Jump to content

அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து வெளிவந்த உண்மை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அறுகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இது தீவிரவாத குழுவினால் திட்டமிடப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க பிரதிநிதிகள் அமெரிக்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர்.

எயார் வைஸ் மார்ஷல்(ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொண்டா, மற்றும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் (30ம் திகதி) இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைவர்களை சந்தித்து இதுபற்றி தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட குழுவை வழிநடத்திய ஈரான் பிரஜை உள்ளிட்ட தலைவர்கள் இந்த வலையமைப்பு தீவிரவாத வலையமைப்புடன் இணைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவாக செயற்பட்ட ஒரு கும்பலின் முயற்சியே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. R

Tamilmirror Online || அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து வெளிவந்த உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பிழம்பு said:

குழுவை வழிநடத்திய ஈரான் பிரஜை உள்ளிட்ட தலைவர்கள் இந்த வலையமைப்பு தீவிரவாத வலையமைப்புடன் இணைக்கப்படவில்லை

இது இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதனை இக் குழுவை வழிநடத்தியவர் இரான் பிரஜை என்பதில் இருந்தே புரிந்துகொள்ளலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதன் பின்னணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் இளைஞனும் இரண்டு முஸ்லிம்களும் அடங்குவதாகக் கேள்வி. 

இந்தியாவிலிருந்து திட்டமிடப்பட்டிருக்கலாம் என ஊகிக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

இதன் பின்னணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் இளைஞனும் இரண்டு முஸ்லிம்களும் அடங்குவதாகக் கேள்வி. 

இந்தியாவிலிருந்து திட்டமிடப்பட்டிருக்கலாம் என ஊகிக்கிறேன். 

அது தானே பார்த்தேன்...?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறுகம்பே விவகாரம்: ஆறு பேர் கைது

அறுகம்பே குடாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை தொடர்பில் இதுவரையில் மாலைத்தீவு பிரஜை உட்பட ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அறுகம்பே குடா பகுதியில் தாக்குதல்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் கொழும்பில் உள்ள முக்கிய நிதித் தளங்களை புகைப்படம் எடுத்த சம்பவங்கள் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

“இதுவரை, நாங்கள் ஆறு நபர்களை கைது செய்துள்ளோம். மாலைத்தீவு பிரஜை மற்றும் ஐந்து இலங்கையர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், இது என்ன வகையான திட்டம் அல்லது முயற்சி என்று எங்களால் தற்போது சொல்ல முடியாது.

ஏனெனில் கைது செய்யப்பட்ட ஆறு பேரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில் இருந்து அப்படி ஒரு முடிவுக்கு வர முடியாது.

எனவே, தேவையற்ற தவறான விளக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

-(3)

 

http://www.samakalam.com/அறுகம்பே-விவகாரம்-ஆறு-பே/

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣
    • வேன்ஸ் இன் பின்புலம் மிக சுவாரசியமானது.  சிற்ரூரில் வாழ்க்கை, உழைக்கும் வர்க்க பின்புலம், இராணுவ உத்தியோகம், வெள்ளையினமல்லாத மனைவி என பல விடயங்களில் டிரம்புக்கு எதிரான வாழ்க்கை. மேலே பகிடி சொன்ன உழைக்கும், நடுத்தர மக்கள் ஏன், எப்படி வலது சிந்தனையால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால் டிரம்ப்பை போலவே ஆளும் உளறுவாயன். டிரம்பை விட லூசுதனமாக மேடைகளில் பேசுவார். மைக் பென்ஸ் போல காலம்தாழ்த்தியாவது டிரம்பை எதிர்க்க கூட மாட்டார் என நினைக்கிறேன். டிரம்ப்பின் நாலு வருடத்தின் பின் டிரம்ப்பின் அரசியல் பிராண்டுக்கு வாரிசு இவரா இல்லை டிரம்பின் மகளா என்பதில் லடாய் ஆரம்பிக்கலாம்.
    • விற்கும் காசுகள் உங்களுக்கு வாராது   அவர் தனது வங்கி கணக்கில் வைப்பிலிடுவார்.  .....சம்மதமா  ??? 🤣
    • அப்படியானால் உங்களுக்கு விற்கும் வழி பழக்கம். ராசா உங்களை தானே எனக்கு தேவை. 🤣
    • ஆனா ஒண்டு தமிழ்சிறி ஜேர்மன்காரன் சும்மாவே பஸ்ஸில வெளிநாட்டுக்காரனுக்கு பக்கத்துல இருக்கமாட்டான், ஆஹ் ஊஹ் எண்டால் எவ்வளவுகாலம் ஜேர்மனியில இருந்தாலும் சைஸ்ச அவுஸ்லாண்டர் எண்டு திட்டுவான், மற்ற வெளிநாட்டுக்காரர்போல அமைதியா இருக்கமாட்டான் ஒரு அளவுக்குமேல போனால் இளைஞர்கூட்டம் குருவிகூட்டம் எண்ட பெயாரில் ரவுண்டு கட்டி அடிப்பாங்கள், ஆயுத தாக்குதல்கூட செய்வாங்கள்.பொலிசும் ஜேர்மன்காரனுக்குத்தான் முதலிடம். அதனால இந்த விளையாட்டுகள் அவனிட்ட எடுபடாது. நோ கோஷான், அதையும் தாண்டிய வீரபாண்டிய கட்ட பொம்மனுகள், இல்லையெண்டால் வீடியோவில் 2:11  பொலிஸ்காரனையே நீ ஸ்டேஷனுக்கு போ எண்டு சொல்லிவாங்களா? உலகத்துல எங்கேயும் பொலிஸ்தான் கலவரம் பண்ணுறவங்கள வீட்ட போ எண்டு சொல்லும் , இது ரொம்ப புதுசா இருக்கு இவங்ககிட்ட இந்த உலகம் கத்துக்க வேண்டியது ஏராளம் இருக்கு.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.