Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இந்து ஆலயம் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல்!

candandaaa.jpg

கனடாவின் பிராம்ப்டனில் (Brampton) அமைந்துள்ள ஒரு இந்து ஆலயம் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டதாக ANI தெரிவித்துள்ளது.

தாக்குதல்களைத் தொடர்ந்து, கனடாவில் உள்ள இந்து சமூகத்திற்காகச் செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான இந்து கனேடியன் அறக்கட்டளை ஆலயம் மீதான தாக்குதலின் வீடியோவைப் சமூகதளங்கில் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது பிரிவினை வாதிகள் தாக்குதல் நடத்துவது பதிவாகியுளள்ளது.

இதைத் தொடர்ந்து, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மத சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு கனேடியர்களும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு என்று ட்ரூடோ வலியுறுத்தினார்.

கனடாவில் காலிஸ்தானி பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புது டெல்லியின் கோரிக்கையை ஒட்டவா பலமுறை நிராகரித்துள்ளது.

இதனால், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே உள்ள இராஜதந்திர உறவுகள் இறுக்கமான நிலையில் உள்ள நிலையில் அண்மைய வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

https://akkinikkunchu.com/?p=297913

  • கருத்துக்கள உறவுகள்

தவறான, திரிவுபடுத்தப்பட்ட செய்தி. 

ஆலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் இந்தியா ஆதரவாளர்களுக்குமிடையே கைகலப்பு இடம்பெற்றது.  ஆலயம் தாக்கப்பட்டவில்லை. 
 

 ஆகா ..ஆகா ஆனந்தம். நாறட்டும் இந்தியா. 🤣

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆலயம் தாக்கப்படவில்லை. ஆனால் ஆலயத்திற்கு சென்றோர் தாக்கப்பட்டுள்ளனர்.. மோசமான வன்முறைக் கலாச்சாரத்தை கனடிய மண்ணில் வளரவிடக்கூடாது.

 

கனடாவில் ஹிந்து கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது  தாக்குதல்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம்

November 4, 2024

கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து  கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கனடாவில் உள்ள பிராம்ப்டன் நகரில் இருக்கும் இந்து சபா கோவிலுக்கு வெளியே நடந்த வன்முறை ‘சகிக்க முடியாதது’ என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் அவர் வெளியிட்ட பதிவில், “பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலுக்கு வெளியே நடந்த வன்முறை சகிக்க முடியாதது. அனைத்து கனடா மக்களும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தங்கள் மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கான உரிமை உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான புலனாய்விலும் சமூகத்தின் பாதுகாப்பிலும் விழிப்புடன் செயல்பட்ட பீல் பிராந்திய காவல்துறைக்கு (Peel Regional Police) எனது பாராட்டுக்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/கனடாவில்-ஹிந்து-கோவிலுக்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்து கோவிலை தாக்கிய கும்பலில் இருந்த கனடா போலீஸ்… காட்டிக் கொடுத்த வீடியோ!

Kumaresan MNov 05, 2024 11:34AM
IMG_5359.jpg

கனடாவில் இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய போது, அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கனடா போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் டொரான்டோவில் இருந்து 50 கி.மீ தொலைவில் பிராம்ப்டன் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு ஹிந்து சபா மந்திர் என்ற இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் புகுந்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, அமெரிக்காவில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்த நிலையில், கனடாவிலும் குறிப்பாக சீக்கியர்கள் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் பரவி வருகிறது.

இந்த சம்பவத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்து கோவில்கள் மீதும் இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தியது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒவ்வொரு கனடா மக்களும் தங்களது மதத்தை பின்பற்ற சுதந்திரம் உண்டு என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கனடா நாட்டு போலீசில் பணி புரியும் ஹரீந்தர் ஷோகி என்பவரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டது பரவிய வீடியோவில் தெரிய வந்தது. கையில் காலிஸ்தான் கொடி ஏந்தி  இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.  இதையடுத்து, அவர் போலீஸ் துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டம் நடந்த நேரத்தில் ஹரீந்தர் ஷோகி விடுமுறையில் இருந்துள்ளார்.

 

https://minnambalam.com/india-news/canadian-cop-suspended-for-attending-pro-khalistan-protest/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த "இந்து" கோவில்களிற்கு ஈழ தமிழர்கள் செல்வதில்லையா? இது ஈழ தமிழர்களிற்கு நடந்திருந்தால் அடிவாங்கிக்கொண்டு சும்மா இருந்திருப்போமா அல்லது திருப்பி அடித்திருப்போமா? அல்லது அன்பே சிவம் என்று உருட்டிக்கொண்டிருந்திருப்போமா என்ற சந்தேகம் எனக்கு தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற நாடுகளில் இப்படியான சம்பவங்களை பார்க்கும் போது  எழும் கேள்வி.  

முன்னர் ஒரு முறை இத்தாலியில் சிங்களவர்கள் தமிழர்களின் விளையாட்டுவிழாவில் இப்படி சண்டித்தனம் காட்டினார்கள். அதையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தோம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழர்களுக்கென நிறைய கோவில்கள் உள்ளதால்  வட இந்தியர்களின் கோவில்களுக்கு நாம் பொதுவாக செல்வதில்லை.

மோதி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஊர்க்காவலன் said:

இந்த "இந்து" கோவில்களிற்கு ஈழ தமிழர்கள் செல்வதில்லையா? இது ஈழ தமிழர்களிற்கு நடந்திருந்தால் அடிவாங்கிக்கொண்டு சும்மா இருந்திருப்போமா அல்லது திருப்பி அடித்திருப்போமா? அல்லது அன்பே சிவம் என்று உருட்டிக்கொண்டிருந்திருப்போமா என்ற சந்தேகம் எனக்கு தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற நாடுகளில் இப்படியான சம்பவங்களை பார்க்கும் போது  எழும் கேள்வி.  

முன்னர் ஒரு முறை இத்தாலியில் சிங்களவர்கள் தமிழர்களின் விளையாட்டுவிழாவில் இப்படி சண்டித்தனம் காட்டினார்கள். அதையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தோம். 

தலையங்கத்தை வாசித்துவிட்டு கருத்தெழுதாதீர்கள். 

உண்மையை அறிந்துக்ண்டு கருத்தெழுதுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஊர்க்காவலன் said:

இந்த "இந்து" கோவில்களிற்கு ஈழ தமிழர்கள் செல்வதில்லையா? இது ஈழ தமிழர்களிற்கு நடந்திருந்தால் அடிவாங்கிக்கொண்டு சும்மா இருந்திருப்போமா அல்லது திருப்பி அடித்திருப்போமா? அல்லது அன்பே சிவம் என்று உருட்டிக்கொண்டிருந்திருப்போமா என்ற சந்தேகம் எனக்கு தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற நாடுகளில் இப்படியான சம்பவங்களை பார்க்கும் போது  எழும் கேள்வி.  

முன்னர் ஒரு முறை இத்தாலியில் சிங்களவர்கள் தமிழர்களின் விளையாட்டுவிழாவில் இப்படி சண்டித்தனம் காட்டினார்கள். அதையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தோம். 

இங்கே இந்துக் கோவிலோ, மத நம்பிக்கைக்கு எதிராகவோ  அல்லது அதன் உடமைக்கோ எதிராக எந்தவிதமான தாக்குதலும் இடம்பெறவில்லை. 

அங்கே இடம்பெற்றது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும் இந்திய ஆதரவாளர்களுக்குமிடையிலான அடிதடி.

இது புரியாமல் மனம்போனபோக்கில் இந்து, அடிதடி, அன்பே சிவம் என்று  அவிழ்த்து விடுதல் நன்மையானதல்ல. 

(-1 போட்டதற்குக் காரணம் என்ன? அல்லது  அதுவும் மனம் போன போக்கில்தானா? 😏)

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

மோதி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிள்ளையையும் நுள்ளி விட்டு

தொட்டிலையும் ஆட்டுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பிள்ளையையும் நுள்ளி விட்டு

தொட்டிலையும் ஆட்டுகிறார்.

 

இது இந்திய உளவு அமைப்பின் தொலைநோக்கு திட்டமோ யார் அறிவார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதன் பின்னணியில் இருப்பது இந்திய அரச பயங்கரவாதிகள்தான். நிஜ்ஜார் கொலையில் இந்தியா அம்பிட்டுவிட்டது. இப்ப கனடாவுக்கு சேறுபூச முனைகின்றது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் குழப்பம் செய்தவர்களை ஏற்பாடு செய்தது இந்தியாதான். 

காலிஸ்தானோ இந்துஸ்தானோ எல்லா இந்தியனுகளையும் நாடுகடத்துவது உறுதி!

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஓங்கி ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம்; ஜெய்சங்கர் விளாசல் | Canadian Hindus | Canada Attack

 
  • கருத்துக்கள உறவுகள்

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.