Jump to content

பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!

பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு!

பிரதமர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவினை கலைத்து அதில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார உபகரணங்கள், ஒளடதங்கள், இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் என்பவற்றை மீண்டும் சுகாதார அமைச்சிற்கு பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி தலைமையில் இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது

அத்தியாவசியமற்ற செலவுகளை குறைப்பதற்கு அரசு எடுத்துள்ள கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கமைய இந்த பிரிவிடம் காணப்பட்ட மனிதவள மற்றும் பௌதீக வளங்கள் சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவை பொதுமக்களின் சுகாதார தேவைகளுக்கென பயன்படுத்தப்படவுள்ளன..

இதன்போது பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி அவர்களினால் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபாலவிடம் அதற்கான ஆவணங்கள் மற்றும் திறப்புகள் இதன்போது கையளிக்கப்பட்டிருந்தன.

https://athavannews.com/2024/1407406

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த அம்புலன்ஸ் வண்டி, வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு

image

பிரதமர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவினை கலைத்து அதில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார உபகரணங்கள், ஒளடதங்கள், இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் என்பவற்றை மீண்டும் சுகாதார அமைச்சிற்கு பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி தலைமையில் செவ்வாய்க்கிழமை (05) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.  

பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி அவர்களினால் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபாலவிடம் அதற்கான ஆவணங்கள் மற்றும் திறப்புகள் இதன்போது கையளிக்கப்பட்டன.  

அத்தியாவசியமற்ற செலவுகளை குறைப்பதற்கு அரசு எடுத்துள்ள கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கமைய இந்த பிரிவிடம் காணப்பட்ட மனிதவள மற்றும் பௌதீக வளங்கள் சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவை பொதுமக்களின் சுகாதார தேவைகளுக்கென பயன்படுத்தப்படவுள்ளன.

PHOTO-2024-11-06-10-07-04__1_.jpg

PHOTO-2024-11-06-10-07-04__2_.jpg

https://www.virakesari.lk/article/198061

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றங்கள் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

மாற்றங்கள் தெரிகின்றது.

பல அதிரடி  மாற்றங்கள் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
1) லஞ்சம்  வாங்கிய நான்கு  சுங்க அதிகாரிகளுக்கு 35 வருட கடூழிய சிறை.
2) "இராஜதந்திர பதவிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளின் குடும்பத்தினரும் திருப்பி அழைப்பு" என்று நினைத்துப் பார்த்திருக்க முடியாத செயல்களை செய்வது வரவேற்கத் தக்கது.

 

 

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பல அதிரடி  மாற்றங்கள் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
1) லஞ்சம்  வாங்கிய நான்கு  சுங்க அதிகாரிகளுக்கு 35 வருட கடூழிய சிறை.
2) "இராஜதந்திர பதவிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளின் குடும்பத்தினரும் திருப்பி அழைப்பு" என்று நினைத்துப் பார்த்திருக்க முடியாதஹ் செயல்களை செய்வது வரவேற்கத் தக்கது.

வெளியில்  எளிமையாக திரிகின்றார்கள். தேர்தலில் அமோக வெற்றி பெறுவார்கள் என நினைக்கின்றேன். மற்றும் படி தமிழ் வேட்பாளர்களை மக்கள் கணக்கெடுப்பதாக தெரியவில்லை. இதை எனக்கு சொன்னது வேட்பாளராக நிற்கும் என் உறவினர்.🙂

எனது சொந்தங்களில் 7 பேர் வேட்பாளராக நிற்கின்றார்கள். :woot:

  • Like 2
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனது சொந்தங்களில் 7 பேர் வேட்பாளராக நிற்கின்றார்கள். :woot:

ஒரே கட்சியா? வேறவேறு கட்சிகளா அண்ணை?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

ஒரே கட்சியா? வேறவேறு கட்சிகளா அண்ணை?!

ஒரே கட்சியிலை நிண்டு கூத்தடிக்க அவையளுக்கு என்ன விசரே? எல்லாரும் பரவலாய் நிக்கினம். அதில அஞ்சு பேர் பென்சன்காரர்.😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஒரே கட்சியிலை நிண்டு கூத்தடிக்க அவையளுக்கு என்ன விசரே? எல்லாரும் பரவலாய் நிக்கினம். அதில அஞ்சு பேர் பென்சன்காரர்.😎

அண்ணை நான் நினைச்சன் சொந்தங்கள் சேர்ந்து சுயேட்சையா நிக்கினமோ என்று!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ஒரே கட்சியிலை நிண்டு கூத்தடிக்க அவையளுக்கு என்ன விசரே? எல்லாரும் பரவலாய் நிக்கினம். அதில அஞ்சு பேர் பென்சன்காரர்.😎

ஆர் வெண்டாலும்... உங்களுக்கு ஒரு "பார் பெர்மிட்" எடுத்து தர வேணும் என்று, 
இப்பவே சொல்லி வையுங்கோ குமாரசாமி  அண்ணை.  😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஆர் வெண்டாலும்... உங்களுக்கு ஒரு "பார் பெர்மிட்" எடுத்து தர வேணும் என்று, 
இப்பவே சொல்லி வையுங்கோ குமாரசாமி  அண்ணை.  😂

இனிக்கஸ்ரம் அண்ணோய்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எனது சொந்தங்களில் 7 பேர் வேட்பாளராக நிற்கின்றார்கள். 

இன்றிலிருந்து நான் உங்களின் இணைபிரியா நண்பன்.

53 minutes ago, தமிழ் சிறி said:

ஆர் வெண்டாலும்... உங்களுக்கு ஒரு "பார் பெர்மிட்" எடுத்து தர வேணும் என்று, 
இப்பவே சொல்லி வையுங்கோ குமாரசாமி  அண்ணை.  😂

அண்ணையை பிடித்து நானும் உண்ணு எடுக்கலாமென்று யோசிக்கிறன்.

நானும் பென்சன்காரன் தான்.

52 minutes ago, ஏராளன் said:

இனிக்கஸ்ரம் அண்ணோய்!

அனுரா தேர்தலில் நுhறு வென்றால் 113 க்கு யாரையாவது சேர்க்கத்தானே வேணும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இன்றிலிருந்து நான் உங்களின் இணைபிரியா நண்பன்.

இப்ப மட்டும் ஏதோ குறைவே? நாங்கள் எப்பவும் இணைபிரியா நண்பர்கள் தானே! 🙂

ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன் நான் சொல்லுற ஆக்கள் சும்மா ரைம் பாஸ்க்காக லெக்ஸன் கேக்கிற ஆக்கள் எண்ட உண்மையை இப்பவே உடைச்சு விடுறன் :cool:

3 hours ago, தமிழ் சிறி said:

ஆர் வெண்டாலும்... உங்களுக்கு ஒரு "பார் பெர்மிட்" எடுத்து தர வேணும் என்று, 
இப்பவே சொல்லி வையுங்கோ குமாரசாமி  அண்ணை.  😂

கரவெட்டியில ஏற்கனவே பாஸ் பத்திரங்களோட ஒண்டு இருக்கு.... 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இப்ப மட்டும் ஏதோ குறைவே? நாங்கள் எப்பவும் இணைபிரியா நண்பர்கள் தானே!

இப்போ இடைக்கிடை தான்.

இனிமேல் நகமும் சதையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போ இடைக்கிடை தான்.

இனிமேல் நகமும் சதையும்.

7 பேரும்   தோற்றார்கள் என்றால்  ......நட்பு தொடருமா. ??   அல்லது கழட்டிவிட்டு விடுவீர்களா.??? 🤣

4 hours ago, குமாரசாமி said:

ஒரே கட்சியிலை நிண்டு கூத்தடிக்க அவையளுக்கு என்ன விசரே? எல்லாரும் பரவலாய் நிக்கினம். அதில அஞ்சு பேர் பென்சன்காரர்.😎

அந்த ஐந்து பேருக்கும்  

உதவிக்கு ஆள்கள். 

சக்கர நாற்காழி.  

பேச்சாளர்         தேவையா?????     

குறிப்பு.        நான் வேலை தேடுகிறேன்.  வயது போனமையால். கிடைக்கவில்லை 🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kandiah57 said:

அந்த ஐந்து பேருக்கும்  

உதவிக்கு ஆள்கள். 

சக்கர நாற்காழி.  

பேச்சாளர்         தேவையா?????     

குறிப்பு.        நான் வேலை தேடுகிறேன்.  வயது போனமையால். கிடைக்கவில்லை 🤣🤣

உங்கள் வயதை/ சொத்து விபரங்களை மறைக்காமல் சொல்லுங்கள். மிகுதியை நான் ஏற்பாடு செய்கின்றேன். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

உங்கள் வயதை/ சொத்து விபரங்களை மறைக்காமல் சொல்லுங்கள். மிகுதியை நான் ஏற்பாடு செய்கின்றேன். :cool:

அண்ணை  வயதை சொல்ல முடியும்      சொத்து விபரங்கள் சொல்ல விருப்பம் இல்லை.   அப்படி எனில் சும்மா இருந்து சாப்பிடுகிறேன். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

7 பேரும்   தோற்றார்கள் என்றால்  ......நட்பு தொடருமா. ??   அல்லது கழட்டிவிட்டு விடுவீர்களா.???

நகமும் சதையும் அப்புறம் வராது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

7 பேரும்   தோற்றார்கள் என்றால்  ......நட்பு தொடருமா. ??   அல்லது கழட்டிவிட்டு விடுவீர்களா.??? 🤣

அந்த ஐந்து பேருக்கும்  

உதவிக்கு ஆள்கள். 

சக்கர நாற்காழி.  

பேச்சாளர்         தேவையா?????     

குறிப்பு.        நான் வேலை தேடுகிறேன்.  வயது போனமையால். கிடைக்கவில்லை 🤣🤣

அவங்கள் பாவம் கந்தையர்😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

அவங்கள் பாவம் கந்தையர்😄

சில நேரம் தேர்தலில் வென்றால்  சுயமாக பாராளுமன்றம் போய் வாருவார்கள். தானே  !      மாவை சேனதிராசா   மாதிரி உடல்கட்டுடன்.  இருப்பார்களா??   😀

குமாரசாமி அண்ணையும். அடிக்கடி இலங்கைக்கு வரக்கூடும்  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.