Jump to content

இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது டெஸ்ட்: இந்தியாவை 46 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து 134 ஓட்டங்களால் முன்னிலை

image

(நெவில் அன்தனி)

பெங்களூரு, எம். சின்னசுவாமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை அதன் முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்களில் வெறும் 46 ஓட்டங்களுக்கு சுருட்டிய நியூஸிலாந்து, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 134 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.

1710_matt_henry_nz_vs_ind_1st_test.png

இந்தியாவின் 92 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் பெற்ற மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவாகும்.

1710_willie_o_rourke_nz_vs_ind_1st_test.

அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் 1936இல் பெற்ற 36 ஓட்டங்கள், இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸில் 1974இல் பெற்ற 42 ஓட்டங்களுக்கு அடுத்ததாக 3ஆவது மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

புதன்கிழமை ஆரம்பமாகவிருந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் கடும் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை ஆட்டம் தொடர்ந்தபோது, முதலாம் நாளன்று நாணய சுழற்சியின்போது தீர்மானித்தவாறு இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டதால் இரண்டாம் நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில்  மெட் ஹென்றி, வில்லியம் ஓ'ரூக் ஆகிய இருவரின் வேகப்பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல்   அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, விராத் கொஹ்லி உட்பட இந்திய துடுப்பாட்ட வீரர்கள் வரிசையாக ஆட்டம் இழந்தனர்.

இந்தப் போட்டியில் தனது 4ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த மெட் ஹென்றி 100 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்தார்.

ஆரம்ப வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் (13), ரிஷாப் பான்ட் (20) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

விராத் கோஹ்லி, சர்பராஸ் கான், கே. எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய ஐந்து முக்கிய வீரரகள் ஓட்டம் பெறாமல் நடையைக் கட்டினர்.

ரோஹித் ஷர்மா (2), குல்தீப் யாதவ் (2), ஜஸ்ப்ரிட் பும்ரா (1) ஆகியோர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் வெளியேறினர்.

மொஹம்மத் சிராஜ் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மெட் ஹென்றி 3 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 13.2 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் வில்லியம் ஓ'ரூக் 6 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 12 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் டிம் சௌதீ 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன் காரணமாக ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு உகந்ததல்ல என இந்தியாவால் சாக்குப்போக்கு சொல்ல முடியாது.

டெவன் கொன்வே மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 91  ஓட்டங்களைப் பெற்றார்.

13 ஓட்டங்களைப் பெற்ற டொம் லெதமுடன் ஆரம்ப விக்கெட்டில்  67 ஓட்டங்களை ப்     பகிர்ந்த டெவன் கொன்வே, 33 ஓட்டங்களைப் பெற்ற வில் யங்குடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 75 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஆட்டநேர முடிவில் ரச்சின் ரவிந்த்ரா 22 ஓட்டங்களுடனும் டெரில் மிச்செல் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இது இவ்வாறிருக்க, ரிஷாப் பான்டின் வலது முழங்காலுக்குக் கீழ் பந்து தாக்கியதால் வலி தாங்க முடியாதவராக தற்காலிக ஓய்பு பெற்றார்.

அவருக்குப் பதிலாக கே.எல். ராகுல் விக்கெட் காப்பாளராக செயற்பட்டார்.

https://www.virakesari.lk/article/196532

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி: இரண்டாவது நாள் முடிவில் பந்துவீச்சில் திணறிய இந்திய அணி

இந்தியா -   நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ். க
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 17 அக்டோபர் 2024, 11:09 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

பெங்களூருவில் இன்று தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களில் சுருண்டது.

நியூஸிலாந்து அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து, இந்திய அணியைவிட 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 50 ஓவர்கள் முடிவில்நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த இந்திய அணி 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது, சராசரியாக 1.46 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணியில் விராட் கோலி, சர்ஃப்ராஸ் கான், ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல் ஆகியோர் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர்.

உள்நாட்டில் குறைந்தபட்சம்

உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சேர்த்த மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் உள்நாட்டில் கடந்த 1987-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய 75 ரன்களுக்கு சுருண்டிருந்ததே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. அதைவிட குறைவான ரன்னில் இன்று இந்திய அணி ஆட்டமிழந்தது.

ஒட்டுமொத்தத்தில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் 3வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2020-ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 36 ரன்களிலும், 1974-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 42 ரன்களிலும் இந்திய அணி ஆட்டமிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுப்மான் கில் கழுத்துவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடாததால், கடந்த 8 ஆண்டுகளுக்குப்பின் 2016-ஆம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் 3-வது வரிசையில் விராட் கோலி பேட் செய்ய இன்று (அக்டோபர் 17) களமிறங்கினார். ஆனால், 9 பந்துகளைச் சந்தித்த கோலி, ரூர்கே பந்துவீச்சில் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியில் ரிஷப் பந்த் சேர்த்த 20 ரன்கள்தான் ஒரு பேட்ஸ்மேன் சேர்த்த அதிகபட்ச ஸ்கோராகும். அடுத்தார்போல் ஜெய்ஸ்வால் 13 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில், டக்அவுட்டிலும் ஆட்டமிழந்தனர்.

 
இந்தியா -   நியூசிலாந்து

3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும்தான்

நியூசிலாந்து தரப்பில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்துவீசினர். இதில் மேட் ஹென்றி 13.2 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் விக்கெட்டை வீழ்த்தியபோது அவர் டெஸ்ட் போட்டியில் அவரது 100-வது விக்கெட்டை எடுத்தார்.

இந்திய அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடிய வில்லியம் ரூர்கே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதிகபட்சம் 20 ரன்கள்தான்

இந்திய அணியில் டாப்-4 பேட்டர்களில் அதிகபட்சமாக சேர்க்கப்பட்டதே ரோஹித் சர்மா சேர்த்த 13 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் நண்பகல் உணவு இடைவேளை முடிந்த அடுத்த தேநீர் இடைவேளைக்குள் முடிந்துவிட்டது.

2-வது செஷனில் மின்னல் வேகத்தில் பந்துவீச்சில் மிரட்டிய நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

பெங்களூருவில் நேற்று (அக்டோபர் 16) தொடங்க இருந்த டெஸ்ட் போட்டி மழையால் முதல் நாள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 2-வது நாளான இன்று டெஸ்ட் போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.

 
இந்தியா -   நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

விக்கெட்டை கணிக்கத் தவறினாரா ரோஹித்

பெங்களூருவில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையாலும், காலநிலையில் இருந்த குளிர்ந்த நிலையாலும் வேகப்பந்துவீச்சுக்கு நன்றாகவே பிட்ச் சாதகமாக இருந்தது. இதைப் பயன்படுத்திய நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் முதல் செஷனில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா அணியை பெரிய நெருக்கடிக்குள் தள்ளினர்.

முதல் ஓவரில் இருந்தே நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்ததைவிட பந்து நன்றாக ஸ்விங் ஆகியது. தொடக்கத்தில் 2 ஸ்லிப் பீல்டர்களை வைத்திருந்த நியூசிலாந்து அணி, வேகப்பந்துவீச்சுக்கு பிட்ச் ஒத்துழைப்பதைப் பார்த்து 3-வது ஸ்லிப்பை அமைத்தனர்.

பெங்களூரு ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியில் ஒரு சுழற்பந்துவீச்சாளர்கள்கூட பந்துவீசவில்லை.

3 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை முடித்துவிட்டனர். காலநிலையை கணித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினார்.

ஆனால், இந்திய அணியோ பும்ரா, சிராஜ் ஆகிய இரு வேகப்பந்துவீச்சாளர்களுடனும், 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது.

34 ரன்களுக்குள் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து அடுத்து எந்தவகையான உத்தியைக் கையாள்வது என்று தவித்தது. ஆனால் 2-வது செஷன் உணவு இடைவேளைக்குப்பின் தொடங்கியதும், 12 ரன்கள் மட்டுமே எடுத்து மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி ஆட்டமிழந்தது.

குறிப்பாக மேட் ஹென்றி வீசிய 24-வது ஓவரில் அடுத்தடுத்து ஜடேஜா, அஸ்வின் ஆட்டமிழந்தனர், அடுத்து ஹென்றி வீசிய 25-வது ஓவரில் ரிஷப் பந்த் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

 
இந்தியா -   நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி தடுமாற்றம்

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராகி வரவில்லை என்பது தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் தெரிந்தது. இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சைச் சமாளித்து ரன்களைச் சேர்க்க தடுமாறினர், பதிலடி கொடுக்க இருவரும் முயன்றும் இயலவில்லை.

டிம் சவுதி வீசிய 7-வது ஓவரில் ரோஹித் சர்மா 2 ரன்களில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். ஏற்கெனவே ஹென்றி பந்துவீச்சில் கால்காப்பில் ரோஹித் சர்மா வாங்கினார், ஆனால், அதற்கு நடுவர் அவுட் வழங்கவில்லை. அடுத்த வாய்ப்பில் சவுதியிடம் விக்கெட்டை ரோஹித் இழந்தார்.

 
இந்தியா -   நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விராட் கோலி

தோனியின் சாதனையை முறியடித்த கோலி

தோனியின் சர்வதேச சாதனையையும் கோலி இந்த ஆட்டத்தில் முறியடித்தார். தோனி 535 சர்வதேச போட்டிகளில் களமிறங்கி இருந்தநிலையில், கோலி தனது 536-வது சர்வதேச போட்டியில் இன்று விளையாடி தோனியின் சாதனையை முறியடித்தார்.

இதன் மூலம் அதிகமான போட்டிகளில் சச்சினுக்கு அடுத்தார்போல் ஆடிய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார்.

 

விக்கெட் சரிவு

அடுத்ததாக களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான் 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் ஹென்றி பந்துவீச்சில் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உள்நாட்டுப் போட்டிகளில் இதுவரை 4வது இடத்தில் களமிறங்கிப் பழகாத சர்ஃப்ராஸ் கான் சர்வதேச போட்டியில் களமிறங்கினார்.

12.4 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் திடீரென மழை குறுக்கிடவே ஆட்டம் சற்றுநேரம் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது. இந்த இடைவெளியே நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, அடுத்தக் கட்ட தாக்குதலுக்கு தயாராகினர்.

சிறிய இடைவெளிக்குப்பின் ஆட்டம் தொடங்கியபின், இந்திய அணி சார்பில் ஜெய்ஸ்வால் முதல் பவுண்டரியை அடித்தார். ஆனால் ஜெய்ஸ்வால் நீண்டநேரம் நிலைக்கவில்லை 13 ரன்னில் ரூர்கே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

உணவு இடைவேளைக்குச் செல்லும் முன்பாக ரூர்கே பந்துவீச்சில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பர் பிளன்டெலிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

உணவு இடைவேளை முடிந்து இந்திய அணி வந்தபின் அடுத்த 12 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

இந்தியா -   நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

134 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து

முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூஸிலாந்து அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து, இந்திய அணியைவிட 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கேப்டன் டாம் லாதம், டேவிட் கான்வே இருவரும் இந்தியப் பந்துவீச்சைச் சமாளித்து எளிதாக ரன்களைச் சேர்த்தனர். பெங்களூரு பிட்ச்சுக்கு ஏற்றவாறு நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசிய நிலையில், இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு சிறப்பாக இல்லை. நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் இதை எளி்தாக கையாண்டு சுழற்பந்துவீச்சிலும், வேகப்பந்துவீச்சிலும் சிக்ஸர், பவுண்டரி என வெளுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு லாதம், கான்வே ஆகிய இருவரும் 67 ரன்கள் குவித்தனர். குல்தீப் யாதவ் பந்துவீச்சில் லாதம் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் வீரர்களுடன் பல ஐபிஎல் போட்டிகளில் கான்வே ஆடியிருந்ததால், அவர் மிகவும் எளிதாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தார்.

2வது விக்கெட்டுக்கு வில் யங் களமிறங்கி கான்வேயுடன் சேர்ந்தார். இருவரும் இந்தியப் பந்துவீச்சை எளிதாகச் சமாளித்து, ரன்களைச் சேர்த்தனர். அஸ்வின், குல்தீப், ஜடேஜா பந்துவீச்சில் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பேட் செய்தனர்.

இதில் கான்வே 54 பந்துகளில் அரைசதம் அடித்தார். 27.1 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 100 ரன்களை எட்டியது.

நிதானமாக பேட் செய்த வில் யங் 33 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு கான்வே, வில் யங் கூட்டணி 75 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த ரச்சின் ரவீந்திரா, கான்வேயுடன் சேர்ந்தார்.

சதத்தை நோக்கி நகர்ந்த கான்வே 91 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 22 ரன்களிலும், டேரல் மிட்ஷெல் 14 ரன்களிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

50 ஓவர்கள் முடிவில்நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஏராளன் said:

உள்நாட்டில் குறைந்தபட்சம்

5 பேர் முட்டையுடன் போயிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.