Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூமுட்டை.. சாலை நடுவே நின்னா லாரி அடிச்சி செத்துப்போவ.. விஜயை மறைமுகமாக விமர்சித்த சீமான்

Nantha Kumar RUpdated: Saturday, November 2, 2024, 0:01 [IST]

சென்னை: ‛‛அன்பு என்றால் அன்பு. வம்பு என்றால் வம்பு.. நீங்கள் வெட்ட நினைக்கும்போதே வெட்டி முடிக்கிற வீர மறவர்கள் நாங்கள். எங்கள் லட்சியத்துக்கு எதிராக பெற்றவர்களே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது. அண்ணனும் கிடையாது. உங்களிடம் இருப்பது கொள்கை இல்லை. கூமுட்டை. அழுகின கூமுட்டை.. ஒன்று ரோட்ல இந்த பக்கம் நில்லு. இல்லை அந்த பக்கம் நில்லு. நடுவுல நின்னா லாரில அடிபட்டு செத்துப்போவ'' என்று நடிகர் விஜயை மறைமுகமாக கடுமையாக சீமான் விமர்சனம் செய்தார்.

இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் நடிகர் விஜயை, சீமான் நேரடியாக விமர்சனம் செய்தார். நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டில் திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று பேசியதை காட்டமாக சீமான் விமர்சனம் செய்தார்.

இதுதொடர்பாக சீமான் பேசியதாவது: அன்பு என்றால் அன்பு.. வம்பு என்றால் வம்பு.. சாதாரண வம்பு இல்லை உடன் பிறந்தார்களே.. கொடிய வம்பு.. நீங்கள் வெட்ட அரிவாளை எடுக்கும்போது விழுந்து கும்பிடுகிற ஈனப்பிறப்புகள் அல்ல நாங்கள். நீங்கள் வெட்ட நினைக்க எண்ணும்போதே வெட்டி முடிக்கிற வீர மறவர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். எங்கள் முன்னவர்கள் ஒன்றை தான் கற்று கொடுத்து உள்ளார்கள். உண்மையை பேசு. அதை உரக்க பேசு. உறுதியாக பேசு. இறுதி வரை பேசு என்பது தான். இதுதான் எங்கள் கோட்பாடு.

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்
பிறந்தோம் நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு
ஞாபகம் செய் முழங்கு சங்கே!

என்று பாடியவனின் பேரன்டா நான். இது சினிமா பஞ்ச் டயலாக் இல்லை தம்பி. நெஞ்சு டயலாக் இது. நெஞ்சு டயலாக்... இதயத்தில் நெருப்பு எரிகிறபோது சில பொறிகள் வாய்வழியாக வந்து விழும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் என் இனம் தூக்கி சுமந்து வருகிற வலியின் மொழிதான் எங்களின் மொழி. விடுதலை பெற்றவர் பேசுவதற்கும், அடிமை பேசுவதற்கும் வேறுபாடு உண்டு. வேறுபாடு உண்டு ப்ரோ. எங்கள் கோட்பாடு ஒன்று தான். எங்கள் லட்சியத்துக்கு எதிராக பெற்றவர்களே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது. அண்ணனும் கிடையாது.

இது கொள்கை இல்லை. கூமுட்டை.. அதுவும் அழுகின கூமுட்டை. What bro.. Its very wrong bro. ஒன்று சாலையில் அந்த ஓரத்தில் நில்லு. இல்லைனா சாலையில் இந்த ஓரத்தில் நில்லு. நடுவில் நின்றால் சாலையில் லாரி அடிச்சி செத்துப்போவ பார்த்துக்கோ. தன் இன பாலகன். தன் மார்பிலேயே பால் குடித்தவர். தன் மடியிலேயே தவழ்ந்தவன் இறந்து விட்டானே என்று அழுது துடிப்பது தமிழ் தேசியம்.

என் தங்கை இசை பிரியா கொல்லப்பட்டு கிடந்தபோது துடித்தது தமிழ் தேசியம். தூர இருந்து சிரித்தது திராவிடம். இரண்டும் ஒன்றா. இரண்டும் ஒன்றா.. உடலில் நெருப்பு கொட்டி வெந்தது வீர தமிழன் முத்துகுமார். அது தமிழ் தேசிய பெரும் நெருப்பு. கடற்கரையில் தலைக்கு ஒரு குளிரூட்டி. காலுக்கு ஒரு குளிரூட்டி. தலைமாட்டில் மனைவி.. கால்மாட்டில் துணைவி என்று போலி உண்ணாவிரதம் நடத்துவது திராவிடம். இரண்டும் ஒன்று. '' என ஆக்ரோஷமாக விமர்சனம் செய்தார். அதனை கேட்டவுடன் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். சீமானின் இந்த பேச்சு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://tamil.oneindia.com/news/chennai/if-you-stand-on-center-of-the-road-lorry-will-hit-and-died-seeman-slams-tvk-leader-vijay-on-the-rem-651287.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

🙄...........

நேற்று நியூஸ் 18 தொல்.திருமாவை ஒரு பேட்டி எடுத்திருந்தனர். மிகவும் கண்ணியமாக, நிதானமாக அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருந்தார், உரையாடியிருந்தார். விஜய்யின் பல பாசாங்குகளை சரியான விதத்தில் எடுத்துச் சொல்லியிருந்தார். 

சீமான் வழமை போலவே கூடி இருப்போர் கைதட்ட வேண்டும் என்று பொரிந்து தள்ளியிருக்கின்றார். சீமானின் ரசிகர்கள் தவிர்த்து, பொதுவானவர்கள் இதைக் கேட்டு முகச்சுழிப்பு ஒன்றையே காட்டுவார்கள். இதையே தான் விஜய்யும் செய்தார். ஒரு சினிமா போல 'ப்ரோ, பாயாசாம் - பாசிசம், ............' என்று கைதட்டல்களுக்காக சாரம், பொருள் எதுவுமின்றி வெறுமனே ஒரு ஃபர்பாமன்ஸ் காட்டி விட்டு போய்விட்டார்............ இப்படியே போனால் இந்த இருவரும் - சீமான மற்றும் விஜய் - தேறப் போவதில்லை.    

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரசோதரன் said:

உங்களுக்கு தமிழ்நாட்டு மக்களைபற்றி புரியவில்லை.. சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் உங்களைப்போல் ஜெண்டில்மானாக சிந்திப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்.. ஆனால் அதுதான் தப்பு.. அப்படி அல்ல.. தமிழ் நாட்டு பெரும்பான்மை சமூகம் அறிவு மட்டம் வேறு.. அதனால்தான் திமுக அதிமுக ஜெயிக்க முடிகிறது.. விஜய்க்கு கூட்டம் சேர்கிறது.. சீமானுக்கு விசில் பறக்கிறது.. அய்யா நல்லகண்ணு போன்ற அரசியல்வாதிகளுக்கு ஆளே இருப்பதில்லை ஓட் போட..

அப்போ அரசியல்வாதிகளும் பெரும்பான்மை மக்களின் விரும்பங்களுக்குதான் பேசவும் செயற்படவும் முடியும்..

அம்மணமாய் திரிபவர்கள் ஊரில் கோவனத்துடன்போகிறவர்கள் பைத்தியக்காரர்களாம்..

வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இப்போ வலதுசாரிகள்தான் முன்னுக்கு வரும்போது பஞ்சத்தில் அடிபட்ட தமிழ்நாட்டில் நீங்கள் எதிர்பார்க்கும் லெவலில் அரசியல் நடக்க ஜந்து நூற்றாண்டானாலும் சாத்தியமோ தெரியவில்லை.. உங்கள் அமெரிக்காவிலேயே டிரெம்புக்கு அவ்வளவு சப்போர்ட்டு..

தேர்தல் பெரும்பானமை மக்கள் சொல்வதுதான் முடிவு..

தகரத்தில் தட்டி கொரோனோவை விரட்டு என்று பெரும்பான்மை மக்கள் ஓட்டு போட்டால் அதுதான் சட்டம்.. அதைத்தான் அரசியல்வாதிகள் பின்பற்றனும்..

பாயாசம் பாசிசம்னு பேசினால்தான் ஓட்டு போடுவேன் என்று பெரும்பான்மை மக்கள் நின்றால் அதைத்தான் அரசியல்வாதியும் ஓட்டு வாங்க செய்வான்.. அரசியல்வாதி என்ன நாட்டை திருத்தவா அரசியலுக்கு வருகிறான்..? ஓட்டு வாங்கி அதிகாரம் பெறத்தான் வருகிறான்.. 

ஆக அரசியல்வாதி மாற மக்கள் மாறனும்.. மக்கள் மாறாவிட்டால் பேசாமல் அந்த நாட்டில் வசிக்கும் அறிவார்ந்தவர்கள் வெளிக்கிட்டு நல்ல ஒரு நாட்டுக்கு போவது அவர்கள் பிள்ளைகுட்டிகளுக்கு நல்லது.. இல்லாட்டி பைத்தியம் பிடித்துவிடும் சிந்திக்ககூடியவர்களுக்கு..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

கழகங்களைவிட செந்தமிழன் சீமான் அண்ணா ஜாஸ்தியாக பயப்படுகின்றார்போல் உள்ளது. கடைசிவரை மாநாட்டுக்கு தனக்கு அழைப்பு கிடைக்கும் என அண்ணண் எதிர்பார்த்தார்.  சீச்சீ இந்த பழம் புளிக்கும் மொமண்ட் இது!😂

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 திமுக அதிமுக ஜெயிக்க முடிகிறது.. விஜய்க்கு கூட்டம் சேர்கிறது.. சீமானுக்கு விசில் பறக்கிறது.. அய்யா நல்லகண்ணு போன்ற அரசியல்வாதிகளுக்கு ஆளே இருப்பதில்லை ஓட் போட..

உங்கள் அமெரிக்காவிலேயே டிரெம்புக்கு அவ்வளவு சப்போர்ட்டு..

👍............

கூட்டம் சேர்வது உண்மையே, விசில்கள் பறப்பதும் உண்மையே, ஆனால் இவர்களால் ஒரு எல்லையை தாண்ட முடியுமா என்பது தான் பெருத்த சந்தேகமாக உள்ளது. சீமானால் தாண்டவே முடியாது என்ற முடிவிற்கு நான் வந்து பலகாலம் ஆகிவிட்டது. அவருக்கு விசில் அடிப்பவர்கள் பலர் அவருக்கு வாக்குப் போடுவதில்லை. இனி ஒரேயடியாக தேய்வு காலம் தான் அவருக்கு.

விஜய்யால் ஒரு மாற்றமும் வராது என்றால், அவரை ஏன் தான் எவரென்றாலும் தேர்ந்தெடுக்க வேண்டும்.......... அதிகாரத்தை மட்டும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவதால் என்ன பயன்.... முத்துராமலிங்க தேவர் குருபூஜையின் போது விஜய் நடந்து கொண்டது ரஜனி செய்வது போலவே உள்ளது. மக்கள் இதை அறிந்தவர்களே, அவர்கள் திமுகவையோ, அல்லது அதிமுகவையோ விலகி, இவரிடம் போகாமல் இருப்பதற்கு இப்படியான விடயங்களே போதும். 

ட்ரம்ப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி. இவருக்கு இங்கு காட்டப்படும் ஆதரவு ஒரு பெரிய அடிப்படைக் கேள்வியையே உண்டாக்கியிருக்கின்றது. மனித பண்பாட்டு வளர்ச்சி என்பது ஒரு நீர்க்குமிழியா.......... அதை மிக இலகுவாக ஒருவரால் ஒரு தேசமெங்கும் உடைத்து விடமுடியுமா.............   

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உங்களுக்கு தமிழ்நாட்டு மக்களைபற்றி புரியவில்லை.. சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் உங்களைப்போல் ஜெண்டில்மானாக சிந்திப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்.. ஆனால் அதுதான் தப்பு.. அப்படி அல்ல.. தமிழ் நாட்டு பெரும்பான்மை சமூகம் அறிவு மட்டம் வேறு.. அதனால்தான் திமுக அதிமுக ஜெயிக்க முடிகிறது.. விஜய்க்கு கூட்டம் சேர்கிறது.. சீமானுக்கு விசில் பறக்கிறது.. அய்யா நல்லகண்ணு போன்ற அரசியல்வாதிகளுக்கு ஆளே இருப்பதில்லை ஓட் போட..

அப்போ அரசியல்வாதிகளும் பெரும்பான்மை மக்களின் விரும்பங்களுக்குதான் பேசவும் செயற்படவும் முடியும்..

அம்மணமாய் திரிபவர்கள் ஊரில் கோவனத்துடன்போகிறவர்கள் பைத்தியக்காரர்களாம்..

வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இப்போ வலதுசாரிகள்தான் முன்னுக்கு வரும்போது பஞ்சத்தில் அடிபட்ட தமிழ்நாட்டில் நீங்கள் எதிர்பார்க்கும் லெவலில் அரசியல் நடக்க ஜந்து நூற்றாண்டானாலும் சாத்தியமோ தெரியவில்லை.. உங்கள் அமெரிக்காவிலேயே டிரெம்புக்கு அவ்வளவு சப்போர்ட்டு..

தேர்தல் பெரும்பானமை மக்கள் சொல்வதுதான் முடிவு..

தகரத்தில் தட்டி கொரோனோவை விரட்டு என்று பெரும்பான்மை மக்கள் ஓட்டு போட்டால் அதுதான் சட்டம்.. அதைத்தான் அரசியல்வாதிகள் பின்பற்றனும்..

பாயாசம் பாசிசம்னு பேசினால்தான் ஓட்டு போடுவேன் என்று பெரும்பான்மை மக்கள் நின்றால் அதைத்தான் அரசியல்வாதியும் ஓட்டு வாங்க செய்வான்.. அரசியல்வாதி என்ன நாட்டை திருத்தவா அரசியலுக்கு வருகிறான்..? ஓட்டு வாங்கி அதிகாரம் பெறத்தான் வருகிறான்.. 

ஆக அரசியல்வாதி மாற மக்கள் மாறனும்.. மக்கள் மாறாவிட்டால் பேசாமல் அந்த நாட்டில் வசிக்கும் அறிவார்ந்தவர்கள் வெளிக்கிட்டு நல்ல ஒரு நாட்டுக்கு போவது அவர்கள் பிள்ளைகுட்டிகளுக்கு நல்லது.. இல்லாட்டி பைத்தியம் பிடித்துவிடும் சிந்திக்ககூடியவர்களுக்கு..

ஓணாண்டியாருக்கு என்ன ஆயிற்று😂? ஒரு விடயம் மேற்கிலும் கிழக்கிலும் பரவலாக நடக்கிறது என்பதற்காக அந்த முறை தான் "வழமை - convention" என்று வாதிடுகிறீர்கள் போல தெரிகிறது. 

ஜனநாயகத்தில் தலைமைத்துவம் என்பது இருவழிப்பாதை - மக்கள் தலைவர்களை மாற்ற வேண்டும், தலைவர்களும் மக்களை சில சமயங்களில் வழிக்குக் கொண்டு வர வேண்டும்.

மக்கள் "பெருவாரியாகக் கைதட்டுகிறார்கள்/லைக் போட்டு வரவேற்கிறார்கள்" என்பதற்காக ஒரு தலைவர் மூன்றாம் பிறை கமலஹாசன் போல குரங்கு வித்தை காட்டுவது தலைமைத்துவம் கிடையாது! இதற்குப் பெயர் ஜனத்திரள்வாதம் - populism. ஹிற்லர் போன்ற கொடிய மனிதர்கள் கூட கைக்கொண்ட நச்சுத் தனமான உத்தி.

ஜனத்திரள்வாதம் இல்லாமல், மக்கள் முட்டாள் தனமாக நடந்து கொள்ளாமல் தலைவர்கள் இருக்க வேண்டுமென்றால், கொஞ்சம் கல்வியறிவு, உள்ளக நேர்மை, சரி பிழை எதுவென்று உணரக் கூடிய அறத்திசை காட்டி என்பன தலைவர்களிடம் இருக்க வேண்டும். இந்த அளவு கோல்களை வைத்துப் பார்க்கும் போது தமிழக மக்கள் தங்கள் அனேகமான பிரதிநிதிகளை இது வரை சரியாகத் தான் தேர்ந்திருக்கிறார்கள். ஜனத்திரள்வாதம் மூலம் வாக்குத் திரட்டும் சீமான் போன்றவர்ளுக்கான வாக்குகள் தான் நீங்கள் குறிப்பிடும் "சிந்தனையில்லாத" தமிழக வாக்காளர்களிடமிருந்து வருகின்றது என நான் நினைக்கிறேன்.
சரியா நான் சொல்வது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நல்ல யோசிக்க வைத்த, நீண்ட கருத்து.

நிறைய நேரம் எடுத்து எழுதியிருப்பியள் என்ன🤣

2 hours ago, வாலி said:

கழகங்களைவிட செந்தமிழன் சீமான் அண்ணா ஜாஸ்தியாக பயப்படுகின்றார்போல் உள்ளது. கடைசிவரை மாநாட்டுக்கு தனக்கு அழைப்பு கிடைக்கும் என அண்ணண் எதிர்பார்த்தார்.  சீச்சீ இந்த பழம் புளிக்கும் மொமண்ட் இது!😂

அண்ணன் ரொம்பவே அரண்டு போய் உள்ளார்.

திருமா ஏன் சும்மா துள்ளுறார்? திமுக காரனை விட.  இத்தனைக்கும் விஜை சொன்னதை வைத்து திமுக கூட்டணியிலேயே விசிக அதிக சீட்டுக்கு நெருக்கலாம்.

திமுக தலைமையோடு தனிப்பட்ட நட்பு காரணமாக ராஜபக்சவை சந்தித்து மாபெரும் தவறை செய்தது போல, இப்போ வலுக்காண்டியாக விஜையை எதிர்கிறார். ஸ்டாலினுக்காக.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

👍............

கூட்டம் சேர்வது உண்மையே, விசில்கள் பறப்பதும் உண்மையே, ஆனால் இவர்களால் ஒரு எல்லையை தாண்ட முடியுமா என்பது தான் பெருத்த சந்தேகமாக உள்ளது. சீமானால் தாண்டவே முடியாது என்ற முடிவிற்கு நான் வந்து பலகாலம் ஆகிவிட்டது. அவருக்கு விசில் அடிப்பவர்கள் பலர் அவருக்கு வாக்குப் போடுவதில்லை. இனி ஒரேயடியாக தேய்வு காலம் தான் அவருக்கு.

விஜய்யால் ஒரு மாற்றமும் வராது என்றால், அவரை ஏன் தான் எவரென்றாலும் தேர்ந்தெடுக்க வேண்டும்.......... அதிகாரத்தை மட்டும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவதால் என்ன பயன்.... முத்துராமலிங்க தேவர் குருபூஜையின் போது விஜய் நடந்து கொண்டது ரஜனி செய்வது போலவே உள்ளது. மக்கள் இதை அறிந்தவர்களே, அவர்கள் திமுகவையோ, அல்லது அதிமுகவையோ விலகி, இவரிடம் போகாமல் இருப்பதற்கு இப்படியான விடயங்களே போதும். 

ட்ரம்ப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி. இவருக்கு இங்கு காட்டப்படும் ஆதரவு ஒரு பெரிய அடிப்படைக் கேள்வியையே உண்டாக்கியிருக்கின்றது. மனித பண்பாட்டு வளர்ச்சி என்பது ஒரு நீர்க்குமிழியா.......... அதை மிக இலகுவாக ஒருவரால் ஒரு தேசமெங்கும் உடைத்து விடமுடியுமா.............   

மிக தெளிவான பார்வை. பாயாசம், தேவர் ஜெயந்தி பற்றிய உங்கள் கூற்றுடன் முழுவதும் உடன்பாடுதான்.

ஆனால் தமிழ் நாடு நாள் விடயத்தில் திமுகவுக்கு மாறான நிலைப்பாட்டை எடுத்தாலும், சங்கரலிங்கனார், அண்ணா இருவரின் முயற்சியையும் சுட்டி காட்டி, ஒரு கண்ணியமான அணுகுமுறையை கடைபிடிக்கிறார்.

சீமானை போல “அண்ணா தமிழருக்கு துரோகம் இழைத்தார்” என வரலாற்றை புரட்டவில்லை.

சீமான், விஜை இருவரும் அரசியல் செய்யும் நோக்கம் வேறு.

ஒரு தோல்வி பட இயக்குனராக - சிங்கிள் டீக்கு நடிகர்களுக்கு வசனம் சொல்லி கொடுக்கும் இணை இயக்குனராக போக வேண்டிய நிலையில், அரசியலுக்கு வந்து, பஜரோ, ஊட்டி எஸ்டேட், காளிமுத்து மகள் என செட்டிலாகிவிட்டவர் சீமான்.

அவரின் நோக்கம் ஒரு போதும் தேர்தலில் வெல்லுவதில்லை. அவரின் நோக்கம் எல்லாம் இதை வைத்து மேலும் எப்படி சம்பாதிப்பது என்பதே.

ஆனால் விஜை அப்படி அல்ல, சும்மா பப்படம் எடுத்தாலே பெரிய ஹிட் ஆகும் நடிகர்.

அவர் வருவது - புகழுக்காக. முதலமைச்சர் ஆவதுதான் குறி.

ஆகவே இருவரும் ஒன்றல்ல.

ஆனால் விஜை இறங்கி வேலை செய்ய வேண்டும்.

இல்லாவிடின் தேறாத கேசுதான்.

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

உங்களுக்கு தமிழ்நாட்டு மக்களைபற்றி புரியவில்லை.. சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் உங்களைப்போல் ஜெண்டில்மானாக சிந்திப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்.. ஆனால் அதுதான் தப்பு.. அப்படி அல்ல.. தமிழ் நாட்டு பெரும்பான்மை சமூகம் அறிவு மட்டம் வேறு.. அதனால்தான் திமுக அதிமுக ஜெயிக்க முடிகிறது.. விஜய்க்கு கூட்டம் சேர்கிறது.. சீமானுக்கு விசில் பறக்கிறது.. அய்யா நல்லகண்ணு போன்ற அரசியல்வாதிகளுக்கு ஆளே இருப்பதில்லை ஓட் போட..

அப்போ அரசியல்வாதிகளும் பெரும்பான்மை மக்களின் விரும்பங்களுக்குதான் பேசவும் செயற்படவும் முடியும்..

அம்மணமாய் திரிபவர்கள் ஊரில் கோவனத்துடன்போகிறவர்கள் பைத்தியக்காரர்களாம்..

வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இப்போ வலதுசாரிகள்தான் முன்னுக்கு வரும்போது பஞ்சத்தில் அடிபட்ட தமிழ்நாட்டில் நீங்கள் எதிர்பார்க்கும் லெவலில் அரசியல் நடக்க ஜந்து நூற்றாண்டானாலும் சாத்தியமோ தெரியவில்லை.. உங்கள் அமெரிக்காவிலேயே டிரெம்புக்கு அவ்வளவு சப்போர்ட்டு..

தேர்தல் பெரும்பானமை மக்கள் சொல்வதுதான் முடிவு..

தகரத்தில் தட்டி கொரோனோவை விரட்டு என்று பெரும்பான்மை மக்கள் ஓட்டு போட்டால் அதுதான் சட்டம்.. அதைத்தான் அரசியல்வாதிகள் பின்பற்றனும்..

பாயாசம் பாசிசம்னு பேசினால்தான் ஓட்டு போடுவேன் என்று பெரும்பான்மை மக்கள் நின்றால் அதைத்தான் அரசியல்வாதியும் ஓட்டு வாங்க செய்வான்.. அரசியல்வாதி என்ன நாட்டை திருத்தவா அரசியலுக்கு வருகிறான்..? ஓட்டு வாங்கி அதிகாரம் பெறத்தான் வருகிறான்.. 

ஆக அரசியல்வாதி மாற மக்கள் மாறனும்.. மக்கள் மாறாவிட்டால் பேசாமல் அந்த நாட்டில் வசிக்கும் அறிவார்ந்தவர்கள் வெளிக்கிட்டு நல்ல ஒரு நாட்டுக்கு போவது அவர்கள் பிள்ளைகுட்டிகளுக்கு நல்லது.. இல்லாட்டி பைத்தியம் பிடித்துவிடும் சிந்திக்ககூடியவர்களுக்கு..

இந்த கருத்தில் ஈழத்தமிழன் அரசியல் ஞானம் உடையவன், தமிழ் நாட்டு தமிழன் காட்டுமிராண்டி என்பதாக ஒரு தொனி தெரிகிறது.

ஆனால் உண்மை எதிர்வளமானது.

75 வருடங்களில் வன்முறை இல்லா அரசியல் கலாச்சாரத்தை கைக்கொண்டு, சரியான தலைமைகளை தேர்ந்து, இந்தியாவின் 2ம் மாநிலமாக வளர்ந்து நிற்பவர்கள் அவர்கள். தமிழக மக்கள் அரசியல் தன்மையானது.

வாழ்க்கை சுட்டி, கல்வியறி அதிகமாய் இருந்தும் ஒரு நியாயமான விடுதலை போராட்டத்தையே போட்டடித்த கூட்டம் நாம்.

ஒப்பீட்டளவில் அரசியல் காட்டுமிராண்டிகள் ஈழத்தமிழர்தான்.

தன்மையான தமிழக அரசியல் கலாச்சாரத்தில் ஈழத்தமிழர் பாணி காட்டு மிராண்டி அரசியல் செய்பவர் சீமான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ஓணாண்டியாருக்கு என்ன ஆயிற்று😂? ஒரு விடயம் மேற்கிலும் கிழக்கிலும் பரவலாக நடக்கிறது என்பதற்காக அந்த முறை தான் "வழமை - convention" என்று வாதிடுகிறீர்கள் போல தெரிகிறது. 

ஜனநாயகத்தில் தலைமைத்துவம் என்பது இருவழிப்பாதை - மக்கள் தலைவர்களை மாற்ற வேண்டும், தலைவர்களும் மக்களை சில சமயங்களில் வழிக்குக் கொண்டு வர வேண்டும்.

மக்கள் "பெருவாரியாகக் கைதட்டுகிறார்கள்/லைக் போட்டு வரவேற்கிறார்கள்" என்பதற்காக ஒரு தலைவர் மூன்றாம் பிறை கமலஹாசன் போல குரங்கு வித்தை காட்டுவது தலைமைத்துவம் கிடையாது! இதற்குப் பெயர் ஜனத்திரள்வாதம் - populism. ஹிற்லர் போன்ற கொடிய மனிதர்கள் கூட கைக்கொண்ட நச்சுத் தனமான உத்தி.

ஜனத்திரள்வாதம் இல்லாமல், மக்கள் முட்டாள் தனமாக நடந்து கொள்ளாமல் தலைவர்கள் இருக்க வேண்டுமென்றால், கொஞ்சம் கல்வியறிவு, உள்ளக நேர்மை, சரி பிழை எதுவென்று உணரக் கூடிய அறத்திசை காட்டி என்பன தலைவர்களிடம் இருக்க வேண்டும். இந்த அளவு கோல்களை வைத்துப் பார்க்கும் போது தமிழக மக்கள் தங்கள் அனேகமான பிரதிநிதிகளை இது வரை சரியாகத் தான் தேர்ந்திருக்கிறார்கள். ஜனத்திரள்வாதம் மூலம் வாக்குத் திரட்டும் சீமான் போன்றவர்ளுக்கான வாக்குகள் தான் நீங்கள் குறிப்பிடும் "சிந்தனையில்லாத" தமிழக வாக்காளர்களிடமிருந்து வருகின்றது என நான் நினைக்கிறேன்.
சரியா நான் சொல்வது?

கருத்து 👌

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு மக்களின் சாபக்கேடு என்றால் அது சாதி அரசியல்தான்.

இதை தூண்டி விடுபவர்களில் முதன்மையானவர் சீமான். குறிப்பாக தான் நாடார் சாதி எனிலும், எளிதில் உணர்ச்சி வசப்படகூடிய தேவர் சாதி மக்களை குறிவைத்து சீமான் நகர்வுகள் இருக்கும்.

ஆனால் இன்று அந்த மக்களே விழித்து கொண்டு, தேவர் சமாதியில் அரசியல் பண்ண வந்த சீமானை எதிர்த்து கோசமிடும் காட்சி.

தமிழக மக்களின் அரசியல் முதிர்ச்சிக்கு இன்னொரு எடுத்துக்காட்டு.

https://x.com/Vinosh_Selvam/status/1851548926282973609

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாலி said:

கழகங்களைவிட செந்தமிழன் சீமான் அண்ணா ஜாஸ்தியாக பயப்படுகின்றார்போல் உள்ளது. கடைசிவரை மாநாட்டுக்கு தனக்கு அழைப்பு கிடைக்கும் என அண்ணண் எதிர்பார்த்தார்.  சீச்சீ இந்த பழம் புளிக்கும் மொமண்ட் இது!😂

எப்படி அழைப்புக் கிடைக்கும் விஜய் மாநாட்டுக்கு எந்த அரசியல் தலைவருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் சல மாதங்களுக்கு முன் சீமான் விஜய் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இன்று கூட்டணிக்கு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கும் விஜய் என்ன சொல்லியிருப்பார். நன்றாக ஊகிக்க முடிகிறது.திமுக ஆதிமுக வாக்குககைளக் கவர திராவிடத் தேசியத்தை தன் ஒரு கண் என்றும்.இதுவரை திராவிடம் கோலோச்சிய தமிழ்நாட்டில் தமிழ்த தேசியக் கருத்தியல்சீமானுக்குப் பின் தமிழ்நாட்டில் ஒரு தவிர்க்க முடியாத கருத்தியல் என்பதால் தமிழ்தேசியத்தை யும் ஒரு கண் என்று பேசியிருக்கிறார். விஜய்க்கு காங்கிரஜ் கட்சியின் கூட்டணி தேவை அப்படி இருந்தால்தான் மத்தியில் செல்வாக்கைச் செலுத்தலாம். பாஜகவோடு கூட்டு இல்லை என்று அறிவித்து விட்டார். தமிழ்த்தேசியத்துக்கு சீமானைச் சேர்ப்பதில் அவருக்கு சிக்கல் இருக்கிறது. காங்கிரசும் சீமானும் ஒனரே மேடையில் ஒரே கூட்டில் இருக்க முடியாது. தமிழ்தேசியத்தலைவரின் படத்தை அகற்றிவிட்டு சீமான் அரசியல் செய்ய மாட்டார். யார் முதல்வர் வேட்பாளர் என்பதிலும் குழப்பம் இருக்கிறது. இதே குழப்பம் அதிமுகவை கூட்டணிக்கு அழைத்தாலும் வரும். அதிமுக கூட்டணியில் எடப்பாடிதான் முதலமைச்சர் வேட்பாளர். இப்போது சீமானைத்தவிர்த்த விஜய் கூட்டணிப் போச்சுவார்தைகள் ஆரம்பிக்கும் பொழுதுதான் அரசியல் என்பது சினிமா வசனம் பேசுவதுமாதிரி இல்லை என்பது தெரிய வரும். விஜய் இன்;னும் தனது பலத்தை நிரூபிக்கவில்லை.அதுவரை எந்தப் பெரிய கட்சிகளும் அலரது தலைமைய எற்காது. காங்கிரஸ்.விசிக>கம்னியூஸட்டுக்கள் .தே.திமுக>பாமக.மதிமுக மற்றும் அல்லு சில்லுகள் தான் கூட்டணிக்குப் பேசும். அதிலும் பாமகவும் தேதிமுகவும் பேசும் கூட்டணிப் பேச்சுவாரத்தைககைள் விஜய்க்கு பெரிய தலையிடியாக இருக்கும்.இந்த அல்லு சில்லுகள் எல்லாம் ஊழல்கட்சியான திமுகவுக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளே இவர்களைக் கூட்டணியில் வைத்துக் கொண்டு விஜையால் எப்படிஊழலுக்கு எதிராகப் பேச முடியும். விஜய் தனியாக நின்று தன்பலததை நிரூபிக்கும் வரை பெரிய கட்சிகள் அவரது தலைமையை எற்காது. இதுவரை எந்த அல்லு சில்லு கட்சியும் விஜயுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கவில்லை. விஜையின் குழப்பமான அரியல் கொள்கையை விமர்சிக்கவும் இல்லை. சீமான் 4ட்டணி இல்லை என்று அறிவித்து விட்டு விஜையின் இரட்டை வேட அரசியலை விமர்சிக்கத் தொடங்கி விட்டார்.ஒரு தமிழ்த்தேசியக்கட்சி என்ற முறையில் அவரது விமர்சனம் நியாயமானதே.

Edited by புலவர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.