Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ரஞ்சித் said:

 மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி தூயவன்.

 

இஸ்ரேலியரின் வேதாகமத்தில் இன்று போர்நடக்கும் பலபகுதிகள் அன்று அவர்களின் தாயகம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1000 வருடங்களுக்கு (அண்ணளவாகத்தான்) முன்னர் அரேபியப் படையெடுப்புக்களால் இஸ்ரேலியர்கள் இங்கிருந்து விரட்டப்பட பலஸ்த்தீனர்கள் அங்கு குடியேறிவிட்டார்கள்.

1948 இற்குப் பின்னரே இஸ்ரேலியர்கள் அங்கு மீளவும் குடியேறினார்கள். தமது வேதாகமத்தின்படி பலஸ்த்தீனர்கள் தற்போது வாழும் , தமது முந்தைய தாயகத்தை மீட்டு,  மீள உருவாக்க முயல்கிறார்கள்.

அப்படியானால் அங்குவாழும் பலஸ்த்தீனர்கள் எங்கு செல்வது? கடந்த 1000 வருடங்களாக அவர்களும் அங்குதானே வாழ்கிறார்கள்?

யூதரும், பலஸ்த்தீனியர்களும் இருக்கும் தாயகத்தை பகிர்ந்து வாழ்வதே சரியாக இருக்கும் என்பது எனது நிலைப்பாடு. 

 

இஸ்ரேலில் 20 வீதம் முஸ்லீம்கள் தான். இஸ்ரேல் என்ற நாட்டை அங்கிகரிப்பவர்களுக்கும், அங்கிகரிக்காதவர்களுக்கும் தான் இங்கே பிரச்சனை. அவர்கள் பணம் கொடுக்கின்றார்கள் என்பதற்காக பணத்தை வாங்கி நிலத்தை விற்றுவிட்டு தாம்- தூம் என்று ஆடக்கூடாதல்லவா? 

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியா, இலங்கை. ஈரான்  உற்பட்ட பல நாடுகள் இஸ்ரேல் உருவான
 காலமும் இஸ்ரேல் உருவானதும் ஒரே காலப்பகுதி தான். இலங்கையில் வெள்ளைக்காரர் கைப்பற்றாவிடின் 3 தனிநாடுகளாக இருந்திருக்கும். இந்தியா கூட அப்படித் தானே இருந்தது. ஆனால் எல்லோருக்கும் இஸ்ரேல் தான் பிரச்சனை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாஹ்யா சின்வார்: ஹமாஸ் அமைப்பினரே கண்டு அஞ்சிய இவர் யார்?

யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, யாஹ்யா சின்வாரின் இறப்பை வியாழக்கிழமை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியது கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர்
  • பதவி, பிபிசி பாதுகாப்பு செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை தங்கள் படையினர் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சின்வாரை கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் தீவிரமாகத் தேடி வந்தது.

ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட இஸ்ரேல் போரின் ஆரம்பக் கட்டத்தில் சின்வார் தலைமறைவானார். ஹமாஸ் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

ட்ரோன்கள், ஒட்டுக்கேட்பு கருவிகள், உளவாளிகள் மூலம் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய துருப்புகள் சின்வாரின் இருப்பிடத்தைக் கண்டறிய முயற்சி செய்த நிலையில், அவர் கொல்லப்பட்டது எந்த ஆச்சர்யத்தையும் அளிக்கவில்லை.

“(ஹமாஸின்) தளபதி யாஹ்யா சின்வார் தற்போது இறந்துவிட்டார்,” என்று இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.

 

காஸாவுக்குள் எங்கோ பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதைகளில் தனது மெய்க்காப்பாளர்களுடன், கடந்த ஆண்டின் பெரும்பகுதியை அவர் கழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. தன் இருப்பிடத்தை அடையாளம் காணலாம் என்ற பயத்தால் வெகு சிலருடன் மட்டுமே அவர் தொடர்பில் இருந்ததாகக் கருதப்பட்டது. இஸ்ரேல் பணயக் கைதிகளை மனித கேடயமாக பயன்படுத்திக்கொண்டு அவர் இருந்திருக்கலாம் என்றும் அஞ்சப்பட்டது.

ஆனால், தெற்கு காஸாவில் பணயக் கைதிகள் இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் இல்லாத ஒரு கட்டடத்திற்குள் சின்வார் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. விரல் ரேகை மற்றும் பற்களின் ஆதாரங்களை வைத்து இறந்தது சின்வார்தான் என்பதை இஸ்ரேல் அறிவித்தது.

“இனப்படுகொலை வரலாற்றுக்குப் பின்னர், இஸ்ரேல் மக்களின் வரலாற்றில் மோசமான படுகொலையை அவர் நிகழ்த்தினார். ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களின் கொலை மற்றும் நுற்றுக்கணக்கானோர் கடத்தப்பட்டதற்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி, இன்று எங்களின் வீரமிக்க படையினரால் கொல்லப்பட்டார். நாங்கள் ஏற்கெனவே உறுதியளித்தது போன்று இன்று அவரைப் பழிதீர்த்துவிட்டோம்,” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

காஸாவில் ஏற்கெனவே ஹமாஸின் மூத்த தலைவர்கள் பலரை இஸ்ரேல் கொன்றுள்ளது. அஸிஸடின் அல் அசம் எனும் ஹமாஸ் ராணுவ பிரிவின் தலைவர் முகமது டைஃப் அப்படி கொல்லப்பட்டவர்களுள் ஒருவர். கடந்த ஜூலை மாதம் நடந்த வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

வெளிநாட்டு உறவுகளுக்கான ஐரோப்பிய கவுன்சிலின் மூத்த கொள்கை ஆய்வாளர் ஹியூ லாவிட் கூறுகையில், அக்டோபர் 7 தாக்குதல் ராணுவ நடவடிக்கை என்பதால், முகமது டைஃப்தான் அதன் மூளையாகச் செயல்பட்டதாக நம்பப்பட்டது என்றும், “ஆனால், அந்தத் தாக்குதலைத் திட்டமிட்ட குழுவின் ஒரு பகுதியாக சின்வார் இருந்திருக்கலாம், அக்குழுவில் அவர் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம்” என்றும் தெரிவித்தார்.

மேலும் கடந்த ஜூலை மாதம் டெஹ்ரானில் ஹமாஸின் ஒட்டுமொத்த தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதாக ஹமாஸ் குற்றம் சாட்டியது. தலைமறைவாக இருந்தபோதிலும் அடுத்த மாதமே சின்வார் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

 

இளமைக் காலமும் கைது நடவடிக்கையும்

டெல் அவிவில் நடைபெற்ற பேரணியில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகளின் படங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டெல் அவிவில் நடைபெற்ற பேரணியில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகளின் படங்கள்

அபு இப்ராஹிம் எனப் பரவலாக அறியப்படும் 61 வயதான சின்வார், காஸா முனையின் கடைக்கோடி தெற்கில் கான் யூனிஸில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தார். அவருடைய பெற்றோர் ஆஷ்கெலான் நகரை சேர்ந்தவர்கள்.

ஆனால், 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, பாலத்தீனத்தில் பெருந்திரளான பாலத்தீனர்கள் தங்களின் முன்னோர்களின் வீடுகளில் இருந்து புலம்பெயர்ந்தனர்.

அதையடுத்து அவர்கள் அகதிகளாகினர். பாலத்தீனர்கள் இதை, “அல்-நக்பா” (al-Naqba) பேரழிவு என்று அழைக்கின்றனர்.

கான் யூனிஸ் ஆடவர் மேல்நிலைப் பள்ளியில் அவர் படித்தார். பின்னர், காஸாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் அரபு மொழியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

அந்த நேரத்தில் கான் யூனிஸ் ‘முஸ்லிம் சகோதரத்துவம்’ ( Muslim Brotherhood) எனும் சன்னி இஸ்லாமிய அமைப்பின் “ஆதரவு கோட்டையாக” திகழ்ந்ததாக, ‘நியர் ஈஸ்ட்’ கொள்கைக்கான வாஷிங்டன் மையத்தின் ஆய்வாளரான எஹூட் யாரி (Ehud Yaari) தெரிவித்தார். இவர், யாஹ்யா சின்வாரை சிறையில் நான்கு முறை நேர்காணல் செய்தார்.

‘நியர் ஈஸ்ட்’ என்பது மேற்கு ஆசியா, பால்கன் மற்றும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மத்திய தரைக் கடலைச் சுற்றியுள்ள பகுதி. அந்தப் பகுதிக்கான அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளை கவனப்படுத்தும் மையமே ‘நியர் ஈஸ்ட்’ மையம்.

“அகதிகள் முகாமில் வறுமையான சூழலில் மசூதிகளுக்குச் செல்லும் இளம் வயதினருக்கான பெரும் இயக்கமாக” இஸ்லாமிய அமைப்பு திகழ்ந்ததாக யாரி கூறுகிறார். இது ஹமாஸ் அமைப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த இயக்கமாகக் கருதப்பட்டது.

கடந்த 1982ஆம் ஆண்டில் தனது 19வது வயதில் “இஸ்லாமிய நடவடிக்கைகளுக்காக” சின்வார் முதன்முறையாகக் கைது செய்யப்பட்டார். அதன்பின், 1985இல் மீண்டும் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில்தான் ஹமாஸ் அமைப்பின் நிறுவனர் ஷேக் அகமது யாசினின் நம்பிக்கையை சின்வார் பெற்றார்.

அந்தச் சூழலில் இருவரும் “மிகவும் நெருக்கமாகினர்” என, டெல் அவிவில் உள்ள தேசிய பாதுகாப்பு இயல் மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் கோபி மைக்கேல் தெரிவித்தார். ஹமாஸ் அமைப்பின் மதத் தலைவருடனான உறவு “அந்த இயக்கத்திற்குள் சின்வாருக்கு நல்லெண்ணம் ஏற்பட வழிவகுத்ததாகவும்" மைக்கேல் தெரிவித்தார்.

கடந்த 1987ஆம் ஆண்டு ஹமாஸ் நிறுவப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்த அமைப்பினருக்கே பயத்தை ஏற்படுத்தக்கூடிய அல்-மஜ்த் (al-Majd) அமைப்பிற்கு உள்ளேயே செயல்படும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கினார். அப்போது அவருக்கு வயது 25 மட்டுமே.

நன்னடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்கும் நடவடிக்கைக்காக அல்-மஜ்த் அமைப்பு பரவலாக அறியப்பட்டது. “பாலியல் ரீதியான காணொளிகள்” அடங்கிய கடைகளை சின்வார் குறிவைத்ததாக மைக்கேல் தெரிவித்தார். மேலும், இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் எவராக இருந்தாலும் அவர்கள் கொல்லப்பட்டனர்.

 
ஹமாஸின் மதத்தலைவர் ஷேக் அகமது யாசிம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹமாஸின் மதத் தலைவர் ஷேக் அகமது யாசிமின் ஓவியம்

இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஏராளமானோரின் “கொடூரமான கொலைகளுக்கு” சின்வார் பொறுப்பானவர் என்றும் யாரி தெரிவித்தார். மேலும், “சிலர் அவருடைய கைகளாலேயே கொல்லப்பட்டனர். அதுகுறித்து என்னிடமும் மற்றவர்களிடமும் அவர் பெருமையுடன் பேசினார்” என்றார்.

உளவாளி என சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை அவருடைய சகோதரரை வைத்தே உயிருடன் அடக்கம் செய்ய வைத்ததாக சின்வார் பின்னர் ஒப்புக் கொண்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“தன்னைப் பின்பற்றுபவர்கள், தன் மீது பயம் கொண்டவர்கள், தன்னுடன் எந்த சண்டைக்கும் செல்லாத பலரும் சூழ இருக்கும் ஒரு நபர்தான் யாஹ்யா சின்வார்” என்கிறார் யாரி.

இஸ்ரேலிய வீரர்கள் இருவரை கடத்திக் கொலை செய்யத் திட்டமிட்டதாக, கடந்த 1988ஆம் ஆண்டு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதே ஆண்டு, பாலத்தீனர்கள் 12 பேரை கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு, நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, அதே ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

சின்வாரின் சிறை நாட்கள்

தன்னுடைய இளம் பருவத்தின் பெரும்பகுதியை, 1988-2011 வரையிலான 22 ஆண்டுகளை அவர் இஸ்ரேலிய சிறைகளிலேயே கழித்தார். சில காலத்தை அவர் தனிமை சிறையிலும் கழித்தார். அப்போது அவர் தன்னுடைய அமைப்பு சார்ந்து மேலும் ஊக்கம் பெற்றதாகத் தெரிகிறது.

அவர் “தன்னுடைய அதிகாரத்தை இரக்கமின்றிப் பயன்படுத்தியதாக,” கூறுகிறார் யாரி. சிறைவாசிகளிடையே தன்னை ஒரு தலைவராக நிலைநிறுத்தினார். சிறை அதிகாரிகளுடன் அவர்களின் சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி, நன்னடத்தை ரீதியான நடவடிக்கைகளைச் செயல்படுத்தினார்.

 
கடந்த 2021-ல் யாஹ்யா சின்வார் கூட்டமொன்றில் உரையாற்றிய போது நின்றிருந்த ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 2021இல் யாஹ்யா சின்வார் கூட்டமொன்றில் உரையாற்றியபோது நின்றிருந்த ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்

சிறையில் அவர் இருந்த நேரத்தில், சின்வார் குறித்த இஸ்ரேல் அரசின் மதிப்பீடு, “கொடூரமான, அதிகாரமிக்க, செல்வாக்கு கொண்டவர். வழக்கத்திற்கு மாறான சகிப்புத் தன்மை, கபடம் மற்றும் தவறாகச் சித்தரித்தல் ஆகிய குணங்களைக் கொண்டவர். சிறைக்குள் மற்ற சிறைவாசிகள் மத்தியிலும் ரகசியங்களைக் காத்தவர். பெருந்திரளான கூட்டத்தைச் சமாளிக்கும் திறன் கொண்டவர்” என்பதாக இருந்தது.

சின்வாருடன் நிகழ்ந்த சந்திப்புகள் மற்றும் உரையாடல்களின் அடிப்படையில், அவர் ஒரு மூர்க்க குணம் கொண்ட மனநோயாளி (psychopath) என்று யாரி மதிப்பிட்டுள்ளார்.

“ஆனால், சின்வாரை ‘மனநோயாளி’ என்பதோடு நிறுத்தினால் அது தவறாகிவிடும்” எனக் கூறிய அவர், “அப்படி மட்டும் நினைத்தால் அவருடைய மிகவும் விநோதமான, சிக்கலான குணத்தைத் தவறவிட்டு விடுவீர்கள்” என்றார்.

யாரி கூறுகையில், “சின்வார் மிகவும் தந்திரமான, சூட்சும புத்தி கொண்டவர். தன்னுடைய தனிப்பட்ட வசீகரத்தைத் தேவையான நேரத்தில் கொண்டு வரவும் பின்னர் மறைக்கவும் தெரிந்த நபர் அவர்” என்று விவரித்தார்.

இஸ்ரேல் அழித்தொழிக்கப்பட்டு, பாலத்தீனத்தில் யூதர்கள் வாழ்வதற்கு இடமிருக்காது எனக் கூறும்போது, “வேண்டுமானால் உங்களை மட்டும் விட்டு வைக்கிறோம்’ என நகைச்சுவையாகக் கூறுவார்” எனத் தெரிவித்தார்.

இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட சின்வார், ஹீப்ரு மொழியை சரளமாகக் கற்றார், இஸ்ரேல் செய்தித்தாள்களையும் அவர் வாசித்தார். தனக்கு அரபு மொழி தெரிந்திருந்தாலும், தன்னுடன் பேசும்போது அவர் ஹீப்ரு மொழியில் பேசுவதையே சின்வார் விரும்பியதாக யாரி தெரிவித்தார்.

“ஹீப்ரு மொழியில் பேசுவதை மேம்படுத்திக் கொள்ள அவர் நினைத்தார். சிறைப் பாதுகாவலர்களைவிட ஹீப்ரு மொழியை நிபுணத்துவத்துடன் பேசும் யாரோ ஒருவரிடம் இருந்து அவர் ஏதோவொன்றை அடைய விரும்பியதாக நினைக்கிறேன்,” என்கிறார் யாரி.

யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்ரேலிய பணயக் கைதி ஒருவரை விடுவிப்பதற்குப் பதிலாக, பாலத்தீன, இஸ்ரேலிய அரபு சிறைக் கைதிகள் 1,027 பேரை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சின்வார் 2011ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த கிலாட் ஷாலிட் கூறுகிறார்.

ஹமாஸின் மூத்த படைத் தளபதியான சின்வாரின் சகோதரர் தன்னை, மற்றவர்களுடன் சேர்ந்து கடத்தி, ஐந்து ஆண்டுகள் சிறைபிடித்ததாக, ஷாலிட் கூறுகிறார். இஸ்ரேலிய வீரர்கள் பலரைக் கடத்த வேண்டும் என சின்வார் பின்னர் அழைப்பு விடுத்தார்.

அந்த நேரத்தில், காஸா முனையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது. தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, யாச்செர் அராஃபதா கட்சியைச் சேர்ந்த தன்னுடைய எதிரிகள் பலரை உயரமான கட்டடங்களில் இருந்து தூக்கி எறிந்து ஹமாஸ் கொன்றது.

கொடுமையான நன்னடத்தை விதிகள்

சின்வார் மீண்டும் காஸாவுக்கு திரும்பியபோது, அவர் உடனடியாக தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மைக்கேல் தெரிவித்தார். ஹமாஸின் நிறுவன தலைவராக இஸ்ரேலிய சிறைகளில் தனது பெரும்பகுதி வாழ்க்கையைக் கழித்த பெருமைக்காக அவர் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

ஆனால், “தன் கைகளாலேயே பலரை கொன்ற நபர் அவர். பலரும் அவரைப் பார்த்து பயந்தனர். அவர் மிகவும் கொடூரமான, ஆக்ரோஷமான, அதேசமயம் வசீகரிக்கக்கூடிய நபராகவும் இருந்தார்,” என்கிறார் மைக்கேல்.

“அவர் நன்றாக சொற்பொழிவாற்றக்கூடிய நபர் அல்ல” எனக் கூறும் யாரி, “மக்களை நோக்கி அவர் பேசும்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் பேசுவதாகவே தோன்றும்” என்கிறார்.

சிறையிலிருந்து வெளிவந்த உடனேயே, அஸிஸடின் அல் அசம் படைப்பிரிவு மற்றும் அதன் தலைவர் மார்வான் இசாவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார். கடந்த 2013ஆம் ஆண்டு, காஸா முனையில் ஹமாஸின் அரசியல் பிரிவு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், 2017ஆம் ஆண்டு அதன் தலைவரானார்.

சின்வாரின் இளைய சகோதரர் முகமதுவும் ஹமாஸில் முக்கியப் பங்கு வகித்தார். இஸ்ரேலின் பல தாக்குதல் முயற்சிகளில் இருந்து தான் உயிர் பிழைத்ததாக அவர் கூறினார். இதையடுத்து, 2014ஆம் ஆண்டு அவர் உயிரிழந்ததாக ஹமாஸால் அறிவிக்கப்பட்டார். அப்போதிருந்து, அவர் இன்னும் உயிரோடு இருக்கலாம் என்றும், காஸாவில் பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப் பாதையில் ஹமாஸ் ராணுவப் பிரிவில் அவர் செயல்படலாம் என்றும், அக்டோபர் 7 தாக்குதலில்கூட அவர் பங்கு வகித்திருக்கலாம் என்றும் ஊடக செய்திகள் வலம் வந்தன.

 
முகமது சின்வார்
படக்குறிப்பு, முகமது சின்வார்

தன்னுடைய இரக்கமின்மை மற்றும் வன்முறை குணம் காரணமாக சின்வார், கான் யூனிஸின் கசாப்புக்காரர் (Butcher) என்ற பட்டப்பெயரை பெற்றார்.

“சின்வார் கொடுமைமிக்க நன்னடத்தை விதிகளைச் செயல்படுத்தியதாக” கூறிய யாரி, அவற்றுக்குக் கட்டுப்படாவிட்டால், “தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கும் என்பதை” ஹமாஸ் படையினர் அறிவார்கள் என்றார்.

கையாடல் மற்றும் தன்பாலின உறவில் ஈடுபட்டதாக, ஹமாஸ் தளபதி மஹ்மூத் இஷ்டிவி-யை (Mahmoud Ishtiwi) சிறைப்படுத்தி, கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக சின்வார் பரவலாக அறியப்படுகிறார்.

கடந்த 2018ஆம் ஆண்டில், சர்வதேச ஊடக சந்திப்பு ஒன்றில், அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெருசலேமுக்கு மாற்றுவதற்கான எதிர்ப்புகளின் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் இருந்து காஸா பகுதியைப் பிரிக்கும் எல்லை வேலியைத் தகர்க்கும் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்களுக்குத் தனது ஆதரவை குறிப்பால் உணர்த்தினார்.

கடந்த ஆண்டு மேற்குக் கரையில் பாலத்தீன அதிகார அமைப்பை (PA) ஆதரிக்கும் பாலத்தீனர்களால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் இருந்து தான் உயிர் பிழைத்ததாக அவர் கூறியிருந்தார்.

எனினும், இஸ்ரேலுடன் தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு ஆதரவு, கைதிகள் பரிமாற்றம் மற்றும் பாலத்தீன அதிகார அமைப்புடன் நல்லிணக்கம் என, நடைமுறைக்கேற்ப முடிவுகளை அவர் எடுத்துள்ளார். தன் எதிரிகளால் அவர் மிதவாதி எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

 

இரானுடன் நெருக்கம்

யாஹ்யா சின்வார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கைதிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சின்வாரை சிறையில் இருந்து விடுதலை செய்தது மோசமான தவறு என இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பலரும் கருதினர்.

அதிகளவிலான பணி அனுமதிகள் மற்றும் பொருளாதார ரீதியிலான ஊக்கம் காரணமாக, ஹமாஸ் போர் மீதான தனது நாட்டத்தை இழந்திருக்கும் என்ற தவறான நம்பிக்கையால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர். இது நிச்சயமாக ஒரு பேரழிவு தரும் தவறான நம்பிக்கையாக மாறியது.

“பாலத்தீனத்தை விடுதலை செய்ய விதிக்கப்பட்ட நபர்” என சின்வார் தன்னைத் தானே கருதியதாக யாரி கூறுகிறார். மேலும், அவர், “காஸாவில் பொதுளாதார நிலைமை மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை” என்றும் அவர் கூறினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை சின்வாரை “உலகளாவிய பயங்கரவாதி” (Specially Designated Global Terrorist) என அறிவித்தது. கடந்த மே 2021இல் காஸா முனையில் உள்ள இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவரது வீடு மற்றும் அலுவலகம் இலக்கு வைக்கப்பட்டது.

அஸிஸடின் அல் அசம் எனும் ஹமாஸின் ராணுவப் பிரிவுடன் அதன் அரசியல் பிரிவை இணைப்பதில் முக்கிய நபராக அவர் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அஸிஸடின் அல் அசம் படை அக்டோபர் 7 தாக்குதலை வழிநடத்தியது.

கடந்த அக்டோபர் 14, 2023 அன்று, இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர், சின்வாரை “தீய சக்தியின் உருவம்” எனக் கூறியிருந்தார். மேலும், “அவரும் அவருடைய குழுவினரும் எங்களின் கண்காணிப்பில் உள்ளனர். விரைவில் அவரை அடைவோம்” என்றார்.

சின்வார் இரானுடனும் நெருக்கமான நபராக இருந்தார். சன்னி அரபு அமைப்பானது, ஷியா நாட்டுடன் கூட்டணி வைத்துக் கொள்வது வழக்கமானது அல்ல. ஆனாலும், இஸ்ரேலை அழித்து, அதன் ஆக்கிரமிப்பில் இருந்து ஜெருசலேமை “சுதந்திரப்படுத்துவது” எனும் ஒரே இலக்கை அவர்கள் கொண்டிருந்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டில் எகிப்து எல்லையில் சின்வார் (நடுவில் இருப்பவர்)

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 2017-ம் ஆண்டில் எகிப்து எல்லையில் சின்வார் (நடுவில் இருப்பவர்)

அவர்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்தனர். ஹமாஸுக்கு நிதியுதவி, பயிற்சி மற்றும் ஆயுதங்களை இரான் வழங்கியது. அதன் ராணுவ திறன்களை மேம்படுத்தவும், இஸ்ரேலிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்கவல்ல ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளையும் வழங்கியது.

அந்த ஆதரவுக்கு சின்வார் தனது நன்றியுணர்வை 2021ஆம் ஆண்டு தன்னுடைய உரையில் தெரிவித்தார். “இரான் இல்லாமல் இருந்திருந்தால், பாலத்தீனத்தின் எதிர்க்கும் திறன் தற்போதைய நிலையை அடைந்திருக்காது” என்றார்.

யாஹ்யா சின்வாரை இழந்தது ஹமாஸுக்கு பெருத்த அடியாக இருக்கும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஹனியேவுக்கு பதிலாக ஹமாஸின் ஒட்டுமொத்த தலைவராகத் தேர்வு செய்யப்பட்டபோது, சவால்களைக் கடந்து, மீண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகக் கருதப்பட்டது. அவரைவிட சமரசமற்ற ஒரு தலைவரை அக்குழுவால் தேர்வு செய்திருக்க முடியாது.

காஸா முனையை அழித்தொழித்த இஸ்ரேலின் ஓராண்டு ராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்து ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது முடிவெடுக்க வேண்டும். அல்லது, அதற்கு முரணாக, இந்த மோதலால் பாலத்தீன மக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ள போதிலும், இஸ்ரேலை எதிர்த்துச் சண்டையிட வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், காஸாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் “90% எட்டப்பட்டதாக” சமீபத்தில் தெரிவித்திருந்தார். சின்வார் கொலையின் மூலம் அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, இஸ்ரேலிய பணயக் கைதிகள் நாடு திரும்பலாம்.

இல்லையேல் அதற்கு மாறாக, முன்னெப்போதையும்விட கோபமான ஹமாஸ் உறுப்பினர்களை எந்தவிதமான சமரசத்தில் இருந்தும் விலக்கி வைக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

ஜான் கெல்லி வழங்கிய கூடுதல் தகவல்களுடன்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலின் சிசேரியா நகரில் ட்ரோன் எச்சரிக்கை!

லெபனானில் இருந்து வந்த ஒரு ஆளில்லா விமானத்தால் ஒரு வீடு தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (74) அலுவலகத்தில் இருந்து வந்த செய்தியின்படி, நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் அந்தச் சந்தர்ப்பத்தில் நெதன்யாகுவோ அவரது மனைவியோ இருவரும் வீட்டில் இருக்கவில்லை.

இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில்,“சனிக்கிழமை காலை லெபனானில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்த மூன்று ஆளில்லா விமானங்கள் கடைசி நிமிடங்களில் அடையாளம் காணப்பட்டன. அதில் இரண்டு தடுத்து நிறுத்தப்பட்டனஎன்றிருக்கின்றது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, Kavi arunasalam said:

இஸ்ரேலின் சிசேரியா நகரில் ட்ரோன் எச்சரிக்கை!

லெபனானில் இருந்து வந்த ஒரு ஆளில்லா விமானத்தால் ஒரு வீடு தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (74) அலுவலகத்தில் இருந்து வந்த செய்தியின்படி, நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் அந்தச் சந்தர்ப்பத்தில் நெதன்யாகுவோ அவரது மனைவியோ இருவரும் வீட்டில் இருக்கவில்லை.

இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில்,“சனிக்கிழமை காலை லெபனானில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்த மூன்று ஆளில்லா விமானங்கள் கடைசி நிமிடங்களில் அடையாளம் காணப்பட்டன. அதில் இரண்டு தடுத்து நிறுத்தப்பட்டனஎன்றிருக்கின்றது.

இனி இதுதான்....... வாழ்க்கை முழுக்க பெரிய தாக்குதல் ஏதுமில்லாமல் சும்மா சும்மா இஸ்ரேலுக்கு சொட்டிக்கொண்டே இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்குள்ள கருத்துக்கள் எல்லாவற்றையும் வாசித்தேன்.

கொல்லப்பட்டவர் அகதி முகாமில் பிறந்தார், இஸ்ரேல் சிறையில் 21 வருடங்கள் அடைக்கப்பட்டார் என தகவல்கள் உள்ளன.

இப்படியான ஒருவரிடம் எப்படியான மனித நேயத்தை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? 

அவலத்தை கொடுத்தவனுக்கு அவலத்தை கொடுத்துள்ளார். இறுதியில் கொல்லப்பட்டார். ஒரு விதத்தில் பார்த்தால் பதினாறு வயதில் போராட சென்ற தலைவர் பிரபாகரனை விட இவருக்கு போராடுவதற்கான தேவை மிக அதிகமாகவே காணப்பட்டது.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹமாஸ் தலைவரின் மரணம் காஸாவில் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வருமா?

யாஹ்யா சின்வார், இஸ்ரேல் - ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெர்மி போவன்
  • பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர்
  • 55 நிமிடங்களுக்கு முன்னர்

காஸாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரில் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. .

சின்வாரின் மரணம் ஹமாஸுக்கு விழுந்த பெரிய அடி. ஹமாஸை அவர் ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக மாற்றினார், அதன் விளைவாக இஸ்ரேல் அரசு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

சின்வார் இஸ்ரேல் சிறப்புப் படைகளின் திட்டமிட்ட நடவடிக்கையில் கொல்லப்படவில்லை, மாறாக காஸாவின் தெற்கில் உள்ள ரஃபாவில் தற்செயலாக ரோந்து மேற்கொண்ட இஸ்ரேலியப் படைகள் நடத்திய ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், போர் உடை அணிந்திருந்த சின்வார் ஷெல் குண்டு வீச்சு தாக்குதலில் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் இறந்து கிடந்ததைக் காட்டுகிறது.

 

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ராணுவ வீரர்களைப் பாராட்டிய அதே சமயத்தில், எவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், அது போரை முடிவுக்குக் கொண்டு வராது என்றார்.

நெதன்யாகு மேலும் கூறுகையில், "நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நாம் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தி இருக்கிறோம். தீமையை `நன்மை’ வீழ்த்தியதை இன்று மீண்டும் ஒருமுறை உலகிற்குக் காட்டியுள்ளோம். ஆனால் போர் இன்னும் முடிவடையவில்லை. இது கடினமான நேரம். நாம் செய்ய வேண்டியது இன்னும் இருக்கிறது” என்றார்.

"நமக்கு முன்னால் இன்னும் பெரிய சவால்கள் உள்ளன. நமக்கு சகிப்புத்தன்மை, ஒற்றுமை, தைரியம் மற்றும் உறுதிப்பாடு தேவை. நாம் ஒன்றாகப் போராட வேண்டும், கடவுளின் உதவியால், நாம் ஒன்றாக வெற்றி பெறுவோம்" என்றும் அவர் கூறினார்.

 
யாஹ்யா சின்வார், இஸ்ரேல் - ஹமாஸ்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, பணயக்கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகளை இஸ்ரேலிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர்.

காஸா போரை ஆதரிக்கும் நெதன்யாகு மற்றும் பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் வெற்றிக்காக காத்திருக்கின்றனர்.

நெதன்யாகு தனது போர் இலக்குகளை பலமுறை பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருக்கிறார். "ஹமாஸின் அரசியல் மற்றும் ராணுவ பலத்தை அழித்து இஸ்ரேல் பணயக்கைதிகளை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்." என்பதே அவரின் இலக்கு.

ஒரு வருடமாக தொடரும் போரில் குறைந்தது 42,000 பாலத்தீனர்களைக் கொன்று, காஸாவின் பெரும் பகுதிகளை தரைமட்டம் ஆக்கிய போதிலும், இலக்கு இன்னும் அடையப்படவில்லை என்று இஸ்ரேல் கருதுகிறது.

மீதமுள்ள பணயக்கைதிகளின் விடுதலை, இஸ்ரேலிய படைகள் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்பதே இஸ்ரேலின் நோக்கம்.

சின்வாரைக் கொன்றது இஸ்ரேல் விரும்பிய வெற்றி என்ற போதிலும் போரின் மற்ற இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு கூறுகிறார்.

 

யாஹ்யா சின்வார் யார்?

சின்வார் 1962 ஆம் ஆண்டு காஸா பகுதியில் இருக்கும் கான் யூனிஸ் நகரில் அகதிகள் முகாமில் பிறந்தார். 1967 மத்திய கிழக்குப் போரில் இஸ்ரேல், காஸா முனையைக் கைப்பற்றிய போது அவருக்கு ஐந்து வயது தான் ஆகியிருந்தது.

1948 ஆம் ஆண்டு இஸ்ரேலியப் படைகளால் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட அல்லது தப்பியோடிய 700,000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்களில் சின்வாரின் குடும்பமும் ஒன்று.

அவரது குடும்பத்தினர் காஸா பகுதியின் வடக்கு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அஷ்கெலோன் நகரத்தை சேர்ந்தவர்கள்.

இஸ்ரேல் சிறையில் 22 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த போது, அவர் ஹீப்ரு மொழியைக் கற்றுக் கொண்டார்.

சின்வார் இஸ்ரேல் சிறையில் இருந்ததால், அவரது பல் மாதிரிகள் மற்றும் அவரது டிஎன்ஏ மாதிரிகள் இஸ்ரேலிடம் உள்ளன. அவையே காஸாவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அவருடையதா இல்லையா என்பதை தீர்மானிக்க உதவின.

2011-ஆம் ஆண்டு பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாத் ஷாலித் என்பவரை விடுவிக்க, இஸ்ரேலின் பிடியில் இருந்த 1,000க்கும் மேற்பட்ட பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் சின்வாரும் ஒருவர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று, கவனமாக திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம் சின்வாரும் அவரது ஆட்களும் சேர்ந்து இஸ்ரேலுக்கு மிக மோசமான தோல்வியை கொடுத்தார்கள். இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதல் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பலர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

யாஹ்யா சின்வார், இஸ்ரேல் - ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சின்வாரின் மரணத்தைக் கொண்டாடும் விதமாக மக்கள் இஸ்ரேலிய தேசியக் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்தனர்

பணயக்கைதிகளை இஸ்ரேல் பொருட்படுத்தவில்லையா?

காஸாவில் எஞ்சியிருக்கும் 101 இஸ்ரேல் பணயக்கைதிகளில் பாதி பேர் ஏற்கனவே இறந்திருக்கலாம் என்று இஸ்ரேல் கூறுகிறது. பணயக் கைதிகள் பிடித்துச் செல்லப்பட்ட அதே இடத்தில் அவர்களின் குடும்பத்தினர் ஒன்றுகூடி, அவர்களை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகளை இஸ்ரேலிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

பணயக்கைதியான மதன் ஜாங்கவுக்கரின் தாயார், “நெதன்யாகு, பணயக்கைதிகளை புதைத்து விடாதீர்கள். மத்தியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களை அணுகி, புதிய முயற்சியை முன்வையுங்கள். பணயக்கைதிகளை மீட்பது உங்களால் மட்டுமே முடியும்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில் "நெதன்யாகு இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், ஒரு புதிய இஸ்ரேலிய ஒப்பந்தத்தை முன்வைக்க முன்வரவில்லை என்றால் அவர் பணயக்கைதிகளாக இருக்கும் எங்கள் குடும்பங்களை கைவிட்டுவிட்டார் என்று தான் அர்த்தம்.”

"அவர்களுக்காக போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் தயாராக இல்லை. மாறாக நெதன்யாகு போரை இன்னும் அதிகப்படுத்தி வருகிறார். அனைவரும் திரும்பும் வரை நாங்கள் ஓய மாட்டோம். ” என்றார்.

"சின்வாரும் அவரது ஆட்களும் இஸ்ரேலைத் தாக்கும் அளவுக்கு அதன் பாதுகாப்பு பலவீனமாக இருந்துள்ளது. நெதன்யாகு, இந்த பாதுகாப்புத் தோல்விகளில் தனது பங்கை மறைக்கவும், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை காலவரையின்றி ஒத்திவைக்கவும் காஸா போர் சூழலை ஆதரிக்கிறார்." என்று அவர் குற்றம்சாட்டினார்.

நெதன்யாகு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். காஸாவில் ஹமாஸை வீழ்த்தி "முழுமையான வெற்றி" கண்டால் மட்டுமே இஸ்ரேலிய பாதுகாப்பை மீட்டெடுக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.

இஸ்ரேல் காஸாவுக்குள் செய்தி நிறுவனங்களை அனுமதிப்பதில்லை. ராணுவ மேற்பார்வையின் கீழ் அரிதான பயணங்களை மட்டுமே அனுமதிக்கிறது. பிபிசிக்கும் இதே நிலைதான்.

 

சின்வாரின் சொந்த ஊர் மக்களின் நிலைப்பாடு

சின்வாரின் சொந்த ஊரான கான் யூனிஸில், பிபிசிக்காக சில நம்பகமான உள்ளூர் பத்திரிகையாளர்கள் பாலத்தீனர்களை பேட்டி கண்டனர். அவர்களும் போர் தொடரும் என்றே கூறினார்கள்.

டாக்டர் ரமலான் ஃபாரிஸ் கூறுகையில் “இந்தப் போர் சின்வார், ஹனியே அல்லது மிஷால் அல்லது எந்தத் தலைவரையோ அல்லது அதிகாரியையோ சார்ந்தது அல்ல, இது பாலத்தீன மக்களுக்கு எதிரான அழிவுகரமானப் போர். இது நாங்கள் அனைவரும் அறிந்து கொண்ட உண்மை. சின்வார் உள்ளிட்டவர்களை தாண்டி இது மிகப்பெரிய பிரச்னை” என்றார்.

சிலர் சின்வாரின் மரணத்தால் சோகமாக இருப்பதாகவும், மற்றவர்கள் அலட்சியமாக இருப்பதாகவும் அட்னான் அஷூர் கூறினார்.

அஷூர் மேலும் கூறுகையில், "அவர்களுக்கு நாங்கள் மட்டுமல்ல, முழு மத்திய கிழக்கும் வேண்டும். அவர்கள் லெபனான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுடனும் சண்டையிடுகிறார்கள். இது 1919 முதல், அதாவது 100 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்கும் யூதர்களுக்கும் இடையேயான போர்" என்று கூறினார்.

சின்வாரின் மரணம் ஹமாஸை பாதிக்குமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. "இல்லை என்று நம்புகிறேன், ஹமாஸ் என்பது வெறும் சின்வார் என்ற தனி நபரை சார்ந்தது அல்ல" என்றார் அவர்.

 

'ஹமாஸை அழிக்க முடியாது’

காஸாவில் போர் தொடர்கிறது. 25 பாலத்தீனர்கள் வடக்கு காஸாவில் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதல் மூலமாக ஹமாஸ் கட்டளை மையத்தைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியது. உள்ளூர் மருத்துவமனை மருத்துவர்கள் அந்த தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்பதை உறுதிப்படுத்தினர்.

இஸ்ரேல் அதிக உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தியதை அடுத்து பாராசூட் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது.

1990களில் இருந்து ஒவ்வொரு ஹமாஸ் தலைவர்களும் இஸ்ரேலால் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் அடுத்தடுத்து ஒரு வாரிசு வந்து விடுகிறார். சின்வார் கொல்லப்பட்டதை இஸ்ரேல் கொண்டாடும் அதே வேளையில், ஹமாஸ் பணயக்கைதிகளை இன்னும் வைத்திருக்கிறது, இன்னும் சண்டையிட்டு கொண்டிருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டாரா யகியா சின்வார்?

எந்த ஒரு செய்தியானாலும், அந்தச் செய்தியில் கூறப்பட்டிருக்கின்ற விடயத்தைக் கடந்து, அந்தச் செய்திக்கு ஏதாவது பின்னணி இருக்கின்றதா என்று தேடுவது அவசியம்.

யகிகா சின்வார் கொலை தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகளைக் கடந்து அந்தச் செய்திகளின் பின்னணியில் வெளியே சொல்லப்படாத பக்கங்கள் என்று ஏதாவது இருக்கின்றனவா?

'connect the dots' என்று கூறுவார்களே, அப்படி இணைத்துப் பார்க்கக்கூடிய புள்ளிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக யகிகா சின்வாரின் மரண விடயத்தில் ஏதாவது இருக்கின்றனவா?

 

https://tamilwin.com/article/yakima-sinvar-assainartion-1729328170#google_vignette



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலார் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் அலுவலகம் தவறிழைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட பாவனையாளருக்கு உடனடியாக நீதி வழங்குமாறும் பணித்திருக்கிறது. மேலும், பாவனையாளர் ஒருவருக்கு இணைப்பு அனுமதி வழங்குவதற்காகப் பாவனையாளரிடமிருந்து பணம் அறவிடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படும் உள்ளக சுற்று நிருபங்கள் அல்லது பொது நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் ஏதுமிருப்பின் அது பற்றித் தங்களுக்கு அறியத்தருமாறும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பாவனையாளர் விவகாரங்களுக்கான பணிப்பாளர் யசந்த ரதுவிதான இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியியலாளரைக் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.   யாழ்ப்பாணம் - சுன்னாகம் வாரியப்புலம் பகுதியைச் சேர்ந்த மின் பாவனையாளர் ஒருவர் 2023 ஆண்டு விண்ணப்பித்த போது,  அவருக்கு அனுமதி வழங்காமல், 2024 ஆம் ஆண்டு விண்ணப்பித்த அதே இடத்தைச் சேர்ந்த மற்றொருவருக்குச் செல்வாக்கின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படாத கட்டடத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அவருக்கு அனுமதியை வழங்குமாறு பணிக்கப்பட்ட பின்னரும், இணைப்புக்காக ரூபா 11 இலட்சம் செலுத்துமாறு கோரியமையை ஆதாரங்களுடன் மேன்முறையீடு செய்ததை அடுத்தே இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளருக்கு இவ்வாறு பணித்திருக்கிறது.   சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தில் சோலார் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களில் பலருக்கு அனுமதி வழங்கப்படாமை, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர் பொருத்துவதில் பாரபட்சம் காட்டுதல் போன்ற முறைகேடுகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கும், மின் சக்தி வலு அமைச்சுக்கும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இது வரை பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.   எனினும், இலங்கை மின்சார சபை அவற்றைக் கண்டும் காணாமல், முறையற்ற விதத்தில் பல அனுமதிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்தக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறு உத்தரவிடப்பட்ட போதும், பிராந்திய மின் பொறியியலாளர் அவை குறித்துக் சிறிதும் கவனமெடுக்காமல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் சோலார் அனுமதிகளை வழங்கி வந்துள்ளார். அதைவிட, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர்களைப் பொருத்துவதிலும் முறைகேடாக நடந்து கொண்டுள்ளார் என்று பாவனையாளர்கள் பலர் முறைப்பாடு செய்துமிருந்தனர். இதேநேரம் -  இணைப்புக்கான அனுமதி வழங்கல் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மின்வலுசக்தி அமைச்சரிடம் 11 ஆம் திகதி நேரடியாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், அனுமதிக்கு விண்ணப்பித்த ஒழுங்கு, அனுமதிக்காகப் பணம் செலுத்திய ஒழுங்கு, அனுமதி வழங்கப்பட்ட ஒழுங்கு உட்பட முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களை இலங்கை மின்சார சபையிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வாடிக்கையாளர்கள் பலர் கேட்டிருந்த போதிலும், இது வரை அத்தகைய தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். https://tamil.adaderana.lk/news.php?nid=197232
    • நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர்  மொஹமட் ரிஸ்வி சாலிஹ்இ தலைமைத்துவத்தில் நம்பிக்கை மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திஇ தனது தொழில்முறை தகுதிகள் பற்றிய விபரங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் அவர்இ சான்றிதழ்கள் மூலம்இ தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவக் கல்லூரியில் 1986இல் பெற்ற ஆடீடீளு பட்டம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் லாரிங்கோ ஓட்டோரினோலஜி டிப்ளோமா (னுடுழு) உட்பட தனது தகுதிகளை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். https://tamilwin.com/article/deputy-speaker-of-parliament-s-qualifications-1734102374
    • 1. ஊழியர் இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கினால் - அதை வழக்கு போட்டு விலக்க வேண்டும். 2. பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் எங்கேயும் திறந்த வீட்டில் குதிரை நுழைவது போல் நுழைய முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்க்கு பொலிஸ் அதிகாரம் இல்லை. பொலிஸ் கூட சில நடைமுறைகளை பின்பற்றியே உள்ளே நுழையலாம். 3. இவர் ஒட்டு மொத்த யாழ் மாவட்டத்தின் பிரதிநிதி. சாவகச்சேரி தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றார். அவ்வளவே.  நாளைக்கு அருச்சுனா உங்கள் வீட்டு குளியறைக்குள் நுழைந்தால் - அவரை தடுப்பது மக்களை தடுப்பது போல் என நினைத்து அனுமதிப்பீர்களா? எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு.
    • வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் 13 DEC, 2024 | 07:08 PM வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தாங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற போதிலும் அரச வேலைவாய்ப்பு தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை. எனவே புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் அரசாங்கம் தமக்கான அரச நியமனத்தை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201217
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.