Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனால் காலியாகும் “வீடு” – அகிலன்

October 13, 2024

 

“வீட்டிலிருந்து வெளியே வர எமக்கு விருப்பமில்லை. ஆனால், அங்கு இப்போது ஒரு தனிநபரின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருக் கின்றது. அந்த ஒருவரால் பலா் வெளியேறிக் கொண்டிருக்கின்றாா்கள். இறுதியாக கட்சித் தலைவா் மாவை சேனாதிராஜா கூட பதவியைத் துறந்துவிட்டாா்.” இது யாழ். மாவட்ட முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினா் ஈ.சரவணபவனின் கூற்று. தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி, ஜனநாயக தமிழரசுக் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை அமைத்து யாழ். மாவட்டத்தில் களமிறங்கியுள்ள இந்தக் கட்சிக்கு பிரபல சட்டத்தரணி கே.வி.தவராஜா தலைமைதாங்குகின்றாா். யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை இக்கட்சியின் சாா்பில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னா் சரவணபவன் தெரிவித்த கருத்துதான் இது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவா் ஐங்கர நேசசனும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளாா்.

பொதுத் தோ்தலுக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் வீட்டிலிருந்து முக்கிய பிரமுகா்கள் பலரும் வெளியே வந்திருப்பதைக் காணமுடிகின்றது. தமிழரசுக் கட்சிக்குள் இப்போது, சுமந்திரனுக்கு குடைச்சல் கொடுப்பவராக இருக்கும் ஒரேயொருவா் சிறீதரன் மட்டும்தான் பொதுத் தோ்தலின் முடிவுதான் தமிழரசுக் கட்சித் தலைமைக்கான போட்டியின் அடுத்த கட்டம் எவ்வாறிருக்கும் என்பதை வெளிப்படுத்தும். தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பொறுப் புக்களிலிருந்தும் விலகுவதாக அதன் தலைவா் மாவை சேனாதிராஜா அறிவித்திருப்பதும் சுமந்திரனின் செயற்பாடுகளால்தான்.

ஒரே அணியில் சுமந்திரனும், சிறீதரனும் களமிறங்கியிருப்பதும், தமிழரசிலிருந்து பிரிந்து சென்ற அதிருப்தியாளா் குழு தனியாகக் கள மிறங்கியிருப்பதும் அரசியல் களத்தை இந்த வாரம் பரபரப்பாக்கிய செய்திகள்.  இதன் அடுத்த கட்டம் எவ்வாறானதாக அமையும் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி!

கடந்த சுமாா் 10 வருடங்களாக மாவை சேனாதிராஜாதான் கட்சியின் தலைவராக இருக்கின்றாா். பெயரளவுக்குத்தான் தலைவராக இருக்கின்றாா் என்பது பகிரங்கமானதுதான். அனைத்து விடயங்களையும் கையாள்பவராக, முக்கிய தீா்மானங்கள் எடுப்பவராக சுமந்திரன்தான் இருக்கின்றாா். கட்சிக்குள் சுமந்திரனின் ஆதிக்கத்துக்கு செக் வைக்கக்கூடியராக சிறீதரன்தான் கருதப் பட்டாா். இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையின் கூட்டத்தில் சுமந்திரனைத் தோற்கடித்து சிறிதரன் கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டபோது, சுமந்திரனின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்றே பலரும் கருதினாா்கள்.

பொதுச் சபைக்கூட்டத்தில் இடம்பெற்ற தெரிவுகள் நீதிமன்றத்துக்குச் சென்று, தெரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டபோது, இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டது. நீதிமன்ற விசாரணைகள் தொடரும் நிலையில், தெரிவுகள் மீண்டும் நடைபெறவேண்டும் என்ற நிலைதான் உருவாகியிருக்கிறது.  அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு இன்னும் சில மாதங்கள் செல்லலாம் என்ற நிலையில், கட்சி இரண்டாக அல்லது மூன்றாகப் பிளவுபடுவது தவிா்க்கமுடியாத ஒன்றாகிவிடலாம் என்பதுதான் தற்போதைய நிலை. சிறிதரனும், சுமந்திரனும் ஒரே அணியில் இப்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டி யிடுகின்ற போதிலும், தோ்தல் முடிவுகளின் பின்னா் பிளவு பகிரங்கமாகலாம். இப்போது தமிழரசுக் கட்சியின் பட்டியலில் இருவரும் உள்ள போதிலும், ஒருவரை மற்றவா் தோற்கடிப்பதற்கான உபாயங்களுடன்தான் செயற்படுகின்றாா்கள்.

தமிழரசுக் கட்சியால் அமைக்கப்பட்ட வேட்பாளா் தெரிவுக்குழுவின் 11 பேரில் ஒன்பது போ் சுமந்திரனின் ஆதரவாளா்கள். அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி தன்னுடைய ஆதரவாளா்களையே சுமந்திரன் யாழ்ப்பாணப் பட்டியலில் போட்டிருக்கின்றாா் என்று அதிருப்தியாளா்கள் குற்றஞ்சாட்டுகின்றாா்கள். இந்த வேட்பாளா் தெரிவில் மாவையும் ஓரங்கட்டப்பட்டுள்ளாா். அவா் செல்லாக்காசாகவே வேட்பாளா் தெரிவுக் குழுவில் இருந்தாா். வேட்பாளா்களே வேட்பாளா் தெரிவுக்குழுவிலும் இருந்தாா்கள் என்பதும் தவறான ஒரு முன்னுதாரணம். வேட்பாளா் தெரிவு இடம்பெறும் நிலையில் இரண்டு விடயங்களை சுமந்திரன் தெரிவித்தாா். கட்சியின் தீா்மானத்தை மீறி பொது வேட்பாளரை ஆதரித்தவா்கள், கடந்த தோ்தலில் தோல்வியடைந்தவா்களுக்கு இடமளிக்கப்படாது என்பதுதான் அந்த அறிவிப்பு. அதேவேளையில், புதியவா்கள், பெண்களுக்கு இடமளிக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

பொது வேட்பாளரை ஆதரித்த சிறிதரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், சசிகலா ரவிராஜ் போன்றவா்களை ஓரங்கட்டுவதுதான் இதன் உள்நோக்கம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானதல்ல. அதில் மாவையும், சரவணபவனும், சசிகலாவும் கடந்த தோ்தலில் தோல்வியடைந்தவா்கள். சிறிதரன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டவா் என்பதால் அவரையும் போட்டியிலிருந்து விலகுமாறு சுமந்திரன் கோரினாா். ஆனால், சிறிதரன் மறுத்துவிட்டாா்.

கடந்த மூன்று பொதுத் தோ்தல்களிலும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தோ்தல் மாவட்டத்தில் வெற்றிபெற்றவா் சிறிதரன். அதனைவிட, அதிக விருப்பு வாக்குகளை தமிழரசுக் கட்சியில் பெற்றவராகவும் அவா்தான் இருக்கின்றாா். சிறிதரனுக்கு கணிசமான – நிரந்தரமான வாக்கு வங்கி ஒன்றுள்ளது. இந்த நிலையில், அவரை வெளியே விடுவது ஆபத்தானது என்பதும் சுமந்திரனுக்குத் தெரிந்திருந்தது.  தன்னுடைய வெற்றிக்கும் சிறிதரனின் வாக்கு வங்கி உதவும் என்பதும் சுமந்திரனுக்குத் தெரியும். சிறிதரனை தம்முடன் அரவணைத்துக் கொள்வதற்கு பெருமளவு முதலீட்டுடன் புதிதாக உருவாகும் கட்சி ஒன்று உட்பட வேறு சில கட்சிகளும் தயாராக இருந்தன. இதனால், சிறிதரனை தமிழரசுக் கட்சிக்குள் வைத்தே தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் சுமந்தரனின் திட்டமாக இப்போதுள்ளது.  யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் இம்முறை இங்கு ஆறு ஆசனங்கள்தான் உள்ளன. அதில் ஐந்து உறுப்பினா்கள் விகிதாசாரப் படி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் எம்.பி.க்களாகத் தெரிவு செய்யப்படுவாா்கள். அதிக வாக்குகளைப் பெறும் கட்சிக்கு போனசாக ஒரு ஆசனம் கிடைக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவு பட்டிருப்பது, தமிழரசுக் கட்சியிலிருந்து பலா் வெளியேறியிருப்பது போன்றன தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியை கணிசமாகப் பாதித்திருக்குகிறது. அத்துடன், மாற்றத்தைக் கொண்டுவரப்போவதாகச் சொல்லிக்கொள்ளும் அநுரகுமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியும் ஒரு ஆசனத்தையாவது பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகின்றது.  தமிழ்த் தேசியக் கட்சிகள் மீது மக்களுக்கு அதிகரித்துள்ள அதிருப்தியால் அவா்கள் அநுரவின் கட்சிக்கு அல்லது டக்ளஸின் கட்சிக்கு வாக்களிக்கும் மனப்பான்மையில் இருக்கின்றாா்கள்.  ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் ஒரு ஆசனத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொடா்ச்சியாக வெற்றிபெற்றுவரும் சித்தாா்த்தனுக்கு தனிப்பட்ட முறையில் வாக்கு வங்கி உள்ளது. அதனைவிட, சஜித் பிரேமதாசதான் ஜனாதிபதித் தோ்தலில் யாழ்ப்பாணத்தில் கணிசமான வாக்குகளைப் பெற்றவா். பொதுத் தோ்தலிலும் ஒரு ஆசனத்தையாவது பெற அவா்கள் கடுமையாகப் போராடுவாா்கள் என்று எதிா்பாா்க்கலாம்.  விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியில் முதன்மை வேட்பாளராக களமிறங்கியிருக்கு யாழ். மாகநர முன்னாள் மேயா் வி.மணிவண்ணனுக்கும் தனிப்பட்ட முறையில் செல்வாக்குள்ளது.  அவரது வருகை கஜேந்திரன்களின் தமிழ்க் காங்கிரஸை அதிகம் பாதிக்கும்.

இந்த நிலையில் தமிழரசுக் கட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசனங்கள்தான் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகின்றது. வாக்காளா்கள் முதலில் கட்சிக்கு வாக்களித்துவிட்டு பின்னா் அதில் மூவருக்கு தமது விருப்பத் தெரிவு வாக்கை வழங்கலாம். தன்னுடைய ஆதரவாளா்களான ஏழு பேரை களமிறக்கியதன் மூலம், அவா்கள் தமக்கும் சோ்த்து வாக்குச் சேகரிப்பாா்கள் என்பது சுமந்திரனின் கணக்கு. அதன்மூலம் தனது வெற்றியை உறுதிப்படுத்த அவா் முயல்கிறாா். தப்பித்தவறி தோல்வியடைந்தால், தேசியப் பட்டியல் மூலமாக வருவது அவரது திட்டம்!  அதனால்தான், பொது அமைப்புக்கள், சமூகப் பெரியவா்களின் வேண்டுகோளையும் புறக்கணித்து அம்பாறையில் தமிழரசுக் கட்சி போட்டியிட வேண்டும் என்பதில் அவா் உறுதியாக இருக்கின்றாா். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருமலையில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட இணங்கியது. மறுபுறம் அம்பாறையை தமக்குத் தருமாறு கேட்டது. இப்போது அம்பாறையிலும் இரு அணிகளும் களத்தில் இறங்குவதால், தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் ஆபத்து உருவாகியிருக்கின்றது. தேசியப்பட்டியலுக்குத் தேவையான வாக்குகளைச் சேகரிக்க அம்பாறையை மீண்டும் பறிகொடுக்க தமிழரசுக் கட்சி தயாராகியிருக்கின்றது. இணக்கத்தை ஏற்படுத்த தொடா்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுக்கள் தோல்வியடைந்திருக்கின்றது.

இந்த நிகழ்வுகள் அனைத்திலும் பாா்வையாளராக இருந்துவரும், கட்சியின் தலைவா் மாவை சேனாதிராஜா, தொடா்ந்தும் தாம் தலைவராக இருப்பதில் அா்த்தமில்லை என்ற நிலையில்தான் பதவியைத் துறக்கும் முடிவை அறிவித்திருக்கின்றாா். சிறிதரனைத் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு அவா் அழைத்திருக்கின்றாா். ஆனால், தமிழரசுக் கட்சியின் தெரிவுகள் அனைத்துக்கும் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்விடயத்தில் தமது அடுத்த நகா்வு பொதுத் தோ்தலின் பின்னா் இடம்பெறும் என்று சிறிதரன் தெரிவித்திருக்கின்றாா்.

நவம்பா் 14 ஆம் திகதி நடைபெறப்போகும் பொதுத் தோ்தலைப் பொறுத்தவரையில், யாழ்ப்பாணத் தோ்தல் களம் முக்கியத்துவம் பெற்றிருப்பதற்குக் காரணம் தமிழரசின் அதிகாரத்துக்காகப் போராடும் இருவா் இங்கு களமிறங்கியிருப்பதுதான். யாழ்ப்பாணத் தோ்தல் களத்தை சூடாக்கியிருப்பது இந்த இருவருக்கும் இடையிலான விருப்பு வாக்குப் போட்டிதான்! தோ்தல் முடிவின் பின்னா் வீட்டில் உள்ள மற்றவா்களும் வெளியே வரும் நிலை உருவாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்!

 

https://www.ilakku.org/சுமந்திரனால்-காலியாகும/

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப் பக்கம் இருந்தும் சுமந்திரனை சுழட்டி அடிக்கின்றார்கள்.
90 வீதமானவர்கள்  குற்றம் சாட்டும் ஒருவனை... நல்லவன், என்று வாதாடும்... 
ஒரு சிலரின் யோக்கியதை எப்படி இருக்கும் என்று அறிய முடிகிறது. 😎

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தமிழ் சிறி said:

எல்லாப் பக்கம் இருந்தும் சுமந்திரனை சுழட்டி அடிக்கின்றார்கள்.
90 வீதமானவர்கள்  குற்றம் சாட்டும் ஒருவனை... நல்லவன், என்று வாதாடும்... 
ஒரு சிலரின் யோக்கியதை எப்படி இருக்கும் என்று அறிய முடிகிறது. 😎

90 % ஆட்களில் ஒரு யோக்கியனைக் காட்டுங்கள்? 

சுமந்திரன் பிழை என்றா ஒன்று சுமந்திரனை வெளியேற்ற வேண்டும் அல்லது எல்லோரும் ஒன்றாக வெளியேறி ஒரே தலைமையின் கீழ் போட்டியிட்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லையே,..... அப்படியானால் இவர்கள் எல்லோரிடமும் இருக்கும் ஒரே நோக்கம் நாடாளுமன்றக் கன்ரீனில் சாப்பிடுவதுதான். 

இவை எல்லாவற்றையும் தாண்டி இந்தமுறை தமிழ்த்தரப்பு ஒரே கூரையின் கீழ் களமிறங்க வேண்டிய நேரம். அதில் சந்திரகாந்தன் முரளீதரன் உட்பட. 

ஆனால் உந்த களிசறைக் கூட்டம்  என்ன செய்கின்ற? 

உந்தப் இந்திய அடிவருடி, சாதி வெறி,!சமயவெறிக் கூட்டம்  எல்லாம்  தமிழ்த் தேசியத்திற்காக உழைப்பார்கள் என்று நம்பும் முட்டாள்களை என்ன செய்வது? 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kapithan said:

90 % ஆட்களில் ஒரு யோக்கியனைக் காட்டுங்கள்? 

சுமந்திரன் பிழை என்றா ஒன்று சுமந்திரனை வெளியேற்ற வேண்டும் அல்லது எல்லோரும் ஒன்றாக வெளியேறி ஒரே தலைமையின் கீழ் போட்டியிட்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லையே,..... அப்படியானால் இவர்கள் எல்லோரிடமும் இருக்கும் ஒரே நோக்கம் நாடாளுமன்றக் கன்ரீனில் சாப்பிடுவதுதான். 

இவை எல்லாவற்றையும் தாண்டி இந்தமுறை தமிழ்த்தரப்பு ஒரே கூரையின் கீழ் களமிறங்க வேண்டிய நேரம். அதில் சந்திரகாந்தன் முரளீதரன் உட்பட. 

ஆனால் உந்த களிசறைக் கூட்டம்  என்ன செய்கின்ற? 

உந்தப் இந்திய அடிவருடி, சாதி வெறி,!சமயவெறிக் கூட்டம்  எல்லாம்  தமிழ்த் தேசியத்திற்காக உழைப்பார்கள் என்று நம்பும் முட்டாள்களை என்ன செய்வது? 

உண்மை 

ஒருவர் மீது மட்டும் தவறு இருந்தால் அவருக்கு எதிராக உள் இருந்தே நடவடிக்கைகளை எடுத்து இருக்கவேண்டும். அதுவும் சரிவராதபோது அனைவரும் ஒன்றாக வெளியேறி ஒன்றாக ஒரு அமைப்பையாவது உருவாக்கி பலத்தை தங்க வைத்திருக்க வேண்டும்.

ஆனால் நமது தவறுகளை திருத்திக்கொள்ள முயலாமல் அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் ஏதாவது ஒரு காரணத்தை காட்டி அல்லது கண்டு பிடித்து பலபிரிவுகளாகி எம் இனத்தின் பலத்தை சிதைப்பது எவராக இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கதே. தூர நோக்கற்று ஒரு இனத்தின் இருப்பையே சிதைக்கும் எவரும் தமிழர்களுக்கு நன்மை செய்வர் என்று எதிர்பார்க்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:


90 வீதமானவர்கள்  குற்றம் சாட்டும் ஒருவனை... நல்லவன், என்று வாதாடும்..

பெரும்பான்மை மக்கள் ஒரு பக்கம் இருப்பதால் மட்டுமே அந்தப் பக்கம் சரி என்று ஆகி விடுமா என்ன? 

தலைவன் என்பவன் பிழையாக சிந்திக்கும் மக்களையும் சரியாக வழிநடத்தும் தகமை உடையவனாக இருக்க வேண்டும்.

 

யாழ்ப்பாண மக்களில் யாருக்கெல்லாம் சுய அறிவும் தூர நோக்கு சிந்தனையும் இருக்கின்றது என்று பார்த்தால் யாரெல்லாம் அங்கு உதயன் பேப்பர் படிக்காமல் இருக்கின்றர்களோ அவர்களாகவே இருப்பார்கள்.

சரவணபவன் உதயன் பேப்பர்க் கடை ஓணர். 

 

  • கருத்துக்கள உறவுகள்

சரவணபவன் எம்.பியும் அவரது உதயன் பத்திரிகையும்

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ‘சப்றா பினான்ஸ்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய நிதி நிறுவனம் இந்த சரவணபவனுக்குச் சொந்தமானது. அந்த நிறுவனம் அதி கூடுதலான வட்டி தருகிறோம் என்று சொல்லி, யாழ்ப்பாண மக்களின் கோடிக்கணக்கான ரூபா பணத்தை தனது நிதி நிறுவனத்தில் வைப்புச் செய்யும்படி கவர்ச்சிகரமான பிரச்சாரத்தில் இறங்கியது. அதை நம்பிய யாழ் குடாநாட்டு மக்கள், தமது பிற்கால சீவியத்திற்காக வைத்திருந்த பணம், தமது பிள்ளைகளின் சீதனத்துக்காக வைத்திருந்த பணம் என எல்லாவற்றையும் சப்றா ஃபினான்ஸில் வைப்புச் செய்தனர்.

 

ஆனால் அந்த நிறுவனம் திடீரென ஒருநாள் வட பகுதி தமிழ் மக்கள் வைப்புச் செய்த கோடிக்கணக்கான பணத்தை வாரிச் சுருட்டிக்கொண்டு, காரியாலயத்தையும் இழுத்து மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டது. பணத்தை இழந்த மக்கள் தலையிலடித்துக்கொண்டு வீதி வீதியாகக் கதறியதுதான் மிச்சம். இந்த பெரும் மோசடியால் அதிர்ச்சியடைந்த சிலா மரணத்தையும் தழுவிக் கொண்டனர். அந்த நிறுவனத்தின் பிரதான நிர்வாகியான சரவணபவனும் மக்களின் கண்களில் படாமல் எங்கோ ஒளிந்து கொண்டார். அவரை ‘இன்டர் போல்’ என்ற சர்வதேச பொலிஸ் நிறுவனம் இந்த நிதி மோசடிக்காகத் தேடுவதாக மக்கள் பேசிக்கொண்டாலும் அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் இந்த நிதியில் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட உதயன் பத்திரிகை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. அப்பத்திரிகை பொய்ப்பிரச்சாரங்கள் செய்து மக்களைச் சுரண்டி பணம் பண்ணியது மட்டுமின்றி, சப்றா பற்றி கதைத்தவர்களையும், பத்திரிகை பற்றி விமர்சனம் செய்தவர்களையும் அச்சுறுத்துவதற்கு புலிகள் இயக்கத்தைக் கேடயமாகவும் பயன்படுத்திக் கொண்டது.

ஆனால் இன்றைவரை அந்த நிறுவனத்தில் பணம்; வைப்புச் செய்தவர்களுக்கு, அந்த நிறுவனத்தை நடாத்திய சரவணபவன் எம்.பி உட்பட எவராலும் எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. அரசாங்கமும் இதுபற்றி தொடர்ந்து அக்கறையற்றே இருந்து வருகிறது. சரவணபவனும் ஒன்றும் நடக்காதது போல பின்னர் வெளியே வந்து மக்கள் முன் தோன்றியதுமல்லாமல், தமிழ் கூட்டமைப்பின் டிக்கட் பெற்று தன்னிடமுள்ள பண பலத்தாலும், பத்திரிகை பலத்தாலும் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆகிக் கொண்டார். இன்று யாராவது சப்றா பண மோசடி விவகாரத்தைக் கிளப்பினால், தனது பாராளுமன்ற சிறப்புரிமையை அஸ்திரமாகப் பாவித்து தப்பித்துக் கொள்வாரோ என்னமோ?

https://www.sooddram.com/கட்டுரைகள்/அரசியல்-சமூக-ஆய்வு/சரவணபவன்-எம்-பியும்-அவரத/

  • கருத்துக்கள உறவுகள்

சரவணபவனின் வண்டவாளங்கள் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.