்!!’
 

https://www.facebook.com/share/p/Wyh5qQXhaLkYjsgV/?mibextid=WC7FNe

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.