Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

பிரிக்ஸ் அமைப்பின் இணைவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சாதகமான பதலளிப்புகளை உறுப்பு நாடுகள் வழங்கியுள்ளன. இதன் முன்னேற்றங்கள் குறித்து முழுமையான அறிவிப்பை, வெளிவிவகார செயலாளர் ஹரினி விஜேவர்தன நாட்டுக்கு வழங்குவார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வீரகேசரிக்கு தெரிவித்தார்.

பிரிக்ஸ் அமைப்பில் சீனாவுடனான இந்தியாவின் ஈடுபாடு இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது. இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பில் இலங்கையை இணைத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாக உள்ளன. இந்தியா ஊடாக தெற்காசியாவை அணுகும் அமெரிக்காவின் முக்கிய பங்காளியாக டெல்லி இப்போது உள்ளது. 

மறுபுறம் பிரிக்ஸ் உறுப்பினராக இந்தியா உள்ளதுடன்,  சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளைப் பேணுகிறது. உலகாளாவிய கிழக்கில் நிகழ்ந்து வரும் பொருளாதார மாற்றத்தை இந்தியா அவதானித்து, அதைச் சாதகமாக்க முயல்கிறது. இந்த நிலைப்பாடு இலங்கைக்கும் பயனளிப்பதாக அமையும் என்பது பொருளாதார நிபுணர்களின் எதிர்வுக்கூறலாகும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரிக்ஸ் உறுப்புரிமையில் இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேவேளை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பிரிக்ஸ் நாடுகளின் ஆதரவை கோரியுள்ளார். ஆனால் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான இந்த முடிவு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் மாத்திரம் எடுக்கப்படவில்லை. முந்தைய அமைச்சரவை இந்த முடிவை அங்கீகரித்திருந்தது.

அனைத்து இராஜதந்திர தளங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்த பின்னர், இந்தியாவின் உத்தியோகபூர்வ ஒப்புதலுடன் இலங்கை பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் இணையும்போது, எந்தவொரு மோதலையும் வளர்க்கும் எண்ணம் இலங்கைக்கு  இல்லை என்பதை மேற்கு நாடுகளுக்கு உணர்த்துகிறது. மேலும்  இலங்கையின் நீண்டகால அணிசேராக் கொள்கையினை உறுதியாக நிலைநிறுத்தவும் முடிகிறது.  

எவ்வாறாயினும் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் சமீபத்தில் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ளன. இலங்கை, இந்தோனேசியா மற்றும் அர்ஜென்டினா உட்பட 30 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த அமைப்பில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

2028 ஆம் ஆண்டில் இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும் அவசியத்தை எதிர்கொள்வதால், பொருளாதார வளர்ச்சியின் அவசரத் தேவை உள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு, நிலையான கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அவசியமான மூலோபாய துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு நாட்டிற்கு மூலதனம் தேவைப்படுகிறது. பிரிக்ஸ் அமைப்புடன் இலங்கை செய்து கொள்ளும் ஒப்பந்தம், உத்தேசிக்கப்படுகின்ற மூலதனத்தில் குறிப்பிட்டளவை பெறுவதற்கு உதவும்.

IMG-20241026-WA0032.jpg

https://www.virakesari.lk/article/197210

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாடுகள் சேர்ந்து டொலரின் மதிப்பை குறைக்க போயினமாம்...அதில சிறிலங்காவும் இணையப் போகுதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

இவ்வளவு நாடுகள் சேர்ந்து டொலரின் மதிப்பை குறைக்க போயினமாம்...அதில சிறிலங்காவும் இணையப் போகுதாம்.

எதிர்கால உலகின் கட்டளைபீடமாக இந்த கூட்டமைப்பு அமையலாம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் விண்ணப்பத்தை நிராகரித்த பிரிக்ஸ் அமைப்பு

பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் முழு உறுப்பினராக சேர்வதற்கான இலங்கையின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளை ஒன்பது என்ற எண்ணிக்கையில் தக்கவைக்கும் முடிவைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவரட குறிப்பிட்டுள்ளார். 

எவ்வாறாயினும், அமைப்பின் பங்காளி உறுப்பு நாடாக இணைவதற்கு இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அமைச்சரவை

அத்துடன், உறுப்பு நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் பிரிக்ஸின் புதிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் விண்ணப்பத்தை நிராகரித்த பிரிக்ஸ் அமைப்பு | Brics Rejected Sri Lanka S Request

இதன்படி, புதிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கான யோசனைக்கு இலங்கையின் அமைச்சரவை விரைவில் அங்கீகாரம் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் (BRICS) என்பது உலகின் முன்னணியாக வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களின் சக்திவாய்ந்த குழுவாகும்.

16ஆவது உச்சி மாநாடு

பிரேசில், ரஸ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, குறித்த நாடுகளின் பெயர்களது முதல் எழுத்துக்களை கொண்டு பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

இலங்கையின் விண்ணப்பத்தை நிராகரித்த பிரிக்ஸ் அமைப்பு | Brics Rejected Sri Lanka S Request

 எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளாகும்.

இந்தநிலையில், பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக அடுத்த ஆண்டு பிரேசில் பொறுப்பேற்கும். பிரிக்ஸின் 16ஆவது உச்சி மாநாடு, ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையில் ரஸ்யாவில் நடைபெற்றது. 

https://tamilwin.com/article/brics-rejected-sri-lanka-s-request-1730023922

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

எதிர்கால உலகின் கட்டளைபீடமாக இந்த கூட்டமைப்பு அமையலாம்?

புட்டினும்,சீனா அதிபரும் தங்கள் சொத்துக்களை பெரிப்பிக்க உந்த மற்றைய நாடுகளை தம்வசம் அணிசேர்க்கின்றனர்....அணிசேரா நாடுகள் என்ற ஒர் கட்டமைப்பு இருந்தது இப்ப அது எங்கே என தெரியவில்லை...அதுபோல இதுவும் இல்லாமல் போக வாய்ப்பு உண்டு ....

4 hours ago, ஏராளன் said:

பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் முழு உறுப்பினராக சேர்வதற்கான இலங்கையின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

கொளுத்தி போடுவோம் ....உங்களை ஏற்றுக்கொள்ளாமைக்கு இந்தியா தான் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, putthan said:

இவ்வளவு நாடுகள் சேர்ந்து டொலரின் மதிப்பை குறைக்க போயினமாம்...அதில சிறிலங்காவும் இணையப் போகுதாம்.

நாய்க்கேன் போர்த்தேங்காய்??😛

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

...

கொளுத்தி போடுவோம் ....உங்களை ஏற்றுக்கொள்ளாமைக்கு இந்தியா தான் காரணம்.

சிங்களத்தின் வாலும் தலையும் மேற்குலகுக்கு காட்டும் ராஜ தந்திரம் இனி இல்லை முடிவுக்கு வந்து விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சிங்களத்தின் வாலும் தலையும் மேற்குலகுக்கு காட்டும் ராஜ தந்திரம் இனி இல்லை முடிவுக்கு வந்து விட்டது .

அறுகம் பே குண்டு புரளியும் அமெரிக்கா போட்ட ஒர் சின்ன ஊசி தான்
இடதுசாரி முத்திரையுடன் அவர்களிடம் கடன் வாங்க முடியுமா?ஒன்றில் அனுரா வலதுசாரி யாக மாறி ஆட்சி நடத்த வேண்டும் இல்லையேன்றால் பகிரங்கமாக சீனா பக்கம் போக வேணும்....

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

அறுகம் பே குண்டு புரளியும் அமெரிக்கா போட்ட ஒர் சின்ன ஊசி தான்
இடதுசாரி முத்திரையுடன் அவர்களிடம் கடன் வாங்க முடியுமா?ஒன்றில் அனுரா வலதுசாரி யாக மாறி ஆட்சி நடத்த வேண்டும் இல்லையேன்றால் பகிரங்கமாக சீனா பக்கம் போக வேணும்....

அவர்கள் வைத்த பொறியில் அவர்களே மாட்டி கொண்டார்கள் .....................

அதற்கு பதிலாக சக தமிழர்களுக்கு நீதியான தீர்வை கொடுத்து இரு இனமும் ஒன்றாக நாட்டை முன்னேற்ற பாடு படனும் ஆனால் அது நடக்காது  அப்படி நடக்கவும் விடமாட்டார்கள் இரண்டு பக்க அரசியல்வாதிகளும் .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

கொளுத்தி போடுவோம் ....உங்களை ஏற்றுக்கொள்ளாமைக்கு இந்தியா தான் காரணம்.

இலங்கையின் பொருளாதார உறுதியின்மையினை மனதில் வைத்தே இதனை செய்கிறார்கள், இது ஒரு ஓர வஞ்சனை, வெனிசுலா, ஆர்ஜென்ரீனா போன்ற நாடுகளை இணைத்துக்கொண்டுள்ளார்கள்(உறுதியாக தெரியவில்லை), இதற்கு காரணம் அவர்களிடம் உள்ள வளங்கலாக இருக்கலாம், ஆனால் இந்த பிறிக்ஸ் இலங்கை இணைந்திருந்தால் இலங்கைக்கு பெரியளவில் பொருளாதார நலன் மற்றும் புவிசார் அழுத்தங்களை இலகுவாக கையாழ முடியும்.

இலங்கை இந்திய சீன உறவினை பயன்படுத்தி பிறிக்ஸ் இல் இணைந்து விடும் என நம்புகிறேன்.

இலங்கையின் முன்னேற்றத்திற்கு இது முக்கியம், அத்துடன் எதிர்வரும் காலங்களில் ஐ எம் எப் உடன் புதிய அரசிற்கு பிரச்சினை ஏற்படுமாயின் மக்கள் நிலை மோசமாவதனை தடுக்க ஒரு மாற்றுவழி இலங்கைக்கு அவசியம்.

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இரு நாட்டு தலைவர்களும் இரு நாடுகளுக்கும் செல்கிறார்கள் இந்த பின்னணியினை இலங்கை பயன்படுத்தி  இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

அவர்கள் வைத்த பொறியில் அவர்களே மாட்டி கொண்டார்கள் .....................

அதற்கு பதிலாக சக தமிழர்களுக்கு நீதியான தீர்வை கொடுத்து இரு இனமும் ஒன்றாக நாட்டை முன்னேற்ற பாடு படனும் ஆனால் அது நடக்காது  அப்படி நடக்கவும் விடமாட்டார்கள் இரண்டு பக்க அரசியல்வாதிகளும் .

On 27/10/2024 at 16:39, ஏராளன் said:

வடமாகாணசபை முழுமையாக செயல்பட அனுமதிக்க வேண்டும்,காணி அதிகாரம் இருக்க வேண்டும் ...

நம்ம டக்கிளஸ் அண்ணேயையே சிங்கள ஆட்சியாளர்கல் சுழிச்சு போட்டார்கள் ...

இருபக்க அரசியல்வாதிகள் என கூறுவது தவறு என நினைக்கிறேன் ...பலம் கொண்டவர்கள் ஆட்சியாளர்கள் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்க பூர்வமான தீர்வை கொடுக்க வேண்டும் பிறகு தமிழ் அரசியல்வாதிகள் எதுவும் பேசமாட்டார்கள்...பேசவும் முடியாது  ...ஆட்சியாளர்கள் சட்டங்களை இயற்றி அதை நடைமுறை படுத்த முயல வேண்டும் ....அனுரா சில சமயம் நல்லது செய்தால் வர வேற்கலாம்..ஆனால் அவரும் ஊழல் பற்றி பேசி தனக்கு பலமான எதிர்கட்சி உருவாகமல் செயல்படுவதிலயே குறியாக இருக்கின்றார் போல தெரிகின்றது ....
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இலங்கையின் பொருளாதார உறுதியின்மையினை மனதில் வைத்தே இதனை செய்கிறார்கள், இது ஒரு ஓர வஞ்சனை, வெனிசுலா, ஆர்ஜென்ரீனா போன்ற நாடுகளை இணைத்துக்கொண்டுள்ளார்கள்(உறுதியாக தெரியவில்லை), இதற்கு காரணம் அவர்களிடம் உள்ள வளங்கலாக இருக்கலாம், ஆனால் இந்த பிறிக்ஸ் இலங்கை இணைந்திருந்தால் இலங்கைக்கு பெரியளவில் பொருளாதார நலன் மற்றும் புவிசார் அழுத்தங்களை இலகுவாக கையாழ முடியும்.

இலங்கை இந்திய சீன உறவினை பயன்படுத்தி பிறிக்ஸ் இல் இணைந்து விடும் என நம்புகிறேன்.

இலங்கையின் முன்னேற்றத்திற்கு இது முக்கியம், அத்துடன் எதிர்வரும் காலங்களில் ஐ எம் எப் உடன் புதிய அரசிற்கு பிரச்சினை ஏற்படுமாயின் மக்கள் நிலை மோசமாவதனை தடுக்க ஒரு மாற்றுவழி இலங்கைக்கு அவசியம்.

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இரு நாட்டு தலைவர்களும் இரு நாடுகளுக்கும் செல்கிறார்கள் இந்த பின்னணியினை இலங்கை பயன்படுத்தி  இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

நீங்கள் கூறுவது சரி ...ஆனால் இதில் ரஸ்யா சீனா போன்ற நாடுகள் தான் ஆயுள் கால தலைவர்களை கொண்ட நாடு..மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் ...இந்தியாவின் தலைவர்கள் மாறக்கூடியவர்கள் ...இதனால் இந்தியாவின் பொருளாதாரம் நிலையானதாக இருக்க வாய்ப்பில்லை ....ராகுல்காந்தியை அமேரிக்கா அரவணைக்கின்றது,அமெரிக்கா தூதர்கள் மாநில அரசுகளுகளுடன் தொடர்புகளை மேற்கொள்கின்றனர்...முக்கியமா காஸ்மீர் அரசியல்வாதிகளுடன் இணைப்பில் இருக்கின்றனர்...சந்திரப்பாபு நாயுடு உடனும் தொடர்பில் இருக்கின்றனர்...
ஈரானின் பொருளாதாரத்தை வீழ்த்த இஸ்ரேலுடாக பல முயற்சிகள் நடக்கின்றது ...

எது எப்படியோ இலங்கை சொந்த காலில் நிற்க  வேணுமென்றால் தமிழர்களுக்கு பிரச்சனை இருந்தது அதனால் தான் அவர்கள போராடினார்கள் என்பதை ஆட்சியாளர்கள் கூறவேண்டும் அதை விடுத்து 
பொருளாதார பிரச்சனை தான் இருக்கின்றது என கூறுவதை நிறுத்த வேணும் ...

பனங்கொட்டையில் பொருளாதரம் வளர்த்த எம்மை வறுமை கோட்டுக்கு தள்ளியதும் இந்த ஆட்சியாளர்கள் 😅

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.